எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, January 12, 2012

இளைஞர் தின வாழ்த்துகள்!


நேற்று இரவு மனசு கனத்தோடு படுக்கச் சென்றேன். ஆசியாவிலேயே/உலகிலேயே மிகவும் மோசமான நிர்வாகம் இந்தியாவில் தான் என்ற செய்தியைப் படித்ததில் இருந்து மனம் மிக மிக வேதனைப் படுகிறது. இன்று இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில். இப்போதைய இளைஞர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுவதில்லை. சீர் தூக்கி ஆராய்ந்து நல்லது கெட்டது பாகுபாட்டைப் புரிந்து கொண்டு எதிர்கால இந்தியாவை வளமானதாக மட்டுமின்றி அனைத்திலும் சிறந்த ஒரு நாடாக மாற்ற வேண்டிய மாபெரும் பொறுப்பு இன்றைய இளைஞர்களுக்கு உள்ளது. இந்த இளைஞர்கள் தினத்தில் அதற்கு வேண்டிய மன உறுதியையும், வலுவையும் கொடுக்கும்படி எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

14 comments:

  1. என்னிடம் நூறு இளைஞர்களை தாருங்கள்.இந்த பாரத தேசத்தை மாற்றிக்காட்டுகிறேன் என்று அறிவித்து பாரத சமுதாயத்தை தட்டி எழுப்பிய விவேகானந்தரது பிறந்த நாளை இளைஞர் தினமாக கொண்டாடுவது சால சிறந்ததே...
    ஆனாலும் இன்றைய இளைஞர் நிலையை எண்ணிப்பார்த்தால் கவலையாகத்தான் இருக்கிறது.
    ஆண்டவனை பிராத்திருப்பதை தவிர வேறு வழியில்லை.

    ReplyDelete
  2. என்னிடம் நூறு இளைஞர்களை தாருங்கள்.இந்த பாரத தேசத்தை மாற்றிக்காட்டுகிறேன் என்று அறிவித்து பாரத சமுதாயத்தை தட்டி எழுப்பிய விவேகானந்தரது பிறந்த நாளை இளைஞர் தினமாக கொண்டாடுவது சால சிறந்ததே...
    ஆனாலும் இன்றைய இளைஞர் நிலையை எண்ணிப்பார்த்தால் கவலையாகத்தான் இருக்கிறது.
    ஆண்டவனை பிராத்திருப்பதை தவிர வேறு வழியில்லை.

    ReplyDelete
  3. ஆமாம் மாமி. நாங்களும் பிரார்த்திக்கிறோம்.

    ReplyDelete
  4. இன்றைய தினமணி மதி கார்ட்டூன் நினைவுக்கு வருகிறது..."எதிர்காலம் இளைஞர்கள் கையில் இளைஞர்கள் கையில் என்கிறார்கள்....எல்லா இளைஞர்கள் கையிலும் மொபைல்தான் இருக்கிறது"

    ReplyDelete
  5. ஸ்ரீராம்.... :)

    எதிர்காலம் எப்பவுமே இளைஞர்கள் கையில் தானே? இன்றைய முதியவர்களின் கையில் ஒரு காலத்தில் இருந்தது. நாளைய முதியவர்களின் கையில் இன்று இருக்கிறது.

    ஒரு உணர்ச்சி வேகத்தில் இந்த மாதிரி clicheகளுக்கு மதிப்பு கொடுத்துப் பேசுகிறோமே தவிர, எல்லாருமே ஒன்று தான். அதனால இதுக்கெல்லாம் கவலைப்படாம தூங்குங்க கீதா சாம்பசிவம். கவலையே படாதீங்க. எல்லாம் நன்றாகவே நடக்கிறது.

    ReplyDelete
  6. வாங்க புதுகை செல்வா, உங்கள் பிரார்த்தனைகளை இறைவன் நிறைவேற்றட்டும். நன்றிங்க

    ReplyDelete
  7. ராம்வி, நன்றிம்மா.

    ReplyDelete
  8. ஶ்ரீராம், உங்கள் கவலை சரியானதே. மொபைலுக்கு நம் தமிழ்நாட்டு இளைஞர் பட்டாளம் அடிமையாகி இருப்பது போல் வேறெங்கும் காண முடியாது. சமீபத்தில் இங்கே யு.எஸ்ஸில் இருந்து தமிழ்நாட்டிற்குப் பல ஆண்டுகள் கழித்து வந்த என் சிநேகிதி ஒருவர், சில வீடுகளுக்கு உறவினரைப் பார்க்கப் போனபோது எல்லாரும் ஒண்ணு தொலைக்காட்சி, அடுத்து மொபைலில் பேசுவது என இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்து விட்டார். அப்படி என்னதான்பேசறாங்க என்று கவனித்தால், பெண்கள் பெரும்பாலும் தொலைக்காட்சி சீரியல்கள், சினிமாக்கள், சமையல் பற்றியும், ஆண்கள் சினிமா, கிரிக்கெட், காதல் குறித்தும் தான் பேசுகிறார்கள் என்றார்.:(((((((

    ReplyDelete
  9. அப்பாதுரை, எல்லாம் நல்லாவே நடக்கட்டும்; இல்லைனு சொல்லவில்லை. ஆனால் அநியாயங்களைப் பார்த்துக்கொண்டு நமக்கு என்னனு சும்மா இருக்க முடியலை.

    நீங்க இந்தியாவுக்கு வந்து எத்தனை ஆண்டுகள் ஆகி இருக்கும்??? சமீபத்திய மாற்றங்களை அறிந்திருக்க மாட்டீர்கள்.

    நேற்று ஆட்டோவில் ஏற்றிச்சென்ற பெண்ணிடமிருந்து நகைகளைக்கொள்ளை அடித்ததோடு, அவளைக்கீழேயும் தள்ளி ஆட்டோவையும் மேலே ஏற்றி இருக்கின்றனர். என்னனு சொல்லறது? மனிதாபிமானம் னு ஒண்ணு சாதாரண மனிதர்க்கெல்லாம் கிடையாதா? அவங்களும் மனிதர்கள் தானே?

    ReplyDelete
  10. இந்தக்கால இளைஞர்கள் விவரமானவங்களாகத்தான் இருக்காங்க அவங்களுக்கு சரியான வழிகாட்டல் மட்டும் கிடைச்சா நல்லா முன்னேறுவாங்க.

    ReplyDelete
  11. இந்த இளைஞர்கள் தினத்தில் அதற்கு வேண்டிய மன உறுதியையும், வலுவையும் கொடுக்கும்படி எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.//

    இளைஞர்களுக்கு இப்போது மன உறுதியும், மனவலுவும் கண்டிப்பாய் தேவை. அவர்களை வழிமாற செய்ய எத்தனை எத்தனை விஷயங்கள்! உள்ளன அதில் மாட்டிக் கொள்ளாமல் முன்னேறி செல்ல மன உறுதியும், மனவலுவும் இருந்தால் தான் முடியும்.

    ReplyDelete
  12. இளைஞ்ர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. வாங்க லக்ஷ்மி, ஒரு சிலரைப் பார்த்து மனதில் நம்பிக்கையும் உற்சாகமும் வந்தாலும் மற்ற சில விஷயங்கள் அதை அடியோடு தகர்க்கிறது.

    ReplyDelete
  14. வாங்க கோமதி அரசு, நீங்க சொல்வது சரியே. இளைஞர்கள் திடமாகவும் உறுதியாகவும் இருக்கச் சிறு வயதில் இருந்தே கட்டுப்பாட்டையும், பொறுப்புணர்ச்சியையும் வளர்க்க வேண்டும். அப்போத் தான் அந்தக் குழந்தைகள் பெற்றோராகவே இருந்தாலும் தவறு செய்தால் தவறு என அதைத் தட்டிக் கேட்பார்கள். அந்த மனம் வரவேண்டும். இப்போ இருக்கும் நிலைமையில் பெற்றோர் தாங்களும் கெட்டுக் குழந்தைகளையும் கெடுக்காமல் இருந்தாலே பெரிய விஷயம்.

    ReplyDelete