
2893=நம்மாழ்வார் பாசுரங்கள்
நெஞ்சமேநல்லை நல்லை,உன்னைப்பெற்றால்
என்செய்யோம், இனியென்னகுறைவினம்?
மைந்தனை மலராள்மணவாளனை,
துஞ்சும்போதும் விடாதுதொடர்க்கண்டாய். 1.10.4
ஐயனுடன் ஆன திருமண வாழ்க்கையைப் பற்றிய கனவே அவளிடம் இப்போது இல்லை. ஐயனை மறந்தே விட்டாள் என்றே சொல்லலாம். பர்சானாவில் ஒரு வானம்பாடியைப் போல் பறந்து திரிந்து கொண்டிருந்த ராதை, இங்கே விருந்தாவனத்திலும் அதே மாதிரியான வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டாள். ஆனால் பர்சானாவில் அவள் தாய்வழிப்பாட்டி ராதையைத் தன் கண்ணின் கருமணியை விட அருமையாகப் பாதுகாத்து அன்போடு வளர்த்தாள். இங்கே அவளின் மாற்றாந்தாய்மார்களிடம் சாதாரண அன்பே கிட்டாதபோது, அவள் கண்ணின் கருமணியாவாது எங்கனம்?? மாற்றாந்தாய்மார் ராதையின் தந்தையிடம் ராதையின் போக்கைப் பற்றிச் சொல்லிக் கண்டிக்கும்படி அறிவுறுத்தினர். ஆனால் ராதையின் தந்தையோ இந்த விஷயம் தூசி மாத்திரம் எனக் கருதினார். ஏனெனில் கோபியர் அனைவருமே கண்ணனிடம் பித்துக் கொண்டு அலைந்தனர். அதே சமயம் வேறொருவனைத் திருமணம் செய்து கொண்டு குடும்பவாழ்க்கையையும் ஒழுங்காகவும், அழகாகவும் நடத்தி வந்தனர்.
2940
உள்ளுளாவி யுலர்ந்துலர்ந்து, என
வள்ளலேகண்ணனேயென்னும், பின்னும்
வெள்ளநீர்க்கிடந்தாய்,என்னும், என்
கள்விதான்பட்ட வஞ்சனையே. 2.4.7
ஆகையால் இது கண்ணனின் உருவ அமைப்பும், அவன் பழகும் விதமும் அனைவரையும் கவரும் வண்ணம் இருப்பதைக் கவனித்திருந்த ராதையின் தந்தை ஐயனோடு ராதையின் திருமணம் முடிந்துவிட்டால் எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையோடு இருந்தார். ஆனால்??????? கண்ணனோ பெரிய பையனாய் வளர்ந்து கொண்டிருந்தான். இப்போது காட்டிற்கு ஆநிரைகளை அழைத்துச் சென்று மேய்த்து வரும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருந்தான்.

244/ பெரியாழ்வார் பாசுரங்கள்
சீலைக்குதம்பைஒருகாது ஒருகாதுசெந்நிறமேல்தோன்றிப்பூ
கோலப்பணைக்கச்சும்கூறையுடையும் குளிர்முத்தின்கோடாலமும்
காலிப்பின்னேவருகின்ற கடல்வண்ணன்வேடத்தைவந்துகாணீர்
ஞாலத்துப்புத்திரனைப்பெற்றார் நங்கைமீர். நானோமற்றாருமில்லை. (2
251:
கேட்டறியாதனகேட்கின்றேன் கேசவா. கோவலர்இந்திரற்கு
கட்டியசோறும்கறியும்தயிரும் கலந்துடன்உண்டாய்போலும்
ஊட்டமுதலிலேன்உன்தன்னைக்கொண்டு ஒருபோதும்எனக்கரிது
வாட்டமிலாப்புகழ்வாசுதேவா. உன்னைஅஞ்சுவன்இன்றுதொட்டும். 8.

கண்ணனோ எவ்வாறோ அதன் கவனத்தைத் திருப்பி விட்டுப் பின்னால் மெல்லச் சென்று அதன் கழுத்திலிருந்து தொங்கிய கயிற்றை எடுத்து அருகே இருந்த மரத்தோடு சேர்த்துக் கட்ட., தனக்குப் பின்னால் ஏதோ சதி நடப்பதை உணர்ந்த பசு கோபத்தோடு திரும்பிக் கண்ணன் மேல் பாய, கண்ணன் சரியான நேரத்தில் சட்டென விலக, வந்த வேகத்தில் மரத்தில் முட்டிக் கொண்ட பசுவின் மண்டை உடைந்தது. பசு இறந்தது. இது என்னமோ புத்தி சாதுரியத்தோடும், யோசனையோடும் கண்ணன் செய்தான் எனினும் மற்ற கோப, கோபியர் இதை ஓர் மாபெரும் அதிசயமாகவும் கண்ணன் தங்களைக் காக்கவந்த கடவுள் எனவும் கருதி அவனைப் போற்றிப் புகழ்ந்த வண்ணம் இருந்தனர். இம்மாதிரியான செயல்களும் அவற்றில் கண்ணன் ஈடுபட்டு வெற்றி அடைந்து வருவதும் மெல்ல மெல்ல மதுராவுக்குச் சென்று அங்கிருந்து கம்சன் காதுக்கும் போய்ச் சேர்ந்தது. கண்ணனோ எனில் தான் ஏதோ அதிசயம் நிகழ்த்தியதான அறிகுறி துளிக்கூட இல்லாமல் சாதாரணமாய்த் தானுண்டு தன் வேலை உண்டு என இருந்தான். நாட்கள் சென்றன.

பலராமன் நாளைக்குக் கடைசிநாள் எனவும், கண்ணனால் அந்தக் காளையை அடக்கவே முடியாது என்றும் இந்தப் பந்தயத்திலிருந்து விலகும்படியும் சொல்லுகின்றான். கண்ணனோ கேட்கவில்லை. நாளை வரை நேரம் இருக்கே. நாளை மாலைக்குள் காளையை அடக்கிக் காட்டுகின்றேன் என்று சொல்ல, உத்தவனோ தான் விளையாட்டுக்குச் சொன்னதாகவும், இந்தக் கடுமையான பந்தயம் வேண்டாம் என்றும் சொல்ல, ஸ்ரீதாமா அதை ஆமோதிக்கின்றான். நந்தனுக்குத் தெரிந்தால் நந்தனும் இதை ஆதரிக்க மாட்டார் என்றும், அதிலும் நந்தனின் உயிரான கண்ணன் காளையை அடக்கப் போகும் விஷயம் தெரிய வந்தால் நந்தன் உயிரையே விட்டு விடுவான் என்றும் சொல்லுகின்றான்.
படங்கள் உதவி: கூகிளார். நன்றி.