ட்ரம்ப் வந்து விட்டார். இந்திய, அமெரிக்கக் கொடிகளுடன் இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன.
எல்லோருமே எழுந்து நிற்க வேண்டி இருந்ததில் படம் இவ்வளவு தான் எடுக்க முடிந்தது.
இருவரையும் ஒரே மேடையில் பார்த்து ஆர்ப்பரிக்கும் மக்கள் கூட்டம்
ட்ரம்பும் மோதியும். ட்ரம்ப் பேசுகையில் மோதி பக்கத்தில் நின்று கவனிக்கிறார்.
ட்ரம்ப் வரக் கொஞ்சம் தாமதம் ஆனது. பின்னர் அவர் வந்ததும் மோதியும் அவரும் சந்தித்துக் கைகுலுக்கிக் கொண்டார்கள். மோதி முதலில் பேசப் பின்னர் ட்ரம்ப் பேசினார். பின்னர் மோதி மேடையை விட்டுக் கீழே இறங்கியதும் ட்ரம்பையும் அழைத்துக் கொண்டு அந்தப் பெரிய மைதானத்தைச் சுற்றி வந்து மக்களைப் பார்த்துக் கைகளை ஆட்டித் தங்கள் சந்தோஷத்தைத் தெரிவித்துக் கொண்டார். அதன் பின்னர் அவர்கள் வெளியே கிளம்பும்வரையிலும் யாரையும் வெளியேற விடவில்லை. ஆனால் காலரியில் இருப்பவர்கள் அப்படியே வெளியேற ஆரம்பித்தனர். சுமார் 20 நிமிடக் காத்திருப்புக்குப் பின்னர் நாங்கள் வெளியே வந்தோம். நடுவில் அங்கே இருக்கையிலேயே மருமகளுக்குத் தொலைபேசியில் சாதம் மட்டும் வைக்கச் சொல்லிச் சொல்லி இருந்தோம். அது வரையிலும் காலையில் சாப்பிட்ட அரைகுறைச் சோளப்பொரி தான் உணவு.
மத்தியானம் 2 மணி வெயிலில் நம்மவரால் நடக்க முடியலை. கார்ப் பார்க்கிங்கினுள் வண்டியை நிறுத்தி இருந்தாலும் நிறுத்தி இருந்த இடம் கொஞ்சம் தள்ளி இருந்ததால் நடக்கத் தான் வேண்டி இருந்தது. சுமார் ஒரு ஃபர்லாங்காவது நடந்திருப்போம். வண்டிக்குள் வந்ததும் கையில் இருந்த வாழைப்பழத்தை ரங்க்ஸிடம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னோம். வண்டியை எடுத்தாலும் வரிசையில் காத்திருக்க வேண்டி வந்தது. அந்தப் பக்கம் உள்ள வாயில்கதவுகளைத் திறக்கவில்லை. ட்ரம்பும் மோதியும் அவர்கள் தங்குமிடம் போய்ச் சேர்ந்தாச்சு என்பதை உறுதிப் படுத்திக் கொண்ட பின்னரே திறந்தார்கள். பின்னர் அங்கிருந்து சாலைக்கு வந்ததும் வீட்டுக்கு ஓட்டம் பிடித்தது வண்டி. மூன்று மணி, மூன்றேகால் மணிக்கு வீட்டுக்கு வந்து சேர்ந்து சூடாகச் சாதத்தில் மோரை விட்டுக்கொண்டு எலுமிச்சை ஊறுகாயுடன் சாப்பிட்டோம். சொர்க்கம் கண்களில்!
ReplyDeleteவீட்டை விட்டு வெளியே போய்விட்டு வீட்டிற்கு வந்தது ஒரு வாய் நம்ம வீட்டு உணவை உண்டால்தான் மனதுக்கும் திருப்பதி வயிறும் நிறைஞ்ச மாதரி இருக்கும்
ஆமாம், அதுவும் காலையில் இருந்து பட்டினியாக இருந்துட்டு! உண்மையில் அமிர்தம் என்றால் அதான்.
Deleteஎப்படியோ பட்டினியாக இருந்தாலும் மோடியை பார்ப்பதில்தான் எத்தனை மகிழ்ச்சி.
ReplyDeleteஇருப்பினும் மோடியைவிட உயர்வானது எலுமிச்சை ஊறுகாயும், மோர்ச் சாதமும்.
உண்மை கில்லர்ஜி, ஆனால் அப்போது மஹாலய நாட்களாக இல்லை எனில் நாங்களும் பையரோடு சேர்ந்து சமோசா சாப்பிட்டிருந்திருக்கலாம். மஹாலயம் என்பதால் எதுவும் சாப்பிடவில்லை. உண்மையில் மோதியை விட அந்த மோர்சாதம் தான் உயர்வு.
Deleteஎப்படியோ மோதியை பார்த்து விட்டதை பதிவு போட்டு விட்டீர்கள்.
ReplyDeleteநாங்களும் பார்த்து ரசித்து விட்டோம்.
தயிர் சாதம் சாப்பிட்டவுடன் சொர்க்கம் கண்களில் ! அருமை.
உடனே மேலும் சொர்க்கத்தை அனுபவிக்க படுத்து ஒய்வு எடுத்தீர்களா?
ஆமாம், படுத்து ஓய்வு எடுத்துக்கொண்டோம். :)))) அப்போது மணி நான்கு. இரவுக்கான சமையல் ஆறு மணிக்குத் தானே ஆரம்பிக்கும். அது வரை வேலை இல்லை தானே!
Deleteகோவில் திருவிழாவுக்கு சென்று வந்த உணர்வு. அல்லது ஒரு திரைப்படத்துக்கு ! கூட்டம் களையும் வரை காத்திருந்து வண்டி பிடித்து வீடு செல்லும் வரை பொறுமை மிக வேண்டும்!
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், மதுரைச் சித்திரைத்திருவிழாவுக்கெல்லாம் நாங்க தல்லாகுளம் பெருமாள் கோயில் பக்கமிருந்து நடந்தே வந்துடுவோம். இங்கே ஸ்ரீரங்கத்தில் வண்டியை எடுத்துப் போய் ஓர் இடத்தில் வைத்துவிட்டுப் போவோம். ஆனால் திரைப்படத்துக்கெல்லாம் போய்க் கூட்டத்தில் மாட்டிய அனுபவம் இல்லை. அநேகமாக அந்தத் திரைப்படத்தை அது தியேட்டரை விட்டுப்போகப் போகிறது என்னும்போது தான் பார்க்கவே போவோம்.
Deleteஉங்கள் மருமகள்தான் புத்திசாலி. நைஸாக எஸ்கேப் ஆகி ரெஸ்ட் எடுத்திருக்கிறார்.
ReplyDeleteஸ்ரீராம் நீங்க என்ன சொல்லவறீங்க மருமகள் புத்திசாலி சரி அப்ப மாமியார்???
Deleteநாராயணா... நாராயணா... ஏன் இப்படி?!!
Deleteஹாஹாஹா ஸ்ரீராம், எப்படியானாலும் பையரும் சரி, அவளும் சரி இந்தக் கூட்டத்தில் குழந்தையை எடுத்துக்கொண்டு வருவதாக இல்லை. :))))) குழந்தை கசங்கிப் போயிடும்.
Deleteஹாஹாஹா, மதுரைத்தமிழரே, நாங்க இருவருமே புத்திசாலிகள் தான்! :)))))
Deleteஅப்பாடா கீசாக்கா மோடி அங்கிளையும் ட்றம்ப் அங்கிளையும் ஒரே மேடையில் பார்த்திட்டா.....
ReplyDeleteபடத்தில் எல்லோரும் எழும்பி நின்று படமெடுக்கும்போது, ஒரு பெண் மட்டும் ஏதோ கோயிலில் சமி தரிசனம் போல கைகளை விரித்துக்கொண்டு நிற்கிறா ஹா ஹா ஹா.
ஹாஹாஹா, அதிரடி, பக்திமா, கவரிமா, அவங்க மோதி, மோதி எனச் சொல்லிக் கொண்டு கை தட்டினாங்க!
Deleteஎன்னாது சோளப்பொரி மட்டும்தானோ கர்ர்ர்ர்ர்.. இப்படியான இடங்களுக்கு நான் என் காண்ட் பாக்கை ஒரு கன்ரீனாக்கிடுவேன், அதனுள் பிஸ்கட் நட்ஸ் சொக்கலேட் யூஸ் இப்படி முடிஞ்சவரை எடுத்துக் கொண்டு போவேன்ன்.. நீங்களும் இனி இப்படிப் பழகுங்கோ.. பிள்ளைகள் குழந்தைகளாக இருந்தபோது பழகிய பழக்கம் இப்பவும் தொடருது எனக்கு. சின்னவர் இப்பவும் பசி எனில் ஓடிவந்து என் காண்ட் பாக்கை கிண்டுவார்ர்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
ReplyDeleteஅதிரடி, முதல்லேயே சொல்லி இருந்தேனே, அவங்க உணவுப் பொருள் ஏதும் கொண்டுவரக்கூடாதுனு சொல்லி இருந்தாங்கனு! இல்லைனா சமைச்சே எடுத்துப் போயிருக்க மாட்டேனா? :)))))) அப்படியும் பிஸ்கட்டும் , வாழைப்பழங்களும், பையருக்காக ந்யூட்ரிஷியன் பார்களும் எடுத்துச் சென்றோம். அவற்றை அனுமதிச்சிருந்தாங்க. ஆனால் நாங்க சாப்பிடும் மனதில் இல்லை. பசியும் தெரியலை.
Deleteஓ மருமகள் வரவில்லையோ.. அப்போ எதுக்கு சாதம் வைக்கச் சொன்னீஇங்க.. நல்ல வெஜ் பிர்ர்ர்ர்ர்ர்ராணி செய்யச் சொல்லியிருக்கலாமெல்லோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அதிரடி, இத்தனை பக்திமானாக இருந்து என்ன பிரயோசனம்! அப்போ விரத நாட்கள்! பித்ரு காரியங்கள் செய்ய வேண்டிய நாட்கள். அப்போ இதெல்லாம் சாப்பிட முடியாது! :)))))
Deleteஆமாம் கீதாக்கா என்னதான் வெளியில் சென்றாலும் வீட்டிற்கு வந்து வீட்டுச் சாப்பாடு ஒரு வாய் சாப்பிட்டால் கூட அது அமிர்தம்...
ReplyDeleteஒரு வழியா ரெண்டுபேரும் வந்து போயிட்டாங்களா...
கடைசி படத்துல மோதி ஏதோ தூக்கிக் காட்டுவது போல இருக்கிறதே என்னது?
கீதா
வாங்க தி/கீதா, எதையும் தூக்கிக் காட்டவில்லை. பேசுகையில் அவர் கைகளைத் தூக்கும்போது படம் வந்திருக்கு!
Deleteமோதி, ட்ரம்ப் பேச்சுகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதாய் இருந்தனவா?..
ReplyDeleteஇல்லை, இவர் பாட்டுக்க இவர் - அவர் பாட்டுக்க அவர் - என்று விலகிப் போய் இருந்ததா?..
சினிமாவில் வரும் பாட்டுகளுக்கும் அதற்காக நடிப்பவர்களின் வாயசைப்புக்கும் சம்பந்தமில்லது போலத்தான் இதுவும்
Deleteவாங்க ஜீவி சார், அப்போது அடிக்கடி நடந்த standing ovation லும், கைதட்டல்களின் சப்தத்திலும் சரியாய்க் கவனிக்க முடியலை என்பதே உணமை!
Deleteஇஃகி,இஃகி,இஃகி, மதுரைத் தமிழரே, உங்க ஜிவாஜியும் இப்படித்தான் நடிச்சாரா? இங்கே உள்ள ஜிவாஜி ரசிகர்கள் என்ன சொல்லப் போறாங்க? :)))))))
Deleteஅப்பாடா
ReplyDeleteஏன்?
Deleteஇத்தனை சிரமப்பட்டு,மோதியைப் பார்த்தது
ReplyDeleteசந்தோஷம் தான். மாமாவுக்கு பசியில் தலையே சுற்றி இருக்கும்.
இந்த ஊரில் எல்லா இடங்களும் எவ்வளவு தூரம் போக வேண்டி இருக்கு.
படத்தில் குழந்தை தூங்குவது மிக அருமை.
வாங்க வல்லி, இது ஒண்ணும் அவ்வளவு தூரமெல்லாம் இல்லை. நிதானமாகப் போனால் 40 நிமிடங்கள், வேகமாகச் சென்றால் அரை மணி. சீக்கிரம் தான் போனோம். சீக்கிரமே வந்தோம். கதவு திறக்காத காரணத்தால் சுமார் நூறு கார்களுக்கும் மேல் காத்திருக்க நேர்ந்தது. அவர்களில் நாங்களும் அடங்குவோம்.
Deleteசூடான மோர் சாதம் ! அதற்கு முன்னரே தயிர் சாதம் செய்யச் சொல்லியிருக்கலாம். நீங்கள் கருவேப்பிலைப் பொடி பருப்பு பொடி கொண்டு போயிருந்தீர்களே. அது என்னவாயிற்று. தொட்டுக்க lays கிடைக்கவில்லையா? Jayakumar
ReplyDeleteவாங்க ஜேகே அண்ணா, கருகப்பிலைப் பொடி முழுசும் கலக்கலை. வேலை இருக்கு இன்னமும். பருப்புப் பொடியையும், அதையும் பெண்ணிடம் கொடுத்துட்டேன். இங்கே போணி ஆகாது. சீக்கிரம் போய்விடலாம் என நினைத்து முதலில் சொல்லவில்லை. மணி பனிரண்டு ஆனதுமே வீட்டுக்குத் தகவல் கொடுத்துட்டோம்.
Deletelays chips, kurukure இதெல்லாம் வாங்குவதில்லை.
Deleteகார்லயாவது பழம் வச்சிருந்தீங்களா? எப்படி 2 மணி வரைல சோளப்பொரியை வைத்து ஓட்டமுடியும்?
ReplyDeleteநெல்லைத்தமிழரே, பழம் தான் உள்ளே எடுத்துச் சென்றோமே! வேறே எதுவும் சாப்பிடவில்லை. 2 மணி வரை பட்டினி கிடப்பது ஸ்ராத்த நாட்களில் பழகி இருக்கோமே! அதனால் ஒண்ணும் தெரியலை! ஆனால் சாப்பிடலை. முதலில் போனதும் வாங்கிய சமோசாத் தட்டை வெளியே செல்ல முடிந்ததால் குப்பைத்தொட்டியில் போட முடிந்தது. பின்னர் ஏதேனும் சாப்பிட்டால் அதைப் போட முடியாது. பலரும் தங்களுக்கு முன்னிருக்கைக்கு அடியில் வைத்தனர். எங்களுக்கு அது பிடிக்கலை.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபடங்களும் பிரதமர்கள் பேசி மகிழ்வித்த படங்களும் நன்றாக வந்திருக்கின்றன. காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாமல்( திட உணவுகள்) இருப்பது கஷ்டம்தான். ஒரு இட்லி, தோசை போன்றவை கூட கொஞ்சம் பசியை அடக்கி வைத்திருக்கும். வெறும் சோள கான்ஃபிளக்ஸ், சோளப்பொரி போன்றவை பசியை கிளப்பி விட்டு "பழமொழிப்படி" வேடிக்கை பார்க்கும். நீங்கள் காலையிலேயே அவசரத்துக்கு ஒரு உப்புமா கூட கிளறி சாப்பிட்டு விட்டு போயிருக்கலாம். மூன்று வரை பசியோடிருந்து சாப்பிடும் போது சாப்பிட்ட அந்த மோர் சாதம் நிச்சயமாக சொர்க்கபுரிதான். ஆக அன்றைய தினம் தவமாய் தவமிருந்து பிரதமர்களை சந்தித்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, உப்புமாவெல்லாம் கிளறிச் சாப்பிட நேரம் இல்லை. அங்கே உள்ளே செல்ல, கார் பார்க்கிங் இதுக்கெல்லாம் கூட்டத்தில் மாட்டிக்கொண்டு அதிக தூரம் நடக்காமல் இருக்கணும்னு தான் காலையிலேயே போனோம். நம் பிரதமரையும், அமெரிக்க அதிபரையும் ஒரே மேடையில் சந்தித்தாயிற்று. அவ்வளவு தான்! :)))))
Deleteட்ரம்பும் மோடியும் இப்போதான் வந்திருக்கிறார். ஆனா பாருங்க.. அவர் சென்னையில் நாளைக்கு இருக்கிறார்.
ReplyDeleteநிறைய படங்கள் தந்திருந்தீங்க. அதுல ஒரு குறை என்னன்னா, 50 படங்கள்ல, 2ல் மோதியும், 1ல் ட்ரம்பும், 46ல் ஜடை பெண்ணும், 1ல் அவளது கணவர்/குழந்தை படங்கள் இருந்தன. உடனே எனக்குத்தான் கண் தெரியலைனு சொல்லிடாதீங்க
ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன், கீசாக்காவால.. ஒரே இடத்தில இருந்துகொண்டே 90 படங்கள் எடுக்க முடியும் தெரியுமோ:))
Deleteநெல்லைத் தமிழரே, இங்கே வந்திருந்தால் உங்களால் இது கூட எடுத்திருக்க முடியுமா சந்தேகம். எல்லாம் சொல்லலாம். செய்யும்போது தான் அதன் கடினம் புரியும்.
Deleteஅதிரடி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நல்ல ஐடியா... சாதம் ரெடிபண்ணச் சொன்னது. போன உடனே டக்குனு சாப்பிட்டுட முடியும்.
ReplyDeleteஅங்கயும் அவ்வளவு வெயில் இருந்ததா?
இங்கே மட்டும் வெயில் இருக்காதா? இதுவும் கடற்கரை நகரம் தானே! மழை தான் திடீர் திடீர்னு பெய்யும். சொல்லாமல் கொள்ளாமல் புயல் வரும்.
Deleteசொர்க்கம் நாக்கினில் அல்லவா இருந்திருக்கவேண்டும் !
ReplyDelete