பாலாஜி கல்யாணத்துக்குப் போகணும்னு நினைச்சிருந்தோம். போக முடியாமல் உடம்பு படுத்தல் நிக்கலை. சரி, புதன்கிழமையன்னிக்குப் பார்த்துக்கலாம்னு நினைச்சால் அன்னிக்குனு எங்க ஊர்க் கோயில் பட்டாசாரியார் பெளர்ணமி அன்னிக்கு வரச் சொல்லிட்டார். அதோட பெளர்ணமி, வெள்ளிக்கிழமை எல்லாம் சேர்ந்து வரதாலே அன்னிக்குத் திருநாகேஸ்வரம் போகச் சொல்லியும் ஆர்டர். சரினு பாலாஜி கல்யாணத்துக்கு வரமுடியாதுனு மெயிலிட்டு இருந்துட்டேன். பாலாஜிக்கும் போன் பேசிச் சொல்லிட்டேன். ரிசப்ஷனுக்கு ரெடியாகிட்டு இருந்தார். சரினு ரொம்ப அறுக்காம விட்டுட்டேன். மறுநாள் கல்யாணத்தன்னிக்குக் காலம்பர ஒரு ஃபோன் கால்.
இந்த முறை அம்பியா, அந்நியனானு சஸ்பென்ஸ் வைக்காமல் எடுத்தவுடனேயே, "மாமி, நான் தக்குடு. இன்னிக்குச் சாயந்திரம் உங்காத்துக்கு வரப் போறேன்" அப்படினு ஒரு குரல் போனில். நிஜம்மாவே தக்குடுதானா? சந்தேகமாவே இருந்தது. அம்பி என்ன ஆச்சுனு எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டு, அம்பி நிச்சயமா வரலைனதும், சரி, போனால் போகட்டும்னு தக்குடுவை வர அனுமதி கொடுக்கலாம்னு கொடுத்தேன். கன்டிஷன்ஸ் அப்ளைனும் சொல்லிட்டேன். (ஹிஹிஹி) பின்னே, சென்னைக்கு நூறுதரம் வந்துட்டு, அங்கே அம்பத்தூருக்கு ஒரு தரம் கூட வராதவங்க கிட்டே என்ன சொல்றது? கண்டிஷன்ஸ் அக்ரீட் அப்படினு சொல்லிட்டார். சாயந்திரமே வந்துடறேன்னு சொன்னார். சொல்லிட்டுப் "பொட்". போனை வைச்ச சப்தம். அட்ரஸ் கேட்டுக்கவே இல்லை. இந்தக் காலத்துப் பசங்களுக்கே என்ன அவசரமோனு க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிட்டு வைச்சுட்டேன். அவரைக் கூப்பிடலாம்னா லான்ட்லைனிலே பேசி இருந்தார். நம்பர் அதிலே டயல் பண்ணும்போது வந்திருக்கும். ஸ்டோர் ஆகி இருக்காது. கண்டு பிடிக்கிறதும் கஷ்டம். அதோட, தக்குடு நினைவா, ஞாபகமாத் தன்னோட இந்தியா மொபைலை தோஹாவிலேயே வைச்சுட்டு வந்துட்டேன்னு வேறே சொன்னார். அதனால் தக்குடு நம்பருக்கும் கூப்பிட முடியாது. எவ்வளவு சமர்த்துனு மெச்சிக் கொண்டு ஶ்ரீரங்கம் வந்ததும் கூப்பிடட்டும்னு விட்டுட்டேன்.
சரியா ஐந்து மணிக்குத் திரும்ப ஒரு கால். "மாமி, எங்கே இறங்கறது?"
"சரியாப் போச்சு, எங்கே இருந்து கூப்பிடறீங்க?"
"ஸ்ரீரங்கத்திலே பஸ் ஸ்டான்டிலே இருந்து தான்"
"க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், முன்னாடியே சொல்லக் கூடாதோ"(மனசுக்குள் முணு முணு)
"சரி, அங்கே இருந்து திருச்சி பஸ் இருந்தா அதிலே வந்து அம்மா மண்டபம் இறங்கி வாங்க. எதிரே தான் வீடு. இல்லைனா ஆட்டோவிலே வரலாம்."
"லான்ட்மார்க் என்ன?"
லான்ட்மார்க் சொன்னேன். அப்புறமா வாசல்லே வந்து ஒருதரம் உள்ளே வரலாமா? வாங்க, நாலாவது மாடி. தக்குடுவுக்குத் தூக்கிவாரிப்போட்டது நாலாவது மாடியிலிருந்தே தெரிந்து கொண்டு, அப்புறமா மெதுவா லிஃப்ட் இருக்குனு ஆறுதல் செய்தியும் கொடுத்தேன். நல்லவேளையா வேறே 2,3 நபர்கள் எங்க ஃப்ளாட்டுக்கே வந்துட்டு இருந்தாங்க. ஆனால் அதுக்குள்ளே நம்மவர் என்ன இது? கேட்டு இத்தனை நேரம் ஆச்சு, இரண்டு பேரையும் காணோமே? லிஃப்டிலே மாட்டிக் கொண்டாங்களானு சந்தேகப் பட ஆரம்பிச்சுட்டார். கரன்ட் போயிருந்தது. ஜெனரேட்டர் போட்டால் தான் லிஃப்ட் இயங்கும். சரி அவங்களைக் கீழே போய்ப் பாருனு சொன்னார். அவர் ஜபம் பண்ணிட்டு இருந்தார். ஆகவே நான் கீழே செல்ல ஆயத்தமா வெளியே போக தக்குடு வந்தார், தக்குடு வந்தார், நடந்து நடந்து. கூடவே அவர் மனைவி மிசஸ் தக்குடுவும் வந்தாங்க.
மிச்சம் தக்குடுவோட பதிவிலே தக்குடு எழுதும்போது பார்க்கவும். ஹிஹிஹி.

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இப்படியா பொசுக்குன்னு முடிக்கீறது? இதென்ன புதுசா பகுதிப்பதிவுகள்?
ReplyDeleteஆஹா இப்படி பாதியில் நிறுத்தியாச்சா சரியில்லை
ReplyDeleteஅதானே படிச்சுட்டே வரும்போதே தொடரும் போடலாமா
ReplyDeleteஇதன் மூலம் அறிவிப்பதென்னவென்றால் நான் திருச்சிப்பக்கம் ஒரு தடவை கூட சமீபத்தில் வரவில்லை.
ReplyDeleteநாலாவது மாடியா! ஏறி இறங்கறதே பாடாயிடுமே? (லிப்டு எல்லாம் சரி)
தொடர்கதையா? ச்சே... தொடர்பதிவா? ச்சே அதுவும் சரி இல்லை, பதிவு தொடருமா?! :))))
ReplyDeleteவாங்க வா.தி. ஹிஹிஹி, புதுசு தான். நல்லா இருக்கா?
ReplyDeleteவாங்க எல்கே, ஹிஹிஹி, எது சரியில்லை??
ReplyDeleteவாங்க லக்ஷ்மி, ரொம்பநாளாக் காணலை உங்களை. தொடரும் போடவே இல்லை. தாக்குடு தொடருவார்னு அறிவிச்சிருக்கேன். :))))) அவர் தோஹா போனதும் மிச்சத்தை எழுதுவார்.
ReplyDeleteஅப்பாதுரை, எங்கே? அதான் ஏமாத்திடீங்களே! :(( நாலாவது மாடி தான். ஏறி இறங்கறதெல்லாம் பாடில்லை; கரன்ட் இல்லைனா இங்கேருந்தே போனில் கூப்பிட்டுச் சொன்னால் உடனே ஜெனரேட்டர் போட்டுடுவாங்க. :)))) தைரியமா வாங்க.
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், தாக்குடு என்ன பண்ணப் போறார்னு தெரியலை, தொடரப் போறாரா இல்லையானு. இப்போதைக்குக் கல்லிடையிலே நிம்மதியாத் தூங்கிட்டு இருக்கிறதாக் கேள்வி. :)))
ReplyDelete@ஸ்ரீராம், அப்புறம் ஏதோ எழுத நினைச்சிருக்கீங்க; விட்டுப் போச்சா?
ReplyDeleteஹிஹி.... அதெல்லாம் இல்லை...பின்னூட்டமிட ஐடி கேட்டதால் தொடரும் பொத்தானை அமுக்க முடியாததால் இன்னொரு பின்னூ. போட்டால்தான் அந்தப் பொத்தானை அமுக்க முடியும் என்பதால் மறுபடி என்ன எழுதுவது என்று தெரியாததால் தொடர என்று எழுதாமல் ஒற்றைப் புள்ளி இட்டுத் தொடர்ந்தேன் நான்....!
ReplyDelete@ஸ்ரீராம், அதிமுக கொ.ப.செ.வாக இருந்தீங்களா? எம்ஜிஆர் ட்ரெயினிங்??? எப்படிங்க இப்படில்லாம்?? தொடர் வாக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கியம்??? :)))))))
ReplyDeleteம்ம்ம்... நான் வரும்போதே சொன்னீங்க தக்குடு வந்தாலும் வருவார்னு... வந்தாச்சு... பாக்கி விஷயமெல்லாம் தக்குடு போஸ்ட் போடும்போதுதான் படிக்கணுமா...
ReplyDeleteஸ்.... அப்பப்பா... இப்பவே கண்ண கட்டுதே! :)
கீதா சென்னை பதிவர் திருவிழாவுக்கு போயிருந்தேன் அதான் ரொம்ப நாளா வல்லே வாங்க என் பக்கம்
ReplyDeleteஎன்ன கீதா இத்தனை பதிவுகளை விட்டுவச்ச்சிருக்கேன். தக்குடு வந்துட்டுப் போயாச்சா.!!!
ReplyDeleteநமக்கெல்லாம் ஃபோன் கூடப் பண்ணமாட்டார். அதனால கவலை இல்லை;)
கீத்தாம்மா.. இப்படி ஆட்டத்தைப் பாதியில் உட்டுட்டுப் போறது நல்லால்லை. முழுசும் சொல்லுங்க. உம் கொட்டிட்டே கேக்கறோம் :-)
ReplyDeleteஅம்மா, தக்குடு வந்து பதிவு போடற வரைக்கும்லாம் காத்திருக்க முடியாத்! தொடருங்கள் Pளீs! :) அதோட, அவர் பார்வையில்/பாணியில் அவர் எழுதுவார். உங்கள் பார்வையில்/பாணியில் நீங்க சொல்லுங்க! :)
ReplyDeleteவாங்க வெங்கட், அப்புறம் ஒண்ணும் விஷயம் இல்லை. அதான் எதுவும் எழுதலை. :))))))தக்குடு எழுதுவார். தப்பான இடங்களிலே திருத்தறேன்.
ReplyDeleteவாங்க லக்ஷ்மி, பதிவர் விழாவிலே உங்க ஃபோட்டோவை வல்லியின் பதிவிலே பார்த்தேன். நல்லா வந்திருக்கு. உங்க பக்கம் வந்தேன். இனி இந்த வாரக் கடைசியிலே வரேன். :)))))
ReplyDeleteவாங்க வல்லி, நீங்க எப்போவோ வரீங்க இல்லையா? அதான் சேர்ந்து போகுது. அது சரி, நான் அம்பத்தூரில் இருந்திருந்தா தக்குடு வந்துட்டுப்போனதே எனக்கும் தெரிந்திருக்காது. :))))) இப்போ ஸ்ரீரங்க ரங்கநாதர் தயவால் வந்து திருமுகம் காட்டினார். :)))
ReplyDeleteவாங்க அமைதி, தக்குடு எழுதட்டும்; பார்க்கலாம். என்னதான் எழுதப் போறார்னு.
ReplyDeleteவாங்க கவிநயா, அபூர்வமாத் தான் வரீங்க. தக்குடுவுக்கும் கொஞ்சம் விஷயம் வேண்டாமா?
ReplyDelete