எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, October 06, 2020

இதெல்லாம் திப்பிசத்தோடு சேர்த்தி இல்லை!

 முன்னெல்லாம் அதாவது பதிவுகள் எழுத ஆரம்பித்த சமயம், பதினைந்து வருஷங்களுக்கு முன்னர் இரண்டு தீவிர விஷயங்களைக் கொண்ட மாதிரி மனோபாவத்தோடு பதிவுகள் போட்டால் அதைச் சரிக்கட்ட இரண்டு மொக்கைகள் போடுவேன். எல்லாம் நம்ம உலக்கை நாயகர், ஒரு சீரியஸ் படம் எடுத்தால் ஒரு மொக்கை எடுப்பாரே! அது மாதிரித் தான்! இஃகி,இஃகி,இஃகி! இப்போல்லாம் பதிவுகள் தினசரி போடுவதையே நிறுத்திட்டேன். என்னிக்கானும் தான்! ஆகவே மொக்கைகள் போடவே முடிவதில்லை. இன்னிக்கு ஒரு மொக்கைப் பதிவு. 

பானுமதியோடு ஜவ்வரிசி வடையைப் பார்த்ததும் நேத்திக்கு நானும் ஜவ்வரிசிக் கிச்சடி/உப்புமாவுக்கு ஜவ்வரிசியை ஊற வைச்சிருந்தேனா! மத்தியானம் சாதம் கொஞ்சம் அதிகம் மிஞ்சி விட்டது. இன்னிக்குச் செவ்வாய்க்கிழமை! விரதம்னு இருக்காட்டியும் பழையது சாப்பிட முடியாது! சாதத்தைத் தீர்த்துடணும். உப்புமாவை ஊற வைச்ச ஜவ்வரிசியைப் போட்டுக் கிளறினால் அதுவே நிறைய ஆயிடும். சாதம் வீணாகிடும். தூக்கியும் எறிய முடியாது. இத்தனைக்கும் ஒரு கிண்ணம் ஜவ்வரிசி தான் ஊற வைச்சேன். ஊறி இரட்டிப்பாகி விடுமே! ஆகவே உப்புமாவுக்கு ஊற வைச்ச ஜவ்வரிசியில் பாதியை எடுத்து வைச்சுட்டு மீதியில் சாபுதானா கிச்சடி பண்ணி, அந்த சாதத்தையும் மோர் விட்டுப் பிசைந்து ஊறுகாயோடு சாப்பிட்டாச்சு. இன்னிக்குக் காலையிலிருந்து அந்த ஜவ்வரிசியை என்ன செய்யலாம்னு பேச்சு வார்த்தைகள்! சுமுகமான முறையிலேயே போச்சு! மிச்சம் வேர்க்கடலைப் பொடியும் இருந்தது. தாலி பீத் பண்ணவானு கேட்டேன். ராத்திரி வேளைக்கு அது ரொம்பவே வயிறு கனமாக இருக்கும்னு சொன்னார். ஆகவே ஜவ்வரிசி வடை செய்துடலாம். ஆளுக்கு இரண்டிரண்டு வரும்னு முடிவு பண்ணி ஓகேனு அப்ரூவலும் வாங்கியாச்சு. ஒரு நடுத்தர உருளைக்கிழங்கைக் குக்கரில் குழைய வேக விட்டு எடுத்துக் கொண்டேன். 

ஊற வைச்ச ஜவ்வரிசியைக் குளிர்சாதனப் பெட்டியில் வைச்சிருந்ததை சுமார் 2 மணி அளவில் வெளியே எடுத்து வைத்திருந்தேன். அதில் உருளைக்கிழங்கை உதிர்த்துப் போட்டு, வேர்க்கடலைப் பொடியையும் போட்டுப் பச்சைமிளகாய், (இஞ்சி மறந்துட்டேன்) உப்பு, கருகப்பிலை, கொத்துமல்லி, பெருங்காயப் பொடி போட்டுச் சேர்த்துப் பிசைந்தேன். வேர்க்கடலைப் பொடி போதவில்லை. சரினு என்னிடம் எப்போவும் கையிருப்பில் இருக்கும் பொட்டுக்கடலைப் பொடியில் கொஞ்சம் சேர்த்துக் கொண்டேன். (இது ஒண்ணு தான் திப்பிசம்) சரியாகி விட்டது. வடைகளாகத் தட்டினேன்.  படங்கள் கீழே! 



பிசைந்து வைத்திருக்கும் மாவு! இலை எடுத்து வைச்சுக்க மறந்துட்டேன். ஆகவே ப்ளாஸ்டிக் கவர்!


வெந்து கொண்டிருக்கும் வடைகள். ஜவ்வரிசி முத்து முத்தாகத் தெரிந்ததும் ரேவதி நினைவு வந்தது., வடை ஓரம் எல்லாம் முறுகலோ முறுகல். பொட்டுக்கடலை மாவு காரணமோனு நினைச்சேன். இனிமேல் பொட்டுக்கடலை மாவே போடலாமோனும் நினைச்சேன். நன்றாக உப்பிக் கொண்டு வந்தது. சாப்பிட்டாச்சு பானுமதி தயவில்! 

48 comments:

  1. நானும் கண்டு கொண்டேன் தங்கள் தயவில்.. நன்றியக்கா...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, நன்றி!

      Delete
  2. பாஸ் கிட்ட சொல்லி நேரடியாகவே இந்தத் திப்பிசை வேலையைச் செய்யச் சொல்றேன்.  பையன் ரசிப்பான்!

    ReplyDelete
    Replies
    1. செய்ங்க ஶ்ரீராம்!

      Delete
    2. @Sriram:ம்ம்ம்ம்ம்ம்! 

      Delete
    3. பாருங்க ஸ்ரீராம், பானுமதி போட்டப்போப் பண்ணிப் பார்க்கணும்னு நீங்க சொல்லவே இல்லை! (இஃகி,இஃகி, இஃகி) இப்போச் சொல்லி இருக்கீங்களே! நாராயணா! நாராயணா! நாராயணா! (நம்ம வேலை முடிஞ்சது!)

      Delete
    4. இதென்னவோ சுலபமாகத் தோன்றியது.. அதுதான்! பானுக்காவின் ம்ம்ம்ம்முக்கும் அதுதான் அர்த்தமோ!

      சென்னையில் இப்போது எங்கள் ஏரியாவில் இடியுடன் மழை!

      Delete
  3. வடையை எடுத்து தட்டில் வைத்து போட்டோ எடுத்திருக்க மாட்டீர்களோ...    அதற்கு தொட்டுக்க என்னவோ?

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், மாவு பிசைந்ததுமே நாலு வடையாகத் தட்டப் பிரிச்சு வைச்சுட்டேன். நாலை மட்டும் தட்டில் போட்டால் யாருக்குக் கொடுக்கிறது? அதான் நாங்களே சாப்பிட்டுட்டோம். :)))))

      Delete
    2. தொட்டுக்கல்லாம் ஒண்ணும் பண்ணலை. பச்சை மிளகாயை நறுக்கிச் சேர்த்திருந்தேனா! அதுவே வாயில் கடிபட்டுக் காரமாக இருந்தது! :)))))

      Delete
  4. நாலே நாலு வடை பண்ணி, நாங்களே சாப்பிட்டுவிட்டோம் என்று சொல்வதற்கா ஒரு இடுகை?

    நியாயமா ஒரு தட்டு நிறைய வடைகளை வைத்து படத்தைப் போட்டு, இடுகையைப் படிக்க வருபவர்களையும் இரண்டு இரண்டு எடுத்துக்கோங்க என்று, தாராள மனப்பான்மை உள்ள, நல்ல, அன்பான...... நெல்லைக்காரங்கதான் சொல்வாங்க போலிருக்கு. இந்த மதுரைக்காரங்க......

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹாஹா, இருந்த ஜவ்வரிசியை வீணாக்காமல் செய்யணும். அதானே முக்கியம். தட்டு நிறைய வடைகளைப் பண்ணினால் யாருக்கு விநியோகம் செய்யறது?

      Delete
  5. நீங்க செய்தமாதிரி, அதிகபட்சம் 10 செய்தால், ஒரு குடும்பத்திற்குப் போதும் (ஆளுக்கு இரண்டிரண்டு). நான் அன்று எவ்வளவு வடை வரும் என்ற சரியான அளவு தெரியாமல், நிறையவே செய்தேன். எனக்கு ஒன்றுதான் பாக்கி இருந்தது. பேசிக்கொண்டே பசங்க சாப்பிட்டுவிட்டார்கள்.

    எப்படியோ நார்மலா பண்ணும் வடையிலும் உங்கள் திப்பிச வேலையைக் காட்டிவிட்டீர்கள்.

    எனக்கு தாலிபீத் என்றால் என்ன என்று மறந்துபோச்

    ReplyDelete
    Replies
    1. எனக்கு தாலிபீத் என்றால் என்ன என்றே தெரியாது!!!!

      Delete
    2. http://sivamgss.blogspot.com/2016/04/blog-post.html ஸ்ரீராம் இந்தப் பதிவிலே உடனே கருத்துச் சொல்லி இருக்கார். நெல்லை 3 வருஷம் கழிச்சுச் சொல்லி இருக்கார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஒழுங்காப் படிச்சாத்தானே! மத்ததுக்குப் பின்னர் வரேன்.

      Delete
    3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஸ்ரீராம் கோவிச்சுண்டுட்டார் போல! நெல்லை, பார்க்கவே இல்லை.

      Delete
    4. பார்க்கிறேன். எல்லாத்தையும் லாக் பண்ணினால், நானே தட்டச்சு செய்யணும். இப்போது வரை ரொம்ப பிஸியாயிட்டேன். பார்க்கிறேன்.

      Delete
    5. Not a penny is he going to take - is இடம் மாறி வந்திருக்கு.

      Delete
    6. கொடுத்த சுட்டியே தவறோ? போகாத ஊருக்கு வழி சொல்றாப்புல இருக்கு

      Delete
    7. 1.//எல்லாத்தையும் லாக் பண்ணினால்// ????????????????????????

      2. Not a penny is he going to/ It is okay.

      3. The link worked for Sriram and he put his comments also. Thank You.

      Delete
    8. கோச்சுக்கலையே... போய்ப் பார்த்துட்டு வந்துட்டேனே...

      Delete
  6. ஜவ்வரிசி வடை நன்றாக இருக்கிறது.

    பொட்டுக்கடலை தான் காரணமாக இருக்கும் மொறு மொறுக்கு.
    செய்து பார்க்கிறேன் என்று சொன்னேன் பானுமதியிடம், ஒரு நாள் செய்ய வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. பொட்டுக்கடலை தான் காரணம்னு நானும் நினைக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமதி!

      Delete
  7. ஆஹா .அற்புதமாகச் செய்து விட்டீர்கள். உண்மைதான் ஜவ்வரிசி பெருகிவிடும். அளவோடு. எடுத்துக் கொள்ளவேண்டும்.
    குறைவான அளவில் அருமையாக. வந்திருக்கிறது.முத்து முத்தாகத் தான் வந்திருக்கிறது. நானோ எண்ணெயே இல்லாத
    வீட்டில் இருக்கிறேன். :)))))). நல்ல படியாக இந்த நோய் போய்ச்சேரட்டும். ஶ்ரீரங்கம் வந்து விடுகிறேன். நன்றி மா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, பொதுவாக எது ஊற வைத்தாலும் இரட்டிப்பாகிடுமே! ஆகவே அளவோடு தான் எதையும் எடுத்துக்கிறேன். அப்படியும் சில சமயம் மிஞ்சி விடுகிறது. ஶ்ரீரங்கம் விரைவில் வாங்க. காத்திருக்கோம்.

      Delete
  8. வடை ஆசையைத் தூண்டியது.

    //இப்போல்லாம் பதிவுகள் தினசரி போடுவதையே நிறுத்திட்டேன். என்னிக்கானும் தான்! ஆகவே மொக்கைகள் போடவே முடிவதில்லை//

    அப்படீனாக்கா... தினம் பதிவு போட்டால் மொக்கை என்று அர்த்தமா ?

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, ஹாஹாஹா, நம்ம ரசிகப்பட்டாளம் முன்னெல்லாம் அப்படித்தான் சொல்லுவாங்க! நேரம் கிடைக்கையில் பழைய பதிவுகளைப் படிச்சுப் பாருங்க.

      Delete
  9. வணக்கம் சகோதரி

    தாங்கள் செய்த ஜவ்வரிசி வடை மொறு மொறுவென்று மிகவும் அருமையாக வந்திருக்கிறது. நீங்களும் அதைச் சொல்லும் போது அதன் சுவை நாவில் தெரிகிறது. இந்த ஜவ்வரிசி வாங்கி வைத்தால் ரொம்ப நாட்கள் அப்படியே இருக்குமா? அதை பயன்படுத்தலாமா? (பாசத்திற்கு எப்போதோ வாங்கியது.) ஏனென்றால் வாங்கி வைத்து கொஞ்ச நாளாகிய ஜவ்வரிசி வீட்டில் இருக்கிறது அதனால்தான் கேட்டேன். இல்லை வேறு வாங்க வேண்டும். நீங்களும், எ.பியில் பானுமதி சகோதரியும் இந்த வடைச் செய்யும் ஆசையை அதிகமாய் உண்டாக்கி விட்டீர்கள். கண்டிப்பாக ஒரு நாள் செய்திட இறைவன் மனம் வைக்க வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, என்னிடம் உள்ள ஜவ்வரிசியும் 2,3 மாதங்கள் முன்னால் வாங்கினது தான். இதுக்கெல்லாம் புதுசா வாங்கணும்னு எல்லாம் இல்லை. உங்களிடம் இருப்பதை வைத்தே பண்ணலாம். கட்டாயமாய் உருளைக்கிழங்கும், வேர்க்கடலைப் பொடியும் வேண்டும். செய்து பாருங்க! படம் எடுத்துப் போடுங்க!

      Delete
  10. wow ..வடை சூப்பர் மா...
    கண்டிப்பா செஞ்சு பார்க்கணும் ...

    ReplyDelete
    Replies
    1. வாங்க அனு, வடை நன்றாகவே இருக்கும். கூடவே தொட்டுக்கச் சட்னியும் பண்ணிடுங்க! :)

      Delete
  11. ஜவ்வரிசி வடை பொரியும்போது பார்க்க அழகாக இருக்கிறது! வெளியில் எடுத்ததும் அதையும் புகைப்படம் எடுத்து போட்டிருக்கலாமில்லையா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க மனோ, போட்டிருக்கலாம் தான். ஆனால் எனக்கு இதைப் படம் எடுத்துப் போடும் எண்ணமே இல்லை. அப்புறமா ஓர் உந்துதலில் வேகும் வடைகளை மட்டும் எடுத்தேன். அதைத் தட்டில் போட்டு எடுக்கணும்னு தோணலை! :))))

      Delete
  12. ஒரு நாள் பண்ணி பாக்கணும். பார்த்துட்டு வீடியோ போட சொல்றேன் சௌம்யாவை . நேரம் சரியா போயிடுது. இந்த மாதிரி புதுசா முயற்சிக்க இன்னும் சில மாசம் ஆகணும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க எல்கே. இது ரொம்பவே எளிது. காலையில் ஜவ்வரிசியை ஊற வைச்சால் மத்தியானம் பண்ணிடலாம். நான் உருளைக்கிழங்கை வேக வைத்துச் சேர்த்தேன். அப்போது தான் நன்கு மாவு கலக்கவரும். (பைன்டிங் னு சொல்வோமே)வேர்க்கடலைப் பொடியும் அளவு சரியா இருக்கணும். பச்சை மிளகாய், இஞ்சியை மிக்சி ஜாரில் போட்டு அடித்தும், ஒன்றிரண்டாகத் தட்டியும், பொடியாக நறுக்கியும் சேர்க்கலாம்.

      Delete
    2. அதுக்குத்தான் நேரம் கிடைக்க மாட்டேங்குது. வெய்யில் அதிகமா இருக்கறதுனாலா மதியம் வெளில போயிடு வந்தா அப்பாடான்னு இருக்கு :)

      Delete
    3. யாரு இந்த அந்நியர்/யள்? எதுக்கு நேரம் கிடைக்கலை. வெயில் எங்கே? சென்னை? "பெண்"களூர்?

      Delete
  13. ஜவ்வரிசி வடை - நன்றாகவே இருக்கிறது - பார்க்க!

    திப்பிசம் - :) அது இல்லாமலா!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, வாங்க வெங்கட், திப்பிசம் நம்ம ட்ரேட் மார்க்காச்சே!

      Delete
  14. //சாப்பிட்டாச்சு பானுமதி தயவில் // ஆஹா! மிகப் பெரிய கௌரவம் தந்ததற்கு நன்றி. இன்னும் இரண்டு பேர்கள் செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள், ஆனால் நீங்கள் மட்டுமே உடனே செயல் படுத்தி இருக்கிறீர்கள். உங்கள் சுறுசுறுப்புக்கு ஒரு சல்யூட்.!  

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், பானுமதி! நீங்க அன்னிக்கு ஜவ்வரிசி வடை போட்டிருக்கலைனா ராத்திரி சாபுதானா கிச்சடி செய்திருக்கப் போறதில்லை. அநேகமாக ஒருவேளை சாப்பிடற அன்னிக்குத் தான் சாபுதானா கிச்சடியை வைச்சுப்போம். ஆனால் வடை நிறையத் தரம் செய்துட்டேன். அதனால் சாபுதானா கிச்சடி பண்ணப் போக ஜவ்வரிசி ஊறினது மிஞ்சப் போக! வடையாக உருவெடுத்தன!

      Delete
  15. சில சமயங்களில் ஒரிஜினல் ஊத்திக்க கொள்ளும், ரீ மேக் ஹிட் அடிக்கும். என்னுடைய திங்கள் கிழமை பதிவை விட உங்கள் திப்பிச பதிவுக்கு பின்னூட்டங்கள் அதிகம் வந்திருக்கின்றன. இதற்குத்தான் ஸ்டார் வேல்யூ என்று பெயரோ? 

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா! பானுமதி! அப்படீங்கறீங்க? இருக்கட்டும்! இருக்கட்டும்! :)))))

      Delete
  16. ஆஹா...ஜவ்வரிசி வடாம் தான் கேட்டிருக்கேன், வடை புதுசோ புதுசு. பாக்கவே அட்டகாசமா இருக்கு. சமயம் கிடைக்கும் போது செஞ்சு பாத்திட்டு சொல்றேன் மாமி. பானுமதி அவர்கள் யாருனு பாக்கணும். நம்ம ரகளை கோஷ்டி செட்டில் கேட்ட பெயராய் இல்லை :)

    ReplyDelete
    Replies
    1. ஏடிஎம், பானுமதி இப்போ நாலைந்து வருஷங்களாகப் பழக்கம். நம்ம கலாய்த்தலுக்கு அவரும் சரிப்பட்டு வருவார். அதெல்லாம் ரகளை பண்ணலாம். ஆனால் அறிவு ஜீவிகளிலே ஒருத்தர்.

      Delete
    2. ஜவ்வரிசி வடை ரொம்பவே ஜிம்பிள். செய்து பாருங்க. உங்க இட்லி மாதிரி ஊத்திக்காது! இஃகி,இஃகி,இஃகி! சமயம் கிடைச்சா விடுவோமா?

      Delete
    3. என்னை அகில உலகுக்கே இல்லைனாலும், கொஞ்ச பேருக்கேனும் கொண்டு சேத்த பெருமை என் வராத இட்லியையே சாரும்.  So, being tagged to my "un"animous idli is always a pleasure Maami :)

      Delete
  17. திரும்பியும் படித்தேன். நல்லாத்தான் பண்ணியிருக்கீங்க திப்பிச வேலையோடு. (எதைச் செய்தாலும் அதிலும் திப்பிசமா?)

    ReplyDelete