எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, June 03, 2017

ஒரு மாதிரிச் சமாளிச்சாச்சு!

நாங்க யு.எஸ். போன பதினைந்து நாட்களுக்கெல்லாம் மும்பையில் என் மாமியார் இறந்து விட்டார். யு.எஸ். போகும் முன்னர் மும்பை சென்று அவங்களைப் பார்த்து விட்டே திரும்பி இருந்தோம். வயது 93க்கு மேல் ஆகி விட்டது. எப்போ வேணாலும் என எதிர்பார்ப்புடன் இருந்தாலும் கிளம்பும்போது உடல் நலமாக இருப்பதாகத் தெரிந்து கொண்டே கிளம்பி இருந்தோம். அங்கேயும் நாங்கள் போகவேண்டிய சூழ்நிலை. ஆனால் அங்கிருந்து எங்களால் உடனே திரும்ப முடியவில்லை. மாமியாருக்கு ஏற்கெனவே உடம்பு முடியலைனாலும் பெரும்பாலும் வயதானதின் தளர்வே என்று மருத்துவர்கள் சொன்னார்கள். எல்லா உறுப்புக்களும் சரியாகவே வேலை செய்வதாகவும் சொன்னார்கள். சரி எப்படியும் ஆறு மாசம் தாங்கும்னு நினைச்சோம். ஆனால் தாங்கலை! அப்போத் தான் போயிருக்கோம். சரியாப் பதினைந்து நாட்களே! உடனே திரும்புவதெனில் பல பிரச்னைகள்! மனப் போராட்டங்கள்! குழந்தையைப் பிரியணும்! அதோட நாங்க போனதே மருமகளுக்கு உதவியாக இருக்கணும்னு தான்! பதினைந்து நாட்களில் குழந்தையும் ஒட்டிக் கொண்டு விட்டாள்.

அப்படியும் டிக்கெட்டுக்கு முயற்சித்தோம். எங்க டிக்கெட் சென்னைக்கு வாங்கி இருந்தது. நாங்க போக வேண்டியது மும்பை! அது ஒரு பிரச்னை என்றால் இம்மாதிரிக் காரியத்துக்கு எனக் கிளம்பி விட்டுப் பின்னர் திரும்பி ஹூஸ்டனுக்கு வந்தால் தான் மனத் திருப்தியாக இருக்கும் போல இருந்தது. ஆனால் இங்கே வந்துவிட்டால் பத்துநாட்கள் காரியம் முடிந்தாலும் அடுத்தடுத்து மாதாந்திரக் காரியங்கள் இருக்கும். அதையும் விட முடியாது. என்ன செய்வது எனக் குழம்பிக் கொண்டு இருந்தோம். திரும்ப ஒரு மாசத்துக்குள்ளாக ஹூஸ்டன் வந்தால் விசா பிரச்னை! பல்வேறு மனக்குழப்பங்களுக்கிடையே எங்கள் குடும்ப புரோகிதரைக் கலந்து ஆலோசித்தோம். அவர் போனது போனதாகவே இருக்கட்டும். ஆறு மாசங்களையும் முடிச்சுட்டு வந்துடுங்க. திரும்பி வந்து கர்மாவுக்கான காரியங்களைப் பண்ணிக்கலாம். சாஸ்திரத்தில் அதற்கான விதிகள் உண்டு. இம்மாதிரி நடந்ததற்கான முன்மாதிரிகளும் உண்டு என்று சொன்னதோடு ஶ்ரீராமரே தன் அப்பா தசரதனுக்கு அவர் இறந்து பல நாட்கள் கழித்தே பரதன் மூலம் தகவல் தெரிந்து கடைசிக் காரியங்களைச் செய்தார் என்பதையும் எடுத்துக் கூறினார்.

என்றாலும் மனம் சமாதானம் ஆகவில்லை. ஆனால் அதோடு புரோகிதர் எங்களைக் கோயிலுக்குப் போகக் கூடாது என்றும் யாரையும் நீங்களாகப் போய்ப் பார்க்க வேண்டாம் என்றும் சொல்லி இருந்தார். ஆகவே இம்முறை எந்தக் கோயிலுக்கும் போகவே இல்லை. வேறே எங்கேயும் போகவே இல்லை. நண்பர் ஈரோடு நாகராஜ் ஹூஸ்டனுக்கே வந்திருந்தும், எங்க வீட்டிலிருந்து இரண்டு, மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தார் என்பது தெரிந்தும் போய்ப் பார்க்க மனம் இடம் கொடுக்கவில்லை. அவரிடம் என் நிலைமையைத் தெளிவாக்கி விட்டேன். அவரும் சரிதான் என ஒத்துக் கொண்டார். பல ஆண்டுகளாகச் சந்திக்க நினைத்தது! கிட்ட இருந்தும் சந்திக்க முடியவில்லை. கச்சேரிகளுக்கு அழைப்புக் கொடுத்தும் கோயில் வளாகங்களில் நடந்ததால் போகவும் இல்லை.

அங்கே இருந்த சமயம் நண்பர்கள் யாரையும் தொடர்பு கொள்ளவும் இல்லை. வழக்கம் போல் அம்பி தான் நான் வந்திருப்பது தெரிந்து முதலில் பேசினார். அவரிடம் விஷயம் ஏதும் சொல்லிக்கவில்லை. அம்பி பையருக்குப் பூணூல் போட்டார். அதுக்காக இந்தியா வந்திருந்தார். அதன் பின்னர் நண்பர் டாக்டர் எஸ்கே(சங்கர் குமார்), மற்றும் ஒரு அரிசோனன் ஆகியோர் தொடர்பு கொண்டார்கள். சங்கர் குமாரும் நிலைமையைப் புரிந்து கொண்டு ஆறு மாதம் கழித்துச் செய்து கொள்ளலாம். அதுவரை கோயில்களுக்குப் போகாமல் இருங்கள். என்றே சொன்னார். இங்கே வீட்டில் குழந்தை இருந்ததால் கோயிலில் போய் தெய்வத்தை தரிசனம் செய்ய வேண்டும் என்ற கட்டாயமும் இல்லாமல் போயிற்று.

ஒவ்வொரு நாளையும் ஒரு யுகம் போல் கழித்துக் கொண்டிருந்தோம்.   தப்புப் பண்ணிட்டோமோனு பல நாட்கள் குழப்பிக் கொண்டிருப்போம். திரும்ப ஊருக்குக் கிளம்பும்  நாட்களை எண்ணிக் கொண்டே வந்தோம். இதே நினைப்பு! இந்தியா திரும்பியும் ஆகி விட்டது. வந்த உடனேயே காரியங்கள் ஆரம்பித்தன. இன்றோடு முடிந்தது. மனம் பூரணத் திருப்தி அடையாவிட்டாலும் (சூட்டோடு சூடாகச் செய்வது போல் வருமா) ஓரளவுக்கு மனம் சாந்தி அடைந்திருக்கிறது. இனி மாதாமாதம் செய்வதற்கான உடல் தெம்பையும் மனோபலத்தையும் ஆண்டவன் அருள வேண்டும். அதற்காகப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கோம். 

33 comments:

  1. உங்களுக்கு ஐதீகத்தில் மிக அதிக நம்பிக்கை இருப்பதால் இந்த பிரச்சனை. நான் வாழ்க்கையை மிக பிராக்டிகலாக எடுத்து கொள்பேன் அவ்வளவுதான், 6 மாதம் முன் என் தந்தை இறந்துவிட்டார். எங்கள் மத வழக்கப்படி பாடியை அதிகபட்சம் 8 மணிநேரம்தான் வைத்திருப்பார்கள். பாடியை எடுத்தபின் அங்கௌ சென்று பார்ப்பதில் அர்த்தம் ஏதுமில்லை என்பதால் நான் போகவில்லை

    ReplyDelete
  2. எதையும் ஏதோ சமாதானம் சொல்ல ஆட்கள் இருக்கிறர்கள் கோவிலில்தான் கடவுளா ஏதோ சிலகட்டுப்பாடுகளுடன் வளர்ந்திருப்பதால் மீறும்போது மனம் சஞ்சலப் படுகிறது

    ReplyDelete
    Replies
    1. எந்தவிதமான சமாதானமோ யாரும் சொல்லவில்லை. இந்த நியதிகளுக்கெனத் தனியாக விதிமுறைகளுடன் கூடிய புத்தகமே உள்ளது. இது அனைவருக்கும் பொதுவானது! கடவுள் கோயிலில் மட்டும் இல்லை என்பது என்னைப் போன்ற பாமரர்களால் புரிந்து கொள்ள இயலாது அல்லவா?

      Delete
  3. என் ஆழ்ந்த அனுதாபங்கள். நான்கூட நினைப்பேன். வெளி நாட்டிலிருந்து அவ்விடத்திய சாயலே எதிலும் காட்டவில்லையே என்று. ஏதோ பண்டிகைக்கு பண்டிகை இல்லை என்ற பதில். வயதானவர்கள். டாக்டர்கள் எதுவானாலும் ஏஜ் ரிலேடட். மற்றபடி நன்றாகவே இருக்கிரார்கள் என்று. வெளிநாட்டில் பிள்ளைகளிருந்தால் இப்படி நேரும். பேரன் இருந்ததினாலும்,ஸமயம் அப்படி வாய்ந்ததாலும் இப்படி நடக்கும்படி ஆகியுள்ளது. பிதுருக்கள் அவர்கள் காரியத்தை நடத்திக் கொள்ளுவார்கள் என்று சொல்வார்கள். இப்படியும் நடக்கிறது. மனதிற்கு இப்போது சாந்தி வந்திருக்க வேண்டும். நல்ல தெம்பையும் மனோபலத்தையும் உங்களுக்கு உங்கள் மாமியார் கொடுப்பார். கவலை வேண்டாம். நல்ல முறையில் எல்லாம் நடக்கும். என் மனதில் தோன்றியதை அப்படியே எழுதி விட்டேன்.
    யாவும் நல்லபடி இருக்க கடவுளை வேண்டும் ஒரு வியக்திநான். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்மா. உங்கள் ஆறுதலான சொற்கள் கொஞ்சம் தெம்பைக் கொடுக்கிறது. நீங்கள் சொல்வது போல என் மாமியார் தன் காரியத்தைத் தானே நடத்திக் கொண்டார். பிரார்த்தனைகளே மனதிற்கு வலுவும் பலமும் கொடுத்து வருகிறது. என்றும் உங்கள் ஆசிகளை வேண்டுகிறோம்

      Delete
  4. தங்களது மாமியாரின் ஆன்மா இறைவனடியில் சாந்தியடைய பிரார்த்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  5. தாமதமானாலும் நீங்கள் ஸ்ரத்தையாக செய்திருப்பதை உங்கள் மாமியாரின் ஆன்மா ஆசிர்வதிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பானுமதி. தம்பிகள் இருந்து செய்தார்கள் தான் என்றாலும் மூத்த பிள்ளை செய்வது தான் முறை என அவர்களிடமும் புரோகிதர்கள் கூறி இருக்கிறார்கள். ஆகவே என் மாமியார் கிட்டத்தட்ட ஆறு மாதம் காத்திருந்து பித்ருக்களுடன் சேர்ந்திருக்கிறார். எப்படியோ இந்தியா வந்ததுமே ஒவ்வொரு நாள் போவதும் யுகமாக இருந்தது. நேற்றுக் காரியங்கள் முடிந்து சுபமும் நிறைவேறியதும் தான் மனம் கொஞ்சம் சாந்தி அடைந்தது.

      Delete
  6. மிக்க கடினமான தபஸ் ஆக நிறைவேற்றி இருக்கிறீர்கள் கீதா. வெளியூர் கிளம்பினாலே ஒரு நல்லது ,பொல்லாத்ததற்குத தடைகள வரத்தான் செய்கின்றன. மாமியார் நிறைய ஆசிகள் அளிப்பார். காரியங்கள் பூர்த்தியானது பற்றி மிக சந்தோஷம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரேவதி. உங்கள் வார்த்தைகள் மன ஆறுதலைத் தருகின்றன.

      Delete
  7. எதுவுமே நாம் எடுத்துக்கொள்வதைப் பொறுத்தே உள்ளது. அவ்வகையில் மன நிறைவு அடைவதே சரியாகும். சூழல் அவ்வாறான நிலைக்கு இட்டுச்செல்லும்போது பெரிதுபடுத்தாமல் அதன் போக்கிலேயே சென்றுவிடுவது நலம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். ஆதரவான சொற்களுக்கு நன்றி முனைவர் ஐயா!

      Delete
  8. மிகுந்த மணக்க கஷ்டம், குழப்பம் இருந்திருக்கும். என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாமாவிடமும் சொல்லுங்கள். எனக்கொரு சந்தேகம். வருஷாப்தீகம் இப்போதிலிருந்து கணக்கா? இறந்த நாளிலிருந்து கணக்கு வருமா?

    ReplyDelete
    Replies
    1. //மணக்க கஷ்டம்//

      மன்னிக்கவும். மனக்கஷ்டம் என்று வாசிக்கவும்.

      Delete
    2. வருஷாப்தீகம் இறந்த நாளிலிருந்து தான் கணக்கு. இன்னும் சொல்லப் போனால் இப்போது ஆறாம் மாசம். இந்த ஆறாம் மாசம் காரியம் செய்கையில் கடந்த ஆறு மாசக் காரியங்களையும் சேர்த்துச் செய்யவேண்டும். செய்வோம். அது தான் முறை! ஒரு மாசம் கூடச் செய்யமுடியாமல் போய் விட்டது எனில் வருஷாப்தீகம் சமயம் பனிரண்டு மாதங்களுக்கும் சேர்த்துச் செய்வார்கள்.

      Delete
    3. பரவாயில்லை ஶ்ரீராம். :)

      Delete
  9. உங்கள் நல்ல மனதை நினைத்து வணங்குகிறேன் அம்மா...

    ReplyDelete
    Replies
    1. நன்றி டிடி. இதில் நல்ல மனம் எங்கே வந்தது? குற்ற உணர்ச்சி தான் உறுத்தலாக இருக்கிறது!

      Delete
  10. ஆழ்ந்த இரங்கல்கள். இப்படியான இக்கட்டான சூழலில் ஏற்படும் குழப்பங்கள்...இப்போது மனது கொஞ்சம் திருப்தி அடைந்திருக்கும் இல்லையா....வந்ததும் செய்திருக்கிறீர்களே..அதுவே பெரிய விஷயம் தானே! பாட்டியின் ஆன்மா இறைவனடியில் சாந்திடைய பிரார்த்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. வந்ததும் அதான் முதலிலே, பாக்கி எல்லாம் அப்புறம் என நாங்களும் நினைச்சிருந்தோம். புரோகிதரும் அப்படியே சொல்லிட்டார். ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி.

      Delete
  11. இப்படித்தான் நடக்கவேணுமுன்னு ஏற்கெனவே விதிக்கப்பட்டுருக்குப்பா. அவன் செயல் இல்லாமல் வேறேது? மாமனார், மறைவுக்கு கோபாலால் போகமுடியலை. தம்பிகள்தான் செஞ்சாங்க. ஆனால் மாமியார் இறந்த நாள் இவர் அங்கே போய்ச் சேர்ந்துட்டார். அம்மாவைப் பார்த்துட்டு வரேன்னு போனவருக்கு, தன் கையால் கொள்ளி போட வேண்டியதாகிப்போச்சு. மற்ற காரியங்களை தம்பிகள்தான் செஞ்சாங்க. எத்தனை நாள் ஆனாலும் செஞ்சோம் என்ற மனதிருப்தி கிடைச்சவரை நல்லதுதான்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்வது ஒரு விதத்தில் உண்மை தான் துளசி. இது இப்படித் தான் என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு விட்டது! எப்படியோ காரியங்களைச் செய்தோம்!

      Delete
  12. சாரிடமும், உங்களிடமும் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
    உங்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடிகிறது.
    சாருக்கு அம்மாவின் முகத்தை பார்க்க முடியாமல் போனது மிகவும் வேதனையாக இருக்கும்.
    என்ன செய்வது ஆண்டவன் சித்தம்.
    அதுதான் ஊரிலிருந்து வந்தவுடன் முடிக்க வேண்டிய கடமைகள் இருக்கு என்று எழுதி இருந்தீர்களா?

    காரியங்களை நல்ல படியாக முடித்தது அறிந்து மாமியார் ஆசீர்வாதம் செய்வார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி அரசு! அம்மாவை நல்ல நினைவுடன் இருக்கையிலே பார்த்து விட்டாலும் கடைசி காலத்தில் கிட்டே இருக்க முடியவில்லை என்பது வேதனை தான்! எப்படியோ காரியங்கள் ஒருவாறாக முடிந்தன!

      Delete
  13. தவிர்க்க முடியா சங்கடங்கள். இதுவும் கடந்து போகும் வேறென்ன சொல்ல ?

    ReplyDelete
    Replies
    1. நன்றி சிவகுமாரன்!

      Delete
  14. ரொம்ப இக்கட்டான நிலைதான். உங்கள் டென்ஷன் புரிந்துகொள்ள இயல்கிறது. நல்லவேளை எல்லாம் இப்போது சரியாக முடிந்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. ஆறு மாசமாத் தவிச்சுட்டு இருந்தோம்!அங்கே இருந்த சூழ்நிலை அதுக்கு மேலே! என்ன செய்வது! எப்படியோ ஒருவழியாச் சமாளிச்சாச்சு!

      Delete
  15. நேற்று மாமாவை பேங்க்கில் பார்த்து பேசினேன்.. ஆனால் இந்த விஷயமே எனக்கு தெரியலை மாமி.. என்னுடைய வருத்தங்கள்.. கவலை வேண்டாம்.. பாட்டியின் ஆசிகள் உங்கள் எல்லோருக்கும் உண்டு..

    ReplyDelete
    Replies
    1. சொன்னார் ஆதி! குற்ற உணர்ச்சி காரணமாகத் தான் முன் கூட்டி இது பற்றி எழுதவில்லை. எப்படியோ காரியங்கள் முடிந்தன!

      Delete
  16. இரண்டு வருஷங்களாகவே ஒரே படுத்தல் தான்! இதெல்லாம் ஒண்ணுமே இல்லைனு பல சமயம் தோணும்! நன்றி வேதா(ள்)! :))))

    ReplyDelete
  17. இன்றுதான் இந்த பதிவைப் படித்தேன் - ஆழ்ந்த அனுதாபங்கள், மாமாவிடம் தெரிவியுங்கள்.

    ReplyDelete