எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, September 29, 2019

நாங்களும் ஹவுடி மோதி பார்த்தோமே!

வரிசையில் எங்கள் முறை வந்ததுமே அங்கிருந்த தன்னார்வலர் எங்களுக்கு எனத் தரைத்தளத்தில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், அங்கே ஃப்ளோர் ஆக்ஸெஸ் வழியாக நேரே உள்ளே அரங்கத்தினுள் நுழையலாம் எனவும் சொல்ல எனக்கு அப்பாடா என இருந்தது.நமக்கு அங்கே தான் இருக்கைகள் இருக்கும் என முதலில் இருந்தே  எனக்குக் கொஞ்சம் சந்தேகமாகவே இருந்தது. நல்லவேளையாக மூத்த குடிமக்கள் என்பதால் நமக்குக் கிடைக்கும் சில சலுகைகள்  உண்மையில் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. தரைத்தளத்துக்குச் செல்லும் வழியில் சென்று அங்கே கழிப்பறை எனக்குறிப்பிட்டிருப்பதில் போகலாம்னு நினைத்தால் அங்கிருந்த பாதுகாவலர் வெளியே தாற்காலிகக் கழிவறைகள் வைத்திருப்பதாகச் சொன்னார். நிறைய நடமாடும் கழிவறைகள். மீண்டும் ஸ்ரீரங்கம் நினைவுக்கு வந்தது. இங்கேயும் திருவிழாக்காலத்தில் அது நிறைய வைப்பார்கள். பின்னர் நேரே உள்ளே செல்லும் வழியில் சென்று எங்கள் இருக்கையைக் கண்டு பிடித்தோம். இடப்பக்கம் பக்கவாட்டில் இருந்து பார்க்கும்படி சில இருக்கைகளும் நடுவில் இடம் விட்டு மத்தியில் வருமாறு இரண்டு பக்கங்களிலும் இருக்கைகள், அதைத் தவிர்த்து வலப்பக்கம் வேறே இருக்கைகள். எங்களுக்குப் பின்னால் காலரியைச் சுற்றிலும் கீழே இருக்கைகள். அத்தனை இருக்கைகளும் சிறிது நேரத்தில் நிரம்பி வழிந்தன.

காலரிகளில் நிறையப் படிகள். அடுக்கடுக்காக அமைந்திருந்ததால் படிகளில் ஏறி, இறங்கி வர வேண்டும். எஸ்கலேட்டர் மேல் அடுக்கில் இறக்கி விடுகிறது. அங்கிருந்து படிகளில் இறங்கிக் கீழே உள்ள கடைசி அடுக்கு காலரிக்கு வந்து மீண்டும் படிகளில் இறங்கி இடத்தைக் கண்டு பிடித்து அமரவேண்டும். அங்கே உள்ள தளத்தில் கழிவறைகள் இருந்தன. ஆனால் அத்தனை படிகள் ஏறிச் செல்ல வேண்டும் என்பதால் நாங்கள் தாற்காலிகக் கழிப்பறையையே பயன்படுத்திக் கொண்டோம்.
கூட்டம் கூட்டமாக


எதிரே மேடையில் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாக ஆயத்தம்


வலப்பக்க காலரியின் கூட்டம் ஒரு பார்வை


மேடை தெரியுதா?



குழந்தைகளின் மோகினி ஆட்டம்

நான் பையரைச் சோளப் பொரி வாங்கித் தரச் சொன்னேன். எங்க பெண் மெம்பிஸில் இருக்கையில் பெரிய பேத்திக்கு (அப்பு அப்போப் பிறக்கவில்லை) நிறைய வெண்ணெய் போட்டு வாங்கித் தருவாள். எனக்கும் ஆசையாக இருக்கும். ஆனால் கேட்கக் கூச்சம் என்பதால் கேட்டதில்லை. அதே போல் "சிவாஜி" படம் பார்க்க மெம்பிஸில் தியேட்டருக்குப் போனப்போவும் எல்லோரும் பக்கெட் பக்கெட்டாகச் சோளப் பொரி  வாங்கினார்கள். நம்மவரிடம் சொன்னால் (நாங்க ரெண்டு பேர் தான் அந்தப் படத்துக்குப் போனோம்) "நீ என்ன சின்னக்குழந்தையா?" என ஓர் முறைப்பு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இணைய உலகிலேயே அன்றும், இன்றும் என்றும் ஒரே சின்னக்குழந்தை நான் தான் எனத் தெரியவில்லை! நு நினைச்சுட்டுப் போனால் போகிறதுனு அவரை மன்னிச்சு விட்டுட்டேன். ஆனால் இன்னிக்கு ஆசையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பையரும் வாங்கி வந்தார். பையர் தனக்கு சமோசாவும் எங்களுக்குச் சோளப்பொரியும் வாங்கி வந்தார். வேறே என்னென்னமோ விற்பதாகவும் ஒன்றும் சாப்பிடும்படி இல்லை எனவும் சொன்னார். எங்களுக்கு எதுவும் வேண்டாம் எனச் சொல்லி விட்டோம். ரங்க்ஸிடம் கொஞ்சம் கொடுத்துவிட்டுச் சாப்பிட ஆரம்பிச்சேன். என்ன ஏமாற்றம். நோ வெண்ணெய்! துரோகி! யாரைச் சொல்றது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், பரவாயில்லைனு மனசை சமாதானம் செய்துட்டுச் சாப்பிட ஆரம்பிச்சேன். ரங்க்ஸிடம் கொடுத்ததைச் சாப்பிட்டு முடித்து விட்டார். இன்னும் வேண்டுமானு கேட்டால் வேண்டாம்னார். சரினு நான் சாப்பிட்டால் அவர் கையில் இருந்த ஜிப்லாக்கைத் திறந்து அதில் உள்ளவற்றை வெளியில் எடுத்துவிட்டுச் சோளப்பொரியை அதில் கொட்டச் சொல்லி வற்புறுத்தினார். எனக்கு ஒண்ணும் புரியலை! ஏன்? எனக் கேட்டால் நீ இந்த பக்கெட்டைக் கையில் வைச்சுக்கொண்டு தவிக்கிறே என்றார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அந்த பக்கெட்டைக் கையில் வைத்துக் கொண்டு தானே சாப்பிட முடியும்? இது கூடப் புரியலையேனு அவரை ஓர் முறை முறைத்துவிட்டு நான் பாட்டுக்குச் சாப்பிட ஆரம்பித்தேன். விடவில்லை. அதுகுள்ளே பாதி காலியாகப் பையருக்கு பயம் வந்துடுச்சு போல! அடுத்த துரோகி! வெண்ணெய் போட்டுச் சோளப்பொரி கேட்டால் வெறும் சோளப்பொரி வாங்கிக் கொடுத்ததோடு அல்லாமல் அதைச் சாப்பிடாதே, வயித்தை வலிக்கப் போகுதுனு கண்ணு வைக்க ஆரம்பிச்சார். கடுப்பாக வந்தது. லட்சியம் செய்யாமல் சாப்பிட்டால் இரண்டு பக்கமும் விட்டால் தானே!

மனசே நொந்து போனது. சின்ன வயசில் இருந்து ஆசைப்பட்ட ஓர் பதார்த்தத்தை இப்போக்கூடச் சாப்பிட விட மாட்டேன் என்கிறார்களே என! கிட்டத்தட்ட அழாக்குறையாக அந்தச் சோளப்பொரியைப் பையரிடம் கொடுத்தேன். அவர் வாங்கி வைத்துக்கொண்டார். (@துரை, சோகக்கதை இப்போ என்னன்னு புரியுதா?)   கண்ணும் மனமும் அதிலேயே இருந்தது. அதற்குள்ளாக மேடையில் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்போவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தன.

சிறிது நேரத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசிக் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப் போவதாய்ச் சொல்ல நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. முதலில் கேரளத்தின் மோகினி ஆட்டம், பின்னர் தமிழ்நாட்டின் பரதநாட்டியம், ஆந்திராவின் குச்சுப்பிடி, கர்நாடகாவின் யக்ஷகானம் என வரிசையாக ஒவ்வொன்றாக வந்தன. வடகிழக்கு மாநிலத்தின் குழந்தைகள் மிக அருமையாக ஆடினார்கள். எல்லோருமே நன்றாக ஆடி இருந்தாலும் இவர்கள் ஆட்டம் சிறப்பாக அமைந்தது. பஞ்சாபின் பாங்க்டா நடனமும், ராஜஸ்தான், ஹரியானாவின் நடனங்களும் கண்களைக் கவர்ந்தன.  நிகழ்ச்சிகள் ஆரம்பம் ஆனதும் கழிவறையைப் பயன்படுத்தச் சென்றால் பாதுகாவலர்கள் வெளியே அனுமதிக்கவில்லை. காலரிக்குச் செல்லும் படிக்கட்டுகளைக் காட்டி அதன் வழியே மேலே ஏறி உயரே உள்ள முதல் காலரித்தளத்தில் உள்ள கழிவறைகளைப் பயன்படுத்தும்படி சொல்லி விட்டார்கள். நல்லவேளையாக எங்களுக்கு எதுவும் சாப்பிடாததால் பிரச்னை ஏதும் இல்லை



கலை நிகழ்ச்சிகளின் படங்கள் வெவ்வேறு விதங்களில்












மேடையின் இரண்டு பக்கங்களிலும் மற்றும் மேடைக்கு மேலும் பெரிய பெரிய ஸ்க்ரீன்கள். நடுவே கீழே விளக்கு வெளிச்சத்துக்குக் கீழே மேடை தெரிகிறது. பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவற்றை ஓரளவுக்குக் கொடுத்திருக்கேன். மோகினி ஆட்டம் மட்டும் 2,3 முறை வந்திருக்குனு நினைக்கிறேன். 

64 comments:

  1. இனிய நிகழ்வு...

    ReplyDelete
    Replies
    1. வாங்க அனு. முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
    2. அப்டேட் பண்ணி இருக்கேன் அனு. மறுபடி படிச்சுப் பாருங்க!

      Delete
    3. அட... மீஈஈஈ first ஆ.😍😍😍😍😍😍😍😍😍😁😁.....

      ஆனாலும் சோள பொறி உங்களை ரொம்ப படுத்துது மா...விடுங்க..இப்போ trichy லேயே வெண்ணெய் போட்ட சோள பொறி கிடைக்குது...உங்களை பார்க்க வரும் போது வாங்கி வரேன்.


      Delete
    4. வாங்க அனு, மீள்வரவுக்கு நன்றி. திருச்சி என்ன, மதுரையிலேயே அந்தக்காலத்திலேயே சித்திரைப் பொருட்காட்சியில் சோளப்பொரி வெண்ணெய் போட்டு விற்பாங்க! யாரும் வாங்கித் தான் கொடுத்தது இல்லை. :))))

      Delete
  2. //மேடை தெரியுதா?// - முன்னால் இருக்கும் பெண்ணின் ஜடைதான் தெரியுது. உடனே, அதுதான் நான் என்று சொல்லி எனக்கு மயக்கம் வர வைக்காதீர்கள்.

    அப்புறம் சுட்டாறிய தண்ணீரை என் முகத்தில் தெளித்துத்தான் என் நினைவுக்குக் கொண்டுவரவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் கூர்ந்து கவனிக்கணும் நெல்லையாரே! மேடைக்கு முன்னால் ஐந்து, ஆறு வரிசைகள் முக்கியஸ்தர்கள் அமரும் நாற்காலிகள். அதைத் தாண்டி "ஏ"யில் இருந்து ஆரம்பித்து "ஜே" வரைக்கும் நாற்காலிகள், நாற்காலிகள். இந்த அழகில் கூர்ந்து பார்த்தால் தவிர மேடை தெரியாது. உங்களுக்கு வயசாச்சு இல்லையா? அதான் தெரியலை!

      Delete
  3. கலை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள்னு கீசா மேடம் நிறைய படங்கள் கொடுத்திருக்காங்களே.

    ஒண்ணுலயாவது கலைநிகழ்ச்சிகள் தெரியுதா? உடனே மேல டிவி ஸ்க்ரீனைப் பார்க்கச் சொல்லக்கூடாது. மேடைல உள்ள கலைநிகழ்ச்சிகளை போட்டோ எடுக்கச் சொன்னா, ஆகாயத்துல உள்ள ஸ்கிரீனைக் காட்டறாங்களே... இதுல வேற 60% பேட்டரி போயிடுச்சுன்னு கவலை.

    என்னத்தைச் சொல்ல... இன்னும் மோடியோட இருக்கும் படம் வரலை. ஒருவேளை அமெரிக்காவில் இருக்கும் வரை இந்த ஒரு நிகழ்ச்சியையே 'ஆன்மீகப் பயணம்' கணக்கா ஏகப்பட்ட இடுகைகளாப் போட்டுடலாம் என்ற சதியா?

    ReplyDelete
    Replies
    1. எல்லோருமே ஸ்க்ரீனைத் தான் பார்க்க வேண்டி இருந்தது. மேடை தெரிவதற்காக எழுந்து நின்றால் பின்னால் இருந்து உட்காரு எனக் கூவல். நடுவில் போனால் தன்னார்வலர்களும், பாதுகாவலர்களும் அன்போடு அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்துச் செல்லுவார்கள்.

      Delete
    2. அட... மேடையைப் பார்க்க முடியாம, மேலே இருக்கும் ஸ்கிரீனைப் பார்ப்பதற்கு, வீட்டிலேயே ஹாயாக ஒரு தேநீர்க்கோப்பையுடன் டிவியிலேயே பார்த்திருக்கலாமே.

      Delete
  4. //அழாக்குறையாக அந்தச் சோளப்பொரியைப் பையரிடம் கொடுத்தேன். அவர் வாங்கி வைத்துக்கொண்டார்// - அவங்க கவலை அவங்களுக்கு. என் அம்மா, சமீபத்துல என் தம்பி அவருக்கு நிறைய இனிப்புகள், தேன்குழல்லாம் (ச்ராத்தப் பட்சணம்) கொடுக்கலைனு குறைப்பட்டுக்கொண்டது நினைவுக்கு வந்தது. தம்பி, அதெல்லாம் அம்மாவுக்கு ஒத்துக்காது, 1/2 இனிப்பு, துளி தேன்குழல் இவ்வளவுதான் ஒத்துக்கும் என்று சொன்னான். ஹா ஹா.

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அநியாயமா இல்லையோ? என் மாமியார் கடைசி வரை எல்லாம் சாப்பிட்டார். பற்கள் போன பின்னரும் ஊற வைத்துச் சாப்பிடுவார். கொழுக்கட்டை பண்ணினால் இரவுக்கு அதான் ஆஹாரம்.

      Delete
  5. எப்படியோ விழா அமர்க்களமாக நடந்து கொண்டு இருக்கிறது.
    இன்னும் விழா நாயகன் வரவில்லையே...

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, விழாநாயகர் வர தாமதம்னு இல்லை. நேரமே அப்படித் தான் குறிச்சிருந்தாங்க.

      Delete
  6. நிகழ்வைப் பார்த்தது போல இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. நன்றி யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்

      Delete
  7. மேடை தெரியுதா  மேடை தெரியுதா ன்னு கேட்டால் அந்தப் வெள்ளை டி ஷர்ட் பெண்ணின் விரிகூந்தல்தான் தெரிகிறது!   நான் என்னை மறந்து எழுந்து நின்று கூடப் பார்த்துவிட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா! எழுந்து நின்னதைப்பார்த்துட்டு உங்க பாஸ் என்ன சொன்னார்?

      Delete
    2. ஹா ஹா ஹ ஹா ஹாஹா ஹையோ ஸ்ரீராம் வயிறு வலிக்கச் சிரிச்சுட்டேன் அதுவும் நினைச்சுப் பார்த்து...ஹையோ

      கீதா

      Delete
    3. //எழுந்து நின்று கூடப் பார்த்துவிட்டேன்!// - யாரைனு நான் கேட்க மாட்டேன். பாருங்க.. அந்தப் பெண் இல்லாமல் ஒரு படம் கூட இல்லை. இவங்க மேடையை எடுத்தாங்களான்னே எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. இதுக்கு பேசாம அந்தப் பெண்ணைக் கொஞ்சம் தள்ளியிருக்கச் சொல்லிட்டு படம் எடுத்திருக்கலாம்.

      Delete
    4. எல்லோருக்கும் அதே கதை தான். எங்களுக்கு முன்னால் இருந்தவங்களுக்கு அவங்களுக்கு முன்னால் இருந்தவங்க மறைச்சாங்க. "ஏ" வரிசையில் இருக்கை கிடைச்சிருந்தால் நல்லா இருந்திருக்கும். என்ன செய்யறது? என்னை மாதிரி விவிஐபிக்களை எல்லாம் முன் வரிசையில் உட்கார வைக்க வேண்டாமோ?

      Delete
  8. சோளப்பொரி கதை கண்ணில் நீரை வரவழைத்தது.     இதன்மேல் இவ்வளவு பிரியமா?!!!

    ReplyDelete
    Replies
    1. அதை ஏன் கேட்கறீங்க ஸ்ரீராம், அந்த உருகும் வெண்ணெய்க்காகவே சாப்பிடத் தோணாதா என்ன?

      Delete
    2. ஸ்ரீராம் நானும் கீதாக்கா கட்சி. எனக்கும் மிகவும் பிடிக்கும். அதுவும் வெண்ணை மணத்துடன் ஆஹா....அது போல வெண்ணை கேரமல் போட்ட கொஞ்சம் இனிப்பான சோளமும் ரொம்பப் பிடிக்கும்... எனக்கும் சிலது எல்லாம் வயிற்றைப் பதம் பார்க்கும் தான்...கீதாக்கா போல .....ஆனால் இது வயிற்றை ஒன்றும் செய்யாது...இதுவரை செய்ததில்லை

      கீதா

      Delete
    3. எங்க குடியிருப்பு வளாகத்துக்குக் கீழே இருந்த சூப்பர் மார்க்கெட்டில் சோளம் வகை வகையாகச் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். எங்க பொண்ணு அப்புவுக்கு வாங்கிக் கொடுப்பாள்.

      Delete
    4. ஸ்ரீராம்... எனக்கும் மனசுல அப்படித்தான் தோன்றியது. எங்க அம்மா, தனக்கு இது பிடிக்கும்னு சொல்லிடுவாங்க. அதுனால எனக்கு வாங்கித் தருவதில் குழப்பம் வந்ததே இல்லை. அவங்களுக்கு சுடச் சுட மெதுவடை, நல்ல நல்ல ஐஸ்க்ரீம் இதெல்லாம் பிடிக்கும். அங்க வந்தபோது எல்லாம் வாங்கித்தந்தேன்.

      நான் எது வாங்கினாலும் (குல்ஃபி வெளில வித்துக்கிட்டு வருவானே அதையும்) எங்க அப்பா, அம்மாவிடம் கேட்டுவிடுவேன் வேணுமா என்று.

      Delete
    5. அதெல்லாம் நாங்களும் செய்திருக்கோம் நெ.த. என் மாமனார், மாமியாருக்காகவே முட்டை போடாமல் கேக் பண்ணுவேன். வெண்ணெய் பிஸ்கட் பண்ணுவேன். இப்படி எத்தனையோ! குல்ஃபி எல்லாம் மண் சட்டியில் வைச்சிருப்பாங்களே அது தான் சுவை அதிகம்! அதிலும் ராஜஸ்தானில் சாப்பிட்டுட்டு வேறே குல்ஃபி சாப்பிடவே பிடிப்பதில்லை.

      Delete
    6. ராஜஸ்தானில் குல்ஃபியா? கூகுள்ள செர்ச் பண்ணிப் பார்க்கிறேன். அங்கதானே பாலைவனம் இருக்கு, ஒட்டகம், தண்ணீர் இன்மை எல்லாம். அங்க குல்ஃபி பண்ணித்தர்றாங்களா?

      Delete
  9. கழிவறைக் கதையும் அங்ஙனமே....    வரும்போது கேட்டால் கீழே என்றார்கள்.  உள்ளே வந்து கேட்டால் மேலே என்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமா இல்ல, ஆனால் கடைசியில் கூட மோதியும், ட்ரம்பும் அவங்க தங்கும் இடம் போய்ச் சேர்ந்தாச்சுனு தெரிஞ்சப்புறமாத்தான் எங்களை வெளியே அனுப்பினாங்க! :P:P:P

      Delete
  10. இன்னும் மோடிஜி வரவில்லை. சோளப்பொரிக்கு இத்தனை பாடு படுத்துகிறார்களே.
    இங்கே வாருங்கள்,

    ரெண்டு பட்டர் பாப்கார்ன் வாங்கித் தருகிறேன். அன்யாயமா இருக்கே,
    குழந்தைகள் நிகழ்ச்சிகளைச் சரியாகப் பார்க்க முடியவில்லை.

    அந்தப் பெண் நன்றாக மறைத்துக் கொண்டுவிட்டது.
    ஆனால் உங்கள் விவரிப்பு ஸ்டேடியத்துக்கே அழைத்துப் போய்விட்டது.

    ReplyDelete
    Replies
    1. மோதி அவ்வளவு சீக்கிரம் முன்னறிவிப்பெல்லாம் இல்லாமல் வந்துடுவாரா வல்லி? இந்தச் சோளப்பொரிக்கதையைச் சொல்லி அழணும்னு காத்துண்டு இருந்தேன். இன்னிக்குத் தான் ஜன்மம் சாபல்யம் ஆச்சு!

      Delete

  11. பாப்கார்ன் ஆசை இன்னும் இருந்தால் சொல்லுங்க...இங்குள்ள Costco வில் ஆர்டர் பண்ணி அனுப்புகின்றேன்.... அதை மைக்ரோவேவில் வைத்து வேண்டும் போதெல்லாம் பொரித்து சாப்பிடலாம்.. வெண்ணேய் சேர்த்த பாப்கான் தான் மிக நன்றாக இருக்கும் இந்தியா செல்லும் போது எனது மனைவியின் அக்காவிற்கு அதைத்தான் வாங்கி செல்வோம்..... அவர்கள் தேவையான போது ஒரு பாக்கெட் எடுத்து பொரித்து சாப்பிடுவார்கள் எனது மாம்மியாருக்கும் இது மிகவும் பிடிக்கும்...

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா தமிழரே, என்னை மாதிரியும் சிலர் இருப்பதைச் சொன்னதுக்கு நன்றி. நம்ம ஊரிலும் மைக்ரோவேவில் வைத்துப் பொரிப்பார்கள் என்பதை நானும் பார்த்திருக்கேன். ஆனால் எங்க வீட்டில் மைக்ரோவேவில் சோளம் வாங்கி வைத்தது இல்லை! அப்பளம், வடாம் தான்!

      Delete
  12. அந்தப் படத்துக்குப் போனோம்) "நீ என்ன சின்னக்குழந்தையா?" என ஓர் முறைப்பு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இணைய உலகிலேயே அன்றும், இன்றும் என்றும் ஒரே சின்னக்குழந்தை நான் தான் எனத் தெரியவில்லை! //

    அதானே இந்தச் சின்னக் குழந்தைய எப்படி ஏமாத்திட்டாங்க சோளப் பொரியைத் திருப்தியா சாப்பிட விடாம!!!!!!!! அடுத்த முறை மாமாவிடம் சொல்லுகிறேன்...ஹா ஹா ஹா பாவம் குழந்தைனு

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அது இன்னொரு சோகக்கதை இல்லையோ! யாரு புரிஞ்சுக்கறாங்க! நீங்களாவது புரிஞ்சுட்டீங்களே!

      Delete
  13. அது சரி பொண்ணுகிட்ட ஏன் கேட்க வெட்கம் கீதாக்கா? கேட்டு வாங்கிச் சாப்பிட்டிருக்கலாமே. பெண் தானே...வேறு யாரோ என்றால் ஓகே...

    சோளப் பொரி வெண்ணை போட்டு பொரித்தால் செமையா இருக்கும். உங்களுக்கும் தான் தெரியுமே...ஆனா வீட்டில் செய்ய விடமாட்டாங்க உங்களை கரெக்டா...ஹா ஹா ஹா ஹா

    வீட்டிலேயே குக்கரில் செய்வதுண்டு. சோளத்தை வெண்ணையில் உப்பும் போட்டு கொஞ்ச நேரம் ஊறப் போட்டு அப்புறம் குக்கரில் கேஸ்கெட் போடாம...நல்லாவே பொரியும்.

    அக்கா திங்கறதுக்கு மட்டும் கூச்சமே படாம கேட்டு வாங்கிச் சாப்பிட்டுவிடணும்.!!!!!!!!!!!!!!!! அதுவும் நம்ம பசங்கதானே...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வெட்கம் தான்! வேறே என்ன! பொதுவாகவே நான் கொஞ்சம் தயங்குவேன். அதோடு மாப்பிள்ளை வேறே இருப்பார் இல்லையா? அதனால் இன்னமும் வெட்கம்!

      Delete
  14. அக்கா நெஜமாவே சோகக் கதைதான்...ஹா ஹா ஹா ஹா

    வெண்ணை இல்லாமல் பொரி நன்றாக இருக்கும் என்றாலும் ஸோ ஸோ தான்...சரி சரி அழாதீங்க அடுத்த முறை நான் உங்களைச் சந்திதால் வெண்ணை கலந்த சோளப் பொரியோடவே வரேன்..!!!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தி/கீதா, இன்னும் எத்தனை பேர் சோளப்பொரி வாங்கிட்டு வரப்போறாங்க என ஒரு நீளமான பட்டியலே இருக்கு. கடைசியில் பார்த்தால் வீடு பூராச் சோளப்பொரியாக இருக்கப் போகுது. நம்மவர் முறைக்கப் போகிறார். ஒழுங்கா முறுக்கு, சீடை, தட்டை, ஸ்வீட்டுனு வாங்கிட்டு வரவங்களை நீ சோளப்பொரி வாங்க வைச்சுட்டேனு சொல்லப் போறார். :))))))))

      Delete
    2. கீசா மேடம்... அதோட நிறுத்திடாதீங்க. வாங்கிட்டு வர்றேன்னு சொல்றவங்களை உங்க வீட்டுக்குப் பக்கத்தில் எங்கேயாவது வாங்கிட்டு வரச் சொல்லுங்க. ஓவர் ஆர்வத்துல சிலர், பெங்களூர்லேர்ந்தே வாங்கிவந்து அப்புறம் சவக் சவக்னு இருக்கப்போகுது.

      Delete
    3. நெல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா ஹா

      கீதா

      Delete
  15. ஆது ஏன் அப்படி கழிவறை முதலில் கீழேயே என்று விட்டு அப்புறம் மேலே...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...கீதாக்காவை சோளம் மட்டும் அழ வைச்சது...கழிவறை அழ வைக்கலை...ஒரு வேளை ட்ரம்ப் மோடி வரும் சமயம் என்பதால் அனுமதிக்கவில்லையோ...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கீழே உள்ள கழிவறைகளுக்குப் போக வெளியே செல்லவேண்டும். அரங்கத்தினுள்ளே இருந்தவை அங்கேயே உள்ளேயே அமைந்திருந்தன. விவிஐபிக்கள் வருவதால் ஒரு மணி நேரம் முன்னிருந்தே யாரையும் வெளியே விடாமல் வழியை அடைத்துவிட்டார்கள்.

      Delete
  16. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மேடை ஒன்னுமே தெரியலை....பரவால்லா விடுங்க...யுட்யூப்ல பார்த்துக்கலாம்...அதான் க்ரூப்ல லிங்க் கொடுத்தாங்களே...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அப்பாடா, தி/கீதா, நீங்களாவது சொன்னீங்களே! எல்லோரும் மேடை தெரியலைனு என்னைக் குத்தம் சொல்றாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
    2. கீதாக்கா எல்லாம் அனுபவம் தான் ஹிஹிஹிஹி

      கீதா

      Delete
  17. சோளப்பொரி பொட்டலம் அமெரிக்காவில் மிக பெரிதாக இருக்குமே! அதுதான் வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளாதோ என்று வாங்கி வைத்து கொண்டார்கள் போலும்.

    உங்கள் வயிறு தான் அடிக்கடி மக்கர் செய்கிறதே! அந்த அக்கறைதான் போலும்.

    நம் ஊரில் குக்கரில் பொரித்து கொள்ளும் சோளப்பொரி, மைக்ரோஒவனில் பொரிக்கும் சோளப் பொரி வந்து விட்டதே! விரும்பம் என்றால் கொஞ்சம் கொஞ்சமாய் பொரித்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.

    மோதி வரவு தள்ளி போய் கொண்டே இருக்கிறதே!

    ஸ்டேடியத்தை நன்கு சுற்றிப்பார்த்து விட்டோம்.





    ReplyDelete
    Replies
    1. ஹிஹி, கோமதி, சோளப்பொரி வயிற்றை ஏதும் பண்ணுமா என்ன? அதெல்லாம் ஒண்ணும் பண்ணாது. காரம் இல்லையே! அந்தப் பெரிய பக்கெட்டுகளுக்காகவே அதை வாங்கணும்னு ஓர் ஆசை! பாதி நிறைவேறியது. மோதியை அவ்வளவு சீக்கிரமா வர வைச்சுட்டால் என்ன ஆவது?

      Delete
  18. நேரில் இருந்தால்கூட இவ்வளவு பார்த்திருக்கமுடியுமோ என எண்ணுமளவிற்கு புகைப்படங்களும், வர்ணயைம் அருமை.

    ReplyDelete
  19. இத்தனை பிரம்மாண்டமாக நிகழ்ச்சி நடத்த செலவு அதிகமாகுமே யாருடைய மண்டகப்படி

    ReplyDelete
  20. வெண்ணையில் பிரட்டிய சோளப் பொரிக்காக இந்தப் பகுதி அர்ப்பணிக்கப்பட்டு விட்டது போலிருக்கு. சடக்கென்று விஷயத்திற்கு வராமல் இப்படியே இன்னும் இரண்டு மூன்று பகுதிகள் போனால் தான் எடுத்துக் கொண்ட விஷயத்தை சுவாரஸ்யமாக சொன்ன களை கட்டும். தொடரட்டும்..

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, ஜீவி சார், மோதி வந்ததைப் பத்தி உடனே எழுதிட்டா அப்புறம் இதிலே என்ன ஆர்வம் வரும் எல்லோருக்கும். கொஞ்சம் கொஞ்சமாத் தான் சொல்லணும்.

      Delete
    2. நான் எதிர்பார்த்துக் காத்திருக்கிற ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி நீங்கள் சொல்லப் போவதில்லை என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். :))

      Delete
    3. எல்லோருமே அதுக்குத் தான் காத்துட்டு இருக்காங்க என்பதும் தெரியும் ஜீவி சார். ஆகவே தான் இழுத்தடித்துக் கொண்டு போயிட்டிருக்கேன். அநேகமா இப்போ எழுதப் போகும் பதிவில் முடிச்சுடுவேன். :))))))

      Delete
  21. aஆஆஆஆஆஆஅ மீதான் லாஸ்ட்டூஊ ஆனாலும் தலைப்பு கூவுது ஆனா மோடி அங்கிளை இன்னும் காணம்:)).. கீசாக்காவும் இப்போ அரசியல்வாதிபோல தலைப்புப் போட ஆரம்பிச்சுட்டா கர்ர்ர்ர்ர்ர்:))..

    //நாங்களும் ஹவுடி மோதி பார்த்தோமே!//
    கபடியில் மோதினோம் என படிச்சு.. ஹையோ கீசாக்காவுக்கு எதுக்கு இந்த விபரீத ஆசை என ஓடி வந்தேன்..:))

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா அதிரடி, கபடி என்ன? கோலிக்குண்டு, பம்பரம் எல்லாம் ஆடி இருக்கேன். அதெல்லாம் ஒரு காலத்தில்! :)))))

      Delete
  22. கீசாக்காவின் ஜொந்தக்கதை ஜோஒகக்கதை சோளப்பொரிக்கதை கேட்டு எனக்கும் இப்போ ஒரு பக்கெட் சோளனை மைகுறோவேவில் வச்சுச் சாப்பிடோணும் என வருதே:)).. கீசாக்கா அங்கு வோல்மாட்டில் மைக்குறோவேவ் பொப்கோன் கிடைக்கும், விதம் விதமா வாங்கி ஆசைக்கு சாப்பிடுங்கோ.. காசா பணமா?:) மகனின் பாங் கார்ட் தானே ஹா ஹா ஹா:))..

    ReplyDelete
    Replies
    1. எங்கே அதிரடி, மகன் விட்டால் தானே வாங்கிச் சாப்பிட! அதான் பாதியிலேயே பிடுங்கிட்டானே! இந்த லக்ஷணத்திலே எனக்குச் சோளப்பொரி பிடிக்காதுனு அலட்டல் வேறே!

      Delete
  23. வணக்கம் சகோதரி

    அரங்கத்தில் அமர்ந்த பின்னர் ஆரம்பிக்கப்பட்ட கலை நிகழ்ச்சிகள் நன்றாக இருக்கிறது. அதை விட தாங்கள் சோளப்பொரிக்கு அல்லல்பட்ட கதை மிகவும் கலைநிகழ்ச்சிகளை காணவிடாது வருத்தம் தருகிறது.

    இந்த சோளம் முதலில் பார்க்கும் போது எனக்கும் ஆசையாகத்தான் இருந்தது. ஆனால் உங்களை மாதிரியே எனக்கும் சின்ன வயதில் கேட்க வெட்கம், பயம், தயக்கம் இப்பேர்ப்பட்ட குணாதிசயங்கள். இப்போது உடம்புக்கும் ஆகிறதில்லை என (நான் அவர்களுடன் செல்லும் சமயத்தில் மட்டுந்தான் போலும்.. !) வாங்குவதில்லை. போகட்டும்... தங்களுக்கு கைக்கெட்டியும் வாய்க்கு எட்டாமல் போனது வருத்தம்தான்.
    அடுத்த தடவை எங்காவது செல்லும் போது அந்த வெண்ணெய் போட்ட பொரி (இதை நான் இப்போதுதான் கேள்வியேபடுகிறேன்.) வாங்கி சாப்பிட்டு விடுங்கள்.

    அடுத்த பதிவில், பிரதமர்களின் படங்கள் பிரதானமாக வருமென நினைக்கிறேன். அப்புறம் மதிய சாப்பாடு என்ன செய்தீர்கள்? அனைத்துச் செய்திகளும் சுவாரஸ்யமாக இருந்தது. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, இரண்டு நாட்களாகக் கணினியை எடுக்கவே இல்லை. இன்னிக்குத் தான் சற்று நேரம் கிடைத்துப் பார்க்கிறேன். சோளப்பொரிக்கதை எல்லோரையும் உருக்கி விட்டது என எண்ணுகிறேன். :))))) அடுத்த பதிவிலும் கொஞ்சம் மொக்கை தான்! எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் தகவல்கள் இடம் பெறாது என்பதை சந்தோஷத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். :))))))

      Delete