டூப். டூப் டூப் பிளாஸ்டிக் சேர், பிளாஸ்டிக் தட்டு என்றெல்லாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். அதென்ன பிளாஸ்டிக் அரிசி?
நல்ல பாம்புக்கும் ‘நல்லது’க்கும் எப்படி சம்பந்தம் கிடையாதோ... பிளாஸ்டிக் சர்ஜரிக்கும் பிளாஸ்டிக்கும் எப்படி தொடர்பு கிடையாதோ... அதுபோல்தான் பிளாஸ்டிக் அரிசிக்கும் பிளாஸ்டிக்குக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பிளாஸ்டிக் அரிசி என்பது பிளாஸ்டிக்கில் செய்யப்படுவது இல்லை.
அப்படி என்றால் பிளாஸ்டிக் அரிசி என்பது என்ன?
அரிசி அரவை ஆலைகளில் நெல்லை அரைத்து அரிசி எடுக்கும் போது, குறிப்பிட்ட அளவிலான அரிசி நொறுங்கி குருணையாக மாறும். கிராமப்புறங்களில் இந்த குருணையை கோழிகளுக்கு தீவனமாக போடுவார்கள்.
ஆனால் எந்த புண்ணியவானோ, இந்த குருணையை ஏன் கோழிகளுக்கு வீணாக தீவனமாக போடவேண்டும் என்று யோசித்து இருக்கவேண்டும். அதன் விளைவாக உருவானதுதான் இந்த பிளாஸ்டிக் அரிசி.
குருணை அரிசியுடன் உருளைக்கிழங்கு, சீனி கிழங்கு என அழைக்கப்படும் சக்கரவள்ளி கிழங்கு, ரசாயனம் (போரிக் ஆசிட்), தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து எந்திரத்தில் போட்டு அரைக்கிறார்கள். நன்றாக அரைக்கப்பட்டு கூழ் வடிவத்துக்கு வந்ததும் அதை ஊற்றி உலர வைத்து கிட்டத்தட்ட காகிதம் போல் மாற்றுகிறார்கள். அந்த காகித தகடு நன்றாக உலர்ந்ததும், அதை எந்திரத்தில் கொடுத்து அரிசி போல் சிறு சிறு துண்டுகளாக நொறுக்குகிறார்கள். அப்படி நொறுக்கப்படும் துண்டுகள் பார்ப்பதற்கு உண்மையான அரிசி போலவே இருக்கும். ஒரிஜினல் அரிசிக்கும் இந்த போலி அரிசிக்கும் உள்ள வித்தியாசத்தை யாராலும் அவ்வளவு எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது.
எப்படி மரவள்ளி கிழங்கில் இருந்து சவ்வரிசி தயாரிக்கப்படுகிறதோ, அதுபோல்தான் இந்த பிளாஸ்டிக் அரிசியும் தயாரிக்கப்படுகிறது. மற்றபடி பிளாஸ்டிக்குக்கும் இந்த அரிசிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
இப்படி பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கும் முறை பற்றிய வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை உண்டுபண்ணியது. அதைத்தான் பிளாஸ்டிக் அரிசி... பிளாஸ்டிக் அரிசி... என்று சொல்லி பீதியை ஏற்படுத்தி விட்டார்கள்.
தெலுங்கானா மாநிலத்தில் பல இடங்களில் கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாகவும் தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து அங்குள்ள அரிசி அரவை ஆலை அதிபர்கள் சங்கத்தினர், குருணை அரிசியை பயன்படுத்தி மேற்கண்ட முறையில் அரிசி தயாரிப்பதைத்தான் பிளாஸ்டிக் அரிசி என்கிறார்கள் என்றும், மற்றபடி பிளாஸ்டிக் அரிசி என்ற ஒன்று கிடையவே கிடையாது என்றும் விளக்கம் அளித்தனர்.
பிளாஸ்டிக்கில் பாட்டில், விளையாட்டு சாதனங்கள் போன்ற பல பொருட்களை தயாரிக்கலாம். ஆனால் அரிசி தயாரிப்பது என்பது நெல் விளைவிப்பதை விட அதிக செலவு ஆகும். எனவே யாரும் அந்த விபரீத காரியத்தில் இறங்கி கையை சுட்டுக்கொள்ள மாட்டார்கள் என்பது நிபுணர்கள் கருத்து.
மேலும் பிளாஸ்டிக்கில் அரிசி தயாரிக்கப்பட்டால் அதை வேகவைக்கவும் முடியாது, சாப்பிடவும் முடியாது. வாயில் வைக்கும் போதே தெரிந்துவிடும்.
எனவே குருணை, உருளைக்கிழங்கு மாவு, போரிக் ஆசிட் ஆகியவற்றை சேர்த்து தயாரிக்கப்பட்ட அரிசியைத்தான் பிளாஸ்டிக் அரிசி என்று கூறி மக்களிடம் பீதியை ஏற்படுத்திவிட்டார்கள். பிளாஸ்டிக் அரிசி பார்ப்பதற்கு உண்மையான அரிசியைப் போன்றே இருந்தாலும், போலி அரிசி உடலுக்கு நல்லது அல்ல. சமைக்கும் போதே அதன் யோக்கியதை தெரிந்துவிடும்.
தமிழகத்திலும் இந்த பிளாஸ்டிக் அரிசி விவகாரம் தலைதூக்கி மக்களிடம் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சில இடங்களில் கடைகளில் விற்கப்படும் அரிசியை உணவுத்துறை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்து இருக்கிறார்கள்.
தமிழகத்தில் அசல் அரிசியே நன்றாக இருக்கும் போது பிளாஸ்டிக் அரிசி நுழைவதற்கு வாய்ப்பு இல்லை என்றும், எங்காவது பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.
இந்த பிளாஸ்டிக் அரிசி விவகாரம் தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் ஏற்கனவே பொதுநல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டு இருக்கிறது.
நன்றி Ayyavaiyer Gopu
நேற்று முகநூலில் அய்யாவையர் கோபு என்னும் பெரியவர் மேற்கண்ட பகிர்வைப் பகிர்ந்திருந்தார். உண்மை நிலவரம் அனைவரும் அறியும் பொருட்டு இதை இங்கேயும் பகிர்ந்திருக்கிறேன். உண்மையில் ப்ளாஸ்டிக் அரிசி என நாம் நினைக்கும் ப்ளாஸ்டிக்கைச் சமைத்தால் சூடு தாங்காமல் உருகி விடும். அதே போல் தொலைக்காட்சிகளிலும் ஒரு சில ஊடகங்களிலும் முகநூல் வாட்சப் குழுமங்களிலும் ப்ளாஸ்டிக் கிண்ணங்களில் இட்லி வார்ப்பதாகவும் கூறுகின்றனர். அதுவும் இயலாத ஒன்றே என நினைக்கிறேன். ப்ளாஸ்டிக் கிண்ணங்களை அடுப்பில் வைத்துச் சூடு செய்தால் உருகும் தன்மை கொண்டது! அப்புறமா இட்லி எப்படிச் செய்ய முடியும்? பாலிதீன் கவர்களில் செய்வதாகவும் துணிக்குப் பதிலாக அதைப் போடுவதாகவும் சொல்கின்றனர்.
பாலிதீன் கவர்கள் அவ்வளவு தரமானதாக இருப்பதில்லை. தரமான பாலிதீன் பைகளிலேயே (ஜிப்லாக் பைகள்) ஒரு முறை வாழை இலை இல்லாமல் ஜிப்லாக் பையில் வைத்து போளி தட்டிவிட்டு ஞாபகக் குறைவாகப் பையை நீக்காமலேயே தோசைக்கல்லில் போட்டு விட்டேன். உடனடியாக கவனம் வந்து அதை எடுக்க முற்பட்டபோது தோசைக்கல்லில் ஒட்டிக் கொண்டு வரவே இல்லை! சூட்டில் ஒட்டுக் கொண்டு விட்டது. சூட்டை அதிகரித்து அதைச் சுரண்டித் தான் எடுத்தேன். ஆகவே ப்ளாஸ்டிக் கிண்ணங்களிலோ அல்லது பாலிதீன் கவர்களிலோ இட்லி வார்ப்பது என்பது நம்பவும் முடியவில்லை. நேரில் பார்த்தால் தான் புரியும். தரமான பைகளே சூட்டில் ஒட்டிக் கொள்கின்றன. இட்லிக்கடைகள் நடத்துபவர்கள் தரமான பாலிதீன் கவர்களுக்கு என்ன செய்வார்கள்? கிடைப்பதைத் தானே பயன்படுத்த முடியும்? அவை உருகாமல் இருக்குமா?
ஹோட்டல்களில் சுடச் சுட சாம்பார், காய்கள் கொடுத்தாலே அந்தப் ப்ளாஸ்டிக் பைகள் சூடு தாங்காமல் சுருங்கி விடுகின்றன. சில சமயம் பைகளில் துவாரம் விழுகின்றது. கூடியவரை பாத்திரம் எடுத்துச் செல்வதே நல்லது. ஆகவே ப்ளாஸ்டிக்கில் சமைக்கலாம் என்பதை உடனே நம்பி விடாமல் யோசித்து நேரில் கண்டறிந்து கொண்டு நம்புங்கள்! கூடியவரை ப்ளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கவும்.

Useful information. Thanks for sharing
ReplyDeleteநன்றி மிகிமா.
Deleteநல்ல விளக்கமான பதிவு பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநன்றி கில்லர்ஜி!
Deleteநல்ல தகவல். இப்பொழுது இந்த மாதிரி பல செய்திகள் WhatsApp, Facebook மூலம் வேண்டுமென்றே பரப்பி, அடில் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்.... எல்லாவற்றிலும் அரசியல்...... :(
ReplyDeleteவாங்க வெங்கட், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteவிவரங்கள் எல்லாம் சரிதான். ஆனால் இப்படி உருளை, வள்ளி,கிழங்குகளால் தயாரிக்கப்படும் அரிசி கொதிக்கும் நீரில் கரைந்து விடும். அப்படி கரையாமல் இருக்க ஒரு தரம் formaldehyde போன்ற resin சேர்ப்பதாகவும் அதுதான் உடம்புக்கு கெடுதல் என்றும் இணையத்தில் தான் படித்தேன். பிளாஸ்டிக் அரிசி செய்வது சீனாவில் மட்டுமே. முன்பு ஒரு முறை melamine என்ற பிளாஸ்டிக் சேர்த்த Baby food சீனாவில் பிடித்தார்களே!. அதை குடித்த பல குழந்தைகளும் புத்தி வளர்ச்சி குறைந்து இருந்தன என்று செய்திகள் வந்தனவே!
ReplyDeleteபிளாஸ்டிக் சூடு பட்டால் உருகிவிடும் என்றால் microwave பாத்திரங்கள் எதைக்கொண்டு செய்கிறார்கள்?. ஓரளவு சூடு தாங்கும் plastic உண்டு. resins நிறைய சூடு தாங்கும். resin கொண்டு உருவாக்கிய காப்பி கோப்பைகள் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
--
வாங்க ஜேகே அண்ணா. நான் சொல்வது தரம் குறைந்த நம்ம ஊர் ப்ளாஸ்டிக் பத்தி மட்டுமே! நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம். ஆனால் மைக்ரோவேவில் நாங்கள் கண்ணாடிப் பாத்திரங்களைத் தான் வைக்கிறோம். இங்கே இந்தியாவில் தமிழ்நாட்டில் மைக்ரோவேவுடன் கொடுத்திருக்கும் மஞ்சள் நிறப் பளாஸ்டிக் சமையல் உபகரணங்களைப் பயன்படுத்தக் கூடாது என எங்கள் பையரும், பெண்ணும் கண்டிப்பான கட்டளை. அதோடு என்னிடம் அவன் சேஃப் க்ரோக்கரி செட்டும், கண்ணாடிப் பாத்திரங்களும் இருப்பதால் எப்போதாவது சூடு செய்யும்போது அவை தான்! அங்கே யு.எஸ்ஸில் பெண், பிள்ளை இருவருமே கண்ணாடிப் பாத்திரங்கள் இதற்கெனத் தனியாக வைத்திருக்கின்றனர். ப்ளாஸ்டிக்கில் சூடு செய்து பார்க்கவில்லை. நானும் செய்தது இல்லை!
Deleteஇந்த மாதிரி குறுக்கு வழிக்குக் காரணம், விலை குறைப்புதான். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, 1 லிட்டர் நல்லெண்ணெய் தயாரிக்க, குறைந்தது 200 ரூக்கு மேல் செலவாகும். ஆனால், விளம்பரம், பிராண்டிங், வினியோகஸ்தரின் லாபம் போன்ற பலவற்றால், 30%தான் நல்லெண்ணெய், மீதி தவிட்டு எண்ணெய்/பாரபின் போன்ற மற்ற எண்ணெய். பழைய முறையில் செக்கில் இட்டு ஆட்டினால், 30% எண்ணெய் (20%ஆகவும் இருக்கலாம்) புண்ணாக்கில் தங்கிவிடும் (அந்தக் காலத்தில் இது கால் நடைகளுக்குத் தீவனம்) மிஷினில் சூடாகும்போது, புண்ணாக்கில் 5%க்கும் குறைவாகவே எண்ணெய் தங்கும். இதைப் பற்றியே பெரிய கட்டுரை எழுதலாம் (அரிசியில் நீங்கள் சொன்னதுபோல் கலப்படத்திற்கு). பாலில், சோப் எண்ணெய் போன்ற பல பொருட்கள் கலப்படம் செய்யப்படுகிறது. வட நாட்டில் (குறிப்பாக உத்திரப் பிரதேசத்தில்), பாலில் 20%தான் உண்மைப் பால் என்று சோதனை செய்து கண்டுபிடித்தார்கள். பாரம்பரிய அரிசியைச் சமைத்துச் சாப்பிடும்போது இந்த மாதிரி பிரச்சனை வராது.
ReplyDeleteநானும் இட்லியை பிளாஸ்டிக் டப்பாக்களில் வேகவைக்கும் காணொளியைப் பார்த்தேன். அவ்வாறு செய்வது சாத்தியம். பார்வைக்கு, துணியை வைத்து வேகவைப்பதைவிட சுத்தம். சுலபம். ஆனால், அதற்குரிய பிளாஸ்டிக் உபயோகப்படுத்துவார்கள் என நினைக்கிறேன். உண்மையில், இந்தியாவில் உபயோகப்படும் பிளாஸ்டிக்குகள் (அதாவது, CHEAP பிளாஸ்டிக்குகள்) தரமானவையல்ல. அங்கு உள்ள பிளாஸ்டிக் தம்ளர் (தே'நீர், திருமணங்களில் பந்தியில் உபயோகப்படுத்துவது போன்ற) குவாலிட்டியை (மோசமான குவாலிட்டி) நான் எங்கும் கண்டதில்லை.
சாபுதானா (ஜவ்வரிசி) - வெண்மையாக இருந்தால் அது கலப்படமானது. ஒரிஜினல் சாபுதானா கண்ணாடி அல்லது மங்கிய கண்ணாடி நிறத்தில்தான் இருக்கும். ஆனால் மக்களுக்கு வெண்மை நிறம் பிடிக்கும், அது சுத்தமானது என்று கருதுகிறார்கள். அதனால்தான் கலப்படம் நடைபெறுகிறது. (அதுபோலவே, நீலக் கலரில் சோப் இருந்தால் நன்றாக துணியை வெளுக்கும் என்பதும் ஒரு MYTH. அதனால்தான் தேவையில்லாமல் பல சலவை சோப்புகளில் நீலக் கலர் சேர்க்கிறார்கள்).
நெருப்பில்லாமல் புகையாது. பயனீட்டாளர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.
வாங்க நெ.த. தரமான ப்ளாஸ்டிக் ஷீட்டுகளா என்பதே என் கேள்வி! அவங்க சொல்லும் பாலிதீன் கவர்களைப் பரப்பி இட்லி செய்வது இயலாது! நான் இன்னமும் பழங்கால முறைப்படி துணி தான் பயன்படுத்துகிறேன். காடா துணி! நன்கு துவைத்துக் காய வைத்துப் பயன்படுத்தி வருகிறேன். வேறே யார் வீட்டுக்கானும் போனால் தான் இட்லி குக்கர் அல்லது ப்ரீத் போன்றவை! எங்க வீட்டுக்கு யார் வந்தாலும் எத்தனை பேர் வந்தாலும் அதுக்கு ஈடு கொடுக்கிறாப்போல் துணியோடு கூடிய இட்லித் தட்டுகள் தயார் நிலையில் வைத்திருக்கிறேன். ஜவ்வரிசியைப் பொறுத்தவரையில் ஊற வைத்துப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும். நாங்க மெஷினில் சுற்றி எடுக்கப்படும் எண்ணெயே (ஆயில் மில்) பயன்படுத்துகிறோம். நாட்டுச் செக்கில் ஆட்டும் எண்ணெயை விட விலை குறைவு!
Deleteஅப்பாடா! பிளாஸ்டிக் அரிசி பற்றி உண்மையை பகிர்ந்து கொண்டதற்கு அனந்த கோடி நன்றிகள்! இந்த பதிவை வாட்ஸாப் குழுவில் பகிர்ந்து கொள்ளலாமா?
ReplyDeleteதாராளமாய்ப் பகிரலாம். கடைசியில் அய்யாவையர் கோபு அவர்களுக்கு நன்றி எனப் போட்டு விடுங்கள். அவருடைய பதிவிலிருந்து எடுத்தது தான் இது. நானும் கடைசியில் அவர் பெயரைப் போட்டு நன்றி தெரிவித்திருக்கிறேன். :)))
Deleteஅட !குருணையை திரும்பி அரிசி ஆக்கறாங்களா ..மிக விளக்கமான பகிர்வு அக்கா .. ஒருவர் இங்குள்ள cling wrap யூஸ் செய்வார் இட்லியை ஈஸியா எடுக்க ..அவ்வளவும் கெட்டது ..நான் மைக்ரோவேவில் பீங்கான் தட்டு பாத்திரத்தை மட்டுமே யூஸ் செய்வேன் கை பலதடவை சுட்டுப்பட்டிருக்கு ..சுடுதண்ணிய அப்படியே பாட்டிலில் ஊற்றினால் உருகுவதுபோல பிளாஷ்டிக் அரிசி சொல்றாங்களே அதுவும் இளகி உருகும்தானே . இவர்கள் பிளாஸ்டிக் அரிசின்னு சொல்றது டெக்ஸ்ச்சர்ட் modified போலி ரைஸ் அதை இந்த குழுமம் fb எல்லாம் பயங்காட்டி பரப்பிடறாங்க ....நம்ம மக்களும் யோசிப்பதில்லையே அதனால்தான் இவ்ளோ குழப்பம்
ReplyDeleteகுருணையில் என் மாமியார் வீட்டில் உப்புமா, புளிப் பொங்கல் செய்வார்கள். கொஞ்சம் கல் இருக்கும். நல்லா அரிக்கணும். மற்றபடி இந்தப் ப்ளாஸ்டிக் அரிசி என்பதை கவனமாகப் பார்த்துத் தவிர்க்கணும்.
Deleteகலிகாலம். இப்படித்தான் நம் முடிவு வரவேண்டும் என்று விதி இருந்தால் என்ன செய்ய! நான் குடிப்பதில்லை, நான் உபயோகிப்பதில்லை எனும் விளக்கங்களை விடுங்கள். டீ கப் முதல் கேரி பேக் வரை எத்தனை பிளாஸ்டிக்? மரபணு மாற்றப்படும் பொருட்கள்... செயற்கை உரங்கள்... மினரல் வாட்டர் கேன்ஸ் பற்றி எத்தனை பயமுறுத்தல்கள்.. மேகி பற்றி எத்தனை அறிவிப்புகள்.. இதை எல்லாம் தடுக்க முடியாது. உண்மை என்று சொல்ல நாலுபேர்கள் இருந்தால் பொய் என்று சொல்லவும் நாலுபேர்கள் இருப்பார்கள். அவரவர்களுக்கு அவரவர் கருத்து சரி! எதிரணியினர் சொல்வது தவறு!!! நான் எங்கள் 'அண்ணாச்சி'யை நம்புகிறேன்.
ReplyDelete:)))
நாம் செய்யறதில்லை என்று சொல்கையில் அதைப் பார்த்து/கேட்டு/படித்து ஓரிருவர் மனம் மாறலாம் அல்லவா? அதற்காகவே சொல்கிறேன். அதோடு இல்லாமல் நீ மட்டும் வாங்காமல்/பயன்படுத்தாமல் இருப்பியானும் கேட்பாங்க/ கேட்கிறாங்க! அதுக்கும் தான்!
Deleteஸ்ரீராம் மீ டூ நானும் எங்கள் தெரு, மற்றும் சில அண்ணாச்சி களை நம்புகிறேன். ஆனால் அவர்களும் சொல்வதென்னவென்றால் இந்தக் கலப்படம் எல்லாம் அவர்களுக்கும் கண்டுபிடிக்க முடியலையாம் கூடியவரை நல்லது என்று நினைக்கும் ப்ராண்டுகளை வாங்கி விற்கிறார்களாம்... என்ன சொல்ல?
Deleteகீதா
நல்ல தகவல் பகிர்வு நன்றி
ReplyDeleteநன்றி ஐயா!
Deleteசென்ற முப்பது வருடங்களில் plastic wheat plastic corn எல்லாம் வந்து போயின.. நீங்க சொல்லியிருப்பது போல் இது முற்றிலும் plastic அல்ல என்றாலும் fake அரிசியின் அபாயம் எதிர்பார்த்ததை விட அண்மையில் இருப்பதாகவே அஞ்சுகிறேன். அரிசியில் கலக்க கல் தயாரிப்பதை விட இந்த fake grain தயாரிப்பது சுலபம்,
ReplyDeleteமிகவும் விவரமாகச் சொல்லி இருக்கிறீர்கள். தந்தியை விட வதந்தி வேகமாகப் பரவும் என்பார்கள். கூடுமான வரை விவரங்கள் தெரிந்து எதையும் உபயோகிக்க வே்ண்டும். பிளாஸ்டிக் அரிசி சாப்பிட பிளாஸ்டிக் வயிறுதான் வேண்டும். நல்ல பதிவு அன்புடன்
ReplyDeleteநன்றி அம்மா! அதுவும் வாட்ஸப் குழுமத்தில் பரவுகிறாப்போல் வேறெங்கும் இல்லை! :(
Deleteபெரிய ரங்குவைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சே. போகலையா? ஒரு வருஷம் முழுவதுமா கோயிளுக்கு போகக் கூடாது?
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள் ஜேகே அண்ணா! கிரஹத் தீட்டு உண்டே! ஒரு வருஷம் கொடிமரம் இருக்கும் கோயில்கள்/ஆகமக் கோயில்கள், கடற்கரைக் கோயில்கள், மலைக்கோயில்கள் ஆகியவற்றுக்குப் போகக் கூடாது. குலதெய்வக் கோயிலுக்குக் கூட தரிசனத்துகாகக் கூடப் போகாதீங்க என்கிறார்கள்! :)
Deleteநம்பெருமாள் வீதி உலா வருவாரே! அப்போப் பார்த்துக்கலாம்! :)
Deleteஅறியாத தகவல் நன்றி
ReplyDeleteநல்ல பகிர்வு.
ReplyDeleteதுளசி: கேரளாவில் இதைப் பற்றி அதிகம் பேச்சில்லையே!...
ReplyDeleteகீதா: ஆமா ப்ளாஸ்டிக் அரிசி பத்தி விளக்கம் மற்றும் அப்படியான ப்ளாஸ்டிக் அரிசி கலக்கப்படுவதில்லை அப்படினு சொல்லித் த்கவல்கள் வந்தன பேப்பரிலும்...ஆனால் இருந்தாலும் ஏதோ கலப்படம் நிகழத்தான் செய்கிறது....