எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, September 19, 2012

பிள்ளையாரே காப்பாத்துப்பா!

இந்த வருஷம் பிள்ளையார் சதுர்த்தி எப்படி நடக்கப் போகிறதோ என்ற கவலை;  ஏனெனில் பதினைந்து நாட்களாகக் கடுமையான மின்வெட்டு.  முதலமைச்சர் வந்துட்டுப் போன அன்னிக்கும் கூட மின்வெட்டு தாராளமாகவே இருந்தது.  ஆகவே கவலைதான்.  பிள்ளையார் சதுர்த்திக் கொண்டாட்டங்களுக்கு எப்போவும் ஒரு வாரம் முன்னாடியே இருந்து அறிவிப்புச் செய்வேன்.  இம்முறை முடியவில்லை. எல்லாத்துக்கும் மேலே டெல்லியிலே என்னோட கடைசி மைத்துனர் உடல்நலம் ரொம்ப மோசமாகப் போய் மைல்ட் அட்டாக் வந்து ஆஸ்பத்திரியில் இருக்கிறதாகத் திங்களன்று செய்தி வந்தது.  உடனே கிளம்பவேண்டி ரெயில், விமானம் எல்லாம் அலசினோம்.  எதிலேயும் இன்னும் ஒரு வாரத்துக்கு இல்லை.  விமானம் ரொம்ப காஸ்ட்லி என்பதோடு இரண்டு இடங்களில் மாறணும். :( பணத்தைப் பார்க்காமல் கிளம்பலாம் என்றால் இது வேறு தொல்லை.  பிள்ளையார் சதுர்த்தியை எப்படிக் கொண்டாடப்போகிறோம்னு புரியாமல் குழப்பம்.  நேற்று எந்தவிதமான ஏற்பாடுகளும் செய்யமுடியலை.  இன்னிக்கோ காலம்பர மூன்றரை மணிக்குப் போன மின்சாரம், நாலரைக்கு வந்து திரும்ப ஐந்தரைக்குப் போய், மறுபடி ஆறரைக்குப் போய், ஒன்பதரைக்கு வந்து பத்தரைக்குப் போய் ஒருவழியா இப்போத் தான் மின்சாரம் வந்து பத்து நிமிடங்கள் ஆகிறது.  இன்வெர்டர் சார்ஜ் ஆகவோ, யுபிஎஸ் சார்ஜ் ஆகவோ, லாப்டாப் பாட்டரி சார்ஜ் ஆகவோ மின்சாரம் கிடைக்கிறதே கஷ்டமா இருக்கு.

ஒரு மாதிரியா இன்னிக்குக் காலம்பரக் கிடைத்த தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழங்களோடு கொஞ்சமாய்க் கொழுக்கட்டையும், வடை, அப்பமும் செய்து பிள்ளையாரைக் கொண்டாடியாச்சு.  பிள்ளையாரோடு ஏகத்துக்குச் சண்டை போடணும்னு நினைச்சேன்.  ஆனால் இந்தமட்டில் நல்லபடியாகக் கொண்டாடும்படி வைச்சதும் அவரால் தானேனு தோணித்து.  அதனால் சண்டையை கான்சல் பண்ணிட்டேன்.  என்னிக்கு எதிலே டிக்கெட் கிடைக்கிறதோ அன்னிக்குக் கிளம்பறோம்.  இப்போக் கொஞ்சம் தேவலைனு கொஞ்சம் நேரம் முன்னாடி தொலைபேசிச் செய்தி வந்தது.  என்றாலும் நாங்க இப்போ இருக்கவேண்டிய இடம் அங்கே தான்.


25 comments:

  1. // சண்டையை கான்சல் பண்ணிட்டேன்//
    போச் போச்!

    ReplyDelete
  2. இனிய பிள்ளையார் சதுர்த்தி தலைவி ;)

    ReplyDelete

  3. உங்க மைத்துனர் நன்னா ஆயிட்டு, நாளே நாள்லே அகத்துக்கு வந்துவிடுவார்.
    கவலைப்படாதேங்கோ..

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  4. எப்படியோ எல்லாத்தையும் நெனச்சபடி விட்டுக்குடுக்காம செஞ்சுடறீங்க.. கத்துக்கணும்.

    ReplyDelete
  5. तथास्थु !
    माली .




    ReplyDelete
  6. பிள்ளையார் அனைவரையும் காக்கட்டும்.

    மைத்துனர் நலன்பெற வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  7. இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. கொழுக்கட்டை நாள் வாழ்த்துகள்.
    மைத்துனர் சீக்கிரம் உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
    கரண்ட் கஷ்டம், மைத்துனர்க் கவலைகள் பற்றியெல்லாம் தெரியாமல் எங்கள் பக்கம் உங்களைக் காணோமே என்று தேடிக் கொண்டிருந்தேன்!

    ReplyDelete
  9. பிள்ளையாரின் அருள் உண்டு. அவர் காப்பாற்றுவார்.

    ReplyDelete
  10. பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. மைத்துனர் அவர்கள் நலமாய் இருப்பார்.
    விநாயகர் நல்ல ஆரோக்கியத்தைக் கொடுப்பார்.

    ReplyDelete
  12. வாங்க வா.தி. பிள்ளையார் உங்களைக்கூட இந்தப் பக்கம்வர வைச்சுட்டாரே! :)

    ReplyDelete
  13. கோபி, நன்றிப்பா. ஒரு பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்கு நீங்க எங்க வீட்டுக்கு வந்ததை ஒவ்வொரு வருஷமும் நினைச்சுப்போம். :)

    ReplyDelete
  14. சுப்புத்தாத்தாவுக்கு நன்றி. கொஞ்சம் தேவலை எனத் தொலைபேசிச்செய்தி வந்திருக்கிறது. மெல்ல மெல்ல முன்னேற்றம் இருக்கிறது என்றார்கள்.

    ReplyDelete
  15. அப்பாதுரை, பல கஷ்டமான நேரங்களிலும் புத்தகப்படிப்பும், வீட்டு வேலைகளுமே என்னை நிலைப்படுத்தி இருந்திருக்கிறது. இரண்டிலுமே நான் ஒருமித்துப் போவதால் வேதனைகளின் தாக்கம் இராது! இதை ஒரு பழக்கமாகவே வைச்சிருக்கேன்.

    ReplyDelete
  16. நன்றி எல்கே.

    ReplyDelete
  17. நன்றி திரு மாலி. விலாசம் மாதங்கிக்கு அனுப்பி இருக்கேன். இந்த வாரமும் அடுத்தவாரமும் ஸ்ரீரங்கத்தில் தான் இருப்போம். ஆகவே தாராளமாக வரலாம். யோசிக்க வேண்டாம். :)

    ReplyDelete
  18. நன்றி மாதேவி, அனைவரின் பிரார்த்தனையால் உடல்நிலை மெல்ல மெல்ல முன்னேற்றம் காண்கிறது.

    ReplyDelete
  19. நன்றி சமுத்ரா அவர்களே.

    ReplyDelete
  20. வாங்க ஸ்ரீராம், மத்தியான நேரம் தான் மூன்று மணி நேரமாவது கணினியில் உட்கார இயலும். அந்த நேரம் மின்சாரம் இருப்பதில்லை. அதிலும் நேற்றுப் பதினைந்து மணி நேரம் மின் தடை. :(((

    மேலும், "உங்கள் ப்ளாக்" ஹிஹி, எங்கள் ப்ளாக் எனக்கு அப்டேட் ஆகவும் ஒரு நாள் ஆகிவிடுகிறது. எப்போதாவது நானாக வந்து பார்ப்பேன். :)))))கொழுக்கட்டை செய்ய எதிர் வீட்டுப் பெண்மணிக்குச் சொல்லிக் கொடுத்தேன். அப்போ உங்களைத் தான் நினைச்சுண்டேன்.

    பேசாமல் கொழுக்கட்டை பிசினஸ் ஆரம்பிச்சுடுனு ரங்க்ஸ் ஆலோசனை கொடுத்திருக்கார். நம்ம கொழுக்கட்டைக்கு நூறு சதவீத காரண்டியும் உண்டு. ஆகையால் மூன்று கொழுக்கட்டை பத்து ரூபாய்னு கொடுக்கலாமானு யோசனை! :))))))

    ReplyDelete
  21. நன்றி ஜீவி சார்.

    ReplyDelete
  22. நன்றி லக்ஷ்மி.

    ReplyDelete
  23. நன்றி கோமதி அரசு.பல்வேறு வேலைகளுக்கிடையிலும் நீங்கள் வந்துவிட்டுப் போவது எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமாகவே இருக்கும் எப்போதும். :)))) என்னால் பல பதிவுகளுக்கும் போக முடியறதில்லை. :(

    ReplyDelete
  24. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் அம்மா. மைத்துனர் விரைவில் நலம் பெற பிரார்த்தனைகளும்.

    ReplyDelete