உம்மாச்சி அலமாரியின் ஒரு பகுதி!
மருந்து சின்ன டப்பாவில்
மருந்து இல்லாமல் பக்ஷணங்கள். ஓரத்தில் ஸ்வாமி நாராயணன் கோயில் இனிப்பும், சூடா எனப்படும் அவல், கடலை, கலவையும்.
நடுவில் காய்ச்சிய எண்ணெய், சீயக்காய்ப் பொட்டலம், மஞ்சள் பொடி கிண்ணங்களில்
காலங்கார்த்தாலே எழுந்திருக்காதேனு வேறே 144 தடை உத்திரவு. ஏற்கெனவே இங்கே காலை ஆறுமணி, ஆறரை மணிக்குப் பார்த்தால் நடு ராத்திரி இரண்டு மணி மாதிரி இருக்கும். ஆனாலும் நாம யாரு? சும்மா விடுவோமா? நாலரைக்கு எழுந்துட்டோமுல்ல! எழுந்து அடுப்பை அலம்பித் துடைத்துக் கோலம் போட்டு, வீடு பெருக்கித் துடைத்து, எண்ணெய் காய்ச்சி, சீயக்காய், மஞ்சள் பொடி எல்லாவற்றையும் எடுத்து வைப்பதற்குள்ளாக ஐந்தரை ஆகி விட்டது. பின்னர் காஃபி போட்டுவிட்டு ரங்க்ஸை எழுப்பினேன். காஃபி குடிச்சுட்டு நான் குளிக்கப் போயிட்டேன். குளிச்சுட்டு வரவும் ஒவ்வொருத்தரா வந்தாங்க. குஞ்சுலு மட்டும் ஏழரைக்கு எழுந்து கொண்டது. பின்னர் இன்னிக்கு அமாவாசை என்பதால் நான் சமைச்சுட்டேன். சீக்கிரமாவே எல்லோருமாச் சாப்பிட்டோம்.
அதன் பின்னர் சற்று நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு ஒன்றரை மணிக்கப்புறமாக் கிளம்பிப் பொண்ணு வீட்டுக்கு வந்திருக்கோம். இங்கே அநேகமா ஒரு மாசம் இருந்துட்டுக் கார்த்திகை சமயம் அங்கே போவோம். இப்போதைக்கு அம்புட்டுத் தான் விஷயம்!
தீபாவளி சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறீர்கள். எனக்கும் இந்தமுறை என் மகன்கள் உடை வாங்கிக்கொடுத்தார்கள். "இதைப்போட்டுப் பார்த்து ரெவியூ என்ன வருதுன்னு மட்டும் சொல்லு" என்று பெரியவன் என்னிடம் சொன்னான். நல்ல ரெவியூதான் வந்தது!
ReplyDeleteபையர் நாங்க எப்போ அம்பேரிக்கா வந்தாலும் அப்பாவுக்கு உடைகள், டீ ஷர்ட் வாங்கிக் கொடுத்துடுவார். எனக்குத் தான் நான் புடைவை இங்கே வாங்கிக்கறது இல்லை. ஆகவே பணமாக் கொடுத்துடுவார். முன்னரும் ஒரு ஜீன்ஸ் பையர் வாங்கிக் கொடுத்து மாமா போட்டுக்கொண்டார். இம்முறை ஜீன்ஸ் வேண்டாம்னு நான் சொன்னேன். ஆனால் பையர் கேட்கலை.
Deleteமருந்தும் செய்தாச்சா? எப்படி? இங்கு பொடி வாங்கிவீட்டில் கிளறினோம். நன்றாய் இருந்தது. நாங்கள் மாளாது, ரவாலாடு, முள்ளுமுறுக்கு மட்டும் செய்தோம்.
ReplyDeleteமருந்து சாமான்கள் எல்லாமே கிடைக்கின்றனவே ஸ்ரீராம்.வீட்டில் இருந்த பொருட்களை வைத்து மருந்து தயார் செய்தேன். திப்பிலி, கண்டந்திப்பிலி இல்லை. சித்தரத்தையை உடைக்க முடியலை. மற்றப் பொருட்கள் எல்லாம் ஜாதிக்காய் உள்பட இருந்தது. அதிலேயே கிளறிட்டேன்.
Deleteலாடு செய்யணும்னு தான் எனக்கும். ஆனால் நெய் நிறைய வேண்டும். இங்கே இவங்களுக்கு அவ்வளவு நெய் பிடிக்காது.
Deleteவீட்டில் இருக்கும் பொருட்களை எடுத்து, இடித்து அம்மா அந்தக் காலத்தில் மருந்து தயார் செய்திருக்கிறார். திருமணமானபின் பொடி கடையி வாங்கி கிளறிக் கொள்வதுதான்.
Deleteநான் எப்போவுமே வீட்டில் சாமான்களை வாங்கிக் காய வைத்து வறுத்து அரைத்தே மருந்து கிளறுவேன். இஞ்சியும் அரைச்சுச் சாறு எடுப்பேன். இம்முறை இஞ்சிச்சாறு சேர்க்கவில்லை.
Deleteமிக்ஸர் செய்பவர்களைக் கண்டால் ஆச்சர்யமாக இருக்கும். கஷ்டப்பட்டு விதம் விதமாக செய்து விட்டுஅவைகளை ஒன்றாகக் கலக்கி ஒரே காரமாக தருவதற்கு தனி மனம் வேண்டும்!!! என் பாஸின் சித்தி வெள்ளை அப்பால் கொடுத்து அனுப்பியிருந்தார். அதன்கூட ஒக்கோரை! மிகசர் அவர் ரெகுலராகச் செய்வது..
ReplyDeleteஸ்ரீராம், மிக்சர் தான் விரைவில் செய்யலாம். அரைமணியில் ஓமப்பொடியும், பூந்தியும் பிழிந்துவிட்டால் அப்புறமா மற்றச் சாமான்களை வறுத்துச் சேர்க்கணும். தேங்குழல், ஓட்டு பகோடா போன்றவை சேர்த்தால் அதற்கென இருக்கும் தனித்தட்டில் ஒரு ஈடு பிழிந்தால் போதும். மற்றபடி அவல், கடலை வகைகளை வறுத்துச் சேர்க்கணும். மைதா பிஸ்கட் ஒரு கிண்ணம் மைதாவில் முடிஞ்சுடும். உ.கி.வறுவல் நான் சேர்ப்பேன். அதற்கென அரைக்கிலோ உ.கி வாங்கி வறுத்துடுவேன். உ.கியை ஃபிங்கர் சிப்ஸுக்குச் சீவறாப்போல் சீவிட்டுத் தண்ணீரில் போட்டு வைச்சு ஸ்டார்ச்சை எல்லாம் எடுத்து வடிகட்டிட்டுக் கொஞ்சம் உலர்ந்த பின்னர் வறுவல் வறுத்தால் வெள்ளையாகவும் மொறுமொறுவெனவும் இருக்கும். என் அம்மா இப்படித் தான் செய்வார்.
ReplyDeleteசெய்முறை எளிதாகத்தான் இருக்கிறது. இங்கு உ கி எல்லாம் போடுவதில்லை. நாடா பகோடா போட்டிருந்தார்கள். முந்திரி போடாமல் கடலை மட்டும் போட்டிருந்தார்கள்!
Deleteநாடாவை உதிராகப் பிழிவதற்கெனத் தட்டு என்னிடம் இருக்கு. மிக்சருக்குத் தேய்க்க அதைத் தான்பயன்படுத்துவேன். ஒரு பக்கம் ஓமப்பொடி, இன்னொரு பக்கம் நாடா மாதிரி! அதிலே இரண்டு ஈடு பிழிந்தால் போதும். காராபூந்தி இரண்டு ஈடு.இதுக்கே மிக்சர் மற்ற சாமான்களைக் கலந்ததும் ஒரு படிக்கும் மேல் வந்துடும்.
Deleteதென்மாவட்டக்காரர்களுக்கு மாலாடு, வெள்ளை அப்பம், உக்காரை இல்லாமல் தீபாவளி நிறையாது.
ReplyDeleteஅருமை... தீபத்திருநாள் வாழ்த்துகள் அம்மா...
ReplyDeleteநன்றி டிடி, உங்கள் பங்குக்கு நீங்களும் பக்ஷணத் தயாரிப்பில் பங்கேற்றிருப்பீர்கள்!
Deleteமகிழ்ச்சியாக தீபாவளி சென்றதில் மகிழ்ச்சி.
ReplyDeleteநன்றி கில்லர்ஜி!
Deleteவயிறு கொள்ளாமல் எதையும் சாப்பிட்டு மருந்து வேறயா எங்களுக்கு இதுவரை மருந்து தேவைப்பட்டதில்லை
ReplyDeleteஹாஹாஹா, ஜிஎம்பிசார், இங்கே எங்கேயானும் நாங்க வயிறு கொள்ளாமல் சாப்பிட்டுவிட்டோம். அதற்காக மருந்தைத் தேடினோம்னு சொல்லி இருக்கேனா? நீங்களும் சரி, நெல்லைத்தமிழரும் சரி பதிவை அவசரமாகப் படித்துக் கருத்துச் சொல்லுகிறீர்கள்! மருந்து கிளறுவதும் ஒரு பாரம்பரியம் தான்!
Deleteசிறப்பான கொண்டாட்டம்...
ReplyDeleteதீபாவளி இந்த முறை தில்லியில் தான். எங்களுக்குப் பண்டிகையும் கிடையாது என்பதால் ஊருக்குப் போகவில்லை. நண்பர் வீட்டிற்குச் சென்று வந்ததோடு சரி.
நிறைய பதிவுகள் படிக்கவில்லை. எனது பக்கத்திலும் எழுதவில்லை. முடிந்த போது பதிவுகள் படித்து விடுவேன்.
வாங்க வெங்கட், இப்போத் தானே நவராத்திரி சமயம் ஊருக்குப் போயிட்டு வந்திருக்கீங்களே! எனக்கும் பல பதிவுகளை உடனுக்குடன் படிக்க முடியறதில்லை. எங்கள் ப்ளாகில் சைட் பாரில் வருபனவற்றை அநேகமாகப் படிச்சுடுவேன். அப்படியும் கமலா ஹரிஹரன் பதிவு விட்டுப் போயிருக்கு! கொஞ்சம் மெதுவாத் தான் படிக்க வேண்டி இருக்கு.
Deleteஹாங், வந்துட்டேன். கலரா?? அதுதான் உங்களுக்கு அரக்கு கலர், காப்பிபொடி கலர், நாவல் பழம் கலர் போன்ற கலர்கள் தான் பிடிக்கும் என்று முன்னரே சொல்லியிருக்கேனே . இதில் ஏதாவது ஒரு கலர் என்று எடுத்துக் கொள்ளுங்கள். மூன்று அடுக்கு படையல் கொலு வைத்தது போல் இருக்கிறது. குலாப் ஜாமுன் மட்டும்தானா? அதிரசம் அல்லது முந்திரிக் கொத்தாவது செய்திருக்கலாம். பையருக்கு அப்பா எப்போதும் அந்தக்காலத்து 40 வயசு அப்பாதான். பதின்ம வயது நினைவுகள் அழியாக்கோலங்கள் தான்.
ReplyDeleteவாங்க ஜேகே அண்ணா, காஃபிப் பொடிக்கலரில் முன்னாடி பட்டுப்புடைவை இருந்தது. கிளிப்பச்சை பார்டர் போட்டு. அதெல்லாம் கிழிந்து விட்டது. இப்போக் காஃபிப் பொடிக்கலரில் புடைவையே இல்லை. நீங்க சொல்றதைப் பார்த்தால் வாங்கணும்னு ஆசையா இருக்கு! ஸ்ரீரங்கம் வந்தால் பார்ப்போம்! :))))) நேரில் பார்க்கையில் தெரியும் வண்ணம் துணிகளில் படத்தில் தெரிவதில்லை! :))))) எங்க வீட்டில் அதிரசம் எல்லாம் வழக்கமில்லை. அது என்ன முந்திரிக்கொத்து? சர்க்கரை போட்ட காராச்சேவா? அதுவும் பழக்கம் இல்லை. இதுவே அதிகம்னு பையருடைய கருத்து. எண்ணெய் அடுப்பில் உட்கார்ந்து வெந்தது எல்லாம் போதும். தீபாவளியை ஆற அமர நிதானமாக் கொண்டாடு, பண்டிகை கொண்டாடத்தான் என்பது பையர் கருத்து. :)))))) நானாகப் பண்ணினாலும் சாப்பிட ஆளுக்கு எங்கே போக?
Deleteஎனக்குப் பிடிச்ச கலர்னு எதுவும் இல்லை ஜேகே அண்ணா. இல்லாத கலராகப் பார்த்து எடுப்பேன். :)))) இப்போ மஸ்டர்ட், மஞ்சள்,மாம்பழக்கலர்களில் புடைவை இல்லை, இனிமேல் எடுத்தால் அந்த நிறங்களில் எடுப்பேன். க்ரே கலரில் புடைவை ஒன்று இருக்கு. ஊதாக்கலரில் பட்டு ஒண்ணு, சாதா ஒண்ணு இருக்கு. நீங்க சொல்லி இருப்பதில் காப்பிப் பொடிக்கலரில் புடைவை இல்லை. நாவல்பழக்கலர் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. இஃகி,இஃகி,இஃகி!
Deleteதீபாவளி பிரமாதம்..குஞ்சுலு பட்டுப் பாவாடைதான் சூப்பர். மாலாடு கண்ணால் பார்த்தே. நாளாகிறது. இங்கே பண்டிகை அளவோடுதான். குறைக்க வேண்டாம் என்று பாயாசம் இருந்தது. அமாவாசையும் சேர சுசி ருசியாகச் சாப்பிட்டாச்சு். மகள் குடும்பத்துக்கும் வாழ்த்துகள் சொல்லுங்கள். கோலாப்பூர் புடவை வண்ணம் அழகு.
ReplyDeleteவாங்க வல்லி. இந்தப் பாவாடை அங்கே சாரதாஸில் துணியாக எடுத்துத் தைத்து வாங்கினோம். பெரிசாகத் தான் இருக்கு. ஆனால் குஞ்சுலுவுக்கு இந்தக் கலர் தான் பிடிக்கிறது. இதை விட்டால் பிங்க் கலர். பொண்ணு பிங்க் கலரில் ஒரு டிரஸ்ஸும், நல்ல நீலத்தில் ஒரு டிரஸ்ஸும் அதுக்கு எடுத்திருந்தாள். அது பிங்க் கலர் டிரஸ்ஸைக் கீழேயே வைக்கலை. அவங்க அம்மா வாங்கிக் கவரில் போட்டதுக்கு ஒரே அழுகை! திரும்ப எடுத்துக் கொடுத்ததும் தான் சமாதானம் ஆச்சு.
Deleteதீபாவளியும் மகன் வீட்டில் இனிதே. வாழ்துகள்.
ReplyDeleteஆமாம், மாதேவி, மத்தியானத்துக்கு மேல் இங்கே மகள் வீட்டுக்கு வந்திருக்கோம். ஒரு மாசமாவது இங்கே இருப்போம்.
Deleteஇனிப்புகள் (மருந்து), தேன்குழல் என்று சிம்பிளாகச் செய்திருப்பது என்னைக் கவர்ந்தது. பண்டிகை என்று ஓய்வில்லாமல் உழைத்து ஏகப்பட்ட ஐட்டங்கள் செய்து தின்னு தீர்ப்பதில் எனக்கும் ஆர்வம் இல்லை. மனைவியிடமும் செய்யவேண்டாம் என்றுதான் சொல்வேன்.
ReplyDeleteவாங்க நெல்லைத்தமிழரே, முதல்முறையாக ஆதரவு தெரிவித்திருப்பதற்கு நன்றி. நீங்க சொல்றாப்போல் தான் எனக்கும் முன்னாடி பக்ஷணங்கள் பண்ணும்போதெல்லாம் தோன்றும். ஆனால் எங்க வீட்டில் உண்மையாகவே சாப்பிடுவாங்க!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteதீபாவளி பண்டிகை சிறப்பாக, கொண்டாடி யதில் மகிழ்ச்சி. பூஜையறையும் ஸ்வாமி படங்களுமாக நன்றாக உள்ளது. நம் பழக்கம் நம்மை விட்டு எங்கும் போகாது.
தீபாவளியன்று,( சென்னை, திருமங்கலம்)
காலை நான்கு மணிக்கே எழுந்து, நீங்கள் சொன்ன வேலைகளை முடித்து அனைவரையும் எழுப்பி குளிக்க வைத்து, புத்தாடைகள் அணிந்து, (அன்றைய தினம் அமாவாசை வராத நாட்களில்) ஆறு மணிக்குள், சுடச்சுட இட்லியுடன், படசணங்கள் என வரிசை கட்டிக் கொண்டு, அனைத்தையும் அமர்ந்து சாப்பிட்ட நாட்கள் நினைவுக்கு வருகின்றன. ஆனால் சில வருடங்களாக வளர்ந்து விட்ட என் குழந்தைகள் "ஆறு மணிக்குள் என்னம்மா அப்படி ஒரு அவசரம்..!" என தடை போட ஆரம்பித்து விட்டனர். சரி... என்ன செய்வது? அவர்கள் விருப்பம் என ஆற அமர இருக்க பழகி விட்டேன். இங்கும் (பெங்களூரு) மூன்று தினங்களாக தீபாவளி கொண்டாடுகின்றனர்.
தாங்கள் தீபாவளியை நான்கு மணிக்கே எழுந்து கொண்டாடியது மகிழ்ச்சியான விஷயம். நம்மூரில் (பிறந்த வீடு) எல்லாம் காலை ஐந்து மணிக்கே அக்கம் பக்கத்தில் இருக்கும் உறவுகள், நட்புகள் "கங்கா ஸ்னாம் ஆச்சா?" என்று கேட்டு விடப் போகிறார்களே என்ற எண்ணத்தில், நான்கரைக்குள் குளித்து விடுவோம். அது ஒரு காலம்... இப்படியாக தங்கள் பதிவை பார்த்ததும் மலரும் தீபாவளி நினைவுகள் வருகின்றன.
தங்கள் மகள் வீட்டில் அனைவரும் நலமா? அங்கு குளிர், மழை எப்படி உள்ளது?
தாங்கள் என் பதிவாக வந்த தங்களுக்கு பிடித்தமான பேயாரை பார்க்க வரவில்லையே..!! தங்கள் பிஸியான நேரங்கள் இனிதே முடிந்ததும் வரவும். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, இங்கேயும் காலையில் ஆறு மணி, ஆறரை மணினு தான் எழுந்துண்டாங்க. குளிர்வேறேயே! அதோடு குழந்தையைக் குளிப்பாட்டி அதுக்கு டிரஸ் எல்லாம் பண்ணிட்டுத் தான் மாட்டுப் பொண்ணுக்குக் கை ஒழியும். நீங்க சொன்னீங்களேனு நானும் உங்க பதிவுக்கு வந்து பேயைப் பார்த்து நலம் விசாரித்தேன். அநேகமாக இனிமேல் கொஞ்சம் நேரம் கிடைக்கும்னு நம்பறேன். வடமாநிலங்களிலும் தீபாவளிக் கொண்டாட்டங்கள் 3 நாட்கள் ஆகும்.
Deleteதீபாவளி எளிமையாக இருந்தாலும் குழந்தைகளுடன் மகிழ்ச்சி தானே! வீட்டில்
ReplyDeleteஎல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
அப்புவுடன் இருக்க போகிறீர்கள் ஒரு மாதம் அந்த பேத்தியுடன் மகிழ்ந்து இருங்கள்.
வாங்க கோமதி, அப்பு இப்போக் குழந்தை இல்லையே! அதோடு பெரிய வகுப்புக்குப் போய்விட்டாள். இன்னிக்குச் சாயங்காலம் ஏதோ (டேக் வான்டோ மாதிரி) கற்றுக்கொள்ளப் பள்ளியிலிருந்து நேரே போயிடுவாள். ஆறு மணிக்குத் தான் வீட்டுக்கு வருவாள். அவ அம்மா அவளுக்கு மாலை உணவு எடுத்துக்கொண்டு போயிருக்கா!
Deleteகோலாப்பூர் புடவை முன்பே காட்டி எந்த ஊர் புடவை என்று கேட்ட நினைவு இருக்கிறது.
ReplyDeleteஆமாம், இரண்டு புடைவைகளையும் போட்டிருந்தேன். முன்னது கைத்தறி நூல் புடைவை. இது சில்க் மாதிரி இருக்கிறது. கட்டும்போது தான் தெரிந்தது. நிறைய அகலம், நீளம், உயரம் எல்லாம்.
Deleteபுடவை நிறம் அழகாக இருக்கு. ஜீன்ஸ், ஷர்ட்டோட ஒரு போட்டோவும் காணோமே...
ReplyDeleteபுடைவை நிறத்துக்குப் பாராட்டுத் தெரிவித்ததுக்கு நன்றி நெல்லைத்தமிழரே, ஜேகே அண்ணா சொல்லி இருப்பதைப் படிச்சீங்க தானே? மாமா நேற்று ஜீன்ஸும் ஷர்ட்டும் போட்டுக் கொண்டார். பிறிதொரு சமயம் மறுபடி போட்டுக்கொண்டால் படம் எடுக்கணும். :))))
Deleteஆஆஆஆஆஆஅ கீசாக்கா டீவாலி கொண்டாடிட்டாவோ அம்பேரிக்காவில அதுவும் காலை 4.30 க்கு எழும்பி..
ReplyDeleteசாறி நல்ல கலர் கீசாக்கா.
நன்றி சங்கமித்திரை,கொத்தவரை அதிரா. புடைவை நிறத்தைப் பாராட்டியதுக்கு! ஆமாம், நாலரைக்கு எழுந்து கொண்டேன். பின்னே நம்ம வழக்கத்தை விடலாமோ?
Delete//பின்னர் இன்னிக்கு அமாவாசை என்பதால் நான் சமைச்சுட்டேன். சீக்கிரமாவே எல்லோருமாச் சாப்பிட்டோம்.//
ReplyDeleteஎன்ன சமைச்சீங்களெனச் சொல்லவே இல்லையே கர்:))..
அதுசரி குஞ்சுலு சின்னக்குட்டிதானே படம் போட்டால் என்ன? ஏன் காட்ட மாட்டேன் என்கிறீங்க? பெற்றோருக்குப் பிடிக்காதோ? அப்படி எனில் வேண்டாம்.
நேற்று பையர் வீட்டில் பருப்புப் பாயசம், வாழைக்காய் வதக்கல், வெண்டைக்காய் சாம்பார், தக்காளி ரசம் அதிரடிக் கொத்தவரை! குஞ்சுலு படம் மட்டுமில்லை, யார் படத்தையும் போட எங்க வீட்டில் பையருக்கோ, பெண்ணுக்கோ இஷ்டம் இல்லை. மறுமகள் குறுக்கே விழுந்து தடுப்பாள். என்னோட படங்களையே போடக் கூடாதுனு அவங்க சொல்லி இருந்தாங்க. நண்பர்கள் போட்டுத் தான் என் படங்களே வெளியே வந்தன.
Deleteநீங்க மருந்து மருந்து எனச் சொல்லும்போது ஏதோ பத்தியத்தூள் ஆக்கும் என நினைச்சேன்.. பார்த்தால் முறுக்கையோ மருந்து என்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்:))
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கொத்தவரை வத்தல்நினைப்பிலேயே இருந்தால் எப்பூடி அதிரடி? மேலே ஸ்ரீராமுக்குச் சொல்லி இருக்கிற பதிலில் பார்க்கலை, மருந்து சாமான்கள் பத்திச் சொல்லி இருக்கிறதை! பத்தியத்துக்கு உள்ளவை தான் அந்த மருந்து.முறுக்கைனு நீங்களா நினைச்சால் எப்பூடி?
Deleteஜேகே அண்ணா நிறத்தைக் குறை சொல்றாரேனு நினைச்சுட்டு மறுபடி படத்தைப் பெரிசு பண்ணிப் பார்த்தால் நல்ல அடர் கிளிப்பச்சை நிற பார்டர் வெளுத்த கலராத் தெரியுது. என்னத்தைச் சொல்ல! :))))))
ReplyDeleteமகிழ்ச்சியுடன் மங்கல தீபாவளி கொண்டாடப்பட்டது...
ReplyDeleteமகிழ்ச்சியும் மங்கலமும் தான் எங்கும் வேண்டும்....
வாழ்க நலம்....
வாங்க துரை, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
Delete