எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Saturday, May 23, 2009
நான் கடவுளைக் கண்டேன், ஒரு குழந்தை வடிவிலே!
நம்ம வாழ்க்கையில் அதுவும் உப்புச் சப்பற்ற வாழ்க்கையில் ஒரு குழந்தை நுழைந்தால் ஏற்படும் அதிசயங்களை என்னவெனச் சொல்லுவது? அன்றாட வேலைகளில் மாற்றம் ஏற்படுவதோடு மட்டுமில்லை. அதை அந்தக் குழந்தையின் வசதிக்கு ஏற்றாற்போல் நாமே மாத்திக்கிறோம். அதைப் பெரிசா எடுத்துக்கறதில்லை. அது சிரிச்சால் நாமும் சிரிக்கிறோம். அது அழுதால்?? நம் மனமும் அழுகின்றது. நம்ம வேலையைச் செய்ய அது அனுமதி கேட்டுட்டே செய்யறோம். அதில் நமக்கு எந்தவிதமான ஈகோவும் இல்லாமல் நம் சுயத்தை இழக்க மனப்பூர்வமாய்ச் சம்மதிக்கின்றோம். இதே எல்லார் கிட்டேயும் இப்படியா இருக்கோம்?
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி!" என்ற பாரதியின் வரிகளின் அர்த்தம் பாரதி எப்படி அனுபவிச்சிருப்பார்னு சொல்லுகின்றது. குழந்தையே ஓர் அற்புதம். அதுவும் பெண் குழந்தையின் அற்புதங்களைச் சொல்லி மாளாது. ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு அழகு.திடீர்னு சின்னக் குழந்தையாய் நடந்துக்கும், ஒரு சிநேகிதி போலப் பழகும், ஒரு சமயம் அதனிடம் தன்னை மீறி வெளிப்படும் தாய்மை உணர்வு. நீங்க பேசாமல் உட்கார்ந்திருந்தால் வந்து உங்களைச் சமாதானம் செய்து விளையாட வைப்பதும், நீங்க தும்மினால், "Bless You " என்று சொல்லுவதும், எல்லாத்திலேயும் மேலே நம்மைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவதும். அப்பா! அதிலே ஏற்படும் ஆனந்தமே தனிதான். பெற்ற குழந்தைகள் பெயர் சொன்னால் கோபம் வருமே. ஆனால் இப்போ இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படுகின்றது.
கடும்புயலுக்குப் பின்னர் வெளிக்கிளம்பும் சூரியனைப் பார்த்தால் ஏற்படும் சந்தோஷ உணர்வை விட அதிகமாய் அந்தக் குழந்தை நம்மைப் பார்த்துச் சிரிக்கும் போது ஏற்படுகின்றது. வீட்டில் உள்ள சாமான்கள் எல்லாம் கண்டபடி வாரி இறைத்திருப்பதும் ஓர் அழகு. நாம் பலகாலம், சின்ன வயசிலே இருந்து ரொம்பப் பத்திரமாய் பொக்கிஷம் போல் வைச்சிருக்கும் டயரியை அது எடுத்துக் கிழிச்சால் கோபம் வரதில்லை. ஆனால் நமக்கு அது முக்கியம்னு யாரு சொல்லிக் கொடுத்திருப்பாங்க? தெரியலை. திரும்பக் கொடுத்துட்டு, "I am sorry, I didn't mean to" என்று சொல்லும்போது கண் தளும்புகிறது.
"குழலினிது, யாழினிது" என்று சொன்ன வள்ளுவனும் இதைக் காட்டிலும் பெரிசாய் அனுபவம் பெற்றே சொல்லி இருப்பான். எத்தனை இனிமையான சங்கீதமாய் இருந்தாலும் இதுக்குப் பின்னர் தான். இந்தக் குரல் நம்மை இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு அழைத்துச் செல்கின்றது. துன்பத்தில் இருந்து ஆனந்தத்துக்கு அழைத்துச் செல்கின்றது. உங்கள் உடல் துன்பம், மனக் கஷ்டம் என்பதையே மறக்கச் செய்கின்றது. எல்லாத்துக்கும் மேலே வாழ்க்கையை உயிர்ப்புடனும் வைக்கின்றது. உடல், உள்ளம் இரண்டும் புதிய ஜீவசக்தியால் நிரம்பி உள்ளது. குழந்தையின் முகத்திலே கோடித் துன்பம் போகும் என என் அம்மா சொல்லுவா. அது எத்தனை உண்மை! இப்போ நாங்க எல்லாருமே பேசறது மழலை தான். திரவமான ஆகாரங்கள் எதாய் இருந்தாலும், அது இப்போ எங்களுக்கு, "கமகம்" தான். பால், காஃபி, டீ, குடிக்கும் தண்ணீர் எல்லாமும். அதே போல் சாப்பிடும் திடப் பொருள் எல்லாம், "மம்மம்" தான். தோசை, இட்டிலி, சப்பாத்தி, சாதம், பொங்கல் எல்லாமுமே. வேறே பேரே கிடையாது இன்னும் கொஞ்ச நாட்களுக்கு. அப்புறமும் நாங்க இரண்டு பேர் மட்டுமே கொஞ்ச நாட்கள் இதைச் சொல்லிட்டு இருப்போம். :(((((((( என்றாலும் மறக்காது.
"அவ்வுலகம் சென்று வந்தேன்
அமுதம் குடித்து வந்தேன்,
பொன்னுலகம் போவதற்குப்
புது உடல் வாங்கி வந்தேன்"
என்பது இங்கே சரியாய் இருக்குமோ? ஆனால் எல்லாத்திலேயும் ஒண்ணே ஒண்ணுதான் நம்மாலே முடியலை. அவள் என்ன கேட்டாலும் வாங்கித் தர ஆசைதான். உலகத்தின் உச்சியில் இருக்கிறாப்போல் இருக்கு. யானை கேட்டாலும் வாங்கிக் கொடுத்துடலாம். ஆனால் அந்த யானையைப் பானைக்குள் அடைனு சொல்றது தான் முடியலை! :)))))))))))) கிருஷ்ணதேவராயரும், தெனாலி ராமனும் பட்ட கஷ்டம் எப்படி இருக்கும்னு புரியுது. உங்களுக்கு யாருக்கானும் தெரிஞ்சால் சொல்லுங்க. :)))))))))))))
Subscribe to:
Post Comments (Atom)
படித்தேன்.. நெகிழ்ந்தேன்..ரசித்தேன் ;)
ReplyDelete\\உங்களுக்கு யாருக்கானும் தெரிஞ்சால் சொல்லுங்க. :)))))))))))))
\\
தலைவிக்கே இந்த நிலையை உருவாக்கிய அந்த மழலை தலைவிக்கு ஒரு வாழ்க போட்டுக்கிறேன் ;))
ஆஹா, கீதாம்மாவை நெகிழ வைக்க இப்படி ஒரு வழி இருக்கா? எனக்கு ஒரு குட்டிப் பட்டாளமே தெரியுமே. அடுத்த முறை கொண்டாந்துட வேண்டியது தான்!
ReplyDeleteசின்ன வயசில/இப்பவும், அம்மாவை/அப்பாவை பேரு சொல்லிட்டு ஓடிடறது, அம்மாவை பின்னாலிலிருந்து தூக்கறது, 'போடி'ன்னுட்டு ஓடறதுன்னு பரம்பரையா இல்ல நான்/என் பிள்ளைங்க செய்யறது! என் நட்பு வட்டத்தில இல்லாத வாண்டுகளா! கீதாம்மா, அடுத்த முறை இந்தியா வந்தா, இருக்கு உங்களுக்கு:-)
//அதில் நமக்கு எந்தவிதமான ஈகோவும் இல்லாமல் நம் சுயத்தை இழக்க மனப்பூர்வமாய்ச் சம்மதிக்கின்றோம். இதே எல்லார் கிட்டேயும் இப்படியா இருக்கோம்? //
ReplyDelete:))
ஒரு {குழந்தையின்} சுத்தமான உள்ளம் பிறருள் இருக்கும் நல்ல குணத்தையும் தட்டியெழுப்ப வல்லது என்பதைக் குறிப்பிடும் மிகச் சிறந்த வரிகள்.
நன்றி
ஆறு மாசம் முன்னாடி கூட என்னால இந்த பதிவை அவ்வளவு அப்ரிஷியேட் பண்ணி இருக்கமுடியாது. இப்ப :-)))))
ReplyDeleteபேத்தி லீவுக்கு வந்த சந்தோஷமா? வெரி குட்.
ReplyDeleteநல்லா எழுதி இருக்கீங்க. :)
@கோபி, எல்லாருடைய தினசரி நிகழ்ச்சி நிரலையும் அவங்க இஷ்டத்துக்கு மாத்திட்டுக் கொட்டம் அடிக்கிறாங்க, மழலைத் தலைவி! :))))))))))
ReplyDeleteகெபி, நான் நெகிழமாட்டேன்னு யார் சொன்னது உங்களுக்கு? :))))))) வெளியே காட்டிக்கக் கூடாது! ஹிஹிஹி!
ReplyDeleteஅப்புறம் மழலைப்பட்டாளத்தைக் கூட்டிட்டு வாங்க, எனக்கு விபரம் தெரிஞ்சதிலே இருந்து அதிகமான நண்பர்கள் மழலைகளாவே இருந்திருக்காங்க. :)))))))))
@கபீரன்பன், பாராட்டுக்கு நன்றி.
ReplyDeleteதி.வா. :))))))))))))
ReplyDeleteஅம்பி, ஒரு தாத்தாவுக்குத் தானே தெரியும், பேரன், பேத்திகளோட அருமை?? அதான் உங்களுக்குப் புரிஞ்சிருக்கு! :P
ReplyDeleteஇதுல சொன்னதுலயே 'சின்னக் குழந்தையா, தோழியா, தன்னையே அறியாமல் வெளிப்படும் தாயா'ன்னு சொன்னது தான் எனக்கு டக்குனு புரியுது. தேஜஸ்வினிகிட்ட இதெல்லாம் பாக்குறேன்.
ReplyDeleteசூப்பர் போஸ்ட் மாமி....இவ்ளோ நாள் படிக்காம மிஸ் பண்ணிடனேனு தோணுச்சு.... கொழந்தைங்க சட்டுன்னு நம்மள அவங்க உலகத்துக்கு கூட்டிட்டு போயிடறாங்க....
ReplyDeleteமழலைகள் எப்பவும் அழகு தான்.... அதுவும் அந்த பேரு சொல்லி கூப்பிடறது சொன்னீங்களே .... அழகு தான் போங்க....