எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, November 02, 2007

அம்பத்தூர் "மாநரகாட்சி"

சந்தோஷப் பட்டுட்டு இருக்கும் அம்பிக்கு வசதியாக இங்கே அறிவிக்கப்படாத மின்வெட்டு மணிக்கணக்காய் அமலில் இருக்கிறது. இந்த லட்சணத்தில் அம்பத்தூரை "மாநரகாட்சி"யாக மாற்றப் போறாங்களாம், காலையில் பேப்பர் பார்த்தேன். வருமானமே இல்லை, நீங்களே தெருக்காரங்க எல்லாம் சேர்ந்து மழைத் தண்ணீரை இறைச்சுக்குங்க, ரோடில் ரப்பிஷைப் போட்டு மூடிக்குங்க என்று சொல்லும் கவுன்சிலர்கள் இருக்கும் நகராட்சியை மாநரகாட்சிக்கு எப்படித் தேர்வு செய்தாங்கனு புரியவே இல்லை. சென்னையின் வடக்கு, மேற்குப் பகுதிகள் மட்டும் ஏன் இப்படினும் புரியவே இல்லை! என்ன பாவம் செய்தாங்க அந்த மக்கள் எல்லாம்? நேற்றுத் தென்சென்னைப் பகுதிக்குப் போக நேர்ந்தது. அங்கெல்லாம் இப்படி இல்லை, பலவிதங்களிலும் முன்னேறியுள்ளது தென் சென்னை. ஒருவேளை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த முக்கியமான நபர்கள் யாராவது வடக்கு, மேற்குப் பகுதிகளில் குடியிருக்கணுமோ என்னமோ? இங்கே அதிகம் வசிப்பது தொழிற்சாலைகளிலும், ரயில்வே, மத்திய அரசுப்பணிகளிலும் இருக்கும் அடிமட்ட, நடுத்தர வர்க்க மனிதர்கள் தானே! அதனால் தான்னு நினைக்கிறேன். சொல்லிட்டு இருந்தால் தினமும் சொல்லிட்டே தான் இருக்கும்படியா இருக்கும். நம்ம அதிர்ஷ்டம் அவ்வளவு தான் அப்படினு மனசைத் தேத்திக்கணும்.

திரு ஜே.சி.டி. பிரபாகரன் ஒருத்தர் தான் இந்தத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த சமயம் பலவிதமான ஆக்கபூர்வமான பணிகளைச் செய்ததோடு அல்லாமல் அடிக்கடி நடைப்பயணமும் மேற்கொண்டு தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டு அறிவார். இப்போ அவர் இருக்கும் இடமே தெரியலை! :(((( ஒரு வேளை "மாநரகாட்சி"யாக அம்பத்தூர் மாறினாலும் கூட வீட்டு வரி, சொத்து வரி போன்ற இன்ன பிற வரிகளின் உயர்வைத் தவிர வேறு உயர்வு ஏதும் வரும்னு தோணவில்லை. இன்னிக்குக் காலையில் 9-30 க்குப் போன மின்சாரம் இப்போ 12-15க்குத் தான் வந்திருக்கிறது. ஃபோன் பண்ணினால் ஒண்ணு ஃபோனை எடுக்கிறதில்லை, அல்லது, தொலைபேசி இணைப்புத் தாற்காலிகமாய்த் துண்டிக்கப் பட்டுள்ளது என அறிவிப்பு வரும். முன்னால் சொல்லிட்டாலாவது அதுக்குத் தகுந்தாற்போல் நம்ம வேலைகளைச் செய்து கொள்ளலாம். அதுவும் அறிவிக்கிறது இல்லை! எப்போ மாறும்னு புரியவே இல்லையே! :((((((((( ஒவ்வொரு வருஷமும் இது பத்தி நிறையவே சொல்லியாச்சு, அதனாலே நம்ம வேலையை மட்டும் தான் நாம் கவனிச்சுட்டுப் போகணும் போலிருக்கு. :((((((

5 comments:

  1. உங்க மொக்கை தாங்க முடியாம, தமிழ்மணத்தை சேர்ந்த, மின் வாரியத்தில் வேலை செய்யும் யாரோ பியூஸ் பிடிங்கிட்டாங்க போலிருக்கு. :p

    அவரை நான் ரொம்ப கேட்டதாக சொல்லவும். :)))

    பேசாம கிண்டிக்கு வீட்டை மாத்துங்க. :p

    ReplyDelete
  2. நீங்கள் இதற்கே அலுத்துக் கொள்கிறீர்கள் மேடம்! என்னுடைய ஊர் பக்கம் எப்ப வேண்டுமானாலும் மின்சாரம் துண்டிக்கப்படலாம்.. அங்கே கேட்பதற்கும் ஆளில்லை.. அப்போதெல்லாம் நாங்கள் நகரங்களுக்கு நிறைய தரவே இங்கே எப்படி செய்கிறார்கள் என்று நினைத்ததுண்டு. இன்னும் மாதம் ஒருமுறையாவது, இரு தினங்களாவது, தொலைபேசி பேசாமல் இருப்பதுந்ன்டு, எங்கள் ஊரில்..

    ReplyDelete
  3. நீங்க இருப்பதால் தான் இப்படி எல்லாம் நடக்குதோ என்னவோ :)

    ReplyDelete
  4. @அம்பி, வீட்டை பங்களூருக்குத் தான் மாத்தறதா உத்தேசம், எப்படி வசதி? :P

    @கார்த்திக், வாங்க, வாங்க, ஏது, ஏது எங்க நினைப்பெல்லாம் கூட வச்சிருக்கீங்களா? ம்ம்ம்ம்ம்? நீங்க சொல்றாப்போல அங்கே மின் விநியோகம் இப்போவும் மோசம்தான் அப்படினு அங்கே இருந்து வந்தவங்க சொன்னாங்க. ஆனால் இந்தத் தொலைபேசி இணைப்புச் சரியில்லாமல் நாங்க ரொம்பவே கஷ்டப் பட்டிருக்கோம். அதுவும் இந்த மழைக்காலத்தில் அநேகமாய் தொலைபேசி செத்தே போயிடும் எங்க தெருவிலே ஒருத்தர் வீட்டிலே தொலைபேசி சரியா இருக்காது. இப்போ ஒரு 5 வருஷமாப் பரவாயில்லை.

    ReplyDelete
  5. புலி, சூடான்லே உட்கார்ந்துட்டு ஏன் சொல்ல மாட்டீங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :P

    @வேதா(ள்), நாங்க எங்கே மாத்தச் சொன்னோம், அவங்களா மாத்தத் தீர்மானம் போட்டிருக்காங்க, பார்க்கலாம்.

    ReplyDelete