எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, November 09, 2019

அமிதாபின் 3 சந்தேகங்கள்!

இரண்டு படங்கள் பார்த்தேன். ஒன்று "பதலா"! இன்னொன்று"தீன்". இரண்டுமே அமிதாப் நடித்த படங்கள். அமிதாபின் ஆரம்பகாலப்படங்களில் ஜெயாபாதுரியுடன் நடித்த ஒரு சில படங்களைத் தவிர்த்து மற்றவை அதிரடி ஹீரோவாக அவர் உருண்டு, புரண்டு, சண்டை போட்டு நடித்தவையே! ஆனால் இப்போதெல்லாம் தேர்ந்தெடுத்து நடிக்கிறாரோ எனத் தோன்றுகிறது. அதிலும் பதலாவின் வக்கீலாக வந்து கட்சிக்காரரிடம் பேசுகிறார். கட்சிக்காரராக நடிப்பவர் "டாப்சி பன்னு" என்னும் நடிகை. ஒரு இளம் தொழிலதிபராக வரும் அந்தப்பெண் பணக்காரத்தன்மையையும்  அது கொடுக்கும் அலக்ஷியத்தையும் இயல்பாகக் காட்டுகிறாள். விஷயம் இது தான். க்ளாஸ்கோ, ஸ்காட்லாண்டில் வசிக்கும்  (கதைப்படி) "நைனா சேதி" என்னும் இளம் பெண் தொழிலதிபர் ஒரு கொலைக்கேஸில் குற்றம் சுமத்தப்பட்டுக் காவல் துறையால் கைது செய்யப்படுகிறாள். (அட, நம்ம ஊருனு நம்ம அதிரடி ஓடோடி வரப் போறாங்க.)

இது வெளியிட்ட நாள் மார்ச் 8, 2019 (நெல்லைத்தமிழர், கவனிக்க). தயாரிப்பு ஷாருக்கானும், அவர் மனைவி கௌரிகானும். படம் முழு வெற்றி பெற்றிருக்கிறது. எங்க பெண் இன்னமும் இந்தப் படம் பார்க்கலை என்று சொன்னாள். இஃகி,இஃகி,இஃகி! நாங்க பார்த்துட்டோமுல்ல!

இந்த நைனா சேதிக்கு சுனில் சேதியுடன் திருமணம் ஆகி ஒரு சின்னப் பெண் குழந்தை இருக்கிறது. அவளுடைய தொழில் விவகாரங்களில் கணவனின் பரிபூரணமான உதவியும் அவளுக்குக் கிடைத்து வருகிறது. ஆனால் நைனா சேதிக்கு என்ன காரணத்தாலோ அர்ஜுன் ஜோசஃப் என்பவனுடன் தவறான உறவு ஏற்படுகிறது. இதைக் கணவன் அறியாமல் பாதுகாத்து வருகிறாள் நைனா. அர்ஜுனும் திருமணம் ஆனவனே. நைனாவும், அர்ஜுனும் ரகசியமாக ஒரு ரிசார்ட்டில் தங்கித் தங்கள் காதலைப் புதுப்பித்துக்கொள்கிறார்கள். ஆனால் தொழில் சம்பந்தப்பட்டவர்களிடம் நைனா தான் பாரிஸுக்குப் போவதாகச் சொல்லிவிட்டு அர்ஜுனை ரகசியமாகச் சந்திக்கச் சென்றிருக்கிறாள். அதற்கான எல்லாவிதமான "அலிபை"களும் தயார் நிலையில்! சந்திப்பு முடிந்து இருவரும் அவரவர் இடம் நைனாவின் காரில் திரும்பும் வழியில் மலைப்பாதையில் மான் ஒன்று குறுக்கிட இருவர் வாழ்க்கையிலும் விதி குறுக்கிடுகிறது. நைனாவின் கார் எதிரே வந்த ஒரு காரின் மேல் மோதி அது சாலையோரத்தின் மரத்தில் மோதி நிற்கிறது. உள்ளே ஓர் இளைஞன். பார்த்தால் செத்துவிட்டான் போல் இருக்கிறது.

எப்படியோ அதை மூடி மறைத்துவிட்டுத் திரும்பும் காதலர்களை யாரோ பணம் கேட்டுத் தொலைபேசியில் அழைத்து க்ளென்மோர் ஓட்டலுக்குக் குறிப்பிட்ட அறைக்கு வரச் சொல்ல அங்கே அர்ஜுன் இறந்து கிடக்கிறான். அவர்கள் கொண்டு வந்த பணம் அறை முழுவதும் இறைந்து கிடக்க நைனா தலையில் அடிபட்டுக்கிடக்கிறாள். ஆனால் அறைக்குள் யாரும் வந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் நைனாதான் கொன்றிருக்க வேண்டும் என்று போலீஸ் நிச்சயித்து அவளைக் கைது செய்து அழைத்துச் செல்கிறது. தன் மனைவியின் ரகசிய வாழ்க்கை குறித்தும், அவள் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு இருப்பதையும் கண்ட நைனாவின் கணவன் தன் குழந்தையுடன் அவளை விட்டு விலகி விடுகிறான்.

Badla க்கான பட முடிவு

ரகசியமாய் அர்ஜுனைக் காதலித்தாலும் தன் குடும்பம், கணவன், குழந்தை மேல் பற்றுக் கொண்ட நைனா மனம் நொந்து போய்த் தன் வக்கில் நண்பரான ஜிம்மியின் உதவியுடன் இந்தக் கொலை வழக்கிலிருந்து விடுபட நினைத்துப் பிரபல வக்கீல் பாதல் குப்தாவைத் தனக்காக வாதாட ஏற்பாடு செய்கிறாள். படம் முழுவதும் பாதல் குப்தா நைனா சேத்தியைக் கொலை விஷயமாக எடுக்கும் பேட்டி தான்! வேறே இல்லை. ஆனால் நைனா கொலையின் பின்னணி குறித்து பாதல் குப்தாவிடம் விளக்குவதில் முழுக்கதையும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும். எங்கோ ஓர் வாலிபன் காணாமல் போனது குறித்துப் பத்திரிகைச் செய்தியைக் காட்டி நைனாவிடம் விசாரிக்கும் பாதல் குப்தாவுக்கு மெல்ல மெல்ல உண்மை விளங்கக் கடைசியில் தான் இந்த வழக்கில் வாதாட முடியாது என்று சொல்லிவிட்டு வெளியே செல்கிறார். திகைத்த நைனா தன் வக்கீல் நண்பன் ஜிம்மியிடம் விஷயத்தைச் சொல்லத் தொலைபேசியில் அழைக்க, வெளியே அவளை யாரோ அழைக்கிறார்கள். யாரெனப் பார்க்கச் சென்ற நைனா மேலும் திகைக்கிறாள். வந்தவர் தன் பெயர் பாதல் குப்தா என்றும், ஜிம்மி அனுப்பியதாகவும் சொல்ல, திகைக்கும் நைனாவிடம் தொலைபேசியில் ஜிம்மி தான் பாதல் குப்தாவை இப்போது அனுப்பி இருப்பதாகச் சொல்கிறான். நைனாவின் திகைப்பு அதிகம் ஆக அவளைக் கைது செய்து அழைத்துப் போகக் காவல் துறை அலுவலர்களும் வருகின்றனர்.

Badla க்கான பட முடிவு

முதலில் பாதல் குப்தாவாக வந்தது யார்? உண்மைக்குற்றவாளி நைனா தானா? எல்லாவற்றுக்கும் படத்தைப் பார்த்தால் விடை கிடைக்கும். காதல் காட்சிகளோ, காதலர்கள் பாடும் டூயட் பாடல்களோ இல்லாமல் படம் முழுக்க விறுவிறுப்பாகச் செல்கிறது. காதலர்கள் தனியாகத் தங்கி இருந்த ரிசார்ட், அதன் சுற்றுப்புறங்கள், மலைப்பாதை எல்லாமும் ஸ்காட்லாண்டை நமக்கு ஓரளவுக்குக் காட்டுகிறது. படப்பிடிப்பு ஸ்காட்லான்ட் க்ளாஸ்கோவில் ஜூன் 2018 ஆம் ஆண்டில் ஆரம்பித்து 2019 ஃபெப்ரவரியில் முடிவடைந்து அதே வருஷம் சர்வதேசப் பெண்கள் தினமான மார்ச் எட்டாம் தேதி வெளியிட்டிருக்கிறார்கள். இம்மாதிரிப் படங்களை எந்தவிதமான கவர்ச்சியான காட்சிகளோ, நடனங்களோ இல்லாமல் சுற்றுப்புறத்தின் இயல்பான நடைமுறையில் அழகாகப் படமாக்கி இருக்கும் இயக்குநர் சுஜோய் கோஷ் பாராட்டப்பட வேண்டியவர்.

te3n க்கான பட முடிவு

அடுத்ததும் அமிதாப் தான். வங்காளத்தின் கல்கத்தா நகரில் நடக்கும் கதை. அமிதாப் இதில் ஜான் பிஸ்வாஸாக நடிக்கிறார். இறந்து போன அவர் ஒரே பெண்ணின் பெண் குழந்தையைக் கல்கத்தா நகரில் ஜான் பிஸ்வாஸும் அவர் மனைவி நான்சி பிஸ்வாஸும் வளர்த்து வருகிறார்கள். மாப்பிள்ளை வடகிழக்கு மாநிலத்தில் வேலையாக இருக்கிறார். பள்ளிக்குச் செல்லும் பேத்தி ஏஞ்சலா ஒரு நாள் மாலை பள்ளியிலிருந்து திரும்பி வருகையில் கடத்தப்படுகிறாள். கடத்தப்பட்ட குழந்தையைத் தேடிக் காவல் துறை ஒரு பக்கம், ஜான் பிஸ்வாஸ் இன்னொரு பக்கம் அலையக் கடைசியில் குழந்தை பிணமாகக் கிடைக்கிறாள். குழந்தை இறந்தது ஓர் விபத்து என்று சொல்லப்படுகிறது. தன் குழந்தையைப் பார்த்துக்கொள்ளத் துப்பில்லை எனக் குழந்தையின் இறுதிச் சடங்குக்கு வந்த அதன் தகப்பன் மாமனாரைச் சாட இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த காவல் துறை அதிகாரி மார்ட்டின் (நவாசுதீன் சித்திக்) திடீரென வேலையை விட்டு விட்டுச் சர்ச்சில் பாதிரியாகப் போய்விடுகிறார். ஜான் பிஸ்வாஸின் மனைவி நான்சி அதிர்ச்சியில் உடல் நலம் பாதிக்கப்பட்டுச் சக்கர நாற்காலியில் வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறாள். மனைவியையும், வீட்டையும் கவனித்துக்கொண்டு ஜான் பிஸ்வாஸ் தன் பேத்தியைக் கடத்தியவனைத் தேடிக் கொண்டே இருக்கிறார். அந்த முயற்சியில் எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஆனால் தன் பேத்திக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் கடத்தியவனைப் பிடிக்கும் ஆர்வமும் ஜான் பிஸ்வாஸுக்குக் குறையவில்லை. தினம் தினம் தொடர்ந்து காவல் நிலையம் சென்று உட்கார்ந்து விட்டு வருகிறார். அங்கே தற்போது காவல் துறை அதிகாரியாக இருக்கும் சரிதா சர்கார்(வித்யா பாலன்) மார்ட்டினின் சிநேகிதியும் கூட! அப்போது திடீரென ரோனி என்னும் ஓர் எட்டு வயதுச் சிறுவன் காணாமல் போகிறான். அதுவும் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏஞ்சலா காணாமல் போன அதே முறையில் பள்ளியில் இருந்து திரும்பி வரும் வழியில். இருவர் கடத்தலிலும் ஓர் கறுப்பு வான் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஏஞ்சலாவைக் கடத்தியவன் தான் ரோனியையும் கடத்தி இருப்பானோ? சரிதா தன் பாணியில் விசாரணையைத் தொடர்ந்தாலும் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அதே முறை என்பதால் பழைய ஆவணங்களைத் தேடிப் பிடித்து எடுத்ததோடு அல்லாமல் மார்ட்டினின் உதவியையும் கேட்கிறாள்.

te3n க்கான பட முடிவு

சரிதாவின் தேடலில்  முடிவில் கிடைக்கும் குற்றவாளியைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஆனாலும் மார்டினுக்கு இதில் திருப்தி இல்லை. அவன் முனைந்து உண்மையைக் கண்டு பிடிக்கிறான்.உண்மைக்குற்றவாளி யார் எனத் தெரிந்தாலும் அவர் செய்ததில்  அதில் ஓர் நியாயம் இருப்பதை உணர்ந்தவன் கடைசியில் சரிதா குற்றவாளி என நம்புபவரைச் சிறைச்சாலையில் ஜான் பிஸ்வாஸைச் சந்திக்க வைக்கிறான். அவரிடம் பேசி உண்மையைத் தெரிந்து கொண்டு உண்மையை எடுத்துச் சொல்லும் ஜான் பிஸ்வாஸ் தான் செய்ததில் நியாயம் இருப்பதை உணர்ந்து திருப்தி அடைகிறார்.  இம்முறை ரோனி உயிருடன் மீட்கப்படுகிறான். ஜான் பிஸ்வாஸாக நடிக்கும் அமிதாப் உண்மை தெரிந்த மகிழ்ச்சியில் ரோனியைத்தன் பேத்தி இடத்தில் வைத்து அன்பு செலுத்த ஆரம்பிக்கிறார். மார்டின் மீண்டும் சர்ச்சில் பாதிரியாக ஆக வித்யா பாலன் குற்றவாளியைப் பிடித்த மகிழ்ச்சியில் தன் வேலையைத் தொடர்கிறார். அவருக்கும் ரோனியைக் கடத்தியது உண்மையில் யார் எனச் சொல்லாமல் மார்டின் மறைத்து விடுகிறான். ஆகவே இரு கடத்தல்களும் ஒரே மாதிரி இருப்பதால் ரோனியைக் கடத்திய நபர் தான் ஏஞ்சலாவையும் கடத்தி இருக்கிறான் என்பதில் வித்யா பாலன் உறுதியாக இருக்கிறார். அதற்குச் சாட்சியாக ஏஞ்சலாவின் கடத்தலில் பணயமாகக் கேட்கப்பட்ட பணம் இப்போதைய குற்றவாளியிடம் இருந்தற்கான ஆதாரபூர்வமான சான்றுகள் கிடைத்தது தான்.

te3n க்கான பட முடிவு

முந்தைய படத்தை இயக்கிய சுஜோய் கோஷ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். ஓரளவுக்குத் தெரிந்த முகங்கள். கல்கத்தாவின் தெருக்களும், பழமை மாறாத வீடுகள், ட்ராம் வண்டியில் பயணிக்கும் அமிதாப் எனக் கல்கத்தாவின் வாழ்க்கை முறையை இயல்பாக எடுத்திருக்கிறார்கள். நடுவில் வரும் துர்கா பூஜைக் காட்சிகளும் படத்தோடு ஒட்டியே வருகின்றன. ஒளிப்பதிவு, இயக்கம், வசனங்கள் எல்லாம் "சிக்". அமிதாபின் நடிப்பு அவர் வயது கூடக் கூட நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது. தன் வயதுக்கேற்ற படங்களில் நடிப்பது அவருக்கு ஓர் கௌரவத்தையும் கொடுக்கிறது. மார்டினாக வரும் நவாசுதீன் சித்திக், சரிதா சர்காராக நடிக்கும் விக்ட்யா பாலன் ஆகிய அனைவரும் அவரவர் பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்துள்ளார்கள். ரோனியின் தாத்தாவாக வரும் மனோஹர் சிந்கா பாத்திரத்தில் நடிப்பவரான சப்யசசி சக்ரவர்த்தியும் தன் நடிப்பில் முதிர்ச்சியைக் காட்டியுள்ளார். மொத்தத்தில் நல்ல படங்களைப் பார்க்க முட்கிறது, பார்ப்பது எப்போவோ நடந்தாலும். படத்தின் பெயர் Te3n.  அமிதாபின் 3 சந்தேகங்கள்.

44 comments:

  1. Replies
    1. ஹாஹா, எழுதி வெளியிடும்போதே நினைச்சேன். நீங்க ஆன்லைன் என்று தெரிஞ்சது. அப்போ ஃபர்ஷ்டு வந்துடுவீங்கனு எதிர்பார்த்தேன். :))))))

      Delete
  2. கீசாக்காவுக்கு மகள் வீட்டில் பொழுது போகவில்லை:)), அதனால படம் படமாப் பார்க்கிறா என நான் ஜொள்ள மாட்டேனே.. குஞ்சுலுவுடன் நின்றால் பொழுது போவதே தெரியாது என நினைக்கிறேன், குழந்தைகள் வளர்ந்திட்டால், தன் பாடும் தானுமாக இருக்கவே விரும்புவர் வெளிநாடுகளில்.

    //(அட, நம்ம ஊருனு நம்ம அதிரடி ஓடோடி வரப் போறாங்க.)//
    அதானே ஹிந்தியில அதிராவுக்கு டி என்பது ஏன் எப்படி வந்துது என சந்தேகப்பட்டீங்க இப்போ பாருங்கோ:)) இப்பூடிக் ஹிந்தி ஆட்கள் எல்லாம் இங்கு வருவதனாலதான் ஹா ஹா ஹா.

    ReplyDelete
    Replies
    1. இங்கே மகளும் பிசி, மாப்பிள்ளை காலை ஏழரைக்கு வேலைக்குப் போனால் மாலை ஏழரைக்கு வருவார். அப்பு (பெண்ணின் 2ஆவது பெண்) படிப்பு, கராத்தே வகுப்பு, வயோலா வகுப்பு என்று பிசியோ பிசி.போதாதுக்கு ஒரு நாய்க்குட்டி! என்றாலும் இந்த நாலு படங்கள் பார்த்தப்புறமா வேறே ஏதும் பார்க்கலை. Christmas in the wild (Holidays in the wild) படம் பொண்ணு பார்க்கும்போது கொஞ்சம் கொஞ்சம் பார்த்தேன். அவ்வளவு தான். அதுவும் நன்றாக இருந்தது. புத்தம்புதுப்படம்.ஆனைக்குட்டிங்க, அம்மா, அப்பா ஆனைங்க, தாத்தா, பாட்டி ஆனைங்க எல்லாம் வருது.

      Delete
  3. //காதலர்கள் தனியாகத் தங்கி இருந்த ரிசார்ட், அதன் சுற்றுப்புறங்கள், மலைப்பாதை எல்லாமும் ஸ்காட்லாண்டை நமக்கு ஓரளவுக்குக் காட்டுகிறது// கர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா. இங்கு நிறையப் படங்கள் வந்து எடுக்கிறார்கள் எனத்தான் அறிகிறோம் கீசாக்கா ஆனா நாம் ஆரையும் சந்தித்ததில்லை.

    ReplyDelete
    Replies
    1. அம்சவல்லி அதிரடி, நானே கேட்கணும்னு இருந்தேன். நீங்க இருப்பது க்ளாஸ்கோவா? அல்லது அதுக்குப் பக்கமா? நிறைய ஹிந்திப்படங்கள் அங்கே எடுக்கிறாங்க!

      Delete
  4. படங்களைப் பார்த்து, ரசிச்சு எழுதியிருக்கிறீங்க, ஆனா எனக்கு இந்த பொலீஸ், தேடுதல் கண்டுபிடித்தல் இப்படிப் படங்கள் பார்க்கும் பொறுமை எப்பவும் இருந்ததில்லை.

    நானும் ஒரு படம் பார்த்தனே.. ஜூப்பர்ப்படம்.. விரைவில விமர்சனம் வெளிவரலாம் அல்லது வராமலும் போகலாம் ஹா ஹா ஹா ஆனா விமர்சனம் எழுதோணும் எனும் ஆசையா வருது:).. அவ்வளவு அழகிய படம்:))

    ReplyDelete
    Replies
    1. என்ன படம் பார்த்திருப்பீங்க? எம்.எஸ்.அம்மா நடிச்ச சகுந்தலா? பக்த மீரா? அல்லது எம்.கே.டி. நடிச்ச ஹரிதாஸ்? சீக்கிரம் விமரிசனத்தைப் போடுங்க. எனக்கு இம்மாதிரித் த்ரில்லர் படங்கள் பிடிக்கும். :)))))

      Delete
    2. akka its keechaga vadham:)))))

      Delete
    3. ஓஹோ! கீசக வதமா? இஃகி,இஃகி!

      Delete
    4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*1432567:) ... கீசாக்கா வசமா? அப்பூடி ஒரு படமோ அவ்வ்வ்வ்வ்வ்?

      Delete
    5. :P:P:P:P @Amsavalli Athira! :)))))))

      Delete
  5. நான் அமிதாப் படம் பிளாக் அப்புறம் ,பிங்க் ரெண்டும் நெட்ப்ளிக்சில் பார்த்தேன் ..இதையும் தேடி பாத்திடறேன் :)அக்கா சூப்பரா ரிவ்யூ செஞ்சிருக்கீங்க ரெண்டு படங்களும் .பார்க்கத்தான் டைம் கிடைக்குமோ தெரியல :)

    ReplyDelete
    Replies
    1. "ப்ளாக்" எப்போவோ வந்த படம். பிங்க் போன முறை பார்த்து விமரிசனமும் எழுதினேன். கதை நன்றாக இருந்தாலும் சில வசனங்கள் பிடிக்கலை. இந்தப் படமும் தமிழிலும் வந்து கொலை செய்திருந்தாங்க என்று கேள்வி. இப்போப் பார்த்தவை அனைத்தும் 2017-- 19க்குள் வந்தவை. புதுசு. கட்டாயம் பாருங்க.

      Delete
    2. ப்ளாக் படம் எனக்கு அவ்வளவாப் பிடிக்கலை!

      Delete
  6. அடடே..... நான் அமிதாப்பின் ரசிகன்.  பிங்க் பார்த்தபிறகு வந்த 100 நாட் அவுட் கூட பார்த்திருந்தேன்.  இந்தபபிடம் வெளியானபோது எங்காவது டவுன்லோடுக்குக் கிடைக்குமா என்று பார்த்துவிட்டு அப்புறம் மறந்து விட்டேன்.  இப்போது உங்கள் மூலம் மறுபடியும் நினைவுக்கு வந்திருக்கிறது.  பார்க்கும் ஆவல் வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. 100 நாட் அவுட் நல்லா இருக்குமா? பெண்ணிடம் கேட்டுப் பார்க்கிறேன் இருக்கானு! மேலே சொன்ன இரு படங்களில் நீங்க எதை டவுன்லோடு செய்து பார்க்க நினைச்சீங்கனு தெரியலை. இரண்டுமே பார்க்கலாம்.

      Delete
    2. 100 நாட் அவுட் நல்லா இருந்தது!  ரிஷி கபூரும் இணைந்து நடித்திருக்கும் படம்.   முதலில் கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் ரசிக்க முடிந்தது. பிங்க், பத்லா பார்க்கும் வகையில் அதைப் பார்க்கக்கூடாது!

      பத்லாதான் பார்க்க நினைத்தேன்.  இரண்டாவதாக நீங்கள் சொல்லி இருக்கும் படம் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

      Delete
    3. அதான் பொண்ணு சொன்னாளோ என நினைக்கிறேன். ரிஷி கபூரின் நடிப்பு நல்லா இருக்கும் என்றாள். பதலா! "பத்லா" இல்லை. :)))))

      Delete
    4. 102 Not out பார்க்க ஆரம்பிச்சேன். அப்புறமாப் போய்ப் படுத்துட்டேன். நாளைக்குப் பார்க்கணும்.வித்தியாசமான கதை அம்சம்.

      Delete
    5. நான் இந்தப் படத்துக்கு அப்போது விமர்சனம் எழுத நினைத்திருந்தேன்!

      Delete
  7. அதைவிட அதிர்ச்சி...   இப்போது சமீபத்தில் எவரு என்று ஒரு தெலுங்குப் படம் பார்த்து ரசித்தேன்.  என்னமா எடுத்திருக்காங்க தெலுங்கில் என்று சிலாகித்துப் பேசினேன்!  இப்போதுதான் தெரிகிறது அது கிட்டத்தட்ட பத்லாவின் தழுவல் என்று.   சில காட்சிகளைத்தவிர அப்படியே அப்பட்டமான தழுவல். அடப்பாவிகளா!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! அப்படியா? இங்கே இருக்கானு பார்க்கிறேன். அநேகமாத் தமிழ், தெலுகுப் படங்கள் யப் ஃப்ளிக்ஸில் இருக்கலாம்.

      Delete
    2. நான் அமேசான் பிரைமில்தான் பார்த்தேன்.

      Delete
  8. பிரைமில் இந்தப் படங்கள் இல்லை.   வேறு எதுவும் என்னிடம் இல்லை.   பார்க்க முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க நெட்ஃப்ளிக்ஸ் சந்தாதாரரா ஸ்ரீராம்? அதில் தேடிப் பாருங்கள். கிடைக்கலாம்.

      Delete
    2. நெட்ஃப்ளிக்ஸ் சந்தாதாரர் இல்லை!

      Delete
    3. நாங்க இது எதிலுமே சந்தாக் கட்டலை. படங்கள் அங்கே இருந்தால் (இந்தியாவில்) பார்ப்பதும் இல்லை.

      Delete
  9. வணக்கம் சகோதரி

    நலமா? அங்கு மழை, குளிர் எப்படி உள்ளது? மறுபடியும் படங்கள் பற்றி விமர்சனமா? ஆனால் அமிதாப்பின் படங்கள் போலிருக்கிறது. விரிவாக படித்து விட்டு வருகிறேன். அதற்குள் உங்கள் இரவு துவங்கி பகல் வர ஆரம்பித்து விடும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    ReplyDelete
    Replies
    1. மெதுவாப்படிச்சுட்டு வாங்க. மீனாக்ஷி கோயிலுக்குப் போன ஞாயிறு போனோம். படங்கள் எடுத்தேன் . போடணும். இங்கே இரண்டு நாட்களாக மழை,குளிர்,வ்வீட்டில் ஏ.சியை அணைச்சு வைக்க நேர்ந்தது, நேர்மாறாக இன்று வெயில்! :)))) போனமுறையும் ஓர் அமிதாபின் படம் விமரிசித்திருந்தேனே!

      Delete
    2. இல்லை, அந்தப் படம் விமரிசிக்கலை! தப்பாய்ச் சொல்லி இருக்கேன். போன முறை பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கச் செல்லும் பெண்ணைப்பற்றியும், கண் தெரியாத பியானோக்கலைஞன் பற்றியும் படங்கள்

      Delete
  10. எனக்கு என்னவோ படங்கள் பார்க்க பொறுமை இல்லைஇப்போதெல்லாம் அதிகம் போனால் ஒரு அரைமணிநேரம் பார்ப்பேன் ரசிக்கத் தெரியாதவனா

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ரசனை!

      Delete
  11. விமர்சனங்கள் அழகாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  12. வணக்கம் சகோதரி

    நல்ல கதையம்சம் உள்ள படங்களாக நீங்களும் பார்த்து நன்கு புரியும்படி விமர்சனமும் தந்திருக்கிறீர்கள். இரண்டுமே நல்ல திரில்லிங் படங்களாக இருக்கிறது. இரண்டாவது படத்தில்(தீன்) யார் குழந்தையை கடத்தியது.? இத்தனை தூரம் வரை சொன்ன நீங்கள் அதையும் ஒரு சின்ன க்ளு வைத்து சொல்லியிருக்கலாம். அந்த காலத்தில் சினிமா பாடல் புத்தகங்களில், கதையை ஒரளவு விமர்சித்து விட்டு "பாக்கியை வெள்ளித் திரையில் காண்க.." என முடித்து விடுவார்கள். அந்த மாதிரி இந்த படங்களை எங்களை எப்படியாவது பார்க்க வைத்து விடுவீர்கள் போல...! ஹா. ஹா. ஹா.

    எனக்கும் உங்களின் இரு படங்களின் விமர்சனம் அந்த படங்களை பார்க்கத் தூண்டுகிறது. மிக அழகாக படங்களுக்கு விமர்சனம் செய்கிறீர்கள். தங்களுக்கு ஹிந்தி மொழியும் மிகவும் நன்றாகவே தெரியும். எனக்கு மொழி தெரியாவிடினும். பார்த்து கேட்டால் புரிந்து கொள்ளலாம். ஆனால் படம் பார்க்க நேரமும் காலமும் ஒத்து வர வேண்டும். (எனக்கு மட்டும் படங்களின் முடிவை சொல்லி விடுங்களேன். ஒவ்வொன்றும் சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை:) ) ஆனாலும் முடிந்த போது பார்க்க முயற்சிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, உண்மைதான். நல்ல கதையம்சம் இருந்தால் மட்டும் போதாதே! அதைக் கெடுக்காமல் எடுக்கவும் வேண்டும். தமிழில் செயற்கையான காட்சிகள், அமைப்பு, பாடல்கள், குத்துப்பாட்டுகள்,வெளிநாட்டில்டூயட் பாடி ஆடுவது எனப் படத்தின் இயல்பைக் கூடுமானவரை கெடுக்கிறார்கள். இல்லைனா அம்மன் கோயில் திருவிழா, தேர்னு கூட்டமாகக் கேவலமாக ஆடிப் பாடுகிறார்கள். :(

      Delete
  13. அமிதாப் கடந்த 15 வருடங்களாக, படங்களைத் தேர்வு செய்து நடித்துவருகிறார். அது ஹிட் ஆகிறதோ இல்லையோ, அதில் அவரின் பங்களிப்பு நன்றாக இருக்குமாறு பார்த்துக்கொள்கிறார்! ஒரு கலைஞனுக்குத் தேவையான க்வாலிஃபிகேஷன் இது. (தமிழோடு -அதுவும் சமகாலத் தமிழ்சினிமாவோடு இதை ஒப்பிட்டுப் பார்ப்பதில் அர்த்தமில்லை). நல்ல டைரக்டர்களின் ப்ராஜெக்ட்டுகளுக்காகக் காத்திருந்து அமிதாப் நடிப்பதாக அறிகிறேன். வயதாகிவிட்டது; நல்லபடங்கள் சிலவற்றிலும் நாம் நடித்தோம் எனத் தெரிய,நிறுவ, முயற்சி செய்கிறார். முயற்சி திருவினையாகட்டும்!

    அவரது முந்தைய... அதாவது 70-கள், 80-கள்.. படங்கள்பற்றி.. the less said, the better! மசாலா டைரக்டர்களின் மசாலா படங்களில், இவரும் ஒரு gharam மசாலாவாக மாறியிருந்தார் (ஜஞ்ஜீர், முகத்தர் கா சிக்கந்தர், கூலி, தீவார், ’அமர், அக்பர், ஆண்டனி’ போன்ற டிஷ்யூம்..டிஷ்யூம்..கள்). ஆனால் இவைதான் அவரது angry young man பிம்பத்தை ஜனரஞ்சக ரசிகர்கள் மனதில் ஏற்றிவைத்தன. Mass appeal-ம் முக்கியம்தானே.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏகாந்தன், அமிதாப் ஆரம்ப காலப்படங்களில் ஆனந்த் எனக்குப் பிடித்த படம்! ஆனால் அதில் ராஜேஷ் கன்னா தான் கதாநாயகன். என்றாலும் ஒரு சில படங்கள் நன்றாகவே இருக்கும். இப்போது வயதுக்கேற்ற பாத்திரங்களைத் தேர்ந்து எடுத்து நடிக்கிறார்.

      Delete
  14. படங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, உங்களை அதிகம் பார்க்க முடியலை. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  15. நல்ல விமர்சனம்.இரண்டு படமும் பார்திருக்கிறேன்.

    ReplyDelete
  16. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete