எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, January 10, 2014

"பொடி"விஷயம் இல்லைனுட்டாங்க, பெரிய விஷயமே தான்!

எத்தனை பேர் காப்பிக்கொட்டை மெஷினைப் பார்த்திருப்பீங்கனு தெரியலை. என்னோட காப்பிக்கொட்டை மெஷின், பொடி அரைக்கும் மெஷின் இரண்டையும்,  ஶ்ரீரங்கம் வரதுக்கு முன்னாடி தான் எடைக்குப் போட்டேன். :( அப்போ இருந்த மனநிலையிலே ஃபோட்டோ எடுக்கணும்னு தோணலை. காப்பிக்கொட்டை மெஷினில் அரைச்சுப் பழகி இருந்ததால் இதிலே சிக்கினதுமே அதன் வாயைத் திறந்து அதிகப்படியாக இருந்த பொருளை எடுத்துவிட்டு மறுபடிபோட்டு அரைத்தேன்.  ஹிஹி, தொழில் நுட்பம் எல்லாம் கத்துக்கிட்டு இருந்தோமுல்ல!  அப்போ எல்லாம் ஃப்யூஸ் போனால் கூட நானே ஃப்யூஸ் கட்டையை எடுத்துட்டுப் போடுவேன். அது ஒரு கனாக்காலம்! :)))) இப்படியாகத் தானே ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம்னு செலவிட்டு ஒரு வாரத்தில் அரைத்து முடித்தேன்.  மிக்சியில் அரைக்கக் கூடாதானு கேட்கலாம்.  அப்போ மிக்சி அவ்வளவா பிரபலம் ஆகலை.  எங்கேயோ ஒன்றிரண்டு பேர் வைச்சிருந்தாங்க. அதுவும் சுமீத் மிக்சி தான் கிடைக்கும். முன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.  அப்போவே ஆயிரம் ரூபாய் விலை. அப்போத் தங்கம் மிக்சியை விடக்குறைவாகவே விற்றது.  மிக்சி வாங்கற பணம் இருந்தால் கல்யாணத்துக்கு இருந்த நாத்தனாருக்குப் பவுன் வாங்கலாம்.  ஆகவே நோ மிக்சி. :))))

நசிராபாதில் இப்படியாகத் தானே கிட்டத்தட்ட நாலு வருஷம் கை மெஷினிலே அரைச்சே பொடி விஷயம் கடந்து சென்றது.  இதுக்கு நடுவிலே பையர் பிறந்து அம்மா மடியை விட்டு இறங்காத ரகமான அவரை மடியில் போட்டுக் கொண்டே ஆட்டுக்கல், அம்மி, கை கிரைண்டரில் அரைத்த கதை எல்லாம் தனியா வைச்சுப்போம். அதுக்கப்புறமா சிகந்திராபாத் வந்தப்போ அங்கே கொஞ்சம் பரவாயில்லை ரகம்.  ஒரே ஒரு மெஷினில் அரைச்சுக் கொடுப்பாங்க.   நல்ல நாள், நக்ஷத்திரம், யோகம் பார்த்துப் போய் அரைச்சு வாங்கி வரணும்.  கால் கிலோ மி.வத்தல் போட்டு அரைக்கிற பொடியையே ஒரு மாசத்துக்கெல்லாம் பழசாயிடுச்சு சொல்லும் குழுவைச் சேர்ந்த நான் அங்கே அரைகிலோ மி.வத்தல் போட்டு அரைச்சு வாங்கி வைச்சுக்க வேண்டியதாப் போச்சு!  இதிலெல்லாம் நம்ம தமிழ்நாட்டை அடிச்சுக்க வேறே மாநிலம் கிடையாது.  சகலவிதமான செளகரியங்களும், அசெளகரியங்களும் நிறைந்த மாநிலம்னா அது தமிழ்நாடு மட்டுமே!


பின்னர் மறுபடி சென்னை வந்து மறுபடி நசிராபாத் போனப்போ மிக்சி வாங்கியாச்சு.  சுமீத் தான்.  முன் பதிவு செய்து வாங்கிக் கொடுத்தது என் தம்பி.  என்றாலும் அதிலே மஞ்சளை எல்லாம் போட்டு அரைக்கக் கொஞ்சம் யோசனையாக இருக்கும். இப்போ மாதிரி பல அளவுகளில் ஜார்கள் இல்லை.  ஒரே அளவு தான். பெரிய ஜார் மட்டுமே. அப்புறமா ரொம்பக் காலம் கழிச்சு சின்ன ஜார் கிடைக்க ஆரம்பிச்சது. அந்தச் சின்ன ஜாரிலே சாம்பாருக்கு அரைச்சு விடறதெல்லாம் கஷ்டம்.  ஆகவே அதில் கொஞ்சம் போலக் காப்பிக் கொட்டை போட்டு காப்பிப் பொடி மட்டும் அரைக்கனு வைச்சிருந்தேன்.  ஆகக் கூடி மிக்சி இருந்தும் சாம்பாருக்கு அரைக்கிறதெல்லாம் அம்மியில் தான். :))))  பின்னர் அங்கிருந்து குஜராத் ஜாம்நகர் வந்தப்போ கொஞ்சம் அப்பாடானு இருந்தது.  அங்கே உள்ள ஒரு மாவு மில்லில் மி.பொடி, ம.பொடி, த.பொடினு வகை வகையாப் பொடி இருக்க, அவங்க கிட்டே அரைச்சுத் தரச் சொல்லிக் கேட்டால்!!!!!


ம்ஹூம், மாட்டவே மாட்டேன்னு சொல்லிட்டார்.  வேணும்னா மி.பொடி, த.பொடி, ம.பொடினு வாங்கிப் போய்க் கலந்துக்குங்கனு சொல்லவே, கடும் ஆய்வுகள் எல்லாம் செய்து அரை கிலோ மி.பொடிக்குத் தேவையான த.பொடி, ம.பொடி வாங்கி மூன்றையும் கலந்து கொண்டு.  மேல் சாமான்களை வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு மிக்சியில் பொடி செய்து அவற்றோடு கலந்து கொண்டு மறுபடி மிக்சியில் போட்டு அரைத்துக் கலந்து கொண்டேன். அதிலே குழம்பு வைத்தாலோ, ரசம் வைத்தாலோ, வாசனை ஊரைத் தூக்கியது!  ஆஹா, அருமைனு எனக்கு நானே ஷொட்டுக் கொடுத்துக் கொண்டேன். இந்த முறையில் பழகிக் கொண்டது எனக்குப் பின்னாட்களில் அமெரிக்காவில் போய்ப் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் சாம்பார்ப் பொடி, ரசப்பொடி பண்ணி வைக்க உதவியது; உதவுகிறது.  அது சரி, இந்தக் கதை ஃப்ளாஷ் பாக்கெல்லாம் ஏன்னு கேட்கறீங்களா?? இப்போவும் கடந்த ஒரு மாசமாக ரசப்பொடி பண்ண நேரமே இல்லாமல், இருந்த பொடியெல்லாம் தீர்ந்து போக, தனியா, து.பருப்பு, க.பருப்பு, மிளகு, வெந்தயம் எல்லாவற்றையும் வறுத்துக் கொண்டு மிக்சியில் பொடி செய்து வீட்டில் வைத்திருந்த தனி மிளகாய்ப் பொடியோடு கலந்து கொண்டு மறுபடி அரைத்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.  அதில் தான் பத்துநாட்களாகக் குழம்பு, ரசம் எல்லாம்.  சாம்பார் மட்டும் எப்போவும் போல் அரைத்துவிட்டுத் தான்.  பின்னே?  அது ஒண்ணு தானே ஒழுங்கா வரும்! :))))

நேத்துத் தான் ரசப்பொடிக்கு சாமான்கள் எல்லாம் வாங்கி வைத்து அரைத்து வாங்கி வந்திருக்கிறோம். ரொம்பக் கொரகொரனு அரைச்சிருக்காங்க. :) சரியாக அரைக்கலைனு நான் நொட்டுச் சொல்லவும், ரங்க்ஸுக்குக் கோபம். ஹிஹிஹி, என் மேல் இல்லை(அப்படித் தானே நினைச்சுக்கணும்) அரைச்சுக் கொடுத்த தாத்தா மேல். பொதுவா இந்த மெஷின்காரங்க கிட்டே ரொம்ப நைசா வேண்டாம்னா சாமான்கள் எல்லாம் தெரியும்படியாக் கொரகொரனு அரைக்கிறாங்க.  அவங்களுக்கெல்லாம் புரியவே இல்லை.  அதுவே நான் அரைச்சு வைச்சிருக்கேன் பாருங்க, சூப்பரா இருக்கு. கோதுமை அரைக்கையில் நைசா வேண்டாம்னு சொன்னதுக்கு ரொம்பக் கொரகொரனு அரைச்சிருக்காங்க.  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதனாலே இனி பேசாமல் இப்படியே அரைச்சுடலாமானு யோசிச்சுட்டு இருக்கேன். :)))) அதுக்குத் தான் இந்தப் பதிவே.  ஆனால் கோதுமையை மெஷினில் தான் அரைச்சாகணும்! மாவெல்லாம் வாங்கினால் சரிப்பட்டு வரலை.  என்ன செய்யலாம்????

இப்படியாகத் தானே பொடி மஹாத்மியம் இப்போதைக்கு நிறைவு பெற்றது.

18 comments:

  1. காரம மணம் குணம் நிறைந்த
    பொடி விஷயம் ..!

    ReplyDelete
  2. ஆனாலும் அரைத்து (விட்ட) சாம்பார் என்றும் ருசி தனி தான்... "க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" என்று ஒருநாள் முறைத்து விட்டு வந்தால் ஒழுங்காக அரைத்து தருவார்களோ...?

    ReplyDelete
  3. அமெரிக்காவில் போய் எப்படி சாம்பார் பொடி அரைத்தீர்கள்? கொஞ்சம் சொல்லுங்களேன். நிறைய பேருக்கு உபயோகமாயிருக்கும்.
    இப்பொழுதும் காபிக்கொட்டை வாங்கி மிக்சியில் காபி பொடி அரைப்பீர்களா?
    அந்த சந்தேகத்தையும் கொஞ்சம் தீர்த்து வையுங்கள். நிறைய பொடி டெக்னிக்ஸ் நிறைந்த பதிவு.

    ReplyDelete
  4. நன்றி ராஜராஜேஸ்வரி. தினசரி வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொரு கதை சொல்லும். :)

    ReplyDelete
  5. வாங்க டிடி, அரைத்துவிட்ட சாம்பார்னா அதான் சாம்பார்! :)))

    அந்த மெஷினுக்குள்ளே நான் இன்னும் போனதில்லை. ஒரு நாள் நீங்க சொல்றாப்போல் போய் அந்தத் தாத்தாவை முறைச்சுட்டு வரணும். :))) ஐடியாவுக்கு நன்னி ஹை!

    ReplyDelete
  6. வாங்க ராஜலக்ஷ்மி, எனக்கு க்ரோனிக் ஆஸ்த்மானு மருத்துவர் 95 ஆம் வருஷம் அறிவிச்சதுமே காப்பிக்கொட்டை வாங்கறதை நிறுத்தியாச்சு. காப்பிப் பொடி தான். :)))) அதுவும் பல கடைகளிலும் வாங்கிப் பார்த்துட்டுக் கடைசியா ஒரு கடையை செலக்ட் செய்வோம். அம்பத்தூரில் லியோ காஃபி, கிருஷ்ணா காஃபி, அருணா காஃபி, டாடா கூர்க், காஃபி டே னு எல்லாத்தையும் முயன்று பார்த்துட்டுக் கடைசியில் டாடா கூர்கில் வாங்கிட்டு இருந்தோம். இங்கேயும் நரசூஸ் காபி, பத்மா காஃபியில் வாங்கிப் பார்த்துட்டு நரசூஸ் காஃபியில் தான் வாங்கறோம். திருச்சியில் ஜோசஃப் காஃபினு இன்னொண்ணும் இருக்கு. இங்கே இப்போப் புதுசா சுந்தரம் காஃபியும் வந்திருக்கு. தி.நகரில் இருக்கே அந்த சுந்தரம் காஃபி! :))))

    ReplyDelete
  7. சாம்பார் பொடி அரைச்ச கதையை சாப்பிடலாம் வாங்கவில் போடலாமா? இங்கேயே தொடரலாமா?? யோசிக்கிறேன். :))))

    ReplyDelete
  8. ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    காரம் மணம் குணம் நிறைந்த
    பொடி விஷயம் ..!

    பதிவு மிகவும் எழுச்சியாகவே உள்ளது.

    ReplyDelete
  9. பொடி விஷயம் மணத்தது! அருமையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  10. காபிக்கொட்டை மெஷின் எங்கள் வீட்டிலும் இருந்தது. இப்போ அது எங்கே இருக்குன்னே தெரியாது.

    நாங்கள் காஃபி டே யும் சுந்தரம் காஃபியும் மாற்றி மாற்றி உபயோகிக்கறோம். லியோவில் எரிப்பு வாடை இருப்பது போல பிரமை எங்களுக்கு. நரசுஸ் அலுத்து விட்டது.

    ரசத்துக்குத் தனியாய்ப் பொடி எல்லாம் இப்போதெல்லாம் வைத்துக் கொள்வதில்லை. சாம்பாருக்கு அரைக்கும் பொடியேதான். இறக்குமுன் மிளகு ஜீரகப் பொடி தூவிக் கொள்கிறோம்!

    ReplyDelete
  11. அரைத்து விட்ட சாம்பார் என்றால் தேங்காய் மற்றும் தனியா, பருப்பு சேர்த்து அல்லது தேங்காய் அரைத்து விட்டா...? எப்போதுமா? அலுத்து விடாது? :)))

    ReplyDelete
  12. வைகோ சார், நன்றி.

    ReplyDelete
  13. நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  14. வாங்க ஶ்ரீராம், போன பதிவிலே உங்களைக் காணோமேனு நினைச்சேன். :)))) லியோ வாங்கினால் நூறு கிராம் மட்டும் லியோ வாங்கிட்டு மத்தக் கடைக் காப்பிப் பொடி வாங்கிக் கலந்து பயன்படுத்துவோம்.

    ReplyDelete
  15. சாம்பாரே எனக்குப் பிடிக்காது. ஹிஹிஹி! மாத்தி மாத்தித் தான் பண்ணுவேன். ஆகையால் பத்து நாள், பதினைந்து நாளுக்கு ஒருதரம் தான் சாம்பார்னு பண்ணும்படியா வரும். மற்றபடி துவையல், கலந்த சாதம், மோர்க்குழம்பு, பொரிச்ச குழம்பு இப்படி மாறி மாறி வரும். மதுரைப்பக்கம் கூட்டுக் குழம்புனு ஒண்ணு பண்ணுவோம். அதுவும் பண்ணுவேன். புளிவிட்ட கீரை செய்தும் சாப்பிடுவோம்.ஆகவே சாம்பார்னாலே காத தூரம் ஓடற ஆள் நான்.

    இப்போ வீட்டிலே எல்லாரையும் இப்படி மாத்தியாச்சாக்கும்! :)))))

    ReplyDelete
  16. பொடி விஷயம் பெரிதாகிவிட்டது. பெரிதானாலும் காரசாரமாக இருக்கிறது. அப்படியிருந்தால்தானே சாப்பிடவும், படிக்கவும் நன்றாக இருக்கிறது:))!

    ஸ்ரீரங்கத்தில் பாட்டி வீட்டில் இந்தக் காபிகொட்டை வறுக்க ஒரு மெஷின், அரைக்க (தினமும் கொஞ்சம் கொஞ்சமாக) ஒரு மெஷின் இருக்கும்.

    அமெரிக்காவில் சாம்பார் பொடி அரைத்ததை பதிவு போட்டுவிட்டீர்களா? இணைப்பு ப்ளீஸ்!

    ReplyDelete
  17. பொடி விஷயம் அருமையாக உள்ளது..

    மெஷின் வசதியெல்லாம் தமிழ்நாட்டில் தான்...:) சென்ற முறை அரிசி மாவும் கொரகொரன்னு தான் அரைத்து கொடுத்தாங்க.. கேட்டா இன்னும் ஊற வெச்சு கொண்டு வாங்க என்று சொன்னார்...

    இங்கயும் சாம்பார் பத்து நாட்களுக்கு ஒருமுறை தான்... கூட்டு வத்தக்குழம்பு, பொரிச்ச கூட்டு கலந்த சாதம் இப்படித் தான்....:)))

    அடுத்து குழம்பு பொடி அரைக்க வேண்டும்... இருவருக்குமாக...:))

    காபி பொடி பற்றி கவலை இல்லை...:))

    ReplyDelete
  18. பொடி மஹாத்மியம் - ரசித்தேன்....

    ReplyDelete