எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, April 01, 2015

இம்புட்டுக்குடமிளகாயா???????

குடமிளகாய் க்கான பட முடிவு


படம் நன்றி: கூகிளார் (நாலு பெண்கள் தளத்திலிருந்து)

சாதாரணமாக் குடமிளகாய் ஸ்டஃப் செய்தோ, அல்லது வேறு ஏதேனும் காய்களோடு சேர்த்தோ அல்லது பஜ்ஜியாகவோ தான் சாப்பிட்டிருப்போம்.  ஆனாலும் சிலருக்கு அதைக் கறி பண்ணலாம்னு  தெரிந்திருக்கலாம். நம்ம ரங்க்ஸுக்குக் குடமிளகாய் அலர்ஜி!  அப்போக் கட்டாயமா எனக்குக் குடமிளகாய்னா உசிருனு புரிஞ்சிருக்கணுமே!  வாங்கிட்டே வர மாட்டார். அதிசயமா ஒரு தரம் நான் கீழே உள்ள வணிக வளாகத்தில் நல்ல குடமிளகாயாக் கிடைச்சதுனு வாங்கிட்டு வந்துட்டேன். எல்லாம் பெரிசு பெரிசா இருந்ததால் பாதி போட்டாலே நிறைய இருக்கும்.  நானும் உ.கி. போட்டு சப்ஜி, மிக்சட் வெஜிடபுள் சப்ஜி, ரவா கிச்சடி, சாம்பார்னு எல்லாத்திலேயும் போட்டும் மிச்சம் இருந்தது.

இது தெரியாம நம்ம ரங்க்ஸுக்கு  மார்க்கெட் போனப்போ திடீர்னு நான் குடமிளகாய்ப் பிரியை என்பது நினைவுக்கு வர அங்கே ஒரே மாதிரி அளவெடுத்தாற்போன்ற குடமிளகாய்கள் கண்ணில் பட அரைகிலோ வாங்கித் தள்ளிட்டார். நம்ம ரங்க்ஸோட வழக்கமே அதான்!  வாங்கினால் இப்படித் தான் வாங்கித் தள்ளுவார். இல்லைனா ஒண்ணுமே இருக்காது. இதுக்குத் தான் ஒவ்வொரு முறை மார்க்கெட் போயிட்டு வந்ததும் ஒரு குருக்ஷேத்திரம் நடக்கும்! பின்னே! இருக்கும் கத்தரிக்காயையே மறுபடி அரை கிலோ வாங்கிட்டு வருவார்.  கேட்டால் அது பச்சைக் கத்தரிக்காய்!  இது நீலம்! மேலூர்க் கத்தரினு பதில் வரும்.  மூணு வேளையும் பண்ணினால் தான் தீரும் அந்தக் காய்கள் எல்லாம்!

இந்த அனுபவங்கள் இருந்ததால் சரினு குடமிளகாய் வாங்கிட்டு வந்தப்போ சும்மா இருந்துடலை! அதுக்கும் ஒரு குருக்ஷேத்திரம் நடந்து தான் முடிந்தது. ஆச்சு, நான் வாங்கின குடமிளகாய்கள் பத்து நாட்களா இருக்குனா ரங்க்ஸ் வாங்கினது ஒருவாரமா இருக்கு. இன்னிக்கு எல்லாத்தையும் எடுத்து எதெல்லாம் சீக்கிரம் வீணாகுமோ அவற்றை எல்லாம் எடுத்து நறுக்கிக் குடமிளகாய்க் கறி பண்ணிட்டேன்.  இன்னும் இரண்டு மிச்சம் இருக்கு!  உங்களுக்கு வேணுமா?  செய்முறை ரொம்ப ஜிம்பிள்! பொடிப்பொடியாக மிளகாயை நறுக்கி வைச்சுக்கணும்.  வாணலியில் தாளிக்கும் அளவுக்கு எண்ணெய் அல்லது இரண்டு டீஸ்பூன் எண்ணெய் போதும். விட்டுக் கொண்டு கடுகு, உபருப்பு தாளித்துக் கொண்டு மிளகாயைப் போட்டு உப்பு, மஞ்சள் பொடி, தேவையானால் பெருங்காயப் பொடி சேர்க்கவும்.  மூடி வைத்துச் சிறிது நேரம் வதக்கவும்.  பின்னர் மிளகாயின் அளவுக்கு ஏற்ப ஒரு ஸ்பூனோ அரை டீஸ்பூனோ சர்க்கரை சேர்க்கவும். சிறிது நேரம் கிளறவும். மிளகாய் வெந்து கறி தயார் ஆகிவிட்டது என்னும் நிலையில் துருவிய தேங்காய் சேர்க்கவும்.  கீழே இறக்கவும்.  சாப்பிடவும். மிளகாய்க் காரம் இருக்கட்டும்னா சர்க்கரை சேர்க்க வேண்டாம்.  இதுக்குத் தனியாக் காரம் எல்லாம் தேவை இல்லை. வெங்காயமோ, தக்காளியோ சேர்க்க வேண்டாம்.
இதான் நம்ம கைவண்ணத்தில் தயாரான குடமிளகாய்க் கறி  வழக்கம் போல் திடீர்னு தோணிப் படம் எடுத்தேன்.  அதுவும் செல்லில் தான் எடுத்தேன்.  இன்னொரு படம் சரியா வரலை! :)  (இது மட்டும் என்ன ஒழுங்குனு கேட்காதீங்க தொ.நு.நி.க்கள் எல்லாம்)

33 comments:

 1. இதுலெ யாரு கெளரவா?

  ReplyDelete
  Replies
  1. ஆமால்ல "இ" சார்! அது தோணவே இல்லையே! யாரா இருக்கும்? :)

   Delete
 2. செய்துடுவோம்.

  கோதுமை மாவில் கேரட், குடை மிளகாய் துருவிப்போட்டு, சப்பாத்தி இடலாமே....

  குடைமிளகாய் ரைஸ் செய்யலாமே...

  ReplyDelete
  Replies
  1. மேலே சொன்ன ரெண்டும் பண்ணி நான் மட்டும் தான் சாப்பிடணும்! போனாப் போகுதுனு வெண்டைக்காய், குடமிளகாய், தக்காளி போட்டுச் செய்யும் கறியைச் சப்பாத்திக்குத் தொட்டுப்பார். அடுத்து உ.கி. குடமிளகாய் போட்டுச் செய்தால் தொட்டுப்பார். குடமிளகாய் பஜ்ஜி கூட நான் எனக்கு மட்டும் தான் போட்டுப்பேன்! :)

   Delete
 3. Replies
  1. யாராக்கும் இது? புதுசா இருக்கு? மௌலி? மதுரையம்பதி? எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை? வல்லி, உங்களுக்குத் தெரியுமா? :P :P :P :P

   Delete

 4. இங்கே இந்த ரெட் பேப்பர் காரம் இல்லை .வெறுமனே சலாட் செழ்து சாப்பிடலாம். பச்சையா இருந்தால் தெரிந்திருக்கும்.படம் இல்லாவிட்டால் என்ன.கீதா செய்தால் அமிர்தம் தான்.

  ReplyDelete
  Replies
  1. சிவப்பு, மஞ்சள், பச்சைக் குடமிளகாய் போட்டு வெஜிடபுள் ஊறுகாய் பண்ணுவேன். சப்பாத்திக்குத் தொட்டுக்கலாம். சாலடிலும் போடறது உண்டு. ஆனால் ஹூஸ்டனில் குடமிளகாய்க் காரமா இருக்கு! சாலடில் போடுவதுனா பார்த்துப் போடணும். :)

   Delete
 5. //நம்ம ரங்க்ஸுக்குக் குடமிளகாய் அலர்ஜி!
  அப்போக் கட்டாயமா எனக்குக் குடமிளகாய்னா உசிருனு புரிஞ்சிருக்கணுமே! //

  ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! நன்னாவே புரிஞ்சுக்கிட்டோம்.

  முதலில் காட்டியுள்ள படம் ஜோர் !

  நீங்களே எடுத்துள்ள கடைசிப்படமும் நன்னாத்தான் வந்திருக்கு.

  //இது தெரியாம நம்ம ரங்க்ஸுக்கு மார்க்கெட் போனப்போ திடீர்னு நான் குடமிளகாய்ப் பிரியை என்பது நினைவுக்கு வர அங்கே ஒரே மாதிரி அளவெடுத்தாற்போன்ற குடமிளகாய்கள் கண்ணில் பட அரைகிலோ வாங்கித் தள்ளிட்டார்.//

  கிலோக்கணக்கில் உங்கள் மேல் எவ்வளவு அன்பு பாருங்கோ! :)

  //அதுக்கும் ஒரு குருக்ஷேத்திரம் நடந்து தான் முடிந்தது.//

  அடடா, இருந்தாலும் நீங்க ரொம்பத்தான் ......................... !

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹிஹி, வாங்க வைகோ சார், கரெக்டா "மொக்கை" போஸ்டுக்கு வருகை தந்திருக்கீங்க! நன்றி, நன்றி, நன்றியோ நன்றி! :))))))

   Delete
  2. //கரெக்டா "மொக்கை" போஸ்டுக்கு வருகை தந்திருக்கீங்க!//

   இல்லை..... இல்லை...... இது மட்டும் மொக்கையே இல்லை. :)

   என்னைப்பொறுத்தவரை இதுவே சூப்பரான
   சுவையான கலகலப்பானதோர் போரடிக்காத பதிவு.

   நானும் குடமிளகாயை ’பஜ்ஜியே ஆனாலும்’
   விரும்பிச் சாப்பிடுவது இல்லைதான்.

   இருப்பினும் பச்சைக் குடமிளாகாய்ப் படத்தைப்பார்த்ததுமே
   என்னைச் சுண்டி இழுத்து வந்துவிட்டது .....
   உங்களின் இந்தப் பதிவுப் பக்கம்.

   Delete
  3. மீள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி வைகோ சார். தேடி வந்து கருத்திட்டதுக்கு நன்றி. :)

   Delete
 6. என் வீட்டில் இன்று குடமிளாயும் கடலைப்பருப்பும் போட்டு கூட்டு செய்தேன்; என் ரங்க்ஸ் 'வித்தியாசமா இருக்கு'ன்னு சொல்லி, பிடிக்கலைன்னு சுத்தி வளைச்சு (!!) சொல்லிட்டார்!! அதனாலேயே எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது!! :-)). குடமிளகாய்க் கறியை செய்து பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. சப்பாத்திக் கூட்டிலே போடுவேன் மிடில்கிளாஸ் மாதவி. தனியாகப் பண்ணினால் நான் தான் சாப்பிடணும்! :)

   Delete
 7. கிதா மாமி, குடைமிளகாய் பருப்புசிலி செய்யலாம். வேகவைக்காமல் குடை மிளகாயை வதக்கிக்கொள்ள வேண்டும், அவ்வளவுதான். மற்றபடி அதே பருப்புசிலி செய்முறைதான்....
  இல்லாவிட்டால் குடைமிளகாயை பொடிப்பொடியாக நறுக்கி தேங்காய் போட்டு காய் பண்ணலாம் நன்றாக இருக்கும்...

  ReplyDelete
  Replies
  1. குடமிளகாய்ப் பருப்புசிலியும் செய்வோம். அந்தப் பருப்பையே குடமிளகாயினுள் ஸ்டஃப் செய்து இட்லித் தட்டில் வேக வைத்தும் செய்வோம். கடலைமாவு, மி.பொடி, உப்பு, பெருங்காயப் பொடி சேர்த்துக் கரைத்துக் கொண்டு ஸ்டஃப் செய்து வேக வைத்ததை அதில் முக்கியோ அல்லது அதில் புரட்டிக் கொடுத்தோ எண்ணெயில் பொரித்தும் எடுப்போம். ஆனால் இது எதுவுமே நம்ம வீட்டில் பிடிக்காது(என்னைத் தவிர) :))) இங்கே தேங்காய் போட்ட கறி தான் எழுதி இருக்கேன். படிச்சுப் பாருங்க! :))))) அதோட இரண்டு நாள் முன்னர் தான் பீன்ஸ் பருப்புசிலி செய்திருக்கேன். திரும்பவும் பருப்புசிலினா ஒத்துக்கவும் ஒத்துக்காது , போணியும் ஆகாது! :)))

   Delete
 8. நானும் குடமிளகாய் கறி செய்வது வழக்கம் . ஆனால் இது போல் செய்ததில்லை. தேங்காயே போட்டு செய்ததேயில்லை. ஒரு முறை செய்து பார்த்து விடுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தக்காளி, வெங்காயம், உ.கி. போட்டு காரப்பொடி சேர்த்து வதக்கிச் சப்பாத்திக்குப் பண்ணலாம் ராஜலக்ஷ்மி. இது தனிக் குடமிளகாய்க் கறி, சர்க்கரையும், தேங்காயும் போட்டது என்பதால் அதிகம் காரம் தெரியாது.

   Delete
 9. கு.மி. இதுவரை வீட்டில் செய்ததே இல்லை...

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு இருமுறை பதில் கொடுத்தேன்; போகவே இல்லை! ப்ளாகரில் ஏதோ வேலை நடக்குது போல! :) டிடி, நானும் குடமிளகாயை முதலில் பார்த்தப்போ சாப்பிடவே யோசனையாத் தான் இருந்தது. மெல்ல மெல்ல நாக்கிலும், நெஞ்சிலும் இடம் பெற்றது!

   Delete
 10. என் பின்னூட்டம் மட்டறுக்கப் படுகிறதா.?

  ReplyDelete
  Replies
  1. ஐயா, உங்களுடைய இந்த ஒரு பின்னூட்டம் தான் வந்திருக்கு! நீங்கள் முன்னால் கொடுத்திருந்தீர்கள் எனில் அது வரவில்லை. எல்லாருடைய பின்னூட்டங்களும் மட்டுறுத்தப்படுகின்றன. உங்களுடையது மட்டும் அல்ல! :)))) மெயில் பாக்ஸிலும் உங்கள் பின்னூட்டம் கவனிக்கப்படாமல் காத்திருப்பில் இல்லை.

   Delete
 11. வித்தியாசமாய் குடைமிளகாய் கறி...... செய்து பார்த்துடலாம்!

  ReplyDelete
  Replies
  1. பாருங்க வெங்கட், அங்கே தான் கலர் கலராக் கிடைக்குமே! :)

   Delete
 12. குடைமிள்காய் நீங்கள் செய்வது போன்று இப்படியேதான், அதில் கடலை மாவு தூவி செய்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். அதுவும் நன்றாக இருக்கும். பருப்புசிலியும். உங்களுக்குத் தெரியாததா என்ன! (இடைல ஒரு பிட்...நானும் கீதாதான்...ஹஹஹ என் ஃப்ரென்ட் துளசி இதுக்கு ஆப்சென்ட்....!!!)

  - கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா, துளசி சார் வந்திருக்கார், நீங்க இதான் முதல் வருகை! நல்வரவு. கடலைமாவு தூவினால் எங்க ரெண்டு பேருக்குமே பிடிக்காது! ஆகையால் தூவவில்லை! :)

   Delete
 13. அட பின்னூட்டம் போட்டுட்டு மத்த கருத்துக்களப் பார்த்தா சே பல்பு! ம்ம்ம் நீங்களே சொல்லிருக்கீங்க....பருப்பு உசிலி, ஸ்டஃப்ட், பொரிக்கறது எல்லாம் ....ஸ்டஃப்ட் ப்ரௌன் க்ரெவி......நினைச்சேன் மாமிக்குத் தெரியாததையா நாம சொல்லப் போறோம்...அப்படினு....நானும் இப்படித்தான், கன்னியா குமரிலருந்து, காஷ்மிர், னு நம்ம ஊர்லருந்து, காண்டினென்டல் அப்படினு எல்லா கண்டங்கள் சாப்பாட்டயும், வெஜ் வெஜ்ஜுனு தேடி காண்டங்ககாண்டமா பிரிச்சு ஏதோ இதிகாசம் எழுதறா மாதிரி சேத்து வைச்சு இதுல நம்ம ஓண் கண்டுபிடிப்புகளையும் அதான் ட்ரையல் அண்ட் எரர் ப்ராசஸ்ல.....வந்தது எல்லாம் போட்டு புள்ளாண்டனுக்குச் செஞ்சு கொடுத்து....கத்துக்கிட்டதுதான்.....நினைச்சுக்கிட்டேதான் போட்டேன்....இப்ப பார்த்தா பல்பு! - கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹிஹி, அதிலே பாருங்க, சாம்பாரை விட்டுட்டேனா, கீழே சுரேஷ் வந்து சாம்பார் பண்ணச் சொல்லி இருக்கார். திரும்பிப் பார்த்தக் குடமிளகாய் சாம்பாரானு நம்ம ரங்க்ஸ் ஓட்டமா ஓடறாரே! :)

   Delete
 14. நீங்க குடை மிளகாய் சாம்பார் வைப்பது இல்லையோ! ஒரு முறை செய்து பாருங்கள்!

  ReplyDelete
  Replies
  1. குடமிளகாய் அறிமுகம் ஆன நாளிலே இருந்து சாம்பார் வைத்துப் பழக்கம் தான் சுரேஷ். இங்கே குறிப்பிடலை! :)

   Delete
 15. எப்போ என்னை சாப்பிடக் கூப்பிடுவீங்க??

  ReplyDelete
 16. குடமிளகாய் பருப்புசிலி நன்றாக இருக்கும். குடமிளகாய் வாசனைதான் அதன் ஸ்பெஷல்.

  ReplyDelete