எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, November 26, 2019

படம் பாருங்க, படக்காட்சி மட்டும்!





   
                                              அறுபத்து மூவர்களில் சிலர்
                                           

கந்த சஷ்டிக்கு மறுநாள் போனோம், கோயிலுக்கு. முருகன் வள்ளி, தெய்வானையோடு சஷ்டி அலங்காரத்தில் காட்சி அளித்தான். 




ராம, லக்ஷ்மணர், சீதையுடன்


நம்ம ஆஞ்சி!


மதுரை மாதிரி இங்கேயும் வலது பாதம் தூக்கி ஆடும் நடராஜர்!




                                                        நம்ம மீனாள்! 

Sunday, November 24, 2019

சில, பல விமரிசனங்களுக்குப் பின்னர் மீனாக்ஷி கோயில் தொடரும்!

பொதுவாக நம் நாட்டில் இருக்கும்போது நான் திரைப்படங்களோ அல்லது நெடுந்தொடர்களோ அதிகம் பார்ப்பது இல்லை. சாயங்காலம் ஒரு ஒன்றரை மணி நேரம் அது என்னவாக இருந்தாலும் பார்த்துத் "தொலைப்பதை" (இஃகி,இஃகி) ஒரு கடமையாக ஆற்றி வருகிறேன். ஆனால் இங்கே வந்தால் அரிய படங்கள், அரிய தொலைக்காட்சித் தொடர்கள் எனப் பார்ப்பேன். பார்ப்பது மத்தியான நேரங்களில் தான். இங்கே மத்தியானம் அதிகம் வேலை இருக்காது. கிடைக்கும் இரண்டு மணி நேரத்தில் அப்படிப் பார்த்த படங்களில் சிலவற்றுக்குத் தான் விமரிசனம் எழுதினேன். அதைத் தவிரவும் ஸ்பெஷல் 26, ரோமியோ,அக்பர், வால்டர், பர்ஃபி, கேசரி ஆகிய படங்கள். இவற்றில் ஸ்பெஷல் 26 சிபிஐ அதிகாரிகளாக நடித்துக் கொள்ளை அடிக்கும் இரு நண்பர்கள் ஆன அஜய் சிங், பி.கே.ஷர்மா ஆகியோரைப் பற்றியும் அவர்கள் கொள்ளை அடிக்கும் விதமும் பற்றி. அஜய்சிங்காக அக்ஷய் குமாரும், பி.கே.ஷர்மாவாக அனுபம் கேரும் நடித்திருக்கிறார்கள். காஜல் அகர்வால் அஜய்சிங் அக்ஷய் குமாரைக் காதலிக்கும் பெண்ணாக வருகிறார்.

special 26 க்கான பட முடிவு

அவரை விளம்பரப் படங்களில் தான் பார்த்திருக்கேனே தவிர்த்து நடித்த படம் எனப் பார்த்தது இது ஒன்று தான். இவர்களைச் சிக்கவைக்கும் சிபிஐ அதிகாரி வாசீம் கானாக வருபவர் மனோஜ் வாஜ்பேய். நன்றாகத் திட்டம் போடுகிறார் தன் கூடவே இருப்பது யார் எனத் தெரியாமல். கடைசியில் அவர் போட்ட திட்டம் எதிராளிகளுக்கு நன்றாகப் பலன் அளிக்க, சிபிஐ குற்றவாளிகளைக் கண்டறியும் வேளையில் பி.கே. ஷர்மாவும், அஜய் சிங்கும் அவரவர் மனைவியுடன் ஷார்ஜாவில் நடக்கும் கிரிக்கெட் விளையாட்டைக் கண்டு களித்துக் கொண்டிருக்கின்றனர். நடக்கும் விஷயம் தான். சொல்லிப் போயிருக்கும் விதம் அருமை. 2013 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கும் இந்தப் படம் கொஞ்சம் நகைச்சுவைக்காட்சிகளோடு இருக்கிறது. அதிலும் அனுபம் கேர் வரிசையாகக் குழந்தைகள் பெற்றுக் கொள்வது! இஃகி,இஃகி!

romeo akbar walter க்கான பட முடிவு

அடுத்து 2019 ஆம் வருஷம் வெளியான ரோமியோ, அக்பர், வால்டர் படம் கிட்டத்தட்ட "ராஜி" மாதிரித் தான். ஆனால் இங்கே உளவு பார்க்கச் செல்லுவது வங்கி ஒன்றில் வேலை பார்த்து "ரா"வால் உளவு பார்க்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆண்மகன். தந்தை ராணுவ வீரர் ஆனாலும் அவர் தாய்க்கு அவர் ராணுவத்தில் சேர்வது பிடிக்கவில்லை என்பதால் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். தற்செயலாக அவர் வங்கியில் நடக்கும் ஓர் கொள்ளையை அடக்கப் போய், அந்தக் கொள்ளையே ஓர் நாடகம் என்றும் அவர் உளவாளிப் பயிற்சிக்குத் தக்கவாரா எனப் பார்க்க நடந்தது என்றும் பின்னால் தெரிய வருகிறது. தாயிடம் தான் வேலை நிமித்தம் பயிற்சிக்குப் போவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்புகிறார். அங்கேயே முழுக்க முழுக்கப் பாகிஸ்தானியாகவே ஆகி விடுகிறார். இதில் ஜான் அப்ரஹாம் ரோமியோவாக வருகிறார். "ரா"வின் தலைமைப் பீடத்தில் ஸ்ரீகாந்த் ராயாக வருபவர் ஜாக்கி ஷெராஃப்.

கதைக்களம் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் எழுபத்தி ஒன்றாம் ஆண்டு நடந்த போர். கிழக்கு வங்காளம் எனப்படும் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் தங்களை ஆண்ட மேற்கு பாகிஸ்தானில் இருந்து விடுதலை பெற நடத்திய போராட்டத்தின் அடிப்படையில். பாகிஸ்தான் எப்படி இந்தியாவைத் திடீர்த் தாக்குதல் நடத்த முயன்றது என்பதில் இருந்து பங்களா தேஷாக ஆகப் போகும் நாட்டின் மக்களை இந்தியா எப்படி விடுவித்தது என்பது வரை அழகாய்த் திட்டம் போட்டு நடத்துவதைக் காட்டுகிறார்கள். நமக்கு தேசபக்தி அதிகமா? ரத்தம் ஒரே கொதி! அடக்கி வைச்சேன். நல்ல படம். கட்டாயமாய்ப் பார்க்கலாம். புத்தம்புதுப்படம்!

barfi movie க்கான பட முடிவு


barfi movie க்கான பட முடிவு
அடுத்தது பர்ஃபி. 2012 ஆம் ஆண்டில் வந்திருக்கிறது. இதில் வாய் பேசமுடியாத காது கேட்காத இளைஞனுக்கும், ஆடிஸம் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் நேசம். மகத்தானதொரு காவியம். ஆடிஸம் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணாக வருபவர் (ஜில்மில் என்னும் பெயர்) ப்ரியங்கா சோப்ரா. ரிஷி கபூரின் பிள்ளை ரன்பீர் கபூர் காது கேட்காத வாய் பேச முடியாத பர்ஃபி. இருவரும் கடைசி வரை ஒன்றாக இருந்து கடைசி நிமிடங்களில் கூடப் பிரியாமல் இருப்பது தான் முக்கியக் கரு. நடுவில் பர்ஃபியைக் காதலிக்கும் (ஒருதலைப்பட்சமாக என்றாலும் பர்ஃபி அந்தக் காதலை அங்கீகரிக்கிறான்.)பெண்ணாக வரும் இலியான டீ க்ரூஸ். அவரும் வங்காளப் பெண்ணாக நன்றாகவே நடிக்கிறார். பணத்துக்காக (ஜில்மில்) மனநிலை சரியில்லாத பெண்ணைக் கடத்தி ஒளித்து வைத்துவிட்டு இறந்து விட்டதாகப் பொய் சொல்லும் பெண்ணின் தந்தையாக வருபவர் ஆஷீஷ் வித்யார்த்தி. எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். ரன்பீர் கபூருக்கு ராஜ்கபூரின் உடல் மொழி நன்றாக வசப்பட்டிருக்கிறது. படம் பார்க்கலாம்.

kesari movie க்கான பட முடிவு

அடுத்து கேசரி. இஃகி,இஃகி, சாப்பிடற கேசரியை நினைச்சால் அதை நிறுத்துங்க. இந்தப் படமும் 2019 ஆம் ஆண்டில் தான் வந்துள்ளது. சீக்கியர்களின் பகடி(தலைப்பாகை)  கேசரி நிறத்தில் இருக்கும். அந்தப் பகடியை மற்றொருவர் தொட விட மாட்டார்கள். இந்தக் கதை ஆரம்பக் கால பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ராணுவத்தில் இருந்த சிக் ரெஜிமென்டில் இருந்த சீக்கியர்கள் சிலரைக் குறித்தும் அவர்கள் தலைவன் ஹவில்தார் (இஷார்சிங்காய் நடிக்கும் அக்ஷய் குமார்) பற்றியும் கதை. இந்திய ஆஃப்கன் எல்லைப் பகுதியில் நடக்கும் கதை. ஆஃப்கன் பதான்கள் கூட்டமாக வந்து இவர்களைத் தாக்குவதையும் கோட்டையை எரித்து அழித்து நாசமாக்குவதையும் பார்த்தால் மனம் பதறுகிறது. பதான்கள் எல்லோரையும் கொன்று விட்டாலும் இஷார்சிங்குக்குக் கொடுத்த வாக்கின்படி எந்த சர்தாரின் பகடியையும் தொடவில்லை. பகடியோடேயே அவர்களை விட்டு விடுகிறான். இவர்களின் வீரத்தைக்கேலி செய்யும் ஆங்கிலேய ராணுவ அதிகாரி பின்னால் இவர்களின் வீரத்தை உணர்கிறான். இவர்கள் தியாகத்தால் அருகே இருக்கும் மற்ற இரு கோட்டைகள் காப்பாற்றப்படுகிறது. பிரிட்டிஷ் அரசு பாரளுமன்றத்தில் இவர்களுக்காக2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியதாகவும் இவர்களுக்கு Indian Order of Merit (equal to விக்டோரியா க்ராஸ்) பட்டம் கிடைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இது சரித்திரம்.

kesari movie க்கான பட முடிவு

படங்களுக்கு நன்றி கூகிளார்


இப்போது தினம் கொஞ்சம் கொஞ்சமாகப்பார்ப்பது தி க்ரவுன் என்னும் நெடுந்தொடர். தற்போதைய ராணி எலிசபத்தின் கதை! அவர்  உயிருடன் இருக்கும்போதே படமாக்கப்பட்டிருக்கிறது. அதுவும் உண்மை நிகழ்வுகள். ராணியின் திருமணம், கணவர் ஃபிலிப்புடனான வாழ்க்கை, இருவருக்கும் எற்படும் மனத்தாங்கல்கள், ராணியாவதற்கு முன் ஏற்படும் பிரச்னைகள், குடும்பத்தில் ஏற்படும் கோளாறுகள், தங்கை மார்கரெட்டால் அவள் காதலால் ஏற்படும் சிக்கல்கள் என அணு அணுவாக விவரித்திருக்கிறார்கள். ராணியின் முடி சூட்டு விழாவில் ராணியின் கணவர் ஃபிலிப் ராணிக்கு எதிரே மண்டியிட வேண்டும் என்று சொல்லுவதும் முதலில் மறுக்கும் எடின்பரோ கோமகன் பின்னர் எலிசபெத் மனைவியாக இல்லை, இப்போது இது ராணியின் உத்தரவு எனச் சொன்னதும் மண்டி இட்டு வணங்குவதும் அருமை. ஒரு ராணியாக இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பதும் நிர்வாகம் சுலபம் அல்ல என்பதும், பிரபுக்கள் சபையிலும், சாமானியர்கள் தலைவர்களுக்கும் ஏற்படும் மோதலும் சர்ச்சிலின் மேல் நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொண்டு வர அப்போது லண்டனில் ஏற்பட்ட பனியையும் அதன் மூலம் ஏற்பட்ட குழப்பத்தையும் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல்வாதிகளும்! அருமை என்று சொன்னால் போதாது. என்ன இருந்தாலும் அவங்கல்லாம் இயல்பாகவும் துணிச்சலாகவும் உள்ளதை உள்ளபடிச் சொல்லிப் படம் எடுப்பது போல் நமக்கு வராது! "பொன்னியின் செல்வன்" எல்லாம் நல்லவேளையா எடுக்கலை. பிழைச்சோம். இங்கே உடையிலிருந்து ஆபரணங்கள் வரை எல்லாவற்றையும் நுணுக்கமாகக் கவனித்து எடுத்திருக்கிறார்கள்.

The Crown க்கான பட முடிவு

வெஸ்ட் மினிஸ்டர் அபே, பக்கிங்காம் அரண்மனை எல்லாம் உண்மையானது போலவே அமைப்பு! பிரமிப்பாக இருக்கிறது. நடிப்பும் இயல்பாக வந்திருக்கிறது. அனைவரும் அவரவர் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அரண்மனையின் ஒரு பகுதியில் வசிக்கும் இளவரசி மார்கரெட் இன்னொரு பகுதியில் வசிக்கும் தன் அக்கா ராணி எலிசபெத்தைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வது அந்தக் காலங்களில் தொலைபேசி இணைப்பை எப்படிக் கொடுத்திருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியவருகிறது. ராணியின் முடிசூட்டு விழா தொலைக்காட்சியில் (அங்கே அப்போவே வந்திருக்கு) ஒளி பரப்பலாமா என்பதற்கான சர்ச்சை!

The Crown க்கான பட முடிவு

பின்னர் தன் பெரியப்பா வின்ட்சர் கோமகன், (பட்டத்தைக் காதலுக்காகத் துறந்தவர்) எட்வர்ட் பார்க்க வேண்டும் என்பதற்காக ஆர்ச் பிஷப்பிடம் சொல்லி அனுமதி வாங்கும் இடம், தன் பெரியப்பாவுக்கு மட்டும் முடிசூட்டு விழாவுக்கு அழைப்பு அனுப்புவதும், அவர் மனைவிக்கு அழைப்பு அனுப்பாமல் இருப்பதும் கண்டு வருந்துவது, ஆனால் தன்னால் ஏதும் செய்ய முடியாமல் இருப்பது. கடைசியில் வின்ட்சர் கோமகன் தன் மனைவியை மதிக்காத இடத்தில் தனக்கும் வேலை இல்லை என்று சொல்லி முடிசூட்டு விழாவுக்கு வர மறுப்பது! வின்ஸ்டன் சர்ச்சில் லார்ட் மவுன்ட்பேட்டனைச் செய்யும் கிண்டல், "இந்தியாவைக் கொடுக்கும்போது மனைவியையும் சேர்த்துக் கொடுத்துவிட்டான்" என்று சொல்கிறார்.  எதைச் சொல்லுவது! எதை விடுவது! சரித்திரமே அங்கே படமாகிக் கொண்டிருக்கிறது.