எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, October 19, 2020

அமேசானில் புத்தக வெளியீடு!

 அனைவருக்கும் வணக்கம். வெங்கட்டின் தீவிர முயற்சியால் என்னுடைய சமையல் புத்தகம் Cooking for Youngsters ஆங்கிலத்தில் எழுதப்பட்டது நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. கின்டிலில் கிடைக்கும். 

இந்தியாவில் இருப்பவர்கள் https://www.amazon.in/dp/B08LCC5ZYT என்ற தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 

 For India  https://www.amazon.in/dp/B08LCC5ZYT for India Click  செய்தால் அந்த லிங்குக்குப் போகும். 

பதிவில் காப்பி, பேஸ்ட் டிசேபிள் செய்திருப்பதால் லிங்கைக் க்ளிக்கினால் போகாது!.

https://www.amazon.com/dp/B08LCC5ZYT என்ற முகவரியிலிருந்து அமெரிக்காவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.  அமேசான் எந்த நாட்டில் இருக்கிறதோ அதற்குத் தகுந்த மாதிரி, .in என்பதற்கு பதிலாக .de, .uk என மாற்றினால் போதுமானது! 

 For America  https://www.amazon.com/dp/B08LCC5ZYT  for America click  செய்தால் அந்த லிங்குக்குப் போகும். 

Do not copy, paste the links given here. It is disabled in this web page. Just Click on For India or For America. You can easily get the page. 

Name of the Book: Cooking for Youngsters.

இதில் உள்ள குறிப்புகள் அவ்வப்போது எங்க பெண்ணுக்கு நான் அந்தச் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப அனுப்பியவை. அவற்றை ஓர் பதிவாகவும் போட்டு வந்தேன். இப்போது முதல் முயற்சியாக அதில் உள்ள சமையல் குறிப்புக்களைத் தொகுத்துப் புத்தகமாக்கி வெளியிட ஆசையில் வெங்கட்டைத் தொடர்பு கொண்டேன். இதில் எடிட்டிங் செய்தது, எழுத்துப் பிழைகளைச் சரி பார்த்தது ஆகியவை மட்டுமே என்னோட வேலை. மற்றதெல்லாம் வெங்கட் தான் செய்தார். புத்தகத்தின் அட்டை நன்றாக இருப்பதாக என் பெண் சொன்னாள். அவளுக்குப் புத்தகம் திறக்கவில்லை என்றாள். இந்தச் சுட்டியைக் கொடுத்துத் திறந்து பார்க்கச் சொல்லணும். எனக்கும் புத்தகம் திறக்கவில்லை. சரினு BUY FREEஎன்று இருக்கும் இடத்தில் போய்க் க்ளிக்கினால் புத்தகத்தோட விலையை எப்படிக் கொடுக்கப் போறேனு என்னையே கேட்குது! சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்னு ஓடியே வந்துட்டேன். எத்தனை நாட்கள் இலவசத் தரவிறக்கம் என்பது தெரியவில்லை. எப்படியும் புதன் வரை இருக்கும். அதுக்குள்ளே முடிஞ்சவங்க/விருப்பமுள்ளவங்க தரவிறக்கிக் கொள்ளவும். தமிழ் படிக்கத் தெரியாத எங்க வீட்டுக் குழந்தைகளுக்காகப் போட்டிருக்கும் புத்தகம் இது. விரைவில் அடுத்த புத்தகமும் வெளிவர முயற்சிகளை மேற்கொள்ளணும். இம்முறை நானே (முடியுமா) புத்தக வெளியீடு செய்யவும் ஆவல். பார்க்கலாம். 

வெங்கட்டுக்கு மிக்க நன்றி. எத்தனை தரம் சொன்னாலும் போதாது.

28 comments:

  1. Super மாமி 👌👌👌👏👏👏. இங்க இருக்கற link clickable linkஆ இல்லை மாமி. Copy paste பண்ற மாதிரி இருக்கு, அந்த link முடிஞ்சதும் ஒரு enter குடுத்து பாருங்க. Thanks for sharing

    ReplyDelete
    Replies
    1. சரி செய்திருக்கேன் ஏடிஎம். பார்த்துட்டுச் சொல்லுங்க. முதலில் லிங்க் மட்டும் கொடுத்திருந்தேன். காப்பி, பேஸ்டுக்கு அது சரிவராது என்பது மறந்துட்டேன். :(

      Delete
    2. இப்போ சரியா இருக்கு மாமி, முதல் புத்தகம் வெளியிட்டப்ப நானும் பல முறை மாற்றினேன், we will learn only with practice, not a problem Maami

      Delete
  2. இந்தியா என்ற சுட்டி சரியாகவே திறக்கிறது... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு தனபாலன்.

      Delete
  3. பதிவு கண்டேன். பதிவில் என்னையும் குறிப்பிட்டு இருந்தது கண்டேன்! மகிழ்ச்சி. ஆனால் குறிப்பிடும் அளவுக்கு நான் ஒன்றும் செய்து விடவில்லை என்பதையும் சொல்லி விடவேண்டும்!

    இலவசமாக தரவிறக்கம் குறித்து தனிமடல் அனுப்பி இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. @ வெங்கட், இப்போவா? ஏற்கெனவே காலையிலே அனுப்பிச்சிருந்தீங்க!

      Delete
  4. வாழ்த்துகள் தொடர்ந்து வரட்டும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  5. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.  சுவாரஸ்யமான புத்தகம் என்று தெரிகிறது.  நல்ல வரவேற்பைப் பெறும்.  என்னிடம் கிண்டில் கணக்கோ, அமேசான் கணக்கோ கிடையாது.  இன்னும் தொடங்கவில்லை.   

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், ஆச்சரியம்னு சொல்லி இருந்தது இதைத் தான்! ஏனெனில் நான் அமேசான் கணக்கெல்லாம் ஆரம்பிச்சுக் கிண்டில் கேடிபியில் எல்லாம் சேர்ந்து மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் புத்தகங்களை வெளியிட முடியாத ஒரு சூழ்நிலை. ஒரு வழியா இந்தப் புத்தகத்தை இப்போத் தான் எடிட் செய்து வெங்கட்டுக்கு அனுப்பி அவர் ஒரு சில மாற்றங்களைச் செய்து புத்தகத்தின் அட்டையையும் தேர்ந்தெடுத்து வெளியீடு காண வைத்தார். ஆகவே முழுக்க முழுக்க இதன் பெருமை அவரையே சாரும். சுவாரஸியமானதா இல்லையானு எல்லாம் தெரியாது. போகப் போகத் தான் தெரியும். பார்ப்போம். இன்னமும் 2 புத்தகங்கள் எடிட்டிங்கிற்குக் காத்திருக்கிறது. அதற்குள்ளே நானே சொந்தமாச் செய்யக் கத்துக்கணும். மண்டையில் ஏறுதானு பார்க்கணும். :)))))

      Delete
  6. மகிழ்ச்சி, வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முனைவர் ஐயா!

      Delete
  7. அன்பு கீதாமா,
    மனம் நிறைந்த வாழ்த்துகள்.
    லிங்க் சென்று என்ன வென்று தெரிகிறது .திறக்கத்தான் இல்லை.

    எனக்கு மின்னூல்கள் எட்டாக் கனிகள்.
    அன்பு வெங்கட்டுக்கு வாழ்த்துகள்.
    நானும் ஏதாவது செய்ய முடியுமான்னு பார்க்கிறேன்.
    குழந்தைகள் ஆசைக்காக.

    எல்லோரும் ஒரு பேப்பர் ,ஒரு மரம் என்று
    பயமுறுத்துவதால்
    ப்ரிண்ட் செய்ய முடிவுக்கு வரமுடியவில்லை.:)

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, அச்சுப்புத்தகங்கள் போட முடியவில்லை என்பதால் தான் நானும் மின்னூல்களாகவே போட்டேன். இப்போ அமேசான் மூலம் இதுவே முதல் புத்தகம். அடுத்து இரு புத்தகங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றாகச் செய்யணும். அதற்குள்ளாகப் புத்தகம் வெளியீட்டைக் கற்றுக் கொள்ளணும்! :)))))

      Delete
  8. வாழ்த்துக்கள்.
    வெங்கட் உதவியதற்கு அவருக்கும் வாழ்த்துக்கள்.
    தொடரட்டும் புத்தகங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு. பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

      Delete
  9. வணக்கம் சகோதரி

    உங்களது மின்னூலுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். இன்னமும் தங்கள் ஆசைப்படி நிறைய மின்னூல்கள் வெளியிட இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    இதற்கு முன்பே நீங்கள் பல மின்னூல்கள் வெளியிட்டிருப்பதாக நான் நினைத்துக் கொண்டுள்ளேன். இதுதான் முதல் என்பது போல சொல்லியுள்ளீர்கள் என ஆச்சரியமடைந்தேன். இது சமையல் சம்பந்தபட்ட புத்தகம் ஆனதால்,(அதுவும் ஆங்கிலத்தில்) நிறைய வரவேற்பை பெறும் என்பது உறுதி. என்னிடம் அமேசான் கணக்கு இல்லை..இல்லாவிட்டால் தரமிறக்கிக் கொண்டிருப்பேன்

    இங்கு இன்று மலையிலிருந்து பெய்யும் மழையால், கரண்ட, நெட் படுத்தலில் எனக்கு நேரம் கிடைக்கும் சமயத்தில் கூட, பதிவுகளுக்கு வர இயலவில்லை. உங்களுடைய நான்காம், ஐந்தாம் நவராத்திரி பதிவுக்கு கருத்திட விரைவில் வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, அமேசான் மூலம் இது முதல் புத்தகம். இதற்கு முன்னால் https://freetamilebooks.com/ebooks/lalithambal_sobanam/ இவங்க மூலம் ஒரு பத்துப் புத்தகங்கள் போல் வெளி வந்திருக்கின்றன. இப்போத்தான் முதல் முதலாக அமேசான் மூலம் போட்டிருக்கேன். அதனால் முதல் புத்தகம் என்று சொன்னேன். உங்களுக்கு நேரம் இருக்கையில் வாருங்கள், இங்கேயும் அடிக்கடி போயிட்டுப் போயிட்டுத் தான் மின்சாரம் வருது!

      Delete
  10. வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நூறு டாலராவது அனுப்பி வைங்க. அங்கேயே வங்கிக் கணக்கு அக்கவுன்ட் நம்பர் இருக்கே! ஓசியெல்லாம் உங்களுக்குக் கிடையாது. தாமதமாப் பார்க்கிறேன். :))))

      Delete
  12. Geetha, so descriptive and well explained. Young boys and girls especially abroad will find these recipes very welcoming and easy to understand. Like Sriram, I don't have any accounts. Your initiative in publishing your recipes has made me think about my own collection. Maybe I could also publish them.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமா, முக்கியமாய் எங்க பெண், அவளுடைய சில சிநேகிதிகள், எங்கள் சிநேகித இளம்பெண் ஆகியவர்கள் கேட்டதினால் எல்லாவற்றையும் போட்டு வந்தேன். இப்போது புத்தகமாய்ப் போட்டிருக்கேன். தமிழிலும் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதில் நிறையவே செய்முறைக்குறிப்புகள் இருப்பதால் எடிட் செய்ய நேரம் எடுக்கிறது. நீங்களும் செய்யுங்கள். நிச்சயமாய் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

      Delete