
தமிழ்த் தாத்தாவின் பிறந்த நாள் பிப்ரவரி 19-ம் தேதி.
இன்று மகா வித்துவான் உ.வே.சுவாமிநாத ஐயரவர்களின் பிறந்தநாள். பல சுவடிகளையும், ஏடுகளையும் தேடிக் கண்டு பிடித்து நமக்கெல்லாம் இவர் அளிக்கவில்லை எனில், பல நூல்கள் பற்றியும் நாம் அறிய முடியாமலே போயிருக்கும். வாழ்நாள் முழுதும் தமிழுக்காகவே வாழ்ந்தவர் தமிழ்த் தாத்தா அவர்கள். திருவாடுதுறை ஆதினத்தின் மகா வித்துவான் ஆன ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் பாடம் கேட்டவர். அந்தக் கால கட்டத்தில் ஆங்கில மோகமே அதிகமாய் இருந்து வந்தாலும் இவர் தமிழின்பால் மிக்க ஆசையுடனும், அன்புடனும், ஆர்வத்துடனும் பாடம் கேட்டவர். பின்னர் கும்பகோணம் கல்லூரியிலும், சென்னைக் கல்லூரியிலும் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்தார். திருவாடுதுறை ஆதீனத்தின் மடத்தில் தமிழ் மற்றும் வடமொழி பயின்று வந்த பலரும் இருந்தனர்.அவர்களில் சில தம்பிரான்களும் இருந்திருக்கின்றனர். அவர்களிடையே பதவிகளில் மட்டுமில்லாமல் உணவு பரிமாறுவதிலும் தார, தம்மியம் இருந்து வந்திருக்கிறது. மாணாக்கர்கள் உணவுச்சுவையிலே கருத்தை ஊன்ற ஆரம்பித்தால் பாடம் கேட்பதிலே கருத்துக் குறைந்துவிடும் என்ற எண்ணமே காரணம். எது கிடைத்தாலும் அருந்தித் தேர்ச்சி பெற்றவர்கள் பின்னாட்களில் நல்ல நிலைமையை அடைவார்கள் என்ற எண்ணமும் காரணமாய் இருக்கலாம். என்றாலும் அப்படி ஒன்றும் அப்போது நல்ல உணவு என்பது அனைவருக்கும் கிடைக்கவில்லை.
ஒரு முறை மிக்க பசியோடு ஆசிரியர் ஆன மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களும், சுவாமிநாத ஐயரவர்களும் மகா ஆதீனத்தைப் பார்த்துவிட்டுத் திரும்புங்காலையில், ஆதீனம் அவர்கள், இருவரிடமும், தன்னுடனேயே சேர்ந்து உணவருந்திவிட்டுச் செல்லுமாறு வேண்டுகோள் விடுக்கவே இருவரும் மகா ஆதீனத்துடனேயே உணவு அருந்தினார்களாம். அப்போது உணவில் நெய்யும், தயிரும் பரிமாறப் படவே, மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், சுவாமிநாத ஐயரவர்களிடம், சுவாமிநாதா, நமக்கு இன்று அதிர்ஷ்டகரமான நாள், நெய்யும், தயிரும் கிடைக்கிறது எனச் சொன்னாராம்.
இப்படி உணவில் கூட நெய்யையும், தயிரையும் எப்போதாவது மட்டுமே பார்த்து தமிழ் மொழியை மட்டுமே நினைத்துக் கொண்டு, இவர்கள் இருவரும் உண்மையாகவே உடல் வருந்தித் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ் மொழியை வளர்க்கப் பாடுபடுவோம்.
குழம்பவேண்டாம். சகாதேவன் தமிழ்த் தாத்தான்னா இன்றைய த்லைமுறைக்குத் தெரியாதேனு சொல்லி இருந்த பின்னூட்டத்தைப் பார்த்ததும், போன வருஷம் அவரோட பிறந்த நாளைக்குப் போட்ட இந்தப் பதிவை மீள் பதிவு செய்கின்றேன். இந்த வருஷம் பெப்ரவரி மாதம் நான் ஊரிலேயே இல்லாததால் இந்த வருஷம் பிறந்த நாள் பதிவு போட முடியலை. முன்கூட்டி அப்லோட் பண்ணி இருக்கணும். அதுவும் பண்ண முடியலை. ஆகையால் அதுக்கும் சேர்த்துப் போட்டதாய் இருக்கட்டும்.
//இப்படி உணவில் கூட நெய்யையும், தயிரையும் எப்போதாவது மட்டுமே பார்த்து தமிழ் மொழியை மட்டுமே நினைத்துக் கொண்டு//
ReplyDeleteவாழ்ந்தவர்களுக்கு நம் வணக்கங்கள்.
//இவர்கள் இருவரும் உண்மையாகவே உடல் வருந்தித் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ் மொழியை வளர்க்கப் பாடுபடுவோம்.//
கண்டிப்பாக.
மீள் பதிவுக்கு நன்றிகள்!
நல்ல (மீள்)பதிவு
ReplyDelete