எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, February 04, 2014

நைமிசாரண்யம்-- அநுமன் கடியில்--படங்களுடன்

நைமிசாரண்யத்தில் ஒவ்வொரு இடமாகப் பார்த்துவிட்டுக் கடைசியில் லலிதா தேவி கோயிலைப் பார்க்க இருந்தோம்.  அதற்கு முன்னால் நாங்கள் சென்ற இடம் அனுமன் கடி என்னும் இடம்.  சித்ரகூடத்தில் அனுமான் தாராவை மலை ஏறிப் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் எங்களுக்கு நிறையவே இருந்தது.
அந்த வருத்தம் இங்கே அறுபது, எழுபது படிகள் மேலே ஏறி அனுமான் கடியில் அனுமனைத் தரிசிக்கையில் கொஞ்சம் தீர்ந்தது என்பதே உண்மை.

பாதாளத்தில் இருந்து அநுமன் மேலே வருவதால் மிகப் பெரிய உருவம். அதை முழுவதும் எடுக்க முடியலை.  ஓரளவுக்குக் கீழ்ப் பாதியும், மேல் பாதியுமாக எடுத்தேன்.  என்றாலும் முழுவதும் வரவில்லை. :(



அதே அநுமனைக் கொஞ்சம் தள்ளி நின்று எடுக்க முயன்றேன்.  கீழ்ப்பாகம் வரலை. :(  ஏணி மேல் ஏறித்தான் அபிஷேஹம், அலங்காரம் எல்லாமும். :)

இங்கே ஶ்ரீராமனையும், லக்ஷ்மணனையும் அஹிராவணன், மஹி ராவணன் இருவரிடமிருந்தும் காத்து அனுமன் அழைத்து வந்த இடமாகச் சொல்லப்படுகிறது.  இருவரையும் தன் தோள்களில் சுமந்து  கொண்டு அசுரன் அஹிராவணன்  பாதாளத்திற்குச் சென்றுவிட்டானாம்.  இருவரையும் அனுமன் பாதாளம் சென்று அஹிராவணனைக் கொன்று மீட்டு வந்த போது அனுமனின் மகன் மகரத்வஜன் அனுமனின் பாதையை மாற்றிச் செல்லும்படி சொல்ல, அப்போது அனுமன் அவர்களோடு வந்து சேர்ந்த இடம் நைமிசாரண்யம் எனப்படுகிறது.


இங்கே அனுமனின் பிள்ளையாகக் கருதப்படும் மகரத்வஜனுக்கு ஒரு சந்நிதி இருக்கிறது.  அதைத் தவிரவும் பல சந்நிதிகள் இருக்கின்றன.

 நம்ம நண்பர்!  இவர் இல்லாத இடமே இல்லை. :)))


நாங்கள் சென்ற சமயம் அங்கே பல சாதுக்களுக்கு ஆந்திராவில் இருந்து வந்திருந்த ஒரு தெலுங்குக் குடும்பம் அன்னதானம் அளித்துக் கொண்டிருந்தது.  அன்னதானம் என்றால் சும்மா சாதாரணச் சாப்பாடு எல்லாம் இல்லை. பூரி சப்ஜி, பாயசம், கோதுமை லட்டு, சாதம், தால் போன்ற முழுச் சாப்பாடு.  எல்லாரும் பந்தியில் அமர்ந்து கொண்டிருக்க அவர்களே பரிமாறினார்கள்.  படம் எடுக்கவில்லை.  ஏனெனில் பெண்கள் அதிகமாய் இருந்ததால் அவங்க படங்கள் எடுப்பதை விரும்ப மாட்டார்கள் என்று எடுக்கவில்லை.


8 comments:

  1. படங்கள் மூலம் எங்களுக்கும் தரிசனம் கிடைத்தது அம்மா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. பிரம்மாண்ட ஆஞ்சநேயரா? அப்படியெல்லாம் அன்னதானத்தில் பங்கு கொண்டு சாதுக்கள் சாப்பிடுவார்களா?

    ReplyDelete
  3. வாங்க டிடி நன்றி.

    ReplyDelete
  4. ஆமாம் ஶ்ரீராம், பிரம்மாண்ட ஆஞ்சநேயர் தான். சாதுக்கள் என்றால் இவர்களை நம்ம ஊர் ஆண்டிப்பண்டாரங்கள் என்று சொல்லலாமோ? முன்னெல்லாம் காவடி மாதிரி கட்டிக் கொண்டு பித்தளைப் பானைகளில் சாதம், குழம்பு, காய்கள் என வீடு வீடாக வந்து வாங்குவார்கள்.
    ஆனால் ஒன்று இம்மாதிரி சாதுக்களுக்கு எல்லாக் கோயில்களிலும் அன்னதானம் நடந்து வருகிறது. நல்ல சாப்பாடாகவே கொடுக்கின்றனர்.

    ReplyDelete
  5. நைமிசாரண்யம் தரிசனம் கிடைத்து விட்டது உங்கள் பதிவின் மூலம்.
    நன்றி.

    ReplyDelete
  6. நல்ல தரிசனம்.

    நன்றி.

    ReplyDelete
  7. அழகிய படங்களுடன் தர்சனம்.

    ReplyDelete
  8. லக்னோ வந்துருக்கோம். நாளை காலை நைமிசாரண்யம் போகிறோம். அதான் இங்கே வந்து எட்டிப் பார்த்தேன்.

    ReplyDelete