எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, January 17, 2014

என் கேள்விக்கு என்ன பதில் ----தொடர்ச்சி.. பதினொன்றிலிருந்து பதினைந்து வரை

11. உங்கள் வாழ்க்கையில் உங்களால் மறக்க முடியாத நிகழ்வு எது? எதுவாகவும் இருக்கலாம்.  உங்கள் கல்யாணம், முதல் காதல், தேர்வில் முதல் தகுதினு எதுவாகவும் இருக்கலாம்.

12. உங்கள் சிறு வயதிலேயே போலியோ தடுப்பு ஊசி போடும் வழக்கம் இருந்ததா?  உங்களுக்குப் போட்டிருக்கார்களா? இது குறித்த விழிப்புணர்வு 1950 களில் தான் ஆரம்பித்ததாய்ச் சொல்கின்றனர்.  பின்னர் இது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்தது எப்போது?

13. உங்களை மிகவும் கவர்ந்த இசைக்கலைஞர் யார்?  எந்த மொழிக்கலைஞர்?  அவரின் இசையை/பாடல்களை எப்போதும் கேட்பீர்களா?

14. ஏர் இந்தியா விமான சேவை குறித்து முதன் முதல் எப்போது அறிந்தீர்கள்? அதன் தாக்கம் உங்களை எவ்வகையில் பாதித்தது?  உங்கள் குடும்பத்தில் முதல் விமானப்பயணம், அதுவும் ஏர் இந்தியாவில் செய்தவர் யார்?

15. நம் நாட்டில் அடிக்கடி எல்லைத் தகராறுகள் ஏற்பட்டு வருகின்றன என்பதை அறிவீர்கள் அல்லவா? அது உங்கள் தினசரி வாழ்க்கையை எவ்வகையில் பாதிக்கிறது?


அடுத்த ஐந்து கேள்விகளில் முடிஞ்சுடும்.  :)))))

20 comments:

  1. 11. முதல் காதல்...!

    12. போலியோ தடுப்பு ஊசி போடும் வழக்கம் இருந்ததில்லை... 2000 முதல் தான்...

    13. பெரிய பட்டியலே உண்டு...

    14. எனது சகோதரியின் மகள்...

    15. எந்த எல்லைத் தகராறு...!

    ReplyDelete
  2. 11) மறக்க முடியாத நிகழ்வு என்பதைவிட நிகழ்வுகள் என்று சொல்லலாம்!

    12) போலியோ தடுப்பூசி போட்டார்களா என்று தெரியாது.

    13) இசைக் கலைஞர் என்பதைவிட, இசைக்கலைஞர்கள் என்றிருக்கலாம்! :)

    14) ..................

    15) இதுமாதிரி கேள்விகள் வரும்போது! :)))))))))


    ReplyDelete
  3. வாங்க டிடி, ஒளிக்காமல் முதல் கேள்விக்கு விடைசொன்னதுக்கு நன்னி ஹை!:)))

    கடைசிக் கேள்வியைக் கொஞ்சம் விளக்கமாக மாற்றி இருக்கேன். இப்போச் சொல்லுங்க.

    ReplyDelete
  4. ஶ்ரீராம், ஏர் இந்தியா விமானசேவை விளம்பரங்கள் கூடவா கவர்ந்ததில்லை? அந்தக் காலச் சென்னை மவுன்ட் ரோடில் இப்போதைய ஜெமினி மேம்பாலத்துக்கு அருகே மஹாராஹா வணங்கி வரவேற்பதைப் போன்ற பெரிய விளம்பரங்கள், வாசகங்கள் கண்ணையும், கருத்தையும் கவரும். கேள்விக்கு பதில் சொல்லுங்க!

    ReplyDelete
  5. ஶ்ரீராம் 15 ஆம் கேள்விக்கு விடை தப்பு, தவளை, தஞ்சாவூரு மாப்பிளை! :)))))

    ReplyDelete
  6. அதாவது உங்க விடைதான் தப்புனு சொன்னேன், விடையே அது இல்லை! :)))))

    ReplyDelete
  7. //அடுத்த ஐந்து கேள்விகளில் முடிஞ்சுடும். :)))))//

    சந்தோஷம்.

    தங்களின் 11வது கேள்விக்கான பதில்கள் என் பல்வேறு சிறுகதைகளில் ஆங்காங்கே அள்ளித் தெளித்துள்ளேன்.

    விமர்சனப் போட்டியில் விடாமல் தொடர்ந்து கலந்து கொண்டீர்களானால் உங்களால் அவற்றை நன்கு உணர முடியும்.

    ReplyDelete
  8. சென்னையில் மழை நின்றிருக்குமே?

    ReplyDelete
  9. 11. என் அப்பா கொடுத்த முதல் அடி/அறை
    12. எனக்குப் போட்டார்கள். முறை இருந்திருக்க வேண்டும்
    13. எவருமில்லை. அடிக்கடி கேட்பது எம்எஸ்வியின் திரையிசை. கேட்டேயாக வேண்டும் என்று அவ்வப்போது தோன்றுவது எம்எல்வி, மாலி, பில் காலின்ஸ், முகமது ரபி, எரிக் க்லேப்டன், அபா, நிஷா ராஜகோபால்,...
    14.ஆறேழு வயதில். என் அப்பா.
    15. பாதித்ததில்லை.

    ReplyDelete
  10. 11.மறக்க முடியாத நிகழ்வுகள் நிறைய சோகம், மகிழ்ச்சி இரண்டும் உண்டு.
    12. போலியோ தடுப்பு ஊசி போட்டார்களா தெரியவில்லை, அம்மதடுப்பு ஊசி போட்டார்கள் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் தழும்பு இருக்கும் எனக்கு இல்லை அதனால் தான் என்னவோ இரண்டு முறை பெரியம்மை வந்து கஷ்டப்பட்டேன்.
    13. நன்றாக பாடும் அனைத்து பாடகர்கள் பாட்டும் கேட்க பிடிக்கும்.
    14.முதல் விமானபயணம் என் மகள்.
    15. அணடை அயலாரை நேசிக்கும் போது எல்லை பிரச்சனை வருவது இல்லை.

    ReplyDelete
  11. 11. என் கணவர் என் கரம் பற்றிய நாள் மிகவும் முக்கியமான சந்தோஷமான நிகழ்வு.

    12.இல்லை. எனக்குப் போலியோ தடுப்பூசி போடவில்லை. ஆனால் என் மகளுக்கு, மகனுக்கு 80களில் போட்டு விட்டேன். அப்படியெனில் விழிப்புணர்வு அப்பொழுதே வந்திருக்க வேண்டும் தானே!

    13.எனக்கு பி. சுசிலா பாடும் டுயட் பாடல்கள் எல்லாம் பிடிக்குமே!

    14.ஏர் இந்தியா விமானம் வானில் பறக்கப பார்த்திருக்கிறேன். நாநும் , என் கணவரும் தான் எழுபதுகளில் எங்கள் குடும்பத்தில் முதல் முதலாக டெல்லியிலிருந்து சென்னை வந்தோம்..

    15.எல்லைத் தகராறு தினம் தினம் நடக்கிறதே வீட்டில். லேப்டாப்பில் ஆரம்பிப்பது....... எதை சொல்ல , எதை விட.

    அட, சுவாரஸ்யமான கேள்விகளாய் இருக்கிறதே! பழைய கேள்விகளைப் பார்த்து பதில் எழுதுகிறேன்.

    ReplyDelete
  12. வைகோ சார், இது ஆனாலும் அநியாயம். ஒரு கேள்விக்குக் கூட பதில் சொல்லாமல் தப்பிச்சுக்கறீங்க! :))))

    ReplyDelete
  13. @அப்பாதுரை, சென்னையில் மழை எங்கே பெய்யுது?? :)))

    ReplyDelete
  14. அப்பாதுரை, பதில்கள் எல்லாம் அருமை. எந்த எல்லைத்தகராறு உங்களைப் பாதித்ததில்லை?? :)))))

    ReplyDelete
  15. கோமதி அரசு, 15 ஆம் கேள்விக்கான பதில் மிக அருமை! :)

    ReplyDelete
  16. ராஜலக்ஷ்மி,

    ஒன்று முதல் பத்து கேள்விகள் இரு பதிவுகளாக வந்துள்ளன. படிச்சுப் பார்த்து நிதானமா பதில் கொடுங்க! :))) உங்களுக்குப் பிடிச்சிருப்பது குறித்து சந்தோஷம்.

    எல்லைத் தகராறு உங்க வீட்டிலேயும் உண்டுனு புரிஞ்சது. :)))))) எங்களோட எல்லைத் தகராறு குறித்துப் பதிவே போட்டிருக்கேன். இருங்க சுட்டி தரேன். :)))))

    ReplyDelete
  17. 11. நெறைய இருக்கு
    12. நினைவில்லை
    13. எம் எஸ். எஸ்பிபி ,இளையராஜா ,மகாராஜபுரம் சந்தானம், ஜேசுதாஸ் ...
    14. அந்த மகாராஜா மட்டுமே நினைவிருக்கு
    15. நேரடி பாதிப்பில்லை...

    ReplyDelete
  18. அதுவுஞ்சரிதான். :)

    ஒரு சிறிய பாதிப்பு நினைவுக்கு வருது. வியட்னாமிலிருந்து தப்பிப் பிழைத்து அங்கே இங்கே சுற்றி கடைசியில் இந்தியாவுக்கு அகதியாக வந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறியவன் எங்கள் வகுப்பில் சேர்ந்தான். என்னவோ பெரிய விஷயம் போல வாண்டுகளான எங்களை முதல் நாள் தயார்படுத்தினார்கள். எங்களுக்கு எதுவும் புரியவில்லை. புதிதாக வருபவனின் அம்மாவுக்கு பதுலாக அப்பா வந்தது பற்றி மட்டும் வகுப்பில் பேசிக் கொண்டோம். அருமையான தமிழ்ப்பெயர் கொண்ட பாரி எனக்கு நண்பனானான். அவனுடைய அம்மாவுக்கு அகதி விசா கிடைக்கவில்லை என்பது பின்னாளில் தெரியவந்தது.

    ReplyDelete
  19. உங்கள் வாழ்க்கையில் உங்களால் மறக்க முடியாத நிகழ்வு எது? எதுவாகவும் இருக்கலாம்.  உங்கள் கல்யாணம், முதல் காதல், தேர்வில் முதல் தகுதினு எதுவாகவும் இருக்கலாம்.

    ~ ஆகஸ்ட் 8, 1942: க்விட் இந்தியா முழக்கம் காந்தி மஹான் அரெஸ்டு. நான் உபவாசம்.

    உங்கள் சிறு வயதிலேயே போலியோ தடுப்பு ஊசி போடும் வழக்கம் இருந்ததா?  உங்களுக்குப் போட்டிருக்கார்களா? இது குறித்த விழிப்புணர்வு 1950 களில் தான் ஆரம்பித்ததாய்ச் சொல்கின்றனர்.  பின்னர் இது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்தது எப்போது?

    ~ இல்லை. மற்றதை விடுங்கள். அதை கண்டுபிடித்த ஜோனாஸ் சாக் அவர்கள் அதற்கு காப்புரிமை பெற மறுத்தார். “There is no patent.  Could you patent the sun?” என்றாராம். மாற்று செய்திகளும் உண்டு.

    உங்களை மிகவும் கவர்ந்த இசைக்கலைஞர் யார்?  எந்த மொழிக்கலைஞர்?  அவரின் இசையை/பாடல்களை எப்போதும் கேட்பீர்களா?
    ~ ஜுபின் மேத்தா. பன்முகம். மேல்நாட்டு இசை. கேட்பேன்.

    ஏர் இந்தியா விமான சேவை குறித்து முதன் முதல் எப்போது அறிந்தீர்கள்? அதன் தாக்கம் உங்களை எவ்வகையில் பாதித்தது?  உங்கள் குடும்பத்தில் முதல் விமானப்பயணம், அதுவும் ஏர் இந்தியாவில் செய்தவர் யார்?

    ~ அது துவக்க காலம் முதல். 1960களில் ஜே.ஆர்.டி.டாடா அவர்கள் எங்கள் அலுவலகத்துக்கு அடிக்கடி வருவார். நான் தான் குடும்பத்தில்/ ஏர் இந்தியாவில் முதல் பயணி.

    நம் நாட்டில் அடிக்கடி எல்லைத் தகராறுகள் ஏற்பட்டு வருகின்றன என்பதை அறிவீர்கள் அல்லவா? அது உங்கள் தினசரி வாழ்க்கையை எவ்வகையில் பாதிக்கிறது?

    ~ கவலை. எல்லைத்தகராறு எல்லாம் தொல்லை கொடுப்பவை. மல்லுக்கு நிற்பவை. சொல்லில் தொடக்கம். கல் வீச்சில் அடக்கம்.

    ReplyDelete