இங்கே உள்ள ஸ்வாமிநாராயணர் கோயிலில் நேற்று மாலை தீபாவளி மேளா நடந்தது. மீனாக்ஷி கோயிலிலும் நடந்தது. அது கொஞ்சம் தூரக்க இருப்பதால் இதைப்பார்க்க நேற்று மாலை போயிருந்தோம். அங்கே சாப்பாட்டுக்கடைகளும் போட்டிருந்தார்கள். கோயிலுக்கு உள்ளே போகப் பார்த்தபோது சந்நிதி மாலை வழிபாட்டுக்காக மூடி இருந்தார்கள். இனி இரவு எட்டு மணிக்குத் தான் திறப்பார்கள். ஆகவே நாங்கள் அங்கே வந்து கொண்டிருந்த மனிதர்களையும் அங்கே உள்ள கடைகளையும் பார்த்துவிட்டு எது நன்றாக இருக்கிறதோ அந்த உணவைச் சாப்பிடலாம்னு நினைச்சோம்.
மீனாக்ஷி கோயில் தீபாவளி மேளாவை 2011 ஆம் ஆண்டில் பார்த்தோம். துணிக்கடைகள், நகைக்கடைகள், பாத்திரக்கடைகள்னு பார்த்த நினைவு. துணி எல்லாம் விலை அதிகம். இங்கே அம்மாதிரிக் கடைகள் போடவில்லை. உணவுக்கடைகள் மட்டும். தோசையில் சாதா, மசாலா, பனீர் தோசைகளும், பாவ் பாஜி, பிட்சா,பேல்பூரி, மேதி பகோடா போன்றவையும் கிடைத்தன. தோசை வார்ப்பதைப் பார்த்தால் நன்றாக இருக்கும்னு தோன்றியதால் அதுக்கு டோக்கன் வாங்கினோம். நான் சாதா தோசை, அவர் மசால் தோசை, பையர் பனீர் தோசை, மருமகளும், குஞ்சுலுவும் சீஸ் பிட்சா என வாங்கிக் கொண்டோம். உட்கார்ந்து சாப்பிட இடம் இல்லை. பெஞ்சுகள் மட்டும் ஆங்காங்கே போட்டிருந்தார்கள். அதிலே நின்று கொண்டு சாப்பிடலாம். அப்புறமாப் பையரின் நண்பர் ஒருவர் எங்களுக்கு மட்டும் 2 நாற்காலிகள் ஏற்பாடு செய்து கொடுத்தார். கரும்புச் சாறும் விற்றார்கள். நான்கு டாலர்களாம்.
நுழைவாயில்
கார் பார்க்கில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்த மக்களில் ஒரு சிறு பகுதி
கோயில் கோபுரத்தின் விளக்கு அலங்காரம் மாறி மாறி வண்ணங்களைக் காட்டியது. கிட்டேப் போய் எடுக்க முடியலை. கூட்டம்!
நீலத்தில் இருந்து ஊதாக்கலருக்கு மாறியப்போ எடுக்க நினைச்சு மறுபடி நீலமே வந்து விட்டது.
உணவுக்கடைகளில் நிற்கும் வரிசைகள். தூரத் தெரிவது தான் உணவுக்கடைகள்.
கையில் மேதி பகோடாவுடன் ஒருவர். நாமே வாங்கிக்கொண்டு தூக்கி வந்து எங்கானும் வைத்துச் சாப்பிடணும் என்பதால் படம் எடுக்க முடியவில்லை. தற்செயலாக இவர் மாட்டினார். தொட்டுக்க குஜராத்தி கடி. நன்றாக இருந்தது. தோசை ஒரே சொதப்பல்! தூரக்கப் பார்த்துட்டு நன்றாக இருக்குனு நினைச்சால் ஒரே தடிமன் சாக்கு மாதிரி. ரப்பர் மாதிரி வந்தது. உளுந்தே போடாமல் அரைச்சிருந்தாங்க. சாம்பார்னு மிளகாய்ப்பொடி, தக்காளி, காரட் போட்ட சொம்புப் பொடி போட்ட மிளகாய்த் தண்ணீர். அதையும் வாங்கிக் குடித்தவர்கள் உண்டு. தேங்காய்ச் சட்னி காரல் வாசனை! தக்காளிச் சட்னி பரவாயில்லை.
aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa this is kuttikkunjulu's typing! :D
வீடியோ நன்றாக வேலை செய்கிறது. இன்னும் சில நிமிடங்கள் எடுத்திருக்கலாம்.
ப்ரிவியூவில் பார்த்தேன் வீடியோ வரலை. மக்கள் பார்த்துட்டுச் சொல்லுங்க! வீடியோவுக்குத் தலை முழுகிடலாம். :)))) முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே ஸ்ரீரங்கத்தில் அடிக்கும் காற்றை வீடியோ எடுத்துப் போட்டேன். ஆனால் அது காமிராவில்னு நினைக்கிறேன்.
கார் பார்க்கில் ஆயிரக்கணக்கான கார்கள். படம் எடுக்கலாம்னா ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தத் தன்னார்வலர்கள் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று சொல்லுவார்கள் என்பதால் எடுக்கவில்லை. ஏனெனில் கார் பார்க்கில் இருந்து கோயில் வளாகத்தினுள்ளே செல்ல ஷட்டில்கள் எனப்படும் நீண்ட கார் எட்டு இருக்கை, பத்து இருக்கை கொண்டவை வந்து மக்களை ஏற்றிக்கொண்டு கோயில் வளாகத்துக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தன. அதற்கென 2,3 வாயில்கள் இருந்தன. அடுத்தடுத்து ஷட்டில்கள் வருவதும் போவதுமாக இருந்தது. தன்னார்வலர்களுக்குக் குடி நீர் விநியோகத்தில் ஒரு வான். ரொம்பவே மும்முரமான போக்குவரத்து. நாங்களும் ஒரு ஷட்டிலில் தான் சென்றோம். ஷட்டிலில் தான் திரும்பியும் வந்தோம். எங்களுக்கு எனத் தனி ஷட்டிலாகவும் கிடைத்தது. மசாலா தோசையை ரங்க்ஸும், சீஸ் தோசையைப் பையரும், சாதா தோசையை நானும் சாப்பிட்டோம். மருமகளும் குழந்தையும் சீஸ் பிட்சா சாப்பிட்டார்கள். குழந்தை ஒரு சின்னத் துண்டு மட்டும் சாப்பிட்டாள். அவளுக்கு இவ்வளவு கூட்டம் இத்தனை மனிதர்கள் என்னும் ஆச்சரியம் விலகவில்லை என்பதோடு அப்பா, அம்மாவை இறுக்கிக் கட்டிக் கொண்டிருந்தாள். அதோடு இல்லாமல் வாணவேடிக்கையைச் சிறிது நேரம் பார்த்தாள். பின்னர் அந்தப் புகையும் வாணங்கள் போடும் சப்தமும் அவளுக்குப் பிடிக்கவில்லை.
கோயிலுக்கு இடப்பக்கம் மேளா நடந்த இடம். பல நாற்காலிகள் போட்டு மக்கள் நிறைந்திருந்தார்கள். எதிரே ஒரு திரைப்படத் திரை வைக்கப்பட்டிருந்தது. அதில் கலாசார நிகழ்ச்சிகள் காட்டுவார்கள் என்று பேசிக்கொண்டனர். அந்தப் பக்கம் கூட்டம் அதிகமாக இருந்ததால் நாங்கள் போகவில்லை. அதைத்தாண்டி இந்தப்பக்கம் தான் உணவுக்கடைகள் இருந்தன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இடத்தில் போய் டோக்கன் வாங்க வேண்டும். நாங்களும் வரிசையில் நின்றாலும் பையர் தானே போய் டோக்கன் வாங்குவதாகச் சொல்லிவிட்டார். அவருக்குத் தான் நேற்று அதிக சிரமம். இதில் குழந்தையை வேறே கூட்டத்தில் கீழே விடமுடியவில்லை. மகனும் மருமகளும் மாற்றி மாற்றித் தூக்கி வைத்துக்கொண்டார்கள். எங்களால் தூக்க முடியாது. எங்களைத் தூக்கிக் கொண்டே நடக்க முடியலை. அதோடு புது இடம் என்பதால்குழந்தையும் பயப்பட்டாள்.
ஊரில் எல்லோரும் தூங்கி கொண்டிருப்பதால் மீ பர்ஸ்ட்
ReplyDeleteவருக, வருக!
Deleteஉங்கள் வீடியோ வேலை செய்யவில்லை This video format is not supported. என்று வருகிறது
ReplyDeleteஇப்போக் கூடப்பார்த்தேன். நல்லா வருது. இது சும்மா ஒரு சோதனை தான்! வீடியோ எடுப்பேனே தவிரப் பதிவுகளில் போட்டதில்லை. அதான் முயற்சி செய்தேன். உங்களுக்கு ஏன் வரலைனு தெரியலை.
Delete
ReplyDelete///கையில் மேதி பகோடாவுடன் //// என்பதை படிக்கும் போது மோதி பக்கோடா என்று படித்துவிட்டேன்
ஹாஹாஹாஹா! எழுதும்போதே உங்களையும் கில்லர்ஜியையும் தான் நினைத்துக்கொண்டேன். இரண்டு பேரில் யாரானும் சொல்லுவீங்கனு. இருவருமே சொல்லிட்டீங்க!
Deleteஇந்த வருடம்தான் அமேரிக்க இந்தியர்கள் திபாவளி அன்று தீபாவளி கொண்டாடப் போகிறார்கள்.... அவர்களுக்கும் உங்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி, நன்றி மதுரைத்தமிழரே. ரொம்ப நன்றி.
Delete
ReplyDeleteபுத்தாண்டு அன்று உங்கள் பேரக் குழந்தையுடன் நீயூஜெர்ஸியில் இருக்கும் பாலாஜீ கோவிலுக்கு வந்து பாருங்கள் அதன் பின் நீங்கள் இருப்பது திருப்பதி கோயிலிலா அல்லது நீயூஜெர்ஸியில் உள்ள கோவிலா என்ர சந்தேகமே வந்துவிடும்
மதுரைத்தமிழரே, எனக்கும்/எங்களுக்கும் அங்கெல்லாம் வர ஆசை தான். ஆனால் இந்தச் சாப்பாடு விஷயம் தான்! எங்களுக்குப் பயணத்தில் சாப்பாடு விஷயத்தில் ரொம்பக் கவனமாக இருக்க வேண்டி இருக்கு. அதற்காகவே சுற்றிப்பார்க்கப் போவதில்லை. இந்தியா எனில் அது வேறே விஷயம்.
Delete//நீலத்தில் இருந்து ஊதாக்கலருக்கு மாறியப்போ எடுக்க நினைச்சு மறுபடி நீலமே வந்து விட்டது//
ReplyDeleteஹா.. ஹா.. ஹா.. பாலு மகேந்திரா நினைவுக்கு வந்தார்.
//கையில் மேதி பகோடாவுடன்//
சடக்குனு மோதி என்று படித்து விட்டேன் பிறகுதான் மேதி என்று சரியாக படித்தேன் ஹி.. ஹி..
காணொளி கண்டதில் அலைபேசியில் இருந்த 8 GB data செலவாகி விட்டது.
//இவ்வளவு கூட்டம் இத்தனை மனிதர்கள் என்னும் ஆச்சரியம் விலகவில்லை//
நானும் பலமுறை நினைப்பதுண்டு ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு இந்தியர்கள் வாழ்கிறார் ?
இவ்வளவு மக்களும் இந்தியாவுக்கு திரும்பினால் இந்தியா தாங்குமா ?
"தாங்கும் இடமிருக்கிறது" ஆனால் அத்தனை பேரின் வாழ்வாதாரத்துக்கு(ம்) மோடி அரசு எப்படி சமாளிக்கும் ?
@கில்லர்ஜி, ஹிஹிஹி,காணொளி எடுக்க இப்போக் கொஞ்சம் தைரியம் வந்திருக்கு. அடுத்த முறை பாருங்க நிஜம்மாவே உங்க ஜிபி தீர்ந்துவிடும் அளவுக்கு எடுத்துத் தள்ளிடுவோம்.
Deleteநீங்க மோதியோட கூட்டத்துக்கு வந்த மக்களைப் பார்க்கவில்லையா கில்லர்ஜி?
Deleteகீசா மேடம்... இன்னொரு தடவை 'மோதி கூட்டம்' என்று எழுதாதீங்க. நான் விரதத்தில் இருக்கேன். என் மனக் கண்ணில் அந்த சடை போட்ட, வெள்ளை பனியன் போட்ட பெண் தான் வர்றாங்க. எல்லாப் படத்துலயும் அவங்கதானே இருந்தாங்க. ஹா ஹா
Delete@ Ne.Tha. :P :P :P :P
Deleteபோட்டோ எடுக்கும் போது நடந்து கொண்டே எடுக்க வேண்டாம் அப்படி எடுத்தால் படத்தில் உள்ளது போல படங்கள் கொஞ்சம் சேக்காகி வரும்
ReplyDeleteம்ம்ம்ம்ம், மதுரைத்தமிழரே, சரி! நின்று கொண்டு எடுத்தால் அவங்க எல்லாம் எங்கே போறாங்கனு கூட்டத்தில் கண்டுபிடிக்க முடியாதே! அதான் நடந்து கொண்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
Deleteமதுரைத் தமிழன்... அப்படீல்லாம் டிஸ்கரேஜ் பண்ணாதீங்க.
Deleteஉங்க பின்னூட்டம் பார்த்த பிறகுதான் அவங்க நடந்துக்கிட்டே படம் எடுத்திருக்காங்கன்னு தோணிச்சு. அதுக்கு முன்ன... இப்போல்லாம் பேய்களை அழகா படம் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்களேன்னு நினைத்தேன். சில படங்கள்ல கோஸ்ட் இருக்கற மாதிரியே இருக்கு
grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
Deleteஇந்த மாதிரி இடங்களுக்கு போகும் போது தோசா போன்ற ஐயிட்டங்களை வாங்கி சாப்பிடக் கூடாது காரணம் தோசா ஸ்பெஷலிஸ்ட்டுகளான நமக்கு அது நன்றாக இருக்காது ஆனால் நார்த்த் இண்டியர்களுக்கு அது சுவையானது. நமக்கு அங்கு சென்றால் சமோசா சாட் பேல்பூரி இது போன்ர இண்ஸ்டென்ட் ஐயிட்டங்களை வாங்கி சாப்பிட வேண்டும்
ReplyDeleteஉண்மைதான் தமிழரே, ஆனால் பிட்ஸா முதல் நாள் தான் பையர் வாங்கி வந்திருந்தார். ஆகவே அதையே எப்படிச் சாப்பிடறது! வேறே எல்லாம் ஸ்நாக்ஸ் தான்! சமோசாவைப் பார்த்தால் நம்மவர் விட மாட்டார். அது இல்லை. பாவ் பாஜி இருந்தது. அது சாப்பிட வேண்டாம், நல்லா இல்லைனு நண்பர்கள் சொல்லிட்டாங்க.
Deleteசரி மேளா பாத்திட்டு வந்திட்டீங்க உடனே அசதி அது இதுன்னு சாக்கு போக்கு சொல்லாமல் தீபாவளி பலகாரங்களை செய்ய ஆரம்பிச்சுடுங்க அப்பதான் நீங்க அனுப்பி அது எங்களுக்கு வந்து சேர்ந்து நாங்களும் தீபாவளி கொண்டாட முடியும்
ReplyDeleteஎங்க பையர் அதெல்லாம் எண்ணெய் வைத்து பக்ஷணங்கள் பண்ண ஐந்தாறு வருஷம் முன்னாடியே அனுமதிக்கலை. என் இப்போதைய உடல்நிலைக்குக் கட்டாயம் தடா போடுவார். சும்மா அன்னிக்கு மட்டும் கொஞ்சம் எண்ணெய் வைத்துத் தேன்குழல், கேசரி அல்லது குலாப்ஜாமூன் என்று பண்ணணும்.
Deleteகோயில் மேளாவிற்கு போன நீங்கள் கோயில் உள்ளே போகவில்லையா?
ReplyDeleteகோயில் உள்ளே நிற்க இடமில்லை. அவ்வளவு கூட்டம். அதான் போகலை. போனால் தரிசனம் முடிச்சு வரப் பதினோரு மணி ஆகிடும். இன்னொரு நாள் தரிசனத்துக்கு என்றே போய்க்கலாமே.வீட்டிலே இருந்து கிட்டத்தான் இருக்கு.
Deleteஅப்படியே உள்லே சென்று இருந்தாலும் பூசாரிக்கு தெரியாமல் படங்கள் எடுக்கவில்லையா?
ReplyDeleteஅந்தக் கோயிலில் அப்படி எல்லாம் விட்டுட மாட்டாங்க. வாங்கி டெலீட் செய்துட்டுக் கொடுப்பாங்க. முன் அனுமதி வாங்கணும்.
Deleteஆண்ட்டி அதிரா தூங்கி எழுந்து வர நேரம் ஆகும் என்பதால் அவர் சார்பாக நானே @ட்ருத் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று பதிந்துவிடுகிறேன்
ReplyDeleteஹாஹாஹா, அடக்கவொடுக்க அதிரடி அதிரா சனி, ஞாயிறு வரமாட்டாங்களே, தெரியாதா? இல்லாட்டி மறந்து போச்சா?
Deleteஆஆஆஆஆஆஆஅ இம்முறை ட்றுத்துக்கு என்ன ஆச்சு:)).. ஏதோ சோமபானம் அருந்தியதைப்போலவே அக்டிவா இருக்கிறாரே:)) ஹா ஹா ஹா.. கீசாக்கா இப்போதான் தேடித் தேடிப் பார்க்கிறேன், கோமதி அக்காவின் போஸ்ட்டும் வந்திருக்கு இன்று அங்கும் போய் ரீ குடிக்கோணும்:))
Deleteஅது போல ஏஞ்சல் சார்பாக @ ஹாஹா ட்ரூத் இப்பவே அந்த தூங்குமுஞ்சி பூனையை எழுப்பி விஷயத்தி சொல்லிடுறேன் என்றும் நானே போட்டுவிடுகிறேன்
ReplyDeleteஏஞ்சலுக்கும் அதே, அதே, சர்ச்சுக்குப் போயிருப்பாங்களே!
Deleteசே..சே.. இன்று ட்றுத்துக்குப் போட்டி இல்லாமல் போச்சே:))
Deleteஅது போல Thulasidharan V Thillaiakathu சார்பாக இனிய் காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா இன்னும் தொடர்பவர்கள் அனைவருக்கும்.
ReplyDeleteஅம்பேரிக்காகாரர்களுக்கு இனிய மாலை வணக்கம் என்று சொல்லிவிடுகிறேன்
துளசிதரன் படிச்சாரோ இல்லையோ, தி/கீதா இனிமேல் தான்வருவாங்க. அவங்களுக்குக் காலை நேர அவசரம், இணையப் படுத்தல்!
Deleteஅது போல Kamala Hariharan சார்பாக
ReplyDeleteகாலை வணக்கம்
அனைவருக்கும் வணக்கங்களுடன், அனைவருக்கும் இந்நாள் இனிய நன்னாளாக இருக்கவும் ஆண்டவனை மனமாற பிரார்த்திக்கிறேன். என்று சொல்லிவிடுகிறேன்
இஃகி,இஃகி,இஃகி, இன்னிக்கு பூரிக்கட்டை விழலையோ? நல்ல ஃபார்மில் இருக்கீங்க போல! கமலாவும் மெதுவாத் தான் வருவாங்க.
Deleteகாலை வணக்கம் மதுரை சகோதரரே
Deleteஹா ஹா ஹா நன்றி..நன்றி. சரி.. சரி.. இது ரொம்பவும் போரடித்து விட்டதினால் வந்த தாக்கத்தினால் வந்ததுவா? அல்லது வரிகள் நன்றாக உள்ளதினால், மனதில் ஆழமாக பதிந்து எழுந்து வந்ததுவா? எதுவானாலும், அனைவரும் என்னை மறவாமல் இருப்பது எனக்கு சந்தோஷத்தை தருகிறது. மிகுந்த நன்றிகள்.
தங்களுக்கும் வரும் தீபாவளிக்கு அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நீங்கள் வல்லிம்மா இருவரின் கருத்துகளின் ஆரம்பத்தில் இப்படி ஸ்டெண்டர்க இருக்கும் ஆனால் அது படிக்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியை தருவதால் மனதில் பதிந்துவிட்டது
Deleteஹாஹாஹா, கமலா, மதுரைத்தமிழரோட மனைவி ஊரில் இல்லையோனு சந்தேகம் வருது! அதான் பயமே இல்லாமல் வந்து இங்கே கருத்தெல்லாம் சொல்லிட்டு இருக்கார். இல்லைனா சமையல் பண்ணலையானு கேட்டு பூரிக்கட்டை வந்திருக்குமே!
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மதுரை உங்களை...நாங்களே பூரிக்கட்டை கொண்டு ஹா ஹா ஹா ஹா ஹா
Deleteஅது கீதா..
நல்லது சொல்லி ஆரம்பிக்கறதை....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மதுரை ஹா ஹா சரி சரி விட்டுப்ட்டோம். கிச்சன்ல வேலை இல்லை பூரிக்கட்டையும் பறக்கல போல அதான் இப்பூடி கமென்ட் கமென்டா போட்டுருக்கீங்க...
கீதா
அது போல நெல்லைத்தமிழன் சார்பாக
ReplyDeleteடிராவலில் இருப்பதால் பிறகு வந்து கருத்துகளை பதிகிறேன் என்று நானே பதிவிடுகிறேன் ஹீஹீ
மதுரை...
Deleteஎன் சார்பில் என்ன சொல்வீர்கள் என்று அறிய ஆவல்!
Deleteஉங்க சார்பில் போடுவதற்கு பதிலாக திங்கள் கிழமை திங்கிற பதிவுக்கு முதல் ஆளா காலை வணக்கம் வாழ்க வளமுடன் என்று போடலாம் என்று டைப் அடித்து காப்பி பண்ணி ரெடியாக் வைத்திருந்து அடிக்கடி உங்கள் தளம் வந்து பார்த்து என்னடா இன்னும் வரலையே என்று நைந்த்து கொண்டிருந்த போது மனைவி என்னை அழைத்து முருங்கை கீரை கூட்டுக்கு கீரையை ஆய்ந்து தர சொன்னாள் அதை செய்து விட்டு வந்து பார்த்த போது எல்லோரும் வணக்கம் சொல்லிட்டு போய்விட்டார்கள் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நெல்லைத்தமிழர் துலாக்காவிரி ஸ்நானத்துக்குப் போயிருக்காரோ என நினைக்கிறேன். அவர் வந்தால் முதல்லே ஏதேனும் குற்றம் கண்டுபிடிச்சுச் சொல்லிட்டு அப்புறமாத்தான் பதிவையே படிப்பார். அதுவும் அரைகுறையா! :))))))))
Delete
Deleteஸ்ரீராம் உங்க சார்பாக சொல்ல வேண்ட்மென்றால் இனிய காலை வணக்கம் கீதா துரை நெல்லை கில்லர்ஜி வல்லிம்மா. ...வாங்க.... வாங்க என்று பதிவிடவேண்டியதுதான்
haahaahaa
Deleteஎதையாவது செய்து பேர் வாங்கணும். அதில் 'குற்றம் கண்டுபிடித்து பேர் வாங்கினா டப்பா?'
Deleteபாருங்க... நீங்க, மாமா, மருமகன், குழந்தை/மருமகள் எல்லாம் என்ன சாப்பிட்டீங்கன்னு ரெண்டு தடவை போட்டிருக்கீங்க... ஹா ஹா
டிராவல்ல இல்லை மதுரைத் தமிழன்.... நான் இன்று காலை எழுந்து காய்கள் கட் பண்ணி, குனுக்கு செய்ய அரைத்துவிட்டு (மனைவி, பெண் நடு இரவு வரை படிப்பதால் அவளுடன் முழித்துக்கொண்டு இருப்பாள்), நடைப்பயிற்சி போய்ட்டு, வந்து குளித்துவிட்டு, அதன் பின்னான கடமைகளைச் செய்து ஒரு மருத்துவரைக் காணச் சென்று, பிறகு கோவில்களுக்குச் சென்று, மயிலாப்பூரில் நிறைய சந்துகளில் நடந்து, வீட்டுக்கு வந்து கிரிக்கெட் கொஞ்சம் பார்த்து, எடுத்துக்கொள்ளும் ஒரு மாத்திரை காரணமாக தூங்கி...இப்போதான் மடிக்கணினிக்கு வந்தேன்.
Deleteஐபேடில் இந்தத் தளம் வருவதில்லை (இண்ட்லி என்று விளம்பரம் வருகிறது)
நெல்லைத்தமிழரே, அது உங்க ட்ரேட் மார்க். அது இல்லைனா வேறே யாரோ உங்க பெயரிலே வந்திருப்பதாத்தோணும். இரண்டு முறை போட்டால் என்ன? முதல்லே பதிவிலே எழுதினேன். இரண்டாவதிலே படஙக்ளுக்காக எழுதினேன். ஸ்டால் கிட்டேப் போய்ப் படம் எடுக்க முடியலை. வரிசை பெரிசு என்பதோடு பையர் எங்களை வரவேண்டாம்னு சொல்லிட்டு அவரே வாங்கி வந்துட்டார். :(
Deleteமிகவும் குட்டி காணொளி. ஆரம்பிக்கும் முன்னரே முடிந்து விட்டது!
ReplyDeleteஆமா, இல்ல, ஸ்ரீராமை விட்டுட்டீங்களே!
DeleteYes Sriram. It is a trial only. video எடுத்து அதுவும் செல்ஃபி வீடியோ எடுத்து எங்க கசின்ஸ் குழுமத்தில் பகிர்ந்திருக்கேன். என்றாலும் பதிவுகளுக்கு எடுக்கும் அளவுக்கெல்லாம் எடுத்துப் போடத் தெரியாது.
Deleteசாதாரணமாக நாம் கொடுக்கும் லிங்க்குகளோ, காணொளியோ பிரிவியூவில் வேலை செய்வதில்லை என்பதை நானும் கவனித்திருக்கிறேன்.
ReplyDeleteஎனக்கென்னமோ முன்னெல்லாம் பார்த்த நினைவு இருக்கு. சோதனை பண்ணிப் பார்த்துட்டே பதிவை வெளியிடுவேன். இன்னிக்குத்தான்!
Deleteநாம் அங்கு இதுமாதிரி சமயங்களில் ஒரு தோசைக்கடை (தோசை சாம்பார், சட்னி மட்டும்) போட்டாலே வியாபாரம் பிய்த்துக்கொண்டு போகும். உண்மையான தோசை சாம்பாரின் சுவையும் மக்களுக்குக்கிடைக்கும்!
ReplyDeleteஆமாம், எங்க மாப்பிள்ளை சொல்லுவார், மாமி செய்யும் தோசையைச் சாப்பிட்டுப் பார்த்தால் தான் தோசையின் உண்மையான ருசி இவங்களுக்கெல்லாம் தெரியும் என்பார்.
Deleteஸ்ரீராம்... எனக்கு இது ஆதர்ச கனவு. உணவில் விருப்பம் அதிகம். இதனை நன்கு செய்துபோட்டால் வாங்குபவர்களும் சாப்பிடுபவர்களும் திருப்தி அடைவார்கள் இல்லையா (நம்ம பக்க தென்னிந்திய உணவு, இனிப்புகள்). நல்ல குவாலிட்டி பொருட்களை உபயோகித்துச் செய்து இந்த மாதிரி ஸ்டால் வைக்கணும் (அதற்கான பயிற்சி பெற்று) என்று எனக்கு ரொம்ப ரொம்ப ஆசை.
Deleteகீசா மேடம்... வ.வா.பி.ரி. நானே சொல்றேன். உங்க இலுப்புச் சட்டி தோசை, மிளகாய்ப்பொடி ரொம்ப நல்லா இருந்தது.
Deleteஎங்க மாப்பிள்ளைக்கும் இதான் ஆதர்ச கனவு நெல்லைத் தமிழரே. ஆனால் அதுக்கெல்லாம் இங்கே நிறையவே கஷ்டப்படணும். அனுமதி கிடைக்கக் கஷ்டமாக இருக்கும். ஆரம்பகாலச் செலவுகள் அதிகம்.
Deleteநன்றி, நன்றி.
Deleteஆமாம் கீதா அக்கா, நெல்லை... இதற்கெல்லாம் நிறைய பொறுமை வேண்டும். அர்ப்பணிப்பு வேண்டும்.
Delete@Sriram, @ Ne.Tha. true!
Deleteகீதாக்கா அங்கு கடை கூடப் போடாமல் வீடுகளில் இருந்தே சப்ளை செய்யறாங்க கொஞ்சமா அதிக அளவில் செய்ய முடியாது அதுக்கான விசா வேண்டுமே...அங்கு டிப்பெண்டன்ட் விசாவில் இருப்பவர்கள் கொஞ்சம் இப்படிச் செய்து சம்பாதிக்கறாங்க. வாஷிங்க் ரூமில் நோட்டீஸ் பார்க்கலாம். சப்பாத்தி மட்டும் இல்லைனா சப்ஜி மட்டும். தோசை, இட்லி சாம்பார் சட்னி மட்டும் என்று அதுவும்லிமிட்டெட் தான் மேட் டு ஆர்டர் என்று. இல்லை என்றால் கேஸ் ஆகிவிடும் என்பதால். சிலர் பொடிகள் செய்து கொடுக்கிறார்கள். கீதாக்கா
Deleteகீதா
ஒரு கட்டத்தில் மெம்பிஸில் இருந்தப்போ எங்க பெண்ணே 2,3 பேருக்கு (தெரிந்தவர்கள் என்பதாலும் திருமணம் ஆகாதவர்கள் என்பதாலும்) சமைத்துக் கொடுத்திருக்கிறாள். ஆனால் காசு வாங்கவில்லை. மெம்பிஸில் அப்பு பிறந்தப்போ நான் அவள் புண்யாஹவசனத்துக்கும் பெண்ணின் வீட்டு கிரஹப்ரவேசத்துக்கும் சமைத்ததைப் பார்த்து நிறைய ஆர்டர் வந்தது! :))))) பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் கோபம்! அவங்களிடம் எப்படிக் கூப்பிடலாம்னு சண்டை போட்டாங்க!
Deleteஅங்கேயும் சரி இங்கே ஹூஸ்டனிலும் சரி இம்மாதிரிக் காடரிங் ஆர்டர் எடுத்துச் செய்து கொடுக்கிறார்கள். தோசை மாவு, இட்லி மாவு, அடை மாவு என அரைத்துப் பாக்கெட் போட்டுக் கொடுக்கிறார்கள். நியூ ஜெர்சியில் என் ஓர்ப்படியின் தம்பி வீட்டில் இருவரும் வேலைக்குப் போவதால் இப்படித் தான் சாப்பாடு வாங்கிக்கொள்கிறார்கள். இதெல்லாம் இங்கே பல வருஷங்கள் முன்னாலேயே வந்துவிட்டன என எங்க பெண் சொல்வாள். வீட்டில் இருக்கும் பெண்கள் baby sitting கூடப் பண்ணுகின்றனர். ஒரு சிலர் day care மாதிரி 2,3 குழந்தைகளைப் பார்த்துக் கொள்கின்றனர்.
Deleteமாமா வழக்கம்போல அவர் பாணியில் கையைப் பின்னால் கட்டிக்கொண்டு முன்னால் வேடிக்கை பார்த்தபடி செல்கிறார்...!
ReplyDeleteகுட்டிக்குஞ்சுலுவும் அதே மாதிரித் தான்பின்னால் கையைக் கட்டிக் கொண்டு நடக்கிறது. என்னைப் போல கன்னத்தில் கை வைத்துக் கொண்டு பார்க்கிறது.
Deleteக்யூட் குட்டிக் குஞ்சுலு...!!
Deleteகீதா
தக்க வெளிச்சம் இல்லாததால் நிறைய படங்கள் அ ஆ போ வில் வந்துள்ளன!
ReplyDeletemmmmmmmmmmm???????!!!!!!!!!!!!!!!!!!
Deleteஶ்ரீராம்... சென்றமுறை மோதி படங்கள் மாதிரி இல்லாமல் படங்களில் வருபவர்கள் தெரியக்கூடாதுன்னு அவுட் ஆஃப் போகஸ் தெக்கினிக்கு உபயோகித்திருக்கிறார்... இதைக் கண்டுபிடிக்கலையே நீங்க
Delete????????????????????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Deleteஅருமையான விவரங்கள்கீதா மா.
ReplyDeleteஇங்கே தினம் வெடிவெடிக்கிறார்கள்.
பலவிதமான பட்சண தயாரிப்புகளிலும்
வாங்குவதிலும் ஒரே பிசி.
நாளைதான் கோவில் செல்ல வேண்டும்.
இந்த தடவை ஒரே கொண்டாட்டமாக இருக்கப் போகிறது .நன்றாக இருக்கட்டும்.
வண்ணப்படங்கள் அத்தனையும் ஜோர். நன்றாகத்தான் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
பட்டாசு வெடிப்பதும் நன்றாக இருந்தது. வீடியோ சுருக்க முடிந்து விட்டது.
குஞ்சுலு டைப்பிங்க் பிரமாதம்.
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
குட்டிக்கு தனி வாழ்த்துகள்.:)
ஆஹா வல்லிம்மா சார்பாக போடுவதற்கு முன்னாள் அவர் முந்திவிட்டார்
Deleteவாங்க வல்லி, தீபாவளிக்கு நீங்க ஸ்விஸ் போயிடுவீங்கனு நினைக்கிறேன். இங்கே அத்தனை பக்ஷணங்கள் பண்ணுவதைப் பையர் விரும்புவதில்லை. உடம்புக்கும் முடியாது போயிடும், வயிற்றுக்கும் பக்ஷணங்கள் ஒத்துக்காது என்பார். மற்றபடி தீபாவளி அன்று காலை குளித்துவிட்டுப் பாயசம், வடையுடன் சமையல் தான். அன்றே அமாவாசையும் வந்துடுதே.
Deleteஇப்போது இங்கே அமெரிக்கர்களின் கடைகளில் தீபாவளி பட்டாசுகள் இந்திய மிக்ஸர் இந்திய சுவீட்ஸ் ஸ்னாக்ஸ் எல்லாம் விற்க ஆரம்பித்துவிட்டார்கள் அதிலும் முக்கியமாக costcoவில் என்ன பாக்கி என்றால் சேஅலி மற்றும் வேட்டிகள் விற்காததுதான்
ReplyDeleteஅதான் சப்பாத்தி எல்லாம் கூட விற்க ஆரம்பிச்சுட்டாங்களே! காஸ்ட்கோவில் இல்லைனா என்ன? நிறைய இந்தியர்கள், பாகிஸ்தானியர்களின் துணிக்கடைகள் இருக்கின்றனவே! இங்கே மீனாக்ஷி கோயிலில் நிறையவே புடைவைகள் ரகம் ரகமாகப் போடுவார்கள்.
Deleteகாலை வணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அமர்க்களமாக உள்ளது. இந்த மாதிரி இங்கெல்லாம். கோவிலில் தீபாவளி மேளாவை நான் பார்த்ததில்லை. இங்கும் அப்படியெல்லாம் உள்ளதா எனவும் தெரியவில்லை. படங்கள் நன்றாக உள்ளது. கொஞ்சம் காலை வேலைகள் அழைக்கின்றன. மறுபடியும் பதிவை நன்றாக படித்து விட்டு வருகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, வரவுக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி. இங்கெல்லாம் கோயில்களில் தான் வெடியே வெடிக்கலாம். சிறப்பு அனுமதி வாங்குவாங்க. அன்று குறிப்பிட்ட ஓர் இடத்தில் வெடிகளை வெடிப்பாங்க. நாமும் அந்த இடத்தில் வெடிக்கலாம். மத்தாப்புக் கொளுத்தலாம்.
Deleteஸ்வாமி நாராயணன் கோவில் மிக அழகாய் இருக்கும்.
ReplyDeleteநாங்கள் Los angeles ஸ்வாமி நாராயணன் கோவில் போனோம் போன முறை மகன் வீட்டுக்கு போன போது.
படங்கள் நன்றாக இருக்கிறது. காணொளியும் பார்த்தேன்.
பேத்தி தாத்தா, பாட்டியை போல இருப்பது மகிழ்ச்சி.
வாங்க கோமதி,குஜராத்தில் கட்ச் மாகாணம் புஜ் நகரில் இந்த ஸ்வாமிநாராயணன் கோயிலின் தலைமைப்பீடம் உள்ளது. அங்கே பெண்கள் குறிப்பிட்ட தூரம் வரை தான் போகலாம். சந்நிதிக்கு அருகே போகக் கூடாது. இங்கேயும் அப்படித்தான் இருந்தது. சென்றமுறை போகவில்லை என்பதால் மறந்துவிட்டது. அந்தப் பழைமை வாய்ந்த கோயில் சாதாரணமாக ஓர் வீடுபோல் தான் இருக்கும். இப்போதைய கோயில்கள் தான் இம்மாதிரி நவீனமுறையில் எழுப்பப்படுகின்றன. இதுவே இரு வேறு முறையான வழிபாடுகள் இருக்கு என்பதால் இன்னொரு சின்ன ஸ்வாமிநாராயணன் கோயிலும் இங்கே உண்டு.
Deleteகுட்டிக்குஞ்சுலு கொஞ்சம் கொஞ்சம் என் மாமியாரையும் நினைவூட்டுகிறாள். உட்காரும்போதெல்லாம் காலை நீட்டிக்கொண்டு உட்காருவதைப்பார்த்தால் என் மாமியார் மாதிரி இருக்கும். அவங்களைப் போலவே இதுக்கும் அடிக்கடி வெளியே போகவும், உடைகள் அணிவதும் பிடிக்கிறது.
Delete"நீலத்தில் இருந்து ஊதாக்கலருக்கு மாறியப்போ எடுக்க நினைச்சு மறுபடி நீலமே வந்து விட்டது/ நாராயணன் என்பதால் நீலமாகவே காட்சி கொடுத்து விட்டார்.
ReplyDeleteநல்ல பொழுது. தீபாவளி வாழ்துகள்.
ஹாஹாஹா, மாதேவி, அப்படியும் இருக்கலாம். வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
Deleteகாணொளி சரியாவே வந்திருக்கு. ஓரிரு விநாடிகள்தான்.
ReplyDeleteஆமாம் உணவு ஸ்டால் பக்கத்துல போட்டோ எடுக்கலையே.
உணவின் விலைப்பட்டியலையும் சொல்லலை. இனிப்புகள்லாம் அங்க விற்றார்களா?
குழந்தையின் 'aaaaaaaaaa' நெகிழ்ச்சி.
இருவரும் குழந்தையைத் தூக்கிக்கொள்ளவில்லையே ஓரு நிமிடமாவது.....
இனிப்புகள் எதுவும் இல்லை நெல்லைத்தமிழரே! குறிப்பிட்ட சில உணவுகள் தான். அதுவும் கோயில் நிர்வாகத்தால் நடத்தப்பட்டதுனு நினைக்கிறேன். தனியாருக்கு விட்டிருந்தால் இன்னும் அதிகம் உணவு வகைகள் இருந்திருக்கலாம்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteகாலையில் அவசரமாக படங்களை பார்த்தேன். பதிவும் அப்படித்தான்.!படங்கள் நன்றாக எடுத்துள்ளீர்கள். நம்மவர்கள் நிறைய பேரை பார்க்கும் போது இது வெளிநாடா என்ற சந்தேகம் வருகிறது. இங்கு இந்த மாதிரி இடங்களில்தான் நம்மூர் உணவு ஐட்டமோ? சாதரண நாட்களில் இவ்வளவு கூட்டம் இருக்காது இல்லையா? ஒரே இடத்தில் நம் தேச மக்களை காணும் போது கூடுதல் மகிழ்ச்சிதான்..!
கோவில் அழகாக உள்ளது. சுவாமி நாராயணன் கோவில்.. பெயரே அழகாக உள்ளது. மூலஸ்தானத்தில் நாராயணன் நம் திருப்பதி வேங்கடவன் போல நின்ற கோலமா? காணொளியும் அழகாக வந்துள்ளது. வாண வேடிக்கை ஒரு விநாடி தெரிந்தது.
தங்கள் பேத்தி தாத்தா, பாட்டியின் சுபாவங்களை பெற்றிருப்பது குறித்து மகிழ்ச்சி. பகிர்வுக்கு மிக்க நன்றி.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் முன்னதாகவே தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மீள் வரவுக்கு நன்றி கமலா. சாதாரண நாட்களிலும் முக்கியமாய் சனி,ஞாயிறுகளில் எல்லாக் கோயில்களிலும் கூட்டம் காணப்படும். அதுவும் மீனாக்ஷி கோயிலில் அடிக்கடி கச்சேரிகள், நாடகங்கள், சொற்பொழிவுகள் என நடக்கும். அதுக்கெல்லாமும் கூட்டம் வரும். முன்னர் வந்தப்போ சுகி சிவம் சொற்பொழிவு, காத்தாடி ராமமூர்த்தி நாடகம் எல்லாம் பார்த்தோம்.
Deleteஅப்புறமா நீங்க நினைக்கிறாப்போல் இது பெருமாள் கோயிலெல்லாம் இல்லை. இங்கே தமிழகத்தில் ஐயா வைகுண்டம் அவர்களின் வழியைப் போல், கேரளாவில் நாராயண குருவின் வழியைப் போல, அமிர்தானந்த மயியின் வழியைப் போல் இது ஒரு தனி வழி! என்றாலும் பெரும்பாலும் இந்துக்கள் அதிலும் குஜராத்தியரே இருக்கின்றனர். மற்ற மாநிலங்களிலும் இவரை குருவாகக் கொண்டு பின்பற்றுபவர்கள் உண்டு. கோயிலுக்குப் போய்விட்டு வந்தப்புறம் படங்களோடு இதைக் குறித்து விரிவாக எழுத முயல்கிறேன். ஜக்கி வாசுதேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆகியோரைப் போல் இவர் ஒரு தனி குருநாதர்.
காணொளி சரியா வருது கீதாக்கா.
ReplyDelete//அதையும் வாங்கிக் குடித்தவர்கள் உண்டு//
அதென்னவோ சரிதான். அங்கு நம்மவர்களுக்கு ஒரு சிலருக்கு எது எப்படிக் கொடுத்தாலும் வாவ் என்று சாப்பிடுவார்கள்.
படங்கள் நீங்க நடந்து கொண்டே எடுத்திருக்கீங்கனு தெரியுது கீதாக்கா...பரவால்லை இத்தனையாவது எடுக்க முடிந்ததே.
அட்வான்ஸ் ஹாப்பி தீபாவளி.
கீதா
வாங்க தி/கீதா, அந்த சாம்பாரை வாங்கிக்குடித்தவங்க எல்லாம் அநேகமா வட இந்தியர்கள். நன்றி வாழ்த்துகளுக்கு.
Deleteஇப்ப்டியான ஒரு கோயில் பற்றி இப்போதுதான் அறிகிறேன்.
ReplyDeleteஅங்கும் தீபாவளி மேளா நடப்பதும் தெரிந்து கொண்டேன். ஓணத்தின் போதும் கேரளத்தவர் அங்கு அந்தந்தப்பகுதியில் உள்ளவர்கள் சேர்ந்து கொண்டாடுகிறார்கள் என்பதும் அறிந்ததுண்டு.
எங்கள் பகுதியில் மழை அதிகம் பெய்யத் தொடங்கிவிட்டது. ஆரஞ்ச் அலர்ட் கொடுத்திருக்கிறார்கள் கரன்ட் இருக்காது. மலைச்சரிவும் இருக்கலாம் என்றும் சொல்லபப்டுகிறது. செவ்வாய் முதல் லீவும் விடப்படலாம். அப்புறம் மீண்டும் சரியாகும் வரை ப்ளாக் வாசிக்க முடியுமா என்பதும் தெரியவில்லை. முன்பு போல் சேதம் எதுவும் இன்றி இருக்க வேண்டும்.
துளசிதரன்
இங்கே "பாரதி கலை மன்றம்" என்னும் பெயரில் தமிழ்ச்சங்கம் இருக்கிறது. மீனாக்ஷி கோயில் தான் அடிப்படை! அடிக்கடி கலை நிகழ்ச்சிகள் நடக்கும். இம்மாதிரி மேளாக்கள் நடக்கும். தீபாவளி மேளா அநேகமாகப் பல வருஷங்களாக நடைபெற்று வருகிறது. மற்றக் கோயில்களில் விற்பனைக்கு ஏதேனும் வைத்திருப்பார்கள். இங்கே அப்படி இல்லை. இந்தக் கோயிலிலேயே சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாக மேளா நடைபெற்று வருகிறது என்றும் ஆனால் அவங்க இருவரும் இப்போத் தான் முதல்முறையா எங்களோடு வருவதாகவும் பையர்/மருமகள் இருவரும் சொன்னார்கள். 2,3 முறை மீனாக்ஷி கோயில் மேளாவுக்குப் போயிருக்கிறார்கள். ஒருமுறை எங்களையும் அழைத்துச் சென்றனர். அப்போக் கார் பார்க்கிங்கில் இருந்து கோயிலில் மேளா நடக்கும் இடம் செல்ல மினி பேருந்து விட்டிருந்தார்கள் கோயில் சார்பில்.
Deleteஅக்கா உங்க அம்பேரிக்கா சுவாமி நாராயண் கோவில் எங்க லண்டன் கோவில் மாதிரியே இருக்குமா ??லண்டந்து சூப்பர் அழகு ..நானா வெளிலருந்துதானே பார்த்தேன் . அந்த மேத்தி பஜ்ஜி பக்கோடாக்காரர்க்கு :) நீங்க படமெடுத்தது தெரில :) ஹஹ்ஹ தோசை இட்லில்லாம் நம்ம ஊர்தான் இங்கே எல்லாத்திலயும் சோடா சேர்த்துடுவாங்க .வட இந்தியர்கள் சோள மாவை சேர்த்து க்ரிஸ்பியா செய்றேன்னு சொதப்பறாங்க .
ReplyDeleteநீங்க அதிரசம் முறுக்கு செய்யலையா ?
தொட்டுக்க குஜராதாத்தி கடி // இப்போ பூனைக்கு நானே சொல்லிடறேன் மியாவ் கடி /Kadhi அப்டின்னா நம்மூர் மோர்குழம்பில் கடலைமாவு கலந்து தாளிச்சது .இங்கே சண்டே ஹலோவீனோடு தீவாளியும் கலக்கலா இருக்கப்போது
எனக்கும் லண்டன் வர ஆசைதான் ஏஞ்சல்! :)))) ஆனால் லண்டனுக்கெல்லாம் போனதே இல்லை. அதனால் அந்தக் கோயில் அங்கே எப்படி இருக்கும்னு தெரியாது. ஆனால் குஜராத் அஹமதாபாதிலும், தில்லியிலும் இருப்பதைவிடச் சின்னது தான். புஜ்ஜில் இருக்கும் முக்கியக் கோயிலை விடப் பெரியது.
Deleteகுஜராத்தி கடி முற்றிலும் வேறுமுறை ஏஞ்சல். கடலைமாவு உண்டு. ஆனால் நம்ம ஊர் மோர்க்குழம்புக்கும் இதுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. விரைவில் செய்துட்டு எழுதறேன்.
Deleteஇல்லை, இங்கே பையர் தலையைச் சுற்றிச் சுற்றி ஆட்டினால் தான் செய்யலாம்.அவர் வல, இடமாக ஆட்டுகிறார்.அதனால் நோ பக்ஷணம்! :(
Deleteகாணொளி வருது வாணவேடிக்கையுடன் .ரொம்ப ஷார்ட்டா எடுத்ததா
ReplyDeleteஇஃகி,இஃகி,இஃகி,இஃகி, ஆமாம்.
Deleteஆஆஆஆஆஆஆஅ மீதான் 100 ஊஊஊஊஊஊஊஊ:))..
ReplyDeleteபோனமுறை படங்கள் நல்லாயிருக்கு எனச் சொன்னதால இம்முறை.. ஓடிக்கொண்டே படமெடுத்திருக்கிறீங்க ஏதோ தான் பெரிய ஃபோட்டோகிராபர் எனும் நினைப்பு கீசாக்காவுக்கு கர்ர்:)).. உங்களுக்கு நடந்து நடந்து எடுப்பதெல்லாம் சரிவராதாக்கும்:)) நீங்க ஓரிடத்தில இருந்து கொண்டே ஒம்பேது படமெடுத்துப் போடுங்கோ கீசாக்கா:)) ஹா ஹா ஹா..
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சங்கமித்திரை, துங்கபத்ரா அதிரா, கூட்டத்தில் நான் பாட்டுக்கு நின்று கொண்டு படம் எடுத்துக்கொண்டு இருந்தேன் எனில் அவங்கல்லாம் எங்கே போனாங்க என்றே கண்டு பிடிக்க முடியாது. அதான் நடந்து கொண்டே படம் எடுக்க வேண்டி வந்தது.
Deleteவீடியோ நல்லா இருக்கு.. எனக்கும் வெளிநாட்டில் கரும்புச்சாறு பெரிசாப் பிடிக்கவில்லை.. ஊரில் குடிச்சுப் பார்த்ததில்லை:)) கரும்பு சாப்பிட்டிருக்கிறேன்:))..
ReplyDeleteஆஆஆஆஆஆ பார்த்தீங்களோ குஞ்சுலு என்ன அழகா அதிரா அத்தையின் பெயரை எழுதிப் பழகுறா ஆஅவ்வ்வ்வ் அடுத்து t எழுதப் பழக்குங்கோ கீசாக்கா:)) ஹா ஹா ஹா இதுக்கு மேலயும் இங்கின நிண்டால் ஆபத்து:))
கரும்புச்சாறு மட்டுமில்லை அதிரடி, பழங்கள், காய்கள், எல்லாமே நம்ம நாட்டில் தான். நம்ம நாட்டுக்கு அப்புறமாத் தான் மற்ற நாடுகள். சாக்லேட் கூட இந்தியச் சாக்லேட்டின் உறை போடக் காணாது வெளிநாட்டுச் சாக்லேட்டுகள். ஸ்விஸ் சாக்லேட் நல்லா இருக்கும்னு சொல்றாங்க. ஆனால் அப்படி ஒண்ணும் நல்லா இல்லை.
Deleteகுஞ்சுலுவுக்கு நீங்க அத்தை இல்லை. அத்தைப்பாட்டி! இஃகி,இஃகி,இஃகி. அதிரடி இது எப்பூடி இருக்கு?
Delete