மூத்த பையன் ராஜூ பிறந்ததில் இருந்தே தைரியமானவனாக இருந்ததை ரவி கண்டு பிடித்திருக்கிறான். முதல் குழந்தை என்பதாலும், அவனுடைய இயல்பான அரவணைத்துச் செல்லும் பழக்கத்தாலும் குடும்பத்தில் அவனுக்குத் தனி இடம் உண்டு. அதோடு ரவி தன்னருகே அவனை வைத்துக் கொண்டு அனைத்தையும் சொல்லிக் கொடுப்பான். அப்படி அவன் சொல்லிக் கொடுத்த பல விஷயங்களில் நீச்சல் பயிற்சியும் ஒன்று. இந்த வயதுக்குள்ளாக நன்றாகவே நீந்திப் பழகி இருந்தான் ராஜு. ஆகவே அவன் தொட்டியில் முழுகி இறந்தது ரவிக்கு ஆச்சரியத்தையே அளித்தது. மூச்சை அடக்கியவண்ணம் உள்ளே இருக்கத் தெரியும் அவனுக்கு. இது எப்படி நிகழ்ந்தது?
சாந்தி ஓடோடியும் வந்தாள். ரவி சிலை போல் நிற்பதையும் பெண் குழந்தை சுஜா பெரிய குரலில் அழுவதையும் பார்த்த வண்ணம் வந்தவளுக்குப் பிள்ளையின் கால் தொட்டிக்கு வெளியே தெரிவதைக் கண்டதும், ஏதோ விளையாட்டு எனத் தோன்றியது. "என்ன விளையாட்டு இது, குழந்தையை அழவிட்டபடி!" என்று ரவியைக் கடிந்த படி பிள்ளையை உலுக்கி அழைத்தாள். பதிலே இல்லை என்பதோடு அவள் தொட்ட கால் விறைப்பாக அன்றோ இருக்கிறது! சாந்திக்கு சந்தேகம்! "என்ன பண்ணினீர்கள் என் குழந்தையை?" என்று ரவியைப் பார்த்து ஆத்திரமாய்க் கேட்டாள். ரவி தான் குழந்தையை ஏதோ பண்ணி அவன் இறந்துவிட்டான் என்றே சாந்திக்குத் தோன்றியது. ரவி அவளை ஒரு கணம் துச்சமாய்ப் பார்த்தான். அடுத்த கணம் தன் கைகளில் இருந்த சிவப்பு நாடாவில் ஆழ்ந்தான். எங்கே பார்த்திருக்கிறோம் இதை!
ஆஹா, இப்போது நினைவு வந்துவிட்டது. அன்று இந்தக் குழந்தைக்குப் பொன்னுக்கு வீங்கி வருவதற்கு முதல்நாள் தொட்டிலில் மேலே இருந்து கட்டித் தொங்கவிடப் பட்டிருந்த பொம்மையை இந்த நாடாவை வைத்துத் தானே அந்தக் குழந்தை நெரித்துக் கொண்டிருந்தது! பார்க்க என்னமோ அவள் அந்த பொம்மையையும், நாடாவையும் வைத்து விளையாடுவதாகத் தெரிந்தாலும் உண்மையில் பொம்மையின் கழுத்தில் இதை வைத்து இறுக்கிக் கொண்டிருந்தாள் அவள். ரவி போய்ப் பிடுங்கப் போனபோது அது நிமிர்ந்து ரவியைப் பார்த்த பார்வை! எத்தனை ஜென்மத்திலும் மறக்க இயலாதது.
கோபம், ஆத்திரம், வெறுப்பு, கசப்பு, பகை என அனைத்து உணர்ச்சிகளையும் அந்த ஒரு பார்வை காட்டிக் கொடுத்தது. லக்ஷம் தேள்களும், பாம்புகளும் அவனை ஒரே சமயம் கடித்தது போல் உணர்ந்தான். அதுவோ உடனேயே நாடாவை விட்டு விடுகிறாப்போல் பாவனையுடன் தூக்கி எறிந்தது. அதையும் பொம்மையையும் ரவி தான் எடுத்து வைத்தான். பொம்மையை மறுபடி தொட்டிலில் கட்டப் போனால் அது வீரிட்டு அழுதது. சாந்தி வந்து ஏதானும் சொல்லப் போகிறாளே என ரவியும் விட்டுவிட்டான். இப்போது.... இப்போது,,,, பிள்ளையின் கழுத்தைப் பார்க்க வேண்டுமே. ரவி குனிந்து தண்ணீர்த் தொட்டியிலிருந்து பிள்ளையை எடுக்கப் போனான். "தொடாதீர்கள் அவனை! செய்யறதையும் செய்துவிட்டு இங்கே நின்று கொண்டு அப்பாவி வேஷம் போட்டு என்னை ஏமாத்த நினைப்பா?" என்று சாந்தி கத்த, அதைக் கவனிக்காமல் பிள்ளையை எடுத்த ரவி அவன் கழுத்தை உன்னிப்பாய்க் கவனித்தான். ஆஹா, கழுத்தை நெரித்த அடையாளம் தெரிகிறதே!
ஆஹா, அந்தப் பிசாசு, பேய், என் பிள்ளையைக் கழுத்தை நெரித்துவிட்டுத் தண்ணீரில் தள்ளி இருக்கிறது. அப்படி என்றால் அதற்கு எத்தனை முன் யோசனை இருந்திருக்கும்? அது என்ன நிஜக் குழந்தையா? பேய், பிசாசு இல்லை ஆவி வகையைச் சேர்ந்ததா? ஏன் இப்படிப் பண்ணுகிறது! அதற்கு என்னதான் வேண்டும்! என் குடும்பத்தையே ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்ட நினைக்கிறதே! சாந்தியிடம் இதைச் சொன்னாலும் அவள் ஏற்க மாட்டாளே! இப்போ என் அடுத்த வேலை இருக்கும் ஒரே பெண் குழந்தையை மட்டுமாவது பாதுகாக்க வேண்டும். அறையை விட்டு வெளியேறினான் ரவி. தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். சாந்தி செய்வதறியாது திகைத்துப் போனாள். அவளால் அந்தக் குழந்தையைக் கொஞ்சம் கூட சந்தேகிக்க முடியவில்லை. முதலில் நடந்தவை இரண்டுமே தற்செயல் என நினைத்தவளுக்கு இப்போது அப்படி நினைக்க முடியவில்லை. ஆனால் அவள் கணவன் ஏன் இப்படிச் செய்ய வேண்டும்? சாத்தான் என அவன் வர்ணிக்கும் இந்த நாடோடிக் குழந்தையை வளர்ப்பதாலா? குழந்தையையே பார்த்தாள் சாந்தி. அவளைப் பார்த்துக் கள்ளமின்றி வெள்ளைச் சிரிப்புச் சிரித்தது அது. தன்னையுமறியாமல் அதைத் தூக்கி முத்தமிட்டு மார்போடு அணைத்துக் கொண்டாள்.

//தன்னையுமறியாமல் அதைத் தூக்கி முத்தமிட்டு மார்போடு அணைத்துக் கொண்டாள். //
ReplyDeleteஅட கஷ்டமே.... கணவன் மேலேயே சந்தேகம் வேறா? அட கஷ்டமே..!
பையன் இறந்து கிடக்கும்போது இந்தக் குழந்தையை எடுத்து அனைத்துக் கொள்ளத் தோன்றுமோ...ம்ம்ம்...
"அணைத்துக்"
ReplyDeleteஹிஹிஹி..
இனியாவது அந்தப் பேயை எங்காவாது கொண்டு போய் விட வேண்டியது தானே...?
ReplyDeleteஅடுத்த பலி..... கஷ்டம் இன்னும் எத்தனை எத்தனை இழப்போ.... :((((
ReplyDeleteபோகிற போக்கைப் பார்த்தால் ரவி தான் வில்லன் போலிருக்கே! நானும் சாந்தி மாதிரியே நினைக்க ஆரம்பித்துவிட்டேனோ?
ReplyDelete(வரிசையாக எல்லாப் பகுதிகளையும் படித்துக் கொண்டே வந்துவிட்டேன்.)
ReplyDeleteI do not want to hazard any guess. That is your call.
இது என்ன தொடர் கொலைகளாக இருக்குதே! சீக்கிரம் முடிவை சொல்லுங்க!
ReplyDeleteஶ்ரீராம், இம்பொசிஷன்லேருந்து தப்பிச்சுட்டீங்க! :)
ReplyDeleteடிடி, அப்படி எல்லாம் சொன்னதைக் கேட்டால் தான் தேவலையே! :(
ReplyDeleteவெங்கட், இழக்க இனி என்ன இருக்கு?
ReplyDeleteரஞ்சனி, அப்படீங்கறீங்க??
ReplyDeleteஜிஎம்பி சார், ஹிஹிஹிஹி, நல்ல பதில் தான். :)))
ReplyDeleteசுரேஷ், முடிவை முதல்லேயே சொல்லிட்டால் சுவாரசியமே இல்லையே! :)
ReplyDelete//கோபம், ஆத்திரம், வெறுப்பு, கசப்பு, பகை என அனைத்து உணர்ச்சிகளையும் அந்த ஒரு பார்வை காட்டிக் கொடுத்தது
ReplyDeleteநிஜ வாழ்க்கையில் ஒருத்தர் இப்படித் தான் பார்ப்பார்.. நடுங்க வைக்கும்.
முடிவு திருப்பம் போல இருக்குதே?
அப்பாதுரை, சிவாஜியைச் சொல்றீங்களோ? ஹிஹிஹிஹி!
ReplyDeleteமுடிவு திருப்பம் எல்லாம் இல்லை அப்பாதுரை, ஒரிஜினல் முடிவு தான். ஆனால் போற போக்குத் தான் சரியில்லை! :))))
ReplyDeleteஏன் இப்படிப் பண்ணுகிறது! அதற்கு என்னதான் வேண்டும்! என் குடும்பத்தையே ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்ட நினைக்கிறதே! //
ReplyDeleteஅதுதானே! அதற்கு என்ன வேண்டும்?
இவ்வளவு பகை உணர்ச்சியும் உயிர்பலியும் செய்ய காரணம் என்ன?
இதே வேலையா உட்கார்ந்து படிச்சு முடிச்சுட்டேன். சீக்கிரம் மீதியையும் போடுங்க கீதா.
ReplyDelete