ஸ்ரீரங்கத்தில் இருந்தவரை மழையே பெய்யாமல் இருந்தது. ஒரு நாளானும் மழை அடிச்சுப் பெய்யக் கூடாதா எனத் தோன்றும். வானம் என்னமோ மேக மூட்டமாக இருக்கும். ஆனால் மழைப் பொழிவு கம்மி தான். இப்போத் திருச்சியில் கனமழை எனத் தொலைக்காட்சிகளில் சொல்கின்றனர். எந்த அளவுக்குனு தெரியலை. ஆனால் இங்கே வந்ததில் இருந்து மழை பெய்து கொண்டு இருக்கிறது. இப்போது இன்றைய நிலவரப்படி இரண்டு ஆண்டுகள் முன்னர் வந்த ஹார்வி புயலின் வேகத்தோடு வேறொரு புயல் இங்கே வரப்போவதாய்ச் சொல்கின்றனர். முதலில் இரண்டு நாள் விடாமழை என்றே செய்தி வந்தது. இப்போது பார்த்தால் புயலே வருதாம்! பையர் வேறே ஆம்ஸ்டெர்டாம் போயிருக்கார். இங்கே நாங்களும் குஞ்சுலுவும் அவளோட அம்மாவும் தான். போன முறை பையர் வீட்டைக்காலி செய்து கொண்டு முக்கியப் பொருட்களோடு எங்க பொண்ணு வீட்டுக்குப் போய்த் தங்கி இருந்தார். இம்முறை என்னனு புரியலை. மின்சாரம் எல்லாம் இருக்குமா, இணையம் இருக்குமானு எல்லாம் சிந்திக்கலை. நடப்பது நடக்கட்டும். புயல் பார்த்தும் வெகு காலம் ஆகி விட்டது. சென்னையில் இருக்கிறச்சே 2005 ஆம் ஆண்டில் பார்த்தது. ஆனால் இங்கே மரங்கள் ஆடுவதை எல்லாம் பார்க்க முடியுமா தெரியலை! பார்ப்போம்.
எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Wednesday, September 18, 2019
புயல் வருது!
ஸ்ரீரங்கத்தில் இருந்தவரை மழையே பெய்யாமல் இருந்தது. ஒரு நாளானும் மழை அடிச்சுப் பெய்யக் கூடாதா எனத் தோன்றும். வானம் என்னமோ மேக மூட்டமாக இருக்கும். ஆனால் மழைப் பொழிவு கம்மி தான். இப்போத் திருச்சியில் கனமழை எனத் தொலைக்காட்சிகளில் சொல்கின்றனர். எந்த அளவுக்குனு தெரியலை. ஆனால் இங்கே வந்ததில் இருந்து மழை பெய்து கொண்டு இருக்கிறது. இப்போது இன்றைய நிலவரப்படி இரண்டு ஆண்டுகள் முன்னர் வந்த ஹார்வி புயலின் வேகத்தோடு வேறொரு புயல் இங்கே வரப்போவதாய்ச் சொல்கின்றனர். முதலில் இரண்டு நாள் விடாமழை என்றே செய்தி வந்தது. இப்போது பார்த்தால் புயலே வருதாம்! பையர் வேறே ஆம்ஸ்டெர்டாம் போயிருக்கார். இங்கே நாங்களும் குஞ்சுலுவும் அவளோட அம்மாவும் தான். போன முறை பையர் வீட்டைக்காலி செய்து கொண்டு முக்கியப் பொருட்களோடு எங்க பொண்ணு வீட்டுக்குப் போய்த் தங்கி இருந்தார். இம்முறை என்னனு புரியலை. மின்சாரம் எல்லாம் இருக்குமா, இணையம் இருக்குமானு எல்லாம் சிந்திக்கலை. நடப்பது நடக்கட்டும். புயல் பார்த்தும் வெகு காலம் ஆகி விட்டது. சென்னையில் இருக்கிறச்சே 2005 ஆம் ஆண்டில் பார்த்தது. ஆனால் இங்கே மரங்கள் ஆடுவதை எல்லாம் பார்க்க முடியுமா தெரியலை! பார்ப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
போன இடத்தில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருங்கள் புயலெல்லாம் காணவேண்டாம்.
ReplyDeleteகில்லர்ஜி, உங்கள் பிரார்த்தனை பலித்து விட்டது. மழை கூடப் பெய்யவில்லை. வெயில் வந்துவிட்டது இப்போது. மதியம் இரண்டு மணி!
Deleteதிருச்சி திருவரங்கத்தில் நல்ல மழை.
ReplyDeleteநலமே விளையட்டும்.
நல்ல செய்தி வெங்கட், அதுவும் ஸ்ரீரங்கத்தில் மழை என்றால் கேட்கவே வேண்டாம். இருந்து பார்க்கத் தான் முடியலை.
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இப்போ நான் புயலாக மாறிக்கொண்டிருக்கிறேன்:) ஏனெனில், பழைய போஸ்ட் கொமெண்ட்டை வெளியிட முன்பே அடுத்து புதிய போஸ்ட் போடுறீங்க.. இது நியாயமே இல்லை:)).. மோடி அங்கிள் உங்கட மீட்டிங்கைக் கான்சல் பண்ணப்போறாராம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:))
ReplyDeleteஹாஹா, அதிரடி, நானெல்லாம் ஒரு காலத்தில் ஒரு நாளைக்கு 2,3 பதிவுகள் போட்டிருக்கேன். ஜீவி சாரைக் கேட்டுப் பாருங்க. இதெல்லாம் ஜுஜுபி! மோதி அங்கிள் ஒண்ணும் சந்திப்பை ரத்தெல்லாம் செய்ய மாட்டார். வருவார் பாருங்க!
Delete//ஆனால் இங்கே வந்ததில் இருந்து மழை பெய்து கொண்டு இருக்கிறது//
ReplyDeleteஇதற்கு நீங்க எந்த ஆதாரமும் தரவில்லை எங்களுக்கு அதனால நாங்க நம்ப மாட்டோம்ம்.. ஸ்ரீராமும் நம்பவில்லையாம் என வட்சப்பில் மெசேஜ் போட்டார் எனக்கு ஜாமத்திலயே:))
[ஸ்ரீராமின் பொஸ் ..பாஸ், நேற்றுக் கவலைப்பட்டா சிரிக்கிறாரே என.. இப்போ என்ன ஆகுமோ இக்கொமெண்ட் பார்த்து ஹா ஹா ஹா:)]
அதுதானே? படம் காட்டாமல் எப்படி நம்புவது? பாஸ் என்னைக் கவலையுடன் பார்ப்பது தொடர்கிறது... உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்.
Delete@அதிரடி, @ ஸ்ரீராம், படங்கள் எல்லாம் மெல்ல மெல்லத் தான் எடுக்கணும். நேற்று மழை பெய்யும்போது படம் எடுக்கணும்னு நினைவில் வரலை! :))))) ஸ்ரீராம் என்ன ஆனாலும் தனக்குத் தானே ரொம்பச் சிரித்துக் கொ"ல்லு"வதால் பாஸ் முறைக்கிறார் போல!
Deleteதைரியமாக இருங்கோ கீசாக்கா.. எல்லாம் நல்லதாவே நடக்கும்.... அம்மா மண்டபத் தண்ணிக்கே பயப்பூடாத நீங்க.. இதுக்குப்போய்ப் பயப்படலாமோ...
ReplyDeleteஅக்கா பயப்படறாங்கன்னு யார் சொன்னது? புயல் அல்லவா அக்காவைப் பார்த்து பயப்படணும்?
Deleteஅதிரடி, பாருங்க ஸ்ரீராமை. என் தம்பினு நிரூபிச்சுட்டார். அவர் சொன்ன அதே காரணம் தான். புயலெல்லாம் நம்மைக் கண்டாலே பயந்து ஓடி விடாதோ? நல்லா வெயில் அடிக்காதோ நாம் வந்துட்டா!
Deleteஆமா மா இரண்டு நாளா திருச்சி ல ரொம்ப நல்ல மழையாம் ...
ReplyDeleteஅசோ அங்க புயலா பார்த்து பத்திரமா இருங்க ...
ஒண்ணும் பயப்படறாப்போல் எல்லாம் இல்லை அனு ப்ரேம்! புயல் தான் நம்மைக் கண்டு பயந்தது. ஓடியே போயிடுச்சு.. :))))
Deleteஆஹா... புயல் வருதா... ஓஹோ.... ரொம்ப நல்லா இருக்குமே... எஞ்சாய் பண்ணுவதை விட்டுவிட்டு.... இப்போவே கேமராவை சார்ஜ் பண்ணி வைங்க. எங்க வச்சிருக்கீங்கன்னு பார்த்துக்கோங்க. கையெல்லாம் ஸ்டெடியா வச்சுக்கோங்க... படங்கள் எடுத்துப் போடுங்க.
ReplyDeleteநானே வாழ்க்கைல எப்போ டொர்னடோ பார்ப்போம், பனித் துகள் விழுவதைப் பார்ப்போம், பனி 2 அடிக்குப் புதைந்து கிடப்பதைப் பார்ப்போம்னு நினைச்சுக்கிட்டிருக்கேன்...
எஞ்சாய் பண்ணணும்னு தான் இருந்தேன், நெல்லைத் தமிழரே!காமிரா இந்தியாவிலேயே இருக்கு! செல்லில் இருக்கும் காமிரா போதும்னு மேலிடத்துக் கட்டளை.டொர்னோடோ பார்த்துட்டேன். ஆனால் படமெல்லாம் எடுக்கும்படி வெளியே வரவிடலை. குடிமக்களை வெளியே வரக் கூடாதுனு மெம்பிஸ் நகராட்சி ஆணை.
Deleteமோடி அங்கிள் டிரம்ப் அங்கிள் வராங்க. அதுக்குத்தான் புயல் வருதோ? Jayakumar
ReplyDeleteவாங்க ஜேகே அண்ணா, ரொம்ப நாளாச்சு போல! இங்கே ஹூஸ்டனில் ஆகஸ்ட், செப்டெம்பர் என்றால் புயல் வருமே! உங்களுக்குத் தெரியாமல் இருக்குமா என்ன?
Deleteபத்திரமாய் இருங்கள். யாருக்கும் எந்த் பாதிப்பையும் கொடுக்காமல் புயல் வலுவிழந்து விட வேண்டும் . புயல் அமைதியாக கடந்து செல்லட்டும்.
ReplyDeleteவாங்க கோமதி, புயல் வலுவிழந்து விட்டதாகவே தெரிகிறது.
Deleteஅடடா. ஹூஸ்டன் பக்கமா வருகிறதா.பஹாமாஸ் பக்கம் போறதுன்னு சொன்னானே.
ReplyDeleteபுயலுக்கு முன் வரும் வெள்ளத்தைத் தவிர்த்து முதலில் மகள் வீட்டுக்குப் போய்விடுங்கள் கீதா.
இங்கே எல்லாம் அசுர வேகம்.ஜாக்கிரதையாக இருங்கள்.
பத்திரம்.
வாங்க வல்லி, புயல் பஹாமாஸுக்குத் தான் போய் விட்டது போல! இங்கே இப்போது நல்ல வெயில் அடிக்கிறது.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஅமெரிக்கா புயல் எச்சரிக்கை பயமூட்டுகிறது. வரும் புயலை சமாளிக்க அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்குமே...! இருப்பினும் நீங்கள் அனைவரும் கவனமாக இருங்கள்.
தங்கள் பையரை உடனே இது விபரமாக கூறி கொஞ்சம் சீக்கரம் வரச்சொல்லக் கூடாதா? இந்த மாதிரி சமயங்களில் அவர் துணையாக இருந்தால், உங்கள் அனைவருக்கும் கொஞ்சம் பயமில்லாமல் இருக்குமல்லவா..! ஆனாலும் நீங்களும் புயலைப்பார்த்து ரொம்ப நாளாகி விட்டது என சற்று அதிகமாகவே அதன் காது கேட்கும் திறன் எப்படி என தெரிந்து கொள்ளாமலேயே, குறைப்பட்டுக் கொள்கிறீர்கள். ஹா. ஹா.ஹா.
அதன் காதில் உங்கள் குறை எதுவும் விழாமலும், வரும் புயல் அதிகம் சேதம் விளைவிக்காமலும் அமைதியாக பொடி நடையாக நடந்து கரை கடக்க என்னுடைய மனமார்ந்த பிரார்த்தனைகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, அதெல்லாம் நடவடிக்கை எடுத்திருப்பார்கள் தான். ஆனால் புயல் எல்லோரையும் ஏமாற்றி விட்டது. பையர் அலுவலக வேலை விஷயமாக ஆம்ஸ்டர்டாம் போயிருக்கிறார். அங்கிருந்து அவரை விரைவில் வரச் சொல்வதெல்லாம் நடக்காது. வேலை முடிந்து தான் வருவார். நான் தமிழ்நாட்டில் "தானா" புயலில் இருந்து அடுத்தடுத்து வந்த எந்தப் புயல்களையும் பார்க்கவே இல்லை. ஒவ்வொரு புயலின்போதும், சுநாமியின் போதும் யு.எஸ்ஸில் தான் இருந்திருக்கிறேன். 2016 ஆம் வருடம் வந்த "வார்தா" புயலின்போதும் யு.எஸ்.வந்துட்டோம். இரண்டே நாட்களில் சென்னை விமான நிலையத்தையே மூடினார்கள். :)
Deleteதாங்கள் எழுதியிருப்பதைப் படிக்கவே மனம் பதறுகின்றது...
ReplyDeleteஎவ்வித இடையூறும் நேராமல் இருக்க வேண்டும் கடவுளே...
நானும் வேண்டிக் கொள்கிறேன்...
கவலைப்படும்படி ஏதும் இல்லை துரை. நலமாக இருக்கிறோம். புயலும் நலமாகவே சென்று விட்டது.
Deleteஉங்களை சந்திக்க புயலே வருகிறதா? என்ன கெளரவம்...
ReplyDelete@ஸ்ரீராம்,ஆமாம், உண்மையில் வந்திருந்தால் நன்றாக ரசித்திருக்கலாம். :( ஏமாற்றி விட்டது.
Deleteவீட்டுக்குள் பத்திரமாய் இருங்கள். பையர் ஊரில் இல்லாதது சற்றே கவலைக்குரிய விஷயம்.
ReplyDeleteபையரின் இந்தப் பயணம் அவங்க அலுவலகத்தால் ஏற்கெனவே திட்டமிடப் பட்டது. ஆகவே எதுவும் செய்ய முடியாது. இப்போது கவலையும் இல்லை . புயல் ஓடி விட்டது.
Deleteபுயல் எல்லாம் வேண்டாம் இயற்கை அமைதி கொள்ளட்டும்.
ReplyDeleteநிலமையை அவதானித்துக் கொண்டு கவனமாக இருங்கள்.
வாங்க மாதேவி, உங்கள் பிரார்த்தனை பலித்துவிட்டது, புயல் ஓடியே போய் விட்டது. மாறும் சீதோஷ்ணத்தை ரசித்துக் கொண்டு இருக்கிறேன்.
Deleteவராத புயலுக்கெல்லாம் அறிவிப்பா! தமிழ்நாட்டு மீடியா ஸ்டைலோ!
ReplyDeleteவாங்க ஏகாந்தன், புயல் இல்லைனு நேத்திக்குச் சொன்னேன். இன்னிக்குப் பார்த்தால் குழந்தையை ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பியதில் இருந்து மழை கொட்டிக் கொண்டிருந்தது. டவுன்டவுனில் எல்லாம் வெள்ளம். அங்கே அலுவலகங்களுக்குச் சென்றவர்கள் வீடு திரும்பப் பிரச்னைகள். நல்லவேளையாகக் குழந்தையைப் போய்க் கூட்டி வந்துட்டோம். எங்க மாப்பிள்ளை அலுவலகத்தில் எல்லோரையும் வீட்டுக்குப் போய் வேலை செய்யச் சொல்லிட்டாங்க.
Delete//டவுன்டவுனில்// downtown
Delete