எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, April 03, 2011

கல்யாணமாம், கல்யாணம், தொடர்ச்சி!

எனக்கு இருப்பது ஒரே பொண்ணு. அவளுக்கு இப்படியா நிச்சயம் பண்ணிண்டு வரணும்? இன்னொரு பெண்ணா இருக்கா? அவளுக்கு நன்னாச் செய்து பார்க்கலாம்னு சொல்றதுக்கு? "அம்மாவின் புலம்பலோடு ஆரம்பித்தன கல்யாண வேலைகள். அன்றைய நாளே நன்றாக இருந்ததாலும், திங்கட்கிழமை என்னோட நக்ஷத்திரத்துக்கு ஏற்றதென ஏற்கெனவே ஜோசியர் சொல்லி இருந்ததாலும் அன்றே கல்யாணவேலைகளை ஆரம்பிக்க முடிவு செய்யப் பட்டது. தம்பியை அனுப்பிப் பத்திரிகை அடிக்க மாதிரிகள் கொடுத்தார் அப்பா. அண்ணாவுக்குத் தந்தி கொடுக்கச் சொன்னார். அக்கம்பக்கம் இருக்கும் சுமங்கலிகளும், தகவல் தெரிந்து, என்னோட பெரியம்மாவும் வந்து சேர, மஞ்சள் இடித்து அன்றைய வேலையைத் தொடங்கினார்கள். சமையல்கார மாமிக்குச் சொல்லி அனுப்பப் பட்டது. பக்ஷணங்களுக்குத் தேவையான சாமான்களின் லிஸ்ட் போடப் பட்டது. வாடிக்கை நெய்க்காரப் பாட்டியை எங்கே இருந்தாலும் தேடிக் கண்டுபிடிச்சுண்டு வர என் தம்பிக்கும், அவன் நண்பனுக்கும் உத்தரவிடப் பட்டது. இரண்டு நாளைக்குள்ளாக ஒரு நல்ல நாளில் புடைவை வாங்க முடிவு செய்யப் பட்டது. ரவிக்கைகளைத் தைக்க டெய்லர் இருந்தாலும் எனக்கும் தையல், எம்ப்ராய்டரி தெரியும் என்பதால் அவசரமாய் வேண்டுபனவற்றை நானே தைத்துக்கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப் பட்டது. புடைவை வாங்க என்னையும் அழைத்துச் செல்லவேண்டும் என்று என் மாமிகள், அம்மா போன்றோர் சொல்ல அப்பா திட்டமாக மறுத்துவிட்டார். கடைசியில் என் பெரியம்மா, அம்மா, அப்பா, மாமிகள் போய்த் தான் புடைவை வாங்கி வந்தனர். மஸ்டர்ட் கலரில் ஊசிவாணம் புடைவை நிச்சயதார்த்தத்துக்கும், ஊஞ்சல் புடைவை பச்சைக்கலரிலும், இன்னொரு புடைவை இங்க்லீஷ் பச்சை என்று சொல்வார்கள் அந்தக் கலரிலும், சுமங்கலிப் பிரார்த்தனைக்கு ப்ரவுன் கலரிலும் புடைவைகள் வாங்கப் பட்டிருந்தன. எங்க ஊர்ப்பக்கம் திருமணம் ஆகாத பெண்களுக்கும் சுமங்கலிப் பிரார்த்தனைப் புடைவை உண்டு. ஏனென்றால் குழந்தையாகவோ திருமணம் ஆகாமலோ கன்னிப் பெண்கள் இறந்திருப்பார்கள். அவர்கள் நினைவாகக் கொடுப்பார்கள். சிலசமயங்களில் மற்ற அந்நியரின் வீடுகளின் பெண்களை அழைத்தும் கொடுப்போம். நவராத்திரியில் இதைக் கட்டாயமாய்ச் செய்து வருகிறோம். இப்போ என் கல்யாணம் என்பதால் பெரியம்மா எனக்குத் தான் கொடுக்கணும், அது தான் குடும்ப வழக்கம் என்று சொல்லிவிட்டார்.

மதுரை, திருநெல்வேலிப் பக்கங்களில் மாப்பிள்ளை வீட்டிலேயே கல்யாணப் பெண்ணுக்கு நாலு புடைவைகள் எடுப்பாங்க. நிச்சயதார்த்தம், கல்யாணக்கூரை, கிரஹப் பிரவேசம், நலுங்கு விளையாடல் என நாலு புடைவைகள் எடுப்பாங்க. என்னோட இரு பெரியப்பா பெண்களுக்கும் அப்படித் தான் நடந்தது. ஒருத்தர் என் அம்மாவழிச் சொந்தம், இன்னொருத்தர் எங்க பக்கத்துவீட்டிலே இருந்தவங்க தம்பி. ஆகவே பழக்கவழக்கம் எல்லாம் ஒண்ணாய் இருந்தது. ஆனால் இங்கே மாப்பிள்ளை வீட்டில் நாங்க எதுவும் எடுக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்களாம். அப்புறமா அப்பா வற்புறுத்திக் கூரைப்புடைவை மட்டுமாவது எடுக்கணும்னு சொல்லிட்டு வந்திருந்தார். அரை மனசாய் ஒத்துண்டாங்கனு சொல்லிண்டிருந்தார். இப்படிச் சின்னச் சின்னதாய் சில கசமுசாக்கள் இருந்தாலும் கல்யாண வேலைகள் தொடர்ந்து நடந்தன. அவங்க வீட்டிலே போடும் திருமாங்கல்யத்தையும் இங்கேயே செய்யச் சொல்லி இருப்பதால் மாங்கல்யத்துக்குப் பொன் உருக்க நாள் பார்க்க வேண்டி ஜோசியருக்குச் சொல்லி அனுப்பினார் அப்பா. நாள் பார்த்துப் பொன் உருக்கித் தான் அப்போல்லாம் மாங்கல்யம் செய்வாங்க. ஆசாரி வீட்டுக்கு வந்து பூஜைகள் செய்து, பொன்னை வாங்கி ஸ்வாமி காலடியில் வைத்து வேண்டிக்கொண்டு, கையோடு கொண்டு வரும் பொன் உருக்கும் உலையில் போட்டு உருக்கி மாங்கல்ய அச்சில் அதை ஊற்றி மீண்டும் ஸ்வாமி காலடியில் வைத்துவிட்டு எடுத்துச் செல்வார். அதன் பின்னர் மாங்கல்யம் செய்யப் பட்டு பாலிஷ் எல்லாம் போடப் பட்டு நல்ல நாள் பார்த்து மஞ்சள், குங்குமத்துடன் அவரே கொண்டு வந்து கொடுப்பார். இப்போல்லாம் பொன் உருக்கறதில்லை என்றாலும் கூடியவரையிலும் நல்ல நாளைப்பார்த்து ஆர்டர் கொடுப்போம். அதுவும் எங்க குடும்பத்துக்கு ராசியான கடைனு திநகரில் ராமநாதன் கடை மட்டுமே. அங்கே தான் திருமாங்கல்யம் செய்வோம். நல்லி கடையில் கூரைப்புடைவை. (இப்போது)

அதற்குள்ளாக அங்கே பத்திரிகை அடிச்சுப் பத்திரிகைகளை எங்க சொந்தக்காரங்களுக்குக் கொடுக்கவேண்டி ஒரு பார்சலில் அனுப்பி இருந்தாங்க. மொத்தமாய் வந்த பத்திரிகைகளைத் தவிர்த்து ஒரு தனியான ஒரு கவரில் என் பெயருக்கும் ஒரு பத்திரிகை வந்தது. அதைத் தான் முன்னாடியே எழுதிட்டேன், பின்னூட்டமாக. அதை அனுப்பியது என் கணவர் தான் என்பதை அப்புறமாத் தெரிந்து கொண்டேன். இப்போ இந்தக் கல்யாணம் நிச்சயம் ஆனதின் பின்னணியைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? என் அப்பா சொன்னாப்போல் மாமனாருக்கு நான் உயரம் குறைவு என்பதால் கொஞ்சம் அரை மனசாய் இருந்திருக்கிறது. ஆகவே என் கணவரிடம் சொல்லி இருந்திருக்கிறார். அவர் என்னோட அப்பா எதிரே ஒண்ணும் சொல்லவில்லை. ஆனால் ஊருக்குப் போனதும் பேச்சு வார்த்தை நடந்ததில், என் கணவரோட அத்தை பெண் கல்யாணத்துக்கு இருப்பதால் அவங்களையே பார்க்கலாம் என மாமனார் முடிவாய்ச் சொல்லி இருக்கிறார். வரப் போகும் பெரியப்பா பெண் கல்யாணத்துக்கு அவங்களும் வருவாங்க என்பதால் அன்னிக்குப் பேசி முடிவு பண்ணிப் பாக்கு வெற்றிலை மாற்றிடலாம்னு சொல்லி இருந்திருக்கிறார். என் கணவர் மறுத்திருக்கிறார். சொந்தமே வேண்டாம்னு சொன்னாராம். அவங்க அம்மாவும் சொந்தமே வேண்டாம். எல்லாரையும் சொந்தத்திலேயே கொடுத்தாச்சு. இனிமேலாவது வெளியே இருந்து வரட்டும்னு சொல்லி இருக்காங்க.

இது இப்படியே இருக்க என் கணவர் அவரோட பெரியப்பா கூப்பிட்டதாலும், பெரியப்பாவிடம் இது குறித்துப் பேசவும் பக்கத்து ஊரான பரவாக்கரைக்குப் போயிருக்கார். அங்கே விஷயத்தைச் சொல்லி இருக்கார். தன்னோட அப்பா அத்தை பெண்ணைத் தான் பண்ணிக்கணும்னு சொல்லுவதையும் தனக்கு இஷ்டமில்லை என்றும் மதுரைப் பெண்ணைத் தான் பண்ணிக்க ஆசைப்படுவதாயும் சொல்லி இருக்கிறார். அப்போ பெரியப்பா அவரிடம் அவரை நானும் பார்த்தேன். நல்லவங்களாத் தான் தெரியுது. ஒரு கடிதம் எழுதிப் போட்டு வரவழை. பேசலாம்னு சொல்லவே, என் மாமனார் நிபந்தனைகள் போட்டுக் கடிதம் எழுதச் சொன்னதை என் கணவர் கூறவே, அவர் யோசித்துவிட்டு, அந்தப் பெண்ணின் அப்பாவை நம்ம வீட்டுக் கல்யாணத்துக்கு வரச் சொல்லி இருக்கேன். வந்தாலும் வருவார். நீ எதுக்கும் இன்னொரு பத்திரிகையை அனுப்பிக் கட்டாயம் வரச் சொல்லு. அப்போ நிச்சயம் பண்ணிக்கலாம்னு உன் அப்பா எழுதறாப்போலவே எழுதிடு. என்று சொல்லி இருக்கிறார். இவர் யோசிக்க, உன் அப்பாவிடம் நான் பேசிக்கறேன். என்று அவர் தைரியம் கொடுத்திருக்கிறார். ஆகவே அப்படியே எழுதி அனுப்பிட்டார்.

ஆனால் கல்யாணத்துக்கு முதல்நாளான சனிக்கிழமையே போன அப்பா மறுநாள் காலை முஹூர்த்தத்துக்கும் போகலை. அன்று மாலை தான் போயிருக்கிறார். அதுக்குள்ளே இங்கே அத்தை வீட்டுக்காரருக்கும், என் மாமனாருக்கும் பேச்சு வார்த்தை மும்முரமாய் ஆகிவிட்டிருக்கிறது. அத்தையும் தன் அண்ணா பிள்ளைக்குப் பிடிக்கலை என்பதாலும் உறவு வேண்டாம் என்பதாலும் மறுத்திருக்கிறார். ஆனாலும் அவங்க இரண்டு பேரும் விடலை. விடாமல் பேசி எல்லாரையும் ஒத்துக்க வைக்கப் பார்த்திருக்காங்க. என் கணவருக்கோ காலம்பரவே வரேன்னு சொன்ன மனுஷன் சாயந்திரம் வரைக்கும் வரலையேனு ஒரே டென்ஷனா இருந்திருக்கு. அதுக்குள்ளே வேறு வழியில்லாமல் அத்தை சம்மதிக்க ராகு காலம் முடிஞ்சு பாக்கு வெற்றிலை மாத்தலாம்னு சொல்லி இருக்காங்க.

அப்போத் தான் போயிருக்கார் என்னோட அப்பா. கூடவே ஸ்வாமிமலையில் அவரின் சிநேகிதர் வீட்டு மனுஷர்கள். கையிலே பழம், பாக்கு, வெற்றிலை, பருப்புத் தேங்காய், திரட்டுப் பால் சகிதம், மாப்பிள்ளைக்கு வேஷ்டிகள் என ஏற்பாடாய்ப் போய்விட்டார். அப்பாவுக்குக் கும்பகோணம் வந்ததுமே தகவல் தெரிந்து விட்டது, இன்னொரு அத்தையின் மூலம். மாப்பிள்ளைக்கு நம்ம பெண்ணைத் தான் பிடிச்சிருக்கு என்பதும், அவளைத்தான் கல்யாணம் செய்துக்கணும்னு ஆசைப் படறார் என்பதும் கும்பகோணத்திலேயே இருந்த அத்தை சொல்லி இருக்காங்க. உடனேயே அப்பா அத்தையிடம் சொல்லிட்டு ஸ்வாமி மலைக்குப் போய் அவரோட சிநேகிதர்கள் வீட்டிலே சொல்லி, எல்லாம் பண்ண ஏற்பாடு செய்திருக்கிறார். என்னதான் சீக்கிரம் பண்ணினாலும் அப்போல்லாம் ரெடிமேடாக எதையும் வச்சுக்க மாட்டாங்க இல்லையா? ஆகவே வீட்டிலே எல்லாத்தையும் பண்ணி எடுத்துண்டு வரதுக்குச் சாயந்திரம் ஆகி இருக்கு.

ஆனால் இந்த ஏற்பாடை என் கணவரும் அவரோட பெரியப்பாவும் சேர்ந்து செய்தாங்க என்பது எனக்கு ஒரு வருஷம் முன்னாடித் தான் தெரியும். அது வரைக்கும் என் மாமனார் வீட்டிலே சொன்னது:
ஒரே பெண்ணைத் தான் பார்ப்பேன்னு என் கணவர் சொல்லிட்டிருப்பாராம். நாலைந்து பெண்கள் பார்க்கமாட்டேன் பார்க்கும் முதல் பெண்ணைத் திருமணம் செய்துப்பேன், எப்படி இருந்தாலும், அவங்க வீட்டிலே என்ன செய்தாலும், செய்யாட்டியே கூட. என்று சொல்லுவாராம். அதனால்தான் உன்னை விடலைனு சொல்லுவாங்க. பல வருஷங்கள் கழிச்சு இப்போத் தான் பின்னணிக்கதை எனக்குத் தெரிய வந்தது. அதுவும் தற்செயலான ஒரு பேச்சு வார்த்தையில்.

36 comments:

  1. WELL DONE Mr Shivam !!
    சுமங்கலி ப்ரார்த்தனைக்கு மினிமம் 1 ஒன்பது கஜம் வைத்துக் கொடுக்க , ஒரு ஆறு கஜம் கல்யாண்ப்பெண்ணுக்கு, ஒரு பாவாடை சட்டை –கன்யாபொண்ணுக்கு, ஒரு நாத்தனார் புடவை வழக்கம் எங்க குடுனம்பத்தில் .சில சமயம் 6 கஜம் 2/3 கூடவே சேர்ந்துடும் சமைக்கறவா உதவி பண்ணறவா யாருக்காவதுன்னு . இப்பல்லாம் பொன்னுருக்கறது என்ன என் கல்யாணத்திலேயே அதெல்லாம் இல்லை. ( ஊர் விட்டு மெட்ராஸ் வந்து பண்னினதுனால எங்க குடும்பத்துல PKM, SINDHRI,MADRAS MADURAI குடும்பங்கள் எல்லாருக்குமே நகைகள் தூத்துக்குடி AVM -மாரிமுத்து நாடார் – (வளை, செட், நெக்லெஸ் ), அழகிரிசாமி செட்டியார் – (கொடிக்கு ) தோடு அம்மன் உபாஸக மாமா ஆத்துல வந்து செலெக்ட் பண்ணி கட்டுவா அது ஒரு நாள் பூர ஆகும்  தான் .அதுதான் ஆகி(வி) வந்தது)) திருமாங்கல்யம் மட்டும் நாதெள்ளா மாடவீதில . அவர் அப்பல்லாம் பூ பழம் கற்பகாம்பாள் ப்ரசாதம் திருப்பதி லட்டு சகிதம் வந்து தந்துட்டு போவார் . நகையை மட்டும் தூத்துகுடில பண்ணிட்டீங்கனு குட்டியா COMPLAINT பண்ணிட்டு போவார் . மாமியார் சைட்ல திருச்சி கோபால் தாஸ்.புடவை நல்லிதான்

    ReplyDelete
  2. பொன் உருக்கும் பழக்கம் இல்லை. நல்ல நாள் பார்த்து, எங்களுக்கு பழக்கமான கடையில் சென்று வீட்டு வழக்கத்திற்கு ஏற்ற திருமாங்கல்யத்தை செய்ய சொல்லுவோம்.

    சுமங்கலிப் பிரார்த்தனைக் கணக்கு எனக்குத் தெரியாது.

    மாமா உண்மையில் பல வேலைகளை செய்து இருக்காரே :)))

    ReplyDelete
  3. வாங்க ஜெயஸ்ரீ, எங்க வீட்டில் ஒன்பது கஜம் புடைவையும் இரண்டு, ஆறு கஜம் புடைவையும் இரண்டு, பாவாடையும் இரண்டு. இலையும் இரண்டு போடுவாங்க! :))))))அதைத் தவிர சுமங்கலிப் பிரார்த்தனைக்கு உட்காரும் பெண்களில் மேற்சொன்ன துணிகளை நனைத்துக் கொடுப்பாங்க. மத்தவங்களுக்கு நனைக்காமல் புதுசாக் கொடுப்பாங்க. :)))))

    ReplyDelete
  4. என்னோட நகைகள் எல்லாம் மதுரை தெற்காவணி மூலவீதி முத்துசாமிச் செட்டி கடையில் பண்ணியது. பெரிய கடையாக இருந்து அப்புறம் மூன்று பிள்ளைகளுமாகப் பிரிச்சுக்கொண்டாங்க. :))))) இப்போல்லாம் அந்தக் கடைகளில் யார் இருக்கிறாங்கனே தெரியாது.

    ReplyDelete
  5. சுமங்கலிப் பிரார்த்தனைக் கணக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் அவங்க வழக்கத்துக்கு ஏற்றாற்போல் மாறும் எல்கே.

    ReplyDelete
  6. WELL DONE Mr Shivam !!//
    ஒரு எஸ் விட்டுபோகலியே அக்கா? :P:P:P

    ReplyDelete
  7. சொந்தமே வேண்டாம் னு சொன்னாராம். அவங்க அம்மாவும் சொந்தமே வேண்டாம். எல்லாரையும் சொந்தத்திலேயே கொடுத்தாச்சு. இனிமேலாவது வெளியே இருந்து வரட்டும்னு சொல்லி இருக்காங்க.//
    இது நல்ல யூஜெனிக்ஸ்!

    ReplyDelete
  8. //மதுரைப் பெண்ணைத் தான் பண்ணிக்க ஆசைப்படுவதாயும் சொல்லி இருக்கிறார்//
    வி.வ! வி.வ!

    ReplyDelete
  9. //அதுவும் தற்செயலான ஒரு பேச்சு வார்த்தையில்.// :-)))))))))))))

    ReplyDelete
  10. வாவ். மாமா மெனக்கெட்டிருக்கிறார் கல்யாணத்துக்கு..ஒரே டென்ஷனாப் போச்சு முழுசாப் படிக்கறத்துக்கு முன்னால்.:)
    அப்படியென்னப் பொல்லாத்தனம் உங்க மாமனாருக்கு. சாரி. கோவிச்சுக்க வேண்டாம்:)
    எங்க கல்யாணத்துக்கும் இங்க சென்னையிலதான் வீட்டுக்கு (மாமியார்)பொற்கொல்லன் வந்து ஆஜி மேற்பார்வையில் வைரத்தோடும், மாங்கல்யமும் செய்தார்கள். நாங்கள் மதுரையில் ஹாஜிமூசாவில் இரண்டு பட்டுப் புடவையும்,ராமநாதன் செட்டியார் கடையில் காசுமாலையும் செய்து கொண்டு வந்தோம்.

    ReplyDelete
  11. ஒரு எஸ் விட்டுபோகலியே அக்கா? :P:P:P//

    @திவா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :P

    ReplyDelete
  12. அவங்க அம்மாவும் சொந்தமே வேண்டாம். எல்லாரையும் சொந்தத்திலேயே கொடுத்தாச்சு. //

    ஆமாம், எங்க மாமியாரும், மாமனாருமே தூரத்துச் சொந்தம் தான். சுத்திச் சுத்தி ஒரே முகங்களைப் பார்த்து அலுத்துப்போயிருந்ததோ என்னமோ! :))))) ஆனால் அவங்க எங்க பொண்ணுக்கும் சொந்தத்திலே கொடுக்காதேனு தான் சொன்னாங்க. சொந்தத்திலே நிறையப் பிள்ளைகள் எங்க பொண்ணுக்கு ஏற்றாற்போல் வலிய வரவும் வந்தாங்க. அவளும் இஷ்டப்படலை, நாங்களும் இஷ்டப் படலை. வெளியேதான் பார்த்தோம். :))))))))))

    ReplyDelete
  13. /அதுவும் தற்செயலான ஒரு பேச்சு வார்த்தையில்.// :-)))))))))))))//

    ஹிஹிஹி, ஆமாம், ஏதோ பேச்சு வர, அப்போ எங்க கல்யாணம் பத்தியும் பேச்சு வர, நான் எங்க அப்பா அன்னிக்கு வரலைனா இத்தனை நேரம் உங்க அத்தை பொண்ணு இருந்திருப்பாங்கனு சீண்ட, அவர் அப்போ தனக்கு இருந்த டென்ஷனையும், அப்படி நிச்சயம் பண்ணறதா இருந்தால் கடுமையாக வேண்டாம் னு சொல்ல இருந்ததாகவும் சொன்னார். அதுக்கு அப்புறமாத் தான் நடந்த விஷயத்தைச் சொன்னார். மாமனாருக்குத் தெரியாதுனும், எல்லாரும் முன்னாடியே என் பெரிய மாமனார் கல்யாணத்துக்கு அழைத்ததை வைச்சுத் தற்செயலா என்னோட அப்பா வந்துட்டு நிச்சயம் பண்ணிக்க ஏற்பாடு செய்து விட்டதாகவும் நினைச்சாங்கனும் சொன்னார். கும்பகோணத்து அத்தையும், தன்னோட தங்கை பெண்ணை வேண்டாம்னு சொல்றார்னு தான் சொல்லி இருக்காங்க என்னோட அப்பாகிட்டே. அப்பாவும் அங்கு உள்ள நிலவரம் புரிஞ்சுக்கறதுக்குத் தான் முதலில் கும்பகோணம் அத்தை வீட்டுக்குப் போயிருக்கார். இன்னும் நிச்சயம் ஆகலைனு தெரிஞ்சதும் நாம நிச்சயம் பண்ணிண்டு போயிடலாம்னு முடிவு பண்ணி இருக்கார். ஆனால் அதை அந்த அத்தையிடம் சொல்லி இருக்கலாமோ? தெரியலை. சில சமயம் என் அப்பாவும் கொஞ்சம் ரகசியமா வச்சுப்பார். அப்படி ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு நினைச்சிருப்பார் போல! :P மற்ற விபரங்கள் அவங்களுக்கும் தெரியாது. இது அவங்க பெரியப்பாவும், பிள்ளையும் சேர்ந்து செய்தது! :))))))

    ReplyDelete
  14. வாவ். மாமா மெனக்கெட்டிருக்கிறார் கல்யாணத்துக்கு..ஒரே டென்ஷனாப் போச்சு முழுசாப் படிக்கறத்துக்கு முன்னால்.:)
    அப்படியென்னப் பொல்லாத்தனம் உங்க மாமனாருக்கு. சாரி. கோவிச்சுக்க வேண்டாம்:)//

    கோபமெல்லாம் இல்லை வல்லி, அவருக்குப் பழக்க, வழக்கம் மாறும், பேச்சு மாறும் சொந்த மருமாள் என்றால் சுவாதீனம் இருக்கும் என்ற எண்ணம். ஹிஹிஹி, டென்ஷன் என்ன வந்தது?? அதான் கல்யாணம் ஆகிக் குடித்தனமும் பண்ணிண்டு இருக்கோமே! :)))))))) என்னோட ஒரு பெரியம்மா சொல்லிண்டே இருப்பாங்க. ஒருத்தன் பெண்டாட்டியை இன்னொருத்தன் கட்ட முடியாதுனு. அது பல சமயம் உண்மையாகி இருக்கிறது. பார்த்திருக்கேன்.

    ReplyDelete
  15. எங்கள் பக்கமும் தாலிக்கு பொன் உருக்குதல் உண்டு.

    என் மகன் திருமணத்திறகு எங்கள் வீட்டில் பொன் உருக்கினோம்.

    சுமங்கலி ப்ராத்தனை, குலதெயவ வழிப்பாடு எல்லாம் உண்டு.

    திருமண வேலை சுறு சுறுப்பாய் இருக்கு! எப்போது நல்ல நாள் பார்த்து இருக்கிறீர்கள் திருமண நாளை சொல்ல.

    ReplyDelete
  16. S MISS ஸல திவா!! மாமாக்குதான் ஷொட்டு!!WHAT IS வி. வ???
    சரி Mrs Shivam இப்ப இதுக்கெல்லாம் சம்பந்தமே இல்லாத கேள்வி . விரகர நோக்கியம் ங்கற திருப்புகழ்179/180 தமிழ் script இருக்கா உங்க கிட்ட . அனுப்பறேளா?வள்ளிமலை ஸ்வாமில கேக்கலாம்னு நெனைச்சேன் இங்கயே கேட்டாச்சு.:)))

    ReplyDelete
  17. திருமண வேலை சுறு சுறுப்பாய் இருக்கு! எப்போது நல்ல நாள் பார்த்து இருக்கிறீர்கள் திருமண நாளை சொல்ல.//

    வாங்க கோமதி அரசு, திருமண நாளை ஏற்கெனவே சொல்லிட்டேன், பாருங்க முன்னாடிப் பதிவிலே, பெண்பார்க்க மாப்பிள்ளை வந்தப்போவே. :)))) வரவுக்கும் கருத்துக்கும், பகிர்வுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  18. ஜெயஸ்ரீ, நீங்க கேட்டது மெயில் பண்ணி இருக்கேன். பாருங்க. நன்றி.

    ReplyDelete
  19. //மதுரைப் பெண்ணைத் தான் பண்ணிக்க ஆசைப்படுவதாயும் சொல்லி இருக்கிறார்//

    :)) கலக்கல் ;)

    ReplyDelete
  20. முதல் பார்வையிலேவா? பலே!

    ReplyDelete
  21. @கோபி, நன்றிப்பா.

    @அப்பாதுரை, ம்ம்ம்ம்ம்?? தெரியலை! ஆனாலும் சில சமயம் சில உணர்வுகள் ஏற்படும் இல்லையா?? அப்படி ஏதோ ஒண்ணுனு நினைக்கிறேன். :)))))

    ReplyDelete
  22. //மதுரைப் பெண்ணைத் தான் பண்ணிக்க ஆசைப்படுவதாயும் சொல்லி இருக்கிறார்//

    இப்படி தான் புராண காலத்தில் சொக்க நாதர் மதுரை மீனாட்சியை கேட்டு இருப்பாரோ

    விகடனில் ஜோக்ஸ் பகுதியில் கூட படித்து இருக்கிறேன்
    உங்கள் வீட்டில் மீனாஷி ஆட்சியா இல்லே சிதம்பரம் ஆட்சியா !
    இது எதனால் இப்படி சொல்கிறார்கள் !

    மற்றபடி இந்த பதிவில்தான் எல்லா மர்மங்களும் ஆல் கிளியர்!
    அருமையான பதிவு ..

    ReplyDelete
  23. தொடருங்கள் ...............

    ReplyDelete
  24. அதென்ன இங்கிலீஷ் பச்சை... கிண்டல் பண்ணலை மாமி... நிஜமாவே கேட்டதில்ல...;)

    வாவ்... மாங்கல்யம் செய்யறது கண் முன்ன நடக்குமா... interesting..

    உங்க கல்யாணத்துக்கு உங்களுக்கே அழைப்பா...அதுவும் மாமாகிட்ட இருந்தா... சூப்பர் மாமி...;))

    நல்ல மனசு தான் மாமாவுக்கு... பெண் வீட்டுக்காரா மனசு புண்படக்கூடாதுன்னு இன்னிக்கி எத்தனை பேரு நினைக்கறாங்க... அதுவும் அந்த காலத்துல ரியல்லி மாமா இஸ் கிரேட்... :))

    ReplyDelete
  25. ”மதுரைப் பெண்ணைத்தான் பண்ணிக்க ஆசைப்படுவதாயும்...”

    முதல் பார்வையிலேயே மயக்கிவிட்டீர்களா :)

    பதிவு ரசனையாக இருந்தது.

    ReplyDelete
  26. விகடனில் ஜோக்ஸ் பகுதியில் கூட படித்து இருக்கிறேன்
    உங்கள் வீட்டில் மீனாஷி ஆட்சியா இல்லே சிதம்பரம் ஆட்சியா !
    இது எதனால் இப்படி சொல்கிறார்கள் !


    @ப்ரியா, குழந்தைங்க பரிக்ஷை முடிஞ்சதா?? நல்லாப் பண்ணி இருக்காங்களா??

    மீனாக்ஷி ஆட்சி என்றால் மதுரையில் மீனாக்ஷி தானே ராணியாக இருந்தாள். அதனால் அவங்க வீட்டிலே பெண்ணின் கை ஓங்கி இருக்கும்னு அர்த்தம், சிதம்பரத்தில் நடராஜர் தான் முக்கியம். அவருக்கு அப்புறம் தான் சிவகாம சுந்தரி. அதனால் சிதம்பரம் என்றால் ஆணின் கை ஓங்கி இருக்கும்னு அர்த்தம்.
    ஆனால் மதுரையிலே இப்போச் சித்திரையிலே பட்டம் கட்டிக்கும் மீனாக்ஷி ஆவணி மாசம் சொக்கநாதரிடம் ராஜ்யத்தை ஒப்படைக்கிறாள். அப்புறம் எங்கே மீனாக்ஷி ஆட்சி வந்தது?? :))))))) அது சும்ம்ம்ம்மா வம்புக்குக் கேட்பாங்க.

    நானும் எங்க வீட்டிலே திருச்செங்கோடுனு சொல்லிடுவேன். திருச்செங்கோட்டிலே அர்த்தநாரீஸ்வரர் தெரியும் இல்லையா? :)))))))

    ReplyDelete
  27. வாங்க ஏடி எம், இங்க்லிஷ் பச்சைன்னா, ம்ம்ம்ம்ம்??? பச்சை ஆப்பிள் கலராய் வருமோ?? சரியாத் தெரியலை. அதுக்கு ஆங்கிலப் பெயர் கூட ஒண்ணு உண்டு, ம்ம்ம்ம்ம் இப்போப் பார்த்து மறந்து தொலைச்சுட்டேன். குறிப்பு வச்சிருக்கேனா பார்க்கிறேன். ராமர் பச்சையும் இல்லாமல், நீலமும் இல்லாமல் ரெண்டுங்கெட்டானா இருக்கும்.

    ReplyDelete
  28. உங்க கல்யாணத்துக்கு உங்களுக்கே அழைப்பா...அதுவும் மாமாகிட்ட இருந்தா... சூப்பர் மாமி...;))//

    ஹிஹிஹி, ஆமாம், நாங்க யாருமே இதை எதிர்பார்க்கலை தான். அந்தப் பத்திரிகையைத் தான் இன்னும் பத்திரமா வச்சிருக்கேன். :)))))))))

    //நல்ல மனசு தான் மாமாவுக்கு... பெண் வீட்டுக்காரா மனசு புண்படக்கூடாதுன்னு இன்னிக்கி எத்தனை பேரு நினைக்கறாங்க... அதுவும் அந்த காலத்துல ரியல்லி மாமா இஸ் கிரேட்... :))//

    அவரோட சேர்த்து மூணு நண்பர்கள்,. மூணு பேருமே ஏழெட்டுப் பெண்களைப் போய்ப் பார்த்து இது சொத்தை, இது சொள்ளைனு எல்லாம் சொல்லக் கூடாது. எல்லாம் பேசி முடிச்சப்புறம் போய்ப் பார்க்கிற முதல் பெண் கறுப்போ, சிவப்போ, நெட்டையோ, குட்டையோ, வேண்டாம்னு சொல்லாமல் பிடிச்சிருக்குனு, சரினு சொல்லிட்டுப் பண்ணிக்கணும்னு இருந்தாங்கனு சொல்லுவார். அவங்களோட இந்தக் கருத்தை என் இன் லாஸ் எல்லாருமே கூடச் சொல்லி இருக்காங்க. மூணு பேருமே அப்படித் தான் கல்யாணமும் பண்ணிண்டாங்க. அதிலே ஒருத்தர் கல்யாணம் எங்க கல்யாணம் கழிச்சு நெய்வேலியில் நடந்தப்போ நாங்க போயிருக்கோம். :))))))

    ReplyDelete
  29. வாங்க மாதேவி, ரசனைக்கு நன்றிம்மா. தொடர்ந்து வருவதற்கும் நன்றி.

    ReplyDelete
  30. //@ப்ரியா, குழந்தைங்க பரிக்ஷை முடிஞ்சதா?? நல்லாப் பண்ணி இருக்காங்களா??//

    அப்பாடா ! ஒரு வழியாக முடிந்தது கீதாம்மா

    நல்லா தான் பண்ணி இருப்பதாக சொல்கிறார்கள் !

    //நானும் எங்க வீட்டிலே திருச்செங்கோடுனு சொல்லிடுவேன். திருச்செங்கோட்டிலே அர்த்தநாரீஸ்வரர் தெரியும் இல்லையா? :)))))))//

    பேஷா தெரியும் கீதாம்மா ! நிறைய சொந்தகாரங்க இருக்காங்க !
    ஊரில் உள்ள கோவிலுக்கு சென்று இருக்கிறேன் ;ஒரு தடவை மலைக்கு சென்று இறைவரை வழிபட வேண்டும்..

    ReplyDelete
  31. மாமி
    மதுரைல மீனாக்ஷி கல்யாணத்தோட இங்க மாங்கல்ய தாரணம் முஹூர்த்தம் நடக்குமா? :)
    இல்லை ஒரு வாரம் மேலே சொல்லலியேனு கேட்டேன். ஊஞ்சல், நலங்கு எல்லாம் போடவும்.

    ReplyDelete
  32. வாங்க ப்ரியா, மீள் வரவுக்கு நன்றிங்க. ஒரு முறை திருச்செங்கோடு வரணும். பார்த்தது இல்லை.

    ReplyDelete
  33. ஸ்ரீநி, வேறே வேலைகள்,அதோட உறவினர் வருகை எல்லாம் சேர்ந்துண்டது. :))))))

    ReplyDelete
  34. அப்படியே சேலமும் போயிட்டு வாங்க . ஒரு மணி நேரம்தான் அங்க இருந்து ::) . மலை மேல போக பஸ் உண்டு சோ பயப்பட வேண்டாம்

    ReplyDelete
  35. மலை ஏறப் பயமெல்லாம் இல்லை எல்கே. அஹோபிலம் மலையை விடக் கஷ்டமா இருக்காதுனு நினைக்கிறேன். :))))) கட்டாயமா ஒரு முறை அந்தப் பக்கம் போகணும். நான் சேலத்தைப் பார்த்தது என்றால் சேலம் ரயில்வே ஸ்டேஷனைத் தான் பார்த்திருக்கேன். அதுவும் ஒரு விபத்தினால். அது பெரிய கதை! மதுரையிலிருந்து சென்னைக்குச் சேலம் வழியாப்போனோம். :)))))))) அப்புறமா வச்சுப்போம்.

    ReplyDelete