எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, August 24, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - ஐயனா? கண்ணனா?

ஐயன் திரும்பிவிட்டான் விருந்தாவனத்திற்கு. கிட்டத் தட்டப் பத்து வருஷங்கள் கழிச்சுத் திரும்பி இருக்கிறான். கெட்டிக் காரனும், திறமைசாலியும் ஆன ஐயன் கம்சன் அஸ்வமேத யாகக் குதிரையுடன் சென்றபோது அவனுடன் சென்றிருந்தான். கம்ஸனின் மாமனார் ஆன மகத நாட்டுச் சக்கரவர்த்தி ஜராசந்தன் அஸ்வமேத யாகம் செய்து முடித்திருந்தான். இதன் மூலம் உலகையே ஆளும் சக்கரவர்த்தியாகத் தான் ஆகமுடியும் என்றும் ஜராசந்தன் நம்பி இருந்தான். ஜராசந்தனின் மகதத்தில் ராஜகிருஹத்தில் இருந்தபோது கம்சனுக்கு அவன் அனைத்து உரிமைகளையும் வழங்கி இருந்தான். மகத நாட்டுப் படைகளை நடத்திச் செல்லும் உரிமையைத் தன் மருமகனுக்குக் கொடுத்திருந்தான்.கம்சனின் பொறுக்கி எடுத்த வீரர்களில் ஒருவனாய்க் கூடச் சென்றிருந்த ஐயன் அனைத்தையும் பார்த்துக் கம்சனுக்கு அங்கே கிடைத்த மரியாதைகளிலும், அவன் வீரத்திலும், தன்னைப் பறி கொடுத்தான். விவேகம் அவனிடம் இல்லை என்பதை ஐயன் புரிந்து கொள்ளவில்லை. கம்சனின் அலட்சியமும், மனிதரைக் கேட்காமல், விசாரிக்காமல் கொல்லுவதையும் பார்த்து வியந்ததோடு அல்லாமல் அதை ஓர் வீரமாய் நினைத்தான். ஆயிற்று. அஸ்வமேத யக்ஞம் முடிந்து கம்ஸனும் மதுராவிற்குத் திரும்பி விட்டான். அவனுடைய வீரர்களோடு இப்போது கம்சனின் மாமனார் அனுப்பிய மகதப் படைகளும் சேர்ந்து மதுராவில் ஒரே கோலாகலம் தான். எங்கே நோக்கினாலும் ராணுவ வீரர்கள். படைகள் நடமாட்டம். திரும்பிய வீரர்களில் ஒருவன் ஆன ஐயன் தன் பெற்றோரைச் சந்திக்கவேண்டி அனுமதி பெற்று விருந்தாவனம் வந்திருந்தான்.

மதுராவுக்கு வந்ததுமே அவன் காதுகளுக்கு எட்டிய செய்தியானது ராதையை வேறே யாரோ மணக்கப் போகின்றனர் என்பதே. கோகுலத்து கோபர்களின் தலைவன் நந்தனாம். அவனின் ஒரே மகன் கானையாவாமே? ராதையை விடச் சின்னவனாமே? ம்ம்ம்ம்ம்?? கோகுலத்தில் ஏதோ பிரச்னை என்று சில வருஷங்கள் முன்னால் தான் விருந்தாவனத்திற்கு வந்து குடியேறினார்களாம். அவனுடைய மகன் என்பதால் நான் சும்மா விடுவேனா என்ன??? இந்தக் காமப் பித்துக் கொண்ட கண்ணனின் ஆசைக்கு ராதை எப்படி இணங்கினாள்? அவள் என்னுடையவள். எனக்கு நிச்சயிக்கப் பட்டவள் அல்லவோ? என்னுடைய வீரத்திற்கும், குடிப்பெருமைக்கும் இழுக்கு நேரும் இத்தகைய ஒரு காரியத்தை நான் எவ்விதம் அநுமதிப்பது? நிச்சயிக்கப் பட்ட இந்தப் பெண்ணை நான் இன்னும் பார்த்ததில்லை தான். எப்படி இருப்பாள் என்பதும் தெரியாது தான்.ம்ம்ம்ம்ம்??? என்னுடைய தகுதிக்கும், வீரத்திற்கும், கம்சன் எனக்கு இப்போது அளித்திருக்கும் கெளரவத்திற்கும் இவளை விட அழகான பெண்கள் என்னை மணக்கவருவார்கள்தான். ஆனால், ஆனால், ஆனால், இந்தக் கண்ணன் சிறுபயல், அவன் என்னை ஜெயிக்கவிடுவதா? ராதை எனக்குக் கிடைக்காவிட்டாலும் போகிறாள். எனக்கு நேர்ந்திருக்கும் இந்தத் தனிப்பட்ட அவமரியாதையைப் பொறுக்க முடியாது. அந்தக் கண்ணனை ஒரு கை பார்க்கவேண்டும். ஒரு கை என்ன இருகையாலும் பார்த்துவிட வேண்டியது தான். மீசையை முறுக்கினான் ஐயன்.

ம்ம்ம்ம்ம்??? கம்சனின் படையில் சேர்ந்து பலநாடுகள் சுற்றி என் போர்த்திறமை வளர்த்துக் கொண்டு இன்று இத்தனை முன்னேற்றத்துடன் வந்திருக்கும் என்னுடன் அந்தக் கண்ணன், அதான், அந்த நந்தன் மகன் எந்த முகத்தை வைத்துக் கொண்டு மோதுவான்? நான் தான் ஜெயிப்பேன். ஜெயித்ததும், ராதையையும் விடக் கூடாது தான். எப்படி விடுவது? மற்ற மனைவியோடு இவளும் இருந்துவிட்டுப் போகட்டுமே! கண்ணா, கண்ணா, இருடா இரு! நான் வந்துவிட்டேன்! வந்த ஐயனுக்கு இன்னொரு செய்தியும் காத்திருந்தது. இந்த வருஷம் இந்திரனுக்கு விழா எடுக்கப் போவதில்லையாமே? அட?? ஒவ்வொரு வருஷமும் இந்திரனுக்கு விருந்தாவனத்தில் விழா எடுக்காமல் இருந்ததே இல்லையே! என்ன காரணம் இந்த வருஷம் மட்டும் இப்படி? அதுவும் இந்த வருஷம் விழாவை முன்னின்று நடத்தப் போவதும் கண்ணனாமே? இது எப்படி நடந்தது? ஐயன் விசாரிக்கிறான்.

முதலில் இந்திரவிழாவுக்கே கோபர்களும், கோபிகளும் தயார் ஆனார்கள். விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டன. விழாவில் நடக்கும் யக்ஞங்களுக்கு யார் யஜமானாக இருப்பது என ஆலோசிக்கப் பட்டது. சென்ற வருஷம் பலராமன் இருந்தான். இந்த வருஷம் கண்ணனை இருக்கச் சொல்லலாமா? ஆம் அது தான் சரி! ஏற்கெனவே கண்ணனின் அருமையான பேச்சு வன்மையால் கவரப் பட்டிருந்த கர்காசாரியாரும், சாந்தீபனியும் கண்ணனிடம் வந்து அவனை யக்ஞ அதிகாரியாய்த் தேர்ந்தெடுத்திருப்பதைச் சொல்கின்றனர். கண்ணனோ கூப்பிய கரங்களோடு பலராமனையோ, ஸ்ரீதாமாவையோ இருக்கும்படி கேட்கச் சொல்ல, கர்கர் கண்ணன் மறுப்பதின் காரணத்தைக் கேட்கின்றார். தான் தகுதி இல்லாதவன் எனக் கண்ணன் சொல்ல கண்ணனைவிடத் தகுதிவாய்ந்தவர் யார் என கர்கர் கேட்க, கண்ணன் சொல்கின்றான்.
“குருதேவா, எனக்கு இந்திரவிழா பிடிக்கவில்லை”

“என்ன?? என்ன??? என்ன??”

“காலம் காலமாய் நடக்கிறதே!”
இந்திரனுக்காக விழா எடுத்து எவ்வளவு பால், தயிர், தேன், வெண்ணெய், அக்னி, தானியங்கள் எனச் செலவு செய்கின்றோம்? இத்தனையும் அவனிடம் உள்ள பயத்தால் அல்லவா குருதேவா? விழா எடுக்கவில்லை என்றால் இந்திரன் கோபம் அடைவான் என்று தானே?” கண்ணன் கேட்டான்.

“ஏன் கண்ணா, ஆனானப் பட்ட ரிஷி, முனிவர்களே இந்திரனுக்கு விழா எடுத்து யாகங்கள் செய்கின்றனர். நாம் செய்தால் என்ன”

“குருதேவா, ச்யவன மஹரிஷி செய்கின்றாரா? அவருக்கு என்ன நன்மைகளே நடக்கவில்லையா? அனைத்திலும் வென்றவராகவே இருக்கின்றார் அல்லவோ? பயத்திலும், கோழைத்தனத்திலும் விழா எடுப்பதில் என்ன உற்சாகம் இருக்கிறது குருதேவா! விழா என்றால் மனதில் சந்தோஷமும், களிப்பும் இருக்கவேண்டாமா?”

தெய்வநிந்தனை செய்யாதே கண்ணா!”

“இல்லை குருதேவா!” கண்ணன் சற்று நேரம் ஒன்றும் பேசவில்லை. “குருதேவா, திருவிழாக்களோ, பண்டிகைகளோ நம்மை உற்சாகப் படுத்தத் தான் அல்லவா? நாம் வணங்கும் கடவுள் இந்தத் திருவிழாவை நாம் எடுக்கவில்லை எனில் நம்மை மிக மோசமாய்த் தண்டிப்பார் என பயந்து எடுத்தால் அதில் என்ன பலன் கிடைக்கும் குருதேவா? நம்மிடம் நம் கடவுளிடம் நம்பிக்கையும், பயம் என்பது இல்லாமலும், அன்பை மட்டுமே கடவுளுக்கு மனமாரக் கொடுத்து, அதைத் திரும்பப் பெறுபவராகவும் இருக்கவேண்டும் அல்லவா? பயத்துடனேயே விமரிசையாக விழா எடுப்பதில் என்ன பயன்? இதோ பாருங்கள், நம் விருந்தாவனத்துப் பசுக்களையும், கன்றுகளையும், காளைகளையும், நமக்கு எவ்வளவு பால் தருகின்றன? நம்மிடம் உள்ள செல்வத்திற்கெல்லாம் காரணமே இந்தப் பசுக்களும், கன்றுகளும் அல்லவோ? மேலும் இவற்றின் சாணத்தைக் கூட நாம் விடுவதில்லை. அடுப்பு எரிக்கப் பயன்படுத்துகிறோம். பாலில் இருந்து தயிர், மோர், வெண்ணெய், நெய் அந்த நெய்யிலிருந்து பலகாரங்கள், பால் சோறு என எத்தனைக்குப் பயன் படுத்துகிறோம் பசுக்களின் பாலை? அந்தப் பசுக்களுக்குத் திரும்ப நாம் என்ன கொடுக்கிறோம்? ஆஹாரம் என்னமோ கொடுக்கிறோம் தான். ஆனால் அதுவும் நம் சுயநலத்திற்குத் தானே? ஆஹாரம் இல்லை எனில் பசுக்கள் பால் கொடுக்கமுடியாது என்பதால் அல்லவோ? “ கண்ணனுக்கு மூச்சு வாங்கியது. ஆனாலும் அவன் பேச்சு நிற்கவில்லை.

“இதோ இந்த மரங்களைப் பாருங்களேன், இதன் பழங்களை நாம் உண்கின்றோம். இதோ இந்தச் செடிகள், இவற்றின் காய்கள் நமக்கு உணவாகின்றன. இந்த கோவர்தன் மலை, இதன் அடர்ந்த காடுகள் நமக்குத் தரும் நிழலும், இதன் புல்வெளிகள் நம் பசுக்களுக்கு அளிக்கும் உணவும், இதிலிருந்து வரும் ஊற்றுக்கள், நதிகளின் தெளிந்த நீர் நமக்குக் கொடுக்கும் சுவையான குடிநீரும்! அப்பப்பா! குருதேவா! சொல்லுங்கள், கோவர்தன மலைக்கு நாம் என்ன செய்திருக்கிறோம் திரும்ப?”

“ஓஹோ, அப்போ நீ உன்னோட இந்தப் புதிய கடவுளருக்கு என்ன செய்யணும்னு சொல்றே கண்ணா?” சாந்தீபனி கேட்டார். கண்ணன் சொல்கின்றான்: “இப்போது நாம் எடுக்கப் போகும் விழா நம் பசுக்கள், கன்றுகள், காளைகளுக்காகவும், இந்த மரம், செடி, கொடிகளை நமக்கு அளித்த கடவுளுக்காகவும், இந்த மலையரசனுக்காகவும், இருக்கட்டும். அவை நம்முடையவை என்ற எண்ணமே நம்மிடம் இருக்கிறது. இல்லை குருதேவா! நாம் தான் அவற்றுக்குச் சொந்தம். அவை இல்லாமல் நாம் எங்கே? நம்மிடம் ஒன்றுமே இருக்காது. நாமே இருக்க மாட்டோம்.”

“அது என்னமோ சரிதான்” விருந்தாவனத்து மூத்த கோபர்களில் ஒருவர் ஆமோதித்தார். “பசுக்களே நம்முடைய செல்வம்” என்று அனைவரும் ஒத்துக் கொண்டனர். “இந்தப் பசுக்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள எத்தனையோ இருக்கிறது. இவற்றின் கம்பீரம், விநயம், பெருந்தன்மை, இனிமை, சாதுவான தன்மை என்று கற்றுக் கொள்ளவேண்டும்.”
கண்ணன் மேலும் சொன்னான்.”அது சரி, நாம் இவற்றுக்கு விழா எடுத்தால் இந்திரனுக்குக் கோபம் வராதா? ஏற்கெனவே இந்திரனின் கோபம் மிகவும் பிரபலம் ஆனது.” இன்னொருவர் கேட்டார். “கடவுள் என்றால் கோபம் கூடாது. அதை எடுத்துக் காட்டவேண்டியது நம்முடைய தர்மம் அல்லவோ?” கண்ணன் கேட்டான். அவ்வளவில் கோபோத்ஸ்வம் கொண்டாட முடிவு செய்யப் பட்டு அனைவரும் ஏகமனதாய் ஒத்துக் கொண்டனர். “என்றால் இந்த விழாவை முன்னின்று நடத்த நான் தயாராய் இருக்கிறேன்.” கண்ணன் முன் வந்தான். அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். விருந்தாவனம் பூராவும் செய்தி பரவியது. பழமையான சம்பிரதாயங்களை விடாமல் பின்பற்றும் சிலருக்கும், வயதில் மிகவும் முதிர்ந்த சிலருக்கும் இது சரியெனப் படவில்லை. அதிர்ச்சியையே அளித்தது. காலம் காலமாய்க் கடைப்பிடிக்கப் பட்ட ஒரு பரம்பரை வழக்கத்தை மாற்றுவதா? இதென்ன நந்தனுக்குத் தான் புத்தி கெட்டுப் போய்விட்டது என்றால் கர்கருக்கும், அவருடன் கூட வந்திருக்கும் புதிய குரு சாந்தீபனிக்குமா??

விழா முன்னால் ஏழு நாட்கள் தொடர்ச்சியாக எடுக்கப் பட்டு வந்தது. இப்போது மூன்று நாட்கள் மட்டுமே கொண்டாடுவதாய் முடிவு செய்யப் பட்டது. அந்த மூன்று நாட்களுமே வெறும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான். இளைஞர்கள் மனதில் புதிய உற்சாகமே பிறந்தது. கண்ணனைத் தங்கள் மானசீகத் தலைவனாகவே ஏற்றுக் கொண்டனர். கட்டுப்பெட்டித் தனமான வழிபாட்டுக்குப் பதிலாக புதிய முறையில் அனைவரும் கூடி மகிழ்வோடு இருக்கும் வண்ணமாகக் கண்ணன் அனைவரையும் சம்மதிக்க வைத்துவிட்டானே? ஐயனுக்கு இத்தனையும் தெரிய வந்தது. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்??? யாரவன் மாயக் காரனாய் இருக்கிறானே? இத்தனை வருஷங்களாய் நடந்து வந்த ஒரு பண்டிகையை இவன் ஒரே நாளில் மாற்றிவிட்டானே? போர்க்களத்தில் இருந்த போது கூட இந்திரனை புயலுக்கும், காற்றுக்கும், மழைக்கும் அதிபதியான இந்திரனை, வீரத்தில் சிறந்த இந்திரனைக் கும்பிட்டு வந்திருக்கிறான் ஐயன். விடமாட்டேன், நிச்சயமாய் விடமாட்டேன். நானா, அந்தக் கண்ணனா? ஒரு கை பார்த்துவிடுவோம். கண்ணா, கண்ணா, தயாராய் இரு! என்ன நடக்கப் போகிறது பார்! இந்திரவிழாவே நடக்கும் இந்த விருந்தாவனத்தில் நீ இருந்தாலும், இல்லாவிட்டாலும்.

8 comments:

  1. //கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - ஐயனா? கண்ணனா?//

    கண்ணன்தான்! :)

    //நம்மிடம் நம் கடவுளிடம் நம்பிக்கையும், பயம் என்பது இல்லாமலும், அன்பை மட்டுமே கடவுளுக்கு மனமாரக் கொடுத்து, அதைத் திரும்பப் பெறுபவராகவும் இருக்கவேண்டும் அல்லவா?//

    நன்றாகச் சொன்னான் கண்ணன்.

    ReplyDelete
  2. சென்ற வருடம் கோவர்தனம் சென்று இருந்தோம்,கோவர்தனமலையை கண்ணன் குடையாக பிடித்ததை கற்பனை செய்து மகிழ்ந்தோம்,அந்த மலையரசனுக்கு கண்ணன் விழா எடுக்கசொன்னதை படிக்கும் போதும்,
    கண்ணனின் அன்பு நமக்கு விளங்கும்.

    கண்ணன் சொன்னதை எங்களுக்கு சொல்லும் கீதாவுக்கு நன்றி.

    ReplyDelete
  3. கண்ணன் பண்டிகையை பற்றி சொல்லியிருப்பது அருமை. பயந்து கொண்டு செய்வது சரியில்லை. நல்ல கருத்து. ;;))

    ReplyDelete
  4. வாங்க கவிநயா, கண்ணனுக்குத் தான் அனைவரும் ஆதரவு! ரொம்ப நன்றிம்மா.

    ReplyDelete
  5. வாங்க கோமதி அரசு, மறுவரவுக்கும் அருமையான கருத்துக்கும், பாராட்டுக்கும் ரொம்ப நன்றி.

    ReplyDelete
  6. வாங்க கோபி, பயபக்தி என்பதையே பலரும் தப்பாய்ப் புரிஞ்சுக்கறாங்க இல்லையா??? கடவுளிடம் நம்பிக்கை இருந்தால் போதும் என்பது தான் கண்ணன் சொன்ன முக்கியக் கருத்துனு நினைக்கிறேன். ரொம்ப நன்றிப்பா. விடாமல் வந்து படிச்சுப் பின்னூட்டம் கொடுப்பதற்கு.

    ReplyDelete
  7. வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

    ReplyDelete
  8. //நம்மிடம் நம் கடவுளிடம் நம்பிக்கையும், பயம் என்பது இல்லாமலும், அன்பை மட்டுமே கடவுளுக்கு மனமாரக் கொடுத்து, அதைத் திரும்பப் பெறுபவராகவும் இருக்கவேண்டும் அல்லவா?//

    எல்லாம் குணத்தை பொருத்து இருக்கு. அன்பை கொடுத்து அன்பை பெறுவதுன்னா அது சத்வம்.வீரத்தை போற்றி தன்னைவிட வீரனை போற்றுகிறது ராஜசம். பயந்து பணிவது தாமசம்.....கன்னையா மத்தவங்களை சத்வ நிலையில இருக்கச்சொல்லறான் போல இருக்கு!

    ReplyDelete