இன்று தமிழ்த்தாத்தா அவர்களின் நினைவு நாள். தாத்தா இல்லை எனில் இன்றைக்குப் பல தமிழறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் தமிழுக்குச் சேவை செய்திருக்க முடியாது. ஐயரவர்கள் வாழ்நாளில் பல வகையிலும் கஷ்டப் பட்டு தமிழுக்கு உண்மையான, மறக்க முடியாத தொண்டாற்றினார். ஆங்கில மோகம் அதிகமாய் இருந்த அந்தக் கால கட்டத்தில் தமிழ் மொழியின் பல பழமை வாய்ந்த ஓலைச் சுவடிகளைத் தேடிக் கிராமம் கிராமமாய்ச் சென்று அவற்றைக் கண்டு பிடித்து அவை எந்த வகையினால் ஆனது, எதைக் குறித்தது எனக் கண்டு பிடித்து அவற்றை வகைப்படுத்திய பெருமையும் இவர் ஒருவரையேசாரும்.
இவர் காலத்திலும் தமிழையும், தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டுப் பழக்க வழக்கங்களையும் இழிவாய்ப் பேசும் நபர்கள் இருந்திருக்கின்றனர் என்றும், ஆங்கில மோகத்தில் அனைவரும் மயங்கிப் போய் இருப்பதைப் பற்றி இவர் வேடிக்கையாய்க் குறிப்பிடுவதில் இருந்து அறிய முடிகின்றது. இப்போதும் தமிழ் பேசுவதும் படிப்பதும் அதே போலத் தான் இருக்கின்றது என எண்ணும்போது கொஞ்சம் வருத்தமாய்த் தான் இருக்கிறது. எனினும் காலம் மாறும், காத்திருப்போம். தமிழ்த்தாத்தாவுக்கு அஞ்சலி.
தமிழ் தாத்தாவுக்குத் தலை வணங்கி வைக்கின்றேன் எனது அஞ்சலியை.
ReplyDeleteதமிழ்த்தாத்தாவின் நினைவு நாளில் அவரை வணங்கி,அஞ்சலி செலுத்துகிறேன் !
ReplyDeleteme too
ReplyDeleteஇன்றைய தலைமுறைக்கு தமிழ்தாத்தா யார் என்று தெரியுமா.
ReplyDeleteஉத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சுவாமிநாத ஐயர் (உ.வே,சுவாமிநாத ஐயர்)19/02/1844 அன்று பிறந்தவர் என்று கூடுதல் தகவல் கூகிளில் தேடி தருகிறேன்.
சகாதேவன்
தமிழ் தாத்தாவைச் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்.
ReplyDeleteஎப்படி கீதாம்மா இப்படி நினைவிலிருந்த்தி பதிவிடுறீங்க?...இதுக்காகவே உங்களையும் ஒரு முறை வணங்கிக்கறேன் :-)
வருஷா வருஷம் நினைவு வெச்சு கொண்டு தமிழ் தாத்தாவுக்கு பதிவு போடும் ஒரே நபர் நீங்களாதான் இருப்பீங்க!
ReplyDelete