இந்த வருஷம் பிள்ளையார் சதுர்த்தி அன்று செய்த கொழுக்கட்டை, வடை, அதிரசம், பாயசம், அன்னம், பருப்புப் படம் எடுக்க மறந்து போச்சு! அப்புறமா நினைவு வந்தப்போ பூஜை முடிந்து சாப்பிட்டு முடிச்சுட்டோம். உம்மாச்சி பக்கத்திலே வெற்றிலை, பாக்கு, பழம் வைத்திருந்த தட்டு மட்டும் இருந்தது. அதை அப்படியே ஒரு படம் எடுத்தேன். வெல்லை, பாக்கு, பழம், விளாம்பழம், தேங்காய், கரும்பு, கொய்யாப்பழம், பேரிக்காய், ஆப்பிள் பழம் எல்லாமும் இருக்கு. சென்னையில் பிரப்பம்பழம் கூடக் கொடுப்பாங்க! இங்கே அதெல்லாம் இல்லை.
பிள்ளையார் மண் பிள்ளையார் இப்போல்லாம் வாங்குவதில்லை. வீட்டுப் பிள்ளையார் தேடி வந்தப்புறமா அவரை வைத்துத் தான் பூஜை நடந்து வருகிறது. அது ஆச்சு ஒரு பத்து வருஷம்! ராமருக்கு இடப்பக்கம் உட்கார்ந்திருப்பார் அவர் தான்! இங்கே மாலைகள், பூக்கள் கும்பலில் மறைந்து காணப்படுகிறார். ஆனால் எனக்குக் களிமண் பிள்ளையார் வாங்குவதில்லை என்பதில் வருத்தம் உண்டு.
நம்ம நெல்லைத் தமிழருக்கு ராமர் பட்டாபிஷேஹப் படம் போடுவதில்லைனு ரொம்பக் குறை! அதான் இன்னிக்கு நினைப்பு வந்தது. போட்டுட்டேன். நெ.த. இப்போத் திருப்தியா?
நடுவில் இருப்பது பிரப்பம்பழம். கறுப்பாகச் சின்னதாக நாவல் பழத்தை விடச் சிறியதாக இருக்கும். ஆனால் அவ்வளவு நீர்ச்சத்து இருக்காது.
இராமர் படம் பார்த்ததும் ஶ்ரீரங்கம் வந்தாச்சோன்னு சந்தேகம் வந்தது.
ReplyDeleteவிளாம்பழம் நான் விட்டுவிட்டேன். பிரப்பம்பழம்னா என்ன?
ஏன் விளாம்பழத்தை விட்டீங்க நெ.தமிழன்.. வியக்கம் பிளீஸ்ஸ்.. அது உடம்புக்கு நல்லதாமெல்லோ.. எனக்குச் சரியான விருப்பம், ஆனா இங்கு தமிழ்க் கடைக்கு எப்பவோதான் வரும்.
Deleteகனடாவில் எப்பவும் கிடைக்கும், போய் நின்றபோது ஆசைக்கு சாபிட்டு விட்டேனே..
பிரம்பு மரத்திலிருந்துவரும் பழம்தானே பிரப்பம்பழம் கீசாக்கா? கேள்விப்பட்டதுண்டு பெயர் ஆனா பார்த்ததில்லை.
Deleteவிளாம்பழத்தைச் சின்ன வயசில் சாயந்திரம் உடைத்து வெல்லம் சேர்த்து சாப்பிடக் கொடுப்பார்கள். அல்லது வத்தக்குழம்புக்குப் பச்சடி (வெல்லம் சேர்த்துத் தான்) பண்ணுவார்கள். உடலுக்கு நல்லது பிரப்பம்பழம் அவ்வளவு சுவையாக இருக்கது/அல்லது எனக்குப் பிடிக்கலை.
Deleteஆமாம் அதிரடி, பிரம்பு மரத்தில் இருந்து தான் வருதுனு நினைக்கிறேன். எதுக்கும் முழுக்கத்தெரிஞ்சுண்டு வந்து உறுதி செய்கிறேன்.
Delete@அதிரா.... கயா யாத்திரை போய் அப்பா அல்லது பெற்றோருக்கு ச்ராத்தம் பண்ணினா, காய், பழம், இலை உபயோகத்தை (ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒன்று.. ஆனால் நாங்கள் வருட ச்ராத்தத்தில் பாவிப்பது.) விடணும். பழத்தில் விளாம்பழத்தை விட்டுவிட்டேன். எனக்கு ரொம்பப் பிடித்த பழம்.. வெல்லத்துடன் சேர்த்துச் சாப்பிட யம்மி..உடலுக்கும் ரொம்ப நல்லது.. பாருங்க... பெங்களூர்ல ஒரு விளாம்பழம் 50 ரூபாய்னு வாங்கியிருக்கேன். விட்ட பிறகு இரு நாட்களில் யாத்திரையின் ஒரு ஊரில் ஏகப்பட்ட விளாம்பழம் சல்லிசான விலையில் .... ஹா ஹா.
Deleteஅநேகமாக நாவல் பழத்தைத் தான் விடச் சொல்லுவாங்க! நீங்க என்னமோ அதிசயமா விளாம்பழத்தை விட்டிருக்கீங்க!
Deleteஓ அங்கு போனதால் விட்டீங்களோ.. கடவுளே நான் அங்கு போய் வந்தால் எதை விடுவேனோ தெரியல்லியே.
Deleteஇலங்கையில் விளாம்பழஜாம் பேமஸ், அதேபோல இப்போ விளாம்பழ ஸ்மூத்தியும் கிடைக்கிறது.. பச்சைக்காய் எனில் உப்பில் தொட்டுச் சாப்பிடப் பிடிக்கும் எனக்கு ஆனா அது சிலசமயம் மூச்சடைப்பதுபோல வரும் தொண்டையில் சிக்கி:))
பொதுவா எல்லோரும் (எனக்குத் தெரிந்த) விடணும் என்பதற்காக இலந்தைப் பழம் (அதை பொதுவா நாங்க சாப்பிட மாட்டோம்), கொத்தவரை/அவரை போன்றவைகளை விடுவாங்க. நான் பிடித்ததுதான் விடணும்னு பிடிவாதமா இருந்து, நானும் மனைவியும் ஒரு மனதாக ஒத்துக்கொண்டு இவற்றை விட்டோம். (என் பெரியம்மா, கயா போகும் டிரிப்பில், வழியில் பெரிய பெரிய கொய்யாப்பழங்களைப் பார்த்து பெரியப்பாவிடம் வாங்கித்தரச் சொன்னாராம். இப்போ சாப்பிட்டு உடம்புக்கு ஒத்துக்கொள்ளலைனா யாத்திரைல பிரச்சனை வந்துடும்னு, திரும்பி வரும்போது வாங்கித்தரேன் என்றாராம். அப்புறம் கயால பழம் விடணும்னதும் கொய்யாதான் அவர் மனசுல இருந்து கொய்யாப்பழம்னு சொல்லிட்டாராம். என் பெரியம்மா அந்தக் காலத்துல குறைப்பட்டுக்குவாங்க. ஹா ஹா. இதுபோல இன்னொரு ரிலேடிவ், புடலங்காய் என்று சொல்லிட்டாராம். அப்புறம் அவர் மனைவி, பழத்துக்கு டக்குனு இலந்தைனு சொல்லிக்கொடுத்தாராம். இல்லைனா, முக்கியப் பழத்தை விட்டுடுவாரேன்னு ஹா ஹா). நானும் அவரை விடலாம்னு சொன்னேன். அப்புறம் மனைவி சொன்ன சர்க்கரைவள்ளிக் கிழங்கை ஒத்துக்கொண்டேன்)
Deleteநாங்க எங்க இஷ்டத்துக்கு எல்லாம் விடலை. பண்ணி வைத்த புரோகிதர் ஸ்ராத்தக் காய்கள், முக்கனிகள், மற்றப்பழ வகைகள், இலை வகைகள்னு சொல்லி, வாழைக்காய், வாழைப்பழம், வாழை இலை இவற்றைத் தவிர்த்து மற்றவற்றை விடச் சொன்னார். பின்னர் அவரே கர்நாடகாவில் கோவைக்காய் ஸ்ராத்தத்தில் பயன்படுத்துகிறோம் எனச் சொல்லி அதை விடச் சொன்னார். பழம் நாவல் பழம்(கண்ணனுக்குப் பிடித்தது) இலை ஆலம் இலை. அவரே தேர்ந்தெடுத்துக் கொடுத்தார். என்னை நான் மட்டும் தனியாகத் தேர்வு செய்யக் கூடாது எனவும் கணவர் எதை விடறாரோ அதைத் தான் மனைவி விடணும்னும் சொன்னார். என் மாமியார் அவருக்குப் பிடித்த கொத்தவரை மற்ற ஏதோ பழம், இலைனு விட்டார். சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஸ்ராத்தக் காய்களில் உண்டு. ஆகவே அதை விடலாம்.
Deleteஇந்தியப் பண்டிகைகளைக் கொண்டாடும்போது நமக்கு மனநிறைவு கிடைக்கிறது..
ReplyDeleteஆமாம், நெல்லைத் தமிழரே!
Deleteஎன்று மண் பிள்ளையாரை மறந்து ப்ளாஸ்டர் பிள்ளையாரை கிரேன் மூலம் கடலில் இறக்கினோமோ அன்றே புனிதமும் மறைந்து விட்டது.
ReplyDeleteஇப்போதைய சதுர்த்தி பெருமைக்கு மாரடிப்பதே...
களிமண் பிள்ளையாரின் வயிற்றிலிருக்கும் மூன்று பைசாவை எடுக்க முப்பதடி கிணற்றில் குதித்த காலம் நினைவில் வந்தது.
வாங்க, கில்லர்ஜி, எங்க அப்பா நாலணா முழுக்காசு,எட்டணா முழுக்காசு அல்லது எப்போவானும் அபூர்வமா ஒரு ரூபாய் முழுக்காசுனு வைப்பார். யார் பிளையாரைக் கிணற்றில் போடறாங்களோ அவங்களுக்கு அந்தக் காசு! அதனால் நாங்க போட்டி போடுவோம்.
Deleteநம்ம ரங்க்ஸ் சும்மாவே கிணற்றில் குதித்து நீந்திக் குளிப்பார். மூச்சைப் பிடித்துக்கொண்டு உள்ளே இருப்பார். எனக்குப் பயம்ம்ம்ம்ம்மாக இருக்கும். அதெல்லாம் ஒரு காலம்.
Deleteஆவ்வ்வ்வ்வ் ஸ்ரீரங்கத்துப் பிள்ளையாரை ஊஸ்டனில் இருந்து மிஸ் பண்ணுறாவாம் கீசாக்கா கர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா. அழகிய சதுர்த்தி, புறப்படும் ஆயத்தங்களோடும் இவ்வளவும் செய்து வச்சிருக்கிறீங்களே.. செய்தனீங்களோ இல்ல ஓடரோ பிள்ளையாருக்கு:))
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அதிரடி, கடைகளில் ஆர்டர் செய்து (உங்க மொழியில் ஓடர்) வாங்கினவை எங்க வீடுகளில் உம்மாச்சிக்குப் படைக்க மாட்டோம்.நான் வீட்டில் தான் எல்லாம் செய்தேன். கொழுக்கட்டை செய்வது எல்லாம் எனக்கு ஜூஜுபி!
Deleteநாங்களும் தான் கடையில் வாங்கிப் படைப்பதில்லை... அதனால்தான் கேட்டேன்.
Deleteகடையிலே வாங்கி மணையிலே வைக்கும் வழக்கமே இதுவரை இல்லை. தீபாவளி சமயங்களில் கூட நிறைய பக்ஷணங்கள் பண்ணலைனாலும் ஏதேனும் 2 தித்திப்பும் ஒரு தேன்குழல், மிக்சர் மட்டுமாவது கொஞ்சமாகப் பண்ணிடுவேன்.
Deleteகடசியில் இருக்கும்பழம், தோலை உரித்துப்போட்டுச் சாப்பிடுவதும் சாப்பிட்டிருக்கிறேன் ஊரில்...
ReplyDeleteநான் சாப்பிட்டதில்லை அதிரடி.
Deleteஅது ஒருவித புளிப்பாக தண்ணியாக இருக்கும் உள்ளே பெரிய விதை இருக்கும்.. எனக்கு ரொம்பப் பிடிக்கும்.. அன்றும் இன்றும் பெயர் தெரியாது:)) அடிக்கடி கிடைக்காது:))
Deleteஹாஹாஹா அதிரடி, அதான் பிரப்பம்பழம்னு எல்லோரும் கூவிட்டு இருக்காங்க! :))))))
Deleteஆஆஆஆஆ அப்போ நடுவிலிருப்பதெல்லோ பிரப்பம்பழம்னு போட்டிருக்கிறீங்க கீசாக்கா..
Deleteme wrongly said Athiradi! adakka odukkamaana? grrrrrrrrrrrrrr ithu eppoo irunthu?
Deleteபிள்ளையார் சதுர்த்தி படங்கள் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteராமர் பட்டாபிஷேக படம் பார்த்ததும் எங்கள் வீட்டுக்கு ராமர் பட்டாபிஷேக படத்துடன் நீங்களும், சாரும் வந்தது நினைவுக்கு வந்து மகிழ்ச்சி அளித்தது.
வாங்க கோமதி. ரசித்தமைக்கும் நினைவு கூர்ந்தமைக்கும் நன்றி.
Deleteஎன்ன திடீர்னு இப்போது பிள்ளையார் சதுர்த்தி விசேஷப் படங்கள்? ஆச்சர்யமா இருந்தது. அப்புறம்தான் இது நேயர் விருப்பம் என்று தெரிந்தது.
ReplyDeleteஹாஹாஹா ஸ்ரீராம், அப்போவே போட நினைச்சு விட்டுப் போச்சு!
Deleteபிரப்பம்பழம் உட்பட கிடைக்கும் பழங்களை வைத்து நைவேத்தியம் செய்வதுண்டு. விளாம்பழமே சாப்பிடுவதில்லை. மற்ற பழங்களை எங்கே சாப்பிட... நைவேத்தியம் செய்ய மட்டும் மிகச்சிறிய அளவில் வாங்கும் வழக்கம் உண்டு.
ReplyDeleteவிளாம்பழத்தைப் பலரும் சாப்பிடுவதில்லை. உடம்புக்கு ரொம்பவே நல்லது. ஒரு முறையானும் சாப்பிட்டுப் பாருங்கள் ஸ்ரீராம்.
Deleteஒருமுறைக்கும் மேலாக சாப்பிட்டிருக்கிறேன். அதில் வெல்லம் போட்டு !
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இந்த ஸ்ரீராமுக்கு பழங்களிலும் பலதும் பிடிப்பதில்லை...மீண்டும் ஒரு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா...
Deleteவிளாம்பழம் மிக மிகப் பிடிக்கும் வெல்லம் கலந்து கொஞ்சம் தேனும் கலந்து சாப்பிட்டால் சூப்பரா இருக்கும். பஞ்சாமிர்தத்தில் கூடக் கலந்துவிடுவதுண்டு வீட்டில்.
நெல்லையானா விளாம்பழத்திய விட்டிருக்காரு...என்ன பிள்ளைங்களோ!!!!!!!!!!!! ஹா ஹா ஹா
கீதா
காய் மட்டும் ஸ்ராத்தக்காய்களில் ஒன்று மற்றபடி பழங்களில் பிடிச்சதைத் தான் விடணும்
Deleteபண்டிகைகள் எங்கிருந்தாலும் மகிழ்ச்சி தருபவை
ReplyDeleteநன்றி ஐயா!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஇன்றைய சிறப்பு பதிவு நன்றாக உள்ளது பிள்ளையார் மட்டுமல்லாது கடவுளார்கள் அனைவரும் என்றைக்குமே நாம் செய்யும் பூஜைக்குரியவர்கள்தானே..!
ராமர் பட்டாபிஷேக படம் அழகாய் தெளிவாய் புகைப்படத்தில் தெரிகிறது. பிள்ளையாரும், மலர்களிக்கிடையே அழகாக ஜம்மென்று அமர்ந்திருக்கிறார்.
எங்கள் வீட்டிலும் விநாயக சதுர்த்திக்கு களிமண் பிள்ளையார் இல்லை. கல் பிள்ளையாருக்குதான் பூஜை செய்கிறோம்.
நானும் இந்த பிரப்பம் பழத்தை இன்றுதான் பார்க்கிறேன். விளாம்பழம் போலவே உள்ளதே! சுவை எப்படி இருக்குமோ? தங்கள் மூலம் இப்படி ஒரு பழத்தை பற்றித் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, பழங்கள் இருக்கும் மூன்று படங்களில் முதல் படம் விளாம்பழமே தான். நடுவில் இரண்டாவதாக இருப்பது தான் பிரப்பம்பழம். கடைசிப்படம் என்னனு எனக்குத் தெரியலை. தெரிந்தவர்கள் சொல்லுவாங்கனு நினைக்கிறேன். வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
Deleteகல் பிள்ளையார் எங்க வீட்டிலும் இருக்கார். சமையல் அறையில் வைச்சிருக்கேன். சாமிக்குச் சில சமயங்களில் அப்படியே காட்டிடலாம்னு!
Deleteஐயோ ஐயோ. நடுவில் இருப்பது நீங்கள் காசியில் விட்ட நாவல் பழம். நான் கூட நாவல்பழக் கலர் என்று சொல்லி நல்லா வாங்கிக்கிட்டேனே.பிரப்பன் பழம் திருச்சியில் கிடைக்கும். சின்ன வயதில் காந்தி மார்க்கெட்டில் வாங்கி சாப்பிட்டிருக்கிறேன். தோல் முட்டை தோல் போன்று அல்லது பாம்பு தோல் போன்று இருக்கும். பழம் குட்டி குட்டி பைன் ஆப்பிள் போல இருக்கும். கொஞ்சம் புளிப்பு மிட்டாய் போல இருக்கும். கொட்டை கடினமானது. தோல் பிரம்பு போல் இருப்பதால் பிரப்பம்பழம் என்று பெயர்.
ReplyDeleteபள்ளியில் பிரப்பன் பழம் என்பது ஆசிரியர் பிரம்பால் கையில் அடிப்பது தான். அந்தக் காலத்தில் ஆசிரியர் யாவரும் நல்ல பிரம்பு வைத்திருப்பார்கள். சேட்டை செய்பவர்களுக்கு பிரப்பம் பழம் கிடைக்கும். நானும் வாங்கியிருக்கேன்.
Jayakumar
ம்ம்ம்ம்ம் அப்போக் கடைசியில் இருப்பது தான் பிரப்பம்பழமோ? எதுக்கும் நம்ம ரங்க்ஸைக் கேட்டு ஊர்ஜிதம் செய்யறேன். சென்னையிலே பார்த்திருக்கேன். இங்கே வாங்குவதில்லையே! இங்கே வந்தும் ஏழு வருஷங்களுக்கு மேல் ஆகப் போகுதே!
Deleteஹாஹாஹா, அ.வ.சி. ஜேகே அண்ணா! எல்லோரும் உங்க கட்சி தான்!
Deleteபிள்ளையார் சதுர்த்திப் படங்கள்... தெய்விகம்...
ReplyDeleteஅனைவருக்கும் ஐங்கரனின் அருள் பொழிவாராக...
வாங்க துரை, நன்றி.
Deleteநல்ல நினைவுகளைப் பதிவு செய்ததற்கு நன்றி கீதாமா.
ReplyDeleteபிரப்பம்பழம் ப்ரௌன் கலரில் தானே இருக்கும்.
சென்னையில் மண்பிள்ளையாரோடு எல்லாமே கிடைக்குமே.
அருமையான படங்கள்.
நன்றி மா.
ஹாஹாஹா, அப்படி ஒரு பழம் சின்னச் சின்னதாகப் பார்த்திருக்கேன் வல்லி. அதனால் இதான் பிரப்பம்பழம்னு நானாக நினைத்துக் கொண்டேன். எதுக்கும் அவரைக் கேட்டுட்டுப்போட்டிருக்கணும். நாளைக்குத் தான் கேட்கணும். :)))))
DeleteThe first photo is Vilamb pazham (wood apple), middle one is Jamun ( naval pazham), the third is pirappam pazham. Tastes like “tamarind”.
ReplyDeleteRajan
Thank You.
DeletePirapam pazham is called cane fruit in English.
ReplyDeleteRajan
Yes, that I know. :)
Deleteபடங்கள் நல்லாருக்கு.
ReplyDeleteவிளாம்பழம் மிகவும் பிடிக்கும். கிடைக்கும் போதெல்லாம் வெல்லம் கலந்து சாப்பிடுவதுண்டு.
நாவப்பழமும்...இங்கு நன்றாகக் கிடைத்தது. விலை கூடுதலாக இருந்தது. சிட்டிக்குள் விலை கிலோ 250 280 என்றிருக்க நம் வீட்டருகில் கிலோ 180. கொஞ்சம் சிறிதாக இருந்தது அவ்வளவே..
மூன்றாவது பழம் தான் பிரப்பன். சென்னையில் கிடைக்கும் இங்கு காணவில்லை கீதாக்கா.
பிரப்பன் கிழங்கு என்றும் உண்டு. அது மூலிகை வைத்தியத்தில் சேர்க்கப்படுவது, கீதாக்கா.
கீதா
நாவல்பழம் தொண்டை கட்டிக்கும் என்பதால் சாப்பிடுவதே இல்லை. சின்ன வயசில் எப்போவோ கிருஷ்ணன் பிறப்புக்கு வாங்கியதைச் சாப்பிட்டது! உடனே ஜூரம் வந்துவிட்டது.
Deleteபிள்ளையார் சதுர்தி களைகட்டி நிற்கிறது வாழ்துகள்.
ReplyDeleteபிரப்பம் பழம் சாப்பிட்டதில்லை.