எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, June 23, 2017

க.க.போ.வுக்கான கதை இங்கே!

க.க.போ.தெரியுமா?  எங்கள் ப்ளாக் கௌதமன் "நம்ம ஏரியா"வுக்காகக் கதைக் கரு கொடுத்து எழுதச் சொன்ன கதைக்கு நான் எழுதிய கதை கீழே. இதைக் கதைனு நம்பினால் படிங்க! இல்லைனா வேண்டாம்! ஏன்னா முதலில் எழுத ஆரம்பிச்சது ஒண்ணு! அப்புறமா மாத்தினது வேறே! அதுக்காகக் கற்பனை வளம் அதிகமா இருக்குனு நினைச்சுடாதீங்க!  இனி உங்கள் பாடு! கௌதமன் பாடு! அவர் தானே கதையே கேட்டார். யாருக்கானும் கோபம் வந்து திட்டணும்னு தோணிச்சுனா கௌதமனைப் போய்த் திட்டுங்க! இனி ஒரு முறை இம்மாதிரிப் போட்டி எல்லாம் வைப்பாருங்கறீங்க? ம்ஹூம்! ஓடிப் போயிட மாட்டாரா! :)))))

*********************************************************************************

எதிர்பாரா அதிர்ச்சி அவளுக்கு! சென்ற இடத்தில் அவனைச் சந்திப்போம் என்றே நினைக்கவில்லை. கணவனுடன் ஒரு சுற்றுலாவுக்குச் செல்ல வேண்டும் என்று தெரிந்ததும் அவளுக்குள்ளே பொங்கி வந்த மகிழ்ச்சி ஊற்று இப்போது வற்றி விட்டது! அவனைப் பார்த்தால் அவளைத் தெரிந்து கொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. அழுத்தம்! மிகுந்த அழுத்தம்! அவள் வேண்டுமென்றே அவன் பார்க்கையில் தன் கணவ்னை ஒட்டி அணைத்தாற்போல் அமர்ந்து கொண்டாள்! அவன் இதழ்க்கடையில் அது என்ன? ஏளனச் சிரிப்பா? பற்களைக் கடித்துக் கொண்டாள்! முன்னெல்லாம் அவள் கோபத்தில் இப்படிப் பற்களைக் கடித்துக் கொள்ளும்போதெல்லாம் அவன் சொல்வது அவள் நினைவில் வந்து தொலைத்தது!

"ஆஹா! ரசம் சொட்டும் ஆரஞ்சுச் சுளைகள்! விதைகளே இல்லாத சுளைகள்! இப்படி அழுத்திக் கடித்தாயானால் ரசமெல்லாம் சிந்திவிடுமே!" என்பான். அவளுக்குச் சிரிப்பு வந்துவிடும். அந்த நினைவு இப்போது அவளுள் தலைதூக்க முகத்தில் தன்னையும் அறியாமல் ஏற்பட்டிருந்த புன்னகையோடு தலை நிமிர்ந்து பார்க்க அவனுள்ளும் அப்போது அதே எண்ணம் தோன்றி இருக்க வேண்டும். அங்கிருந்த ஓர் ஆரஞ்சுப் பழத்தை எடுத்துக் கைகளில் உருட்டிய வண்ணம் அவளையே பார்த்தான்! அவள் உடலோடு மனமும் சேர்ந்து கூசிற்று! இது சரியா? இன்னமும் அவனையே நினைப்பது சரியா? ஆயிற்று! கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கும் மேல் ஆகப் போகிறதே! அவனை விட்டு அவள் விலகி! அற்பக் காரணம்! ஆனால் அதிலேயே சண்டை பெரிதாகி அவனை விட்டு விலகிப் பிறந்த வீடு சென்ற அவள் பின்னர் திரும்பவே இல்லை! இத்தனைக்கும் அவர்கள் திருமணம் காதல் திருமணம் தான்! பெற்றோர் சம்மதத்துடன் நடந்த திருமணம்!

ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது. ஆனால் அவளுக்குத் தான் திருமணத்திற்குப் பின்னர் பல மன மாற்றங்கள். அவன் பெற்றோர் வருவது பிடிக்கவில்லை! அவன் பெற்றோரைச் சந்திக்கச் செல்வதும் அவளுக்குப் பிடிக்கவில்லை! அவள் மருமகளாக வரக் கூடாது என்று ஆரம்பத்தில் தடை போட்டவர்கள் தானே! பின்னர் மகனுக்கு அவளைத் தான் பிடித்திருந்தது என்பதால் தானே சம்மதித்தார்கள்! அங்கே இங்கே சுற்றிக் கடைசியில் அவன் பெற்றோர் அதே ஊருக்கே வந்து விட்டனர். இது இன்னமும் அவளுக்குப் பிரச்னையாகி விட்டது! தன்னுடனேயே பெற்றோரை வைத்துக் கொள்ளவும் விரும்பி அழைத்தும் வந்து விட்டான்! இது அவளுக்கு ஓர் மானப் பிரச்னையாகத் தோன்றி விட்டது. அவளைக் கேட்காமல் எப்படி அழைத்து வரலாம் என்று சண்டை போட்டாள்! என் பெற்றோர் என்னோடு இருக்காமல் எங்கே போக முடியும் என்பது அவன் வாதம். போகப் போகச் சரியாகி விடும் என்றும் கூறினான். ஆனால் அவளால் தான் பொறுக்க முடியவில்லை. கோபத்துடன் பிறந்த வீடு சென்றவள், "நான் அல்லது அவர்கள்! இரண்டில் ஏதாவது ஒன்று தான்!" என நிபந்தனை போட, "மனைவி இன்னொருத்தி கிடைப்பாள்! ஆனால் பெற்றோர் ஒருத்தர் தான்! அவர்களை என்னால் எக்காரணம் கொண்டும் இழக்க முடியாது!" என்று சொல்லி விட்டான்.

மேலும், "நீ உன் பெற்றோருடன் இருக்கையில் என்னுடன் என் பெற்றோர் இருக்கக் கூடாதா?" என்றும் கேட்டான். பெரிய அளவில் கோர்ட், வழக்கு என அலையாமல் இருவரும் மனம் ஒப்பிப் பிரிந்து செல்வதாக எழுதிக் கொடுத்து விட்டார்கள். அதன் பின்னரே அவளுக்குச் சோதனை ஆரம்பித்தது. ஆரம்பத்தில் எல்லாம் அவளைத் தாங்கிய பெற்றோராகட்டும், அண்ணனாகட்டும், பின்னர் அவளைக் குறை கூற ஆரம்பித்துவிட்டனர்.அனுசரித்துப் போயிருக்கணும் என்றார்கள். பின்னர் அவர்கள் தேடித் தந்த மாப்பிள்ளை தான் இப்போதைய கணவர். இவரும் நல்லவரே! வல்லவரும் கூட! ஆனால் இவளைப் போலவே அவரும் ஏற்கெனவே திருமணம் ஆகி மனைவியை ஒரு விபத்தில் இழந்தவர். அவள் பெற்ற குழந்தை இப்போது இவர்களுடன் தான் வளர்கிறது. இதெல்லாம் தெரிந்தே தான் அவள் இந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்க நேரிட்டது! ஏன் எதிர்காலம் குறித்த பயமா? தெரியவில்லை! அவனிடம் மனமாரக் காதலித்த முன்னாள் கணவனிடம் அவள் போட்ட நிபந்தனைகள்! கடுமையான நிபந்தனைகள்! அவை எல்லாம் இப்போதும் போட முடிந்ததா? செல்லாக்காசாகி விட்டன! அவள் தலையை நிமிர்த்திப் பார்த்தாள்.

அவன் இப்போது அவள் கணவருடன் பேசிக் கொண்டிருந்தான். அவளைப் பற்றி அவனிடம் மிகவும் உயர்வாகக் கூறிக் கொண்டிருந்தார் அவளுடைய கணவர். அவளுக்கு மனம் கூசியது! அவன் பெற்றோர் வயது வந்த காலத்தில் அவர்களுடன் சேர்ந்து இருக்க வந்தபோது சம்மதிக்காத அவள் இப்போது இன்னொருத்தி பெற்ற பிள்ளையை வளர்த்து வருவதை அவன் அறிந்தால் என்ன சொல்வான்? அவனுக்கு அது தெரியாமலே போகட்டும் என நினைத்துக் கொண்டாள். ஆனால் அவள் இப்போதைய  கணவன் விடவில்லை. குறிப்பாக இந்த விஷயத்தையே அவனிடம் திரும்பத் திரும்பப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் பெற்றோர் இப்போ அவனுடன் தான் இருக்கிறார்களா? அவன் வேறே கல்யாணம் செய்து கொண்டானா என்பதை அறிய அவளுக்கு ஆவல் அதிகமாயிற்று.

ஆனால் அவன் பேச்சிலிருந்து எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவன் அவளிடம் வைத்திருந்த காதல் அவன் மனதிலேயே இன்னும் இருக்குமா என்று அவளுக்கு சந்தேகமும் ஏற்பட்டது. அதைத் தெரிந்து கொண்டு அவள் என்ன செய்ய முடியும்? என்றாலும் அவன் வேறொரு பெண்ணிடம் தன்னை விட அதிக அன்புடன் இருப்பான், இருக்கிறான் என்பதை அவளால் இன்னமும் பொறுக்க முடியாது போல் தோன்றியது! நினைக்க நினைக்க அவள் தலையே வெடித்து விடும் போல் இருந்தது. அப்போது பார்த்து அவள் கணவன் அவனிடம் அவன் குடும்பத்தைப் பற்றிக் கேட்க, "எனக்குக் குடும்பம் என்று எதுவும் இல்லை! என் பெற்றோர் இருந்தனர்! அவர்களும் நோய்வாய்ப்பட்டு ஒருவர் பின் ஒருவராகப் போய்ச் சேர்ந்து விட்டார்கள்!" என்று மெல்லிய புன்னகையுடன் அவளைக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே சொன்னான்.

"அடி! பழிகாரி! இப்படிச் சீக்கிரமாகவே இறக்கப் போகிறவர்களைக் குறித்தா நீ என்னிடம் சண்டைபோட்டாய்?" என்று அவன் அவளை மறைமுகமாகக் கேட்பது போல் உணர்ந்தாள்! அங்கே கால்கட்டு, பாரம் சுமக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லித் தானே வாழ்க்கையை விட்டே விலகினாள்! இப்போது அங்கே அவன் மட்டும் தான்! ஆனால் அவளோ! இங்கே வந்துஇன்னொரு திருமணம் செய்து கொண்டும் பாரம் சுமக்கத் தான் வேண்டி இருக்கிறது. அதுவும் யாரோ பெற்ற குழந்தையைத் தன் குழந்தையாக எண்ணி வளர்க்க வேண்டும்! ஏன் இந்தப் பரந்த மனம் அவளிடம் முன்னால் இல்லை? தன் மனம் இன்னமும் சரிவரப் பக்குவப்படவில்லை என்பதை அவள் உணர்ந்தாள். அவனோடு இருந்திருந்தால் வாழ்க்கை நிச்சயம் சொர்க்கமாகத் தான் இருந்திருக்கும். அவள் மனதின் ஓரத்தில் இல்லை, இல்லை, மனம் முழுவதுமே இன்னமும் அவன் தான் இருந்தானோ!

தன் எண்ணங்களைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போனாள் அவள். அவனை விட்டு விலகிய பின்னும் அவள் மனம் அவனையே நினைக்கிறது! அவனுடன் வாழ்ந்த நாட்களை எண்ணிப் பார்க்கிறதே! இது அவள் கணவனுக்குத் தெரிந்தால்! எங்கேயாவது அவன் பேச்சு வாக்கில் அவளிடம் பழைய உரிமையோடு பேசிவிடப் போகிறான் என்று கலங்கினாள்! அவள் கண்களில் பயம் குடி கொண்டது. வாய் பேசாமல் தன் கணவனருகே அமர்ந்திருந்தாள். அப்போது அவள் கணவன், " என் மனைவிக்குப் பரந்த மனம்! என் குழந்தையை வளர்க்கிறாள் தன் குழந்தையாக! இதற்காகவே தான் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்றும் நினைக்கிறாள்! இப்படியும் ஒரு பெண்ணைப் பார்த்திருக்கிறீர்களா?" என்று பெருமையுடனும் கர்வத்துடனும் சொன்னான்.

அவளைப் பார்த்துச் சிரித்தான் அவள் முன்னாள் கணவன்! அவனுக்கும் அவளுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் அது! அது தான் அவளுக்குக் குழந்தையை கர்ப்பத்தில் சுமக்கும் பாக்கியம் இல்லை என்பது! அவள் கர்ப்பப் பைக்கு ஒரு குழந்தையைத் தாங்கும் வல்லமை இல்லை. அவளால் அவன் வம்சம் தழைக்க ஒரு குழந்தையைப் பெற்றுத் தர முடியாது!  ஏதோ ஒரு விபத்து ஏற்பட்ட போது இது குறித்து அவளுக்குத் தெரிய வந்தது. அவனிடமும் அதைச் சொல்லி இருந்தாள். ஆனால் அவன் இதைக் கொஞ்சமும் லட்சியம் செய்யவில்லை.  திருமணம் ஆவதற்கு முன்பே  இது தெரிந்தே தான் அவள் மேல் கொண்ட அழியாக் காதலினால் அவளைத் திருமணம் செய்து கொண்டான் அவன். அவளிடம் அன்பாகவும் இருந்தான். ஒரு நாள் கடிந்து ஒரு சொல் சொன்னதில்லை! ஆனால் அவளோ! அவன் பெற்றோர் இவர்களுடன் வாழ வந்தபோது அவர்களை எவ்வளவு கேவலப் படுத்தி இருப்பாள்! அவர்களும் அவளை ஒரு வார்த்தை சொன்னதில்லை! அவள் கணவனும் இந்தக் குறையைச் சுட்டிக் காட்டியதே இல்லை. பெற்றோரிடம் கூட இதைக் குறித்து அவன் சொல்லி இருக்கவில்லை! ஆனால் இப்போது! அவனை விட்டு விலகி வந்தாயிற்று. இது தான் சாக்கு என்று அவளைக் காட்டிக் கொடுத்து விடுவானோ! பயத்துடன் அவள் உட்கார்ந்திருந்தாள். அவள் முகம் பயத்தில் வெளுத்தது. கைகள் நடுங்கின

ஆனால் அவனோ மிகவும் சாவதானமாக அவளைப் பார்த்து,
"அப்படியா, திருமதி மோகன், உங்கள் பெருந்தன்மையான மனம் யாருக்கு வரும்? உங்கள் கணவரின் குழந்தையை நீங்கள் வளர்த்து வருவது உண்மையிலேயே மிகவும் அரிதான ஒன்று. அதுவும் உங்கள் சொந்தக் குழந்தையைப் போலவே வளர்க்கிறீர்களாமே! உங்களைப் போன்றவர்கள் இருப்பதால் தான் நாட்டில் மழையே பெய்கிறது!" என்றான் அவ்ளைப் பார்த்து. அவளைத் தெரிந்ததாகவே காட்டிக் கொள்ளாமல் பேசிய அவனைப் பார்த்து அவள் கண்கள் நீரை மழையாக வர்ஷிக்க அதைக் கண்ட அவள் கணவன் கண்களிலும் கண்ணீர் வர, அவள் முன்னாள் கணவனின் கண்களும்   கண்ணீரால் நிறைந்தன. அதன் காரணம் அவளுக்கு மட்டுமே தெரியும். அவளை இழந்த பின்னாலும் இன்னொருத்தியை நினைத்துக் கூடப் பார்க்காமல் வாழ்ந்து வரும் அவன் முன்னே அவள் மிகச் சிறியவள்! தன்னை மிக உயர்ந்த இடத்தில் தூக்கி வைத்துவிட்டானே! இதை எண்ணியதும் தன் கண்களில் பொங்கி வரும் கண்ணீரை அடக்க அவள் மிகச் சிரமப்பட்டாள்! அவர்களும் பொங்கி வரும் கண்ணீரை அடக்கமுடியாமல் சிரமப்பட்டார்கள். 

87 comments:

  1. இதோ வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எங்கே! ஆளையே காணோம்! :)

      Delete
    2. ஹா ஹா ஹா விடாதீங்கோ கூப்பிடுங்கோ:)... நைசா மாறப் பார்க்கிறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      Delete
    3. அதானே! கூப்பிட்டும் ஆள் வரவே இல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
    4. இதோ... வந்துட்டேன்... ஸாரி, லேட்டானத்துக்கு!

      Delete
    5. பெஞ்ச் எங்கே வைத்திருக்கிறீர்கள்... இதோ இருக்கா? இருங்கள் கொஞ்சம் ஏறி நின்று விட்டு வருகிறேன்!!!

      :))

      Delete
    6. அது! அந்த பயம் இருக்கட்டும்! பெஞ்சிலேயே நில்லுங்க! :)

      Delete
  2. அருமை சகோ இதை கற்பனை கதை என்று மட்டும் என்னால் நினைக்க முடியவில்லை உண்மைச் சம்பவங்களோடு தங்களது கற்பனையும் கலந்த காவியம்.

    அந்த முன்னாள் கணவன் நிச்சயமாக தியாகியே...

    இன்றைய பெண்கள் அற்ப காரணங்களுக்காக கணவர்களை பிரிகின்றார்கள் அதேநேரம் இந்த தவறால் பின்னால் வருந்தாத ஒரு பெண்கூட கிடையாது.

    இரண்டாவது வாழ்க்கை பிரமாண்டமான வாழ்க்கை ஆயினும் அது முதல் வாழ்க்கைக்கு உரிய அங்கீகாரத்தை கொடுக்காது நமது சமூகம் இது மறுக்க முடியாத உண்மை.

    எமது பாராட்டுகள் இவ்வருட "சிறந்த கதையாசிரியர்" விருதை திரு.மோடிஜி அவர்களால் பெறப்போகும் உங்களுக்கு.

    ReplyDelete
    Replies
    1. ஓரளவு உண்மையே! ஆனால் பெண் ஏமாற்றப்பட்டாள்! கணவனின் முதல் மனைவி இறந்து போக அவள் விட்டுச் சென்ற 3 குழந்தைகளையும் வளர்க்க 2ஆவது திருமணம் செய்த கணவன் தான் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டதை மறைக்க..... அது பின்னர் தெரிந்த பெண்ணின் மனம் படாத பாடு பட்டது! :( அதைக் கொஞ்சம் மாற்றி எழுதினேன்! :)

      Delete
  3. சூப்பர். நல்லா எழுதியிருக்கீங்க. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஹூம், பொற்கிழி கொடுக்காதவரை விடப் போவதில்லை! :)

      Delete
    2. அப்போ முதலில் கதை எழுதிய நேக்கு பொற்கிழி:) ஹையோ டங்கு ஸ்லிப்ட்:) பொற்கிளி இல்லையோ? விட மாட்டேன்ன் மீ பிரித்தானியாக் கண்ட் கோர்ட்டுக்குப் போவேன்ன்ன்ன்:). நேக்கு நீதி வேணும்ம்ம்ம்:) எனக்கு தெரிஞ்சதெல்லாம் கடமை நேர்மை எருமை:).

      Delete
    3. ஹிஹிஹி, கௌதமன் சார் ரொம்ப வருஷமாப் பொற்கிழியைக் கட்டாமலேயே இருக்கார். கட்டி வைச்சா யாரானும் ஒருத்தர் தட்டிக்கலாமே! எங்கே! :)))

      Delete
    4. அதிரா பேச்சு பேச்சா இருக்கணும் நீங்க பொற்கிளி என்றுதான் கேட்டிங்க ..ஒரு கோல்டு கலர் சாயம் பூசின கிளி பொம்மை உங்களுக்கு அனுப்பி வைப்பார் கௌதமன் சார் ..
      பொற்கிழி கீதா அக்காவுக்கே !!

      Delete
    5. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கிளி தானே கரீட்டு.. மீ கீதாக்கா தான் கவலையீனமா எழுதிட்ட என நினைச்சனே ஹையோ ஹையோ:)

      Delete
    6. ஹாஹாஹா, அதிரா! கிழி தான் சரி! கிளின்னா பறக்கிற கிளி! அதுவும் நீங்க பொற்கிளி இல்ல கேட்டிருக்கீங்க! அதான் ஏஞ்சலின் கோல்டு கலர் சாயம் பூசின கிளி பொம்மை கொடுக்கச் சொல்லிட்டாங்க! ஹிஹிஹிஹி! :))))) நான் கவனக்குறைவா எல்லாம் எழுதலையாக்கும்! ஆகவே பொற்கிழி எனக்கே எனக்கு!

      Delete
    7. ஏஞ்சலின் சரியாச் சொல்றாங்க! பொற்கிளி கேட்டவங்களுக்குப்பொற்கிளி கொடுங்க கௌதமன் சார்!

      Delete
  4. கதையை மிகவும் ரஸித்துப் படித்தேன். மிகவும் யோசித்து மிக அழகாக எழுதியுள்ளீர்கள்.

    இதுபோல எவ்வளவோ பேர்கள் தங்களுக்குக் கிடைத்த மிக அருமையான வாழ்க்கையினை அனுபவிக்கக் கொடுத்து வைக்காமல், மிகச் சாதாரண ஸில்லியான காரணங்களுக்காக, கிடைத்த அருமையான நல்லதொரு வாழ்க்கையையும் கணவரையும் தொலைத்துவிட்டு, பின்னால் அதைவிட கொடுமைகளை ஏற்றுக்கொண்டு வாழ்ந்துகொண்டுதான் வருகிறார்கள்.

    எனக்குத் தெரிந்தே இதுபோல பலரின் உண்மைக்கதைகள் என்னிடம் உள்ளன.

    தங்களின் இந்த ஆக்கத்திற்குப் பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வைகோ சார், உங்களின் இந்தப் பாராட்டுக்கு மிகவும் நன்றி. ஓரளவு இது உண்மைக் கதை தான்! முதல் காதலில் ஏமாந்த பெண்ணின் கதையும் இருக்கு! காதலனை நம்பாமல் வேறு திருமணம் செய்து கொண்டு ஏமாந்த பெண்ணின் கதையும் உண்டு. இங்கே கல்யாணம் ஆகியும் துர்க்குணத்தால் காதல் கணவனை விட்டுப் பிரிந்தாற்போல் காட்டி இருக்கேன். ஆனால் இப்போ சமீபத்தில் இத்தகைய பெண்களே அதிகம் கிடைக்கின்றனர்! :(

      Delete
  5. அருமையான கதை... வாசிக்க விறுவிறுப்பாக இருந்தது.

    அவள் வேறு திருமணம் செய்துகொண்டு போய்விட, இவனோ இன்னமும் அவளின் நினைப்பாகவே இருப்பது மனதை உருக்கியது. இப்படி எத்தனையோ சம்பவங்கள் நிஜத்திலும் நடக்கின்றன.

    பெரும்பாலான பிரிவுகள் 'உப்புச்சப்பில்லாத' காரணத்துக்காகவே நடக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், என் உறவினர் ஒருவர் உறவு முறைப் பெண் ஒருத்தியைத் திருமணம் செய்யும் ஆவலில் இருக்க! அந்தப் பெண்ணின் பெற்றோரோ வேறொரு பிள்ளையோடு (அவரும் உறவு தான்! என்றாலும் பெண், பிள்ளை இருவருக்கும் இஷ்டமில்லாத் திருமணம்) திருமணம் முடித்து வைக்க! இவர் இப்போதும் அதையே நினைத்து நினைத்து உருகிக் கொண்டிருக்கிறார். :(

      Delete
  6. ஒரு வாழ்க்கையை உதரும்போது மறுவாழ்கையை நினைத்துப் பார்ப்பதில்லை. அது தானாகவே அமையும்போது வாழ்க்கையின் ஸ்வரூபம் விளங்குகிறது. ஆயிரத்தில் ஒருத்தன்அவன். ஆண்கள்தான் கொடி மனதுடைவர்கள் அல்ல. பெண்களிலும் இருக்கிரார்கள். காதலோ,சாதலோ நடுவில் இந்தப் பெற்றவர்களின் பாகம் இல்லாமலிருந்தால் போதும். ஸாதாரணமாக இப்போது பிரிவுகள் ஸகஜமாகிவிட்டது. மனது திருந்துவது அபூர்வ விஷயமாகப் போ்விட்டது. நிறைய பார்த்தாகிவிட்டது.
    கதை இல்லை. நிஜமாகக் கூட எங்காவது நிகழ்ந்திருக்கலாம். பாராட்டுகள். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. ஒரு விதத்தில் நிகழ்வு தான் அம்மா! என்றாலும் முழுவதும் சொல்லவும் முடியாது! பிரிவுகள் இல்லாத வாழ்க்கையே இப்போதைய இளைஞர்களிடம் எதிர்பார்க்க வேண்டி இருக்கிறது. பெண்களில் கொடிய மனம் படைத்தவர்கள் பலர் இருந்தாலும் சமுதாயம் பெரும்பாலும் பெண்ணுக்கே ஆதரவாகவும் உதவியாகவும் இருந்து வருகிறது. பல ஆண்கள் படும் துன்பங்கள் வெளியே வருவதில்லை! :(

      Delete
  7. மிகவும் ரஸித்த வரிகள்:-

    //கோபத்துடன் பிறந்த வீடு சென்றவள், "நான் அல்லது அவர்கள்! இரண்டில் ஏதாவது ஒன்று தான்!" என நிபந்தனை போட, "மனைவி இன்னொருத்தி கிடைப்பாள்! ஆனால் பெற்றோர் ஒருத்தர் தான்! அவர்களை என்னால் எக்காரணம் கொண்டும் இழக்க முடியாது!" என்று சொல்லி விட்டான்.//

    //அவளைத் தெரிந்ததாகவே காட்டிக் கொள்ளாமல் பேசிய அவனைப் பார்த்து அவள் கண்கள் நீரை மழையாக வர்ஷிக்க அதைக் கண்ட அவள் கணவன் கண்களிலும் கண்ணீர் வர, அவள் முன்னாள் கணவனின் கண்களும் கண்ணீரால் நிறைந்தன. அதன் காரணம் அவளுக்கு மட்டுமே தெரியும். அவளை இழந்த பின்னாலும் இன்னொருத்தியை நினைத்துக் கூடப் பார்க்காமல் வாழ்ந்து வரும் அவன் முன்னே அவள் மிகச் சிறியவள்! //

    -=-=-=-=-

    இதுபோன்று மிகவும் நியாயமாக நடந்துகொள்ளும் ஆண்கள் லக்ஷத்தில் ஒருவராவது இன்றும் இந்த உலகில் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்.

    பெண்களில் ..... ஆயிரத்தில் ஒருத்தி வீதம் இதுபோல தவறாக அவசரப்பட்டு முடிவெடுத்து அவதிக்கு உள்ளாகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. மீள் வருகைக்கும், ரசித்த வரிகளைச் சுட்டியதற்கும் மீண்டும் என் நன்றி வைகோ சார். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே! சங்கு சுட்டாலும் வெண்மை தரும்! என்பதைப் போல் தான் இங்கேயும் நடந்திருக்கிறது! :)

      Delete
    2. அட்டாலும் பால் சுவையில் குன்றாது மூதுரையை ஞாபகப்படுத்தி விட்டீர்கள். கதையை அப்புறம் முழுவதுமாய்ப் படித்து கருத்துரைக்கிறேன்

      Delete
    3. என்ன, இன்னமும் காணோம்? அங்கே சனிக்கிழமை விடுமுறை இல்லையோ? ஆனால் இப்போ ரம்ஜான் விடுமுறை இருக்கணுமே! :))))

      Delete
  8. ///இனி உங்கள் பாடு! கௌதமன் பாடு! அவர் தானே கதையே கேட்டார். யாருக்கானும் கோபம் வந்து திட்டணும்னு தோணிச்சுனா கௌதமனைப் போய்த் திட்டுங்க! இனி ஒரு முறை இம்மாதிரிப் போட்டி எல்லாம் வைப்பாருங்கறீங்க? ம்ஹூம்! ஓடிப் போயிட மாட்டாரா! :)))))//

    ஹா ஹா ஹா கீதாக்கா அவர் ஓல்ரெடி ஓடிப்போய் மேசைக்குக் கீழ ஒளிச்சிட்டார் தெரியுமோ?:)

    ReplyDelete
    Replies
    1. அப்படி எல்லாம் ஒளிஞ்சுக்க விட்டுடுவோமா என்ன? பொற்கிழி கிடைக்காதவரை இணையத்திலேயே உள்ளிருப்புப் போராட்டம்! :)

      Delete
    2. ஸ்ராட் மூசீஈஈஈஈஈக்க்க்க்க்க்க்க்:)

      Delete
    3. ஆரம்பிச்சாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்!

      Delete
  9. ஆஹா கதையின் கோணம் இங்கு மாறியிருக்கிறது, பெண் வருந்துகிறா இங்கு. சோட் அண்ட் சுவீட்டான கதை. சின்னச் சின்ன விசயங்களுக்காகப் பிரிந்துவிட்டு பின்னர் பழசை நினைச்சு வருந்துவது தப்பு.. ஒரு முடிவை அவசரத்தில் எடுத்திடக்கூடாது.. நன்கு ஆலோசித்து ரைம் எடுத்தே எடுக்க வேண்டும். இது கண்போனபின் சூரிய நமஸ்காரம் போலாகி விடுகிறது.

    இக்கதையில் வரும் பெண், ஒரு நிலையில்லா மனம் கொண்டவ போல இருக்கிறது.. இப்போதைய கணவரும் நல்லவர் எனும்போது மனதை கட்டுப்படுத்தி அமைதியாகிட வேண்டியதுதானே பிறகென்ன தாவ விடுவது மனதை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

    என்ன இருந்தாலும் இதில் இருவருக்குமான புரிந்துணர்வு/ சகிப்புத்தன்மை போதாது.. மனைவி கோபத்தில் போனதும் அப்படியே கைவிட்டு விட்டால் அங்கே எங்கிருக்கு அன்பு.. அதேபோல மனைவியும் போன வேகத்தில் இன்னொரு மறுமணம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஹா ஹா ஹா:).

    ReplyDelete
    Replies
    1. போன வேகத்தில் எல்லாம் திருமணம் செய்துக்கலை! மறுபடி பாருங்க! ஆரம்பத்தில் பிறந்த வீட்டில் கொஞ்சம் சுமுகமாகவே இருந்திருக்கு! அதுக்கப்புறமாத் தான் மாறிட்டாங்க! அதனால் வேறே வழி தெரியாமலும் கல்யாணம் பண்ணிக் கொண்டிருக்கலாம். அதோடு பெண்மனம் எப்போதுமே பழசைத் தான் நினைச்சுப் பார்க்கும்! இது கொஞ்சம் ஜாஸ்தி! அதிலும் உளமாரக் காதலித்தவனை மறுபடி நேரில் பார்க்கையில் மனம் தடுமாறுகிறது. ஒரு சிலருக்குக் காதல் வெற்றி அடையாவிட்டாலும் பழைய காதலனைத் திருமணத்திற்குப் பின் பார்த்தால் மனம் தடுமாறும் என்பார்களே!

      Delete
    2. அந்தப் பழைய கணவரிலும் தப்பிருக்கு, காதலிச்சு கைப்பிடித்த பெண், கோபித்திட்டுப் போனால்.. அப்படியே விட்டிடுவதோ.. தேடாமலே விட்டதனால் அவ இப்படி முடிவு எடுத்திருக்கலாம். பெரும்பாலான ஆண்களுக்கு.. அம்மா அப்பாவையும் , மனைவியையும் சரிசமனாக சமாளிக்கத் தெரிவதில்லை... அதனாலேயே பல இடங்களில் இப்படிப் பிரச்சனை வருகிறது.

      ஒரு பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும்... போனவாரம் ரேடியோவில் போச்சுது, அது என்ன படம் எனத் தேடினேன்.. 6 இலிருந்து 60 வரை... சரி பார்க்கலாமே என பார்க்கிறேன், பாதிதான் பார்த்தேன் .. ஆனால் அதற்குள்.. ரஜனி.. தன் மனைவியையும் தங்கையையும் எவ்வளவு அழகாக சமாளிக்கிறார் ... நன்றாக இருக்கு.. இனி மிகுதி எப்படியோ தெரியவில்லை:).

      Delete
    3. பழைய கணவரிடம் தான் அவ்ள் நிபந்தனை போடறாளே! உன் பெற்றோரை ஒதுக்கு! அப்போத் தான் நான் வருவேன் என்று சொல்லி விடுகிறாள்! இப்போப் பெரும்பாலான பெண்கள் மாமனார், மாமியாரை எக்ஸ்ட்ரா லகேஜ் என்று சொல்வது வாடிக்கையாகி விட்டது! பெண்ணின் பெற்றோர்களே சொல்கிறார்கள்! :( ஆண்கள் பாடு அநேகமாய் இருதலைக் கொள்ளி எறும்புனு சொல்லலாம். ரஜினி சினிமாவில் டைரக்டர் சொன்னபடி சமாளிச்சுட்டார்! நிஜ வாழ்க்கையில்??????? :))))))))

      Delete
  10. ///இங்கே வந்துஇன்னொரு திருமணம் செய்து கொண்டும் பாரம் சுமக்கத் தான் வேண்டி இருக்கிறது. அதுவும் யாரோ பெற்ற குழந்தையைத் தன் குழந்தையாக எண்ணி வளர்க்க வேண்டும்! ஏன் இந்தப் பரந்த மனம் அவளிடம் முன்னால் இல்லை?//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இப்பவும் அவவின் எண்ணம் சரியில்லை.. வெளியே நடிக்கிறா அது தன் குழந்தை என, ஆனா உள்ளுக்குள்ளே அதை வெறுக்கிறா.. இப்படி நடிக்கும் மனிசரை எப்படி நம்புவது.. பெற்றால்தான் பிள்ளையா.. அவவுக்கு குழந்தையே பிறக்காது என்பதால் கடவுள் அனுப்பிய குழந்தை அது என்பதை எண்ண மறந்திட்டா... பாவம் புது அப்பாவிக் கணவருக்கு இது தெரியாமல் அவவைப் புகழ்ந்து தள்ளுறார்:)...

    ஹா ஹா ஹா பாதி அனுபவம் மீதி கற்பனை எனச் சொல்லிட்டீங்க கீதாக்கா... அருமையாக எழுதிட்டீங்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அவள் மனம் இன்னும் பொருந்தவில்லை தான்! ஆனால் இனிமேல் அவள் முதல் கணவனின் பரந்த மனதைப் பார்த்தாவது மாறட்டும் எனப் பிரார்த்திப்போம்.

      Delete
  11. பின்னூட்டக் கருத்துகளே கதையாப் பரிமளிக்கிறதோ எல்லாமே காலத்தின் கோலங்கள்தானே

    ReplyDelete
    Replies
    1. காலம் செய்த கோலம் தான் ஐயா! வரவுக்கு நன்றி.

      Delete
  12. நானும் வந்திட்டேன்.. இதோ கதையை படித்து பின்னூட்டமும் வாசிச்சிட்டு வரேன்

    ReplyDelete
  13. அக்கா மிக அருமையா கதை ..இந்த காலத்தில் பல காதல் திருமணங்கள் சரியான புரிதல் இல்லாமல் அவசரத்தில் முடிகின்றன ..
    ஆண்கள் பொஸசிவ்னெசாலும் பெண்கள் அடங்காபிடாரித்தனத்தாலுமே இப்படிப்பட்ட பிளவுகள் ஏற்படுகின்றன ..
    ..பெற்றோர் நிராகரித்தனர் துவக்கத்தில் என்றால் அதை மனதில் வைத்து பின்னாளில் அவர்களை வெறுப்பது என்ன நியாயம் :(
    அன்பின் வடிவமான பெண்கள் செய்யும் காரியமில்லையே இது ..

    ReplyDelete
    Replies
    1. பெண் அன்பின் வடிவம் என்று யார் சொன்னது? எத்தனையோ பெண்களின் கோபம், பழிவாங்கல் உலகப் பிரசித்தம்! அரசியல் தலைவர்களிலேயே பலர் உள்ளனர்! :)))))) கல்கி எழுதின பொன்னியின் செல்வன் கதையில் வரும் "நந்தினி" போதாது? இது மாதிரி எத்தனை கதைகள் உள்ளன! :)))) தொலைக்காட்சித் தொடர்களில் பாருங்க! பெண்கள் தான் பழி வாங்குகிறார்கள்! ஆள் வைத்துக் கடத்தல், கொலை, கொள்ளை எல்லாமும் செய்யறாங்க! நீங்க வேறே! எந்த யுகத்தில் இருக்கீங்க! :)

      Delete
    2. தாய், பெண், துறவி, ஆலய குருக்கள், பள்ளி ஆசிரியர் - இந்த பொசிஷனுக்கெல்லாம் ஒரு அளவீடு இருக்கிறதல்லவா? அது மாறும்போது, அந்தக் குணம் இல்லாதபோது அது அதிர்ச்சிதான்.

      Delete
    3. ஆமாம், பொதுவாகப் பெண்கள் என்றாலே பொறுமை என்று தான் ஆகி இருக்கிறது! ஆனாலும் அந்தக் காலத்தில் இருந்தே பெண்களால் வல்லரசுகள் அழிந்ததையும், ஏற்பட்டதையும் குறித்துக் கேட்டிருக்கோம். பெண்களில் வில்லியாக இருப்பவர்களும் உண்டே!

      Delete
  14. //அவனிடம் மனமாரக் காதலித்த முன்னாள் கணவனிடம் அவள் போட்ட நிபந்தனைகள்! கடுமையான நிபந்தனைகள்! அவை எல்லாம் இப்போதும் போட முடிந்ததா? செல்லாக்காசாகி விட்டன! அவள் தலையை நிமிர்த்திப் பார்த்தாள்.//

    ஹ்ம்ம் :( காலம் கடந்த ஞானம் வீண் தான் ..

    எதுவும் அருகில் இருக்கும்போது அதன் அருமையை எவருமே உணர்வதில்லை பின்பு தவற விட்டபின் அன்று செய்த தவறுகள் நினைவில் தாண்டவமாடும் :(

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் அவனைத் தேடிப் போயிருக்கலாம்! ஆனால் இந்த "நான்" என்னும் உணர்வு! அது தடுத்திருக்கணும்! :)))

      Delete
  15. முன்னாள் கணவர் முன் இந்நாள் கணவரை வேண்டுமென்றே நெருக்கி உட்கார்ந்து அகந்தையை காட்டுவது ,மருமணத்தில் தாயை இழந்த குழந்தைக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் சூழலுக்காக வருத்தம் ,முன்னாள் கணவன் வேறு பெண்ணிடம் அன்பு காட்டுவதை நினைத்தும் பார்க்க முடியா குணம் ஆகியன ..இக்கதையினுள் மெயின் குற்றவாளி கதாநாயகி தான் என்பதை கூறுகின்றன ..

    இத்தனை ஆண்டுகளாகியும் அந்தப்பெண்ணின் மனம் பக்குவப்படவில்லை என்பது வேதனையே

    ReplyDelete
    Replies
    1. முன்னாள் கணவன் வேறு பெண்ணிடம் அன்பு காட்டுவதை முன்னாள் மனைவி+காதலியால் பொறுக்க முடியாமல் போவது சகஜம் தான்! பல பெண்களும் அப்படி ஆண்கள் இருப்பதை விரும்புகின்றனர்! :( உண்மை கசக்கும் என்றாலும் இது தான் நிஜம்! அப்படியே வேறொரு பெண்ணை மணந்து வாழ்ந்தாலும் இவளை மறக்காமல் அவனுக்குப் பிறக்கும்/பிறந்த குழந்தைக்கு அந்த முன்னாள் மனைவி+காதலியின் பெயரையாவது வைக்கணும் என்பது எழுதப்படாத சட்டம்! :(

      Delete
  16. வாழ்க்கையில் பல தினுசான மனிதர்களை பார்த்து அவர்களது குணங்களை மனதினை படித்து அழகாக எழுதியிருக்கீங்க அக்கா ..
    நம்ம ஏரியா கௌதமன் சாருக்கும் மிக்க நன்றி ..அவரவர் பார்வையில் க.க.போ அற்புதமாக வித்யாசமான கருவுடன் விதவிதமான மனிதர்களும் அவர்களின் மன ஓட்டங்களுடன் பயணித்துக்கொண்டிருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஏஞ்சலின். கதை அக்கு வேறு ஆணி வேறாக அலசி விட்டீர்கள்! அருமையான அலசல்! :))))

      Delete
  17. ரொம்ப அருமையான எழுத்தாக்கம்.. நாயகியின் உணர்வுகள், தங்கள் எழுத்துக்களின் வழியாக, துல்லியமாக வெளி வருகின்றன!.. நெஞ்சைச் சுடும் தற்கால நிஜம் இந்தக் கதை!..பிரிவது ரொம்பவே சுலபம். ஆனால் அதற்குப் பின்?. இதை யாரும் யோசிப்பதேயில்லை. தாங்கள் சொன்னதைப் போல், பல ஆண்களின் தியாகம் வெளி வருவதேயில்லை. கதை மிக உருக்கமாக இருக்கிறது!.

    ReplyDelete
    Replies
    1. நாயகியின் உணர்வுகள் இந்தக் காலப் பெண்களின் உணர்வுகளையே சொல்கின்றன. எங்கள் உறவுமுறைப் பெண் ஒருத்தி கலப்புத் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளும் பிறந்த பின்னர் தான் தப்பு செய்துட்டோமோ என நினைத்து வருந்துவதோடு அல்லாமல் தன் பக்கத்துச் சொந்தக்காரர்களிடம் இருந்து தனக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை என்று நினைத்துக் கொண்டு சண்டையும் போட்டு வருகிறாள். திருமணத்துக்கு முன்னரே இது சரியாக வருமா என யோசிப்பதில்லை!

      Delete
  18. //அவளை இழந்த பின்னாலும் இன்னொருத்தியை நினைத்துக் கூடப் பார்க்காமல் வாழ்ந்து வரும் அவன் முன்னே அவள் மிகச் சிறியவள்! தன்னை மிக உயர்ந்த இடத்தில் தூக்கி வைத்துவிட்டானே! இதை எண்ணியதும் தன் கண்களில் பொங்கி வரும் கண்ணீரை அடக்க அவள் மிகச் சிரமப்பட்டாள்! அவர்களும் பொங்கி வரும் கண்ணீரை அடக்கமுடியாமல் சிரமப்பட்டார்கள். //

    கேட்ட வரி வந்து விட்டது கதையில்.
    கதை நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கோமதி அரசு!

      Delete
  19. அரேஞ்ட் கல்யாணங்களை விட காதல் திருமணங்கள்தான் நிறைய தோல்வி அடைகின்றனவோ?

    ReplyDelete
    Replies
    1. அப்படி எல்லாம் இல்லை ஶ்ரீராம்! எனக்குத் தெரிந்து சமீப காலங்களில் பல திருமணங்கள் பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்டு ஜாதகம், நாள், நட்சத்திரம் பார்த்துச் செய்யப்பட்ட திருமணங்கள், மிகவும் ஆடம்பரமாகவும் பகட்டாகவும் நடந்த திருமணங்கள் பல லட்சங்களை விழுங்கிய திருமணங்கள் தோல்வி அடைந்திருக்கின்றன! :(((( காதல் திருமணம் பெற்றோர் ஆதரவுடன் நட்ந்தால் சரி! இல்லை எனில் அதில் தோல்வி ஏற்பட்டால் தனியாகத் தாங்க வேண்டும்! :(

      Delete
  20. சில சமயம் தங்கள் அன்பை வெளிப்படுத்தாமல் மனதுக்குள்ளேயே வைத்துக் கொள்ளும் அழுத்தமும் (இதை ஒருவகை ஈகோ என்று கூடச் சொல்லலாமோ) கணவன் மனைவியரிடையில் இடைவெளியைத் தோற்றுவிக்கலாம். அவர்களுக்காய் புரியும் என்று இருவரும் நினைப்பது தவறு என்பதைக் காலம் கடந்தே உணர்வார்கள். வல்லிம்மா அடிக்கடி சொல்வார். இருக்கும் காலத்தில் துணையை வெளிப்படையாக அன்பு செலுத்தி, மனமார பேசி மகிழ்வோடு இருங்கள் என்று.

    ReplyDelete
    Replies
    1. கணவன் அன்பாகவும் சொல்லப் போனால் ரொமான்டிக்காகவும் இருந்திருக்கிறான்! கதையின் இரண்டாவது பத்தியைப் படித்துப் பார்க்கவும். பெற்றோர் நம்முடன் தான் இருப்பார்கள் என்பதைத் திருமணத்துக்கு முன்னரே அவன் வலியுறுத்தி இருக்க வேண்டும்! அது தான் அவன் செய்த தப்பு! ஆனால் அவங்க தனியாக இருந்தாலும் போய்ப் பார்ப்பது கூட அவ்ளுக்குப் பிடிக்கவில்லை என்றால் அது மாபெரும் தவறு அல்லவோ! அன்பெல்லாம் வெளிப்படையாகவே இருந்திருக்கிறது! ஒரே முட்டுக்கட்டை அவளைப் பொறுத்த மட்டில் மாமனார், மாமியார் தான்! வயதானவங்க, இருக்கும் காலம் கொஞ்சமே என்ற எண்ணமாவது அவளிடம் இருந்திருக்கணும் இல்லையா!

      Delete
    2. இன்றைக்குக் குழந்தை, நாளை மணமானவன்(ள்), நாளை மறு நாள் கிழவன்(கிழவி). இதை உணராதவர்களுக்குக் காலம்தான் அதனை உணர்த்தும்.

      ஸ்ரீராம் எழுதியிருக்கும், வல்லிம்மா சொல்லும் வார்த்தை ஆயிரத்தில் ஒரு வார்த்தை. ஆனால் அதன்படி நடக்கவேண்டுமே!

      Delete
    3. யெஸ் ஸ்ரீராம் நீங்கள் சொல்லியிருப்பதும் ஒரு ஈகோதான்....நிச்சயமாக...

      வல்லிம்மாவின் வார்த்தைகள் அருமை...உண்மைதான்...//வல்லிம்மா அடிக்கடி சொல்வார். இருக்கும் காலத்தில் துணையை வெளிப்படையாக அன்பு செலுத்தி, மனமார பேசி மகிழ்வோடு இருங்கள்" // ஆமா இதில் என்ன குறைந்து விடப் போகிறது இல்லையா? அப்படி இருக்கும் ஜோடிகளையும் பார்க்கிறேன் ஸ்ரீராம். ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்..அவங்க பேசிக்கிற விதமே அலாதியா இருக்கும்...அப்படி இருந்தா ரொம்பவே இனிமையான வாழ்க்கைதான்...

      கீதா

      Delete
    4. வல்லி சொல்லி இருக்கிறாப்போல் நடந்துக்கணும்னு என்ன தான் நினைச்சாலும் அது அந்த அந்தச் சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து நம்மை நடந்துக்க வைக்கிறது! வெளிப்படையாக அன்பைக் காட்டி வாழும் தம்பதியர் அரிதாகவே கிடைக்கின்றனர்!

      Delete
  21. காதல் செய்யும் காலத்தில் தங்கள் பலவீனங்களை மறைத்து பொய்யான உணர்வுகளை எதிர்பாலிடம் காட்டும் காதலே தோற்கிறது. நாற்றத்தை மறைக்க சென்ட் போட்டுக் கொள்வது போல.. சென்ட் மனம் காலியானதும் அதுவும் சேர்ந்தே மறைக்கப்பட்ட நாற்றத்தோடு நாறும்! நான் காதலித்த காலத்தில் என் பலவீனங்களை என் பாஸிடம் மறைத்ததில்லை. அதுபோல அவர் பலவீனங்களையும் உணர்ந்தே இருந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. எல்லா பலவீனங்களும் உடனடியாகத் தெரிய வாய்ப்பில்லை ஶ்ரீராம்! மெல்ல மெல்லத் தான் புரிய வரும். அதுவும் சில குறிப்பிட்ட பலவீனங்கள் அந்த நிகழ்வுகளின் போதே தெரிய வரலாம்! அப்போது ஏற்படுவது அதிர்ச்சி தான்!

      Delete
    2. ஆமா ஸ்ரீராம். இது பல ஜோடிகளுக்குப் பொருந்தும். ஆனால் சக்ஸஸ்ஃபுல் காதல் ஜோடிகளும் இருக்கிறார்கள்தான். எங்கள் குடும்பத்திலேயேவும்....

      கீதா

      Delete
    3. எங்கள் குடும்பத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு ஆரவாரமாக நடந்த பல திருமணங்கள் விவாகரத்தில் முடிந்திருக்கின்றன. :( காதல் திருமணம் ஒரு வேகத்தில் நடந்தாலும் பின்னால் வருந்தியவர்களும் உண்டு. வருந்தாமல் தொடர்ந்து இல்வாழ்க்கையைத் தொடர்பவர்களும் உண்டு.

      Delete
  22. பலவீனம் இல்லாத மனிதர் யார்? இந்தக் கதையில் அவள் பலவீனம் ஐந்து அவள் பிறந்த வீடு சென்றதும் அப்படியே விட்டு விடாமல் சென்று அழைத்து வந்து புரிய வைத்திருக்க வேண்டும் அவன்.

    ReplyDelete
    Replies
    1. அது என்ன ஶ்ரீராம்? அவள் பலவீனம் ஐந்து?? புரியலை! அவள் பிறந்த வீடு சென்றதும் நிபந்தனைகள் போட்டுவிட்டுத் தானே! பெற்றோரை விட முடியாது என அவன் சொல்லி விட்டான்! விட்டு விட்டு வா என அவள் சொல்லி விட்டாள்! அதற்கு மேல் புரிதலுக்கு வழியே இல்லையே! :)

      Delete
    2. //அது என்ன ஶ்ரீராம்? அவள் பலவீனம் ஐந்து??//

      ஐந்து தவறாக வந்திருக்கிறது. என்ன நினைத்து "ரைப்" ( !! ) செய்தேன் என்று நினைவில்லை!

      Delete
  23. /என்றாலும் அவன் வேறொரு பெண்ணிடம் தன்னை விட அதிக அன்புடன் இருப்பான், இருக்கிறான் என்பதை அவளால் இன்னமும் பொறுக்க முடியாது போல் தோன்றியது! //

    'இன்னொருவருடன் திருமணம் ஆனபின்னுமா?' என்று படிப்பதற்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் உண்மை நிலை!

    ReplyDelete
    Replies
    1. இது வெளியே சொல்லிக்காட்டியும் பல பெண்களின் நிலைமை! எனக்குத் தெரிந்து ஆண் ஒருத்தர் கூடத் தன் மனைவிக்கு முதலில் ஒரு பிள்ளை பார்த்து நிச்சயம் ஆக நாள் பார்த்து நிச்சயம் வரை போய்விட்டுப் பின் அந்தக் கல்யாணம் நின்றுவிட்டது; அதன் பின்னரே தன் ஜாதகம்,வேலை போன்றவற்றைப் பார்த்துத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது தெரிந்ததும் தன் மனைவியிடம் "அந்தப் பையர் என்னை விட ஸ்மார்டாகா இருப்பாரா?" என்று கேட்டாராம்! ஆண்களுக்கே இப்படி இருந்தால் பெண்களுக்கு மட்டும் தோன்றாதா?

      தன்னைப் பெண் பார்த்துவிட்டு மறுத்து விட்டுச் சென்ற வரன் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு விட்டான் என்று தெரிந்ததும் அழுத பெண்களை நான் நன்றாக அறிவேன். :)))

      Delete
    2. ஆம் அக்கா உண்மைதான் உங்க கருத்து....//தன்னைப் பெண் பார்த்துவிட்டு மறுத்து விட்டுச் சென்ற வரன் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு விட்டான் என்று தெரிந்ததும் அழுத பெண்களை நான் நன்றாக அறிவேன். :)))//ஆமா இதுக்கே அழற பெண்கள் கல்யாணம் ஆனாலும் தான் காதலித்தவன் வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டால் சங்கடப்படுகிறார்கள்தான்..

      கீதா

      Delete
    3. உண்மை தான் தில்லையகத்து கீதா! பெண்கள் அதனால் தங்களுக்கு ஏதோ அவமானம் ஏற்பட்டுவிட்டதாக நினைப்பார்கள், நினைக்கிறார்கள். ம்ம்ம்ம் ஈகோ? ஆம், ஈகோவுக்கு ஏற்பட்ட அவமானமாக எண்ணுபவர்கள் தான் அதிகம்!

      Delete
  24. இரண்டாவது ட்விஸ்ட்டாக மட்டுமல்ல, பழைய கணவன் பெருமையைச் சொல்வதுபோல அவன் அறிந்த அந்த ரகசியத்தை (சீதை ராமனை மணிக்கும் கதைத்தொடரில் முதல் கதை எழுதிய வைகோ ஸாரின் கரு!) வெளியில் சொல்லாமல் விட்ட பெருந்தன்மையும் வித்தியாசம்தான்.

    ReplyDelete
    Replies
    1. வைகோ சாரின் கதையில் அந்த ஆண்மட்டுமே தன் பலவீனத்தை ஒப்புக் கொண்டிருப்பான். அந்தப் பெண் கடைசி வரை, தனக்கு உண்மையாக இருந்த கணவனுக்குக் கூடச் சொல்லாமல் மறைத்திருப்பாள்! இங்கே அது இல்லை! திருமணத்துக்கு முன்னரே தனக்கு மனைவியாக வரப் போகிறவளால் தனக்கு சந்ததி ஏற்படாது என்று தெரிந்தே மணந்து கொண்டிருந்தான். :)

      Delete
    2. // தனக்கு உண்மையாக இருந்த கணவனுக்குக் கூடச் சொல்லாமல் மறைத்திருப்பாள்! இங்கே அது இல்லை! //

      ஆமாம், அதுவும் சரிதான். ஆனால் அந்தக் கருவை மட்டும் சொன்னேன்!

      :))

      Delete
  25. மாத்தி யோசிச்ச கதைக்கு பாராட்டுகள். எல்லோரும் எப்போதும் பெண்கள் மட்டுமே கஷ்டப்படுவார்கள், ஆண்கள் மட்டுமே தவறு செய்வார்கள் என்று சொல்வதை மாற்றி எதிரணியின் கஷ்டம் ஒன்றைச் சொன்ன விதம் பாராட்டுக்குரியது. இது போன்ற சில ஜோடிகளை நானும் அறிவேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆண்கள் கஷ்டப்படுவதை வைத்து எழுத நிறைய விஷயம் வைச்சிருக்கேனாக்கும். தெரிந்த ஒரு ஆணின் மனைவியின் அண்ணன் மனைவி திருமணம் ஆகி ஐந்து வருஷத்துக்குள் அற்பக் கார்ணத்திற்காகத் தீக்குளித்து இறந்து போக, அவள் இறப்பதற்குச் சற்று முன்னால் மாமியார் வீட்டுக்குப் போயிருந்த காரணத்தால் எங்களுக்குத் தெரிந்த அந்த ஆண்மகன் போலீஸ் லாக்கப்பில் சில நாட்கள் இருக்க நேரிட்டது! கடைசியில் அவருக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று நிரூபிக்கப்பட்டதால் வெளியே வந்தார்! அவர் தற்செயலாகப் பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்குச் செல்ல நேரிட்டபோது அப்படியே போய் மாமியார் வீட்டிலும் தலையைக் காட்டிவிட்டுக் காஃபி குடித்து விட்டு வந்திருக்கார்! அவ்வளவே! அவர் போய் வந்த ஒரு மணி நேரத்தில் அந்தப் பெண் தீக்குளித்து விட்டாள்! இவரும் மாட்டிக் கொண்டார். வயதான மாமியார், மாமனாரும் சேர்ந்து தான்! நாத்தனார் என்பதால் அவர் மனைவியும்! :(

      Delete
  26. கீதாம்மாவின் கதைதான் சூப்பரிலும் சூப்பர்! ஏனென்றால், இக்கதையில் வரும் நாயகியைப் போல் தான் பெரும்பாலான பெண்கள் இருக்கிறார்கள் என்று உறுதியாகச் சொல்வேன்! எனவே ஒரு உண்மைக்கதையைப் படிப்பதுபோலவே இருந்தது. - இராய செல்லப்பா சென்னையில் இருந்து.

    ReplyDelete
    Replies
    1. நன்றி செல்லப்பா சார். உங்களுக்கும் "கீதாம்மா" ஆயிட்டேனா? :)

      Delete
  27. கதையை இன்றுதான் படித்தேன். (ஏற்கனவே படித்து கருத்திட்டுவிட்டேன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்).

    'எது அமைந்ததோ அதுவே விதி', 'தோல்வி வரும் என்று நினைக்கும் எந்தப் போரிலும் இறங்கி எனெர்ஜியை வீணாக்காதே' - இந்த இரண்டும்தான் நாம் நம்பும் கடைபிடிக்கும் வரிகள்.

    அல்ப காரணங்களுக்காகப் பிரியக்கூடாது. அப்படிப் பிரிய நேர்ந்தால், அது வாழ்க்கை முழுவதும் ஒரு முள்ளாகத்தான் குத்தும்.

    நீங்கள் எழுதியிருப்பது, நடந்த கதைபோன்றே எனக்குத் தோன்றுகிறது. ஆனால், கதையில் வரும் பாஸிடிவ் கணவர்கள் மிக மிக அபூர்வம்.

    ReplyDelete
    Replies
    1. கதையில் வரும் கணவனை விடவும் அருமையான கணவர்கள் இருக்கின்றனர் நெ.த. எனக்குத் தெரிந்து பல வீடுகளிலும் கணவன்மாரே பொறுமையைக் கடைப்பிடிப்பதையும் பார்க்கிறேன். மாறாகக் கஷ்டப்படும் பெண்களும் உண்டு! வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் பெண்களும் உண்டு.

      Delete
  28. தூள் கிளப்பிட்டீங்க கீதாக்கா.....அப்படியே நடந்த கதை போல இருக்கு. ம்ம்ம் இப்படியும் நடக்குதே அதனால உங்கள் வரிகள் குறிப்பாக "ஒன்று நான் இல்லைனா உன் பெற்றோர்" இதெல்லாம் சர்வ சகஜமான வார்த்தைகள். இல்லையேல் முதியோர் இல்லத்துல அலல்து தனியா வை போன்ற வசனங்களும் உண்டு...

    "ஆஹா! ரசம் சொட்டும் ஆரஞ்சுச் சுளைகள்! விதைகளே இல்லாத சுளைகள்! இப்படி அழுத்திக் கடித்தாயானால் ரசமெல்லாம் சிந்திவிடுமே!" // அட அழகான வர்ணனை!!! ரசித்தேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ரசனைக்கு நன்றி தில்லையகத்து கீதா! பெண்கள் இப்போது இப்படித் தானே நிபந்தனைகள் போடுகின்றனர். லக்கேஜ் என்றால் பையரின் பெற்றோர்! எக்ஸ்ட்ரா லக்கேஜ் என்றால் பையருக்கு உடன்பிறந்தவர்கள்! பையரோடு உடன் பிறந்தவர்கள் இருந்து அவர் மூத்தமக்னாகவும் இருந்துவிட்டால் அந்தப் பையருக்குத் திருமணம் என்பது ஒரு கனவே! :( யாரும் அதாவது எந்தப் பெண்ணும் பொறுப்பு ஏற்றுக் கொள்ள முன்வருவதில்லை! என்னதான் தனியாகப் போனாலும்! அவங்களுக்கு உள்ளூரக் கொஞ்சம் பயமாகவே இருக்கு! :(

      Delete
  29. கதையின் கதாநாயகியின் உணர்வுகளை மிக அழகாகச் சொல்லியிருக்கீங்கக்கா...மற்றொன்று...எப்போதுமே பெண்களை உயர்வாக எழுதுவதுதான் வழக்கம். ஆண்கள்தான் தவறு செய்கிறார்கள் அதனால் டிவோர்ஸ் என்று..ஆனால் பெண்களும் இது போல் தவறு செய்யத்தான் செய்கிறார்கள். அதைச் சொல்லியது அருமை அக்கா...இப்படிப் பெரும்பாலான பெண்களை நான் கண்டு வருகிறேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பெண்களாலும் விவாகரத்துகள் நடக்கின்றன. பெண்களை உயர்த்திச் சொல்லிக் கொடி பிடிக்கும் வழக்கம் மறைந்து ஆணும், பெண்ணும் எல்லாவற்றிலும் சமம் என்பது உண்மையாக உணரப்பட வேண்டும். அதே சமயம் ஆண் ஆண்தான் அவன் உணர்வுகள், அதைச் சார்ந்த செயல்களோடு பெண்கள் போட்டி போட முடியாது என்பதையும் உணர வேண்டும். கடவுள் பெண்ணுக்குத் தான் கருப்பை வைத்திருக்கிறான். ஆணுக்கு இல்லை என்பதையும் பெண் உணர வேண்டும்.

      Delete
  30. "ஒரு வேளை..." - இந்த ஐயம் தானே அத்தனை வதைகளுக்கும் வேர்? சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள்.
    வஞ்சனையைப் பொதுவில் வைப்போம்? :-)

    ReplyDelete