எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, June 13, 2017

வீடு!இல்லம்! இனிய இல்லம்! :(

"கல்யாணம் பண்ணிப்பார்! வீட்டைக் கட்டிப்பார்!" அப்படினு சொல்வாங்க. நாங்க கல்யாணமும் பண்ணிப் பார்த்தோம். வீட்டையும் கட்டிப் பார்த்தோம். அதுவும் அம்பத்தூரில் உள்ள எங்கள் வீட்டைக் கட்டுவதற்கு நாங்க பட்ட பாடு! முதல்லே இடம் வாங்க அலைச்சல்! முதலில் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து வாங்க எல்லா ஏற்பாடுகளும் பண்ணிவிட்டுக் கடைசியில் அந்த இடத்தை வாங்கினால் அது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மனைகள் பட்டியலில் இல்லை என்பதால் அரசுக் கடன் வாங்கிக் கட்ட முடியாது என்று சொல்லிவிட்டார்கள். மீண்டும் நிலம் தேடும் படலம் தொடங்கிக் கடைசியில் இப்போ வீடு கட்டி இருக்கும் இடம் தேர்வு செய்தார் நம்ம ரங்க்ஸ். அவர் எல்லாம் முடிவு பண்ணிட்டுக் கூட்டிப் போய்க் காட்டினார்.  எனக்கு அப்போல்லாம் இந்த விஷயத்தில் சுத்தமாக எதுவும் தெரியாது. ஆனாலும் உள் மனம் என்னமோ அம்பத்தூர் வேண்டாம் என்றே இடைவிடாமல் புலம்பல்! வேறே எங்கே வாங்குவது? நீ தேடிப் போய்க் கண்டுபிடி! மதுரையிலே எல்லாம் வாங்க முடியாதுனு ரங்க்ஸின் நக்கல்! ஆகவே இடத்தைப் பார்த்ததும் ஒண்ணுமே புரியாட்டியும் தலையைப் பெரிசா ஆட்டியாச்சு!  அதை நன்றாக ஆராய்ந்து 1980 செப்டெம்பரில் அதைப் பதிவும் செய்தார் ரங்க்ஸ். அன்னிக்கு வீட்டில் அல்வாக் கிளறி உறவினருக்கு விநியோகித்தது இன்னமும் நினைவில் இருக்கு.

78 ஆம் வருடம் தான் நாத்தனார் கல்யாணம் முடிந்திருந்ததால் அந்தக் கடனே இருந்தது என்பதால் உடனடியாக வீடு கட்டும் வேலையை ஆரம்பிக்க முடியலை. எங்களிடம் இருந்த லூனா வண்டியை விற்கும்படி ஆயிற்று. அந்த வண்டியை விற்றுவிட்டுக் கொஞ்சம் பணம் போட்டுக் கிணறு மட்டும் எடுத்தோம். 30 அடிக்குள்ளாகத் தண்ணீர் வந்து தண்ணீரும் சுவையாக இருந்தது என்னமோ உண்மை! பூமி பூஜையை மட்டும் போட்டோம். அதுக்குள்ளே அடுத்தடுத்துப் பிரச்னைகள். எனக்கு மூலம் அறுவை சிகிச்சை! மைத்துனரின் திருமணம் என்று தொடர்ச்சியான நிகழ்வுகள். மைத்துனரின் திருமணத்தை ஒட்டிப் பெரிய வீடு வேண்டும் என்று தேடியதில் இப்போ வீடு கட்டி இருக்கும் தெருவிலேயே காலியாக இருந்த ஒரு வீட்டுக்குக் குடித்தனம் போனோம். பின்னால் வீடுகட்டும்போது கிட்ட இருக்கணும் என்னும் காரணமும் சேர்ந்து தான்! அங்கே போயும் முதல் இரண்டு வருடங்கள் வீடு கட்ட எந்த முயற்சியும் செய்ய முடியலை! அரசு வீடு கட்டும் கடன்கொடுக்கும் வசதியைத் தாற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்ததே காரணம்! அதுக்குள்ளே வீட்டிற்கான திட்டங்கள் போடப்பட்டு அம்பத்தூர் டவுன்ஷிப்பில் கொடுத்து(அப்போ டவுன்ஷிப் தான்) அதற்கான அங்கீகாரங்கள் எல்லாம் வாங்கியாச்சு.

அப்போ சென்னையில் முக்கிய அலுவலகம் இல்லை என்பதால் பெண்களூரில் உள்ள அலுவலகத்துக்கு இருமுறை போய்ப் பார்த்தார் நம்ம ரங்க்ஸ். நம்மால் இயன்றது கடவுளைப் பிரார்த்திப்பது தான்! ஆகவே நான் சந்தோஷி மாதா விரதம் இருக்க ஆரம்பித்தேன். கடுமையான விரதம். எப்படியோ பதினாறு வாரங்கள் தொடர் சோதனைகளுடன் முடித்தேன். ஒருவழியாகக் கடனுக்கும் அனுமதி கொடுத்து முதல் தவணையும் வர இருந்தது.  இதற்குள்ளாக வீட்டைக் கட்டுவதற்கெனப் போடும் பூமி பூஜையையும் இருமுறை போட்டிருந்தோம்.  இரண்டாம் முறை போட்டதுமே கடன் கிடைத்தது. வீட்டிற்கான அஸ்திவாரம் போட வேண்டும். அம்பத்தூரிலேயே தெரிந்த ஒரு கட்டிடம் கட்டும் நபரைத் தேர்ந்தெடுத்து வேண்டிய ஏற்பாடுகள் செய்து அஸ்திவாரம் போடுவதற்கான செலவுகளைப் பட்டியலிட்டுத் தேவையானவற்றைச் செய்து அஸ்திவாரமும் போட்டோம். அப்போதெல்லாம் அஸ்திவாரம் கட்டிடம் தான்! உள்ளே மூன்றடிக்கு மேல் தோண்டிக் கட்டிடம் கட்டி மேலேயும் இரண்டடிக்கு மேல் எழுப்பிச் சுற்றிலும் கனம் தாங்குவதற்கான "பீம்" கொடுத்து எனக் கவனமாக எல்லாமும் செய்தோம்.


 .

வீட்டின் வாசலில் உள்ள வேப்பமரம். போன வருஷம் எடுத்த படம்.  தெருவுக்கே நிழல்கொடுக்கிறது.



இது போனவருஷம் ஆகஸ்டில் போயிருந்தப்போ வீட்டை ஆள் வைத்து நன்கு சுத்தம் செய்திருந்தோம். ஆகையால் குப்பைகள் இல்லை. இப்போ முன் வாசல் தரையெல்லாம் பெயர்ந்து ஒரே குப்பையும், கூளமுமாகக் கிடக்கிறது. இலைகளை அன்றாடம் வாரிக் கொட்டி எரித்துக் கொண்டு வந்தோம். இப்போ எங்கே பார்த்தாலும் இலைகள், குச்சிகள், மேலே ஷெட் கூரை பிய்ந்து தொங்குகிறது. இத்தனைக்கும் வீட்டில் குடித்தனம் இருக்கிறார்கள்! :(

22 comments:

  1. நாம் கஷ்டப்பட்டு வாங்கும் அல்லது கட்டும் வீட்டில் நாமே குடியிருக்க முடியாமல் போகும்போது இதுபோன்ற சிரமங்கள் + மன உளைச்சல்கள் ஏற்படுவது சகஜமே.

    வாடகைக்கு இருக்கும் வீட்டையும் சுத்தமாக பராமரித்து வைத்துக்கொள்ளும் குடியிருப்போர் கிடைக்கவும் ஓர் கொடுப்பிணை வேண்டும். என்ன செய்வது?

    ஒருவேளை அந்த வீடு தேவையில்லை என்று கருதினால், லாபகரமான விலையும் கிடைத்தால், விற்று விடுவதைப் பற்றி யோசிக்கலாம். டென்ஷன் இல்லாமலாவது இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஏற்கெனவே அந்த வீட்டைப் போன வருஷம் விற்க ஏற்பாடுகள் செய்தது குறித்தும் விற்க முடியாமல் போனதையும் எழுதி இருக்கேன் வைகோ சார்! :( இப்போது சந்தை நிலவரம் சரியாக இல்லாததால் இப்போது விற்க வேண்டாம் என்கிறார்கள். போன வருஷமாவது சிலர் கேட்டார்கள். இப்போ யாரும் கேட்கவும் இல்லை! என்ன செய்யறதுனு தெரியலை!

      Delete
  2. ஆசையாய் , கஷ்டப்பட்டு கட்டிய வீட்டை பராமரிப்பு இல்லாமல் காணும் போது ....கஷ்டமே..

    ReplyDelete
    Replies
    1. அங்கே தான் கடைசிக்காலம் கழியும்னு நினைச்சுட்டு இருந்தோம். ஆனால் 2011 ஆகஸ்டில் வீட்டுக்குள்ளே தண்ணீர் வந்து கிளப்பி விட்டு விட்டது!. அதுக்கப்புறமாத் தான் இங்கே வந்தோம். ஏற்கெனவே வேறே இடம் பார்த்துக் கொண்டு தான் இருந்தோம். வீடு சரியில்லை, சுற்றுப்புறம் சரியில்லை என்பதால் அங்கிருந்து கிளம்பி விட்டோம்.

      Delete
  3. வாடகைக்கு இருப்பவர்கள் தன் வீடுபோல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நாம் எதிர் பார்ப்பதே தவறு.

    அப்படி ஆசைப்பட்டால் "தனது வீடு" போலவே நினைத்தார்கள் ஆனால் நாம் கோர்ட்டுக்கு அலைய வேண்டியது இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, கில்லர்ஜி, குடித்தனக்காரங்க யாரும் அப்படி நினைச்சதில்லை என்பதே கடவுளின் கருணை தான்! :) எங்க தெருவிலேயே ஒருத்தர் அதுமாதிரிக் கோர்ட்டுக்கு அலைந்திருக்கார்! :)

      Delete
  4. நமக்கு எங்க இருக்கணும்னுலாம் எழுதினபடிதான் நடக்கும். நாங்களும் வீட்டை வாங்கிட்டு, இப்போவரைல வாடகை வீட்டுலதான் இருக்கோம். வாங்கின இடங்களும் விற்க இன்னும் நேரம் வரலை (அமையலை). ஓய்வுக்குப் பிறகு எங்க இருப்போம்னும் தெரியலை.

    நீங்கள் கூடவே இருந்து கட்டின வீடு.அதுவும் ரொம்பக் கஷ்டப்பட்டுக் கட்டின வீடு. கொஞ்ச காலம் அதில் வசித்தோம்னு சந்தோஷப்பட்டுக்கவேண்டியதுதான். எதுவும், நம்மைவிட்டுப் போகும் காலம் வரும்போதுதான் போகும்.

    வச்சதுதான் வச்சீங்க. ஒரு மாமரத்தையும் கூடவே வச்சிருக்கக்கூடாதா? தெருவுக்கே நிழல் தர்ற அளவு தெரு ரொம்பச் சின்னதா? ஆமாம் அம்பத்தூர்ல எந்த ஏரியா? அது தொழிற்பேட்டைல ஆரம்பிச்சு எங்கேயோ முடிகிறது. அந்தக் காலத்துல (1975?) விஜய லக்ஷ்மிபுரம் போக, பஸ்ல இறங்கி (அங்க ஒரு புளிய மரம் இருக்கும்), ஒத்தையடி கிராமப் பாதையில நடந்து நடந்து போனா கடைசில விஜயலக்ஷ்மிபுரம் வரும். 20 வருடத்துக்கு முன்னால பாத்தபோது, எல்லாமே ரொம்ப டெவலப் ஆயிடுத்து.

    ReplyDelete
    Replies
    1. //வச்சதுதான் வச்சீங்க. ஒரு மாமரத்தையும் கூடவே வச்சிருக்கக்கூடாதா?//

      க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஒன்றுக்கு மூன்று மாமரங்கள், மாதுளை மரம், எலுமிச்சை மரம், அப்புறமாய் நாரத்தை மரம் எல்லாமும் இருந்தது. மாமரங்கள் அக்கம்பக்கம் குடியிருப்புக் கட்டினப்போப் போட்ட சிமென்ட் குப்பைகள், மணல், செங்கல் போன்றவற்றால் பட்டுப் போனது! :( எலுமிச்சை மரத்தை யாரோ கிளையை ஒடிக்க ரொம்பவே சென்சிடிவான மரம் உயிரை விட்டு விட்டது. மாதுளையும் பட்டுப் போச்சு! வாசலில் வேப்பமரம் தானாக வந்தது! மேற்குப் பக்கம் நான்கு தென்னை மரங்கள் இருக்கின்றன. வீடு குடி போனப்போ வைத்த தென்னைகள்! பலன் தருகின்றன. ஆனால் யாருக்கெல்லாமோ! இப்போப் போனப்போக் கூட ஒரு தேங்காய்க் கீத்துக் கூடக் கொண்டு வரலை! :)



      //தெருவுக்கே நிழல் தர்ற அளவு தெரு ரொம்பச் சின்னதா?//

      தெரு முப்பதடி அகலம்.

      // ஆமாம் அம்பத்தூர்ல எந்த ஏரியா?//

      பட்ரவாக்கம் ரயில்வே ஸ்டேஷன் எங்க ஏரியா பின்னால் வரும். இப்போப் புதுசா ஐந்தாறு வருஷங்கள் முன்னர் போட்ட கல்கத்தா தேசிய நெடுஞ்சாலை எங்க ஏரியாவைத் தொட்டுக் கொண்டு செல்லும்.


      //அது தொழிற்பேட்டைல ஆரம்பிச்சு எங்கேயோ முடிகிறது//

      ஆமாம், பரந்து விரிந்திருக்கிறது.

      Delete
  5. நீங்கள் ஆசையாகக் கட்டிய வீட்டில் இப்போது நீங்கள் இல்லை என்பது வருத்தமே.

    ஆமா இப்ப எங்க வசிக்கிறீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. இப்போ ஶ்ரீரங்கத்தில் இருக்கோம்.

      Delete
  6. வாடகையாவது ஒழுங்கா குடுத்தா சரிதான்.நேரம் வந்தா தானே வித்து பாேகும்.

    ReplyDelete
    Replies
    1. வாடகை வந்துட்டு இருக்குதான். ஆனால் வீடு இருக்கும் கோலம் தான்! :(

      Delete
  7. பார்த்து பார்த்து கட்டிய வீட்டை விற்க மனசு வராது. வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வீட்டை விற்கணும்னு முடிவு பண்ணி முயற்சிகளும் எடுத்தோம். நடக்கலை! :(

      Delete
  8. சென்னையைப் பொறுத்தவரை அம்பத்தூர் என்பது ஊரின் கோடி. பார்த்துப் பார்த்து வீட்டைக் கட்டிவிட்டு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வேறு இடத்தில் இருப்பது குழந்தையைப் பிரிந்த தாய் போல உணரவைக்கும். கஷ்டம்தான்.

    ReplyDelete
    Replies
    1. இப்போ சென்னை எழும்பூரிலிருந்து அம்பத்தூருக்கு அரை மணி நேரம் தான் ஆகிறது. அம்பத்தூரிலிருந்து தாம்பரம் அரை மணி நேரம். அதிகம் போனால் 40 நிமிஷம்! வீட்டைக் கட்டிட்டுப் பல வருஷங்கள் வெளி மாநில வாசம் தானே! அப்புறமாத் தானே அங்கே வந்து இருக்க முடிந்தது!

      Delete
  9. அம்பத்தூரா !! தண்ணி வருமே மழைக்கு ரொம்பன்னு எழுதும்போதே உங்க பின்னூட்டத்தில் சொல்லியிருக்கீங்க வெள்ளம் பற்றி ..நான் 90 லையே கேள்விப்பட்டிருக்கேன் நிறைய ப்ரண்ட்ஸ் அங்கிருந்தாங்க 5 பேருக்கு DS மண்டபத்தில் கல்யாணத்துக்கு போயிருக்கேன் ...நம்ம பக்கம் தான்
    இருந்திருக்கிங்க நாங்க லோகோஒர்க்ஸ் ..
    ஆசைப்பட்டு கட்டின வீட்டை இப்படி பார்க்கும்போது கஷ்டம்தான் ..

    ReplyDelete
    Replies
    1. @Angelin, கல்யாணம் ஆனதிலிருந்து அம்பத்தூர் தான். ஆவடியில் என் கணவரின் அலுவலகங்கள் அனைத்தும் என்பதால் அம்பத்தூரைத் தேர்ந்தெடுத்திருந்தார். மாற்றலில் போனாலும் மீண்டும் சென்னை திரும்பி வருகையில் அம்பத்தூருக்குத் தான் வந்தோம். ஆகவே அங்கேயே வீடும் கட்டியாச்சு. எனக்குத் தெரிந்து எந்த மழையிலும் தண்ணீர் வந்ததில்லை. தெருவில் தேங்கி இருக்கும். எல்லாம் கிழக்கே கொரட்டூர் ஏரிக்குச் செல்லும் வடிகால் இருந்ததால் அங்கே சென்று விடும். வடிகால்கள் எல்லாம் ஆக்கிரமிக்கப்படவே வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து கொள்ள ஆரம்பித்ததே எனக்குத் தெரிந்து 2000 ஆம் வருஷத்தின் பின்னரே! எங்க வீடு மிக உயரமாக இருந்ததால் தண்ணீர் வரவே வாய்ப்பில்லை. வீட்டுக்கு எதிரேயும், பக்கத்திலும் அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டும்போது இரண்டு கட்டிட வல்லுநர்களும் சாமான்களை எங்க வீட்டு வாசலில் நாங்க வெளியே வரக் கூட முடியாதபடி போட்டு வைத்ததில் தண்ணீர் கிழக்கே கொரட்டூர் ஏரிப்பக்கம் போக வழியின்றி எங்க வீட்டில் புகுந்தது! :(

      Delete
  10. வீடு கட்டும் அனுபவமே அலாதிதான் என் வீடு கட்டியது பற்றி நான் பகிர்ந்திருக்கிறேன் முதலில் எனக்கு வீடு கட்டும் ஆசையே இருக்கவில்லை. வேலையில் இருக்கும் வரை குவார்டர்ஸ் உண்டு ஓய்வு பெற்றால் எதனை வருடம் இருப்போமோ தெரியாது வீடு கட்டுவதே வேஸ்ட் என்ற மனநொலையில் இருந்த என்னை அடிஅடியாக நகர்த்தி வீடு கட்டச் செய்த நண்பனுக்கு நன்றி

    ReplyDelete
  11. வீட்டை கட்டிப் பார் என்று சொன்னது பொய்யில்லை, உண்மை என்பதை நாங்கள் மாடியில் ஒரு அறை கட்டும் போது தான் உணர்ந்தோம், கட்டிய வீட்டை வாங்கி விட்டோம் அம்மாவிடமிருந்து கட்டும் கஷ்டம் இல்லை. மாடி கட்டிய் போது தான் கஷ்டம் எல்லாம். யாருக்கும் வாடகைக்கு விட வேண்டாம் நாமே வைத்துக் கொள்ளலாம் மதுரை வந்த பின்னால் என்றால் தண்ணீர் இல்லை. (இப்போது மகன் வீட்டில்) . தண்ணீர் இல்லையென்றாலும் வாடகைக்கு கேட்கிறார்கள் விலைக்கு தண்ணீர் வாங்கி கொள்வதாய். சில ரிப்பேர்கள் செய்து விட்டு கொடுக்கனும். யானை அசைந்து அசைந்து தின்னும், வீடு அசையாமல் தின்னும் என்று பழமொழி உண்மை என்பதை உணர்ந்து கொண்டு இருக்கிறோம்.

    உங்கள் இனிய இல்லம் வெள்ளம் வருவதற்கு முன் என்றால் நல்ல விலைக்கு போய் இருக்கும். இப்போது மிகவும் குறைந்த விலை கேட்பார்கள். அதனால் கொஞ்ச காலம் பொறுத்து இருந்து கொடுங்கள்.

    ReplyDelete
  12. பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டில் இருப்பது என்பது தனி சுகம். நம் தாயின் மடியில் கிடப்பது போன்ற ஒரு சுகம் இருக்கும் இல்லையா? அது மிகவும் சிறிய வீடாகவே இருந்தாலும். யாரும் நம்மை வீட்டை விட்டுத் துரத்த மாட்டார்கள். நம் தாயை/குழந்தையைப் பார்த்துக் கொள்வது போல் அதனைப் பேணிப் பேணி பார்த்துக் கொள்வோம். வாடகைக்கு இருப்பவர்கள் தங்கள் வீடு போலப்பார்த்துக் கொண்டால் நலல்து. அதிலும் கூட நல்லவர்கள் இருந்தால் நல்லது. கொஞ்சம் ஒரு மாதிரி என்றால் வீட்டைத் தங்கள் வீடாக்கிக் கொள்ளும் அனுபவங்களையும் பலர் சந்திக்கின்றார்கள். அதனாலேயே இப்போதெல்லாம் ஒவ்வொரு வருடமும் அக்ரீமென்டை புதுப்பிக்கிறார்கள். ஒரு சில வீட்டிலுள்ள ப்ளக் பாயிண்டுகள் முதற்கொண்டு குறிப்பிட்டுத்தான் அக்ரீமென்ட் போடுகிறார்கள்.

    உங்கள் இல்லத்தில் வெள்ளம் வருகிறது என்றால் என்ன செய்ய? இப்போது ரங்குவைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்த மனத்திருப்தி இருக்கும் இல்லையா? ஏதேனும் ஒன்றிருந்தால் ஒன்று இல்லாதிருக்கும் இதுதானே வாழ்க்கையின் நியதி! அந்த ரங்கு உங்களுக்கு எல்லா நன்மையும் கிடைக்கச் செய்யட்டும்!!

    ReplyDelete
  13. வீட்டைக் கட்டிப்பார்!! ஆமாம், குழந்தையை வளர்ப்பது போல் பார்த்துப் பார்த்து ஒவ்வொரு இன்சையும் செதுக்கச் சொல்லி, நமது விருப்பபடி வடிவமைத்து நமது சௌகரியங்களுக்கு ஏற்றார் போல் வடிவமைத்து என்று அலாதிதான்....அதுவும் ரிப்பேருக்குக் கை வைத்தால் அவ்வளவுதான்....அத்தனையும் இழுத்துக் கொள்ளும். என்றாலும் விடுவோமா? செய்யத்தான் செய்வோம். அத்தனை பாசம் செங்கல்லின் சிமென்டின் ஒவ்வொரு துகளிலும் இருக்கும் தான்...வீடு என்பது பொருளில் சேர்த்தி இல்லைதான்...ஆங்கிலத்தில் கூட சொல்லுவதுண்டே ஹவுஸ் என்பது நாலு சுவர்....ஹோம் என்றால் அது அன்பும் நேசமும் ஊடுருவி நிற்கும் ஒன்று. ஆனால் ஹோம் என்பது எல்லோருக்கும் அமைவதில்லை!!!

    ReplyDelete