அந்தக் குழந்தையைச் சாதாரணமாய்ப் பார்ப்பவர் எவருக்கும் அதன் பார்வையின் மாறுதல்கள் தெரிவதில்லை. ஆனால் ரவியை அது பார்க்கும்போதெல்லாம். அந்தக் கண்களின் கருமணிகளின் ஒவ்வொரு அசைவிலும் இனம் காண முடியா வெறுப்பையும், கொடூரத்தையுமே காண்கிறான். அன்று அப்படித்தான் அவனுடைய மூத்த மகன் இறந்து போய் ஒரு மாதம் ஆகி இருந்தது. சின்னவனும், அவனுடைய ஒரே பெண்ணும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவன் பெண் விளையாட்டுப் போக்கில், "அண்ணாவையும் கூப்பிடு!" என இரண்டாம் மகனிடம் சொல்ல, அவன் அப்பாவியாக, "அண்ணா தான் செத்துப் போயிட்டானே!" என்று சொல்ல, அவன் பெண்ணும், "ஓ, அப்படி எனில் இனிமேல் அண்ணா நம்மோடு விளையாடவே மாட்டானா?" என்று ஏக்கமாய்க் கேட்டாள். அங்கே இருந்த ரவியால் கண்ணீரை அடக்க முடியவில்லை. குழந்தைகளுக்குத் தெரியாமல் இருக்க வேண்டி அங்கிருந்து எழுந்து சென்றவன் அறையில் கட்டப்பட்டிருந்த தொட்டிலுக்கு அருகே வந்து நின்று பார்த்தான்.
குழந்தை தூங்குகிறதோ என அவன் நினைக்கையிலேயே அது தன் பளிங்குக் கண்களைத் திறந்து அவனைப் பார்த்தது. அதில் தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்? கடவுளே, இந்தக் குழந்தையிடமிருந்து எப்பாடுபட்டாவது மற்ற இருவரையும் காப்பாற்றி ஆக வேண்டுமே என நினைத்துக் கொண்டான். அடுத்த கணம் அவன் நினைத்தது புரிந்தாற்போல் அந்தக் குழந்தை தொட்டிலில் இருந்தே அவன் குழந்தைகள் விளையாடும் இடம் நோக்கிக் கொடூரமான பார்வையைச் செலுத்திவிட்டுப் பின் அவனையும் பார்த்தது. அவனைப் பார்த்து அது சிரித்த சிரிப்பில் ஏளனம் தென்பட்டாற்போல் ரவிக்குத் தோன்றியது. "விட மாட்டேன், அவர்களை! " எனச் சொல்லாமல் சொல்லுவது போலவும் தோன்றியது. ரவி வேகமாய் அங்கிருந்து அகன்றான். இனம் தெரியாக் கவலையுடனும், பாசத்துடனும் குழந்தைகளை அணைத்துக் கொண்டான். தொட்டிலில் குழந்தை கடகடவெனச் சிரித்தது. உன் பாசமும், நேசமும் இன்னும் எத்தனை நாட்கள் எனச் சொல்வது போல் ரவிக்குத் தோன்றியது.
சாந்தியிடம் சென்று மறுபடி மறுபடி கெஞ்சினான். அவளுக்கு எவ்வளவோ எடுத்துக் கூறிப் புரிய வைக்க முயன்றான். சாந்தி காது கொடுத்தே கேட்கவில்லை. அப்போது ரவிக்குள் ஒரு யோசனை. சாந்தியும் அவனும் பிரிந்து இருப்பதால் தானே இந்த இடைவெளி?? ஏன் பிரிந்து இருக்க வேண்டும்? அதுவும் இந்தக் குழந்தைக்காக! சாந்தி அவன் மனைவி. பத்து வருடங்களாக அவனுடன் இன்பத்திலும், துன்பத்திலும் பிணைந்தவள். எங்கிருந்தோ வந்த ஒரு அநாதைக் குழந்தைக்காக அவர்கள் ஏன் பிரிந்திருக்க வேண்டும்? இன்றிரவே சாந்தியிடம் சென்று அவளிடம் இதமாகப் பிரியமாகப் பேசிப் புரிய வைக்க வேண்டும் என ரவி நினைத்துக் கொண்டான். ரவியின் முகம் திடீரெனப் பளிச்சிட்டதைக் கண்ட சாந்தி, என்ன விஷயம் என விசாரிக்கையில், ரவி அவளைப் பார்த்துச் சிரித்த வண்ணம், இரவு சொல்கிறேன் என்றதும், அவன் பார்வையையும், சொன்னதின் உள்ளார்ந்த அர்த்தத்தையும் புரிந்து கொண்ட சாந்தி உள்ளூர சந்தோஷமே அடைந்தாள்.
கிட்டத்தட்ட ஆறுமாத காலமாக விலகி இருந்த ரவி தன்னை நெருங்குவது குறித்து அவளுக்கு மகிழ்ச்சியே. அவனைத் தடுக்கக் கூடாது என்றும் நினைத்தாள். உள்ளூர ரவிக்கும், அவளுக்குமாய்ப் பிறந்த குழந்தைகளில் இரண்டு இறந்தது நினைக்கையில் சாந்தியின் மனதிலும் சங்கடமாகத் தான் இருந்தது. அதைப் போக்க வேண்டும். அதற்கு அவளும் ரவியும் மீண்டும் இணைய வேண்டும். அவர்கள் சொந்த ரத்தத்தில் மீண்டும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். ரவியைப் பார்த்தாள் சாந்தி. அவள் பார்வையிலேயே அவள் மனதைப் புரிந்து கொண்ட ரவி அவள் கைகளைப் பிடித்து அழுத்தினான். இருவர் கைகளும் இணைந்த அந்த நொடியிலேயே இருவருக்கும் அவரவர் மனமும், எண்ணங்களும் புரிய வந்தன. ஆனால் அடுத்த நொடியிலேயே இந்தச் சனியனையும் அவள் பக்கத்தில் படுக்க வைக்காமல் இருக்க வேண்டுமே என ரவியும், அந்தக் குழந்தையை ஒன்றும் சொல்லாமல் இருக்கணுமே என சாந்தியும் நினைக்கக் கைகள் விலகின. வருத்தத்துடன் அங்கிருந்து நகர்ந்த ரவி இரவுப் பொழுதுக்குக் காத்திருக்கலானான். அன்று அலுவலில் வேலை காரணமாகக் கொஞ்சம் வெளியே சென்றிருந்த ரவி மாலை வீடு திரும்பவே நேரம் ஆனது.
என்றாலும் காலை அலுவலகம் கிளம்பும்போது சாந்தியுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கை நினைவில் வரக் கொஞ்சம் சந்தோஷத்துடனும், உல்லாசத்துடனுமே வீட்டுக்கு வந்தான். அவன் வரும்போதே அவனிடமிருந்து மல்லிகை வாசம். வீட்டுக்கு வந்தவன் கண்கள் எதிரே சாந்தி தென்படவே இல்லை. அவன் குழந்தைகள் இரண்டும் படித்துக் கொண்டிருந்தன. சின்னவள் சுஜா தன் கின்டர் கார்ட்டன் படிப்புக்கான புத்தகங்களில் வண்ணம் அடித்துக் கொண்டிருக்கப் பெரியவன் பாடம் எழுதிக் கொண்டிருந்தான். "அம்மா, எங்கே?" என அவர்களிடம் கேட்டான் ரவி. அதற்கு சுஜா, "குட்டிப்பாப்பாவுக்கு உடம்பு சரியில்லை. அதான் அம்மா அங்கே இருக்கா. எங்களை எல்லாம் அங்கே வரக் கூடாதுனு சொல்லிட்டா!" என்றாள் வருத்தமாக.
"அப்படி என்ன உடம்பு?" என்று கேட்டான் ரவி.
இனி வரப்போகும் நிகழ்வு மூலத்தில் உண்டு. ஆனால் முன், பின்னாக இருக்கும் என நினைக்கிறேன். இதற்கு முன்னர் கதைச்சுருக்கம் கொடுத்தப்போ இந்த நிகழ்வைப் பின்னால் வரும்படி அமைத்திருந்தேன். இப்போது முன்னால் அமைத்திருக்கிறேன். இது என் சொந்த விருப்பம் எனச் சொல்லமுடியவில்லை. ஏனெனில் அவ்வப்போது தான் எழுதுகிறேன். முன்னால் எழுதி வைத்துக்கொள்ளவில்லை. நேரமும் இல்லை. ஆகையால் கதையை எழுதும்போது அதன் போக்கில் போக வேண்டி இருக்கு! :(

குழந்தை புதிய திட்டமிட்டு விட்டதா.... கதையின் போக்கு தெரிந்தால்தானே உங்கள் பின்குறிப்பின் பொருள் விளங்கும்! ம்ம்ம்... தொ...ட...ர்...கி...றே...ன்!
ReplyDeleteசுவாரஸ்யம் அதிகமாக்கிக் கொண்டே வருகிறது... நீங்கள் போகிற போக்கில் தொடர்ந்து வருகிறோம் அம்மா...
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், புதிய திட்டமா என்றெல்லாம் தெரியவில்லை. இன்றைய பதிவை எழுதிட்டு முன்னர் எழுதியதோடு ஒப்பிட்டபோது மாற்றம் தெரிந்தது. அதைக் குறிப்பிட்டிருக்க வேண்டாமோ? :(
ReplyDeleteவாங்க டிடி, தொடர்ந்து வாருங்கள்.
ReplyDelete
ReplyDeleteதொடர்கிறேன்
ப்கீர்னு இருக்கு. கீதா.நான் கண்ணனோடயே இருந்து கொள்கிறேன்.
ReplyDeleteவாங்க ஜிஎம்பி சார்!
ReplyDeleteஹாஹா, வல்லி இப்படி பயப்படலாமா? :))))
ReplyDeleteரொம்பவே பயமுறுத்துகிறது கதை! அடுத்து என்ன ஆச்சோ? தவிக்கிறது மனசு! நன்றி!
ReplyDeleteதொடர்வதற்கு நன்றி சுரேஷ்!
ReplyDeleteகுட்டி பாப்பா வேறு குழந்தை வேண்டாம் என்றுமுடிவு செய்து விட்ட்தோ!
ReplyDelete