எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, June 16, 2017

சிகரி போட்ட கட்சி அங்கே! சிகரி போடாத கட்சி இங்கே! :)

ஹிஹிஹி, நாங்க சிகரி போட்ட காஃபியே சாப்பிடறதில்லை! சுத்தமான காஃபி தான்! நீங்க சொல்லும் அதே கடுக்காய் டேஸ்டில் தான்! நிறமெல்லாம் சந்தன நிறமா இருக்கும்! அதுவும் நல்ல பசும்பால் என்றால் எங்க வீட்டுக் காஃபியை அடிச்சுக்க முடியாது!

(என்னோட கண்ணே பட்டுதோ என்னமோ இப்போப் பால் பாக்கெட் தான் வாங்கறோம்! காஃபி சுமார் ரகம் தான்)

Coffee Day? மாசத்துக்கு நூறு கிராம்காஃபி பவுடர் போதும்! :) வெந்நீர் விட விடத் திக்காக இறங்கிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே இருக்கும்! :)

பீபரி, ஏ காஃபியோடு சேர்த்து டிகாக்‌ஷன் திக்காக இறங்க ரொபஸ்டா சேர்க்கலாம். நாங்க கொட்டை வாங்கி அரைக்கிறச்சே இப்படித் தான் போட்டிருக்கோம். இப்போ பீபரி 70%+30% ஏ காஃபி!  (முன்னெல்லாம் உருண்டைக் கொட்டை, தட்டைக் கொட்டை என்பார்கள். இப்போ உருண்டைக் கொட்டையே வரதில்லைனு நினைக்கிறேன். அதோடு இல்லாமல் ரேஷன் கார்டிற்குக் காஃபிக் கொட்டை கொடுத்துட்டு இருந்தாங்க! அப்புறமா அதுவும் நின்னு போச்சு!

மும்பை, டெல்லியிலும் பார்த்துட்டேன். :) சென்னையிலும்! :) இங்கே ஶ்ரீரங்கத்தில் பத்மா காஃபி ரொம்ப உயர்வாச் சொல்வாங்க. அங்கேயும் வாங்கிப் பார்த்தோம். கொட்டையை அதிகமா வறுக்கிறாங்க! எங்களுக்கு வறுத்து அரைத்தே சாப்பிட்டு வழக்கம் என்பதாலோ என்னமோ கொஞ்சம் அதிகமா வறுபட்டாலும் தீய்ந்த வாசனை வராப்போல் ஓர் எண்ணம்! ஆகையால் இங்கே வேறொரு கடையில் எங்களுக்கு நேரே வறுத்து அரைத்துத் தருவாங்க! :)

கும்பகோணத்தில் எந்தத் தெரு? அடிக்கடி போவோம். மோகன் காஃபி? முயற்சி செய்யறோம்

(மடத்து தெரு. காவேரி பழைய பாலக்கரைக்கு அருகில். வெளி நாட்டுக்கெல்லாம் அனுப்புகிறார்கள்.) நண்பர் குறிப்பிட்டது!

 நீங்க சொல்வது சரியே! காஃபி கொட்டையைப் பொறுத்தே காஃபியின் சுவை! யு.எஸ்ஸில் கொலம்பியன் காஃபி!


காஃபி க்கான பட முடிவு


முகநூலில் நேத்திக்கு (?) கே.ஜி.ஜவர்லால் காஃபிக்குச் சிகரி போட்டே ஆகவேண்டும் என்று சொல்லி இருந்தார். அதுக்கு எழுதின கருத்துரைகள் மேலே! காஃபி பத்தி நிறையப் பதிவு எழுதிட்டேன்! ஆகையால் மேற்கொண்டு சொல்லாமல் சும்மாக் கருத்தை மட்டும் பதிஞ்சிருக்கேன். அதிலும் நான் சொன்னவை மட்டுமே!  என் ஓட்டு சிகரி கலக்காத காஃபிக்கே!


காஃபி  இங்கே காஃபி பற்றி எழுதிய ஓர் பதிவு!

தொடர்ச்சி

ஒரு வாய்க் காஃபி  காஃபி பத்தி 2006 ஆம் வருஷம் எழுதினது! 

31 comments:

  1. சிகரியா? சிக்கரியா

    ReplyDelete
    Replies
    1. In English "chicory"! Not Chikkory! so I wrote in tamil சிகரி! உச்சரிப்பைப் பொறுத்தது! :)

      Delete
  2. பசும்பாலோ, பாக்கெட் பாலோ... நாம் பழகிக் கொள்வதுதான்! சிக்கரி நாங்கள் அரை கிலோவுக்கு 50 கிராம் சேர்க்கிறோம். சேர்க்காமல் சாப்பிட்டால் நாவுக்கு ருசிப்பதில்லை!!

    ReplyDelete
    Replies
    1. ஹூம்! பசும்பால் காஃபி குடிச்சுப்பார்த்தால் விட மாட்டீங்க! சிகரி சேர்த்தால் எங்களுக்குக் காஃபி ருசிப்பதில்லை! :)

      Delete
  3. நாங்கள் சுந்தரம் காபி மற்றும் காஃபி டே . நரசுஸ் உபயோகித்து மாமாங்கம் ஆகிறது!

    ReplyDelete
    Replies
    1. இப்போ நாங்களும் நரசூஸ் வாங்குவதில்லை. சுந்தரம் காஃபி இங்கேயும் இருக்கு. காஃபி டேயும் இருக்கு. இரண்டுமே பிடிக்கலை!

      Delete
  4. காஃபி சில சமயம் அலுத்து விடும். இரண்டு நாட்கள் காஃபிக்கு லீவு விட்டு விடுவேன். அப்புறம் குடிகாரன் மாதிரி அதைத் தேடி ஓடி விடுவேன்!

    ReplyDelete
    Replies
    1. அலுப்பு ஏற்படுவதால் மாலை நேரம் காஃபி குடிப்பதில்லை! காலை மட்டும் கனிவு கொடுக்கும் நல்ல காஃபி!

      Delete
  5. உங்க கண்ணே பட்டதால் பால் கிடைக்காமல் போச்சா ?

    தமிழ் நாட்டில் பலருக்கும் இதேநிலை காரணம் நீங்கதானா ?

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா! ஆமா இல்ல! அதே தான் காரணம்! ஆவின் பால் வாங்கறோம்! அவ்வளவாப் பிடிக்கலை! ஆனால் நல்ல பால்காரர் கிடைக்கலை! :)))

      Delete
  6. //பசும்பால் காஃபி குடிச்சுப்பார்த்தால் விட மாட்டீங்க! //

    முன்னர் குடித்துக் கொண்டுதான் இருந்தேன். இப்போ இங்கே பசும்பால் கிடைப்பதில்லை.பாக்கெட் பால்தான். ஆவின், மற்றும் சில பாக்கெட் பால்கள்!

    ReplyDelete
    Replies
    1. நல்ல பசும்பாலாக இருக்கணும்! இங்கே கிடைத்துக் கொண்டிருந்தது. இப்போவும் சில பால்காரங்க வந்தாலும் பால் "த"பால் தான்! :( சென்னையில், ராஜஸ்தான், குஜராத், சிகந்திராபாத், ஊட்டி போன்ற ஊர்களில் இருந்தப்போ எல்லாம் கறந்த பால் கிடைத்துக் கொண்டிருந்தது! :) இப்போக் கறந்த பால்னு வந்தாலும் பாலில் ருசி இல்லை! டிகாக்‌ஷனை விட்டால் நீலம் பூத்துப் போகிறது! அவ்வளவு தண்ணீர் கலக்கறாங்க. விலையும் லிட்டருக்கு 40 ரூ.

      Delete
  7. 100 கிராம் காஃபி ஒரு மாதத்துக்கு வரும் ஆச்சரியமாய் இருக்கே

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி சார், காஃபி டே பொடியைச் சொன்னேன். இரண்டு ஸ்பூன் போட்டால் போதும் அது பாட்டுக்குத் திக்காக இறங்கிக் கொண்டே இருக்கு! அதான் வாங்கறதே இல்லை. அதிக அளவில் காஃபி கலக்கையில் 50 கிராம் வாங்கி நாங்க வாங்கற காஃபிப் பொடியோடு சேர்த்துக்கலாம்னு ஒரு எண்ணம் உண்டு. காஃபி ருசி காலை வாரிடுமோங்கற பயத்திலே வாங்கறதில்லை!

      Delete
    2. நாங்கள் எங்கள் வீட்டில் காஃபிடே தான் வாங்குகிறோம் ஃபீபரி மற்றும் ஏ மிக்ஸ் 50-50 என்று. ஆனால் மூன்று பேருக்கு இரு வேளை அல்லது சில சம்யம் 3 வேளை அதுவும் சிறிய சிறிய டம்ளரில்தான்....1/2 கிலோ வேண்டியிருக்கு ஒரு மாதத்திற்கு. எப்படி 100 கிராம் போதும் அக்கா?

      கீதா

      Delete
    3. உங்கள் % 70:30 போட்டுப் பார்க்கணும்...

      கீதா

      Delete
  8. காபி டீ நான் குடிப்பதில்லை. பலர் காபி இல்லாமல் அடுத்தவேலை செய்யமுடியாமல் இருப்பதையும் பார்த்திருக்கிறேன். ஆச்சரியமாக என் ஹஸ்பண்டும் சாப்பிடமாட்டா (அவங்க வீட்டுல எல்லோரும் சாப்பிடுவாங்க).

    ReplyDelete
    Replies
    1. நானும் குடிக்காமல் தான் இருந்தேன். ஆனால் மதிய வேளையில் ஒன்றரை மணியிலிருந்து இரண்டு மணிக்குள்ளாகக் கட்டாயமாய்த் தேநீர் குடிக்கணும்னு ஒரு வழக்கம் இருந்தது. அது கொஞ்சம் இல்லை நிறையப் பிரச்னைகளைத் தர அதையும் விட்டுட்டேன். இப்போத் தேநீர் எப்போவானும் மாலை நேரம் அல்லது வெளியூர் போகையில் மட்டும்!

      Delete
  9. கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்பணியாக வெளியூர் சென்றிருந்தேன். தற்போதுதான் வலைப்பக்கம் வரமுடிந்தது. தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம்.
    கும்பகோணத்திலேயே பிறந்து இருந்தவர்கள் காப்பி இல்லாமல் இருக்கமாட்டார்கள். நான் உட்பட. நினைவுபடுத்தியமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா! கும்பகோணம் மட்டுமில்லாமல் பலருக்கும் இந்தக் காஃபி ஓர் அருமருந்தாகவே இருந்து வருகிறது. இது இல்லைனா உயிரைக் கூட விட்டுடுவாங்க!

      Delete
  10. ஜோஸஃப் காஃபி ஒரு முறை வாங்கிப் பாருங்கள் - ப்யூர் காஃபி - நன்றாகவே இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மி.கி.மா. இங்கே திருச்சியில் இருக்கு! அந்தப் பக்கம் போனால் நூறு கிராம் வாங்கிப் பார்க்கிறோம். லியோ காஃபி மாதிரி இருக்குமோனு ஒரு சந்தேகம்!

      Delete
  11. சிகரி என்றால் என்ன கீத்தா மேடம்..? - நான் கேள்விப்பட்டதில்லை.

    நான் டெயிலி காப்பி குடிக்கிறேன். ( பிரெஞ்ச் கபே )

    ReplyDelete
    Replies
    1. காஃபி டிகாக்‌ஷன் திக்காக இறங்கச் சேர்க்கப்படும் காஃபிப் பொடி போன்றதொரு சாதனம். செடி ஒன்றின் வேரிலிருந்து(?) எடுக்கப் படுவதாகச் சொல்கிறார்கள். மேல் விபரங்களுக்கு இங்கே பார்க்கவும்.

      https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF வெளிநாடுகளில் சிகரி என்றால் என்னவென்று தெரியாது! அங்கே காஃபி மேக்கரில் காஃபி டிகாக்‌ஷன் இறக்கினாலே நல்ல திக்கான ஸ்ட்ராங்கான டிகாக்‌ஷன் கிடைக்கும்.

      Delete
  12. கோதாஸ் காப்பி விசேஷமாகச் சொல்கிரார்களே. நான் காபி குடித்ததில்லை. மும்பையில் கோதாஸ் காபிதான். இங்கு வருத்த கொட்டை கிடைக்கிறது. அவ்விடமே தானியங்கி மெஷின் அரைத்தும் கொடுக்கிறது. பால் இவ்விடத்தில் அருமை. காப்பியும் அருமை என்றே சொல்கிரார்கள். இருந்தாலும்
    காப்பி இல்லாவிட்டால் தலைவலி வந்து விடும் என்று சொல்பவர்களே அதிகம் . சிகரியும் தனியே கிடைக்கிறது.
    காபி கலக்கிரவர்கள் சக்கரை போதுமா என்று ருசிபார்த்தே சக்கரையை ஏற்றிக் கொண்டு விடுகிரார்கள் என்று விளையாட்டாகச் சொல்வதுண்டு. காபி கலப்பதும் ஒரு கலைதான். நீங்கள் ருசியில் வல்லுநர் இல்லையா/ அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. கோதாஸ் காஃபி ஹூஸ்டனில் இருக்கும்போது பொண்ணு எங்களுக்காக வாங்கினா! அதிலும் சிகரி கலப்பு இருக்கு. அவ்வளவாப் பிடிக்கலை! சிகரி கலந்தால் காஃபியிலேயே ஒருவித வாசனை வந்து விடுகிறது. சர்க்கரை எப்போவுமே அளவாகத் தான்! நாக்கு நாலு முழம் ஆச்சே! அமெரிக்காவிலும் (யு.எஸ்) கொட்டையை நாமே தேர்ந்தெடுத்து வறுத்து அங்கேயே அரைத்துப் பொடியாக எடுத்துக் கொள்ளலாம். வறுத்த கொட்டைகளும் கிடைக்கின்றன. நாங்க அங்கே கொலம்பியன் காஃபி தான் வாங்கினோம்.

      Delete
    2. தேநீர் என்றால் இந்தியத் தேயிலை தான்! அதை அடிச்சுக்க வேறே இல்லை!

      Delete
    3. கீதா மேடம் உங்க பதிவு பக்கம் என் முதல் வருகை. டிகிரி காபி தான். ரெண்டு மாச முன்ன. ஒரு புக்ல. எழுத்தாளர் சாரு நிவேதிதா உங்க அக்கார அடிசில் பதிவு பத்தி சொல்லி இருந்தாங்க.. நீங்க பாத்திங்களா..அங்க உங்க பேர பாத்ததும் இங்க சொல்லணும்னு தோணிச்சி..

      Delete
    4. கீதா மேடம் உங்க பதிவு பக்கம் என் முதல் வருகை. டிகிரி காபி தான். ரெண்டு மாச முன்ன. ஒரு புக்ல. எழுத்தாளர் சாரு நிவேதிதா உங்க அக்கார அடிசில் பதிவு பத்தி சொல்லி இருந்தாங்க.. நீங்க பாத்திங்களா..அங்க உங்க பேர பாத்ததும் இங்க சொல்லணும்னு தோணிச்சி..

      Delete
  13. ஒரு காலத்தில் காஃபி குடித்தேன். நிறுத்தி பல வருடங்கள் ஆகி விட்டது.
    சிகரி இல்லாமல் வாங்குவோம். இப்போது என் கணவர் மட்டும் தான் காஃபி குடிக்கிறார்கள்.
    மாமியார் வீட்டில் யாரும் காஃபி குடிப்பது இல்லை , என் கணவரைத் தவிர. காலை மாலை எப்போது காஃபி குடிக்கும் வேலையில் கண்டிப்பாய் குடிக்க வேண்டும் இல்லையென்றால் சிலருக்கு தலைவலி வந்து விடும் என்று செல்ல கேட்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  14. கீதாக்கா எங்கள் வீட்டிலும் சிகரி இல்லாத காபிப்பொடிதான்!!! என் ஓட்டும் அதற்கே!!!

    கீதா

    ReplyDelete