எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, November 18, 2007

கூட்டணியால் ஏற்பட்ட ஏறுமுகம்!!!!!!!!!

அ.இ.அ.தி.மு.க. அல்லது தே.தி.மு.க. அல்லது பா.ஜ.க. அல்லது ல.தி.மு.க அல்லது தி.மு.க. அல்லது பா.ம.க. அல்லது கம்யூனிஸ்ட் அல்லது காங்கிரஸ், ஃபார்வர்டு ப்ளாக், ராஜீவ் காங்கிரஸ், வாழப்பாடி காங்கிரஸ், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், இப்படி எதுவோ ஒண்ணு, இன்னொரு கட்சியோட வச்சுக்கிட்ட அல்லது வச்சுக்கப் போற கூட்டணினு நினைச்சு வந்த உங்க எல்லாருக்கும் முதற்கண் என்னுடைய நன்றியைத் தெரிவிச்சுக் கொள்கிறேன்.

இது அது எதையும் பத்தி அல்ல, அல்லவே அல்ல. கொஞ்சம், கொஞ்சமே கொஞ்சம் சுயபுராணம். அதைப் பாடிட்டு இதோ விட்டேன் ஜூட், யாருக்கு என்ன சொல்லணுமோ சொல்லிக்குங்க, நான் மெதுவா வந்து பார்த்துக்குவேன், இன்னிக்குத் தான் கொஞ்சம் எழுந்து உட்கார்ந்து எழுதற அளவுக்கு உடம்பு பரவாயில்லை. போன ஞாயிறு அன்று உடல்நிலை சரியில்லாமல் போனபோது, சாதாரண ஜலதோஷக் காய்ச்சல்னு தான் நினைச்சேன். அதென்னமோ எங்க குடும்ப டாக்டருக்கு மட்டும் கொஞ்சம் சந்தேகமாவே இருக்கும். ஏன் என்றால் ஜுரம் வரும்போதே எனக்கு 103*-க்கு மேலே தான் போகுமே ஒழிய, சாமானியத்தில் கீழே இறங்காது. ஒவ்வொரு முறையும் அவர் இது சாதாரண ஜுரம்னு சொல்லத் தான் ஆசைப் படுவார். ஆனால் அது நடக்காது.

வியாதிகள் என் உடலில் கூட்டணி அப்படி அமைத்துக் கொள்ளும். சும்மாவே அக்டோபர் மாசம் பிறந்தாலே எனக்கு பிராங்கைடிஸ் ஜூரம் வந்துடுமேனு பயந்துட்டே நடமாடுவேன். பத்தாக் குறைக்குச் சின்ன வயசிலே கூட இல்லாத டான்சில்ஸ் இப்போ 3 வருஷமாத் தொந்திரவு கொடுத்துட்டு இருக்கு. ஆபரேஷன் வேணாம்னு சொல்லிட்டார் டாக்டர். அதனாலே அப்போ அப்போ அது கொடுக்கிற தொந்திரவு வேறே. இத்தோட ஸ்டமக் இன்ஃபெக்க்ஷன், யூரின் இன்ஃபெக்க்ஷன் என்று எல்லாம் சேர்ந்து ஒரே கூட்டணி அமைத்துக் கொண்டு இம்முறை பல்முனைத் தாக்குதல் நடத்திவிட்டது. க்ளீன் போல்ட்!!!!! சாப்பாடு எல்லாம் வீட்டில் சமைப்பதை மறந்துட்டு வெளியிலே வாங்க ஆரம்பிச்சு,அது ஒத்துக்காமப் போய் டாக்டரையே சாப்பாடு போடறீங்களானு கேக்கலாம்னு நினைச்ச சமயம் நேத்திலே இருந்து அரை மனசாய் வெளியேறி இருக்கு ஜுரம். இன்னும் கொஞ்சம் தொண்டைப் புண்ணும், வீக்கமும் இருக்கு, சரியாப் பேச முடியலை. முழுங்க முடியலை. இருந்தாலும் வேளா வேளைக்குச் சாப்பிடும் மருந்துகளின் உதவியாலே கொஞ்சம் நடமாட்டமும், ஓரளவுக்கு உடல்நிலையில் முன்னேற்றமும் இருக்கு. இந்த வருஷக் கோட்டா இத்தோட முடிஞ்சுடுச்சுனு நினைக்கிறேன். ஒவ்வொரு வருஷமும் அக்டோபர் மாசமும், நவம்பர் மாசமும் கடக்கிறது தான் எனக்குப் பெரிய விஷயமா இருக்கு.

வீட்டில் ஒரு வாரமாகக் கிழிக்கப் படாமல் இருந்த தினசரிக் காலண்டரும், இடம் மாறிய பாத்திர வரிசையும், சாமான்களும் இன்னும் என் கவனத்தை ஈர்க்க ஆரம்பிக்கலை. அவ்வளவுக்கு இன்னும் தெம்பு வரலை. கூடிய சீக்கிரம் வரும்னு நம்பிக்கையுடன்

7 comments:

  1. பேசுவதை பாத்த நல்லா தெளிந்த மாதிரி இருக்கு.. இருந்தும் இன்னும் கொஞ்ச ஒய்வு எடுத்த மிக தெளிவுடன் வாங்க...

    ReplyDelete
  2. கீதா அக்கா.. உடல் நிலை விசயத்த இம்புட்டு சாதாரணமா எடுக்க வேணாம்.. கம்ப்ளிட் மெடிக்கல் செக்கப் ஒன்னு செஞ்சிடுங்களேன். வீட்டுல சமையல் செய்ய முடியலன்னாக்கா.. ஓட்டல் சாப்பாட்ட நம்பி ஒடம்ப கெடுத்துக்க வேணாம். கொஞ்சம் நாளைக்கி யாரையாவது சமையல் /வீட்டு வேலை உதவிக்கு ஏற்ப்பாடு செஞ்சிடுங்களேன்.
    .மனசுல எதப்பத்தின கவலைகளோ/சோர்வோ அண்டாம பாத்துக்கோங்க.. ஒன்னும் அவசரமில்லை,.நல்ல ரெஸ்ட் எடுங்க.நாங்க காத்திருப்போம்..

    ReplyDelete
  3. //பேசுவதை பாத்த நல்லா தெளிந்த மாதிரி இருக்கு.. //

    Repeateee :)

    //வீட்டில் ஒரு வாரமாகக் கிழிக்கப் படாமல் இருந்த தினசரிக் காலண்டரும், இடம் மாறிய பாத்திர வரிசையும், சாமான்களும் //

    சாம்பு மாமாவை குத்தம் சொல்லலைனா உங்களுக்கு பொழுது போகாதே! :)))

    Take care,get well soon and continue your mokkais. :p

    ReplyDelete
  4. விரைவில் நலம்பெற வேண்டிக்கொள்கிறோம்.

    ReplyDelete
  5. இன்னும் நல்லா ரெஸ்ட் எடுத்துக் கொண்டு வாருங்கள்.....யாதொரு அவசரமும் இல்லை.

    ReplyDelete
  6. கீதா, உடெம்பப் பாத்துக்கக் கூடாதா ? ஒரு complete medical check up செய்யக் கூடாதா ? ரங்கமணி என்ன செய்யுறார். பாவம் அவரெத் திட்டாதீங்க - உங்களைக் கவனிக்கறதிலே கஷ்டப்பட்டிருப்பார்.

    பூரண குணாம் சீக்கிரமே அடைய வாழ்த்துகள்.

    உடம்பு சரியானவுடன் எங்க வீட்டுக்கு வாங்க - புது அறை கட்டி இருக்கேன். பாத்துட்டு சொல்ல்லுங்க

    http://cheenakay.blogspot.com

    ReplyDelete
  7. கீதா மேடம் நலம் கண்டு வந்ததற்கு மகிழ்ச்சி.ஆனாலும் மௌளிக்கு குசும்பு ஜாஸ்தி.பாங்களுரில் ரொம்ப தெளிவா பேசினார் கேட்டா கீதாமேடம் பதிவே இப்போ படிக்கலை
    ன்னு சொல்லரார். நீங்க சொன்னா மாதிரியே அம்பி வீட்டுக்கு போகலை இந்த தடவை.:)))

    ReplyDelete