எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, September 01, 2012

திடீர்னு ஒரு பயணம்!

நேத்திக்கு ஒரு திடீர்ப் பயணமாகத் திருநாகேஸ்வரத்தில் ஒரு பிரார்த்தனைக்குப் போக வேண்டியதா இருந்தது.  பெளர்ணமி, வெள்ளிக்கிழமை சேர்ந்து வந்ததாலும், ராகுகாலத்து வழிபாடுகளாலும் கூட்ட்ட்ட்ட்ட்டமோ கூட்டம்.  உள்ளே ராகுவுக்கு வழிபாட்டுக்கு டிக்கெட் வைச்சிருந்தாங்க.  ஒரு காலத்தில் 25 ரூக்குள் இருந்தது.  எத்தனை பேர் வேணாலும் போகலாம். இப்போ ஒரு நபருக்கு 100 ரூபாய்.  250 ரூக்குக் கொஞ்சம் கிட்டக்கப் பார்க்கலாமாம்.  நூறு ரூபாய்க்குத் தள்ளித் தான் நிக்கணும்.  500 ரூபாய்க்கு இரண்டு பேரை உள்ளே விடறாங்க.  500ரூபாய்க்குக் கிட்டக்க முன்னாடி உட்காரலாம்.  மூன்று குழுவாகப் பிரிச்சு நடத்தறாங்க.  நாங்க போனப்போ முதல் குழு உள்ளே போயிருந்தது.  ஐநூறு ரூபாய் டிக்கெட் வாங்கினால் ஜாஸ்தி காத்திருக்க வேண்டாம், நிற்க வேண்டாம்னு நினைச்சது தப்பு.

அதிலும் காத்திருக்க வேண்டி இருந்தது.  உள்ளே முதல் குழுவுக்கு சங்கல்பம் ஆரம்பிச்சதும் தான் இங்கே கதவைத் திறந்து உள்ளே விடறாங்க.  உள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளே போய்க் கூண்டு மாதிரியான வரிசையில் நின்னு, (திருப்பதி மாதிரி காபி, டீ, டிபன் வரதில்லை, நல்லவேளையா) ஆனால் அங்கேயே சங்கல்பத்துக்கு கோத்திரம், பெயர் எல்லாம் கேட்டுக்கறாங்க.  ஒரு பக்கம் ஏதோ யாகம்; இதிலே சங்கல்பம் வேறே மைக்கிலே.  சத்தம், காற்று இல்லாமல் கஷ்டம், நல்லவேளையா உட்கார பெஞ்ச் இருந்தது.  ஒரு மாதிரிச் சமாளிச்சு உட்கார்ந்து காத்து இருந்து பிரார்த்தனையை இரண்டாவது குழுவில் முடிச்சுக் கொண்டோம்.  அத்தனை பணம் கொடுத்ததுக்கு இரண்டு பேரீச்சம்பழப் பாக்கெட்(தலா நான்கு பேரீச்சைகள்) சின்னதாய்க் கல்கண்டு பாக்கெட் 2, விபூதி அவ்வளவு தான்.  தஞ்சை ஜில்லா இலை வச்சுக் கட்டிய மாலை அரை முழம்.  ஒரு கிள்ளுப் பூக் கிடையாது அதிலே.  அபிஷேஹத்துக்குப் பாலும் கொஞ்சம் போலத் தான் விட்டாங்க.  அத்தனை பேர் கொடுக்கிற பணத்தில் கொஞ்சம் தாராளமாய்ப் பால் வாங்கி விடக் கூடாதோ எனத் தோன்றியது.  சூரிய ஒளியை மறைச்சுட்டதாலே ராகுவின் மேலே  பால் விடுகையில் நிறம் மாறுவது தெரியறதில்லை.

அதுக்கப்புறமா உப்பிலியப்பனைப் பார்த்துட்டு, திருப்பதிக்குப் போக முடியறதில்லை இப்போல்லாம்.  கடைசியாப் போனப்போக் கீழே தள்ளிட்டாங்க, விழுந்துட்டேன். அதிலே இருந்து கொஞ்சம் யோசனை.  ஆகையால் உப்பிலியப்பனைப் பார்த்துட்டு வந்துடறோம்.  பின்னர் அங்கிருந்து எங்க ஊர்க் கிராமத்துக் கோயிலுக்குப் போனோம்.  கருவிலியில் கோயில் மூடிட்டாங்க.  நல்லவேளையா கேர்டேக்கர் இருந்ததாலே திறந்து தரிசனம் பண்ணி வைச்சாங்க.  பின்னர் எங்க ஊர்க் கோயில் பட்டாசாரியார், மாரியம்மன் கோயில் பூசாரி கிட்டே சொல்லி வைச்சிருந்தோம்.  அவங்க இருந்தாங்க.  அம்மன் கோயில் பெளர்ணமி என்பதால் அபிஷேஹமே அப்போத் தான் நடந்தது.  அதுக்கப்புறமா பெருமாளையும் பார்த்துட்டு பட்டாசாரியார் கொடுத்த பிரசாதங்களைச் சாப்பிட்டுட்டுத் திரும்பினோம்.

திரும்பறச்சே கல்லணை வழியா வந்தோம். போறச்சேயும் கல்லணை வழிதான்.  திரும்புகையில் கொஞ்சம் நின்னு படங்கள் எல்லாம் எடுக்கணும்னு நினைச்சேன்.  ஆனால் நேத்திக்குப் பயணம் ரொம்பவே கஷ்டமாப்போயிடுச்சு.  அதிலே ரொம்பவே களைப்பு. கும்பகோணத்திலே வெயில் வேறே தாங்கலை.  சூடு தாங்காமல் உடலெல்லாம் வெந்து போய் எரிச்சல், அரிப்பு, வலி தாங்கலை.  நாங்க போகையிலேயே பார்த்தோம்.  காவிரியில் மணல் எடுக்க ஆயிரக்கணக்கான லாரிகள், லாரிகள், லாரிகள்.  அவை எல்லாம் நாங்க போகையிலே ஒரு பக்கமா நின்னுட்டு இருந்தது.  திரும்புகையில் டிரைவர் தஞ்சாவூர் வழியாப்போகலாம்னு சொன்னதை வேண்டாம் சுத்துவழினு சொல்லிட்டுக் கல்லணை வழியாப் போகச் சொன்னால் மணல் எடுத்துக்கொண்டு திரும்பி வரும் லாரிகள்.  சாலையில் நின்று கொண்டிருந்த மணல் எடுக்கச் செல்லும் லாரிகள் எல்லாம் சேர்ந்து இரண்டு வரிசையாக சாலையை அடைத்துக்கொண்டு போகவும் முடியாமல், வரவும் முடியாமல், இதிலே பள்ளி விட்டுச் செல்லும் குழந்தைகள் சைகிள்களில், பள்ளி வாகனங்கள், கல்லூரி வாகனங்கள். எனக் கும்பகோணத்திலிருந்து திருவையாறு வர வரைக்கும் போதும்டா சாமினு ஆயிட்டது.

வந்து சாப்பிடக் கூட இல்லை. உடனே படுக்கணும் போல இருந்தது.  கொஞ்ச நேரம்  மெயில் பார்க்க உட்கார்ந்தால் உட்கார முடியலை.  போய்ப் படுத்தாச்சு. இன்னும் ஸ்கின் பிரச்னை சரியாகலை.  இரண்டு நாளாவது ஆகும்.  குப்பைமேனியைத் தேடிட்டு இருக்கேன்.  

10 comments:

  1. அடடா...

    பயணத்தில் சில கஷ்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

    கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு போன கோவில் பத்தியெல்லாம் எழுதுங்க....

    கல்லணையில் மணல் திருட்டு... இப்படியே இருந்தா கொஞ்ச வருடங்களில் காவிரியே காணாம போயிடும்!

    ReplyDelete
  2. திருநாகேஸ்வரத்தில் எப்போது 25 ரூபாய் வாங்கினார்களோ... நாங்கள் எங்கள் திருமணம் முடிந்து (உ.கோவிலில்) வந்த போது காசு வாங்கவில்லையா அல்லது எங்கள் சார்பில் ஏற்கெனவே பணம் கட்டப் பட்டு இருந்ததா நினைவில்லை! ராகு கால பூஜை பாலபிஷேகத்தில் பால் நீலமாய் மாறும் என்றார்கள். மாறியிருக்கும்... என் கவனம் அங்கில்லை அப்போது!

    ReplyDelete
  3. சாமியைப் பார்க்க ஐனூறு ரூபாயா? ஐனூறு ரூபாயா? ஐனூறு ரூபாயா?

    ReplyDelete
  4. வாங்க வெங்கட், பயணம் குளிர்காலம்னா ஓகே. :)))) அடிக்கிற வெயில் தான் ஒத்துக்கலை. ஊட்டியிலேயே பிறந்து வளந்தாப்போல! :))))))

    ReplyDelete
  5. வாங்க ஸ்ரீராம், பதினைந்து வருஷம் முன்னாடி 25 ரூபாய் தான். :))) நீங்க புதுக்கல்யாணம் ஆகி வந்தப்போ மனைவியை மட்டும் தான் பார்த்துட்டு இருந்திருப்பீங்க. ஹிஹிஹிஹி, சாமியை எங்கே பார்த்திருக்கப் போறீங்க! :))))))

    ReplyDelete
  6. வாங்க அப்பாதுரை, எதுக்கெடுத்தாலும் யோசிக்கும் நம்ம ரங்க்ஸ் கூட சட்டுனு ஐநூறு ரூபாயை எடுத்துக் கொடுத்து டிக்கெட் வாங்கினதைப் பார்த்து எனக்கு மயக்க்க்க்க்க்க்க்க்க்க்கமே வந்துடுச்சு. :((( ( ஆனாலும் இது ரொம்பவே ஓவர் தான். என்ன தான் சாமி மேலே நம்பிக்கை இருந்தாலும், இம்மாதிரிப் பணம் பிடுங்கிக் கொண்டு செய்யறதிலே எனக்குக் கொஞ்சம் கூடச் சம்மதம் இல்லை. ஒரு காலத்தில் காத்தாடிட்டு இருந்த சந்நிதி. எப்போவானும் ஒரு நாளைக்கு ஒருத்தர், இரண்டு பேர் வந்தால் பெரிசு. இப்போ கோயில் அறநிலையத்துறைக்கு நல்ல வருமானம். ஆனால் பக்தர்களுக்கு வசதி???? மூச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்......பேசக் கூடாது.

    ReplyDelete
  7. இங்கே ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதரைப் பார்க்கவும் நானூறு, ஐநூறு டிக்கெட் உண்டு. நாங்க டிக்கெட் வாங்கிப் பார்க்க நேர்ந்தால் திரும்பி விடுவோம். :((( யாரை இலவசமாப் பார்க்க முடியுமோ அவங்களை மட்டும் பார்த்துட்டு வந்துடறது வழக்கம். இப்போல்லாம் ரொம்ப நேரம் நிற்க முடியறதில்லை. அதான் பிரச்னை.

    ReplyDelete
  8. கோவில் போயி சாமி கும்பிடும் ஆசையே ஓடிப்போயிடும் நம்ம வீடுகளில் பூஜா ரூமில் எல்லா கடவுளரின் படங்களும் மாட்டி கும்பிட்டுக்க வேண்டியதுதான்.

    ReplyDelete
  9. என் கவனம் அப்போது அங்கில்லை:) அட ஸ்ரீராம்.!!!!!!!!!!!!!!!
    இப்படிக்கூட எழுத வருமா:)
    நாங்க திருநாகேஸ்வரம் போன போது நீலம்மானதைப் பார்த்தோம்.
    ஸ்ரீரங்கத்திலேயே 250 ரூபாய் டிக்கட் வந்தாச்சாமே. உடம்பு இப்போதேவலைன்னுனு நினைக்கிறேன்.கீதா. அம்மா மாரியம்மன் கவனித்துக் கொள்வாள்.

    ReplyDelete