எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, September 11, 2012

டிசம்பர் 22-இல் உலகம் அழியப் போகுதாமே!

தெரியுமா உங்களுக்கு?  டிசம்பர் 22--இல் உலகம் அழியப் போகுதுனு அந்தக் கால மாயன் கலாசாரத்து மக்கள் அப்போவே எழுதி வைச்சிருக்காங்களாம்.  அப்படினு சொல்றார் உயிர்மை பத்திரிகையில் இதைக் குறித்த தொடர் எழுதிய ராஜ் சிவா என்பவர்.  அவர் சொல்வதில் மாயன்களுக்குக்கற்றுக் கொடுத்ததே தமிழர்கள் என்பதும் ஒன்று.  இதை அவர் 2012 பிறக்கும் முன்னரே எழுதி இருக்கார்.  கொஞ்ச நாட்களாக எனக்கு இதைக் குறித்துப்  உறவினர்களிடமிருந்து வந்த ஃபார்வர்ட் மெயில் மூலம் ராஜ் சிவா எழுதி இருப்பதைப் படித்தேன்.  நம்ம ரங்க்ஸ் கூட அதைப் பத்தி இரண்டு நாட்கள் முன்னாடி தான் கேட்டார்.  ஏதானும் தெரியுமானு! தெரியலை, அப்படிப் போனா எல்லாரும் தானே போகப் போறோம்; கவலைப்படாதீங்கனு சொல்லிட்டேன். :))))

இதிலே இருந்து தப்பிச்சுக்கறதுக்காகவும் சிலர் முயற்சி செய்யறாங்களாம்.  எப்படி முடியும்னு புரியலை.  ஒட்டு மொத்தமா உலகமே, பூமி உருண்டையே அழியறச்சே ஒரு சிலர் மட்டும் பூமிக்கு அடியிலே போய் இருப்பாங்களாம்.  பூமியே அடியோடு புரண்டு போகறச்சே அவங்களும் வந்துட மாட்டாங்க?  இதைக் குறித்து நான் அதிகம் விளக்குவதை விட, உங்களுக்கு அந்த லிங்க் தரேன்.  படிச்சுட்டுத் தலை சுத்தி உட்காரலாம்.  இப்போ வரைக்கும் நான் நல்லாவே இருக்கேன். தலை சுத்தலை.  ஆகவே தைரியமாகப் படியுங்கள், நாமெல்லாம் மனிதர் தானே!

https://docs.google.com/file/d/0Bxd_jvqaheFtaHpuYmE3bldJbHM/edit

https://docs.google.com/file/d/0Bxd_jvqaheFtREJzblZ4b3E4REE/edit?pli=1

http://worlddoomsday2012.wordpress.com/

இப்போதைய எங்க கவலை, டிசம்பர் 22 வரைக்கும் இப்போப்பண்ணி வைச்சிருக்கும் முறுக்கு வராதே என்பது தான்.  அதுக்குள்ளே மறுபடியும் பண்ணியாகணும்.  சூரியக்கதிர் வீச்சுத் தாக்குதலாய் இருக்கலாம்.  எரிமலை வெடிப்பாய் இருக்கலாம்னு சொல்றாங்க.  பார்க்கலாம். :)))))))) எல்லாத்துக்கும் தயாராய் இருப்போம்.  ராத்திரின்னா தூங்கிட்டு இருப்போம். 

55 comments:

 1. இதை நம்பறாங்களா கீதா. லின்கைப் படிக்கிறேன்.

  ReplyDelete
 2. இல்லை.... நியூஸ் பழசு மட்டும் இல்லை, தப்பும்னும் தெரிஞ்சு போச்சு.... நேத்து ஒரு ஊறுகாய் பாட்டில் வாங்கினேன். அதில் எக்ஸ்பையரி டேட் 2015 என்று போட்டிருக்கான்... (இதுவும் மெயிலில் வந்த ஜோக்கே!)

  ReplyDelete
 3. லின்க்கில் உள்ள பி டி எஃப்களை தரவிறக்கி வைத்து விட்டேன். முன்பு எப்போதோ படித்து கவலைப் பட்டது.. நிறைய புத்தகங்கள் படிக்காம வச்சிருக்கோமேன்னு தான் ரொம்பக்கவலை! மறந்திருந்தது. மறுபடி ஞாபகப் படுத்தி விட்டீர்கள். வேகமாப் புத்தகங்களை முடிக்கணும்!!

  ReplyDelete
 4. அமெரிக்காவில் இருந்த வரை கொண்டாட்டம் தான்; டி.வி.யில் இந்த டிசம்பர் 22 - பற்றி நிறைய காட்சிகள் பார்த்திருக்கிறேன். 'ஒரு காலும் நடக்கப் போவதில்லை' என்பது சர்வ நிச்சயமாக நமக்கு மட்டும் தெரிந்த மாதிரியான தைரியத்தில், 'நடக்கப்போகிறது, நடக்கப் போகிறது' என்று மற்றவர்கள் அலமந்து செய்கிற முன் ஜாக்கிரதை நடவடிக்கைகள் பார்க்க பார்க்க தமாஷாக இருக்கும்.

  எனது 'பார்வை' தொடரில் கூட இந்த டிசம்பர்-22 பற்றி ஒரு வரி குறிப்பிட்டிருப்பேன். யாராவது 'என்ன இந்த டிசம்பர்-22?' என்று கேட்பார்களோ என்று எதிர்பார்த்திருந் தேன். ஆனால் யாரும் அதைக் கண்டு கொண்டதாகவேத் தெரியவில்லை. இப்படிக் கண்டு கொள்ளாத சமாச்சாரங்கள் இன்னும் நிறைய இருக்கு அந்தத் தொடரில்.

  ReplyDelete


 5. ஒரு சமாசாரம் சொல்லணும்
  எனக்கு வயது ஆறு ஆகும்போதே இப்படி ஒரு நினைப்பு தோணிக்கிண்டு தான் இருக்கு.
  தேகம் அனித்யம் மரணம் நிச்சயம் சிவனை மறவாதிரு மனமே
  என்பார்கள்.
  ஒரு தனி மனிதன் தான் இறப்பான். மனுசன் ஆஸ் எ மான் கைண்ட் இருப்பான் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்.
  இருக்கிறேன். ஆனால் இருப்பேனா என்று சொல்ல முடியவில்லை.

  இன்று சி.என்.என்.பத்திரிகையில் ஒரு இருபது உயிரினங்கள் நம்ம ப்ளானட்லேந்து வெகேட் பண்ற நாள் வந்துடுத்து
  என்கிறார்கள்.

  எதெல்லாம் பரிணாம வளர்ச்சிலே முழுமை ஆகிவிட்டதோ அவையெல்லாம் அம்பேல் ஆகிவிடும் என்று ஒரு சாரார்.
  அவங்களும் சயண்டிஸ்ட் தான் சொல்றா.

  அப்ப மனுசன் இன்னும் முழுமை அடைந்துவிட்டானா. அல்லது இப்ப இருக்கற மனுசனை விட ஒரு அதீத
  சக்தி கொண்ட மனுசன் வருவானா ?

  அப்படி வர சாத்தியம் இல்லை எனின் ,
  மனுசனும் அம்பேல் ஆகப்போறானோ ! தெரியல்லையே

  டிசம்பர் 22 தேதியா ?
  கிழவி ! அந்த பதிவர் கூட்டத்திலே போத்தின பொன்னாடைய இன்னொரு தரம் போத்திண்டு பார்க்கறேன்.
  அதக்கொண்டு வா.

  மேலும் விவரங்க்களுக்கு
  இங்கே வந்து படிக்கவும்.
  http://arthamullavalaipathivugal.blogspot.com
  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 6. 12-12- 12 ல்தானே உலகம் அழியப்போறதா படிச்சேன். நீங்க கொடுத்தலிங்கும் படிச்சுட்டு வரேன்

  ReplyDelete
 7. அப்படியா... இப்படி ஒவ்வொரு தடவையும் ஏதாவது சொல்லிட்டு தான் இருக்காங்க!

  இதெல்லாம் நினைச்சு கவலைப்பட முடியாதும்மா... இல்லையா...

  ReplyDelete
 8. சுப்புத்தாத்தாவின் பின்னூட்டம் டாப்.

  டிசம்பர் 22ல் உலகம் அழியத்தான் போகிறது. டிசம்பர் 23ம் தேதிப் பேப்பருக்கு இப்பொழுதே சொல்லி வைக்கவும்.

  ReplyDelete
 9. டிச 22ல் ஸ்ரீரங்கம் வரலாம்னு ஒரு எண்ணம் :)

  ReplyDelete
 10. //எதெல்லாம் பரிணாம வளர்ச்சிலே முழுமை ஆகிவிட்டதோ அவையெல்லாம் அம்பேல் ஆகிவிடும் என்று ஒரு சாரார்.//

  டிசம்பர் 22 விஷயம் வேறு, பரிணாம வளர்ச்சி வேறு என்கிற புரிதலில், சூரி சார் சொல்லியிருப்பதில் சில சந்தேகங்கள்:

  திசை திரும்பாமல், மீண்டும் டிசம்பர் 22க்கு வந்தால் சந்தோஷம்!

  பரிணாம வளர்ச்சியில் முழுமை என்று கூட ஒன்று உண்டா, என்ன?

  ஒன்றின் வளர்ச்சிப் போக்கில் ஏற்படும் மாற்றம் தானே பரிணாம வளர்ச்சி?

  ஒன்று இருந்து கொண்டே மாற்றத்தை தன்னுள் கொண்டு இன்னொன்று ஆவது.

  அந்த இன்னொன்றுக்கு மிக நெருங்கிய ஆதி அந்த ஒன்று.

  அந்த ஒன்றும் அதற்கு முன்னாலிருந்த இன்னொன்றின் பரிணாம வளர்ச்சி தான்.

  வாழை சரியான உதாரணம்.

  அந்த வாழையடி வாழையின் வளர்ச்சிப் போக்கில் ஏதாவது மாற்றம் ஏற்படின் வாழை மாதிரியே தோற்றம் அல்லது அதிலும் சிறு மாற்றம் கொண்டு இன்னொன்று ஆகும் பொழுது இன்னொரு பெயரில் அழைக்கப்படுகிறது.

  வாழை ஒன்று இருப்பதினால், கல் வாழை என்ற ஒன்று இல்லாமல் போகவில்லை.

  ஒன்றின் பயன்பாடு அறவே அற்றுப் போகையில், அவை புழக்க வட்டத்திலிருந்து விடுபட்டுப் போகலாம்.

  இது உயிரினங்களுக்கும் பொருந்தும், உயிரற்றவைகளுக்கும் பொருந்தும்.

  நளன் - தமயந்தி காலத்தில் கேள்விப்பட்ட அன்ன பட்சியை இப்போது காணோம்.

  நயா பைசா காணவே காணோம்; நாளை நாலணாவிற்கும் இந்த கதியே!

  பயன்பாட்டு வட்டத்திலிருந்து விலகிப்போய் அவை பயன்பாடு அற்றவைகள் ஆகி மரணிப்பதை வழக்கொழிந்து போதல் எனலாம்.












  ReplyDelete
 11. என்னிக்கோ ஒரு நாள் போகத்தான் போறோம்... அது எப்பவா இருந்தா என்ன....

  ஆரம்பம்னு இருக்கற எல்லாத்துக்கும் முடிவுன்னு ஒன்னு உண்டு

  ReplyDelete
 12. பரிணாம வளர்ச்சியில முழுமை உண்டா... என்னா கேள்வி! ஆகா ஜீவி சார்.. என்னமா யோசிச்சிருக்கீங்க..

  ReplyDelete


 13. ஜீவி சாரே !!
  ஜீவன் உள்ளதெல்லாமே
  ஜீவிதமாய் தன்னுள்ளே இருக்குமொன்றை
  சக்ஸஸ்ஃபுல்லா காபி செய்து அதையும்
  தன்னுள்ளே இயங்கச்செய்யும்
  திறனையும் அதற்குக் கொடுத்திருக்கானே
  அந்த ஆண்டவன் !
  அவனுக்கு முதற்கண்
  வணக்கம், நன்றி நமஸ்காரம் சொல்லிவிட்டு
  உங்களுக்கும் ஹலோ ஹௌ ஆர் யூ கேட்டுவிட்டுப்
  பதிலை தொடங்க்குவோம் !!

  ( அது சரி !! கீதா அம்மா இந்த பதிவை ஒரு
  ந்யூஸ் ஐடத்துக்கு சாதாரண மனிதன்
  ( அரசாங்க மொழியிலே ஆம் ஆத்மி)
  எப்படி ரீ ஆக்ட் பண்ணுவான், பண்ணுகிறான் என்பதைத்தானே
  சொல்லியிருக்கிறார்கள்.) அதே த்ரெட் லே தான் நம்ம
  பின்னூட்டம் இருக்கணும் அப்படின்னு நினச்சதனாலே தான்
  எழுதினேன். என்னுடைய பதிவும் அதுபோலவே எழுதியிருக்கிறேன்.
  அடடா !! எத்தனை நாள் ! இல்லை மாதம் !! இல்லை வருடம் ஆகிவிட்டது
  நீங்கள் என் பதிவுக்கு வந்து ? நான் உங்க பதிவுக்கு வரலாம். அப்பப்ப
  வந்துகொண்டு தான் இருக்கிறேன். உங்க கதையை விட உங்களுடைய
  கதை சொல்லும் நடை இதமாக இருக்கிறது.ஒரு மிடில் க்ளாஸ் குடுமபங்களில்
  மனித் இதயங்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறீர்கள். இருந்தாலும் அது ஃபிக் ஷன்
  இந்த ஃபிக் ஷனில் மனசு நிக்காது. நீங்க சொல்லும்போதே என் மனசு
  எண்டுக்கு போயிடும். என்ன சொல்லப்போறேள் என்பதை ஒரு அளவுக்கு
  தோணிடும். அப்பரம் அதிலே இண்டரஸ்ட் போயிடும். சயிண்டிஃபிக்
  ஃபிக்ஷன் வேற சமாசாரம். டிரான்ஸ்ஃபார்மர் மாதிரி. ) இப்போதைக்கு
  நான் எப்பவும் போல சீரியஸாவும் பேசணும் அதில் கொஞ்சம் யதார்த்தமும்
  இருக்கணும். கூட இருக்கறவாளையும் கூட்டிண்டு போகணும்.

  இந்த பதிவின் பின்னூட்டத்திலே ரொம்ப பெரிசா பரிணாம வளர்ச்சிலே
  எனக்குப் புரிஞ்ச விசயங்க்ளை எல்லாம் எடுத்து சொல்லலாம். ஆனால்,
  இந்த காலத்து குழந்தைகள் அஞ்சாவதிலேயே நான் பி.யூ.சிலே படிச்சதெல்லாம்
  புட்டு புட்டு வைக்கறாங்க்க.

  ஆஹா !! பரிணாமம் என்றால் என்ன அப்படின்னு கேட்டா, த அண்டர்ஸ்டாண்டிங்க்
  இஸ் டிஃபரண்ட் ஃப்ரம் த ப்ளேன் ஆஃப் எக்ஸிஸ்டென்ஸ். ஃப்ரம் ஒன் இண்டிவிடுவல்
  டு அனதர்.

  இதெல்லாம் இங்க் டிஸ்கஸ் பண்ணினா, கீதா அம்மா ஹூம் ஐ ரெஸ்பக்ட்
  வெரி மஸ் பிடிக்குமா பிடிக்காதா அப்படின்னு எனக்குத் தெரியல்ல.

  அதனாலே உங்களுக்கு தனியா எழுதறேன்.

  இருந்தாலும் ஒண்ணு சொல்லணும்.
  டிசம்பர் 12 தேதியோ 22 தேதியோ, ( குழந்தைகளுக்கு க்ரிஸ்மஸ் லீவு விட்டப்பரம் வந்தா நன்னா இருக்கும்)
  அந்த உலகம் அம்பேல் ஆயிடும் என்னு வச்சுக்கிட்டாலும், அதக்கப்பறம்,
  உலகம்னு ஒண்ணு, ( எகைன், உலகம்னு நினைக்கிறது இந்த பூமியா, அண்டமா அதுவேர இருக்கு)
  இருக்கத்தான் செய்யும். பாஸிபிலி இன் எ டிஃபரண்ட் ஃபார்ம்.

  கடைசியா, கீதா அம்மா கொடுத்திருக்கிற லிங்க் எல்லாமே ஹாவ் எ சயிண்டிஃபிக் ஃபிக்ஷன் மாதிரி
  நடக்கலாம். நடக்க முடியுமா ?
  தெரியல....குட் ஹாப்பன் ஹியர் அண்ட் தேர். பட் நாட் எவரி வேர்.

  கீதா அம்மா, நீங்க இத உங்க் பதிவிலே பின்னுட்டமா போடறது உங்க டிஸிஷன்.
  அம்புடுதேன்.

  ஆமா, நீங்க் இப்ப இந்தியா வந்தாச்சா ?

  சுப்பு தாத்தா.




  ReplyDelete
 14. சுப்புவின் பின்னூட்டமும் , ஜீவியின் கேள்வியும், நிறையவே யோசிக்க வைக்கின்றன அழிவு என்பது இன்னொரு ஆக்கத்தின் தொடக்கமே.
  அந்த தொடக்கத்தில் நாமும் இருப்போம். பிறகென்ன -- பார்க்கலாம். நடப்பது நடக்கட்டும்

  ReplyDelete
 15. 1962 - ஜனவரியில் அஷ்ட க்ரிஹச் சேர்க்கையின் போதும் , இவ்வாறெல்லாம் பேசப்பட்டது ; அப்போது திருச்சி St Joseph college - Maths dept .ல் இ ருந்த கணிதப்பேராசிரியர் ( Calculus ஸ்ரீனிவாசன் ? ) இவ்வாறு கூறினார் .."உலகம் அழியாது என்று கூறுபவனே புத்திசாலி, ஏனென்றால் , அப்போது தான் ஒன்றும் ஆகவில்லை என்றால் , நான் அப்போதே கூறினேன் என்று கூறி பெருமைப்படமுடியும் ! "- மாலி .

  ReplyDelete
 16. வாங்க வல்லி, லிங்கை முழுசும் படிங்க, பொறுமையா. நாங்க ஒரு வாரமா இதைப் பத்திப் பேசிட்டோம்.:))) போரடிச்சுப் போய் இப்போ முறுக்கு சாப்பிட்டுட்டு இருக்கோம். :)))))

  ReplyDelete
 17. ஹாஹா, ஸ்ரீராம், அது!!!!!!!!!!! ஊறுகாய்க் கம்பெனிக்காரங்களுக்குத் தெரியாமல் இருக்குமா என்ன? :))))))

  ReplyDelete
 18. மெதுவா மனசிலே வாங்கிண்டு நிதானமாவே படிங்க. அதிலே ராஜ்சிவா அடிக்கடி அதிர்ச்சி, தூக்கி வாரிப் போடும்னு எல்லாம் பயமுறுத்தினார்; எனக்கு அப்படியெல்லாம் பயம் வரலை! அதான் கொஞ்சம் ஏமாற்றம். பயப்படறாப்போல எதுவுமே இல்லையேனு. மேலும் இவர் சொல்லி இருக்கும் சில குறிப்பிட்ட செய்திகள் "தெய்வத்தின் குரலில்" பரமாசாரியார் குறிப்பிட்டிருக்கார். சிவா என்னும் அடையாளம், மற்றும் மாயன்களுக்குத் தமிழன் கற்றுக் கொடுத்தான் என்பது; அங்கேயும் இந்து கலாசாரம் பரவி இருந்தது எல்ல்ல்லாமே........ எந்த பாகம்னு நினைவில் இல்லை. :((( தேடணும்.

  ReplyDelete
 19. வாங்க ஜீவி சார், உங்க பார்வை தொடரில் டிசம்பர் 22 பார்த்த நினைவு இருக்கு. அதன் முக்கியத்துவமும் தெரிஞ்சும் அதைக் குறித்துக் கேட்கத் தோன்றவில்லை. கதைப் போக்கிலே அதை மறந்திருக்கேன். நீங்க சொல்றாப்போல் தமாஷாகவே இருக்கிறது தான்.

  ReplyDelete
 20. எதெல்லாம் பரிணாம வளர்ச்சிலே முழுமை ஆகிவிட்டதோ அவையெல்லாம் அம்பேல் ஆகிவிடும் என்று ஒரு சாரார்.
  அவங்களும் சயண்டிஸ்ட் தான் சொல்றா.//

  சூரி சார், வருகைக்கு நன்றி. அருமையான சிந்தனை சூரி சார். நம்மை விட அதிக சக்தி படைத்த மனிதன் வருவானா? பார்க்கலாம். இப்போ ஆங்காங்கே ஏற்படும் இயற்கைச் சீற்றங்களுக்கெல்லாம் இதான் காரணம்னு ஒரு சாரார் சொல்வதாகவும் கேள்விப் பட்டேன். லூசியானா புயல், சில நாடுகளில் ஏற்பட்ட சமீபத்திய பூகம்பங்கள் போன்றவை. சிவகாசி வெடி விபத்தை நல்ல வேளையா அதுக்குக் காரணமாச் சொல்லலை. :))))

  ReplyDelete
 21. சூரி சார், பொன்னாடை போர்த்திண்டாச்சா? :))))

  ReplyDelete
 22. லக்ஷ்மி, நிதானமாப் படிச்சுட்டு வாங்க. :))))

  ReplyDelete
 23. இதெல்லாம் நினைச்சு கவலைப்பட முடியாதும்மா... இல்லையா...//

  கவலையெல்லாம் இல்லை வெங்கட். அமெரிக்காவில் உள்ள பெரிய எரிமலைகள் வெடிச்சு அமெரிக்கக் கண்டமே முழுகப் போகுதுனும், அதனால் ஏற்படும் சுநாமியாலே மற்றக் கண்டங்கள் முழுகும்னு சொல்லிட்டு இருக்காங்க. பிள்ளையும், பெண்ணும் அங்கே தான் இருக்காங்க, தெரியுமா, தெரியாதானு கேட்டுக்கலை.

  ம்ம்ம்ம்ம் டென்வரில் சில குறிப்பிட்ட மனிதர்கள் மட்டும் தப்பிச்சுக்கச் சுரங்கம் தோண்டி வைச்சிருக்காங்களாம். அங்கே ஒரு நகரமே நிர்மாணிக்கப்பட்டிருக்காம். அது எப்படி அவங்க மட்டும் தப்புவாங்க?? சத்ய விரதனுக்கு மஹாவிஷ்ணு அனுப்பின படகு மாதிரியோ? இருக்கும், இருக்கும். :P:P:P

  ReplyDelete
 24. அப்பாதுரை, டிசம்பர் 23-ந்தேதி பேப்பருக்கு ஏற்கெனவே பணம் கட்டியாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! :))))) நீங்க வாங்க, மைசூர்பாகு ரெடியா இருக்கும். :)))))))

  ReplyDelete
 25. நல்ல விளக்கம் ஜீவி சார். இதன் மூலம் எங்களுக்கும் பல விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியும். நன்றி.

  ReplyDelete
 26. எல்கே, அது சரி. ஆனால் மனசையும் தயாரா வைச்சுக்கணும் இல்லையா?

  ReplyDelete
 27. அப்பாதுரை, மூணாவது(?) பின்னூட்டத்துக்கு நன்னி ஹை. நல்ல கேள்வி தான். இல்லையா?

  ReplyDelete
 28. இதெல்லாம் இங்க் டிஸ்கஸ் பண்ணினா, கீதா அம்மா ஹூம் ஐ ரெஸ்பக்ட்
  வெரி மஸ் பிடிக்குமா பிடிக்காதா அப்படின்னு எனக்குத் தெரியல்ல. //

  அப்படி எல்லாம் எதுவும் இல்லை, தாராளமாக உங்கள் கருத்தைப் பதிவு செய்யலாம். வரவேற்கிறேன்.



  //கீதா அம்மா, நீங்க இத உங்க் பதிவிலே பின்னுட்டமா போடறது உங்க டிஸிஷன்.
  அம்புடுதேன்.

  ஆமா, நீங்க் இப்ப இந்தியா வந்தாச்சா ?//

  இது அனைவருக்கும் தெரிஞ்சுக்க முடியுமே. நன்றி. பின்னூட்டம் வெளியிடுவதில் எந்தத் தடையும் இல்லை

  யாரைக் கேட்கறீங்கனு தெரியலை. நாங்க மார்ச் மாசம் இந்தியா வந்தோம். ஜீவி சார் ஆகஸ்டில் வந்திருப்பார். :))))))

  ReplyDelete
 29. நன்றி சிவகுமாரன், முதல் வருகை??? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 30. வாங்க மாலி சார், மீண்டும் இங்கே வந்ததுக்கு முதலில் நன்றி. ஆமாம், எட்டு கிரஹ சேர்க்கை பத்திச் சொன்னப்போவும் இப்படித் தான் பேசினாங்க. நான் ஸ்கூல்லே படிச்சுட்டு இருந்தேன். ஸ்கூலெல்லாம் லீவு விட்டாங்க அன்னிக்கு. அதுக்கப்புறம் ஸ்கைலாப் விழப் போறது; அதனால் உலகம் அழியப் போறதுனு ஒரு hype! :)))))ஆக மொத்தம் விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமே இல்லை. :)))))

  ReplyDelete
 31. எல்லாருக்கும் உண்டானது தான் நமக்கும். பார்க்கலாம் என்ன ஆகப்போகிறதென்று....:)

  ReplyDelete
 32. பார்த்துக்கொண்டே இருப்போம்.

  அதுவரை மேயவேண்டியதுதான் முறுக்கும் இருக்கின்றதே சாப்பிடுவதற்கு :)))

  ReplyDelete
 33. இன்னும் மூணு மாதம் பத்து நாள் !!
  செப்டம்பர் 18
  அக்டோபர் 31
  நவம்பர் 30
  டிசம்பர் 21
  மொத்தம் 100

  அம்மா !! கரேக்டா நூறு நாள் வர்றதே !!
  டிசம்பர் 22 ம் தேதி
  நந்தன வருஷம் மார்கழி 7 தேதி தசமி திதி

  அன்னிக்கு சனிக்கிழமை ரேவதி நக்ஷத்திரம்
  சாயந்திரம் 4.13 வரை
  மரண யோகம் வேற ஆச்சே !!
  எம கண்டம் 1 டு 3 போட்டு இருக்கு.

  உலகம் அழியப்போறது'
  காலம்பரயா, மத்யான்னமா, சாய்ரக்ஷையா,
  இவா சொல்றதுக்கு தகுந்தாற்போல
  மரண யோகம் வேற 4 மணி வரைக்கும் அதுக்குள்ளேயே
  எம கண்டம்.

  வாஸுதேவன் திருமூர்த்தி ஸாரே!
  எங்கே போயிட்டேள் !!
  அர்ஜெண்டா வாங்கோ !!

  ஏதாவது ஹோம கர்மாணி
  இதுனால நம்ம நாட்டுக்கு
  ஆபத்து
  வராம் தடுக்கறதுக்கு இருக்கா !!

  யாராவது ப்ரஸ்னம் தெரிஞ்ச்வா
  இருந்தா போட்டு சொல்லுங்க்கோ

  மீனாட்சி பாட்டி,
  ஹஸ்பெண்ட் ஆஃப்
  சீ..சீ...
  வைஃப் ஆஃப்
  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 34. //வாஸுதேவன் திருமூர்த்தி ஸாரே!
  எங்கே போயிட்டேள் !!
  அர்ஜெண்டா வாங்கோ !!

  ஏதாவது ஹோம கர்மாணி
  இதுனால நம்ம நாட்டுக்கு
  ஆபத்து
  வராம் தடுக்கறதுக்கு இருக்கா !!//

  மீனாக்‌ஷி பாட்டி நமஸ்காரம். அதுக்கென்ன பேஷா செஞ்சுட்டா போச்சு! என்ன கொஞ்சம் செலவாகும். அது கெடக்கு! பணம் பெரிசா உசிர் பெரிசா? ஆளுக்கு 10 லட்சம் வெட்டுங்க, போதும் ஜாமாய்ச்சுபிடலாம்! ரிசல்ட்டுக்கு கேரண்டி. (உலகம் அழிஞ்சா கேட்க ஆள் இருக்கபோறதில்லே. உலகம் அழியாட்டி நான்தேன் செஞ்சேன்னு சொல்லிக்கலாம்!))

  ReplyDelete
 35. வாங்க வா.தி. உங்களை வெத்திலை, பாக்கு வைச்சு அழைக்க வேண்டியதாப் போச்சு. :P:P:P:P:P

  //ஆளுக்கு 10 லட்சம் வெட்டுங்க, போதும் ஜாமாய்ச்சுபிடலாம்! ரிசல்ட்டுக்கு கேரண்டி.///

  hihihi நான் ஊரிலேயே இல்லை. நீங்க ஹோமம் செய்யுங்க. மீனாக்ஷிப் பாட்டியும், அவங்க கணவருமா எல்லாச் செலவும் செய்வாங்க. :))))))

  ReplyDelete


 36. பத்து லட்சம் என்ன!
  பத்து கோடி கூட அரேன்ஜ் பண்ணலாம்.
  ஆனா,
  பையில் இருக்கறதோ
  பென்சன் மாசம்
  பத்தாயிரம் தான்.
  அதனால்,
  இப்போதைக்கு
  நாம எல்லோருமே
  நாராயணா நாராயணா
  கோவிந்த கோவிந்தா
  ஹரே ராமா ஹரே க்ருஷணா
  என்று பகவத் நாம
  சங்கீர்த்தனம் பண்ணிண்டு
  இருப்போம்.

  அதைத்தான் இங்கேயும்
  சொல்றா. கீதா அம்மா வலைக்கு வர்றவா
  எல்லாருமே இத
  தினத்துக்கு கொஞ்சம் காதுகொடுத்து
  பத்து நிமிஷம் கேளுங்க்கோ.

  http://youtu.be/TsAWsd-XVOI

  மீனாட்சி பாட்டி.
  பின் குறிப்பு: சித்த இருங்க்கோ !
  துளசி மேடத்திண்டேந்து ஏதோ கால் வரது.
  என்னென்னு கேட்டுட்டு வர்றேன்.

  ReplyDelete
 37. //
  பத்து லட்சம் என்ன!
  பத்து கோடி கூட அரேன்ஜ் பண்ணலாம்.//
  அதுக்கென்ன சார் பொறுமையா வாங்கிக்கலாம்! :P
  (உலகம் அழிஞ்சுட்டா வாங்க இருக்க மாட்டோம்! அழியலைன்னா மெதுவா வந்தாலும் வரும்! என்ன இப்ப?)

  ReplyDelete
 38. கமென்ட் எல்லாம் ச்சும்மா போட்டதுன்னு சொல்லிகிறேன். யாரும் சீரியஸா எடுத்துக்க வாணாம்!
  உலகம் அழியப்போறதா நான் நினைக்கலே. பாரம்பரியமா வந்த நம் காலக்கணக்கு சொல்லாததை மாயன் கணக்கு சொல்லறதா நான் நம்பலை. அப்படியே இருந்தாலும் ஈஸ்வரன் பாத்துக்கட்டும். அவன் முடியணும்ன்னு நினைச்சா நாம் என்ன செய்ய இருக்கு? இன்னிக்கு காலை எழுந்துண்டேன்; இந்த க்‌ஷணம் உயிரோட இருக்கேன். அவ்வளோதான் எனக்குத் தெரியும். அடுத்த க்‌ஷணம் என் கையிலே இல்லைன்னும் தெரியும். நாளை காலை எழுந்துப்பேனான்னு தெரியாது. ஒண்ணும் பிரச்சினை இல்லை.

  ReplyDelete
 39. //கமென்ட் எல்லாம் ச்சும்மா போட்டதுன்னு சொல்லிகிறேன். யாரும் சீரியஸா எடுத்துக்க வாணாம்! //

  ஹிஹிஹி, யாருமே சீரியஸா எடுத்துக்கலைங்கறதை இங்கே உள்ள பின்னூட்டங்களே சொல்லுமே! ஆனால் அந்தக் கட்டுரைகளில் பல முரண்கள், பல சந்தேகங்கள். அதை முன்னெடுக்க வேண்டாம், அது பத்தி விவாதம் வேண்டாம்னு தோணுது. அவ்வளவே.

  ReplyDelete
 40. //ஒண்ணும் பிரச்சினை இல்லை.//

  எனக்கும் இல்லை.

  லோகா ஸமஸ்தா:
  ஸுகினோ பவந்து.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete

 41. சுப்புதாத்தா பொன்னாடை போத்தி அழகு அப்புறமும் பாத்துண்டு இருக்கவும் ,அப்பாதுரை ஸ்ரீரங்கம் வரவும் ,ஜீவிசார் டார்வினாகவும் மாலிஅவரோட கிரஹா சேர்க்கை நாடி எல்லாம் பார்த்து நல்லபடி இருந்து பெருமைபட்டுக்கொள்ளவும் , ஐயா ஸ்ரீராமசந்திர பிரபு அடுத்த ஊறுகா பாட்டில் எக்ஸ்பயரி டேட் 2080 ஆ இருக்கவும் இப்போவே வேண்டிக்கறேன்.வேற ஒண்ணுமில்லை அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் தான்:)) போறச்சே ஞாபகம் இருக்க்லன்னா!! ஏற்கனவே சுப்பு தாத்தா கவுண்ட்டௌன் ஆரம்பிச்சாச்சு ஏதோ ராக்கெட்ல போக போறமாதிரி!!ஒன்னு செய்யலாம்னு இருக்கேன் இப்ப. நல்லதுதான் போனா போறது
  . எல்லாருமா சேந்து ஒரேடியா கும்பலோட போடுவோம் கோவிந்தா கோவிந்தோ ன்னு அப்புறம் அவன் கவலை அது:))))))))))). நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா எனும் திவ்ய நாமம். நாம நாமம் போட்டாலும் அவன் நல்லது தான் தருவான் பாவம்.

  ReplyDelete


 42. இன்னும் 99 நாட்களே இருக்கு !!

  ஜெயஸ்ரீ மேடம் சொன்னது தான்
  அழகு.
  ஸர்வ மங்க்ளானி ப்ராப்தி ரஸ்து.

  அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்
  அப்படின்னு அந்தப் பள்ளி கொண்டானைப்
  பாடி மகிழுவோமாக.

  இரண்டு சாய்ஸ்.

  ஒண்ணு க்ரஹஸ்தா பாடறது.
  இன்னொண்ணு சன்யாசிகள் பாடறது.
  http://youtu.be/HLoJktdwNC4

  http://youtu.be/ZUqo5jfiYjo

  அவாவாளுக்கு எது சௌகர்யமோ அதுமாதிரி
  செஞ்ச்சுண்டு நாராயணன் பாதகமலத்திலே
  சரணாகதி அடைவோம்.

  அது சரி !! அது என்ன ஊறுகாய் விஷயம் !!
  கொஞ்சம் சாம்பிளுக்கு அனுப்ப முடியுமா ?

  எனது விலாசம்: ..........
  ......................................
  .......................................

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 43. //உலகம் அழியப்போறது'
  காலம்பரயா, மத்யான்னமா, சாய்ரக்ஷையா,

  "it's 5 O'clock somewhere" - Jimmy Buffett

  ReplyDelete
 44. //ஆனால்,
  இந்த காலத்து குழந்தைகள் அஞ்சாவதிலேயே நான் பி.யூ.சிலே படிச்சதெல்லாம்
  புட்டு புட்டு வைக்கறாங்க்க.

  உண்மை. மிகவும் ரசித்தக் கருத்து சுப்பு சார்.

  ReplyDelete
 45. //ஏதாவது ஹோம கர்மாணி
  இதுனால நம்ம நாட்டுக்கு
  ஆபத்து
  வராம் தடுக்கறதுக்கு இருக்கா !!

  லோகமே அழியுறப்போ நாட்டுக்கு நல்லது நினைக்கிறோமே? பந்தம்.

  ReplyDelete
 46. கிரக சேர்க்கையின் போது உண்டான சாத்தான் கரு உருவாகி ஆளாகி இப்போ தயாரா இருக்கான்.. (சே, இதுக்குக் கூட இருக்காள்னு சொல்ல வரமாட்டேங்குதே?)

  ReplyDelete
 47. //எல்லாருமா சேந்து ஒரேடியா கும்பலோட போடுவோம் கோவிந்தா கோவிந்தோ ன்னு அப்புறம் அவன் கவலை அது:))))))))))). நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா எனும் திவ்ய நாமம். நாம நாமம் போட்டாலும் அவன் நல்லது தான் தருவான் பாவம்.//

  உண்மைதான் ஜெயஸ்ரீ, எல்லாருக்கும் உள்ளது தானே நமக்கும். இந்த லிங்கைப் படிக்காதவங்க இருந்தால் படிச்சுக் கருத்துச் சொல்லட்டும்னு தான் என் எதிர்பார்ப்பு. சுப்புத் தாத்தா சொன்னாப்போல் ஒரு சாதாரண செய்தியாகவே கொடுத்திருக்கிறேன்.

  ReplyDelete
 48. //it's 5 O'clock somewhere" - Jimmy Buffett//

  அது சரி அப்பாதுரை, அமெரிக்க நேரமா, இந்திய நேரமா, ஐரோப்பியநேரமானு சொல்லலையே?? :)))))))



  //கிரக சேர்க்கையின் போது உண்டான சாத்தான் கரு உருவாகி ஆளாகி இப்போ தயாரா இருக்கான்.. (சே, இதுக்குக் கூட இருக்காள்னு சொல்ல வரமாட்டேங்குதே?)//

  ஹிஹிஹிஹி, ஜூப்பரு!

  ReplyDelete
 49. இது என்னய்யா மனுஷனை நிம்மதியா சீரியல் பாக்கவிடாம படுத்தறாங்களேன்னு என் பொண்ணோட நெய்பர் சொன்னாளாம். அங்க எல்லாத்தையும் அலசி ஆரய்ஞ்சு காயப் போட்டு மறந்தும் போயிட்டாளாம்.
  நமக்கு இருப்பது நம்பிக்கையும் நாராயண நாமமும். கல்லில் கட்டிக் கடலில் இட்டாலும் நற்றுணையாவது நாதன் நாமம் நம்ச்சிவாயவேன்னும் சொல்லியாச்சு. பிறகென்ன கவலை:)

  ReplyDelete
 50. லிங்க் புடிச்சுப் போய்ப் பார்த்து, அப்புறம் அண்ணன் அனுப்பிய நூறு பக்கங்களையும் படித்துப் பார்த்து,
  பெரிய சந்தேகம் வந்தது. டிசெம்பர் இருபத்தொன்றா அல்லது மார்கழி இருபத்தொன்றா. இரண்டும் ஒரே தேதி கிடையாது. நூறு பக்கங்களில் இந்தக் குழப்பம் தெரிகிறது. உலகம் தோன்றி இருபது கோடி வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதற்குள் எவ்வளவோ இருபத்தாறாயிரம் ஆண்டுகள் வந்து போயாச்சு. ஒன்னும் ஆகலை - இப்போ இந்த இரண்டாயிரத்துப் பன்னிரெண்டாம் ஆண்டில்தான் ஏதோ நடந்துவிடப் போகிறதா? எனக்கு அப்படித் தோன்றவில்லை!

  ReplyDelete
 51. வாங்க வல்லி, அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. நம்ம கணக்கு இன்னமும் வரலை.

  ReplyDelete
 52. வாங்க கெளதம் சார், இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டாமோ, நேத்திக்கு மக்கள் தொலைக்காட்சியிலே இந்தக் கட்டுரைகள் அப்படியே வரிக்கு வரி, விளக்கங்களோட காட்டினாங்க. :)))))நான் இதை எல்லாம் நம்பலை. சும்மா ஒருத்தர் அனுப்பின ஃபார்வர்ட் மெயிலில் சுட்டி இருந்தது. பகிர்ந்தேன். :))))

  ReplyDelete
 53. டிசம்பர் இருபத்தொன்றாம் தேதிக்கான திருப்பாவைப் பாடல், "மாயனை மன்னு வட மதுரை மைந்தனை" மாயன் இனத்தவருக்கும் இதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ? :))

  ReplyDelete
 54. அரிசி பருப்பு கூட அதுவரைதான்
  வாங்கிவைத்துள்ளோம்
  அவசியப்பட்டால் பிறகு வாங்கிக் கொள்வோம் என்று
  எங்கள் கெட்டிக்காரத்தனம் எப்படி ?
  சுவாரஸ்யமான பதிவு
  சொல்லிச் சென்றவிதம் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 55. ஹலோ கீத் சாம்ஸ்,
  இந்த வயசான பா(ர்)ட்டிகளோட இதே பிரச்னை, அது அழியப் போகுது, இது அழியப் போகுது...அடடாடாடாடா..ஸ்ஸ்ஸ்..

  பேரன் பேத்திகளுக்கெல்லாம் புது வருடம்,பொங்கல்'க்கு துணிமணிகள் எல்லாம் எடுத்தாச்சான்னு முதல்ல தொலைபேசி உறுதிப்படுத்தவும்..டிசம்பர் 21 காய்ச்சலில் மறந்து விட்டால், அவர்கள் எல்லாம் சேர்ந்து புதுவருடம்,பொங்கலில் காய்ச்சல் வர வைத்து விடுவார்கள்..

  அப்புறம் ரொம்ப நாட்களாகச் சொல்கிறேன்..பதிவின் வார்ப்புருவை மாற்றவும்..கமண்டி'யவர்கள் யார் என்பது முதல் பக்கத்தில் தெரிவதேயில்லை. :((

  ReplyDelete