எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, December 20, 2009

தேர் நிலைக்கு வந்திருக்கு! அடுத்த தேரோட்டம் எப்போ???

அடடாடாஆஆஆஆஆ? கம்சனுக்கு முடிவு வந்துடுத்துனு எழுதினா எல்லாரும் எப்படி எல்லாம் அர்த்தம் எடுத்துக்கறாங்கப்பா, மாத்தலாம்னு பார்த்தா மூணு நாளா சொதப்பிட்டு இருந்த இணையம் வெள்ளிக்கிழமை மத்தியானத்திலே இருந்து தூங்கிடுச்சு. தொலைபேசினா அங்கே இருந்தவங்க தன்னோட கொஞ்சும் குரலில், "It will be restored by today evening. Have a good day"னு இழையோ இழைனு இழைஞ்சாங்க. வெள்ளிக்கிழமை ராத்திரி சோதனை பண்ணினா, ஒரே ஒரு மயில் மட்டும் பறந்தது. மத்தது பறக்கிறதுக்குள்ளே மறுபடி தூக்கம். சரி, ராத்திரி எல்லாரும் தானே தூங்குவோம்னு நேத்துக்காலம்பர பார்த்தா அது இன்னும் எழுந்துக்கவே இல்லை. மீண்டும் தொலைபேசியில் அழைப்பு, மீண்டும் கொஞ்சும் குரல். "இன்னிக்குக் கட்டாயம் சரி பண்ணிடுவாங்க." னு மறுபடியும் பொய் சொல்லுது.

வெறுத்துப் போய் துளசிக்குத் தொலைபேசினேன். ரொம்ப நாளா வரேன், வரேன்னு சொல்லிட்டு பயமுறுத்திட்டு இருந்தோமே, இன்னிக்கு நிஜமாவே வரப்போறோம்னு சொன்னதும், சரி, வாங்கனு சொல்லிட்டாங்க. கிளம்ப ஏற்பாடு செய்யும்போது தான் அவங்க வீட்டுக்குப் போகும் வழி கணினியிலேயே இருக்கேனு நினைப்பு வந்தது. நல்லவேளையா புத்திசாலித் தனமா(ஹிஹிஹி, நான் யார், நான் யார், நான் யார்?) விலாசம், தொலைபேசி எண்ணை எழுதி எடுக்கிறாப்போல் (ஹிஹிஹி, சாதாரணமாத் தேடிக் கண்டுபிடிக்கணும், இது என்னமோ வாகா மாட்டிக்கிறாப்போல் கிடைக்குது) வச்சிருந்தேன். மறுபடி கணினியைத் திறந்தால் ஆஹா, வந்துடுச்சேனு இணையம் வந்துடுச்சு. ஆனால் அரை மணி நேரம் முயன்றும் முகப்புப் பக்கம் கூடத் திறக்கலை. சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்னு கிளம்பிட்டேன். அதுக்குள்ளே ரங்க்ஸ் போச்சுடா, கம்ப்யூட்டரிலே உட்கார்ந்துட்டியா? இனிமே எழுந்தாப்போல் தான்னுட்டு தொலைக்காட்சியைப் போடப் போயிட்டார். உடனேயே மனசு அவசரகால நடவடிக்கை தேவைனு எச்சரிக்கைக் குரல் கொடுக்க, எழுந்துட்டு, கதவைப் பூட்டறேன்னு ஆரம்பிக்கவும், வேறே வழி இல்லாமல் அவரும் எழுந்து வந்தார்.

நாங்க வெளியே போகப் போறோம்னு தெரிஞ்சே போன வாரம் எங்க ரோடைத் தோண்ட வந்தாங்களா?? அதனால் என்ன? எப்படியும் போயே தீருவோம், நாங்க கைலை மலையிலேயே நடந்திருக்கோம்னு வீராப்புப் பேசினோமா?? ஹஹ்ஹாஹாஹா! நான் சிரிக்கலை! விதி! ரொம்பவே தொடர்ந்து சிரிச்சது ஒருவாரத்துக்கு. எங்க சாலையைத் தோண்டினதிலே ஆரம்பிச்சு 18-ம் தேதி வெள்ளிக்கிழமை வரைக்கும் மழைனா மழை அப்படி ஒரு மழை! ஒருநாள் கூட விடலைனா பார்த்துக்குங்க. வெள்ளிக்கிழமைதான் போனாப் போறதுனு மழை விட்டுது. சரினு தான் சனிக்கிழமை கிளம்பினோம். ஏற்கெனவே துர்க்குணி, அதிலும் இப்போ கர்ப்பிணிங்கறாப்போல் நம்ம கால் ஏற்கெனவே தகராறு. இப்போக் கொஞ்ச நாட்களாய்க் கேட்கவே வேண்டாம். ஆனால் மருத்துவர் நீங்க நிறைய நடப்பீங்கனு எனக்கு வாக்குக் கொடுத்திருந்தார். அதையும் நிறைவேத்தணுமே. ஆனால் பாருங்க. நம்ம ரங்க்ஸுக்குப் பயம். அதனால் எப்படியோ கஷ்டப் பட்டு வண்டியைக் கீழே இறக்கி தள்ளிக் கொண்டே அடுத்த தெருவுக்குப் போய் அங்கே வண்டியை நிறுத்தி வச்சுட்டு வந்திருந்தார். நானும் எப்படியோ டிராக்டர் வந்து உழுது போட்டிருந்த எங்க தெருவிலே அந்தப்பள்ளம், மேடு, ஆழம் காணமுடியா நீர் நிலைகள் எல்லாத்தையும் தாண்டி அடுத்த தெருவுக்கு முழுசாப்போயிட்டேன். அங்கே இருந்து எங்க வண்டியிலே தான் போனோம் அம்பத்தூர் பேருந்து நிலையம் வரைக்கும். ஆச்சரியத்திலும் ஆச்சரியம், வண்டி சாதாரணமா நான் ஏறிண்டதுமே நின்னுடும். இன்னிக்கு ரொம்பச் சமர்த்தாக் கிளம்பிட்டது. அம்பத்தூர் பேருந்து நிலையத்திலும் பேருந்து தயாராய் நின்னுட்டு இருந்தது. சொகுசுப் பேருந்து. நல்லவேளைதான் இன்னிக்கு நினைச்சு ஏறிப் போனோம்.

எத்தனை நேரம்னு நினைக்கறீங்க?? ஹிஹிஹி, எங்களுக்கும் தெரியாது. ஆனால் பேருந்து என்னமோ போயிட்டே இருந்தது. நேரம் ஓடிட்டே இருந்திருக்கு. கடைசியா நாங்க துளசி வீட்டுக்குப் போறச்சே மணி இரண்டேகால் ஆயிருக்கு. பதினோரு மணிக்குக் கிளம்பி இத்தனை நேரமானு மிரண்டு போயிட்டோம். நாங்க வரதுக்காக அவங்க பாவம் சாப்பிடாமல் காத்துட்டு இருந்தாங்க. நாங்க சாப்பிட்டு வருவோம்னு சொல்ல நான் மறந்துட்டேன். ரங்க்ஸின் முறைப்பை லட்சியம் செய்யாமல் அவங்களைச் சாப்பிடச் சொன்னோம். அங்கே இன்னொரு விருந்தாளியும் இருந்தாரா? நான் அவரை உதனு நினைச்சுட்டேன். அப்புறம் பார்த்தால் அவர் போன வருஷம் எங்க வீட்டுக்கு வந்திருக்கார். எனக்கும் அடையாளம் தெரியலை, அவருக்கும் தெரியலை. இரண்டு பேரும் அசடு வழிஞ்சோம். அவர் யாருனு கேட்கறீங்களா? நம்ம கோபிதான்! சென்னைக்கு அவர் வந்ததே தெரியாதா? கொஞ்சம் ஏமாந்துட்டேன். கோபிக்கும், கோபாலுக்கும் துளசி உணவு பரிமாறப் போனாங்க. பேசினதில் கோபால் தான் நாங்க வரப் போறோம்னு கஷ்டப் பட்டு சமைச்சிருக்கார்னு புரிஞ்சது! :P:P:P:P துளசி, உண்மையை மறைக்காமல் சொல்லிட்டேன், சரியா???

அடப் பாவமே, தெரிஞ்சால் சாப்பிடாமல் வந்திருப்போமேனு நினைச்சோம். அப்புறமா காபி போட்டு வச்சுட்டு கோபால் வந்து உட்கார்ந்தார். துளசி சாப்பிடப்போனாங்க. ஸ்ரீகண்ட் கொண்டு வந்து கொடுத்தாங்க எல்லாருக்கும். அதுவும் கோபாலோட தயாரிப்புத் தான்னு டேஸ்ட் பார்த்ததுமே தெரிஞ்சது. போற போக்கில் துளசி கோபியைப் பார்த்து,"கோபி, பார்த்தியா, நான் தான் வேலை செய்யறேன்னு எல்லாருக்கும் தெரியணுமாக்கும்!" அப்படினு வேறே சொன்னாங்களா? சரிதான் தினமும் வேலை செய்யறது யாருனு புரிஞ்சு போச்சு. ஹிஹிஹி, துளசி, நீங்க சொன்னாப்போல எழுதிட்டேனா??? அப்புறமா கோபி போட்டோ செஷன் முடிச்சுட்டுக் கிளம்பிப் போயிட்டார். யாரோ சிநேகிதி(தன்) பார்க்கணும்னு. அப்புறமாக் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிட்டு துளசி கொடுத்த ஸ்வீட்டை எல்லாம் மூட்டை கட்டிண்டு கிளம்பினோம்.

வரும் வழியில் நியூ உட்லண்ட்ஸில் தமிழ் மரபு அறக்கட்டளையின் நிர்வாகி சுபாஷிணிக்கு ஒரு சின்ன பார்ட்டி கொடுத்தாங்க. அதுக்கு அழைப்பு வந்திருந்தது. அங்கே போய் நியூ உட்லண்ட்ஸில் அவங்களையும் பார்த்துட்டு, பேருந்தில் ஏறி அம்பத்தூருக்கு வந்து சேர்ந்தோம். தேர்த்திருவிழாவுக்குத் தேரைத் தயார் செய்யறாப்போல் நானும் வெளியே கிளம்பறதுனா இவ்வளவு தயார் பண்ணிட்டுப் போகவேண்டி இருக்கு பாருங்க. தேரை நிலைக்குக் கொண்டு வரப் படற கஷ்டத்தை நம்ம ரங்க்ஸ் என்னை வீட்டிலே கொண்டு சேர்க்கப் படறார். அப்பாடானு ஆயிடும் அவருக்கு. :P:P:P:P

12 comments:

  1. என்னதான் ஆன்மீகம் அழகா எழுதினாலும் இந்த மாதிரி மொக்கைக்கு இருக்கிற மதிப்பே அலாதிதான்!
    :-))))))
    போகிற போக்கிலே கொஞ்சம் நெல்லு விதைச்சுட்டு போயிருக்ககூடாதா? ஜம்ன்னு வளந்துடுமே? ர.ம ஆர்மிலதானே வேலை பாத்தார்? சொல்லி கொஞ்சம் சகாய விலைக்கு ஆம்பிபியன் வண்டி ஒண்ணு வாங்கிக்குங்க!

    ReplyDelete
  2. ஆஹா..... எழுத்து பிசகலை கேட்டோ!!!!!


    கோபி அசடு வழியலை. ஏற்கெனவே ஸோ அண்ட் ஸோ வரப்போறாங்கன்னு பயமுறுத்தி வச்சுருந்தேன்.

    நீங்க அவரை நினைவில் வச்சுக்கலைன்னு நொந்து நூடில்ஸ் ஆயிட்டார். அதையே பரிமாறிட்டேன்:-)

    ReplyDelete
  3. //ர.ம ஆர்மிலதானே வேலை பாத்தார்? சொல்லி கொஞ்சம் சகாய விலைக்கு ஆம்பிபியன் வண்டி ஒண்ணு வாங்கிக்குங்க!//


    வாங்க தி.வா. தம்பியே வாங்கிக் கொடுக்கட்டும்னு சொல்லிட்டார். வாங்கி அனுப்பிடுங்க! :P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P

    ReplyDelete
  4. வாங்க துளசி, ரெண்டு பேரும் அசடு வழிஞ்சோம்னு தான் சொல்லி இருக்கேன். எந்த ரெண்டு பேர்னு சொல்லலையே??? :D

    ReplyDelete
  5. \\ அவருக்கும் தெரியலை. \\

    அவ்வ்வ்வ்வ்வ்வ் எனக்கா தெரியல..! ;))

    எப்படியே ஒரு இடத்தில் டீச்சரையும் தலைவியையும் பார்த்தாச்சி..அதுவே மிக்க மகிழ்ச்சி ;))

    ReplyDelete
  6. //கம்சனுக்கு முடிவு வந்துடுத்துனு எழுதினா எல்லாரும் எப்படி எல்லாம் அர்த்தம் எடுத்துக்கறாங்கப்பா,//

    அம்மா! நீங்க கண்ணன் கதை சொல்றதுக்கு முடிவு வந்துட்டதாத்தான் நான் எடுத்துக்கிட்டேன் :) அதான் அச்சச்சோன்னு சொன்னேன். கம்சன் முடிஞ்சாலும் கண்ணன் தொடர்வானான்னு சொல்லுங்க முதல்ல!

    அதான் போய்ச் சேர 3 மணி நேரம் ஆயிருச்சே, பேசாம இன்னொரு முறை சாப்பிட்டிருக்கலாம் :)

    //தேரை நிலைக்குக் கொண்டு வரப் படற கஷ்டத்தை நம்ம ரங்க்ஸ் என்னை வீட்டிலே கொண்டு சேர்க்கப் படறார். அப்பாடானு ஆயிடும் அவருக்கு.//

    பாவம், அவருக்கு திருஷ்டி சுத்தி போடுங்க!

    ReplyDelete
  7. / கோபால் தான் நாங்க வரப் போறோம்னு கஷ்டப் பட்டு சமைச்சிருக்கார்னு புரிஞ்சது! :P:P:P:P துளசி, உண்மையை மறைக்காமல் சொல்லிட்டேன், சரியா //
    நீங்க சொல்லாமலேயே எங்க மாமாவைப் பற்றித் தெரியும். டீச்சர் சமைத்தால் அந்தக் கஷ்டம் உங்களுக்கு வேண்டாம் என்றுதான் அவரே சமைத்து இருப்பார்(உங்க ரங்க்ஸ் மாதிரி). நல்ல மழையில் மிகுந்த சிரமத்திற்கு இடையில் டீச்சருடன் உங்கள் சந்திப்பு மிக அருமை. நன்றி.

    ReplyDelete
  8. //சரிதான் தினமும் வேலை செய்யறது யாருனு புரிஞ்சு போச்சு//

    ஹும், வீட்டுக்கு வீடு வாசப்படி. :)))

    ReplyDelete
  9. வாங்க கோபி, ரகசியமா வந்துட்டுப் போகணும்னு நினைச்சீங்க, அதான் மாட்டினீங்க! :P:P:P:P

    ReplyDelete
  10. வாங்க கவிநயா, கவுஜ நல்லா இருந்தது, பின்னூட்டம் அங்கே போடலை,
    அப்புறமா கண்ணன் இன்னும் எத்தனை சாகசங்கள் செய்யணும்??? இப்போத் தானே அம்மா, அப்பாவையே பார்க்கப் போறான்?
    குவலயாபீடத்துக்கு எப்படி வேணாலும் முடிவை எடுத்துக்கலாம், பாகவதத்தில் குவலயாபீடம் கொல்லப் பட்டதாகவே வரும், ஆனால் இங்கே அப்படிச் சொல்லலை. முடிவு வாசகர்களின் ஊகத்துக்கு.

    ReplyDelete
  11. //டீச்சர் சமைத்தால் அந்தக் கஷ்டம் உங்களுக்கு வேண்டாம் என்றுதான் அவரே சமைத்து இருப்பார்(உங்க ரங்க்ஸ் மாதிரி). //

    என்ன கொடுமைடா சரவணா இது??? :P:P:P:P:P

    உங்க விருதை ஏத்துக்கிட்டு தனிப் பதிவே போட்டுட்டேன், பாருங்க.:D

    ReplyDelete
  12. அம்பி, அதெல்லாம் உங்க வீட்டிலே தான் வாசப்படி, எங்க வீட்டிலே இல்லையே, ஒரே தாண்டு!!! ஹை, லாங்க் எல்லா ஜம்பும் ஜம்பணும்! :)))))))))))

    ReplyDelete