எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, March 28, 2015

ஶ்ரீராமன் பிறந்தான்!








ஶ்ரீராமநவமி மிக எளிமையான முறையில் கொண்டாடப் பட்டது.  பாயசம், வடை, பாசிப்பருப்புச் சுண்டல், (மாமியார் வீட்டில் வடைப்பருப்பு வழக்கம் இல்லை)பானகம், நீர் மோர், சாதம், பருப்பு, சாம்பார், ரசம். எல்லாமும் நிவேதனம் செய்து சாப்பிட்டும் ஆகி விட்டது. எல்லா நிவேதனங்களுடனும் படம் எடுக்கலை.  முதலில் படமே வேண்டாம்னு நினைச்சுட்டு எடுக்கலை. அப்புறமாத் தான் ராமரை மட்டுமாவது எடுக்கலாம்னு நினைச்சு எடுத்தேன்.  அப்போப் பானகம் நீர் மோர், வெற்றிலை, பாக்கு, பழம் கீழே இருந்தது.  அதை மட்டும் எடுத்திருக்கேன். இந்த வருஷம் உங்களுக்கெல்லாம் பானகமும், நீர்மோரும் தான். :)))) வடை, சுண்டல் எல்லாம் நாங்களே சாப்பிட்டாச்சு!

ராமருக்குக் கதம்ப மாலை நான் கட்டினேன்.  துளசி மாலையும் கட்ட வாங்கி வைச்சுட்டுக் கட்ட முடியலை.  ரொம்ப நேரம் உட்காரவும் முடியலை. நிற்கவும் முடியலை. வலி வந்துடுது. :(

27 comments:

  1. மிக அருமை...
    ஸ்ரீராமநவமி நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. ஸ்ரீ ராமனுக்கு ஜே.
    லக்ஷ்மணனுக்கு ஜே
    சீதா பிராட்டிக்கு ஜே
    அனுமனுக்கு ஜே.

    கீதா மாமி ஆத்து
    நீர் மோர் பானகத்துக்கு
    ஜே. ஜே.

    சுப்பு தாத்தா.
    www.menakasury.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, இந்த வருஷம் மத்தவங்களுக்கு எல்லாம் பானகம் , நீர்மோர் தான். நாங்க ரெண்டு பேர் மட்டும் பாயசம், வடை, சுண்டல் சாப்பிட்டுட்டோம். :)

      Delete
  3. வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  4. ஹாப்பி பர்த் டே ராம்ஸ்!

    ReplyDelete
    Replies
    1. தாங்கீஸ், தாங்கீஸ்

      Delete
  5. வடை சுண்டல் கிடையாதா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..... மீதி எல்லாம் நீங்களே வெச்சுக்குங்க!

    ReplyDelete
    Replies
    1. வடை, சுண்டல், பாயசம் எல்லாம் சாப்பிட்டாச்சே!

      Delete
  6. Thanks for panagam & neer more, vadai & sundal illaina nanga comment poda mattom

    ReplyDelete
    Replies
    1. ஹிஹி, அதான் போட்டிருக்கீங்களே!

      Delete
  7. சகல சௌபாக்கியங்களுடன் சீரும் சிறப்புமாக நீடூழி ஸ்ரீராமன் வாழ வாழ்த்துகிறேன்.பிரசாதங்களை எல்லாம் பாவனையில் அருந்தினேன். நன்றி மேடம்

    ReplyDelete
    Replies
    1. இந்த உலகம் உள்ளவரை ஶ்ரீராமன் வாழ்வான் ஐயா. சந்தேகமே இல்லை. நன்றி.

      Delete
  8. ஶ்ரீராமஜெயம்....... ஶ்ரீராமஜெயம்.. ஶ்ரீராமஜெயம்.

    ReplyDelete
    Replies
    1. அட? உங்க வீட்டு மெனு கொடுப்பீங்கனு பார்த்தால், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)

      Delete
    2. நீர்மோர், பானகம், அரிசிப் பாயசம். அது கூட மாலைதான் முடிந்தது.

      Delete
  9. ஜெய் ஸ்ரீராம்! எங்காத்துல பானகம் மட்டும்தான்!

    ReplyDelete
    Replies
    1. என்ன ஆச்சு? பத்தியமாப் போட்டுட்டீங்க?

      Delete
  10. ஸ்ரீ ராம ராமா ..

    ReplyDelete
    Replies
    1. வாங்க அனுராதா பிரேம், நன்றிம்மா. முதல் வருகைனு நினைக்கிறேன்.

      Delete
  11. பூஜை அறை மிக அழகாக, மங்களகரமாக இருக்கிறது அம்மா.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி அனிதா ஷிவா!

      Delete
  12. வாட் இஸ் வடைபருப்பு?

    ReplyDelete
    Replies
    1. வடைப்பருப்பு சாலடில் ஒரு வகை அப்பாதுரை. பாசிப்பருப்பை நன்கு கழுவி விட்டுக் குறைந்தது இரண்டு மணி நேரம் ஊற வைக்கணும். அப்புறம் நீரை நன்கு வடிகட்டி, அதில் பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், மாங்காய், பச்சை மிளகாய், கருகப்பிலை, கொ.மல்லி, உப்பு சேர்த்து எலுமிச்சம் பழம் பிழிந்து கொண்டு கடுகு, பெருங்காயம் தாளிக்கணும். இப்போதெல்லாம் இவற்றோடு காரட்டும் நறுக்கிச் சேர்க்கின்றனர். நிவேதனத்துக்கு என்பதால் நான் காரட் சேர்ப்பதில்லை! :) வடை கூட மிளகு போட்டுத் தட்டுகிறேன். மி.வத்தல் போடுவதில்லை. பச்சைப் பயறையும் முளைகட்டி இதே போல் சாலட் செய்யலாம்.

      Delete
    2. சூப்பரா இருக்குதே ரெசிபி...

      Delete
  13. கதம்பமாலை கண்ணில் ஒற்றிக்கொள்ளும் அழகு. வாழ்த்துகள் கீதா மேடம்.

    ReplyDelete