மேல்நாடுகளிலேயே இல்லாத ஒன்றை இந்தியா கொண்டு வரப்போகிறது. இனிமேல் இந்த மாதிரியான உரையாடல்களைக் கேட்கலாம்.
மனைவி: தீபாவளிக்குப் பட்டுப் புடைவை எடுத்துத் தாங்க.
கணவன்: அதெல்லாம்முடியாது. உனக்குத் தான் சம்பளம் தரேன் இல்லை? வேணும்னா போனஸ் மாதிரி ஏதானும் போட்டுக் கொடுக்கிறேன். அதிலே இருந்து வாங்கிக்க. உனக்குச் சம்பளம் வேறே கொடுத்துட்டு இன்னும் பட்டுப்புடைவை வேறேயா?
மனைவி: என்னங்க, இன்னிக்கு எனக்கு உடம்பு சரியில்லை, சமைக்க முடியலை. வெளியிலே ஏதானும் சாப்பிட்டு எனக்கும் வாங்கிட்டு வாங்க.
கணவன்: என் வரைக்கும் சாப்பிட்டுக்கறேன். எத்தனை நாள் உடம்பு சரியில்லாமல் படுத்திருப்பேனு சொல்லு. சம்பளம் அத்தனை நாள் பிடிக்கணும். அதுக்குச் சட்டம் என்ன சொல்லுதுனும் பார்த்து வைச்சுக்கணும். உனக்கு வேணுங்கற சாப்பாடை உன் சம்பளப் பணத்திலே இருந்து வாங்கிக்கோ. இங்கே நீ சமைக்கிற சாப்பாடைச் சாப்பிடறதுக்கும் கணக்கு வைச்சுக்கணும். மறந்துடப் போறேன். உன் சம்பளத்திலே சாப்பாடு சேர்த்தியா இல்லையானு பார்த்து வைச்சுக்கணும்.
மனைவி: தீபாவளிக்குப் பட்டுப் புடைவை எடுத்துத் தாங்க.
கணவன்: அதெல்லாம்முடியாது. உனக்குத் தான் சம்பளம் தரேன் இல்லை? வேணும்னா போனஸ் மாதிரி ஏதானும் போட்டுக் கொடுக்கிறேன். அதிலே இருந்து வாங்கிக்க. உனக்குச் சம்பளம் வேறே கொடுத்துட்டு இன்னும் பட்டுப்புடைவை வேறேயா?
மனைவி: என்னங்க, இன்னிக்கு எனக்கு உடம்பு சரியில்லை, சமைக்க முடியலை. வெளியிலே ஏதானும் சாப்பிட்டு எனக்கும் வாங்கிட்டு வாங்க.
கணவன்: என் வரைக்கும் சாப்பிட்டுக்கறேன். எத்தனை நாள் உடம்பு சரியில்லாமல் படுத்திருப்பேனு சொல்லு. சம்பளம் அத்தனை நாள் பிடிக்கணும். அதுக்குச் சட்டம் என்ன சொல்லுதுனும் பார்த்து வைச்சுக்கணும். உனக்கு வேணுங்கற சாப்பாடை உன் சம்பளப் பணத்திலே இருந்து வாங்கிக்கோ. இங்கே நீ சமைக்கிற சாப்பாடைச் சாப்பிடறதுக்கும் கணக்கு வைச்சுக்கணும். மறந்துடப் போறேன். உன் சம்பளத்திலே சாப்பாடு சேர்த்தியா இல்லையானு பார்த்து வைச்சுக்கணும்.
:-)))))))) தூள் கிளம்புறிங்க தலைவி ;)
ReplyDeleteஹிஹிஹி, கோபி, ட்ரெயினிங்க் எடுத்து வைச்சுக்குங்க எதுக்கும்! :))))))))
ReplyDeleteசட்டம் என்று இல்லை, மேலை நாடுகளில் இல்லத்தரசிகள் (சமீபமாக இல்லத்தரசர்கள்) என்றால் மாதம் இத்தனை "சம்பளம்" என்ற கணக்கு எப்பொழுதுமே இருந்து வந்திருக்கிறது. விவாகரத்தின் போது மட்டுமே வெளிவருகிறது. இந்தியாவிலும் அப்படி ஒரு பார்முலா இருக்கும் என்றே நினைக்கிறேன்.
ReplyDeleteஇந்த சட்டம் வருதுன்றீங்களே.. ஆ! நான் காண்பதென்ன கவனா அல்ல நனவா?
அப்படி வந்தாலும் பத்து பைசாவுக்குக் கூட புருஷனை (அல்லது பெண்டாட்டியை) நம்பி இருக்க வேண்டிய அவலம் ஒழியத்தான் இந்தச் சட்டம் பயன்படுத்தப்படும் என்று நம்புவோம்.
மறுபக்கம் ???!!!
ReplyDeleteபோர போக்கைப்பாத்தா இப்படில்லாம்தான் நடக்கும் போல இருக்கு.
ReplyDeleteவெட்டி வேலை
ReplyDelete@அப்பா துரை..
வந்தால் குடும்ப வன்முறை சட்டம் மாதிரி தவறாக உபயோகப்படுத்தப்படும். இந்தியாவில் ஒரு சட்டமும் சரியாக உபயோகப்படுத்தப்படவில்லை.
ரொம்ப குறைந்த வருமானம் உள்ளவன் என்ன பண்ணுவான். அர்த்தம் கெட்ட கேனைத்தனமான சட்டம்.
உருப்படியா வேலைகள் நெறைய இருக்கு அதை பார்க்க சொல்லுங்க அரசாங்கத்தை
சட்டமா... வருதா.... எங்கே பார்த்தீர்கள்? நான் ஒன்றும் படிக்கவில்லையே...! என்ன ஸ்கேல் ஆஃப் பே? வருஷா வருஷம் இன்கிரிமென்ட் உண்டா?!
ReplyDeleteசம்பளம் கொடுத்தா மட்டும் சும்மாவா இருக்கப்போறீக..
ReplyDeleteபஞ்சப்படி அலவன்ஸ் காஸ்ட் ஆஃப் லிவிங் இன்டெக்ஸோட அட்டாச் பண்ணச்சொல்வீக
இரண்டே வருசத்திலே ரிவிஷன் வேணும் அப்படின்னு கொடி புடிப்பீக.
லீவு ட்ராவல் கன்செஷன் வேணும்னு வருசத்துக்கு ரண்டு வாட்டி புறந்த வீட்டுக்கு போய்ட்டு வருவீக.
மெடிகல் பெனிஃபிட்ஸ் எங்க அப்பா அம்மாவுக்கும் வேணும் அப்படின்னு சொல்வீக.
இத்தனையும் மிஞ்சிப்போய், எனக்கு அறுபது வயசாயிடுச்சு, நான் வி.ஆர்.எஸ்.கொடுத்தாயிடுச்சு.
இனிமே நீங்க தான் கிச்சன் இன் சார்ஜ் அப்படின்னு சொல்லிட்டு, ஹாய்யா, சொல்வதெல்லாம் உண்மை பாக்க
உட்கார்ந்துடுவீக...
அடேய் கிழவா !! நடப்பெதெல்லாம் நடந்தே தீரும். நீ ஒரு சாட்சி தான் . அதை ப் புரிந்து கொள்.
என்று பக்கத்து வீட்டுக் கிழவன் எனக்கு உசுப்பேத்துவான்.
சுப்பு ரத்தினம்.
( in lighter vein )
ஸ்ரீராம்
ReplyDeleteஉங்கள் வருமானத்தில் பத்தில் இருந்து இருபது சதம்
சாரி. இருபது சதவீதம் என படிக்கவும்
ReplyDeleteReally!??
ReplyDeleteஹா ஹா.
ReplyDeleteசட்டமா.உண்மையான கணவன் மனைவிக்கு இந்தச் சட்டம் வேண்டாம்.ஆட்டம் போடும் கணவன்
சட்டத்துக்குக் கட்டுப்பட மாட்டான்.வைஸ் வெர்சா:)
@ துரை,நிஜமாவா. அமெரிக்காவில் இது உண்டா. பெண்ணை முடுக்கிவிடலாமன்னு பார்க்கிறேன்:)சேச்சே வேண்டாம் மாப்பிள்ளை ரொம்ப நல்லவர்.
ம்ம்ம்... பார்க்கலாம்!
ReplyDeleteவாங்க அப்பாதுரை, அமெரிக்காவில் இருக்கா?? எனக்குத் தெரியலை. இந்தச் சட்டம் வருதுனு பேப்பர்லே ரொம்ப நாளாச் சொல்லிட்டு இருக்காங்க. முந்தாநாள் பேப்பரிலேயும் மறுபடியும் சட்டம் கொண்டுவரப் போவதாய்ச் சொல்லி இருக்காங்க. ஆனால் இது குடும்பம் என்னும் அமைப்பைக் குலைக்கும். பார்க்கலாம்.யாரும் இதைக் கவனிக்கலைனு நினைக்கிறேன்.
ReplyDeleteவாங்க ராஜராஜேஸ்வரி,
ReplyDeleteமறுபக்கம்??? ம்ஹும் அப்படி எல்லாம் இல்லை. விலை மதிக்க முடியா மனைவியின் சேவைகளுக்கு மதிப்பீடு போட்டுக் கொச்சைப்படுத்தப் போறாங்கனு வேணாச் சொல்லலாம். இப்போதிருக்கும் சூழ்நிலையில் இது தேவையில்லாத ஒன்று. இப்போது பெண்கள் கைகளே ஓங்கியுள்ளன. எங்கோ அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன. இவை நம்மை விட முன்னேறிய மேலை நாடுகளிலும் காணக் கிடைக்கும் ஒன்று. இதற்குத் தனிமனிதனின் நடவடிக்கைகளைத் தான் குற்றம் சாட்ட வேண்டுமே தவிர, இம்மாதிரிச் சட்டங்கள் மூலமெல்லாம் எதுவும் செய்ய முடியாது. ஒருவனின் மன வக்கிரங்கள் தான் காரணம். அதே பென்ணுக்கும் பொருந்தும். கணவனைத் துன்புறுத்தும் பெண்களை என்ன சொல்வது?
வாங்க லக்ஷ்மி, அப்படி நடக்காமல் இருக்கப்பிரார்த்திப்போம்.
ReplyDeleteவாங்க எல்கே, இது வெட்டி வேலை தான். குறைந்த வருமானம் உள்ளவர்கள், கூலித் தொழிலாளி, ஆட்டோ ஓட்டுநர்கள், கறிகாய் வியாபாரிகள் எல்லாம் என்ன பண்ணுவாங்க???? நம் நாட்டிற்கு இது ஒத்துவருமா?
ReplyDeleteஆனால் இந்த அரசு எதை யோசித்துச் செய்கிறது, இதை யோசித்துச் செய்ய?
வாங்க ஸ்ரீராம், உங்க சம்பளத்தில் 30 சதவீதம் கொடுக்கணுமாம். பேசிக் பே என்னனு தெரியலை. டி.ஏ. உண்டா? ட்ராவலிங் அலவன்ஸ் உண்டா? மெடிகல் அலவன்ஸ் உண்டா? லீவ் எடுக்கலாமா? காஷுவல் லீவ் எத்தனை நாள்? சம்பளத்தோடு உள்ள earn leave எத்தனை நாள் எதுவும் தெரியலை. எல்டிசி உண்டானும் தெரியலை. எல்லாம் கேட்டு வைச்சுக்கணும்.
ReplyDeleteதினமலர் பேப்பரிலே வந்தது; ஒருவேளை சென்னை எடிஷனிலே வரலையோ என்னமோ!
வாங்க சூரி சார், ரொம்ப நாளாக் காணோமே? உங்க பின்னூட்டத்தைப் படிக்காமலேயே எல்லாம் உண்டானு கவலைப் பட்டுட்டேன். :))))
ReplyDeleteஹிஹிஹி, எல்லா அலவன்சும் இருக்கானு கேட்டு வைச்சுக்கணும்.
எல்கே, முப்பது சதம்னு படிச்ச நினைவு.
ReplyDeleteஇங்கே இதிலே பத்து முதல் இருபது சதம்னு போட்டிருக்கு. ஆனால் தினமலர்லே முப்பதுனு படிச்ச நினைவு. பேப்பரைக் காணோம். :))))
ReplyDeleteஆமாம் ஜெயஶ்ரீ, பத்திரிகைகள் சொல்லுது.
ReplyDeleteவாங்க வல்லி, ஆட்டம் போடும் மனைவிக்கு என்ன செய்யறது? என்னமோ போங்க! இந்த அரசின் கொள்கைகளே சரியில்லை. :))))
ReplyDeleteவாங்க வெங்கட், முப்பது சதவீதம் எதுக்கும் வைச்சுக்குங்க.
ReplyDeleteTo all Husbands
ReplyDeleteand
Would be Husbands.
please read this.
http://paycommissionupdate.blogspot.in/2012/09/husbands-to-pay-salary-for-household.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed:+blogspot/frCK+%28PAY+COMMISSION%29
I think Madam Geetha Sambasivam had a premonition.
subbu rathinam
வாங்க சூரி சார், மறு வரவுக்கும், சுட்டிக்கும் நன்றி. நாம எப்போவுமே மு.ஜா. மு. அ.
ReplyDeleteஇந்த முறை அமெரிக்காவில் வெளியில் தெரியும் படியாக இல்லை. ஆனால் சாமர்த்தியமாக pre nuptial அக்ரீமென்ட் போட்டுக் கொண்டால் கிடைக்கலாம். :)
ReplyDeleteஅமெரிக்காவில் திருமண வாழ்க்கையில் சம்பாதிக்கும் எல்லாமே community property - 50:50 என்று பிரிக்கப்படும். அதே சமயம் ஆண்/ பெண் பாகுபாடு கிடையாது. சம்பாதிக்காத house husband மனைவியிடம் ஜீவனாம்சம் கேட்கலாம். இதில் எல்லாமே சேமிப்பில் பாதியை வாழ்க்கைத் துணைக்கு சம்பளமாக கொடுப்பதைப் போன்றது தானே.
இந்த சட்டம் இந்தியாவில் ஆண்/பெண் பாகுபாடு இல்லாமல் அமலாகும் பட்சத்தில் நல்லது. இல்லையென்றால் குடும்ப வன்முறை சட்டம் மாதிரி தவறாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்புண்டு.
அட நல்லாக இருக்கிறதே :))))
ReplyDelete