எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, September 27, 2019

ஹவுடி மோதி! நிகழ்வின் தொடர்ச்சி 2

ஸ்ரீரங்கத்தில் சித்திரை மாதம் விருப்பன் திருநாள் என்னும் சித்திரைத்திருவிழாவுக்குச் சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்தெல்லாம் மக்கள் வருவார்கள். அவரவர் ஊரில் வயலில் என்ன விளைகிறதோ அதை அரங்கனுக்கு என எடுத்து வருவார்கள். கூட்டம் சொல்லி முடியாது.  ஸ்ரீரங்கமே அல்லோலகல்லோலப்படும். எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம். அரங்கனை மக்கள் பார்க்கிறார்களோ இல்லையோ, அரங்கன் கூடி இருக்கும் மக்களைப் பார்ப்பான். அதே போல் தான் இங்கும். கூட்டமான கூட்டம். கிட்டத்தட்ட அந்த விருப்பன் திருநாளைப் போல இங்கேயும் மக்கள் ஹூஸ்டனில் இருந்து மட்டுமல்லாமல் அக்கம்பக்கம் ஆஸ்டின், டாலஸ் போன்ற நகரங்களில் இருந்தும் கிளம்பி வந்தார்கள். சிலர் முதல்நாளே வந்து ஓட்டல்களில் அறை எடுத்துத் தங்கி இருந்தனர் எனச் சொல்லிக் கொண்டார்கள்.

உள்ளே நடுவில் உள்ள பெரிய மைதானத்தில் நாலு வரிசைகளாக நிறைய நாற்காலிகள் போட்டிருந்தனர். இடப்பக்கம் இரண்டாவதாக உள்ள வரிசையில் "கே" யில் துவங்கும் வரிசையில் எங்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அங்கிருந்து நடுவில் உள்ள மேடை நேர் எதிரே தான். ஆனாலும்! :))))



இதைப் போல் வலப்பக்கமும் இரு வரிசைகள். முன்னால் உள்ள நாற்காலிகள் எல்லாம் முக்கியமானவர்களுக்கு. அங்கிருந்து தடுப்பைத் தாண்டி நம்மால் போக முடியாதபடிக்குப் பாதுகாப்புப் போட்டிருந்தது. அதை ஒட்டிக் காணப்படும் இருக்கைகள் எல்லாம் முக்கியமானவர்களுக்கானது. அதிலும் இன்னொரு தடுப்பைத் தாண்டி உள்ள இருக்கைகள் விவிஐபிக்களுக்கானது. அங்கே தான் முக்கியத்தலைவர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர்.

நாங்கள் அமர்ந்த வரிசை


இப்போது கூட்டம் இன்னும் வராததால் எங்களுக்கு நேர் எதிரே மேடை நன்றாகவே தெரிந்தது. :)


சுற்றிலும் உள்ள காலரிகள். இரண்டு பக்கங்களிலும் வரிசையாக காலரிகள். அவற்றில் நிரம்பி வழியும் மக்கள்!

காலரியையும், ஸ்டேடியத்தையும் முழுக்க வரும்படிப் படம் எடுக்க வேண்டும் எனில் வீடியோவில் தான் முடியும். நான் சார்ஜ் தீர்ந்துவிடுமோனு பயத்தில் வீடியோவில் எடுக்கவில்லை. 



கீழே தெரியும் காலரிகளுக்கு மேலேவெளிச்சமாகத் தெரிகிறதே அங்கேயும்  இரு அடுக்கு காலரிகள். அவற்றிலும் மக்கள்.


பல வருஷங்களாக ஆசைப்பட்ட சோளப்பொரி!


ஸ்டேடியத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி!
                           
காலை சீக்கிரம் எழுந்து சாதம் வைத்துக் கொண்டு தயிர்சாதம் பிசைந்து எடுத்துக்கொண்டு கிளம்புவதாக முடிவு செய்து படுத்தபின்னரும் மனசில் ஏதோ நெருடல். கடைசியில் இருவரும் ஒரு சேர எழுந்து கையில் சாப்பாடு எடுத்துச் செல்லவேண்டாம். என்ன முடியுமோ, பார்த்துக்கலாம். எடுத்துப் போயிட்டுக் கொட்டும்படி நேர்ந்தால் என்ன செய்வது என்னும் எண்ணம் வரவே எதுவும் கொண்டு போகவேண்டாம் என முடிவு செய்தோம். . ஆகவே காலை நாலரைக்கு எழுந்து குளித்து முடித்துக் காஃபி மட்டும் சாப்பிட்டு விட்டுக் கிளம்பலாம்னு நினைத்தோம். பையரும், மருமகளும் சீரியல் இருப்பதாகவும் அதைப் பாலில் போட்டுச் சாப்பிடலாம் என்றும் சொன்னார்கள். சோளம் தானே. அதோடு பாதாம், பிஸ்தாப் பருப்புக்கள். ஆகவே சரி எனச் சொன்னோம். காலை எழுந்ததும் போவதைப் பற்றியும் உணவு பற்றியும் மறுபடி ஓர் கலந்தாலோசனை நடக்க அப்போது நம்மவர் பையரிடம், " நீ கஷ்டப்பட்டுக் காசு கொடுத்து அனுமதிச் சீட்டு வாங்கி இருப்பதால் தான் வரோம்." என்று சொல்லப் பையருக்குச் சிரிப்பு வந்தது. இது இலவச அனுமதி. யாருக்கும் காசு இல்லை. வர விருப்பமுள்ளவர்கள் முன்கூட்டிப் பதிவு செய்துக்கலாம். அதன்படி பதிவு செய்தேன் எனச் சொல்ல உடனே நம்மவர் என்னிடம் வந்து இலவசமாம். நாம் எதுக்குப் போகணும்? மஹாலயம் வேறே. நாளைக்குத் தர்ப்பணம் வேறே இருக்கு. பேசாமல் வீட்டில் இருக்கலாம் என்று சொல்ல நான் நீங்க வரலைனாப் பரவாயில்லை. நான் மட்டும் போகிறேன் எனச் சொல்லிட்டுக் குளிக்கப் போயிட்டேன்.அதன் பின்னர் வேறு வழியில்லாமல் அவரும் கிளம்பினார். எவ்வளவு ஆவலுடன் காத்திருந்த நிகழ்ச்சி! தவற விடுவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. காசா, பணமா? நம்ம நாட்டுப் பிரதமர் வெளிநாட்டுக்கு வரும் சமயம் அவரைப் பார்க்கக் கிடைக்கும் சந்தர்ப்பம் எல்லோருக்கும் கிடைத்துவிடுமா?  அதன் பின்னர் அவரும் வேறு வழியில்லாமல் குளித்துக் காஃபி, சீரியல் எல்லாம் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினோம். மருமகளும், குழந்தையும் வரவில்லை. குட்டிக் குஞ்சுலுவுக்குச் சிரமம் கொடுக்க வேண்டாம்னு எண்ணம். அதே போல் அங்கே குஞ்சுலுவைக் கூட்டிப் போயிருந்தால் பிரச்னை ஆகி இருந்திருக்கும்.

வீட்டில் இருந்து ஒரு மணிநேரத்துக்குள்ளாகப் போகும் தூரத்தில் ஸ்டேடியம் அமைந்துள்ளது. நாங்கள் விரைவாகவே போய்ச் சேர்ந்து விட்டோம். நுழைவாயிலிலேயே பையர் அங்கே இருந்த பாதுகாவலரிடம் ஸ்டேடியம் பக்கம் போய் எங்களை இறக்கிவிடலாமா எனக் கேட்டார். அவரும் போகலாம் எனச் சொல்லவே ஸ்டேடியம் பக்கம் எங்களை இறக்கிவிட்டு அங்கே காத்திருக்கச் சொல்லிவிட்டுக் காரைப் பார்க் செய்யப் போனார். காலை சீக்கிரமே நாங்கள் போனதால் ஸ்டேடியம் உள்ளேயே உள்ள பார்க்கிங்கில் இடம் கிடைத்தது. இல்லைனா இரண்டு கிலோமீட்டராவது நடக்கும்படி இருந்திருக்கும் என்று பையர் சொன்னார்.


அவர் காரை நிறுத்திவிட்டு வந்ததும் நாங்கள் நிதானமாக உள்ளே போக ஆயத்தம் ஆனோம். எவ்வளவு தான் மெதுவாகப் போனாலும் ஓர் நிலையில் உள்ளே நுழையும் வரிசை வரத் தான் செய்தது. ஆங்காங்கே இருந்த தன்னார்வலர்கள் அனைவரது நுழைவுச்சீட்டையும் அமெரிக்கக் குடிமக்களின் அடையாள அட்டையையும் பார்த்து உள்ளே அனுமதித்துக் கொண்டிருந்தார்கள். எங்களுக்குப் பாஸ்போர்ட்டைக் கொண்டு போயிருந்தோம். அதையும் நுழைவுச் சீட்டையும் பார்த்து உள்ளே அனுமதித்தார்கள். உள்ளே நீண்ட வரிசைகள் பல நிற்க எதிலே நிற்கணும்னு தெரியாமல் ஒன்றில் நின்றோம். பக்கத்தில் இருந்த வரிசையில் கூட்டமே இல்லாததோடு அங்கே  ஃப்ளோர் ஆக்செஸ் என்றும் போட்டிருந்தது. நான் பையரிடம் கேட்க அவர் அதெல்லாம் விவிஐபிக்களுக்கானது எனச் சொல்ல எனக்கு மனசு கொஞ்சம் வாடியது. சற்று நேரத்தில் வரிசையில் முன்னேறி உள்ளே நுழையும் இடத்துக்குச் செல்லக் கூடிய எஸ்கலேட்டருக்கு அருகே வந்துவிட்டோம். ஏஸ்கலேட்டரைப் பார்த்துவிட்டு நான் திரும்பி விடலாமா என யோசிக்க, அருகேயே லிஃப்டுக்கான இடமும் கண்களில் பட ஆஸ்வாஸப் பெருமூச்சு விட்டேன்.

47 comments:

  1. ஆஆஆஆ இம்முறை மீதான் 1ஸ்ட்டூஊஊ ஓ லலலா:)...
    இல்லாட்டில் கீசாக்கா மோடி அங்கிளுக்குத்தான் சப்போர்ட் பண்ணுறா என ட்றம்ப் அங்கிளுக்குச் சொல்லிக் குடுப்பேன்:)

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெள்ளை மாளிகையில் கஷ்டப்பட்டு ட்ரம்ப் அங்கிளைப் பார்த்த அதிரடி! சொல்லிக் கொடுங்க சொல்லிக் கொடுங்க!

      Delete
    2. அரங்கனையும் விருப்பன் திருநாளையும் பத்தி எழுதி இருந்தேனா, அரங்கனே வந்துட்டான் இங்கே, ஜெயா தொலைக்காட்சி தயவு. அபிஷேஹங்கள்/திருமஞ்சனம் கண்குளிரப் பார்த்துக் கொண்டிஉர்க்கேன்.

      Delete
  2. வெளிநாடுகளில் நம்மவர் கூடும்போது அது ஒருவித ஆனந்தம் தான்... மேடையிலிருந்து தூர இருப்போருக்கு தெரிவது கஸ்டமாக இருந்திருக்குமே..

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, பார்க்கப் போனால் நன்றாகத் தெரிந்தது என்றே சொல்ல வேண்டும். ஆனால் தொலைக்காட்சிகளுக்காக வீடியோ எடுக்கும் காமிராக்கள், காமிரா ஆட்கள் முழுக்க முழுக்க மறைத்துக் கொண்டுவிட்டனர். கல்யாண முஹூர்த்தத்தில் தாலி கட்டும்போது மறைக்கும் வீடியோக்காரர்கள் மாதிரி

      Delete
  3. /////நான் சார்ஜ் தீர்ந்துவிடுமோனு பயத்தில் வீடியோவில் எடுக்கவில்லை. ////
    ஆஆஆஆ மீ புல்லாரிச்சுப்போயிட்டேஏஎன்ன்ன்ன் கீசாக்காவும்கு எவ்ளோ அறிவு பாருங்கோ:)

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், காலம்பர சார்ஜ் செய்து கொண்டு தான் போனேன். ஆனால் படங்கள் அதிகம் என்பதால் விரைவில் 40% வந்துவிட்டது.

      Delete
  4. ஏன் கீசாக்கா, ஊரில்தானே சுடச்சுட மண் போட்டு பொப் கோன் செய்து விற்பார்கள்... ஆனா இங்கு எத்தனையோ பிளேவேர்சில் கிடைக்குது... அதிலும் கனடாவில் பட்டரை உருக்கி ஊத்தித் தருவார்கள் அதன் சுவையே தனி... கை எல்லாம் வெண்ணெய் போலாகிடும்...

    ReplyDelete
    Replies
    1. அந்த சோகக்கதையை ஏன் கேட்கறீங்க அதிரடி, எங்க அப்பா வீட்டில் எக்கச்சக்கமான கட்டுப்பாடுகள். இதெல்லாம் சாப்பிடவே முடியாது. கல்யாணம் ஆனப்புறமாக் கூச்சம், குழந்தைங்களுக்கே எப்போவானும் வாங்கித் தருவேன்./கவனிக்க, வாங்கித் தருவேன் தான். தருவோம் இல்லை. இங்கே வந்தப்போ மெம்பிஸில் பொண்ணு இருந்தப்போ எங்க பேத்திக்கு நீங்க சொன்ன மாதிரி வெண்ணெய் ஒழுக ஒழுக பாப்கார்ன் வாங்கித் தருவா. கேட்க வெட்கம். சரினு இம்முறை வெட்கத்தை விட்டுப் பையரிடம் சொன்னால்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வெண்ணெயே இல்லை. அது இன்னொரு சோகக்கதை! விரிவாப் பதிவிலே சொல்றேன். :))))

      Delete
    2. >>> அது இன்னொரு சோகக்கதை! விரிவாப் பதிவிலே சொல்றேன். :)))..<<<

      ஓ... இது வேற இருக்கா!?...

      Delete
    3. ஹாஹாஹா, துரை, பாதிக்கும் மேலே நாம எழுதுவது எல்லாம் மொக்கை தானே! :)))))

      Delete
  5. ////பேசாமல் வீட்டில் இருக்கலாம் என்று சொல்ல நான் நீங்க வரலைனாப் பரவாயில்லை. நான் மட்டும் போகிறேன் எனச் சொல்லிட்டுக் குளிக்கப் போயிட்டேன்///
    ஆஆஆஆஅ மகன் வீட்டுக்குப் போனதும் மாமாவுக்கு வாய் காட்டத் தொடங்கிட்டாவே கீசாக்கா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... ஹா ஹா ஹா...

    ReplyDelete
    Replies
    1. இஃகி,இஃகி,இஃகி, பின்னே! காலம்பர அவ்வளவு சீக்கிரம் எழுந்து காஃபி எல்லாம் குடிச்சுட்டுக் கிளம்பத் தயாராகணும்னா, அவர் வேண்டாம்னு சொன்னால்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  6. ஓ கேட்க நினைச்சேன் நீங்களே சொல்லிட்டீங்க குஞுவைக் கூட்டிப் போகவில்லை என, ஆனா பொதுவா வெளிநாடுகளில் நம்மவர்களின் கொண்டாட்டம் எனில் நிறையக் கடைகள் போடுவார்கள்.. அதிகம் உணவுக் கடைகள்.... அங்கு எதுவும் போடவில்லைப்போல இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, இங்கே அங்கீகரிக்கப்பட்ட ஒரு சில உணவுக்கடைகள் மட்டுமே. குறிப்பிட்ட உணவுகள் தான் கிடைக்கின்றன எனச் சொல்லிக் கொண்டனர். நாங்கள் ஏதும் வாங்கவில்லை.

      Delete
  7. இந்த முயற்சிதான் கீதாவின் ட்ரேட்மார்க்.
    முன் கூட்டியே முன் பதிவு செய்த பையரைப் பாராட்டவேண்டும்.


    எவ்வளவு பெரிய கூடம். ஹூஸ்டன் வெள்ளத்தின் போது,பத்து வருடங்களாவது
    இருக்கும், இங்கே வீடிழந்தவர்களைத் தங்க வைத்தார்கள்.
    இப்போது நம் பிரதமரே வந்து விட்டார். நினைக்கவே அற்புதமாக இருக்கிறது.
    உங்கள் மொபைல் நன்றாகப் படம் எடுத்திருக்கிறது. பிரம்மாண்டமான இடம்.
    இதுவே நிரம்பி இருக்க வேண்டும் என்றால் பிரமிப்பாக இருக்கிறது.
    அடுத்த பதிவை எதிர்பார்த்து .....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், வல்லி, மிகப் பெரிய கூடம். கீழேயும் எல்லா வரிசைகளும் நிரம்பிவிட்டன. காலரிகளும் வழிந்தன. 50,000 என்று சொன்னார்களே தவிர்த்து அதற்கு மேலே கூட்டம் இருந்திருக்கும்.

      Delete
  8. நீங்கள் சொல்லி இருக்கும் விருப்பம் திருநாள் எனக்கு மதுரையின் சித்திரைத் திருநாளை நினைவு படுத்துகிறது.  அழகர் ஆற்றில் இங்க வரும் நாள், எதிர்சேவை...

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், கிட்டத்தட்ட எனக்கும் நம்ம ஊர்த் திருநாள் தான் நினைவில்வந்தது. கிட்டத்தட்ட அந்தச் சமயம் தான் ஸ்ரீரங்கத்திலும் திருநாள் நடக்கும்.

      Delete
  9. அங்கிருக்கும் கூட்டத்தைப் பார்த்தால் T 20 கிரிக்கெட் மேட்ச் கூட்டம் தோற்றுவிடும் போல!   

    ReplyDelete
    Replies
    1. நல்ல கூட்டம், மக்கள் கரகோஷம் காதைப்பிளந்தது என்று சொன்னால் அது பொய்யில்லை.

      Delete
  10. சீக்கிரம்போனதால் உள்ளேயே விட பார்க்கிங்கில்  இடம் கிடைத்தது சரி, எடுக்கும்போது சிரமமாகியிருக்குமே...  அதெல்லாம் இந்தியாவில்தான் என்கிறீர்களா?

    ReplyDelete
    Replies
    1. எடுக்கும்போதும் சிரமம் தான்! எல்லாரும் காத்திருந்து காத்திருந்து தான் போனோம்.

      Delete
  11. //ஏஸ்கலேட்டரைப் பார்த்துவிட்டு நான் திரும்பி விடலாமா என யோசிக்க,//

    அவ்வளவு தூரம்போய்விட்டா?  பையருக்குக் கடுப்பாகி விடாதோ?!!

    ReplyDelete
    Replies
    1. இஃகி,இஃகி, அப்படித் திரும்பிட முடியுமா? சும்மாச் சொன்னேன். அம்புடுதேன்.

      Delete
  12. The stadium is the first domed stadium and an engineering marvel. This was named as the Eighth Wonder of the World
    Rajan

    ReplyDelete
  13. இன்றும் மோதி வரவில்லையே!

    ஸ்டேடியம் பார்த்து விட்டேன்.

    எஸ்கலேட்டரைப் பார்த்து பயப்படமால் மகனுடன் ஏறி இருப்பீர்கள் இந்த முறை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, கோமதி, பொறுத்திருந்து பாருங்க! மோதி வருவதற்குக் கொஞ்சம் காத்திருக்கணுமே, மணி ஆகலையே!

      Delete
  14. மோடியை அரங்கனுடன் ஒப்பிட்டு விட்டீர்களே நியாயம்தானா ?

    //கரகோஷம் காதைப் பிளந்தது//
    இது இந்தியனின் பிறவிக்குணம்.

    எப்படியோ சந்தோஷமாக சென்று வந்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. நினைச்சேன் கில்லர்ஜி, யாரானும் இப்படிக் கேட்பாங்கனு! நான் சொன்னது கூட்டத்தைத் தான்! கூட்டம் கட்டுக்கு அடங்காமல் இருந்தது. அதைத் தான் ஒப்பிட்டேன். அரங்கனோடு மனிதரை ஒப்பிட முடியுமா?

      Delete
  15. அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சிக்குப் போயிட்டீங்க. ஆர்வம் இருந்தால்தான் மற்ற பிரச்சனைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் இப்படி கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. //அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சிக்குப் போயிட்டீங்க. // ஙே!!!!!!!!!!!!!!! அமெரிக்காவில் தானே இருக்கேன் இப்போ! புரியலை. அது சரி, வழக்கமான விமரிசனம் எங்கே காணோம்? அதானே உங்க ட்ரேட்மார்க்?

      Delete
    2. ஐயோ ஐயோ... போயிட்டீங்க.. (இந்த வாக்கியத்தில் மறைந்திருந்தது... உள்ளூர்லதான் எந்தக் கூட்டத்துக்கும் போகமாட்டீங்க).

      நானும் பஹ்ரைன்ல நிறைய கூட்டங்களுக்கு (அங்கெல்லாம் அமெரிக்காவை விட கம்முடேஷன் செளகரியம்) போனதில்லை.. சோம்பேறித்தனம்தான். கலாம் வந்தபோதுகூட போனதில்லை. யேசுதாஸ் நிறையதடவை வருவார்.. போய் பார்த்ததில்லை. ஆர்வம், கொஞ்சம் சிரமத்தைப் பார்க்காம இருந்தாத்தான் இதெல்லாம் சாத்தியம்.

      Delete
    3. அப்படிப்பார்த்தால் அம்பத்தூரில் இருக்கையில் பல பிரபலங்கள் நாடகவிழா நடத்தி இருக்காங்க. டி.எம்.எஸ். எம்.எஸ்.வி சங்கீத நிகழ்ச்சி நடத்தி இருக்காங்க. அதுக்கெல்லாம் போயிருக்கோம். அதிலும் நாடக விழா நாடகங்கள் ஒன்று தவறாது. "சோ" "எஸ்.வி.எஸ்" "மெரினா" "மனோகர்" என எல்லாவற்றுக்கும் போயிருக்கோம். அம்பேரிக்காவில் கம்யூடேஷன் கஷ்டம்னு யார் சொன்னது? எனக்கு இங்கே காரில் நீண்ட தூரம் பயணம் செய்வது ரொம்பப் பிடிக்கும். நன்கு ரசித்துக் கொண்டே போகலாம். எந்தவிதத் தடையும் போக்குவரத்து நெரிசல்னு எல்லாம் இருக்காது.

      Delete
  16. வணக்கம் சகோதரி

    சித்திரைத் திருநாள் செய்தி நன்றாக உள்ளது. அரங்கன் மேல் மக்களுக்கு அளவு கடந்த பக்தியென்றால், அரங்கனுக்குதான் மக்கள் மேல் எவ்வளவு பாசம்..! தாங்கள் சொன்ன முறையே மெய் சிலிர்த்தது.

    எத்தனை பிரமாண்டமான கலைக்கூடம். அழகான படங்கள். கலை நிகழ்ச்சிகளை செளகரியமாக காண முடிந்ததா? இத்தனைக்கும் இலவசமாக ஏற்பாடுகள் செய்த இந்திய வம்சாவளிகளை பாராட்ட வேண்டும். கலை நிகழ்ச்சிகளை படம் எடுக்க முடிந்ததா? அடுத்த பதிவுக்கும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, ஊரை விட்டுக் கிளம்பும் முன்னர் அரங்கனைப் பார்க்காமல் வந்துட்டோம். நேரம் இல்லை. ஆனால் இங்கே வந்ததும் தொலைக்காட்சி தயவில் அரங்கனைக் கண்டோம். மோதியைப் பார்த்தது ஓர் ஆர்வம். ஆனால் இதை அதோடு ஒப்பிட முடியாதல்லவா? அரங்கன் அரங்கன் தான். ஒரு முறை ஸ்ரீரங்கம் வந்து தரிசித்துச் செல்லுங்கள். நாங்க இருக்கும்போது வாருங்கள்.

      Delete
    2. இது கலைக்கூடம் இல்லை கமலா, விளையாட்டு அரங்கம். சுற்றிலும் வட்ட வடிவத்தில் காலரிகள். காலரிகளே மூன்று அடுக்குகள். ஏராளமான படிகள்! கலை நிகழ்ச்சிகளைக் கொஞ்சம் கொஞ்சம் பார்க்க முடிந்தது. எழுந்து நின்றால் நன்றாய்த் தெரியும். ஆனால் பின்னால் இருப்பவர்களுக்கு மறைக்கும். :)))) குழந்தைகளை நன்றாகப் பழக்கி இருந்தார்கள்.

      Delete
  17. இப்பொழுது தான் உள்ளே நுழைகிற கட்டத்திற்கு வந்திருக்கிறீர்களா?.. சரியா போச்சு! :))

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜீவி சார், ஹாஹா,ஹாஹா, பதிவுக்கு விஷயம் வேணுமே!

      Delete
  18. மாமாவோட கையில் பிளாஸ்டிக் பையில் இருப்பது என்ன? ஸூம் பண்ணிப்பார்த்து சாக்லேட் ஃப்ளேவர்ட் பிஸ்கட்டோ என்று நினைத்தேன். நேற்று அது இல்லைனு சொல்லிட்டீங்க

    ReplyDelete
    Replies
    1. சாக்லேட், சாக்லேட் பிஸ்கட், சாக்லேட் ஐஸ்க்ரீம் இந்தமாதிரி ஐடமெல்லாம் மாமாவுக்குப் பிடிக்கவே பிடிக்காது. அதிலே இங்கே கிடைக்கும் நியூட்ரிஷியன் பார்கள் 2,3, வாழைப்பழம் ஆகியவை தான்.

      Delete
  19. விரிவான பகிர்வு. மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், தொடருங்கள்.

      Delete
  20. >>> நம்ம நாட்டுப் பிரதமர் வெளிநாட்டுக்கு வரும் சமயம் அவரைப் பார்க்கக் கிடைக்கும் சந்தர்ப்பம் எல்லோருக்கும் கிடைத்துவிடுமா?..<<<

    அதானே... எல்லாருக்கும் இந்த வாய்ப்புக் கிடைத்து விடுமா?...

    நேர்முக வர்ணனை அருமை.. அருமை..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, நன்னி, நன்னி!

      Delete
    2. எழுதிவரும் நடை அருமை. கிடைத்தற்கரிய வாய்ப்பினை நீங்கள் பகிர்ந்துள்ள விதம் ரசிக்கவைத்தது.

      Delete