415 பதிவுகளை எழுதி இருக்கின்றார் தோழி வல்லி சிம்ஹன். அவரும் நானும் கிட்டத் தட்ட சேர்ந்தே எழுத ஆரம்பித்தோம். எனக்கும் எழுத ஆரம்பித்து மூன்று வருஷங்கள் நிறைந்துவிட்டது என வல்லியின் பதிவைப் படிச்சப்போ தான் நினைவில் வந்தது. எழுதலாமானு நினைச்சுட்டு அப்புறம் வேண்டாம்னு விட்டுட்டேன். 782 பதிவுகள் ஆகி இருக்கு இந்த வலைப்பக்கத்தில் மட்டும். கூடியவரையில் பக்தியிலும், புராண, இதிஹாசங்களிலும் யாரும் அறியாதவற்றைத் தரவேண்டும் என்ற எண்ணத்துடனேயே எழுதி வருகின்றேன். வேறு விஷயங்களைத் தொடுவதில்லை என்ற குறிக்கோளும் இருக்கிறது. இப்போ இது சுய புராணம் இல்லை. (ரொம்ப ஓவரா ஆயிடுச்சோ)
வல்லி சிம்ஹனுக்கு இன்று பிறந்த நாள். இப்போதே தெரிய வந்தது. அவங்களுக்கு வாழ்த்தி ஒரு பதிவு போட வந்துட்டு, என்னோட கதையைச் சொல்லிட்டேன். இன்று பிறந்த நாள் காணும் வல்லி சிம்ஹனுக்கு எங்கள் குடும்பத்தினரின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். வாக்கிலும், செயலிலும் இனிமையையே காட்டி வரும் திருமதி வல்லிக்கு இறைவன் பூரண ஆரோக்கியத்தையும் தரவேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொள்ளுகின்றேன். இன்னும் நேரில் பார்த்ததில்லை. என்றாலும் இனிய தோழி. அவர் கணவருக்கும், அவருக்கும் என்னுடைய வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். பிள்ளையார் வந்து வாழ்த்திட்டு இருக்கார்.
வாங்கப்பா, லைனா வந்து எல்லாரும் வாழ்த்திட்டுப் போங்க! (கூடவே என்னையும்)
நானே ஆரம்பிச்சு வைக்கிறேன். ஒவ்வொருத்தரா வாங்க!
ReplyDeleteவாழ்த்த வயதில்லை..வணங்குகிறோம்! :-)
ReplyDeleteவளமும், நலமும் பெற்று
இன்னும் பல பிறந்தநாட்கள் காண இறைவனிடம் வேண்டுகிறோம்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் வல்லியம்மா...
ReplyDeleteஉங்களை வாழ்த்துகிறேன் கீதா.
ReplyDeleteகிடக்கிறது கிடக்கட்டும்.
யாரையோ எங்கயோங்கற மாதிரி.
சரிப்பா நான் ஒண்ணும் சொல்லலை:)
ஆஹா.....
ReplyDeleteஉங்க இருவருக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.
புள்ளையார் வெகு ஜோர்.
வல்லி அம்மாவுக்கு
ReplyDeleteஇனிய பிறந்த நாளில்,
வாழ்த்த வயதின்றி வணங்குகிறேன்!
கீதா அம்மாவுக்கு
வல்லியம்மா பிறந்தநாளில் வாழ்த்த வயதின்றி வணங்கி உங்கள் பதிவில் மகிழ்கிறேன் :)))
சந்தனமுல்லை,
ReplyDeleteஆயில்யன், வாழ்த்த வயதே வேண்டாம். எல்லாம் வல்ல அந்த ஈசனையே வாழ்த்திப் பாடுகின்றோம், போற்றுகின்றோம். பெரியவங்களுக்கும் தாராளமாய் வாழ்த்துச் சொல்லலாம். வயதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைப்பா! :)))))))))))
துளசி,
ReplyDeleteமதுரையம்பதி, இருவருக்கும் நன்றி.
ரேவதி, உங்களுக்கும் நன்றி.
வல்லியம்மாவிற்கு எங்கள் உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். கூடவே உங்களுக்கும் வாழ்த்துக்கள் கீதாம்மா :-)
ReplyDeleteஉங்கள் இருவரின் ஆசிர்வாதங்கள் என்றும் எங்களுக்கு தேவை.
வல்லிம்மா
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்கள், அப்படியே உங்கள் ஆசிகளுக்கும் எங்களுக்கு வழங்கிடுங்க.
வல்லிம்மாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ,பிறந்த நாளை எங்களுக்கு அறியத் தந்த கீதாம்மாவுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteவல்லிசிம்ஹன்!
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கீதா!
உங்களுக்கும் வாழ்த்துக்கள் நான்காம் ஆண்டுக்கு.. 700+ கலக்குங்க... அடிச்சு ஆடுறீங்க...
ஐஐஐ...சூப்பரு ;)
ReplyDeleteவல்லிம்மாவுக்கு என்னோட மனமார்ந்த வணக்கங்கள் ;)
தலைவீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ 782 பதிவா!!!!!!!!!!!!!
ReplyDeleteயப்பா...;))
என்னோட வாழ்த்துக்கள் ;)
வல்லிம்மாவை வணங்குகிறேன். ஆசி வேண்டுகிறேன். பதிவிட்ட கீதாம்மாவும் நன்றிகள்!
ReplyDeleteவல்லிம்மாவை வணங்குகிறேன். ஆசி வேண்டுகிறேன். பதிவிட்ட கீதாம்மாவும் நன்றிகள்!
ReplyDeleteஎல்லோருக்கும் இங்கே நன்றியும் வாழ்த்துகளும் சொல்லிக் கொள்ளுகிறேன்.நன்றிநன்றிப்பா.
ReplyDelete//அவங்களுக்கு வாழ்த்தி ஒரு பதிவு போட வந்துட்டு, என்னோட கதையைச் சொல்லிட்டேன். //
ReplyDeleteஏதோ இப்ப தான் செய்யற மாதிரி சொல்றீங்க? :))
எப்போதும் இதே கதை தானே? எதுக்கு இந்த சீன்? :p
@வல்லிமா, உங்கள் பிறந்த நாளில் ஆசிகளும், பால் திரட்டி பாலும் வேண்டி நிற்கிறோம்.
- அம்பி,
- மிஸஸ் அம்பி
- ஜுனியர் அம்பி :)
வாங்க நாகேஷ், சீச்சீ, சென்ஷி, வாழ்த்துகளுக்கு நன்றி. ஆசிகள் எப்போவுமே உண்டுப்பா.
ReplyDeleteஅமிர்தவர்ஷிணி அம்மா, உங்கள் ஆசிகள் தேவை!
வாங்க மிஸஸ் தேவ், இன்னிக்கு என்ன சமையல்??
புலி, வாங்க, வாழ்த்துகளுக்கு நன்னிங்கோ!
கோபி, ரொம்ப நன்னிங்க! நீங்க வேலை செய்துட்டே எழுதறதும்,நான் எழுதறதும் ஒண்ணா? நான் வீட்டிலே தானே இருக்கேன்? :)))))))))))
வாங்க அபி அப்பா, ரொம்ப மாசம் கழிச்சு வந்ததுக்கும், வணக்கங்களுக்கும் நன்னி.
அம்பி, புகை விடாதீங்க, திரட்டி பாலும் கிடையாது, திரட்டாத பாலும் கிடையாது, போங்க! :P :P
கீதா, ஏது அம்பி ...கேசரியை விட்டுட்டு, திரட்டிப் பாலுக்குத் தாவிட்டாரு:)
ReplyDeleteஅம்பிக்குத் திரட்டிப் பாலும் ஃபேவரிட் தான். இரண்டும் கிடைக்காதுனு தெரியும், அதான் கேட்கிறார். :)))))))))
ReplyDeleteவல்லியம்மா வாழ்த்துகள். கீதாம்மா வாழ்த்துகள்.
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துகள்!
ReplyDeleteகீதாம்மா வாழ்த்துகள்!!
வரிசையிலே தாமதமா வந்தாலும் சுண்டல் உண்டுதானே?
ReplyDelete:-))
ரெண்டு பேருக்கும் நமஸ்காரம்.