எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, September 15, 2013

எல்லைப் பிரச்னை நீடிக்கிறது!!!!!!!! இன்னமும் ஆறு வருடங்களாகியும்! :)

Friday, November 02, 2007

எல்லைப் பிரச்னை நீடிக்கிறது!!!!!!!!



இந்திய பாக், எல்லைப் பிரச்னைகளோ என்று அல்லது, இந்திய சீன எல்லைப் பிரச்னைகள் என்றோ, வந்து பார்க்கும் என் அன்பான வலை உலக நண்பர்களே, இது அது இல்லை, அது இல்லை, அது இல்லவே இல்லை! பின்னே என்னதான் நடந்தது? கேளுங்கள் சொல்கிறேன். எங்க வீட்டில் வண்டிகள் இருந்தன என்று சொல்லி இருக்கேன் இல்லையா? அதிலே முதலில் ஸ்கூட்டர் மட்டுமே தான் இருந்தது. அதுவும் பைக் வாங்காமல் ஸ்கூட்டர் வாங்கினதே மாமியார், மாமனார் உட்கார வசதிக்காகவே. அவங்க போனாங்களாங்கறது இங்கே பிரச்னை இல்லை. அந்த ஸ்கூட்டரில் நான் உட்கார்ந்து போகும்போது நடந்தது தான் இங்கே பேச்சு! அது என்னமோ சொல்லி வச்சாப்பலே, நான் உட்கார்ந்து போகப் போறேன்னு தெரிஞ்சால் அது ஸ்டார்ட் ஆகவே ஆகாது! முன்னாலேயே என் ம.பா. சொல்லி வச்சிருப்பாரோ என்னமோ? இத்தனைக்கும் அதிலிருந்து ஒரு 2 முறையாவது விழுந்திருப்போம். ஒரு முறை பையன் கூட்டிப் போய் ஒரு ஆட்டோவில் என்னோட காலை மட்டும் தனியாகப் பிரயாணம் செய்ய ஏற்பாடு செய்து முடியாமல் தப்பித்து வந்தேன். அதிலும் பின்னால் ஸ்டெப்னி வைக்கிறதுனு ஒண்ணு இருக்கும், ஸ்கூட்டர்களிலே, அந்த ஸ்டெப்னியை எடுத்துட்டால் உயிரைக் கையிலே தான் பிடிச்சுக்குவேன். அப்புறம் கொஞ்சம் சமாளிச்சுக்குவேன். ஆனால் சீட் தனித்தனியாக இருக்கும் என்பதால் என் சீட்டில் நீ உட்கார்ந்தாய் என்றோ, எனக்கு இடமே இல்லை, நான் எங்கே உட்காருவேன் என்பதோ கிடையாது.

அதுக்குப் பின்னர், பையன் காலிபர் வாங்கினாலும் என்னோட ம.பா.வுக்கு அது என்னமோ பிடிக்கவே பிடிக்காது. அவர் ஏற்கெனவே அவசரத்துக்கு என டிவிஎஸ் வாங்கி வச்சிருந்தார். பையனை அதை வச்சுத் திருப்தி பண்ண நினைச்சாலும் அவன் அதுக்கெல்லாம் அசராமல் காலிபர் வாங்கிட்டு 6 மாசமே ஓட்டி விட்டு, அதை இங்கே அனுப்பிச்சுட்டான். ஆனாலும் அவர் அதை எடுத்துட்டு ஆஃபீஸ் எல்லாம் போக மாட்டார்ங்கிறப்போ என்னை எங்கே அழைச்சுட்டுப் போகப் போறார் அதிலே எல்லாம். ஆஃபீஸுக்கே டிவிஎஸ்ஸில் போக ஆரம்பிச்சுட்டார். கொஞ்ச நாளிலே மற்ற இரண்டு வண்டிகளையும் விற்கிறாப்போல ஆச்சு! அப்புறமா மடிப்பாக்கம் போனால் கூட டிவிஎஸ்ஸிலேயே தான் போக ஆரம்பிச்சோம்! இந்த வண்டி இருக்கே ரொம்பவே திரிசமன் பிடிச்சது. அவர் ஆஃபீஸ் போக ஸ்டார்ட் பண்ணும்போதெல்லாம் ஒரே கிக்கில் கிளம்பிவிடும். அதே வண்டி நான் எங்கேயாவது போக ஏறி உட்கார நினைச்சுக் கிளம்பும்போது, "கிக்" வந்தாப்போலே ஆடிக் கொண்டு கிளம்பவே கிளம்பாது. ஒரு வழியா அரை மணி முன்னாலேயே வண்டியை ஸ்டார்ட்டும் பண்ணி, அதை அணைக்காமல் அவசரம், அவசரமா என்னைக் கிளம்பி வரச் சொல்லுவார். நானும் ரொம்பவே அப்பாவியாய்ப் போய் வண்டியில் ஏறி உட்காருவேனோ இல்லையோ, வண்டி நின்னுடும். "ஹிஹிஹி, என்னைப் போல அதுவும் பயப்படுது உன்னைக் கண்டால்" அப்படினு கமெண்ட் வரும்.

எல்லாம் நம்ம "ஹெட்லெட்டர்" அப்படினு சகிச்சுட்டுக் கீழே இறங்குவேன். மறுபடி வண்டியைக் கிளப்பி, மறுபடி ஏறி உட்கார்ந்து, வண்டி கிளம்ப மறுத்து அடம் பிடிக்க, மறுபடி முயன்று, "நான் கொஞ்ச தூரம் நடந்து முன்னாலே போறேன்! நீங்க வாங்க ஸ்டார்ட் பண்ணிட்டு" அப்படினு சொல்லி நான் பக்கத்து வீடு வரைகூடப் போக வேண்டாம். வண்டி ஸ்டார்ட், ம்யூசிக்! அப்புறம் ஒரு வழியா அதுக்குத் தெரியாமல் ஏறி உட்கார்ந்தால், இப்போ வேறே பிரச்னை, கையை எங்கே வைக்கிறது? இடது பக்கம் பிடியில் வைக்கலாம்னால், அங்கே பிடி துளியூண்டு எட்டிப் பார்க்கும். கிட்டத் தட்ட அதன் மேலே தான் நான் உட்கார்ந்து வரணும். இரண்டு சீட்டுக்கும் நடுவில் பிடி கிடையாது! சரி, சைடில் பிடிக்கலாம், அப்படினு கையை சைடில் வைப்பேன்! "படக்!" டிக்கி திறந்து கொள்ளும்! ஏதோ மோட்டார் ரேஸுக்குப் போற ரேஞ்சில் ஓட்டிட்டு இருக்கும் அவரைக் கூப்பிட்டு, உலுக்கி, டிக்கியை மூடச் சொன்னால், அவர் கையை எடுத்துட்ட கோபத்தில் வண்டி மறுபடி "மூட் அவுட்" ஆகி நின்னுடும். நிக்கிற இடம் எதுனு எல்லாம் பார்க்க முடியாது. நட்ட நடு ரோடிலே கூட நிற்கும். மறுபடி வண்டியைக் கிளப்பி ரிப்பீட்ட்டேஏஏஏய்ய்ய்ய்ய்! மறுபடி ஏறி உட்கார்ந்தால், மீண்டும் "படக்"! டிக்கி மறுபடி திறக்கும். அவர் கிட்டே மறுபடி சொல்லி டிக்கியை ஒருவழியாப் பூட்டச் சொல்லிட்டு மறுபடி ஏறி உட்காருவோம். இப்போ மறுபடி ஸ்டார்ட், ம்யூசிக்!!!!! இப்போ அவர் கிட்டே இருந்து வரும்!

"கொஞ்சம் தள்ளித் தான் உட்காரேன், பின்னாடி, எனக்கு இடமே இல்லை!"

"இன்னும் எங்கே உட்காருகிறது? ஏற்கெனவே, நான் தொங்கிட்டு வரேன்! இனிமேல் தள்ளி உட்கார்ந்தால் கீழே தான் விழணும்!"

'அம்மா, தாயே, நான் வண்டி ஓட்டணுமா, வேண்டாமா? வண்டி ஓட்ட இடம் இருந்தாத் தானே ஓட்ட முடியும்?"

"நல்லா ஓட்டுங்க வண்டியை! நான் வேணாக் கீழே இறங்கிட்டு வண்டி பின்னாடியே ஓடி வந்துடறேன்! இந்த வண்டியிலே போறதுக்கு அது எவ்வளவோ தேவலை!"

"வேணாம்மா, வேணாம், நீயே உட்காரு, நான் நின்னுட்டே வண்டி ஓட்டிக்கிறேன்!"

"வண்டியை நிறுத்துங்க, நான் ஆட்டோவிலே வந்துக்கறேன்!"

"சரியாப் போச்சு, இங்கே இருக்கிற அண்ணா நகருக்கு ஆட்டோவோட விலையையே கேட்கிறாங்க ஆட்டோக்காரங்க், பேசாமல் வாயை மூடிட்டு உட்காரு!"

ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்................க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ இதெல்லாம் வண்டி ஓடும், ஓடின சப்தம் இல்லை, நாங்க ரெண்டு பேரும் கோபத்திலே ஒருத்தருக்கொருத்தர் முறைச்சுட்டு வந்த சப்தம் அது. அடுத்த முறை எங்கேயாவது போகும்போது இதே விஷயம் ரிப்பீஈஈஈஈஈஈட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேடேடேடேடேடேடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!!!!!!!!!!


ஹிஹிஹி, திரு ஜிஎம்பி சாருக்காக எட்டெட்டு பதிவைத் தேடறச்சே இது கிடைச்சது.  இது சிரஞ்சீவியாக இன்னிக்கும் தொடர்வதால் ஒரு மீள்பதிவு போடலாமேனு நினைச்சேன்.  நினைக்கிறதும், அதைச் செய்யறதும் நமக்கு ஒண்ணுதானே.  செய்துட்டேன். :))))))

20 comments:

  1. நினைக்கிறதும், அதைச் செய்யறதும் நமக்கு ஒண்ணுதானே. செய்துட்டேன். :))))))

    இனிமையான வண்டிப்பயணம்..!வாழ்க்கைப் பயணத்திற்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. ஹாஹாஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆஅ:)
    சூப்பர் சிரிப்பு.இவ்வளவு முரடா உங்க வண்டி? இன்னும் அதிலதான் போறீங்களா.
    என்ன ஒரு தில் அதுக்கு.!!!!ஃபண்டாஸ்டிக் பதிவு.

    ReplyDelete
  3. வண்டியிலும் எல்லைப் பிரச்சனையா... ஐயகோ... பேசாம கார் வாங்கிருங்க... இந்த வண்டி உங்களைப் பார்த்தாலே கிண்டல் பண்ணுது...

    ReplyDelete
  4. அனுபவங்கள் எந்த எட்டில் நடந்தது ? பெண்களின் வயதைத்தான் கேட்கக்கூடாது. எடையையுமா? அதில்தான் பிரச்சனையோ என்னவோ......!

    ReplyDelete

  5. முதலில் தலைப்பையும் வருடத்தையும் கவனிக்கவில்லை. 13--14 வருடங்களுக்கு முந்தைய கதையா.?

    ReplyDelete
  6. வாங்க வல்லி, எங்கே அந்த வண்டியில் தான் போறோம், ஶ்ரீரங்கத்துக்குள் மட்டும். (நல்லவேளையா):)))))

    ReplyDelete
  7. வாங்க ஸ்கூல் பையர், கார் தொண்ணூறுகளிலேயே வாங்கி இருக்கணும். அப்போ வேண்டாம்னு தோணிச்சு. இப்போ வாங்கறதும் சரியா இருக்காது. :))) ஒரு தொலைபேசி அழைப்பு விடுத்தால் கார் வந்துடும். எதுக்கு சொந்தத்தில் கார் வைச்சுட்டு! தொல்லைங்க! :)))

    ஆனா ஒரு விஷயம் இந்த வண்டி என்னைப் பார்த்தால் கிண்டல் பண்ணுனு சொன்னீங்க பாருங்க, அங்கே நிக்கறீங்க நீங்க! :)))

    ReplyDelete
  8. வாங்க ஜிஎம்பி சார், இதுக்கும் எட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் எட்டெட்டு பதிவைத் தேடுகையில் இது கிடைத்தது. இது போட்ட ஆண்டு 2007 ஆம் வருஷம், ஆறு வருஷங்கள் ஆகியும்னு தலைப்பிலேயே கொடுத்திருக்கேன். 13, 14 வருடங்கள் முன்னர் ஸ்கூட்டர் இருந்தது. அப்புறம் தான் வேண்டாம்னு கொடுத்துட்டோம்.

    ReplyDelete
  9. ஸ்ரீரஙகத்துக்குள்ள இந்த வண்டி தான் சரி..... :)

    எல்லைப் பிரச்சனை - எங்க வீட்டிலும் இது உண்டு - திருவரங்கத்துக்கு வரும்போதெல்லாம்!

    ReplyDelete
  10. சூபர் சூபர் சூபர்.

    //ஒரு ஆட்டோவில் என்னோட காலை மட்டும் தனியாகப் பிரயாணம் செய்ய ஏற்பாடு செய்து முடியாமல்..

    நினைச்சு நினைச்சு சிரிப்பு வருது.

    ReplyDelete
  11. நல்ல நகைச்சுவைப் பயணம். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. வாங்க வெங்கட், உங்க வீட்டிலே மூணு பேர் வந்தாகணுமே? எல்லையில்லாமல் இல்ல இருக்கணும்! :)))))

    ReplyDelete
  13. வாங்க அப்பாதுரை, அந்தப் பிரயாணத்துக்கு மருத்துவச் செலவு 500ரூபாயோட முடிஞ்சதோ, பிழைச்சேனோ! :)))) ஆனா பையர் அப்பறமா என்னை வண்டியிலேயே ஏத்திட்டுப் போக மாட்டேனு சபதம் போட்டுட்டார். :)

    ReplyDelete
  14. வாங்க வைகோ சார், பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  15. சிரிக்க வைத்த அனுபவங்கள்!

    ReplyDelete
  16. வாங்க ஶ்ரீராம், சல்லடை போட்டுச் சலிச்சேன் உங்களை! அப்புறமா கெளதமன் சார் பேருக்குப் போட்ட பாசிடிவ் செய்திகளைப் படிச்சதும் தான் புரிஞ்சது! :)))) எல்லைப் பிரச்னை இன்னமும் நீடிக்குது. இன்னமும் சிரிக்க வைப்போமே! :))))

    ReplyDelete
  17. ஹா...ஹா....

    "வண்டியும் பயப்படுகிறதே" அந்த பயம் இருக்கட்டும். :))))

    தொடரட்டும் இனிய பயணங்கள்.

    ReplyDelete
  18. கீதா! சிரிப்பு தாங்கமுடியல....வயித்த வலிக்குது! உங்களுக்கு இந்த வண்டி மேல இருந்த கோவத்தையெல்லாம் காமெடி பண்ணி தீர்த்துகிட்டீங்களோ?

    ReplyDelete
  19. வாங்க மாதேவி, அதானே, நம்மளைப் பார்த்து வண்டி பயப்பட வேண்டாமா? :)))))

    ReplyDelete
  20. வாங்க ரஞ்சனி, கோபம் எல்லாம் இல்லை. ஆச்சரியம் என்னன்னா, இதை விடச் சின்ன மொபெடிலே என்னை விட குண்டான பெண்மணிகளெல்லாம் சர்வ அலக்ஷியமாப் போறாங்க. இந்த வண்டியிலே தனித் தனி சீட்! அப்போவும் பாருங்க எல்லைப் பிரச்னை! ஹிஹிஹி, முந்தாநாள் கூட! ஒரு வசதி என்னன்னா, இங்கே தெற்கு கோபுரத்துக்கிட்டே தடுப்புகள், ஸ்பீட் ப்ரேக்கர்கள் கோபுரம் உயரத்தில்னு இருக்கிறதாலே அங்கிருந்து ரங்கா கோபுரம் வரை நடந்துடுவேன், நிம்மதியா! :))))

    ReplyDelete