எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, April 10, 2014

காக்கைக் கூட்டில் குயிலா, கழுகா?--3

ரவி அலுவலகத்திலிருந்து வரும்போது சாந்தி அந்தப் புதிய குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தாள்.  மற்ற மூன்று குழந்தைகளும் அவரவர் பள்ளிப் பாடங்களிலும், விளையாட்டிலும் லயித்திருக்க, அவனுடைய கடைசிக் குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது.  தூக்கத்தில் அதன் உடல் தூக்கித் தூக்கிப் போட்டது.  ரவி குழந்தைக்கு ஏதோ அதிர்ச்சி ஆகி இருக்கிறது என நினைத்தான்.  இதற்குள்ளாக சாந்தி அந்தப் புதிய குழந்தையை, (அதற்கு ஷோபா என்று பெயரிட்டிருந்தாள் இதற்குள்ளாக, ம்ஹ்ஹூம் இது ஷோபையைத் தரவா போகிறது என மனதில் நினைத்தான் ரவி.)தொட்டிலில் போட்டுத் தூங்க வைக்க வேண்டி அங்கே வந்தாள். அவளிடம் சாந்தி அந்தக் குழந்தையைக் கொடுத்துச் சற்றுப் பிடித்திருக்கச் சொல்லிக் கேட்க ரவி திட்டவட்டமாக மறுத்தான். கோபமாக அவனைப் பார்த்தாள் சாந்தி.  வேறு வழியில்லாமல் அதைக் கையில் வாங்கியவன் நெருப்பைத் தொட்டது போல் தவித்தான். கைகளையும், கால்களையும் உதைத்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தை அவன் முகத்தில் மூக்கைப் பார்த்து விண்ணென ஓர் உதை விட்டது.  ரவியின் மூக்கில் ரத்தமே வந்துவிட்டது.

உடனே கோபமாக சாந்தியைப்பார்த்து, "இதோ பார், சாந்தி, உன் செல்லம் பண்ணி இருக்கும் காரியத்தை! இதைப் போய் நம்ம பாலு பக்கம் படுக்க வைக்கிறாயே!  வேண்டாம்.  ஆபத்து!  பாலுவுக்கு ஏற்கெனவே உடம்பு தூக்கித் தூக்கிப் போடுகிறது. இதைப் பக்கத்தில் விட்டாயானால் அவன் உருண்டு போய்த் தொட்டிலின் ஓரமாய்ப் படுக்கிறான்.  அப்புறமாக் கீழே விழுந்துவிடப் போகிறான். " என்று சற்றே கலக்கமாய்ச் சொல்ல, அவனைப் பார்த்த சாந்தி, அவன் மூக்கிலிருந்து ரத்தம் வடிவதைப் பார்த்துச் சிரித்தாள்.  "சின்னக் குழந்தை உதைத்ததிலா இப்படி ரத்தம் வடியுது? உங்க மூக்கில் உள்ளே புண்ணாகி இருந்திருக்கணும்.  குழந்தையின் கால் பட்டதும் அது உடைஞ்சிருக்கு." என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு அவன் சொன்னதே காதில் விழாதது போல் அந்த ஷோபாவையும், பாலுவையும் அருகருகே படுக்க வைத்தாள்.  இப்போது பிடித்தே பகிர்ந்து கொள்ள அவர்களைப் பழக்குகிறோம் என அவள் நினைப்பு.  பின்னர் ரவியும், அவளும் உணவருந்திவிட்டுப் படுக்கச் சென்றனர்.  குழந்தை பால் குடிப்பதால் இரவு நேரத்தில் சாந்தி குழந்தையை விட்டுக் கொண்டு தனியாகவே படுப்பாள். அது போல் அன்றும் படுத்தாள்.

என்றுமில்லாத அளவுக்கு அன்று அவளுக்குத் தூக்கம், தூக்கமாக வந்தது. தொட்டிலில் இரு குழந்தைகளும் பத்திரமாய்ப் படுத்திருப்பதை உறுதி செய்து கொண்டு வந்து தன் கட்டிலில் படுத்தாள்.  தூங்கிப் போனாள்.  நடு இரவில் திடீரெனக்  குழந்தையின் அழுகுரல் கேட்டு விழித்த சாந்தி விளக்கைப் போட்டாள்.  தொட்டிலில் அவள் பக்கமாக பாலுவும், பாலுவுக்கு அந்தப் பக்கமாக ஷோபாவையும் படுக்க வைத்திருந்தாள்.  இப்போது பாலு அங்கே அவள் போட்ட இடத்தில் இல்லை. என்ன இது? ஆனால் அழுகுரல் கேட்டதே! ஷோபாவைப் பார்த்தாள்.  தூக்கத்திலேயே சிரித்துக் கொண்டிருந்தாள் அவள். தொட்டிலைச் சுற்றி வந்து பார்த்த சாந்திக்குத் தூக்கி வாரிப் போட்டது.  அங்கே பாலு கீழே விழுந்து கிடந்தான். உடம்பெல்லாம் முறுக்கியவண்ணம், கண்கள் கோரமாகப் பிதுங்கிய வண்ணம் குழந்தை விழுந்து கிடந்தான். கைகள் நடுங்க அவனைத் தூக்கிய சாந்தி தூக்கும்போதே உயிரில்லை என்பதைப் புரிந்து கொண்டாள்.  "ரவி"  "ரவி" என்று அவள் கத்திய கத்தலில் வீடே அதிர்ந்தது.


நன்கு தூங்கிக் கொண்டிருந்த ரவிக்கு பாலு தொட்டிலில் இருந்து விழுவது போல் கனவு வர விழித்தான்.  விழித்தவனுக்கு, "ரவி, "ரவி" என்னும் சாந்தியின் அலறல் கேட்க, குழந்தைகள் படுத்திருக்கும் நர்சரிக்கு ஓடோடி வந்தான். அங்கே சாந்தி பாலுவைக் கைகளில் வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள். மாலை மாலையாக அவள் கண்களில் இருந்து நீர் வடிந்து கொண்டிருந்தது. ரவிக்கு எதுவுமே கேட்கவோ, பேசவோ தோன்றவில்லை.  என்ன நடந்திருக்கும் என்று புரிந்து விட்டது அவனுக்கு.  அறைக்குள் மெல்ல மெல்ல வந்தவன் தள்ளாடும் கால்களுடன் தொட்டிலருகே வந்து நின்றான்.  தன்னிச்சையாக அவன் கண்கள் தொட்டிலைப் பார்க்க அந்த ஷோபா விழித்துக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.  அவள் கண்களில் அது என்ன உணர்வு?  இனம் தெரியாத திருப்தி? அல்லது தான் வென்றுவிட்டோம் என்னும் உற்சாகம்? அவனை ஜெயித்த உணர்வு? ரவிக்கு எல்லாம் கலந்து தெரிவது போல் இருந்தது.  தன் கைகளைத் தூக்கி அதன் கழுத்தை நெரிக்கப் போனான். அப்போது அந்தக் குழந்தை அவனைப் பார்த்த பார்வை.  ரவியின் உடம்பே சில்லிட்டது. செய்வதறியாமல் திகைத்துப் போய் நின்றான்.

சாந்தியின் அழுகுரல் மட்டுமே தனித்துக் கேட்டது. 

16 comments:

  1. அடடா.... குழந்தை இறந்து விட்டதே.....

    ஏன் இப்படி.... :(

    ReplyDelete
  2. சாந்தி... எப்பம்மா முழிச்சிக்கப் போறே... பாரு ஆபத்து... அந்தக் குழந்தையை நம்பாதே.. என்ன? பாவம் பாலு.

    ReplyDelete
  3. குழந்தை இறந்துபோனது வருத்தமளிக்கிறது! சீக்கிரம் பிழைக்க வையுங்க!

    ReplyDelete
  4. கனவு தானே...?

    கனவாகவே இருக்கட்டுமே...

    ReplyDelete
  5. ஆமாம், குழந்தை இறந்து தான் விட்டது. :(

    ReplyDelete
  6. ஶ்ரீராம், சாந்தி முழிச்சுக்கவே மாட்டா! என்ன சொல்றீங்க? :)

    ReplyDelete
  7. சுரேஷ், பிழைக்காது. :(

    ReplyDelete
  8. அப்பாதுரை, கண் பிடுங்கி நீலன் என்னவானான்? :))) விட மாட்டேனே!

    ReplyDelete
  9. டிடி, கனவெல்லாம் இல்லைப்பா. நிஜம் தான். :(

    ReplyDelete
  10. //ஶ்ரீராம், சாந்தி முழிச்சுக்கவே மாட்டா! என்ன சொல்றீங்க? :)//

    ஐயோ... அவளும் காலியா! பூடுவாளா? :)))

    ReplyDelete
  11. ஒரு சின்ன வேண்டுகோள் - தலைப்பின் அருகே எத்தைனையாவது பாகம் என்று குறிப்பிட இயலுமா? தினமும் வராமல் எப்போதாவது வந்து சேர்த்து வைத்துப் படிக்க நினைக்கும் என் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.

    மிக்க நன்றி கீதா.

    ReplyDelete
  12. இமா, உங்க விருப்பத்தை நிறைவேற்றி விட்டேன். :))))

    ReplyDelete
  13. ஸ்ரீராம், பொறுத்துப் பாருங்க. :)))

    ReplyDelete
  14. அந்த நாடோடிப் பெண் பெற்றுவிட்டுப் போனது குழந்தையா பிசாசா.?

    ReplyDelete
  15. வாங்க ஜிஎம்பி சார், மூலக்கதையில் அந்தப் பெண்ணை ஒரு நாடோடியாகத் தான் சித்திரித்திருப்பார்கள். :)))

    ReplyDelete