எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, September 13, 2013

ரகசியமாக ஒரு "சில்"லென்ற ஊருக்குப் பயணம்!

சில்லுனு ஒருஊருக்குப் போயிருந்தேன்.  தலையிலே தண்ணீர் ஊத்தி அலசிக் குளிச்சுட்டு வந்து முகம் துடைக்கையில் பளீர்னு ஒரு சிரிப்புச் சிரிச்சால் எப்படி இருக்கும்!  அது போல் மழையில் நனைந்த ஊரே பளீர்னு சிரிச்சுட்டு இருந்தது.  இன்னமும் தலையிலிருந்து சொட்டுகிற நீரைப் போல மரக்கிளைகளில் இருந்து சொட்டிக் கொண்டிருந்த மழைநீர் அவ்வப்போது பன்னீர்த் துளிகளைப் போல மேலே தெளித்துக் கொண்டிருந்தது.  இந்த மழைக்கெல்லாம் நாங்க அஞ்ச மாட்டோம்னு ஊரே பரபர! நாங்க போனது ஒரு கல்யாணத்துக்கு. அங்கே போகப் போகிறேன்னு முன் கூட்டியே சொல்லிட்டா, கிட்டத்தட்ட ஒரு பத்துப்பேரைப் பார்க்க வேண்டி இருக்கும்.  ஆனால் என்னோட சூழ்நிலை எப்படினு தெரியலை.  ஆகவே மிகச் சிலருக்கு மட்டுமே போகும் இடத்தைத் தெரிவிச்சேன்.  திங்களன்று இரவு கிளம்பினோம்.  போறதுக்கு ரயிலில் டிக்கெட் கிடைக்கலை.  பேருந்துப் பயணம் தான்.  வோல்வோ, ஏ.சி. பேருந்து.  ஏறி உட்காருகையில் சிரமமாக இருக்கும் போலத் தான் இருந்தது.  அதோடு பாஷையும் புரிஞ்சுக்காத ஓட்டுநர், நடத்துநர்.  இரவுப் பொழுது எப்படிப் போகப் போகுதோனு கவலை.

கரூரில் இருந்து சேலம் வரைக்கும் பாதை மிக மோசம். வோல்வோ பயணமாகவே தெரியலை.  ஆனாலும் ஓட்டுநர் நல்லாவே ஓட்டினார். நடுவில் ஒரு சுங்கச் சாவடியில் சுங்கம் கட்ட நிறுத்தினப்போக் கூட வந்த ஒரு இளம்பயணி, இயற்கையின் உந்துதலுக்கு இறங்க, நாங்களும் கேட்டுக் கொண்டு இறங்கினோம்.  கழிவறை தூரத்தில் இருப்பதால் போகமுடியுமானு ஒரு ஓட்டுநர்/நடத்துநர் கேட்க, இன்னொருத்தரோ, போயிட்டு மெதுவா வாங்க, அவசரம் இல்லைனு சொன்னார்.  ஹிஹிஹி.. அவங்க மொழியில் தான்.  ஆனாலும் புரிஞ்சுண்டேன்.  காலை ஆறரை மணிக்குப் போகும்னு சொல்லி இருந்த பேருந்து காலை ஐந்தரைக்கே செல்லவேண்டிய பேருந்து நிலையம் போக அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடிச்சுச் செல்ல வேண்டிய கல்யாண மண்டபம் சென்றோம்.  சென்னையாக இருந்திருந்தால் அந்த தூரத்துக்குக் கட்டாயமாக 250 ரூபாயிலிருந்து, 300 ரூபாய் வரை ஆகி இருக்கும்.  கல்யாணம் முடிச்சதும், அன்று மாலையே ஏற்கெனவே முடிவு செய்தபடி அருகிலிருந்த ராமஅப்ரமேயர் கோயிலுக்குப் போனோம்.  அங்கே யாரைப் பார்த்தேன்னு நினைக்கிறீங்க? இதோ இவரைத் தான். :))))


கோயிலிலும் படம் எடுக்க அனுமதிக்கவில்லை; :( இவரையும் தனியாப் படம் எடுத்துக்கறேன்னு கேட்டதுக்கும் அனுமதி கொடுக்கலை. :( ஆகவே முன் மண்டபத்தில் மாட்டி இருந்த படத்தை மட்டும் படம் எடுத்துக் கொண்டேன்.  அதுவும் யாருக்கும் தெரியாமல் தான்! அவசரம் அவசரமாக.

எங்கே போயிருந்தேன்னு நினைக்கறீங்க? அந்த ஊர்க்காரங்க கண்டு பிடிச்சுடுவாங்களே!  "பெண்"களூர் தான்.   சென்ற மூன்று நாட்களும் நேரம் சரியாக இருந்தது. முஹூர்த்தம் முடியும் வரை அந்தண்டை, இந்தண்டை நகர முடியலை.  அதன் பின்னர் நேத்து, பிள்ளை, பெண்ணை அவங்க குடித்தனம் வைக்கப் போகும் வீட்டிற்குச் செல்லும்படியாக இருந்தது.  பின்னர் பெண்ணோடு எல்லாரும் மதுரைக்குக் குலதெய்வம் கோயில் செல்வதால் பெண் வீட்டிற்குச் சென்று அவங்களை அழைப்பதுனு நேற்று மாலை நான்கு மணி வரை சரியாக இருந்தது.  நான்கு மணிக்குக் கிளம்பி பெண்களூர் சிடி ஸ்டேஷன் வந்தோம்.  மாலை 6-55-க்கு வர வேண்டிய வண்டி அரை மணி தாமதமாக வந்தது. சென்னையெல்லாம் போக்குவரத்து நெரிசலில் பிச்சை வாங்கணும்.  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு நெரிசல்.  ஐயா, சாமி, கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் பெண்களூருக்கு வரலைப்பா. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் போகக் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பிடிக்குது, காலை எட்டு மணியிலிருந்து இரவு பத்து மணி வரை. :(


எங்கானும் உளவுப்படை கண்டு பிடிச்சுடுவாங்களோனு நினைச்சுட்டு இருந்தேன்.  நல்லவேளையாக் கண்டு பிடிக்கலை. :))))

கோ
கஊ

23 comments:

  1. குழந்தை நல்லா இருக்கானா? :-))

    ReplyDelete
  2. நானும் என் பெண் அங்கிருப்பதால்
    அடிக்கடி அந்த சில் ஊர் போகிறவன்தான்
    ஒவ்வொரு ட்ராஃபிக் சிக்னலிலும் நின்று நின்று
    ஒரு இடம் போவதற்குள் படும் பாடு
    சொல்லி மாளாது.
    சுவாரஸ்யமான பயணத்தை
    சுவாரஸ்யமாகப் பதிவு செய்தது மனம் கவர்ந்தது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஒரு பெங்களூருக்குப் போய்த் திரும்ப -- அதுவும் திருச்சிலேந்து-- இத்தனை பில்ட்டப்பா?.. :))

    பயணத்திற்குப் பயணமும் ஆச்சு; பதிவுக்குப் பதிவும் ஆச்சு..

    இல்லே, ராமஅப்ரமேயர் கோயில் பற்றி அடுத்து வரக்கூடிய மெயின் பதிவுக்கான முன்னோட்டமோ?..

    ReplyDelete
  4. சுவாரஸ்யமான பயணத்தை
    சுவாரஸ்யமாகப் பதிவு செய்தது மனம் கவர்ந்தது.

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    //ஒரு பெங்களூருக்குப் போய்த் திரும்ப -- அதுவும் திருச்சிலேந்து -- இத்தனை பில்ட்டப்பா?.. :)) //

    இன்றுள்ள போக்குவரத்து நெரிசல் + ஓட்டுனர்களின் வேகம் + எல்லோருக்குமே உள்ள பொறுமையின்மை + அவசரம் எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப்பார்த்தால், இன்றைய பயணங்களும், பாதுகாப்புடன் திரும்புவதும் மிகப்பெரிய சாதனைகளாகவே உள்ளன, திரு. ஜீவி ஐயா.

    அன்புடன் கோபு

    ReplyDelete
  5. ராமஅப்ரமேயர் கோயிலுக்குப் போனோம். அங்கே யாரைப் பார்த்தேன்னு நினைக்கிறீங்க? இதோ இவரைத் தான். :))))//

    அவரைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசை.
    பயணத்தை பற்றி ஆரம்பத்தில் மிக அழகாய் சொன்னீர்கள். இயற்கையை வர்ணிக்கும் போது மிக அருமை.

    ReplyDelete
  6. //இன்றைய பயணங்களும், பாதுகாப்புடன் திரும்புவதும் மிகப்பெரிய சாதனைகளாகவே உள்ளன,

    --திரு. வை.கோ. சார். //

    கரெக்ட்! காலம்பற பக்கத்து பாண்டிபஜார் போய்த் திரும்புவதற்குள்
    நான் பட்டபாடு எனக்குத் தான் தெரியும்.

    நீங்கள் சொல்லியிருப்பது நிதர்சன உண்மை!

    பில்ட்டப் என்று சொன்னது அம்மையார் சாங்கோபாங்கமாக விவரித்த அழகுக்கான அப்ரிசேஷன் தான்! நான்கு பாரா பதிவில், மூன்றாம் பாராவில் தான் 'எங்கே'
    போனார்கள் என்று சென்ற இடத்தின் பெயர் வருகிறது, பாருங்கள்.. அதுக்காகத்தான்! (உங்களுக்கும் தெரிஞ்ச ஜூஜூபி தான் இதெல்லம்னாலும், சும்மா..) எடுத்து எழுதுவதிலும், ஒரு சுவாரஸ்யம் இருக்கு, இல்லியா?..



    ReplyDelete
  7. ஜீவி said...
    *****இன்றைய பயணங்களும், பாதுகாப்புடன் திரும்புவதும் மிகப்பெரிய சாதனைகளாகவே உள்ளன,

    --திரு. வை.கோ. சார்.*****

    //கரெக்ட்! காலம்பற பக்கத்து பாண்டிபஜார் போய்த் திரும்புவதற்குள்
    நான் பட்டபாடு எனக்குத் தான் தெரியும்.

    நீங்கள் சொல்லியிருப்பது நிதர்சன உண்மை!//

    வணக்கம் + நமஸ்காரங்கள்,

    இன்று நாம் தெருவில் நடப்பதே ரொம்பக்கஷ்டம் தான், சார்.

    அதைத்தான் இந்தப்பதிவினில் நான் விபரமாக எழுதியுள்ளேன்.

    http://gopu1949.blogspot.in/2011/05/1-of-3.html
    எங்கெங்கும் எப்போதும் என்னோடு [பகுதி 1/ 3]

    //பில்ட்டப் என்று சொன்னது அம்மையார் சாங்கோபாங்கமாக விவரித்த அழகுக்கான அப்ரிசேஷன் தான்! நான்கு பாரா பதிவில், மூன்றாம் பாராவில் தான் 'எங்கே' போனார்கள் என்று சென்ற இடத்தின் பெயர் வருகிறது, பாருங்கள்.. அதுக்காகத்தான்! //

    ஆமாம், ஆமாம், டக்குடக்குன்னு தினம் ஓரிரு பதிவுகள் கொடுத்து அசத்தி விடுகிறார்கள். பில்டப்புக்கும், பஞ்சமே இல்லை தான்.

    நிறைய ரீல் விட்டாலும் படிக்க சுவாரஸ்யம் தான் ... மறுக்கவே முடியாது.

    //(உங்களுக்கும் தெரிஞ்ச ஜூஜூபி தான் இதெல்லம்னாலும், சும்மா..) எடுத்து எழுதுவதிலும், ஒரு சுவாரஸ்யம் இருக்கு, இல்லியா?..//

    நிச்சயமா இருக்கு, பலநாட்களாக இவர்களை நான் மிஸ் செய்து விட்டேன்.

    இப்போ கொஞ்சநாளாத்தான் பழக்கம்.

    வாழ்க்கையில் நான் இதுபோல மிஸ் செய்தவைகள் ஏராளம் உள்ளன.

    உங்களுடைய வலைத்தளம் + இவர்களுடைய வலைத்தளம் இதிலெல்லாம் மொய்மொய் என்று அடர்த்தியாக விஷயங்கள் நிரம்பி இருப்பதால் படிக்க சிரமமாக உள்ளது.

    சிறிய பகுதிகளாக பெரிய எழுத்துக்களில் [அதுவும் கலர் கலராக] இருந்தால், படிக்க மேலும் சுவாரஸ்யமாக இருக்கும், என்பதை உங்கள் இருவருக்குமே இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பிரியமுள்ள கோபு

    ReplyDelete
  8. வாங்க வா.தி. நல்லாக் கொழு கொழுனு வெண்ணை உண்ட வாயனா இருக்கான். :)) என்னைப் பார்த்துச் சிரிச்சு செளக்கியமானும் கேட்டான். இது இரண்டாம் முறையாகப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  9. வாங்க ரமணி சார், ஆமாம், தொட்டமளூர் போகிறச்சேயும், மறுநாள் பன்னார்கட்டாரோடு சத்திரத்திலிருந்து மாரத்தஹல்லி, ஹெப்பல், அப்புறம் அங்கிருந்து ரயில்வே ஸ்டேஷன் போனதும் இப்போ நினைச்சாலும் உடம்பு வலியா இருக்கு! :((( போதும், போதும்னு ஆயிடுச்சு.

    ReplyDelete
  10. வாங்க ஜீவி சார், இது யாரோட பயணம்? வலை உலகத்தின் ஈடு இணையற்ற தலைவியின் ஒப்பற்ற பயணம். முன் கூட்டியே தெரிஞ்சிருந்தா, அப்புறமாக் காவிரிப் பிரச்னை பத்தி எல்லாம் பேசிட்டு வரச் சொல்லி இருப்பாங்க. அதான் ரகசியமாப் போனேனாக்கும். :))) ராம அப்ரமேயர் பத்தி எழுதணும். இன்னும் திருமயம் போனதே எழுதலை. :))) அவ்வளவு சுறுசுறு! :))))

    ReplyDelete
  11. வாங்க வைகோ சார், அவர் சும்மா கலாய்க்கிறார். அம்புடுதேன். மத்தபடி நான் ரீலெல்லாம் விடறதில்லை. :))))

    ReplyDelete
  12. வாங்க கோமதி அரசு, ஊர் சுத்தம்னா சுத்தம் அப்படி ஒரு சுத்தம். இத்தனை நெரிசலுக்கும் எங்கேயானும் ஒரு குப்பையோ, அல்லது கார் ஹாரனை பலமா அடிச்சோ பார்க்கவோ/கேட்கவோ இல்லை. :( நம்ம சென்னையை நினைச்சால் வயித்தைப் பத்திட்டு வருது. :(

    ReplyDelete
  13. வாங்க ஜீவி சார்,

    வைகோ சார்,

    இருவருக்கும் மறு வரவுக்கும் கருத்துப் பரிமாற்றத்துக்கும் நன்றி. :)

    ReplyDelete

  14. பெண்களூர், எங்களூர்...!ராமாப்ரமேயர் கோயில்....? அது எங்கே இருக்கிறது.?” /ஊர் சுத்தமான சுத்தம்/...இங்கிருக்கும் கழிவுகள் பற்றி செய்திதாளில் நார் நாராய்க் கிழிக்கிறார்கள். இக்கரைக்கு அக்கரை பச்சை. 20 கி.மி. தூரத்தில் இருக்கும் என் பிள்ளைகளைப் பார்க்கப் போகவே ஒரு நாள் திட்டமிடவேண்டும். சென்னையில் இப்போதெல்லாம் மீட்டருக்கு ஆட்டோகாரர்கள் வருகிறார்களாமே.

    ReplyDelete
  15. அடுத்து வரப்போகும் பயணத்தொடருக்கான ட்ரைலர் அருமை....:)

    இயற்கையைப் பற்றிய வர்ணிப்பு சூப்பர்..

    ReplyDelete
  16. வாங்க ஜிஎம்பி சார், சென்னையை விடவே பெண்களூர் சுத்தம் தான். அதோடு பசுமையும் அடியோடு போகவில்லை. என்றாலும் நான் எண்பதுகள், தொண்ணூறுகள், கடைசியாக 2006 ஆம் வருஷம் பார்த்ததுக்கு இப்போது பெண்களூர் சுத்தமாய் மாறிவிட்டிருக்கிறதுதான்.:)))) நெரிசல் ஜாஸ்தியாகி விட்டது. ஆனாலும் கத்தலோ, கூச்சலோ கிடையாது என்பதும் ஆச்சரியமே.

    ReplyDelete
  17. ஜிஎம்பி சார், உங்க ஊரில் இருந்து கிட்டத்தட்ட 65 கிலோ மீட்டர் தூரத்தில் மைசூர் போகும் வழியில் சென்னப்பட்டணத்திலிருந்து சரியாக மூன்றாவது கிலோ மீட்டரில் (இடப்பக்கமாக கோயிலின் வளைவு வரும். கோபுரமும் தெரியும்.)உள்ளது இந்தக் கோயில். தொட்டமளூர் என்றால் யாருக்கும் புரியலை. மூலவர் ஶ்ரீராம அப்ரமேயர் என்றாலும் அம்பேகாலு கிருஷ்ணன் கோயில் என்றால் தான் புரிகிறது. :)))) கிருஷ்ணன் கொள்ளை அழகு. தலைமுடி கலையாமல் இருக்க நன்கு சீவி, முடிந்து கொண்டு காட்சி அளிப்பான்.

    ReplyDelete
  18. வாங்க கோவை2தில்லி, பாராட்டுக்கு நன்றிம்மா.

    ReplyDelete
  19. இந்த அப்ரமேய ராம கிருஷ்ணனைத் தான் படமாக வாங்கி (திருவல்லிக்கேணியில்)
    மூத்த மருமகளிடம் கொடுத்தேன்.அவன் அருளால்

    பொண்ணும் பிறந்தது. \இப்ப அந்தப் படத்தை கொண்டு வரச் சொல்ல வேண்டும். அவர்கள் போகும் ஊரில் இதையெல்லாம் ஒழுங்க மாட்டி வச்சுக்க முடியுமோ தெரியவில்லை. பெண்களூர் வர்ணிப்பு பிரமாதம். கவிதாயினி கீதான்னு வர்ணிக்கணும் இனிமே.

    ReplyDelete
  20. //சென்னையாக இருந்திருந்தால் அந்த தூரத்துக்குக் கட்டாயமாக 250 ரூபாயிலிருந்து, 300 ரூபாய் வரை ஆகி இருக்கும்.//

    அங்க 240 ரூபாய்தான் ஆச்சோ?!!

    முதல் பாரா வர்ணனை அபாரம்!

    ReplyDelete
  21. வாங்க வல்லி, படம் அவங்க கிட்டேயே இருக்கட்டுமே, இன்னொரு குழந்தை பிள்ளையாகப் பிறக்கட்டும். :))))) கவிதாயினி எல்லாம் இல்லை. ஊரின் சுத்தமும் இலைகளின் பள பள பச்சையும், ஆங்காங்கே பூத்துக் கிடந்த குல்மோஹர் பூக்களின் சிவப்பும் ஒரே வண்ணக்கலவையாக இருந்ததா? மனசிலே பட்டதை எழுதினேன்.

    ReplyDelete
  22. வாங்க ஶ்ரீராம், அதிர்ச்சி அடையாதீங்க, 240 ரூபாயெல்லாம் இல்லை. அந்த அதிகாலைப் பொழுதில் 150 ரூபாய் வாங்கிக் கொண்டு எங்களைக் கொண்டு விட்டார் ஆட்டோக்காரர். இத்தனைக்கும் ப்ரீ -பெய்ட் ஆட்டோ இல்லை. அதே போல் ஹெப்பலில் இருந்து பெண்களூர் சிடி ஸ்டேஷன் வர சரியாக 180 ரூ மீட்டர் காட்டினது. 200 ரூ கொடுத்ததுக்கு ஆட்டோ டிரைவர் 20 ரூபாயைத் திரும்பக் கொடுத்துட்டார். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  23. பெங்களுர் அழகான இடம்.சென்றிருக்கின்றேன்.

    ராம அப்ரமேயர் படிக்க ஆவலுடன் இருக்கின்றோம்.

    ReplyDelete