எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, January 26, 2012

சுழிக்காற்றா? சுழல்காற்றா?

இரண்டு நாட்களாவே இதைப் பத்தி எழுத நினைச்சு எழுத முடியலை. இணையத்தில் அமரும் நேரமே குறைந்து விட்டது. வந்து நாலு மெயிலைப் படிச்சுட்டுப் போனாப் போதும்னு ஆயிடுது. கடந்த வாரம் சனிக்கிழமை மதியம் இங்கே திடீர்னு அபாய அறிவிப்புச் சங்கு ஊதியது. என்னனு புரியலை. பொண்ணு வேலைக்குப் போயிட்டா. வீட்டிலே நாங்க தான். அப்புறமா அதைக் குறித்துக் கேட்கத் தோன்றவில்லை. ஞாயிறன்று இரவு உணவு முடித்துக்கொண்டு படுத்துவிட்டோம். அப்புவும் என்னைத் தூங்க வைச்சுட்டுப் போயாச்சு. திடீர்னு மறுபடி சைரன் ஊதியது. இம்முறை நிற்காமல் தொடர்ந்து ஊதிக்கொண்டே இருக்க என்னனு புரியலையேனு நினைச்சோம்.

அப்போப் பொண்ணு உள்ளே வந்து டொர்னடோ அபாய அறிவிப்புச் சங்கு ஊதறாங்க. டொர்னடோ வரப் போகுது. ஜன்னல் வழியா உள்ளே வந்தால் அப்படியே தூக்கிக் கொண்டு போய் உங்களை இந்தியாவிலே விடுதோ இல்லை, சமுத்திரத்தில் போடுதோ சொல்ல முடியாது. எழுந்து வாங்கனு கூப்பிட்டா. சரியா ஜன்னலுக்கு நேரே நான் படுத்திருந்தேன். நம்ம வெயிட்டைத் தூக்க அதால முடியுமானு நான் நினைக்க, உன்னை மாதிரிப் பத்துப்பேரைச் சேர்த்தாப்போல் வீட்டோட தூக்கிட்டுப் போகும். தூக்கிட்டுப் போறச்சேயே தயிர் கடையறாப்போல் உன்னை மத்தாக நினைச்சுக் கடையும்; பரவாயில்லையானு கேட்க, வம்பே வேண்டாம்னு வெளியே வந்தோம்.

மாடிப்படி தான் பாதுகாப்புனு(பேஸ்மென்ட்(தரைத்தளம்) தான் பொதுவாய்ப் பாதுகாப்பு; இங்கே பெரும்பாலான வீடுகளில் பேஸ்மென்டே இல்லை) அங்கே உட்காரச் சொன்னா. சினிமாத் தியேட்டரில் உட்கார்ந்துக்கறாப்போல் எல்லாரும்வரிசையா உட்கார்ந்தோம். அதுக்குள்ளே பெண்ணும், மாப்பிள்ளையும் முக்கியமான எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் சாதனங்களின் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு ஒரே ஒரு மினி டிவியை மட்டும் சூடான செய்திகளுக்கப் போட்டார்கள். இதற்கு பாதிப்பு வந்துடாதா? டிவி ஓடலாமானு கேட்டேன்; டொர்னடோ இந்தப் பக்கம் திரும்பும் சிக்னல் கிடைச்சதும் டிவி தானே நின்னுடும்; இதற்கான சிக்னலை நிறுத்திடுவாங்க. எல்லார் வீட்டிலும் டிவி மட்டும் ஓடும்; இப்போக் கவுன்டியிலே இருந்து தொலைபேசியில் கூப்பிட்டு எச்சரிக்கை கொடுப்பாங்கனு சொன்னா.

கவுன்டி என்பது நகர நிர்வாகம்னு நினைக்கிறேன்; அவங்களுக்கும் இது குறித்துச் சொல்லத் தெரியலை. ஆனால் அப்படித்தான் கிட்டத்தட்ட என்றார்கள். அபார்ட்மென்ட் குடியிருப்புகளுக்கு டொர்னடோ எச்சரிக்கை கொடுப்பது அந்த அந்தக் குடியிருப்பு வளாகத்தின் அலுவலகத்தைச் சார்ந்ததாம். இம்மாதிரித் தனி வீடுகளுக்கு மட்டும் கவுன்டியில் இருந்து எச்சரிக்கை செய்வார்களாம். அதே போல் தெருவில் அப்போது செல்லும் வண்டிகள் அனைத்துக்கும் பாதுகாப்பாக ஒரு இடம் சொல்லி அங்கே போய் இருக்கச் சொல்லிவிடுகிறார்கள். அந்த இடத்துக்குக் குறிப்பிட்ட நேரத்துக்குள் வண்டி போகவேண்டும் என்பதால் டொர்னடோ வருவதற்கு அரைமணி, ஒரு மணி முன்பே இதெல்லாம் ஆரம்பம்.

அன்று இரவு பத்தேமுக்காலுக்கு டொர்னடோ மெம்பிஸின் இந்தக் காலியர்விலைக் கடந்தது. முதலில் இங்கே வரலைனு சொல்லிட்டாங்க. டொர்னடோ உடனே மிரட்டல் செய்தியை அனுப்ப, பயங்கர வேகத்தில் வருது; தப்பாய்ச் சொல்லிட்டோம், மன்னிச்சுக்குங்கனு மீண்டும் மீண்டும் தொலைபேசியில் செய்தி வந்து கொண்டே இருந்தது. வெளியே பயங்கரமான மின்னல் , இடி,இவற்றோடு காற்றின் சப்தமும். எனக்கோ வெளியே போய்ப் பார்க்கணும்; படம் பிடிக்கணும்னு ஆசை. கதவை எல்லாம் திறக்க முடியாது. கதவு பூட்டி இருந்தாலே டொர்னடோ உள்ளே வரும்; திறந்தால் வீடே இருக்காதுனு சொல்லிட்டாங்க. ஆசையை அடக்கிக் கொண்டேன். வந்த சுவடு தெரியாமல் இங்கே இருந்து போயிட்டது. அது போயிடுச்சுங்கறதுக்கு ஒரே அடையாளம் மறுபடி தொலைக்காட்சிப் பெட்டி இயங்க ஆரம்பித்தது தான். தொலைக்காட்சிப் பெட்டியை அணைக்கவே இல்லை. டொர்னடோ போனதும் மறுபடி இணைப்பு வந்துவிட்டது. அதுக்குள்ளே இங்கே உள்ள ஜெர்மன் டவுன் என்னும் பகுதியில் பயங்கரமான சேதம் என்னும் தகவல்களும் வந்து விட்டது.

இவற்றில் என்னைக் கவர்ந்த விஷயம் சரியான சமயத்தில் நிர்வாகத்தினரின் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும். கொஞ்சமும் கலவரம் இல்லாமல் சகஜமாகக் கையாண்டவர்களும் ஆவார்கள். நாம் கற்றுக்கொள்ளவேண்டியது இவை எல்லாமும் தான். இந்தக் கலாசாரத்தையோ, உணவையோ, உடையையோ அல்ல. புரிதலுக்கு நன்றி. பாதிப்பு அடைந்த ஜெர்மன் டவுன் சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டது இரண்டே நாட்களில்.

18 comments:

  1. டொர்னடோ - திகில்

    //எனக்கோ வெளியே போய்ப் பார்க்கணும்; படம் பிடிக்கணும்னு ஆசை.// - புன்னகை.

    //சரியான சமயத்தில் நிர்வாகத்தினரின் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும்,//
    //பாதிப்பு அடைந்த ஜெர்மன் டவுன் சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டது இரண்டே நாட்களில்.// = பாராட்டணும்.


    //அது போயிடுச்சுங்கறதுக்கு ஒரே அடையாளம் மறுபடி தொலைக்காட்சிப் பெட்டி இயங்க ஆரம்பித்தது தான்// =வியப்பு.

    ReplyDelete
  2. வெளி நாட்டை புகழ்ந்து பேசினா இங்க பல பேரு சண்டைக்கே வரா. ஆனா அவர்களின் சில , பல விஷயங்களை ஏன் கற்றுக்கொள்ள மாட்டேங்கிராங்க? இதுபோல அவசர சமயங்களில் அவர்கள் எடுக்கும் பாது காப்பு முயற்சிகள் அபாரம். இப்ப வந்துபோச்சே தானே புயல் அப்பவும் சிறப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தால் எவ்வளவு சேதங்களை தடுத்திருக்கலாம்?

    ReplyDelete
  3. நல்ல விசயத்தை நாமும் எடுத்துக்கலாம். நிர்வாகத்தினரின் முன் எச்சரிக்கை நடவடிக்கை நிறைய உயிர்களைக் காப்பாற்றும்.

    ReplyDelete
  4. சரியான சமயத்தில் நிர்வாகத்தினரின் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும். கொஞ்சமும் கலவரம் இல்லாமல் சகஜமாகக் கையாண்டவர்களும்

    நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்..

    ReplyDelete
  5. வாங்க ஶ்ரீராம், இதெல்லாம் பார்க்கக் கிடைக்காது. கிடைச்சும் பார்க்க முடியலை. :( ஆனால் சப்தம் காதைத் துளைத்தது. மற்றபடி இவ்வளவு மூர்க்கமான ஒரு இயற்கைச் சீற்றத்தை வெகு இயல்பாகக் கையாண்டவிதம் அருமை. அதுவும் இரவு நேரம்.

    ReplyDelete
  6. வாங்க லக்ஷ்மி, நல்ல விஷயங்களைப் புகழ்ந்து பேசுவதில் தப்பே இல்லை. ஆனால் சரியான புரிதல் இருக்கணும். நாங்க கிட்டத்தட்டப் பத்து வருஷமா சாலை வசதிக்குப் போராடறோம். இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. :(((( நம்ம நிர்வாகம் இப்படி இருக்கு.

    ReplyDelete
  7. வாங்க விச்சு, ஒட்டுமொத்தமா எல்லாமும் மாறணும். வேரிலேயே பூச்சி அரிச்சிருக்கே. என்ன செய்யறது?

    ReplyDelete
  8. வாங்க ராஜராஜேஸ்வரி, பாடம் கற்றுக்கொண்டு அதைச் சிறப்பாக நிறைவேற்றவும் செய்யணும். மக்களைப் பொறுப்பற்றவர்களாக்கிவிட்டது அரசாங்கம்.

    ReplyDelete
  9. இப்படி எச்சரிக்கை கொடுப்பதற்கு முன்பு எவ்வளவு உயிர்களை பலி கொடுத்திருப்பார்கள்...எல்லாம் பட்ட அனுபவம் தான்.

    ReplyDelete
  10. What an experience.. You are having a whole lot of interesting experiences in US. Memphis is not the usual tornado country isn't it? Scary!

    The narration is superb. Thanks.

    ReplyDelete
  11. வாங்க வடுவூர், long time,no see!!!! :)))))))சேதம் என்பது தவிர்க்க முடியாதது. என்றாலும் இங்கேமுன்னெச்சரிக்கை அதிகம் என்றே என்றே தோன்றுகிறது. 2004-ல் யு.எஸ். வந்தபோது, இங்கே ஹெவி ஸ்நோ. அப்போதும் சகஜ வாழ்க்கைக்கு எந்தவிதமான தடங்கலும் ஏற்படவில்லை. இரண்டு நாட்களானது ஸ்நோ எல்லாம் கரைவதற்கு. அதிலேயே போய் ஷாப்பிங் செய்த அனுபவம் தனி! :)))))

    ReplyDelete
  12. வாங்க வெற்றிமகள்,
    டொர்னடோ வரும் பூகோளப் பகுதியில் தான் மெம்பிஸும் அமைந்துள்ளது. இங்கிருந்து ஐந்து மைல் தூரத்திலுள்ள மிசிசிபி(பக்கத்து மாநிலம்) யில் இன்னும் அதிகம். அங்கே பத்து என்றால் இங்கே ஆறு அல்லது ஏழு முறை என வைத்துக்கொள்ளலாம். சாதாரணமாகக் கோடை நாட்களில் தான் அதிகம் வருமாம்; இம்முறை எங்களைப் பார்க்க வந்திருக்கு!

    ReplyDelete
  13. ஏற்கனவே இதை குழுமத்தில் போட்டீங்க தானே ???

    ReplyDelete
  14. நீங்க இருக்கிற இடத்துக்கு சுழல் காத்து வந்துதுன்னா ஆச்சரியம்தான்! அதுக்கு பயமா இல்லை? :P :P :P

    ReplyDelete
  15. வாங்க எல்கே, ப்ளாக் பக்கம் வந்திருக்கீங்க?? ஆஆஆஆஆஆச்ச்ச்சரியம்! :)

    ReplyDelete
  16. வாங்க வா.தி. புதுசா நீங்க??? ஹிஹிஹி, என்னைத் தெரிஞ்சிருக்கே! என்ன இருந்தாலும் தலைவி இல்லையா அதான் தெரிஞ்சு வைச்சிருக்கீங்க!

    ReplyDelete
  17. அப்போப் பொண்ணு உள்ளே வந்து டொர்னடோ அபாய அறிவிப்புச் சங்கு ஊதறாங்க. டொர்னடோ வரப் போகுது. ஜன்னல் வழியா உள்ளே வந்தால் அப்படியே தூக்கிக் கொண்டு போய் உங்களை இந்தியாவிலே விடுதோ இல்லை, சமுத்திரத்தில் போடுதோ சொல்ல முடியாது. எழுந்து வாங்கனு கூப்பிட்டா. சரியா ஜன்னலுக்கு நேரே நான் படுத்திருந்தேன். நம்ம வெயிட்டைத் தூக்க அதால முடியுமானு நான் நினைக்க, உன்னை மாதிரிப் பத்துப்பேரைச் சேர்த்தாப்போல் வீட்டோட தூக்கிட்டுப் போகும். தூக்கிட்டுப் போறச்சேயே தயிர் கடையறாப்போல் உன்னை மத்தாக நினைச்சுக் கடையும்; பரவாயில்லையானு கேட்க, வம்பே வேண்டாம்னு வெளியே வந்தோம்.//

    ஆஹா! இந்த நெருக்கடியான நேரத்திலும் பூஜாம்மாவின்(பேர் என்னவோ !) நகைச்சுவை ரசிக்க வைத்தது .,கலக்கறாங்க :))

    நையாண்டியில் உங்களை மிஞ்ச ஆளே இல்லை என்று நினைத்து கொண்டு இருந்தேனே கீதாமா :))

    மற்றபடி உங்கள் பதிவின் வாயிலாக பல புது விஷயங்களை தெரிந்து கொள்ள உதவியதற்கு நன்றிகள் கீதாமா!

    ReplyDelete
  18. ஆஹா! இந்த நெருக்கடியான நேரத்திலும் பூஜாம்மாவின்(பேர் என்னவோ !) நகைச்சுவை ரசிக்க வைத்தது .,கலக்கறாங்க :))

    நையாண்டியில் உங்களை மிஞ்ச ஆளே இல்லை என்று நினைத்து கொண்டு இருந்தேனே கீதாமா :))//

    பூஜா அம்மா&அப்பு அம்மாவோட பேர் மீனாக்ஷி.

    ஹிஹிஹி, ப்ரியா, அவ சொன்னது என்னமோ கிட்டத்தட்ட இந்த அர்த்தம் வராப்பலதான். ஆனால் நாங்க தான் இப்படி ருசிகரமா எழுதினோமாக்கும். :))))))

    ReplyDelete