எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, October 03, 2020

நாற்பதுகளில் மும்பையில் நடந்த கடற்படை புரட்சி!

சிப்பாய்க் கலகம் 

சிப்பாய்க் கலகம் 2

துரோகம்

துரோகம் 2

3 கொடிகள்

புரட்சி

சரண்

சரண் 2

காந்தி பற்றிய பேச்சு ஒன்றில் ரேவதி மும்பையில் நடந்த கடற்படைப் புரட்சி பற்றிக் கேட்டிருந்தார். அவர் அதைப் பற்றி அறிவார் எனினும் நான் எழுதியதைப் படிக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். ஆகவே  அதைக் குறித்து நான் எழுதிய சில பதிவுகளின் சுட்டிகள் மேலே! அவற்றைக் காப்பி, பேஸ்ட் பண்ணலாம்னு தான் நினைச்சேன். கிட்டத்தட்டப் பத்துப் பதிவுகள். ஆகவே சுட்டிகளைக் கொடுத்திருக்கேன், விருப்பம் உள்ளவர்கள் அங்கே போய்ப் படிச்சுக்கலாம். எல்லாம் 2007 ஆம் ஆண்டில் அம்பேரிக்காவில் இருந்தப்போ எழுதினவை! அவற்றில் ஒன்றில் துரைராஜ்னு ஒருத்தர் கருத்து இடம்பெற்றிருக்கிறது. நம்ம துரையோனு நினைச்சுப் பார்த்தால் நம்ம துரை/ துரை செல்வராஜ்னு நினைவு வந்தது. இது வேறே யாரோ! ஆனால் நம்ம ஜீவி சார் பாராட்டிக் கருத்துச் சொல்லி இருக்கார். படிச்சவங்க காந்தியைப் பற்றிய உங்கள் கருத்துகளை இஷ்டமிருந்தால் பகிரலாம். கட்டாயமெல்லாம் இல்லை. 

16 comments:

  1. சுட்டிகளுக்கு செல்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, ஒவ்வொன்றாய்ப் படிச்சுட்டு (நேரம் இருக்கையில்) கருத்துச் சொல்லுங்கள்.

      Delete
  2. வணக்கம் சகோதரி

    நல்ல சுவையான பகிர்வுதான். தங்கள் எழுத்துக்கள் விரிவாகவும், விளக்கமாகவும் இருக்கும். நிதானமாக ஒவ்வொன்றாய் படித்து கருத்திடுகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, நிதானமாய்ப் படியுங்க. படித்தால் தான் நம் நாட்டு சுதந்திரத்துக்காக உண்மையாகப் பாடுபட்டவர்களைப் பற்றிய புரிதல் வரும். கத்தியீன்றி, ரத்தமின்றி அஹிம்சை வழியில் எல்லாம் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

      Delete
  3. இடுகைகளைப் பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லையாரே, "கடலோடி நரசையா" எனக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? 90 வயதைத் தாண்டிய அந்தப் பெரியவர் இது பற்றி இன்னும் விபரங்களை எழுதி இருக்கார். பல பத்திரிகைகளிலும் இவர் எழுதி இருப்பதைப் படித்திருக்கலாம். முக்கியமாய் அந்தக் கால ஆனந்த விகடனில்! நான் இருந்த மின் தமிழ்க் குழுமத்தில் இவரும் இருந்தார்/இருக்கிறார். அங்கே இவர் எழுதியவற்றில் இருந்தே பல விஷயங்கள் தெரிய வந்தன.

      Delete
    2. அவருடைய முழுப் புத்தகமும் வாங்கிப் படிக்கணும்னு ஆசை. அவர் ஜூனியர் விகடனில் தொடர் எழுதினாரோ? (அவரது அனுபவம்). ஓரிரு இதழ்கள் படித்த நினைவு இருக்கிறது.

      Delete
    3. நெல்லைத் தமிழரே! முழுப்புத்தகங்கள் எனில் நிறைய இருக்கு. அவர் சிறுகதைகளும் நிறைய எழுதி இருக்கார். ஜூனியர் விகடனில் எழுதினதாத் தெரியலை. ஆனந்த விகடனில் தான் வந்திருக்கு, இவருடைய வழிகாட்டுதலின்படி இன்னொருத்தர் கடல் கணேசன் என்பவர் ஒரு வேளை ஜூனியர் விகடனில் எழுதி இருக்கலாம். முன்னெல்லாம் பதிவுகள் போட்டுக் கொண்டிருந்தார். இப்போது தொடர்பே இல்லை. திரு நரசையா மதுரையில் இருக்கிறார்/இருந்தார். இவரது சகோதரரை அரசியல் காரணங்களுக்காகக் கொலை செய்ததாகச் சொல்வார்கள்.

      Delete
  4. ஆர்வமூட்டும் இணைப்புகள்...
    பிறகு வருகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. மெதுவா வாங்க துரை! அவசரமே இல்லை!

      Delete
  5. பழைய பதிவுகளின் சுட்டிகளா?  நீங்கள் சொல்லும் வருடத்தில் பதிவுலகில் நான் பிறக்கவே இல்லை என்று நினைக்கிறேன்.  அப்புறமாய்ப் பார்க்கணும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், நேரம் இருந்தால் பாருங்கள். அவசரமே இல்லை. கட்டாயமும் இல்லை.

      Delete
  6. 2007-ல் உள்ள பதிவுகளுக்கு செல்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு தனபாலன்.

      Delete
  7. பழைய பதிவுகளை படித்துக் கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  8. Reading your blogs after a long time. Interesting to read!

    ReplyDelete