எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, November 12, 2019

இன்னும் 3 படங்கள்!

அடுத்தாப்போல் இரு ஆங்கிலப் படங்கள். ஒரு தமிழ்ப்படம், இந்தியத் திரைப்பட வரலாற்றிலேயே முதல் முதலாக ஆகஸ்ட் மாசம் 23ஆம் தேதி 2019 ஆம் ஆண்டில் வந்த படத்தைப் பார்த்துட்டேனே! ஹையா! ஜாலி! எடுத்த எடுப்பில் உம்மாச்சி படத்தைக் காட்டினாங்க. அதுவும் வெங்கடாசலபதி. கடைசியிலே பார்த்தால் இது டிவிஎஸ் காரங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்க எடுத்த படமாம். டிவிஎஸ் அவர்களின் மகனான டி.எஸ்.கிருஷ்ணாவின் பிள்ளை சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன் நிக்கி சுந்தரம் எடுத்த படமாம். எல்லாத் துறையிலும் புகுந்த டிவிஎஸ் குழுமம் சினிமாத் துறையிலும் புகுந்தது நல்லது என்றாலும் அவங்க பேரனே நடிச்சிருப்பது கொஞ்சம் சரியாத் தெரியலை. அதுவும் நிக்கி சுந்தரத்துக்கு நடிப்பே வரலை! ஒரே மாதிரி முகபாவத்தோடு நடிக்கிறார். அதுக்குக் கதாநாயகியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் பரவாயில்லை ரகம்.   படத்தோட பெயர் "மெய்". உடம்புனும் அர்த்தம் எடுத்துக்கலாம். உடல் உறுப்புக்களைத் திருடுவதால், உண்மையைத் தேடிக் கண்டு பிடிப்பதால் உண்மைனும் அர்த்தம் எடுத்துக்கலாம்.

மெய் விமர்சனம் க்கான பட முடிவு

உடல் உறுப்பு தானம் பற்றியும், அதை விளம்பரப்படுத்தவுமே எடுக்கப்பட்ட படம் என்கிறார்கள். ஆனால் படத்தின் கதைக்கரு இந்த உறுப்பு தானத்திற்காக நல்ல உடல்நிலையில் இருப்பவர்களின் உறுப்புக்களை, முக்கியமாகச் சிறுநீரகங்களைத் திருடும் வணிக ரீதியாகச் செயல்படும் மருத்துவமனைகள், மருத்துவர்கள் ஆகியோரைப் பற்றிய படம். கதைப்படி (நிஜம்மாகவும்?) அம்பேரிக்காவில் மருத்துவம் படிக்கும் அபிநந்தனுக்கு ஹவுஸ் சர்ஜன் பயிற்சியின் போது அவன் மிகவும் பாசமும் அன்பும் வைத்த, அவன் மருத்துவராகிச் சேவை செய்ய வேண்டும் என நினைத்த அவன் தாய் இறந்து போகவும் மனம் வருந்தித் தொழிலில் கவனம் செலுத்தாமல் இருக்கிறான். அவன் மனம் மாற வேண்டி அவன் தந்தை அவனை இந்தியாவுக்குத் தன் சிநேகிதனிடம் அனுப்பி வைக்க, மருந்துக்கடை வைத்திருக்கும் அந்த சிநேகிதன் வீட்டில் வந்து தங்கும் அபிக்கு ஏற்படும் சிக்கலான அனுபவங்களே கதை! அதிலிருந்து எப்படி மீண்டான் என்பதும் பின்னர் அவன் இந்தியாவிலேயே மருத்துவமனை ஒன்றை ஏற்படுத்திக் கதாநாயகியைத் திருமணமும் செய்து கொண்டு வாழ்க்கை நடத்துவதும் தான் கதை!

மெய் விமர்சனம் க்கான பட முடிவு

நடுவில் காணாமல் போன தன் மகள் பற்றி அறியத் துடிக்கும் சார்லி, இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன்,கிஷோர் என்பவராம், பார்க்க விநோத் கன்னாவின் பிள்ளை மாதிரி இருக்கார். மற்ற நடிகரெல்லாம் யாருனு தெரியலை. நர்மதாவாக நடிக்கும் பெண், (சார்லியின் மகள்) முகம் தெரிந்த முகமாக இருக்கு. யார்னு தெரியலை.   உதவிக் காவலர் கருணாகரன் , டாக்டர் ஜெயந்த் ஆகிய பாத்திரங்களில் நடிப்பவர்கள் நன்றாக நடிப்பதால் படத்தில் ஆங்காங்கே தொய்வு ஏற்பட்டாலும் சரி செய்து கொள்கிறது தானாகவே! :) இயக்குநருக்கு முதல் படம் என்ற அளவில் பரவாயில்லை ரகம். ஆனால் திரைக்கதை ஏற்கெனவே பலமுறை வந்திருப்பதால் புதிதாக ஏதும் இல்லை எனப் பொதுவான விமரிசனம் சொல்லுகிறது. மற்றபடி காதல் காட்சிகள் அது,இதுனு குழப்பலை! இசையும் தேவையான அளவுக்கு மேல் காதைக் குடையவில்லை. ஒளிப்பதிவு அபாரம். சராசரியான படம் என்றாலும் பரவாயில்லை ரகம்.

அடுத்து ஓர் ஆங்கிலப்படம் மன்னரின் சொற்பொழிவு (King's Speech) omitted the original name of the picture பார்த்தேன். இது இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் இங்கிலாந்தில் அரச குடும்பத்தின் நிகழ்வுகளை வைத்து எடுத்த படம். ஐந்தாம் ஜார்ஜ் இறக்கும்போது எட்டாம் எட்வர்ட் பட்டமேற்க அவர் தன் காதலி வாலிஸ் சிம்ப்சனை மணம் முடிக்க வேண்டித் தன் பட்டத்தையே துறந்து விடுகிறார். வாலிஸ் சிம்ப்சன் இரு முறை விவாகரத்தான அமெரிக்கப் பெண்மணி. இங்கிலாந்தின் அரச குடும்பச் சட்டங்களின் படி விவாகரத்து ஆகிக் கணவன் உயிருடன் இருந்தால் அந்தப் பெண் அரசகுடும்பத்தவரைத்திருமணம் செய்து கொள்ள முடியாது. இங்கிலாந்துச் சர்ச்சுகள் அனைத்திற்கும் அரசரே தலைவர். அவர் விதவையாக இருந்தால் கூடத் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் விவாகரத்தான கணவன்மார் இருவரும் உயிருடன் இருக்கும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடியாது.

king's speech க்கான பட முடிவு


பட்டத்தைத் துறந்த சமயம் அவருக்குப் பின்னர் பட்டமேற்ற ஆறாம் ஜார்ஜ், இப்போதைய அரசி எலிசபெத்தின் தந்தையின் பேச்சுத் திறன் குறைபாட்டையும் அதை அவர் எப்படிச் சரி செய்து கொண்டார் என்பது குறித்தும் எடுக்கப்பட்ட உண்மையான சில நிகழ்வுகள். அருமையாகப் படம் ஆக்கி இருக்கிறார்கள். ஆஸ்கர் விருதுகள் நான்கோ, ஐந்தோ கிடைத்துள்ளது இந்தப் படத்திற்கு.   சிறந்த நடிகராக இந்தப் படத்தில் ஆறாம் ஜார்ஜாக நடித்திருக்கும் காலின் ஃபர்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதோடு இல்லாமல் வெஸ்ட்மினிஸ்டர் அபே, பக்கிங்காம் மாளிகை போன்ற சரித்திரப் பிரசித்தி பெற்ற இடங்கள் மிகக் கலை நயத்தோடு வடிவமைக்கப்பட்டுப் படமாக்கி உள்ளார்கள்.

 king's speech க்கான பட முடிவு

மருத்துவரிடம் தன் சிறு வயது அனுபவங்களைப் பகிரும்போது இளவரசன் ஆல்பர்ட் (ப்ரின்ஸ் ஆல்பர்ட்டாக நடிக்கும் இவர் தான் ஆறாம் ஜார்ஜாகப் பட்டம் ஏற்றவர்) காலின் ஃபர்த் தன் சிறு வயதில் தங்களைக் கவனித்துக்கொண்ட செவிலித்தாய்மார்கள் தன்னை நடத்திய விதம் குறித்து மருத்துவரிடம் பகிர்கையில் ராஜகுமாரனாக இருந்தாலும் அவர்களையும் அடக்கி ஆளச் சிலர் இருப்பார்கள் என்றும் அவர்களுக்கும் உணவு, கவனிப்பு போன்றவற்றில் பாரபட்சம் காட்டப்படும் என்பதும் புரிகிறது. அதுவும் தன் செவிலித்தாய்க்குத் தன்னைப் பிடிக்கவே பிடிக்காது எனவும் தினம்தினம் தன் தந்தை ஐந்தாம் ஜார்ஜையும், அவர் தாய் ராணி மேரிக்கும் குழந்தைகள் நிலைமை பற்றித் தினம் அவர்களைக் காட்டிச் சொல்லும்போது தன்னைத் தன் செவிலித்தாய் கிள்ளிவிடுவாள் ரகசியமாக என்றும் தான் அழுவதைப் பார்த்துப் பெற்றோர் மனக்கசப்பு அடைவார்கள் என்பதையும், தனக்குச் செவிலித்தாய் சரியாக உணவு கொடுக்க மாட்டாள் என்றும் இது தெரியத் தன் ராஜகுலப் பெற்றோருக்கு ஐந்து வருஷங்கள் பிடித்ததாகவும் சொல்லும்போது நமக்கும் மனம் கசிகிறது.

king's speech க்கான பட முடிவு

இவரை "பெர்ட்டி" எனக் குடும்பப் பெயரில் அழைப்பார்கள். மருத்துவரும் பிடிவாதமாக அந்தப் பெயரிலேயே அழைப்பேன் என்கிறார். தன்னுடைய திக்குவாயைப் போக்கிக்கொள்ள முடியாமல் திண்டாடுபவரை அவர் மனைவி எலிசபத், பின்னாட்களில் ராணி எலிசபெத், ஆறாம் ஜார்ஜின் மனைவி, இப்போதைய ராணி எலிசபெத்தின் அம்மா தான் லண்டனின் ஹார்லி சாலையில் இருக்கும் இந்த ஆஸ்திரேலிய மருத்துவரிடம் அனுப்பிப் பேச்சுப் பயிற்சி மூலம் சரி செய்து கொள்ள ஊக்குவிக்கிறாள். அரசராக விருப்பமே இல்லாமல் இருந்தவரைத் தன் அண்ணனின் காதலினால் கட்டாயமாக அரசராக்கப்படுவதும், பின்னால் ஹிட்லரின் போர் அறிவிப்பினால் நேசநாடுகளை ஒன்றிணைத்துப் போருக்குத் தயாராக இருக்குமாறும் வானொலியில் பேசும் அளவுக்குப் பேச்சுத் திறமை படைத்தவர் ஆகிறார். ஆனால் அவர் மருத்துவரான லியோனெல் அப்போதும் அவரிடம், "பெர்டி, இன்னமும் உனக்கு "டபுள்யூ" சரியாக உச்சரிக்க வரலை என்பதும், அதற்கு ஆறாம் ஜார்ஜான பெர்டி, "நான் வேண்டுமென்று தான் அப்படிச் செய்தேன். அப்போத் தான் மக்கள் பேசுவது நான் தான் எனப் புரிந்து கொள்வார்கள்." என்று சொல்லுவதும் அதிலும் நடந்து கொண்டே சகஜமாகச் சொல்லுவதும் காட்சி அமைப்பில் அருமை. கடைசியில் இந்த உண்மையான மருத்துவருக்கு "ராயல் விக்டோரியன் ஆர்டர்" விருது கிடைத்ததாகப் படம் முடியும்போது போடும் டைடில் கார்ட் சொல்லுகிறது. நல்லதொரு சரித்திரப் படம்.

ஹாலிடேஸ் இன் தி வைல்ட் பார்த்தேன். தென் ஆப்பிரிக்காவில் யானைகளைப் பழக்கிப் பராமரிப்பவரான ஒருவருடன் ஒரு மிருக வைத்தியர் (பெண்) தற்செயலாகச் சந்திக்க நேர்கிறது. அவர்கள் வாழ்க்கை பின்னர் எப்படிப் போகிறது என்பது தான் கதை. ஒன்றரை மணி நேரப் படம். படம் முழுக்கத் தென் ஆப்பிரிக்க யானைகள் சரணாலயத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. இயல்பாகப் போகிறது படம். இதுவும் நன்றாகவே இருந்தது. யானைகளைப் பார்ப்பதற்காகவே இந்தப் படம் பார்த்தேன்.

26 comments:

 1. பாருங்க பாருங்க பாத்துகிட்டே இருங்க! பதிவு போடுங்க போடுங்க போட்டுக்கிட்டே இருங்க.

  ReplyDelete
  Replies
  1. வாங்க, வாங்க பானுமதி. நல்வரவு. விமரிசனங்கள் போணியே ஆகலை! :)))))

   Delete
  2. ஹாஹாஹா! ஊருக்குள்ள எல்லோரும் நம்ம ரெண்டு பேருக்கும் சண்டைனு நினைச்சுக்குறாங்க 

   Delete
  3. யாரு அது? கருத்து மோதல்! அடிதடினு சொன்னது? என்ன நடக்குது இந்தியாவிலே? சென்னையிலா? "பெண்"களூரிலா?

   Delete
 2. மெய், அடுத்த படம் பேர் 'மன்னர் சொற்பொழிவா'? ஹாலிடேஸ் இன் தி வைல்ட் - இதெல்லாம் எந்தத் தளத்துல பார்த்தீங்க?

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லைத்தமிழரே! King's Speech பெயரை ஆங்கிலத்தில் குறிப்பிட மறந்திருக்கேன். இப்போச் சேர்த்துட்டேன். "மெய்"தமிழ்ப்படம் யப் ஃப்ளிக்ஸிலும், மற்றப்படங்கள் நெட்ஃப்ளிக்ஸிலும் பார்த்தேன். ஆங்கிலப்படங்கள் இரண்டுமே கொஞ்சம் பழைய படங்கள்.

   Delete
  2. இன்னும் 3, 4 படங்கள் பார்த்தேன். ஒன்று ஸ்பெஷல் 26, Special 26, இன்னொன்று Barfi பர்ஃபி, இன்னிக்குக் கேசரி!Kesari in Amazon, the other two in NetFlix பர்ஃபியில் ரிஷி கபூரின் பிள்ளை ரன்பீர் கபூர். கொஞ்சம் ராஜ்கபூரின் ஜாடை, உடல் மொழி எல்லாம் வருகிறது. குடும்பமே நடிப்புக்குடும்பம். நடிக்கக் கேட்பானேன்!

   Delete
  3. Romeo, Akbar, Walter picture omitted! :D

   Delete
 3. இந்தப் படங்களைப்பார்க்க என்னைப்பொறுத்தவரை கொஞ்சம் பொறுமை தேவை என்று நினைக்கிறேன்!  அமேசான் பிரைமில் நிறைய படங்கள் இதுபோல பார்க்காமல் ஸ்கிப் செய்துவிடுவேன்!

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம், தப்புச் செய்யறீங்களோ? அமெரிக்கப் படங்களை விட யுகே படங்கள் நன்றாகக் கதையம்சத்துடன் குடும்பத்துடன் பார்க்கும்படி இருக்கும். அதிலும் இம்மாதிரி சரித்திரச் சம்பவங்களைப் படம் எடுக்கையில் கவனத்துடன் எடுப்பார்கள். ஒரு பிழை கண்டு பிடிக்க முடியாது! "மெய்" தான் இந்த வருடப் படம். மற்றவை 10 வருஷப் பழசு! அமேசான் பிரைமில் இல்லைனு நினைக்கிறேன்.

   Delete
 4. வணக்கம் சகோதரி

  தாங்கள் பார்த்த படங்கள் எல்லாமே நல்ல கதைகள்தான். எனக்கு தமிழில் புது படங்கள் பேரே தெரியவில்லை. ஆனாலும் ஜோதிகா நடித்த படங்கள் என சிலதை ஒரு இரண்டொரு மாதங்களுக்கு முன்பு குடும்பத்துடன் அமர்ந்து பார்த்தேன். இங்கு வெள்ளியன்று மட்டும் இரவு ஒரு மணிவரை (மகன் மருமகள்) இந்தத் திரைப்படங்கள் பார்க்கும் வேலைதான். மறுநாள் நிதானமாக எழலாம் அல்லவா..!

  தங்கள் விமர்சனத்தில் "மெய்" நன்றாக இருக்குமென்று தெரிகிறது. கதையும் தொய்வில்லாமல் செல்கிறது. மூன்றாவது படம் யானைகளுடன் காட்டின் இயற்கையையும் ரசிக்கலாம். தங்கள் விமர்சனம் நன்றாக உள்ளது. இந்தப் படங்களையும் பார்க்க முயற்சிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, எனக்கும் பல தமிழ்ப்படங்கள் பெயர் தெரியாது தான். பிரபல நடிகர்களின் படங்களை அடிச்சுப் பிடிச்சுப் பார்க்கும் ரசிகர்கள் எழுதும் விமரிசனங்கள் மூலம் அவர்கள் படங்கள் ஓரளவுக்குத் தெரியும். மற்றபடி ஜோதிகா நடித்த ஓரிரு படங்கள் நல்லா இருக்கும்னு கேள்விப் பட்டேன். ஆனால் மொழிக்குப் பின் ஜோதிகாவின் படங்கள் ஏதும் பார்க்கவில்லை.

   Delete
 5. போனதடவையே முடிச்சிட்டேன் என்றா கீசாக்கா, ஆனா அதன் பின்னரும் 3 படம் பார்த்திட்டா கர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா நல்ல விசயம்தான் அதனாலென்ன பாருங்கோ பாருங்கோ..

  ReplyDelete
  Replies
  1. @அம்சவல்லி, அதிரடி, அதிராமியாவ், ஹா,ஹா, அப்போதைக்கு முடிச்சுட்டேன் என்றேன். ஆனால் இங்கே ஹூஸ்டனின் ஓட்டல்கள் பற்றியும் மீனாக்ஷி கோயில் போயிட்டு வந்தது பற்றியும் எழுதி வைச்சிருக்கேன். இன்னும் முடித்துப் படங்கள் சேர்க்கலை. பார்ப்போம், எப்போ நேரம் கிடைக்குமோ!

   Delete
 6. எனக்கு கீசாக்கா புதுப்படம் எதுவுமே பிடிக்குதில்லை, பார்க்கலாமே என ஆரம்பிச்சு ஆரம்பிச்சு விட்டு விடுவேன் பார்க்காமல்.

  ReplyDelete
  Replies
  1. பழசோ, புதுசோ எதுவானாலும் தேர்ந்தெடுத்துத் தான் பார்ப்பேன். :)))) எல்லாவற்றையும் பார்ப்பதில்லை.

   Delete
 7. Replies
  1. ஹாஹாஹாஹா, அம்சவல்லி, தொரட்டி, துடைப்பம், ஒட்டடைக்குச்சினு எல்லாம் கூடப் படம் வந்திருக்கா?

   Delete
 8. ஆஆவ் :))) கீதாக்கா ஹிந்தி இங்கிலிஷ் தமிழ்னு நிறைய படம் பார்க்கறீங்க .உங்க விமர்சனம் நல்லா இருக்கு  பார்க்கணும் போலிருக்கு ஆனா நேரம்தான் இல்லை .

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சல், முன்னாடி எங்களுக்கு ஸ்டார் மூவீஸ் வரும் இந்தியாவில் கேபிள் கனெக்ஷனில். அதிலே நிறையப் பார்த்திருக்கேன். ஆனால் இம்மாதிரி ஆங்கிலப் படங்கள் இங்கிலாந்தின் சரித்திரம் பற்றிய படங்கள் அதிலே எல்லாம் வரதில்லை. ஆகவே இப்படி வாய்ப்புக் கிடைத்தால் பார்ப்பேன். அம்பேரிக்கப் படங்கள் பொதுவாக அதிகம் பார்ப்பதில்லை.

   Delete
 9. படங்கள் பார்த்து பொறுமையாக விமர்சனம் செய்து விட்டீர்கள்.
  படங்கள் பார்க்கும் ஆர்வமே இல்லை இப்போது.
  பாட்டு மட்டுமே கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.
  தொலைக்காட்சியில் நல்ல படமாக இருந்தால் பார்ப்பேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி, தொலைக்காட்சியில் விளம்பரங்கள் வருவதால் எனக்குப் படம் பார்க்கும் பொறுமை எல்லாம் இருப்பதில்லை. பாடல்கள் திரைப்படப் பாடல்கள் கேட்டுச் சில வருஷங்கள் ஆகிவிட்டன. சங்கரா தொலைக்காட்சியில் பஜன் சாம்ராட், மற்ற பஜனைகள், யூ ட்யூபில் ஹரிதாஸ்கிரியின் பஜனைகள்னு கேட்பேன்.

   Delete
 10. இரண்டுமே பார்கவில்லை.

  கைதி பார்த்தேன்.

  ReplyDelete
  Replies
  1. கைதி படம் பார்க்கச் சொல்லி பானுமதி கூடச் சொன்னார். பார்க்கணும் நேரம் கிடைக்கையில். இப்போ இன்னும் இரண்டு படங்கள் பார்த்தேன். ஸ்பெஷல் 26 மற்றும் ரோமியோ, அக்பர் மாலிக், வால்டர் கான் என்னும் 3 பெயர்களில் வரும் ஓர் உளவுத்துறை அதிகாரி பற்றிய கதை. அதைப் பார்த்ததில் இருந்து தேசபக்தி ரத்தம் கொதிச்சுட்டு இருக்கு. அடக்கி வைச்சிருக்கேன். :))))

   Delete
  2. கைதி படம் இங்கே பொண்ணு வீட்டில் நெட்ஃப்ளிக்ஸ், யப்ஃப்ளிக்ஸ் இரண்டிலும் இல்லை. அமேசானில் இஉர்க்கானு பார்க்கணும்.

   Delete