எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, June 26, 2022

என்னென்னவோ எண்ணங்கள்!

 வேலையில் அவ்வப்போது  சுணக்கம் ஏற்படுகிறது. முன்னெல்லாம் ஆரம்பித்தால் சுறுசுறுப்பாக வேலை முடியும் வரை ஓய மாட்டேன். இப்போ முடியறதில்லை. கோயில்கள் எங்கேயும் போக முடியாத காரணத்தால் பழைய பதிவுகளை மேய்ந்து கொண்டிருக்கேன். குறிப்பாகச்   சாப்பாடு பற்றி எழுதுவது என்றால் தனியாக ஒரு ப்ளாக் வேண்டும் என்றே தனியாக ஆரம்பிச்சேன். அங்கேயும்  இப்போக் கொஞ்ச மாசங்களாக எதுவும் எழுதவில்லை. இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை என்பார்கள். அதில் நாங்களோ நிஜமாகச் சாப்பாட்டில்  காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை ருசித்திருக்கிறோம்.

பஞ்சாபின் பைங்கன் பர்த்தா, ருமாலி ரோட்டி, பாஜ்ரா ரொட்டி, சர்சோ கா சாக், காஷ்மீரின் பாசுமதி அரிசியுடன் சேர்ந்த ராஜ்மா, உத்தராஞ்சலில் சாப்பிட்ட தவா ரோட்டி, பத்ரியில் சாப்பிட்ட இட்லி, சாம்பார், உத்தரப் பிரதேசக் காசியில் சாப்பிட்டத் தென்னிந்தியப் பாரம்பரிய உணவு, ராஜஸ்தானின் சூர்மா மற்றும் தால் பாட்டி, ராஜஸ்தான், நசிராபாத்தின் special உணவான கச்சோடா மற்றும் ஜிலேபி(இது உளுத்தம்பருப்பினால் செய்யப்படும் ஜாங்கிரி அல்ல), அங்கு கிடைக்கும் சாக்லேட் எனப்படும் மில்க் ஸ்வீட், அஜ்மேர் மதார்கேட்டில் கிடக்கும் ஆலு சாப்ஸ் மற்றும் தயிர் வடை, மஹாராஷ்டிராவின் பாசந்தி மற்றும் சாபுதானா கிச்சடி, கத்திரிக்காய் சாதம், மும்பையின் ஜூஹூ பீச்சின் பேல் புரி , பிஹாரில் சாப்பிட்டது, கல்கத்தாவின் மாவா லட்டு, மோதி சூர் லட்டு, சந்தேஷ், ரஸ்குல்லா, அஜ்மேர் புஷ்கரில் மட்டும் கிடைக்கும் மால்புவா எனப்படும் மில்க் ஸ்வீட், 

காரசாரமான சமோசா, கர்நாடக உணவு தித்திக்கும் சாம்பார், கொத்துமல்லிச் சட்டினி, எம்டிஆரின் ரவா இட்லி, "பெண்"களூரின் சுவையான காஃபி, ஆந்திராவின் ஊறுகாய் மற்றும் வடை, கோங்குரா கீரையின் துவையல், குழம்பு, கேரளாவின் குழாய்ப்புட்டு, கடலக்கறி, பாலக்காட்டுப் பாயச வகைகள், திருப்பதி/திருமலையின் லட்டு அதைத் தவிர இருக்கவே இருக்கிறது நம் தமிழ் நாட்டு உணவு.

இத்தனையும் நான் ஒருத்தி மட்டும் சாப்பிட்டேன் என்று நினைக்காதீர்கள். போதாக்குறைக்கு குஜராத்தின் டோக்ளாவை விட்டு விட்டேன். அங்கிருந்து சண்டை போடுகிறார்கள். 5,6 வருடம் எங்கள் ஊரில் இருந்து விட்டு நன்றி மறந்தாயே என்று. இன்னும் இருக்கிறது. எழுத.கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகிறேன். என்ன ஒரு கஷ்டம் என்றால் இப்படி வித விதமாகச் சாப்பிட்டதால் ஒரிஜினல் டேஸ்ட்டே மறந்து விட்டது. போதாக்குறைக்கு போன வருஷம் யு.எஸ்ஸில் சாப்பிட்ட Starbucks Latte எனப்படும் காபி, Mac-Donaldன் Chocklate drink என்று எத்தனையோ இருக்கிறது. அங்கே உ.கி.யில் ப்ரெஞ்ச் ஃப்ரை, மக்டொனால்டில் நன்றாக இருக்கும். அதே போல் லேஸ் சிப்ஸ் அங்கே காற்றில்லாமல் வறுவல்கள் நிரம்பிய பாக்கெட்டாகக் கிடைக்கும். இன்னும் மெக்ஸிகோவின் கோதுமை மாவில் செய்யப்பட்ட டார்ட்டில்லா, 


அரபு நாடுகளின் ஃபலாஃபல், என்று பல வகைகள். 

படங்களுக்கு நன்றி கூகிளார்

அதிலிருந்து நான் தேடிக் கண்டு கொண்டது எல்லாம் நம்ம ஊரு ரசம் சாதம், அப்பளம் இரண்டையும் மிஞ்ச எதுவும் கிடையாது என்பது தான்.காயோ, கனியோ, பூவோ, பழமோ இந்தியாவின் சுவையை மிஞ்ச எதுவும் இல்லை. என்னதான் வெளிநாட்டுப் பழங்கள் பார்க்கக் கண்ணுக்கும் மனதுக்கும் நிறைவாய் இருந்தாலும் சுவையில் நம்ம இந்தியப் பழங்களையோ, காய்கறிகளையோ மிஞ்ச எதுவும் இல்லை. இப்போ என்னடாவெனில் கொஞ்ச நாட்களாக எதுவுமே சரியாகச் சாப்பிட முடியலை. பசி, ருசி எல்லாம் என்னமோ இருக்கு. ஆனால் சாப்பாடு சரியா இறங்கறதில்லை.  சாப்பிடணும்னு ஆர்வமும் இல்லை. இதுவும் கொஞ்ச நாட்கள் ஓடும்/ ஓடட்டும். தானே சரியாகட்டும்.  அதுவும் இப்போல்லாம் ஓட்டல்களிலோ, கேடரிங்கிலோ கொடுக்கும் சாப்பாடு சகிக்க முடியலை.எல்லா ஓட்டல்காரங்களும் பேசி வைச்சுண்டு தேங்காய்ச் சட்னியில் பூண்டையும், சாம்பாரில் சோம்பையும்/ஜீரகத்தையும் சேர்க்கின்றனர். அது ஏதோ மசாலா உணவின் வாசனையையே கொடுக்கிறது. நம் தமிழக/தென்னகத்தின் பாரம்பரியச் சுவை என்பது உணவில் இப்போது சுத்தமாக இல்லை. உணவு தான் இப்படின்னா குடும்பம் என்பது நிலையாக இருக்க வேண்டிச் செய்யப்படும் திருமணங்களின் கதியை நினைத்தால் இன்னமும் கலக்கமாகவே இருக்கிறது.

கல்யாணங்களிலும். வைதிகம் என்பது பெயருக்குத் தான். அது தான் முக்கியம் எனத் தெரியாமல் ஏதோ சம்பிரதாயம் என்னும் அளவிலேயே பார்க்கப்படுகிறது. தமிழ்த்தாத்தா உ.வே.சா. தன்னுடைய கல்யாணம் நடந்த விதத்தை விவரித்திருப்பதைப் பார்த்தால் அந்தக் காலங்களில் வைதிகத்துக்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்பதும், திருமணத்தன்று காலை ஆகாரமாகப் பழைய சாதம் கூட வற்றல், வடாங்களோடு போட்டிருப்பதையும் அதையும் வயதில் சிறியவர்களே சாப்பிட்டார்கள் என்பதும் மற்றவர்கள் திருமணச் சடங்குகள் முக்கியமானவை முடிந்த பின்னரே பனிரண்டு மணி அளவில் உணவுக்கு உட்காருவார்கள் என்றும் சொல்லி இருப்பார். ஆனால் இப்போதோ! வகை வகையாக டிஃபன் வகைகள்.

முன்னெல்லாம் வெறும் இட்லி, சாம்பார் தான் கல்யாணங்களில் இடம் பெறும். முதல் நாள் விரதத்தன்று அநேகமாக டிஃபனே இருக்காது. இருந்தாலும் உப்புமா, பொங்கல் என்றே போடுவார்கள். மாலை மாப்பிள்ளை அழைப்பு டிஃபன் தான் கொஞ்சம் பலமாக இருக்கும். அதுவும் சிலர் பாரம்பரியத்தை விடாமல் பஜ்ஜி, சொஜ்ஜியே போடுவார்கள். கல்யாணத்தன்று காலை ஒரு கேசரியும், இட்லி சாம்பாருமே போடுவாங்க. ஆனால் இப்போவெல்லாம் முதலில் ஸ்வீட்டாக அசோகா அல்வா, கோதுமை அல்வா குல்கந்து எனப் போடுகிறார்கள். இட்லி, சாம்பார், சட்னி, பொங்கல், வடை, அல்லது போண்டா, பூரி கிழங்கு அல்லது தோசை கிழங்கு சின்ன ஊத்தப்பம் என வகை வகையாகப் போட்டுப் பசியை அடைத்து விடுகின்றனர். எல்லோராலும் இத்தனையையும் சாப்பிட முடியாது. மத்தியானச் சாப்பாடு அதை விடவும் அதிகமான உணவு வகைகளுடன் இருக்கும். பால் பாயசம், பச்சடி, ஸ்வீட் பச்சடி, இருவகைக் கோசுமலிகள், ஒரு தேங்காய் போட்ட கறி, பருப்பு உசிலி அல்லது காரக்கறி, ஒரு பொரிச்ச கூட்டு, அவியல் கட்டாயமாய், வறுவல், வடை, இரண்டு ஸ்வீட், அப்பளம், ஊறுகாய் சாம்பார், ரசம், மோர், கலந்த சாதம் ஒன்று. அநேகமாகப் புளியோதரை.  இத்தனையும் யாரால் சாப்பிட முடிகிறது?

அதைவிடக்  கல்யாணத்துக்கு முதல் நாளே வைக்கும் ரிசப்ஷனில் மெஹந்தியும், சங்கீத்தும், ஃபோட்டோ செஷனுமே முக்கியத்துவம் பெறுகின்றன. எல்லாமே ஆடம்பரமாகி விட்டது. அந்த ரிசப்ஷன் சாப்பாடு அநேகமாக பஃபே முறையில் தான் போடுகிறார்கள். இதை வயதானவர்களால் தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு நின்று கொண்டே சாப்பிடுவது கஷ்டமாக உணர்கின்றனர். ஆங்காங்கே டேபிள், நாற்காலி இருந்தாலும் சிறியவர்கள் உட்கார்ந்திருந்தால் எழுந்து முதியவர்களுக்கு இடம் கொடுப்பதில்லை. இது தான் இப்படி என்றால் மறு நாள் நடைபெறும் திருமணத்திலோ முற்றிலும் ஆடமரம் தான் இடம் பெறும்.  உணவு என்பது உடலுக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கும் (அதைவிடவும்) திருமண பந்தம் என்பது ஓர் கோலாகலமான ஆடம்பர நிகழ்ச்சியாக மாறி இருக்கு. ஆழமான அர்த்தங்கள் கொண்ட மந்திரங்களைப் புரிந்து கொள்வாரும் இல்லை. அதை எடுத்துச் சொல்லுவாரும் இல்லை. ஏதோ இப்போக் கொஞ்ச வருடங்களாக மாங்கல்ய தாரணம் ஆகும்போது மட்டும் அறிவிப்புச் செய்கிறார்கள். இது அல்ல திருமணம் என்பது. சப்தபதி முடிந்தாலே திருமணம். ஆகவே பெண்/பிள்ளைக்குப் பரிசுகள் கொடுப்பதோ, கை குலுக்குவதோ வாழ்த்துச் சொல்லுவதோ சப்தபதிக்குப் பின்னர் பெண்ணையும்/பிள்ளையையும் தனியாக உட்கார்த்தி வைப்போம். அப்போ வந்து பரிசைக் கொடுத்துக் கைகுலுக்குங்கள் எனச் சொல்கிறார்கள். ஆனால் அதுவரை காத்திருப்போர் வயது முதிர்ந்தோர் மட்டுமே. மற்றவர்கள் அறிவிப்பை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதால் விட்டுவிட்டுக் கைகுலுக்கிப் பரிசைக் கொடுத்துவிட்டுப் போய்க் கொண்டே இருக்கிறார்கள்.

இந்த சப்தபதி என்பது பிராமணர்களுக்கு மட்டுமே உரியது அல்ல. திருமணத்தின் முக்கியமான ஊஞ்சல், மாலை மாற்றுதல், காசி யாத்திரை, தாரை வார்த்தல், அக்னிமூட்டித் திருமங்கல்ய தாரணம், சகோதரன் பொரி இடுதல், சப்தபதி, அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல் போன்றவை அனைத்துத் தரப்பினரின் கல்யாணங்களிலும் தவறாது இடம் பெறுபவை. இவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு பெற்றோராவது தங்கள் பெண்/பிள்ளைகளிடம் சொல்லணும். ஆனால் பெற்றோருக்கே தெரியலைனால் என்ன செய்யமுடியும்? மொத்தத்தில் எல்லா விஷயங்களிலும் ஆடம்பரமும், பகட்டும் மட்டுமே நிறைந்து  உள்ளார்ந்த ஒருமித்த மனப்பான்மையோ, ஈடுபாடோ இல்லாமல் வெறும் சடங்காக ஆகிவிட்டது சமையல்/சாப்பாடு மட்டுமில்லாமல் திருமணங்களும். இப்போது நம் பாரம்பரியத்தைக் கைவிட்டுவிட்டுக் கலந்து கட்டிக் கான்டினென்டல் விழாவாக மாறி வருகிறது. 

36 comments:

  1. இது என்ன... புதுசா கவலைப்பட்டிருக்கீங்க?

    ReplyDelete
    Replies
    1. நெல்லை, புதுசெல்லாம் இல்லை. அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பது தான்.

      Delete
  2. அதெல்லாம் சரி.. கல்யாணம்னா விதவிதமா சாப்பிட எதிர்பார்ப்பாங்க. நீங்க என்னன்னா பொங்கல் இட்லினு கற்காலத்துக்கு இழுத்துட்டுப் போறீங்களே!

    ReplyDelete
    Replies
    1. இப்போ அப்படி ஆகிவிட்டன திருமணங்கள். முன்னெல்லாம் கல்யாணங்களில் மதியச் சாப்பாடு மட்டுமே விதம் விதமாக இருக்கும். கல்யாணத்தன்று இரவுச் சாப்பாட்டிலேயே வத்தக்குழம்பும், மிளகு ரசம்/ஜீரக ரசமும் இடம் பெறும். கட்டுச்சாதக் கூடையிலே வைப்பது தான் சாப்பாடு. காலை சம்பந்திகள் கிளம்புகையில் இட்லி, ஏதேனும் இனிப்புத் தான் பரிமாறிச் சாப்பிட வைத்து அனுப்புவார்கள்.

      Delete
    2. முன்னெல்லாம் கல்யாணங்களில் காலம்பரவே இட்லி தீர்ந்து விடும். இட்லி தீர்ந்துவிட்டால் உப்புமா போடுவார்கள். அதுவும் அதிர்ஷ்டம் இருந்தால் தான் கிடைக்கும். பல கல்யாணங்களுக்கும் போய்க் காலை ஆகாரம் கிடைக்காமல் வெறும் காஃபியுடன் (சில கல்யாணங்களில் அதுவும் லிமிட்) இருந்துவிட்டுப் பதினோரு மணிக்கு மேல் சாப்பிட்டுவிட்டு வந்திருக்கோம்/கேன்.

      Delete
  3. இந்திய உணவுன்னு பாதியை முழுங்கிட்டீங்களே.. சரி சரி.. வயதானதால் மறந்திருக்கும் ஹாஹாஹா

    ReplyDelete
    Replies
    1. எல்லாத்தையும் ஏற்கெனவே முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னாடி ஒரு தரம் எழுதிட்டேன். தேடிப் பிடிச்சுப் படிங்க! இஃகி,இஃகி,இஃகி!

      Delete
  4. மால்புவா நான் நிறைய ஊர்கள்ல பார்த்திருக்கேன். ஒருவேளை மாமா புஷ்கர்ல மட்டும்தான் இனிப்பு கடைக்கு கூட்டிட்டுப் போயிருக்காரோ?

    ReplyDelete
    Replies
    1. பார்த்திருக்கலாம். ஆனால் புஷ்கரில் போய்ச் சாப்பிட்ட பின்னரே வேறுபாடுகள் தெரியும். :))))இப்போ சமீபத்தில் ஒரு கல்யாண ரிசப்ஷனில் கூடப் போட்டாங்க. ஓகே!

      Delete
  5. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. அருமை என்பதை விட அமர்க்களம்.
    பிரம்மாண்ட உணவு பட்டியல்கள் பிரமிபிப்பை உண்டாக்குகின்றன. இவை களில் உங்களைப் போல் அனைத்தையும் நான் சாப்பிட்டதே இல்லை எனலாம். ஏன் கண்ணால் கூட பார்த்ததில்லை. பெயர்களில் சிலது படிக்கவே கலக்க மூட்டுகின்றன. :)

    /அதிலிருந்து நான் தேடிக் கண்டு கொண்டது எல்லாம் நம்ம ஊரு ரசம் சாதம், அப்பளம் இரண்டையும் மிஞ்ச எதுவும் கிடையாது என்பது தான்/

    அதைச் சொல்லுங்கள். நாவுக்கு ருசியானது இது ஒன்றுதான். அன்றிலிருந்தும் சரி.. இப்போதும் சரி,.. ஆனால் ரசம் ஜுரத்திற்கு ஏற்ற மருந்தாகவே சிலர் நினைக்கின்றனர். இந்த ரசத்திலேயே எவ்வளவு வெரைட்டிகள் இருக்கின்றன என்பது நமக்குத்தான் தெரியும். நேற்று முன் தினம் கூட நான் தக்காளி கடையில் இருந்தமையால்
    வீட்டில் இருந்த முருங்கைகாய் கொண்டு ரசம் வைத்திருந்தேன். ருசி நன்றாக இருந்தது.

    ஒரு காலத்தில் ஹோட்டல்களில் சாப்பிட ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால் அது நடக்கவில்லை. இப்போதெல்லாம் ஹோட்டல் உணவை விட நம் வீட்டு தாளித்த மோர் சாதம் தொட்டுக் கொள்ள ஏதேனும் துவையல் இருந்தால் போதுமானதாக உள்ளது. வயிற்றிக்கும் ஏதும் கேடு விளைவிக்காது.

    கல்யாண சம்பவங்கள் பற்றியும் நன்றாக விமர்சனம் செய்துள்ளீர்கள். மாப்பிள்ளை அழைப்பிலிருந்து கல்யாணசாப்பாட்டை நினைத்தால் என் வயிறும் கலங்கி விடும். உண்மைதான். முன்பிருந்த வைதீக சம்பிரதாயங்கள் குறைந்து விட்டன. அழகுக்கும், ஆடம்பரத்திற்கும், விதவிதமான உணவுகளுக்கும் மட்டுமே திருமணம் நடப்பதாகத்தான் தோன்றுகிறது. நல்ல விபரமான அலசல். பதிவை ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா. என்ன இருந்தாலும் நம்ம ஊர்ச் சாப்பாடு மாதிரி வராதுனே நினைக்கிறேன். நானும் முன்னெல்லாம் ஓட்டலில் டிஃபன் சாப்பிட ஆசைப்படுவேன். சாப்பாட்டில் எப்போதுமே ஆர்வம் இல்லை. ரசம் இருந்தால் போதும். ஆகவே கல்யாணங்களுக்குப் போனால் கூட மதியச் சாப்பாட்டைத் தவிர்ப்பேன். உங்கள் பாராட்டுக்கு நன்றி.

      Delete
    2. என்னது இன்று புலம்பல் அதிகமாகிவிட்டது போல இருக்கு..... என்னதான் நம்ம ஊரு சாப்பாடு மாதிரி வராதுன்னு சொல்லி இருக்கீங்க அது சரிதான் ஆனால் எனக்கு அதில் ஒரு சின்ன மாற்றம் என்னதான் சாப்பிட்டாலும் நான் சமைச்சு சாப்பிடுவது போல இல்லவே இல்லை என்பதுதான் என் கருத்து. சென்றாவாரம் என் மனைவியின் தங்கை குழந்தைகளின் அரங்கேற்றத்திற்கு நாலு நாள் சென்று இருந்தேன் நாலு நாள் கழித்து என் வீட்டிற்கு வந்ததும் என் கையால் வத்த குழம்பு வைத்து உருளைக்கிழங்கு பொரியல் மற்றும் அப்பளம் பொரித்த சாப்பிட்ட பிந்தான் எனக்கு என் மகளுக்கு ஒரு திருப்தி

      Delete
    3. உண்மைதான் தமிழரே, எங்கே போனாலும் வீட்டுக்கு வந்து ஒரு ரசம் மட்டும் போதும் எங்களுக்கெல்லாம். அதை வைச்சு அப்பளத்தைச் சுட்டோ/பொரித்தோ சாப்பிட்டால் போதும். மனம் திருப்தியாகவும் இருக்கும். புலம்பல் எல்லாம் இல்லை. சமீப காலங்களில் வேகமாக மாறும் கலாசாரச் சீர்கேட்டினால் தோன்றிய எண்ணங்கள். :(

      Delete
  6. இதுதான் பெஸ்ட்னு (ரசம் சாதம், தயிர் சாதம்) சொவதை விட நமக்குத் பழகியதுதான் எப்பவுமே உகந்தது என்று மனசு சொல்லும் என்று சொல்லலாம்!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்ம்? இருக்கலாம் ஶ்ரீராம். ஆனாலும் உடலுக்கு/வயிற்றுக்குக் கேடு செய்யாத உணவு என்பது தென்னிந்திய உணவே என்பது பொதுவானதொரு கருத்து.

      Delete
  7. நேற்றைகு ஒரு திருமண ரிஸப்ஷனுக்குச் சென்றிருந்தேன்.   என்ன ஒரு ஆடம்பரம்..  டான்ஸ், மேளம், DJ   காதுவலி, பொறுமை போனது.  பந்தியில் சென்று அமர காத்திருக்க வேண்டி வந்தது.  வந்த ஐட்டங்கள் அணிவகுத்தன.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இந்தச் செண்டை மேளம் வந்தாலும் வந்தது, கூச்சல் அதிகமாகி விட்டது. அதோடு எல்லோருமே சாப்பாட்டில் விதம் விதமாக எதிர்பார்க்கிறார்கள்.

      Delete
  8. ஒரு பால்காய்ச்சலுக்குச் செல்ல வேண்டும்.  கிளம்புகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. பால் காய்ச்சும் தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

      Delete
    2. இப்படி வரிசைகட்டி விருந்துகளுக்குச் செல்வதால், ஆற அமர ஶ்ரீராம் சமையலறை பக்கம் ஒதுங்குவதில்லை போலிருக்கு. தி பதிவும் எழுதுவதில்லை.

      Delete
  9. //திருமண பந்தம் என்பது ஓர் கோலாகலமான ஆடம்பர நிகழ்ச்சியாக மாறி இருக்கு. ஆழமான அர்த்தங்கள் கொண்ட மந்திரங்களைப் புரிந்து கொள்வாரும் இல்லை. அதை எடுத்துச் சொல்லுவாரும் இல்லை//

    இதுதான் உண்மை.

    அரபு உணவான ஃபலாஃபில் படத்தோடு போட்டு இருக்கிறீர்களே... இஃகி இஃகி இஃகி.. மற்றொன்று உண்டு கொ.கடலையில் செய்யும் ஃபூல்.

    சுற்றுலா சென்ற நீங்கள் தெரிந்து வைத்து இருக்கிறீர்கள்.

    பல வருடங்களாக இங்கிருப்பவர்களுக்கு குப்பூஸ் மட்டுமே தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி. நான் அரபு நாடுகளுக்கெல்லாம் வந்ததில்லை. அம்பேரிக்காவில்/இந்தியாவில் சுற்றினவை தான் அதிகம். குப்பூஸ் Kubboos அம்பேரிக்க சூப்பர் மார்க்கெட்டுகளில் நிறையக் கிடைக்கின்றன. அதை வாங்கி சனா பண்ணிவிட்டு ஒரு குப்பூஸை நான்காக வெட்டிக் கொண்டு பட்டூரா பூரி போல என் மகள் செய்துடுவாள். ஏனெனில் மாவு பிசைந்தால் மிஞ்சிப் போகிறது. பூரியை ஒரேயடியாகவும் பொரித்து வைக்க முடியாது. ஆதலால் இப்படிப் பண்ணுகிறாள். கொண்டைக்கடலை ஃபூல் என நீங்கள் சொல்லுவது இங்கே சப்பாத்திக்கு மட்டுமில்லாமல் சும்மாவானும் சாட் மாதிரிக் கொரிக்கவும் பண்ணுவது உண்டு. கொண்டைக்கடலையைச் சமைத்துக் கொண்டு அதிலேயே உ.கி. வேக வைத்துப் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் காரக்கடலை, காரம் போட்டு வறுத்த கடலைப்பருப்பு, மெலிதான ஓமப்பொடி, அரிசிப் பொரி வறுத்துச் சேர்த்துக் கொண்டு பச்சைக்கொத்துமல்லி, பச்சை வெங்காயம் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொண்டு எலுமிச்சம்பழம்பிழிந்து கொண்டு சாப்பிடுவோம் மாலைத் தேநீருடன் நன்றாக இருக்கும். அநேகமாக எல்லாச் சுண்டல்களிலும் இப்படிப் பண்ணிச் சாப்பிடலாம். உடம்புக்கும் நல்லது.

      Delete
  10. என்னது இன்று புலம்பல் அதிகமாகிவிட்டது போல இருக்கு..... என்னதான் நம்ம ஊரு சாப்பாடு மாதிரி வராதுன்னு சொல்லி இருக்கீங்க அது சரிதான் ஆனால் எனக்கு அதில் ஒரு சின்ன மாற்றம் என்னதான் சாப்பிட்டாலும் நான் சமைச்சு சாப்பிடுவது போல இல்லவே இல்லை என்பதுதான் என் கருத்து. சென்றாவாரம் என் மனைவியின் தங்கை குழந்தைகளின் அரங்கேற்றத்திற்கு நாலு நாள் சென்று இருந்தேன் நாலு நாள் கழித்து என் வீட்டிற்கு வந்ததும் என் கையால் வத்த குழம்பு வைத்து உருளைக்கிழங்கு பொரியல் மற்றும் அப்பளம் பொரித்த சாப்பிட்ட பிந்தான் எனக்கு என் மகளுக்கு ஒரு திருப்தி

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி புலம்பல் எல்லாம் இல்லை. நம்ம ஊர்ச் சாப்பாடு சாப்பாடு தான்! அதுக்கு ஈடு இணை எல்லாம் கிடையவே கிடையாது.

      Delete
  11. அரபு நாடுகளில் இந்த குப்பூஸ் ரொட்டிக்கு அடிப்படை "0000" குறியிடப்பட்ட white flour.. அது மேலும் செயற்கை இரசாயனங்கள் கொண்டு செறிவூட்டப்பட்டிருக்கும்.. என் உடல் நிலை கெட்டதற்குக் காரணம் இந்த white flour தான்..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். இப்போதெல்லாம் க்ளூடன் விழிப்புணர்வு எல்லோருக்கும் வந்திருப்பதால் இந்த மாவு பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது. நான் ரவாதோசைக்கெல்லாம் கூட மைதாவே சேர்ப்பதில்லை.கோதுமை மாவு அல்லது உளுத்தமாவு. தோசை நன்றாக எடுக்க வரும்.

      Delete
  12. வெள்ளை எள்ளில் புரட்டி எடுக்கப்படாத பிலாஃபில்கள் சற்றே மாற்று குறைந்தவை.. பிலாஃபில் சுவை கூடுவது அதனுடன் சேர்த்து அரைக்கப்படும் கொராட் எனப்படும் அரேபிய/ எகிப்திய புல் வகையினால் தான்...

    ReplyDelete
    Replies
    1. அவ்வளவு தூரமெல்லாம் தெரியாது. எப்போவோ சாப்பிட்டது. அதுவும் அம்பேரிக்காவில்.

      Delete
  13. கீதாக்கா நீங்கள் சொல்லியிருக்கும் பெரும்பாலானவை எல்லாம் சுவைத்து வீட்டில் செய்தும் சுவைத்திருக்கிறோம். ஃபலாஃபல் எபியில் திங்கவில் வந்தது.

    திருமணம் இப்போது ஆடம்பரம் என்பதை ஆமாம் ஆமாம் என்பதை கோடிதடவைக்கும் மேல் சொல்லிக் கொள்கிறேன். சமீபத்தில் நடந்த திருமணம் எல்லாச் செலவுகளும் சேர்த்து அதாவது நகை நட்டு புடவை வைத்துக் கொடுப்பது மண்டபம் ஃபொட்ட்டோ சாப்பாடு என்று 60-70 லட்சமாம்....யம்மாடியோவ் பெண்ணிற்கு வீடே வாங்கிக் கொடுக்கலாமே என்றால் அது தனியாம்.....மயங்கிவிட்டேன். மற்றொன்றும் இதே போலத்தான் நடக்கவிருக்கிறது. என்னவோ போங்க....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இதை இப்போது நான் சொல்வது சரியாக இருக்காது. ஒரு கோவிலில் திருமணம் நடத்தி, ரிசப்ஷன் நன்றாக வைத்து, மீதிக் காசை மகளிடம் கொடுப்பது புத்திசாலித்தனமாக இருக்கும். டாம்பீகமே வாழ்வு என்றாகிவிட்ட இந்தக் காலத்தில் இந்தக் கருத்து எடுபடுமா?

      Delete
    2. மாற்றம் வரும் என எதிர்பார்ப்போம். 60/70 லக்ஷம் செலவு செய்து திருமணம் செய்து கொடுப்பது பெரிய விஷயம் இல்லைனே வைச்சுக்கலாம். அந்தத் திருமணம் நிலைத்து நிற்க வேண்டும். இல்லை எனில்? நினைச்சுப் பாருங்க.

      Delete
  14. கருத்து வந்திருக்கும் என்று நினைக்கிறேன். இவ்வளவு நேரம் பிழை பிழை என்று வந்து கொண்டிருந்தது...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், எனக்கும் பல சமயங்களில் பிழையாகவே வரும்/

      Delete
  15. மாற்றங்கள் ஒன்று மட்டுமே மாறாதது...... பல மாற்றங்களை நாம் கண்டுகொண்டிருக்கிறோம். இன்னும் மாறும். ஒன்றும் செய்வதற்கு இல்லை. நீங்கள் சொன்ன உணவு பட்டியலில் பலவற்றை நானும் சுவைத்து இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்கள் கழிச்சு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட். நீங்க இன்னும் பல இடங்கள் போனவராயிற்றே!

      Delete
  16. உணவு வகைகள் எத்தனை இருந்தாலும் இப்போது நீங்கள் சொல்வது போல ரசம் சாதம் போதுமென்றே தோன்றுகிறது.
    தயிர்சாதம் , இட்லி போதும்.
    திருமண சடங்குகள், உணவு முறைகள் எல்லாம் மாறி விட்டது. பல நாட்டின் உணவை கல்யாண வீடுகளில் பார்க்கிறோம். நம் வீட்டு பழக்கம் என்று ஒன்று உண்டு உணவில், சடங்குகளில். இப்போது அவர்களுக்கு பிடித்தது எல்லாம் ஏற்றுக் கொள்ள பழகி விட்டார்கள்.

    நம்மை போன்றவர்கள் மாற்றத்தை பார்த்து கொண்டு மட்டுமே இருக்க முடியும்.

    ReplyDelete