எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, October 07, 2013

பாடும் வேதங்களாலும் அறியாத மாயை-



பாடும் வேதங்களாலும் அறியாத மாயை-- தொடர்ச்சி.  அபிராமி பட்டர் சொல்வது

நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!

ரிஷி, முனிவர்களால் உணர்ந்து அறியப்பட்டு ஓதப்படுவதான வேதத்தின் பொருளாக இருப்பவளே அம்பிகைதான் என்கிறார் பட்டர். அவள் வேதப் பொருள் மட்டுமல்லாமல் அதன் பொருள் உணர்ந்து ஓதுவோர்க்கு அருளுபவளும் ஆவாள். எல்லாம் வல்ல அந்த ஈசனையே இயக்கும் மாபெரும் சக்தியான அம்பிகையானவள் இமவானுக்கு நன்மை செய்யும்பொருட்டு அவன் மகளாகப்பிறந்தாள். அழியாத முத்தியைத் தன்னை வணங்குபவர்களுக்கு அளித்து வருகிறாள்; அத்தகைய அம்பிகையை நான் நின்று கொண்டிருந்தாலும், நடந்து கொண்டிருந்தாலும், அமர்ந்து கொண்டிருந்தாலும், கீழே கிடந்தாலும் எந்நேரமும் அவளையன்றி வேறொருவரை நினைப்பது என்னால் கூடுமோ! அவள் மலர்ச்சேவடியைத் தவிர வேறொன்றையும் நான் வணங்குவேனோ! அம்பிகையின் திருவடித்தாமரைக்கும், அவள் பாத தூளிகளுக்கும் மோக்ஷம் தரும் வல்லமை உள்ளது என்பதே இதன் உட்கருத்தாகும்.

ப‌ர‌மநாதன்த‌னைப் பாதியாய் மாற்றினாள்

இறைவன் ஆணா, பெண்ணா?  இந்தக் கேள்விக்குப் பதில் எவராலும் சொல்ல இயலாது.  பெண்ணென்றால் அவன் பெண்ணே!  ஆணென்றால் அவள் ஆணே! ஆணாகிப் பெண்ணாகி நின்றான அந்த அர்த்த நாரீஸ்வரர் ஆன கோலத்தையே மேலுள்ள பாடல் வரிகள் சுட்டுகின்றன.    புரட்சிகரமாக  ஆணும், பெண்ணுமாகக் கலந்து உமையொருபாகனாக இருக்க ஈசனைத் தவிர எவரால் இயலும்?  திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர திருத்தலம்.  அர்ச்சனை செய்யும்போது கூட ஒரு நாமம் ஈசனுக்குரியதாகவும், அடுத்த நாமம் அம்பிகைக்கு உரியதாகவும் அமைந்திருக்கும் என்கின்றனர்.  ஆண், பெண் சமத்துவத்தைக் குறிக்கும் வண்ணம் சிறப்புப் பெற்ற கோலம் அர்த்தநாரீஸ்வர திருக்கோலம்.  இதைக் குறித்துப் பலவாறு கூறுவது உண்டு.  பிருங்கி முனிவர் ஈசனை மட்டுமே வணங்கி வந்த நிலையில், அம்பிகைக்குக் கோபம் வந்து அவர் சக்தியை இழக்குமாறு செய்ததாகவும் அப்போது ஈசன் பிருங்கி முனிவருக்கு ஊன்றுகோல் அளித்து உதவ, உமையன்னை மனம் வருந்தி தானும் ஈசனுக்குச் சமமாக அவரின் பாதியாகவேண்டும் என தவம் கடுமையாக இருந்ததாகவும், சிவன் தம்முடலில் பாதியை அவளுக்குக் கொடுத்ததாகவும் கூறுவார்கள்.  ஈசனோடு இணைந்த உமையன்னையைக் கண்ட பிருங்கி முனிவர் வேறு வழியில்லாமல் இருவரையும் வணங்கினார் என்பார்கள்.  இத்தகைய அர்த்தநாரீஸ்வரக் கோலம் கொண்ட நாள் திருக்கார்த்திகை தினம் எனச் சொல்வதுண்டு.  அன்று திருவண்ணாமலையில் அர்த்தநாரீஸ்வரரைக் கண்டு வணங்கி வழிபடுவது சிறப்பு.

இப்படி அர்த்தநாரீஸ்வரரைக் குறித்துப் பற்பல விளக்கங்கள் இருந்தாலும் ஆதிசங்கரர் சொல்வது இன்னும் அருமையானது.  நிர்க்குணப்ப்ரம்மம் ஆனது தனக்கென்ரு எந்த வர்ணமும் இல்லாத ஸ்படிக ஈஸ்வரனாக இருக்கையில் அதில் இடப்பக்கத்தை நீ திருடிக் கொண்டாய் என்கிறார்.  அப்படிப் பார்த்தாலும் பாதி உடம்பு தான் இருக்கணும்.  ஆனால் முழு தேகத்தையும் அம்பிகையே ஆக்கிரமித்துக் கொண்டு செக்கச் செவேலெனக் காமேச்வரியாக ஆகிவிட்டதாகச் சொல்கிறார்.  இதையே அபிராமி பட்டர் சொல்கையில்,

அதிசயமான வடிவுடையாள், அரவிந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி, துணைஇரதி
பதிசயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர் தம்
மதிசயமாக அன்றோ வாமபாகத்தை வவ்வியதே.

பட்டர் அன்னையின் இந்த அதிசயமான வடிவை வியந்து போற்றுகிறார். அதிசயமான அழகுடைய அன்னை; அவள் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை; குளத்தில் பூத்திருக்கும் தாமரை மலர்களெல்லாம் அவளைக் கண்டு அவள் முகம் சூரியனோ என எண்ணித் துதிக்கின்றது. அந்தத் தாமரைக்கொடி மெல்லியதா; அன்னையின் உடல் மெல்லியதா என்னும் வண்ணம் மெல்லிய கொடியைப் போன்ற சுந்தரமான அழகுடையவள், ரதி துணைக்கு வர, ஈசன் மேல் காமன் தொடுத்த அம்பைக்கண்டு கோபம் கொண்ட ஈசன் அந்தக் காமனின் முயற்சிகள் தோல்வியே அடையும் என எண்ணிக்கொண்டு தன் நெற்றிக்கண்ணைத் திறந்து பார்த்து அவனைச் சுட்டெரித்தார்; ஆனால் அம்மையே! உன் அழகோ அவரையும் வெற்றி கொண்டுவிட்டதே! அவ்வளவு தானா! நீ வெற்றி கொண்ட உன் அருமைத் துணைவன் உடலிலும் இடப்பாகம் இடம் கொண்டுவிட்டாயே! மன்மதனை வெற்றி கொண்டோம் என ஈசன் நினைத்த அதே வேளையில் அந்த வெற்றியையும் தோல்வியாகச் செய்த உன் அழகை எங்கனம் வர்ணிக்க முடியும்!


படங்கள் உதவி: கூகிளார்.

15 comments:

  1. விளக்கம் மிகவும் அருமை அம்மா... நன்றி...

    ReplyDelete
  2. அர்த்தநாரீஸ்வரர் கோலம் மிக அழகு. நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கமும் அருமை.அந்தாதியில் ஒளிரும் அபிராமியும் அழகு.

    ReplyDelete
  3. நல்ல விளக்கம்.

    ReplyDelete
  4. இறைவனைப் பெண்ணாக பாவித்திருந்தால் இறைவி என்ற சொல் பிறக்கக் காரணமில்லையே?

    ReplyDelete
  5. நல்லதொரு அருமையான விளக்கங்கள்.

    ReplyDelete

  6. கடவுள் ஆணா பெண்ணா என்று ஏன் வீண் விவாதம் என்று கருதியே அர்த்தநாரீஸ்வரர் கதை வந்திருக்க வேண்டும்.நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே கடவுள் உருவம் இருக்கும்.

    ReplyDelete
  7. வாங்க டிடி, ரொம்ப நன்றி.

    ReplyDelete
  8. வாங்க வல்லி, பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  9. வாங்க ஶ்ரீராம், நன்றி.

    ReplyDelete
  10. அப்பாதுரை, பல மாதங்கள் கழிச்சு(!) வந்ததுக்கு நன்றி. இந்த ஆசிரியை, இளைஞி, இறைவி என்பதெல்லாம் பின்னர் வந்த சொற்கள்னு எங்கேயோ படிச்ச நினைவு. இது குறித்துத் தெளிவு பண்ணிக் கொண்டு சொல்றேன். :)

    ReplyDelete
  11. கவிதாயினி என்பதும் வடமொழி அல்லது ஹிந்திச் சொல். :))) அது தெரியாமயே இங்கே பலரும் பயன்படுத்துகின்றனர். கவிஞர் என்ற பொதுச் சொல்லே போதுமானது என என் தமிழறிஞரான நண்பர் ஒருத்தர் கருத்து.

    ReplyDelete
  12. வாங்க வைகோ சார், ரொம்பவே நன்றி.

    ReplyDelete
  13. ஜிஎம்பி சார், ஆண், பெண் என்ற விவாதம் எல்லாம் இல்லை. அர்த்தநாரீஸ்வர தத்துவத்தின் உள்ளார்ந்த பொருள் தனிப்பட்டது. குரு மூலம் கேட்டுக்கலாம். சிருஷ்டி தத்துவமும் சிலர் சொல்வார்கள். ஆண், பெண் ஐக்கியம் என்றும் சிலர் கருத்து. எனினும் உள்ளார்ந்த தத்துவ விளக்கம் வேறு. :)))

    ReplyDelete
  14. விளக்கம் அருமை.

    ReplyDelete
  15. வாங்க மாதேவி நன்றி.

    ReplyDelete