சாப்பிடலாம் வாங்க! இங்கே பார்க்கவும்!
அரிசி+து.பருப்பு மி.வத்தல், உப்பு, பெருங்காயத்தோடு அரைக்க ஜாரில் பொட்டிருக்கேன்.
அரிசி+துவரம்பருப்பு = ஒரு கப் அரிசின்னால் கால் கப் து.பருப்பு சின்னக் கிண்ணம் அரிசின்னால் ஒரு டேபிள் ஸ்பூன் து.பருப்புப் போதும்.
உளுந்து அரைக் கிண்ணம், கொடகொடவென்று அரைக்கவும்.
அரிசி+துவரம்பருப்போடு மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் தேவையான அளவு சேர்த்து நன்கு நைசாக (வெழுமூண என்று நாங்கள் சொல்வோம்) அரைத்துக் கொள்ளவும். கொட கொடவென அரைத்த உளுந்து மாவையும் போட்டுக் கலந்து அரைக்கிண்ணம் கடலை மாவையும் போட்டு நன்கு கலக்கவும். புளிப்புச் சுவை வேண்டும் எனில் ஒரு கரண்டி தயிர் சேர்க்கலாம். கடலைப்பருப்பை நன்கு ஊற வைத்து இதில் சேர்த்துக் கொண்டு கருகப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். இஞ்சி, பச்சை மிளகாய் தேவை எனில் சேர்க்கவும். சேர்க்காமலும் இருக்கலாம். கருகப்பிலை முக்கியம். கீழே அரைத்த மாவு!
இங்கே எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கும் காராவடைகள்!
நல்ல நிறமாக இருக்கும்! மஞ்சள் பொடியெல்லாம் போடவே வேண்டாம்! அதுவே நல்ல நிறமாக வந்துடும். சட்னி தேவை எனில் தேங்காய்ச் சட்னியோடு சாப்பிடலாம். நாங்க அப்படியே சாப்பிட்டோம்!
காரவடை என்று படித்து விட்டு உற்றுப் பார்த்தால் காராவடை! அது என்ன காரா?
ReplyDeleteம்ம்ம்ம்ம், வட்டார வழக்கு! ஶ்ரீராம்! மதுரைப் பக்கமெல்லாம் டீக்கடைகளிலே காராவடை என்றே சொல்வாங்க! கோபு ஐயங்கார் கடையிலேயும் இது ஸ்பெஷல்! மத்தியானங்களில் கிடைக்குதே! :)
Deleteமுன்னர் இந்தப் பதிவுக்கு என்ன கமெண்ட் போட்டிருந்தேன்?
ReplyDeleteதெரியலை, போய்த் தான் பார்க்கணும்! :)
Delete///ஸ்ரீராம்.24 June, 2017
Deleteமுன்னர் இந்தப் பதிவுக்கு என்ன கமெண்ட் போட்டிருந்தேன்?//
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:).
கார வடை பார்க்கவே சூப்பரா இருக்கு. அம்மாகிட்ட சொல்லி செய்யச் சொல்லணும் :)
ReplyDeleteவாங்க ராஜீவன், நல்ல சுவையான தேநீரோடு காராவடையும் நல்ல துணை! :)
Deleteகாரவடை பிரமாதம்
ReplyDeleteநன்றி கோமதி அரசு!
Deleteதேவகோட்டை தமிழில் காரவடை என்றே சொல்லுவோம்.
ReplyDeleteம்ம்ம்ம் இருக்கும், அது என்னமோ காராவடைன்னே பழக்கம் ஆயிருக்கு!
Deleteகார அப்பம்மாதிரி இருக்கும். இல்லையா நன்னா இருக்கு. அன்புடன்
ReplyDeleteநன்றி காமாட்சி அம்மா.
Deleteநல்லா இருக்கு, செய்துசாப்பிட ஆசைதான். எண்ணெயிலனா பொரிக்கணும். இன்னும் மூணு நாள் லீவுதான். யோசிக்கிறேன்.
ReplyDeleteஎண்ணெய் கொஞ்சமா குழி ஆப்பச் சட்டியிலே கூட ஊத்தலாம் நெ.த.
Deleteசிறிது காரம் அதிகமானால் காரவடை ஆகாதோ
ReplyDeleteகாரம் அவரவர் விருப்பத்தைப் பொறுத்து ஐயா!
Delete(மதுர) சிறப்பு!.. இப்பத் தான் போன மாசம் போன போது சாப்ட்டேன்!.. ( இத மட்டும் கரெக்ட்டா செஞ்சிருன்னு (ஹி..ஹி) யாரோ அங்க சொல்றாங்க). சிங்க வடை தான் சாப்ட முடியல. ரொம்ப எடத்துல கெடக்கறதில்ல..நெக்ஸ்ட் டைம் பாக்கலாண்ட்டு வந்திட்டேன்!.. உங்க ரெசிபில்ல அளவுகள் ரொம்ப கரெக்ட்டா இருக்கும்மா!....மிக்க நன்றி பகிர்வுக்கு!.
ReplyDeleteஆமாம், பார்வதி, இது மதுரையிலே மட்டுமே அதிகம் பார்க்கலாம்.
Deleteஆஹா அருமை.. நெல்லைத்தமிழனின் கார அடையே இன்னும் செய்யல்ல நான்.. இதை இந்த ஹொலிடேயில் செய்யோணும்.. ..
ReplyDeleteமெதுவா செய்து பாருங்க!
Deleteஅக்கா திருவனந்தபுரத்திலும் இதே காரா/கார வடை செய்வதுண்டு. எங்கள் ஊரில் நவராத்திரியின் போது இதே வடை ஒரு நாள் உண்டு. கடலை மாவு சேர்ப்பதில்லை. அரிசி 1 என்றால் து பருப்பு 1/2 மற்றதெல்லாம் சேம்.....நான் இங்கு வீட்டிலும் இதே அளவில் செய்வதுண்டு....திருவனந்தபுரத்தில் ஆனைவால் தெருவில் போடுவார்களே!
ReplyDeleteகீதா
ஆமாம், கடலை மாவு சேர்க்கமாட்டார்கள். ஆனால் கொஞ்சம் புளி வைத்து அரைப்பார்கள் இல்லையா? புளி வடை என்றும் சொல்லுவார்கள் என நினைக்கிறேன். எனக்குத் தெரிந்த மலையாள நண்பர்கள் வீட்டில் இந்த வடை, குழாய்ப்புட்டு, கடலைக்கறி இதெல்லாம் சாப்பிட்டிருக்கேன். :)
Delete