எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, June 25, 2017

ஆடுவோம், பாடுவோம், கொண்டாடுவோம்!

 முகநூலில் சிநேகிதி ஒருவர் நம் கல்யாணங்கள் இப்போது சம்பிரதாயமாகவும் இல்லாமல் தமிழ் முறைப்படியும் இல்லாமல் முழுக்க முழுக்க வட இந்திய முறைப்படி மாறி வருகிறதைக் குறிப்பிட்டிருந்தார். கல்யாணங்கள் மட்டுமா? கல்யாணத்தில் பரிமாறப்படும் உணவு வகைகளும் தான்!  அதோடு மட்டுமா? உடுத்தும் உடைகளும் தான். மணப்பெண் ரிசப்ஷனுக்கு குஜராத்தி முறைப்படியோ அல்லது ராஜஸ்தானி காக்ரா, சோலியோ அணிந்தால் தான் மதிப்பு! மணமகன் பைஜாமா குர்த்தா விலை உயர்ந்த துணியில் தைத்ததை அணிந்து இருக்க வேண்டும். ரிசப்ஷன் மேடையிலேயே ஆடுவார்கள், பாடுவார்கள். ஆனால் தமிழ் உணர்வு பொங்கும்போது சும்மா இருக்க மாட்டோம். ஒரே பொங்கல் தான்!

கல்யாணத்துக்கு முன்னும், பின்னும் கூட வட இந்திய முறைப்படி மெஹந்தி விழா, சங்கீத், பராத், பாங்க்ரா நாட்டியம், கர்பா எல்லாமும் உண்டு.  ஆனால் தமிழ், தமிழ் உணர்வு என்னும்போது அப்படியே கொதித்துக் கொந்தளித்துப் போவோம். பார்ப்பனர்கள் சம்ஸ்கிருதம் படிக்க விடாமல் மற்ற ஜாதியினரைத் தடுத்து விட்டார்கள் என்று சொல்வோம். ஆனால் அதே சம்ஸ்கிருதம் படிக்க இப்போது வாய்ப்புக் கொடுத்தால் மொழித்திணிப்பு என்போம்.  ஹிந்தி மொழியை இங்கே யாரும் படிக்கக் கூடாது! மொழித்திணிப்பு என்போம். ஆனால் வட இந்திய முறைப்படி தான் நம் திருமணங்களை நடத்துவோம்! அதிலும் பல பிராமணர்கள் வீட்டுத் திருமணங்கள் இப்படித் தான் நடக்கின்றன. இதில் அவர்களே மற்றவர்களுக்கு வழிகாட்டி எனலாம்.( நல்ல வேளையா எங்க பொண்ணு, பிள்ளை கல்யாணங்களில் இப்படி எல்லாம் நடக்கலை.) நம்ம பாரம்பரிய முறைப்படி திருமணம் நடப்பதைக் கேலி செய்வோம். ஆனால் வட இந்திய முறைப்படி எல்லாவற்றையும் ஆவலுடன் செய்வோம். அதில் பெருமையும் கொள்வோம்.

எங்களுக்கு ஹிந்தி என்னும் மொழி தான் வரக் கூடாது! மொழித்திணிப்பை எதிர்ப்போம். வடவர் ஆதிக்கம் என்போம்.  ஆனால் எங்க வீட்டுக் கல்யாணங்களில் வட இந்திய முறைப்படி மெஹந்தி விழா மற்றும்
 அவங்க முறைப்படி உடை உடுத்துதல், பராத், பாங்ரா நாட்டியம், கர்பா எல்லாமும் ஆடுவோம், பாடுவோம், கொண்டாடுவோம்,
உணவுகளில் கூட வட இந்திய உணவு முறைப்படி தான் சாப்பிடுவோம். சாட் பண்டார் தனி ஸ்டால், சமோசா தனி ஸ்டால், பானி பூரி, பேல் பூரி, தஹி பூரி தனி ஸ்டால், உணவு வகைகளில் சப்பாத்தி, குருமா, நான், ஃபுல்கா ரொட்டி, சப்ஜி என்றே சாப்பிடுவோம். ஆனால் ஹிந்தி மட்டும் படிக்கச் சொன்னீங்களோ! எங்கள் தமிழார்வம் உங்களைச் சும்மா விடாது!
ஆமாம் தெரிஞ்சுக்குங்க! :)))) ஹூம், நாங்க தமிழார்வம் நிறைஞ்சவங்களாக்கும்! :))))  மைல் கல்லில் ஹிந்தி எழுத்து தென்பட்டால் கூட எதிர்ப்புத் தெரிவிப்போம். இத்தனைக்கும் அது தேசிய நெடுஞ்சாலையாக இருக்கும்! அங்கே இத்தனை மைல்களுக்கு ஒரு மைல்கல்லில் மூன்று மொழிகளிலும் விபரம் கொடுக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறை ஆணை இருக்கும்! இருந்தாலும் நாங்க தமிழர்கள் இல்லையா? எங்க தமிழ்நாட்டில் அதெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். அதை அழிக்கும்வரை போராட்டம் தான்!

தமிழ் மொழிக்காக உயிரையும் கொடுப்போம். ஆனால் எங்கள் திருமணங்களில் எல்லாம் வட இந்தியர் போடும் உடைகள், உணவு வகைகள், பழக்க, வழக்கங்களையே பின்பற்றுவோம். எந்த வட இந்தியராவது தமிழ்நாட்டு முறைப்படி திருமணம் செய்து கொண்டதாகச் செய்தி வந்திருக்கா? இல்லை! ஆனால் தமிழ் உணர்வு மிகுதியாக உள்ள நாம் மட்டுமே தனித்துவம் கொண்டவர்கள் ஆதலால் இப்படிச் செய்வோம். தமிழ்ப் பற்றில் எங்களை மிஞ்ச ஆளில்லை! எங்காவது ஹிந்தி எழுத்தைப் பார்த்தால் தார் பூசி அழிப்போம். ஆனால் எங்கள் திருமணங்களில் கட்டாயமாக சமோசா, பாவ் பாஜி, தஹி சாட், பேல் பூரி, தஹி பூரி, பானி பூரி போன்றவை இடம் பெறுமாறு பார்த்துப்போம். அதான் எங்கள் முக்கிய உணவே! விடுமுறை நாட்களில் ஓட்டலுக்குச் சென்றால் கூட நாங்க இவற்றைத் தான் வரவழைத்துச் சாப்பிடுவோம். இட்லி, சாம்பாரெல்லாம் எவன் சாப்பிடுவான்! சாதம் என்றால் அதில் பிரியாணியோ, புலவோ என்றால் சாப்பிடலாம். சாம்பார் சாதமா? ரசமா? சேச்சே! ரசனையே இல்லாத திருந்தாத ஜன்மங்கள்தான் அதைச் சாப்பிடுவார்கள். நாமெல்லாம் புலவும், பிரியாணியும், ஃப்ரைட் ரைஸும் தானே சாப்பிடுவோம்!

நம்ம பாரம்பரிய உணவே மறந்துவிடுவோம் போல இருக்கு! ஏதோ எங்களைப் போன்றவர்கள் அதை நினைவூட்டினால் தான் உண்டு!  பழக்க வழக்கங்களுமே மாறிக் கொண்டு வருவதையும் பார்க்க முடியுது! ஒரு பக்கம் தமிழ், தமிழ் மொழிப் பற்று, தமிழ்க் கலாசாரம் பேணுதல்! இன்னொரு பக்கம் மறைமுகமாக வட நாட்டு முறைகள், பழக்க, வழக்கங்கள், உணவுகள் உள்ளே நுழைந்து ஆதிக்கம் செலுத்துதல்! என்னவோ போங்க!

வாழிய செந்தமிழ், வாழிய பாரத மணித்திருநாடு

26 comments:

  1. ஒரு நகைச்சுவைக் காட்சி (கவுண்டமணியோடது) பார்த்திருக்கீங்களா? போன பிச்சைக்காரனைத் திரும்பக் கூப்பிட்டு, 'அவ என்ன சொல்றது சாப்பாடு இல்லைனு. நான் சொல்றேன். சாப்பாடு இல்லை போடா' என்று சொல்வார்.

    நாமா தமிழை விட்டு மாறினால் அதுல தப்புல்ல. இன்னொருத்தர் சொன்னா மட்டும், 'தமில் பற்ற்று' வந்துடும். இன்னோண்ணும் சொல்ல விட்டுட்டீங்க. இப்போ 70% மேல், தமிழர்கள் தமிழ்ப் பெயர் குழந்தைகளுக்கு வைப்பதில்லை. எல்லாம் சமஸ்கிருதப் பெயர்தான். (தமிழுக்காக உருகும் பாமக தலைவர் வீட்டிலேயே இந்தக் கதைதான்)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அவங்க படிச்சதும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் ஹிந்தி, சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளும் சேர்ந்து தான்!

      Delete
    2. மத்தவங்களைத் தான் தமிழ் படிக்கச் சொல்லுவாங்க! :(

      Delete
  2. சரியான சவுக்கடி வார்த்தைகள், மறுக்கத் தெரியாத, மறுக்க முடியாத வார்த்தைகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  3. மிகவும் நியாயமான ஆதங்கம்.

    யோசிக்க வைக்கும் தங்களின் இந்தப் பகிர்வுக்கு என் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்று வைகோ சார்.

      Delete
  4. எல்லாமே மாறிக் கொண்டுதான் வருகின்றன. கலாச்சாரங்களை குறைந்தபட்சம் ஆவணப்படுத்தியாவது வைப்போம்!!

    ReplyDelete
    Replies
    1. நான் எழுதி இருக்கேனே ஶ்ரீராம். அதைப் புத்தகமாக வெளியிடும் ஆவல் உண்டு.

      Delete
  5. இங்கு வெளிநாட்டிலும் அதே வட இந்திய ஆதிக்கம் தான். ஏதோ பங்கரா நடனமாம். அதெல்லாம் ஆடுகிறார்கள். ஒண்ணுமே புரியல

    ReplyDelete
    Replies
    1. எல்லா ஊர்களிலும் இப்போ இந்த நாட்டியம் தான் கட்டாயமாய் இடம் பெறுகிறது. :(

      Delete
  6. எல்லாத்துக்கும் இந்த மோடிதான் காரணம்!

    ReplyDelete
    Replies
    1. அட! ஆமா இல்ல! அதை விட்டுட்டேனே! :)

      Delete
  7. ஒன்று கவனித்தீர்களா இந்தமாதிரி சம்பிரதாயம் பேணப்பேசுவதும் அதை முற்றிலும் போக்கடிப்பதும் பிராமணர்களே மற்ற சமூகத்தில் இவை குறைவு கலாச்சாரத்துக்கும் மொழித்திணிப்புக்கும் முடிச்சு போட்ட பதிவு அருமை

    ReplyDelete
    Replies
    1. //ஆனால் வட இந்திய முறைப்படி தான் நம் திருமணங்களை நடத்துவோம்! அதிலும் பல பிராமணர்கள் வீட்டுத் திருமணங்கள் இப்படித் தான் நடக்கின்றன. இதில் அவர்களே மற்றவர்களுக்கு வழிகாட்டி எனலாம்.//

      பிராமணர்கள் தான் இதற்கு வழிகாட்டி என்பதை என் பதிவிலும் குறிப்பிட்டிருக்கேன். மற்றபடி சமீபத்தில் நடந்த சரவணா ஸ்டோர்ஸ் காரங்க பெண் கல்யாணத்தின் வீடியோ தொகுப்பைப் பார்த்தீர்களானால் மற்ற சமூகங்களிலும் இவை இன்னமும் அதிகமாக இருப்பதைப் பார்க்கலாம். கலாசாரம் என்பது மொழி சார்ந்திருப்பதாலே இரண்டையும் முடிச்சுப் போட வைத்தது. பிராமணரல்லாத மற்ற சமூகக் கல்யாணங்களிலும் காசி யாத்திரை, மாலைமாற்றுதல் (தாலிகட்டியதும் மாற்றுவார்கள். பிராமணர்கள் தாலி கட்டும் முன்னே மாலை மாற்றுவார்கள்.) சகோதரன் கைகளால் பொரி வாங்கிப் பொரியிடுதல், சப்தபதி எல்லாமும் உண்டு. இவை இல்லாமல் எந்தத் திருமணமும் அது வட இந்தியத் திருமணமாக இருந்தாலும் சரி, தென்னிந்தியத் திருமணமானாலும் சரி நிறைவு பெறாது. சப்தபதி இல்லாத திருமணங்கள் பதிவு செய்யப்பட்டால் தவிரத் திருமணமாக ஏற்கப் படாது!

      Delete
  8. உண்மை தான்மா! இங்கேயும் இப்போதெல்லாம் நம் தமிழ்க்கலாச்சார முறைமைகள் பின்பற்றப்படுவதை விட வட இந்திய பாணியில் தான் திருமணங்கள் நடக்கின்றது. அந்த பகட்டும், ஆடைகளும், நகைகளுமாய்.. அதிக செலவும் ஆகின்றது. நாம் ஏதேனும் சொன்னால் நம்மை போன நூற்றாண்டு கற்கால ரேஞ்சுக்கு பார்ப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆடம்பரத் திருமணங்கள் அதிகமாகி விட்டன. உணவிலும் அலங்காரத்திலும், பகட்டிலும் அதிகப் பணம் செலவாகிறது! :(

      Delete
  9. விளாசல் பதிவு!!..

    பேரு வைக்கிறது??!... சுத்தமான தமிழ் பெயர் வைக்கிறது இல்லங்கறது ஒரு பக்கம். கரண், அர்ஜூன், சிரூஷ், ஆசிஷ், ருசிர், ரோஹித், இப்படி வைப்பதெல்லாம் எதில் சேர்த்தி?. அப்புறம் சமீபத்தில் ஒரு வாட்ஸ் அப் வீடியோ பார்த்தேன். மணமகள், முழு அலங்காரத்துடன், முகூர்த்தத்துக்கு, மண மேடைக்கு ஆடியவாறே வந்தார். சுத்தி வர பரிவார தேவதைகளும் ஆடினர். உறவினர்கள் கைகளைத் தட்டி உற்சாகப்படுத்த, மேடையில் காத்திருந்த மணமகன், என்ன செய்வதென்றே தெரியாமல், அவரும் கைகளைத் தட்டினார். முகத்தைப் பார்த்து, அவர் அபிப்பிராயத்தை ஊகிக்க முடிந்தது. ஹூம்!.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நானும் பார்த்திருக்கேன். மணப்பெண், மாப்பிள்ளை மற்றும் நண்பர்களோடு மேடையில் பாடி ஆடுகிறார்கள். ஹிந்திப் படங்களில் பார்த்துப் பார்த்து உண்மையிலும் அப்படித் தான் செய்யணும்னு நினைப்பாங்க போல! :(

      Delete
  10. கீதா மேடம்... நம் சம்ப்ரதாயத்தை ஆவணப்படுத்தி வைக்கும் அதே நேரத்தில், தேவையில்லாத (இந்தக் காலத்துக்கு ஒத்துவராத) ப்ரொசீஜர்களையும் மாற்றவேண்டும். நிறைய வழக்கங்களுக்கு அர்த்தம் இருக்கிறது, ஆனால் அவைகள் இக்காலத்தில் IRRELEVANTஆக இருக்கிறது.

    காசு இருக்கிறது என்பதற்காக ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை (பாரம்பர்யத்தில் இல்லாத, கலாச்சாரத்திற்கு முரணான) வைப்பவர்கள், தங்களை அறியாமலேயே பல்வேறு ஏழைகளுக்கு, பணம் அவ்வளவு இல்லாதவர்களுக்கு அழுத்தத்தையும் கஷ்டங்களையும் கொண்டுவருகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. சொல்ல வந்த கருத்தை இங்கு நெல்லைத் தமிழன் சொல்லியிருப்பதைப் பார்த்ததும் வழி மொழிகின்றேன்!!! அதுவும் காசு இருக்கிறது......கொண்டுவருகிறார்கள்...யெஸ் யெஸ்,..இதைத்தான் நாங்கள் எங்கள் வீட்டில் நேற்றுக் கூடப் பேசிக் கொண்டிருந்தோம்...

      நல்ல பதிவு கீதாக்கா. அனைத்தும் சரியான வார்த்தைகள்...

      துளசி: எங்கள் ஊரில் உணவு முறை இன்னும் அவ்வளவாக மாறவில்லை. கல்யாணங்களும் தான். ஒரு சில பணக்காரக் கல்யாணங்களில் அதுவும் அங்கொன்றுஇங்கொன்றாக...ஆனால் நீங்கள் இங்கு சொல்லியிருக்கும்படி கேரளத்தில் மாறவில்லை. ஆனால் இங்கும் சிறிது நுழைந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

      Delete
    2. நெ.த. கலாசாரத்திற்கு முரணான நிகழ்ச்சி என எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்பது புரியவில்லை! மற்றபடி பாரம்பரியக் கல்யாணத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளைக் குறித்து ஏற்கெனவே எழுதி இருக்கேன். இன்னும் சில அதில் சேர்க்க வேண்டி இருக்கிறது. விரைவில் சேர்த்துவிட்டு மின்னூலாகப் போடும் எண்ணம் இருக்கு!

      Delete
    3. துளசிதரன்/தில்லையகத்து கீதா, கேரளத் திருமணங்களும் ஆடம்பரமாக நடப்பதை ஒரு சில வீடியோக்கள் மூலம் பார்க்கிறேன். ஜாய் அலுக்காஸ் இல்லத் திருமணம் அதில் ஒன்று! :) உணவு முறையில் மாற்றம் இல்லை என்பது சந்தோஷத்தைக் கொடுக்கும் விஷயம் தான்!

      Delete
  11. Very very true, but people doing so wont agree. Today's weddings are to show their wealth and status, not to follow tradition. Ennaikki indha photo video vandhucho, annaike ellam showing-off thaan, saami alangaaram kooda photo edukka'nu aagi pochu, what to do? :(

    ReplyDelete