எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, September 17, 2019

துபாய் செல்லும் விமானத்தில்!

அநேகமாக எல்லாப் பயணிகளும் வீல் சேர் கேட்டிருப்பாங்க போல! :P ஏனெனில் வீல் சேர் வர அரை மணி நேரம் ஆகி விட்டது. வீல் சேரில் சௌகரியங்கள் அதிகம். இமிக்கிரேஷன், கஸ்டம்ஸ் போன்றவற்றில் காத்திருக்க வேண்டாம். நேரே அழைத்துச் சென்று விடுவார்கள். விமான நிலையத்தின் மொத்த தூரத்தையும் கால்களால் அளக்க வேண்டாம். கால்வலியால் கஷ்டப்படவும் வேண்டாம். ஏரோ பிரிட்ஜின் நுழைவாயில் வரை கொண்டு விட்டு விடுவார்கள். அதே போல் நாம் இறங்கும் இடங்களிலும் கையில் பட்டியலை வைத்துக்கொண்டு எந்த விமானச் சேவையில் பயணம் செய்கிறோமோ அவர்கள் காத்திருப்பார்கள். அவர்களுடன் நாம் போவதால் செக்யூரிடி சோதனை கூட விரைவில் முடிந்து விடும்.



படத்துக்கு நன்றி கூகிளார்

வீல் சேர் வந்ததும் நாங்களும் எல்லாச் சோதனைகளையும் முடித்துக் கொண்டு எந்த நுழைவாயிலில் விமானம் ஏறணுமோ அங்கே காத்திருந்தோம். அதன் பின்னர் உள்ளே கொண்டு விட்டனர். ஆனால் விமானத்தைச் சுத்தம் செய்யும் பணி முடியாததால் சிறிது நேரம் காத்திருக்க நேர்ந்தது. அந்த நேரம் என்னுடைய பெரியம்மா மருமகள் (எனக்கு மன்னி) தன் மருமகளுடன் சியாட்டில் செல்ல அதே விமானத்துக்கு வந்து சேர்ந்தார்கள். சிறிது நேரம் அளவளாவினோம். பின்னர் அவங்க உட்காரும் வரிசை வேறிடம் என்பதால் சென்று விட்டார்கள். சியாட்டிலில் நிறைய உறவுக்காரர்கள் இருக்காங்க தான். ஆனால் அங்கே சென்றதில்லை. பேசாமல் கூகிளில் வேலை வாங்கிக் கொண்டு போயிடலாமோனு ஒரு எண்ணம். எங்க இருவருக்குமே ஓரத்து இருக்கையைக் கொடுத்திருந்தாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! உள்ளே அமர்ந்திருப்பவர்கள் அடிக்கடி கழிவறை பயன்படுத்துபவராக இருந்தால் உட்காரவே முடியாது. அதுவும் அவருக்கு ஒரு பக்கத்து ஓரம், எனக்கு இன்னொரு பக்கத்து ஓரம். உள்ளே செல்பவர்கள், உணவு வண்டியைத் தள்ளிக் கொண்டு வருபவர்கள் எல்லோரும் மேலே மேலே இடித்துக் கொண்டு செல்ல வேண்டி இருந்தது. தொலைக்காட்சியில் இம்முறைத் தமிழ்ப்படங்கள் புதுசுனு சொல்லவே என்னனு பார்த்தேன். ஒண்ணும் ரசிக்கலை. ஹிந்தி ஊரி படம் இருந்தது. ஆனால் இந்த நாலு மணி நேரப் பயணத்திற்கு அது வேண்டாம்னு முடிவு எடுத்தேன். எதுவும் பார்க்கவில்லை.

சொல்ல மறந்துட்டேனே. நான் கிளம்பும்போதே மோதி அங்கிளிடம் இருந்து தகவல் வந்தது. செப்டெம்பர் 22 ஆம் தேதி ஹூஸ்டனில் சந்திக்கலாம் என. ட்ரம்ப் அங்கிளும் வராராம். அதோட எல்லா மாநில ஆளுநர்கள், அதிகாரிகள் வராங்க! எல்லோருடனும் ஓர் சந்திப்புக் காத்திருக்கு! இஃகி,இஃகி,இஃகி! எல்லோரும் புகை விடுங்க பார்க்கலாம்.

விமானம் கிளம்பியதும் உணவு வந்தது. நாங்க ஜெயின் உணவு  கேட்டிருந்ததால்  ஒரு காய்ந்த கனமான கடிக்கவே முடியாத ரொட்டி(சப்பாத்தி என்று தமிழ்)பட்டாணிக் கூட்டு, பொங்கல், பழத்துண்டங்கள், வெண்ணெய், ஜாம் எல்லாம் வந்தது. அதிகக் காரம் இல்லாத பொங்கல்! பட்டாணிக்கூட்டு அந்தச் சப்பாத்தியை முழுங்கப் பார்த்தால் முடியலை. அப்படியே வைச்சுட்டேன். பொங்கலும் பழங்களும் மட்டும் சாப்பிட்டுவிட்டுக் காஃபிக்குக் காத்திருந்தோம். பரவாயில்லை. காஃபி மற்ற விமானச் சேவைகளில் இருப்பது போல் இல்லை. நன்றாகவே இருந்தது.

என்னதான் எழுதினாலும் கலகலப்பாக இருக்க முயன்றாலும் பானுமதியின் நினைவு இருந்து கொண்டே இருக்கிறது. விரைவில் அவர் மனம் தேறி மீண்டும் எழுதாவிட்டாலும் பதிவுகளுக்கு வந்து நம்மோடு பேசிக் கொண்டு இருக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

57 comments:

  1. ப்ளைட்டில் இப்படி கஷ்டப்பட்டு வருகிறதுக்கு பேசாமல் மோடி வரும் பளைட்டில் வந்து இருக்கலாமே நல்ல வெஜிடேரியன் உணவு கிடைத்திருக்குமே ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டிங்கம்மா பண்ணிட்டிங்கம்மா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தமிழரே, வந்திருக்கலாம் தான். ஆனால் பேத்திக்குப் பதினோராம் தேதி பிறந்த நாள். அதுக்குத் தானே அலறி அடிச்சுட்டு ஏழாம் தேதியே கிளம்பினோம். :))))))

      Delete
  2. மோடி எனக்கு பயந்துதான் நீயூஜெர்ஸி பக்கம் வராமல் உங்க ஊர் பக்கம் வருகிறார் போல....

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, ஆமா இல்ல, சொன்னாரே! மறந்துட்டேன்.

      Delete
  3. சரி சரி முடிஞ்சா ஒரு டிக்கெட் வாங்கி அனுப்புங்க அங்க வந்து ஒழிகன்னு சொல்லிட்டு போறேன்

    ReplyDelete
    Replies
    1. நீங்க வாங்க, ஒழிக சொல்லுங்க, வேண்டாம்னு சொல்லலை. ஆனால் டிக்கெட் செலவை ட்ரம்ப் அங்கிள் கொடுப்பார்! :))))) அவரைக் கொடுக்கச் சொல்லுங்க. :))))))

      Delete
  4. வீல்சேரில் செல்வதில் இப்படி ஒரு சௌகர்யம் இருக்கிறதா?  வி ஐ பி பாஸில் பெருமாள் பார்ப்பது போல!   ஹா..  ஹா..  ஹா...

    ReplyDelete
    Replies
    1. நான் மூன்றாவது முறையாகவும், நம்ம ரங்க்ஸ் 2 ஆவது முறையாகவும் வீல் சேர் பயன்படுத்துகிறோம். நான் மட்டும் போனாலோ அல்லது அவர் மட்டும் போனாலோக் கூடச் செல்லும் நபருக்கும் சேர்த்தே எல்லாச் சோதனைகளையும் முடித்துக் கொடுத்துவிடுவார்கள். கால்வலி காரணமாக நடக்க முடியாதவர்களுக்காகவே வீல் சேர். முதல் முறை போனப்போ யு.எஸ். இமிகிரேஷனில் இருந்த பெண்மணி உண்மையாகவே நடக்க முடியாதா எனக் கேட்டார். ஆமாம்னு சொன்னேன். இத்தனை தூரம் நடந்து வருவது ரொம்பக் கஷ்டமாக இருக்கு என்றேன். ஆமோதித்தார்.

      Delete
  5. தயாராய் வெந்நீர் வாங்கி அந்த ரொட்டியில்..  அதான் அந்த சப்பாத்தியில் ஊற்றி சாப்பிட்டிருக்கலாமே!  பொங்கல்? வயிற்றை அடைத்து விடாதோ?

    ReplyDelete
    Replies
    1. ஏற்கெனவே காய்ந்து போயிருந்த ரொட்டியில் வெந்நீரை ஊற்றினால் ஒரு ருசியும் இருக்காது. மண்ணாங்கட்டியாட்டம் இருக்கும். அதோடு பொங்கல் என்றதும் ஒரு பெரிய கிண்ணம் நிறைய என நினைத்துவிட்டீர்கள் போல! இஃகி,இஃகி, ஒரு டேபிள் ஸ்பூன் பொங்கல். அவங்க கொடுக்கும் ஸ்பூனால் எடுத்தால் நாலு ஸ்பூன் வரும். அம்புடுதேன். அது பொங்கல் என்று சொல்வதை விட வட இந்தியக் கிச்சடி என்னலாம்.

      Delete
  6. ஓர இருக்கை என்பது சிரமம்தான்.  வருபவர் போவோர் எல்லாம் இடிக்க, இந்தப்பக்கம் நகர்ந்தாள் பக்கத்துக்கு இருக்கைக்காரர் முறைக்க...

    ReplyDelete
    Replies
    1. அதை ஏன் கேட்கறீங்க ஸ்ரீராம். ஒரே பிடுங்கல் தான்! :(

      Delete
  7. பானு அக்கா விரைவில் பதிவுலகம் வருவார்...  ஜோஸ்யம்..!

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் ஜோசியம் தெரியுமே!

      Delete
  8. எங்களின் பிரார்த்தனைகளும்...

    ReplyDelete
    Replies
    1. நம் எல்லோருடைய பிரார்த்தனைகளும் டிடி.

      Delete
  9. பயண அனுபவம் எங்களுக்கெல்லாம் பாடம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை ஐயா! ஒவ்வொரு பயணமும் நமக்கும் நம்மை அறிந்தவர்களுக்கும் ஓர் பாடமாகவே அமைகிறது.

      Delete
  10. பானுமதி மேடம் பதிவுலகத்திற்குத் திரும்ப நானும் கேட்டுக்கறேன்.

    பயண அனுபவங்கள் பரவாயில்லை. சென்னைலதான் வீல் சேர், உறவினர் சந்திப்புன்னு நினைக்கிறேன். (இல்லை துபாய் ஏர்போர்டிலா?). எமிரேட்ஸ்னால உணவுப் பிரச்சனை பெரிதாக இருந்திருக்காது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லைத் தமிழர். பானுமதி விரைவில் இணைய உலகுக்கு வருவார் என நானும் எதிர்பார்க்கிறேன். பதிவிலேயே விபரமாக விமானத்தினுள் நுழையக் காத்திருக்கையில் உறவினரைப் பார்த்ததாகச் சொல்லி இருக்கேன். துபாய் போய்விட்டதாக எழுதவில்லை. நீங்க எப்போவுமே மேலோட்டமாகப் படிக்கிறீர்கள். :))))) உணவுப் பிரச்னை பொதுவாக எல்லா விமான சேவையிலும் இருக்கிறது. ஏர் இந்தியா தவிர்த்து. ஏர் இந்தியா விமானங்கள் ஹூஸ்டனுக்கு நேரடிச் சேவை தருவதில்லை. நியூயார்க், நியூ ஜெர்சி, வாஷிங்டன் போன்ற ஊர்களுக்கு மட்டுமே!

      Delete
  11. வீல் சேர் நிறைய சமயம் வசதி. விமான நிலையத்தில் நீண்ட தூரம் நடக்க வேண்டியிருக்கும் குறிப்பாக தில்லி T3!

    பானும்மா தன் சோகத்தில் இருந்து விடுபட்டு வரவேண்டும் என்பது நம் எல்லோருடைய ஆசை. இறைவன் அவருக்கு மனோதைர்யம் தரட்டும்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், நீங்க சொல்லுவது சரி. ஆனால் உள்நாட்டு விமானச் சேவையில் வீல் சேர் கொடுப்பதில்லைனு நினைக்கிறேன். மும்பை விமான நிலையத்தில் இத்தகைய அனுபவங்கள் உண்டு. அதுவும் ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் இரண்டுமே சர்வதேச விமான நிலையங்களில் தான் நிற்கும், புறப்படும். மைல்கணக்காக நடக்க வேண்டி இருக்கும். பானுமதிக்காக நாங்களும் பிரார்த்தித்துக் கொண்டு இருக்கிறோம்

      Delete
  12. உங்கள் பயண அனுபவம் படித்தேன். பிள்ளைகள், பேரக்குழந்தைகளுக்காக கஷ்டங்களை தாங்கி கொள்ள வேண்டி இருக்கிறது. அவர்கள் இங்கு வந்தால் உடனே போக வேண்டும் விடுமுறை இல்லை. நாம் போனால் கூட கொஞ்ச நாள் குழந்தைகளுடன் இருக்கலாம், அதையே அவர்களும் விரும்புகிறார்கள். பயணம் செய்வது தான் கஷ்டமாய் இருக்கிறது.


    //அவர் மனம் தேறி மீண்டும் எழுதாவிட்டாலும் பதிவுகளுக்கு வந்து நம்மோடு பேசிக் கொண்டு இருக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.//
    நானும் அப்படியே விரும்புகிறேன்.

    நானும் உங்களுடன் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி! ஆமாம், அவர்கள் மொத்தமாக ஒரு மாத விடுமுறையில் கூட வருவதில்லை. அதான் பிரச்னையே. மருமகள் தங்கிச் செல்லலாம் எனில் குழந்தையைத் தனியாகச் சமாளிக்க முடியாது. பானுமதியை விரைவில் எதிர்பார்ப்போம்.

      Delete
  13. ட்ரம்ப்,மோடி உடனான சந்திப்புகள் ....என்னதீர்மானம் எடுத்தீர்கள் :))
    செயல்படுத்துவார்களா:)))

    திருமதி பானுமதி அவர்கள் மன உற்சாகத்துடன் மீண்டுவர வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, நீங்க தான் கவனிச்சிருக்கீங்க மாதேவி. முடிஞ்சதும் சொல்றேன். :)))))

      Delete
  14. //நான் கிளம்பும்போதே மோதி அங்கிளிடம் இருந்து தகவல் வந்தது. செப்டெம்பர் 22 ஆம் தேதி ஹூஸ்டனில் சந்திக்கலாம் என. ட்ரம்ப் அங்கிளும் வராராம்//

    இது அதிரா தளம் இல்லையே...? எனக்கு குழப்பமாக இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. இஃகி,இஃகி,இஃகி, கில்லர்ஜி! பொறுத்திருங்க!

      Delete
  15. கூகிளிலில் வேலைக்கு தான் மக்களுக்கு காதில் புகை வரணும் பயணம் இனிதே முடிய வாழ்த்துக்கள்

    விஸ்வநாதன்

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹாஹா! விஸ்வா! அதுவும் சரிதான்.

      Delete
  16. நானும் அமெரிக்கா போக இருந்தேன் நண்பன் ஒருவன் டிக்கட் முதல் எல்லா சௌகரியங்களும்செய்து தருவதாகச் சொன்னான் என்மனைவி விடொ செய்து விட்டாள் என்னால் அவ்வளவு நேரம்பயணம்செய்யமுடியாதாம் மனைவி சொல்லேமந்திரம் வீல் சேர் பற்றி அறிய இருந்த சந்தர்ப்பம்போச் ஜப்பானில் ஒசாகாவிலிருந்து டோக்யோ செல்லும்போது இருக்கையில் இருந்தே விமானம்டேக் ஆஃப் செய்வதையும்லாண்ட் ஆவதையும் கண்டிருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி ஐயா, பயண நேரம் மிக அதிகம். அதுவும் அட்லான்டிக் கடலைத் தாண்டுவதற்குள் போதும் போதும்னு ஆயிடும்.

      Delete
  17. பானுமதி ஒரு தைரியசாலி

    ReplyDelete
    Replies
    1. உண்மை. அந்த மனோபலம் அவர்களை இந்தத் துயரில் இருந்து மீட்டு வரவேண்டும்.

      Delete
  18. வணக்கம் சகோதரி

    துபாய் செல்லும் விமானத்தில் அனுபவ பதிவு நன்றாக எழுதியுள்ளீர்கள். எங்கு சென்றாலும், எதில் சென்றாலும் நம் வீட்டில் செய்து சாப்பிடும் உணவின் தன்மை வராது.. பிரயாண அலுப்போடு, பசி தொந்தரவுகளையும் தாங்கிக் கொண்டு. நம்மை வரவேற்க காத்திருக்கும் உறவுகளை நினைத்தபடி பயணம் செய்ய வேண்டும்..

    சகோதரி பானுமதி அவர்களை நம் நினைப்பிலிருந்து எப்படி விலக்க இயலும்.? நானும் நினைத்துக் கொண்டேதான் உள்ளேன். அவர்கள் மனம் தேறி வர காலம் துணை புரிய வேண்டும்.

    நானும் உருண்டு புரண்டு எழுந்து எல்லோரிடமும் சகஜமாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும், என் மன காயங்களில் இன்னமும் மாறாத வலி விண் விண்னென்று தினமும் தெறித்து கொண்டுதான் உள்ளது. நினைவுகள் அத்தனை சுலபத்தில் மறக்க கூடியவையா?

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, வீட்டுச் சாப்பாடு கையில் எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. ஆனாலும் நாங்க அதெல்லாம் கொண்டு போவதில்லை. பானுமதி விரைவில் பதிவுலகம் வரப் பிரார்த்திப்போம். எல்லோருடைய துயரங்களையும் தாங்கும் வல்லமையை இறைவன் அளிக்கப் பிரார்த்திப்போம்.

      Delete
  19. நோஓஓஓஓஒ ஈ ஒப்ஜக்ஸன் யுவர் ஆனர்ர்ர்ர்ர்ர்ர் மோடி அங்கிள் அதிராவுக்குத்தான் அங்கிள் ... கீசாக்காவுக்கு டம்பி சே சே தம்பியாக்கும்:)... அம்பேரிக்கா போனதும் எல்லாம் குழம்பிப்போச்சே:)... எதுக்கும் பொறுங்கீ நைட் வாரேன்ன்ன் இப்போ அவசர கொமெண்ட்...

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிரடி, மோதி அங்கிள் எனக்குத் தம்பி இல்லை. அண்ணன்! ஆனாலும் அங்கிள்னு தான் சொல்லுவேன். வாங்க, வாங்க, காத்திருக்கேன்.

      Delete
  20. நடைபாதையின் ஓர இருக்கை இடிதாங்கிகளுக்குத்தான் சரியாக இருக்கும்...

    குவைத்திற்கும் சென்னைக்கும், துபாய்க்கும் பல தடவை பறந்திருக்கிறேன்..

    நான் கேட்காமலே ஜன்னல் ஓர இருக்கை கிடைத்து விடும்...

    சமயத்தில் நானே கேட்டு வங்கி விடுவேன்...

    ஓமன் ஏர்வேய்ஸ், கல்ஃப் ஏர்வேய்ஸ், எதிகாட் - எதிலுமே எனக்கு சாப்பாட்டு பிரச்னை இருந்ததில்லை.. முன்பதிவு செய்யும் போதே சைவ உணவு என்று குறித்து விட்டால் தேடி வந்து கொடுத்து விடுகின்றார்கள்...

    சகோதரி பானுமதி அவர்களது மீள் வருகைக்கும் அவர்களது நலத்திற்கும்
    தங்களுடன் நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, ஓர இருக்கை கொஞ்சம் இல்லை நிறையவே கஷ்டம் தான். உணவுப் பிரச்னை என்றால் நமக்கு அந்த ருசியோ அல்லது உணவு வகையோ பிடிக்காமல் போவது! ஆனால் இம்முறை ஜெயின் உணவு சொன்னதால் வயிற்றுக்குக் குந்தகம் நேரவில்லை. சீக்கிரமாயும் கொடுத்து விடுகிறார்கள். ஜன்னல் ஓர இருக்கைக்கும் போட்டி இருக்குமே! இம்முறை நாங்க முன்னால் கால் நீட்டி அமரும்படி தான் கேட்டிருந்தோம். அது விலை போய்விட்டது என்றார்கள்.

      Delete
    2. //இம்முறை நாங்க முன்னால் கால் நீட்டி அமரும்படி தான் கேட்டிருந்தோம். அது விலை போய்விட்டது என்றார்கள்.//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதெல்ல்லாம் ஓசியில் கிடைக்காதாக்கும்:)) ஓன்லைனிலேயே புக் பண்ணினால்தான் உண்டு.. ஆனா அதுக்கு எக்ஸ்ராவா அநியாயக் காசு... இங்கு நாங்கள் நான்கு சீற் புக் பண்ணினால் எக்ஸ்ரா 100 பவுண்டுகள் குடுக்கோணும்... வேஸ்ட்..

      Delete
    3. ///சொல்ல மறந்துட்டேனே. நான் கிளம்பும்போதே மோதி அங்கிளிடம் இருந்து தகவல் வந்தது. செப்டெம்பர் 22 ஆம் தேதி ஹூஸ்டனில் சந்திக்கலாம் என. ட்ரம்ப் அங்கிளும் வராராம்.//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதை இங்கின ஒருவரும் கவனிக்கவில்லை:)) படிச்சதும் அதிர்ச்சியில் ஃபிறீஷாகிட்டினம் போல:))

      Delete
    4. பானுமதி அக்கா.. வரும் திங்கட்கிழமையில் இருந்து வலையுலகில் கால் வைக்கவேண்டும் என மீ நேர்த்தி வச்சிட்டேன்ன்... வருவா...

      Delete
    5. ஆன்லைனில் தான் பையரும் முயற்சி செய்தார் சரித்திரப் புகழ் அரசி அதிரடி அதிரா! ஆனால் அவை எல்லாம் முன்பே விற்றுத் தீர்ந்து விட்டன.

      Delete
    6. //இதை இங்கின ஒருவரும் கவனிக்கவில்லை:)) படிச்சதும் அதிர்ச்சியில் ஃபிறீஷாகிட்டினம் போல:))// haahaahaahaahaahaa

      Delete
  21. அம்மாவுக்கும் வீல் செயார்தான் புக் பண்ணுவோம்.. நீங்கள் சொல்வதுபோல, செக்கியூரிட்டி கிள்யரன்ஸ் எல்லாம் ஈசியாக இருக்கும் அது. ஆனா இறங்கும்போதுதான், நீண்ட நேரம் பிளேனில பொறுமையாக இருக்க வேண்டி வரும், ஓரிரு சமயம், இறங்கி வரும்போது, எம்மிடம் வரும் ஆசை அவசரத்தில் பொறுமை இழந்து தனியே நடந்தும் வந்திருக்கிறா:).

    ReplyDelete
    Replies
    1. இறங்கும்போதும் ஏரோ பிரிட்ஜ் நுழைவாயில் அருகே அதிகாரிகள் கையில் பட்டியலுடன் காத்திருக்கின்றனரே அதிரடி. நாம் கேட்கும் முன்னரே அவர்கள் நம்மைக் கேட்டு விடுகின்றனர். ஹூஸ்டனில் இறங்கும்போது பிரியாவிடை கொடுத்த ஏர் ஹோஸ்டஸைக் கேட்டப்போ வாயிலிலேயே நிற்பதைச் சுட்டிக்காட்டினார். வெகு தூரம் போக வேண்டி எல்லாம் இல்லை. இறங்கினதும் நின்றுகொண்டிருந்தனர். வரிசையாக வீல் சேர்களோடு. என்னைப் பார்த்ததுமே அந்த அதிகாரி கையில் உள்ள பையைக் கிட்டத்தட்டப் பிடுங்கிக் கொண்டு என்னை அதில் உட்கார்த்தி வைத்தார். பையை என் இருகால்களுக்கு இடையில் அவரே வைத்துவிட்டுக் கிளம்பவும் சொன்னார். நான் தான் ரங்க்ஸ் வரணும், அப்புறமாத் தான் கிளம்பலாம் என்றேன்.

      Delete
  22. //எங்க இருவருக்குமே ஓரத்து இருக்கையைக் கொடுத்திருந்தாங்க//
    விண்டோ சீற்றைத்தானே சொல்றீங்க? இதுக்குத்தானே எல்லோரும் அடிபடுவார்கள், இதுதான் கிடைக்காது.. .. நீங்க கர்ர்ர் சொல்றீங்க.. கர்ர்ர்ர்ர்ர்:)).

    ஆனா கீசாக்கா செக்கின் பண்ணும்போது நீங்க கேட்கலாம், அயல் சீட்தான் வேண்டும் என.. ஆசையுடன் தருவார்கள் கேளுங்கோ இனிமேல்.

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், துரை சரியாகப் புரிந்து கொண்டிருக்கார் அதிரடி, உங்களுக்குத் தான் புரியவே இல்லை. நாங்க எதிர்பார்த்தது இரண்டே நபர் அமரும் இருக்கையை. இப்போதெல்லாம் அப்படி வருவதில்லையாம். பேசாமல் இருந்திருந்தால் ஒரு ஜன்னல் இருக்கையானும் கிடைத்திருக்கும். நுணலும் தன் வாயால் கெடும் என்பார்களே அது போல் aisle இருக்கையைக் கேட்டோம்.

      Delete
  23. இனிய மாலை வணக்கம் கீதா.
    எமிரெட்சில் சாப்பாடு ஓரளவு நன்றாகவே இருக்கும்.
    எழுப்பி எழுப்பிக் கொடுப்பார்கள். அதுதான் தொந்தரவு.
    சென்னை துபாயைவிட துபாய் /ஸ்விஸ் இன்னும் கவனிப்பு அதிகம்.

    எஸ்கலேட்டரில் விழுந்ததிலிருந்து வீல் சேர் தான்.
    கூடவே குடும்பமும் வரலாம். செக்யூரிடி ,இம்மிக்ரேஷன் எல்லாம் சுலபமாக
    நடந்துவிடும்.

    கால்வலியும் மிச்சம்.துபாயிலிருந்து ஹியூஸ்டன் நிறைய நேரம் எடுத்திருக்குமே.
    கால் வீங்கத்தான் செய்யும்.
    பேத்தியைப் பார்த்ததும் பாதி வலி மறந்திருக்கும்.

    உங்களது அமெரிக்க பயணம் Stay எல்லாம் சுகமாக இருக்கப் பிரார்த்தனைகள்.
    பானுமதி சீக்கிரம் எழுதப் போவது மகிழ்ச்சி.
    எழுதினால் பாரம் குறையும்.

    ReplyDelete
    Replies
    1. //துபாயிலிருந்து ஹியூஸ்டன் நிறைய நேரம் எடுத்திருக்குமே.
      கால் வீங்கத்தான் செய்யும்.
      பேத்தியைப் பார்த்ததும் பாதி வலி மறந்திருக்கும்.//
      வாங்க வல்லி, கால்வலிக்கெனத் தனியாய்க் கொடுத்திருந்த மருந்தைக் கடந்த இரு நாட்களாகச் சாப்பிடுவதால் கொஞ்சம் குறைந்து வருகிறது. அந்த மருந்தை அதிகம் பயன்படுத்தக் கூடாது என மருத்துவர் உத்திரவு. இருமல் தான் இன்னமும் கொஞ்சம் தொந்திரவு தருகிறது.

      Delete
    2. நான் மறந்து கூட எஸ்கலேட்டரில் ஏற மாட்டேன். முதல்முறை யு.எஸ். வந்தப்போ மாலுக்கு அழைத்துச் சென்ற பையர் என்னோட பயத்தைப் போக்குவதற்கென எஸ்கலேட்டர் மட்டும் இருக்கும் தளத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார். நான் பயத்தில் அலறிய அலறலில் அவரே பயந்துட்டார். அதன் பின்னர் எஸ்கலேட்டர் பக்கமே போவது இல்லை. சென்னை - தாம்பரம் ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டரில் விபத்துகள் தொடர்கதை!

      Delete
  24. >>> துரை சரியாகப் புரிந்து கொண்டிருக்கார் அதிரடி, உங்களுக்குத் தான் புரியவே இல்லை..<<<

    ஆகா… ஆகா..
    நன்றி..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் துரை, நான் இத்தனைக்கும் aisle என்று குறிப்பிட்டிருக்கேன். அதிரடி கவனிக்கவே இல்லை. :)))))

      Delete
  25. சப்பாத்தி = சப் + பாத்தி. அதாவது 'சப்' என்றால் சப்பி சாப்பிடுதல் 'பாத்தி' என்றால் அணை கட்டுதல். அதாவது காய்ந்து போனால் கவலை கொள்ளாமல் அதன்மேல் பாத்தி அமைத்து நிறைய சால்னா விட்டு ஈரம் ஏற்படுத்தி அதன்பின் சாப்பிடும் உணவு என்று பொருள். இது தெரியாமல் பார்த்த உடனே அதை நிராகரித்து விட்டீர்களே ... இது நியாயமா?...

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜட்ஜ்மென்ட் சிவா, இந்த விஷயத்தில் உங்க ஜட்ஜ்மென்டை ஏற்க முடியலை. ஏனெனில் சப்பாத்திக்கு நீங்க சொல்லும் பொருள் பொருந்தாது. :)))) அதோடு சால்னா என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கேனே தவிரப் பார்த்ததோ சாப்பிட்டதோ இல்லை. ஜெயின் உணவில் சால்னாவெல்லாம் தர மாட்டாங்க! :))))) வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  26. என்ன பானுமதி...பானுமதின்னு..... என்ன ஆச்சு? நான் எதையோ வாசிக்க மிஸ் பண்ணிட்டேன் போல இருக்கே..... ஙே.....

    ReplyDelete